காத்திருப்பு : 09
தேவி கதவை திறந்ததும் பார்த்தது தனது அண்ணனையே.
“அண்ணா உள்ள வாண்ணா”
“ம்..” என்றவாறு உள்ளே சென்றான். தங்கையைப் பார்த்தான் தாய்மையினால் மேலும் அழகாக இருந்தாள். ஆனாலும் அதில் சோகம் கலந்திருப்பதை அறிவானவன். ஏனெனில் அதற்கு காரணம் அவனல்லவா.
“எப்பிடி இருக்கீங்க அண்ணா? என்ன சாப்பிடுறீங்க அண்ணா?”
“குட்டிமா எங்க?” அத்தனை கேள்விகளுக்கும் பதில் சொல்லாமல் அவளிடம் எதிர் கேள்வி கேட்டான்.
“உள்ள இருக்காண்ணா “என்றவள் கணவனை எழுப்பி சூர்யாவின் வரவை தெரிவித்துவிட்டு தீராவை அழைத்து வந்தாள்.
“மாமா”
“குட்டிமா” என்றவாறு தன்னை நோக்கி ஓடி வந்த தீராவை தூக்கிக்கொண்டவனை முத்தமழையில் நனைத்தாள் தீரா. அவனும் பதில் முத்தங்களை வழங்க இவற்றை மன நிறைவுடன் பார்த்தபடி இருந்தனர் தேவி மற்றும் கமலேஷ் தம்பதியினர்.
“மாமா நான் உன்ன ரொம்ப மிஸ் பண்ணினன்”
“மாமாவும் குட்டிமாவ ரொம்ப மிஸ் பண்ணண்டா”
“மாமா நீ என்கூதவே இது மாமா பிளிஸ்” என்று அவனது நாடியைப் பிடித்துக் கேட்டாள்.
“மாமா கொஞ்ச நாளைக்கு இங்கதாண்டா இருப்பன் daily evening ரெண்டு பேரும் வெளில போலாம் சரியா?”
“உண்மையவா மாமா என் கூதவே இதுப்பியா?
“ஆமாடா கண்ணா சரி நீ ஸ்கூல் போயிட்டு வா நாம evng வெளில போலாம் சரியா?”
“சதி மாமா நீ எங்க இதுப்ப?”
“நான் வாசு வீட்லதான் இருப்பன்டா”
“சதி மாமா”
“okda குட்டிமா நீ ஸ்கூல் போக ரெடியாகுடா மாமா போயிட்டு evng வாறன்.”
“bye மாமா”
“byeda” என்றவாறு வெளியேறியவன் காரை வாசுவின் வீட்டை நோக்கி பயணித்தான். வாசு வீட்டினை அடைந்தவன் வாசுவை வெளியே வருமாறு போன் செய்ய வெளியில் வந்த வாசு
“good morning sir”
“good morning vasu”
“என்ன sir காலையிலேயே வந்திட்டீங்க? உள்ள வாங்க”
“வாசு நான் உங்ககூட தங்கிக்கலாமா?”
“sir ஏன் இப்பிடி பேசுறீங்க இங்க அவ்வளவு வசதியா இருக்காது சேர். ”
“பரவால்ல வாசு நான் இங்கதான் தங்கப்போறன். அதில உங்களுக்கு ஏதும் பிரச்சனையா?”
“ஐயோ அப்பிடி இல்ல sir இங்க வசதியா இருக்காது என்றுதான் சொன்னன் மத்தபடி நீங்க தங்கிறதில எந்த பிரச்சனையும் இல்ல sir. ”
“சரி நான் ரெடியாயிட்டு ஆபிஸ்கு வந்திர்றன் வாசு நீங்க earlyya போங்க ”
“ok sir. ”
சந்திரா வீட்டில்………
” ஆதி போலாமாபா?”
“அம்மா நான் வாசுமாமாட சொல்லித்து வதத்தா?”
“சரிடா கண்ணா பத்திரமா போயிட்டு வாங்க”
“வாசு மாமா வாசு மாமா ”
“இங்க இருக்கன் குட்டி”என்றபடி தனது அறையிலிருந்து வந்தான் வாசு.
“மாமா நான் இன்னைக்கு புது ஸ்கூல் போதன் மாமா ”
“okda குட்டி good luck நல்லா படிக்கணும் சரியா?”
“சதி மாமா நான் evng வாறன் bye ”
“byeda குட்டி”
ஆதியும் செல்ல சூர்யாவும் வெளியே கையில் watch கட்டியபடி வந்தவன் ஆதியின் முகத்தை பார்ப்பதற்குள் வெளியேறிவிட்டான்.
“யாரோட வாசு பேசிட்டு இருந்தீங்க?”
“அதுவா sir தங்கச்சி பையன் குட்டி. இன்டைக்கு புது ஸ்கூல் போறாராம் வந்து சொல்லிட்டு போறாரு”
“ஓ சரி வாசு ”
“சரி sir இந்தாங்க sir சாவி ஒரு சாவி என்னட்ட இருக்கு மற்றத நீங்க வைச்சுக்கோங்க sir”
“ok தாங்க வாசு”
“ok sir நான் கெளம்புறன் நீங்க வாங்க”
“சரி வாசு”
சந்திரா வீடு……
“என்னடா மாமாகிட்ட சொல்லிட்டியா?”
“ஆமாம்மா ”
“சரி போலாமா?”
“அம்மா அப்பாட்ட சொல்லல சொல்லிட்டு வாறன்மா”
“சரிடாமா”
“அப்பா நான் இன்னைக்கு புது ஸ்கூல் போதன். வந்து ஸ்கூல் எப்பிதி என்து சொல்தன் அப்பா bye மிஸ் யூ பா”
ஆதியின் மிஸ் யூபா என்றது காதில் விழுந்ததும் கலங்கினாள். ஆதி சூர்யாவின் பையனா வளர்ந்தா எப்பிடி இருப்பான் என்று எண்ணிக் கலங்கியவள் ஆதியை சூர்யாவிடமே விட்டுடலாமா என்று யோசித்தவள். பின் இல்லை எனக்கு இருக்கிறது ஆதி மட்டும்தான் அவன யாருக்கும் கொடுக்க முடியாது. என்னால முடிஞ்சளவுக்கு நல்லா பாத்துக்குவன். என்று சபதமிட்டாள்.
ஆதியின் ஸ்கூல்…..
“மேடம் இந்த formma fill பண்ணணும் பையன் பேர் சொல்லுங்க”
“சரி பையன் பேரு ஆதவக்குமார்” (என்னது ஏன் இப்பிடி திடீர்ணு பேர மாத்திட்ட சந்திரா? readers என்ன கோச்சிக்க போறாங்க.
“இல்ல writter madam சூர்யாவோட வாரிசாதான் ஆதி வளரமுடியல அதுதான் பரம்பரைப் பேராவது இருக்கட்டும்ணு வைச்சன்.”
“சரி கவலப்படாத சீக்கிரமா ரெண்டு பேரையும் சேத்து வைச்சிடுவன்”மை மைண்ட் வாய்ஸ் )
“அப்பா பேரு அம்மா பேரு சொல்லுங்க ”
“அப்பா சூர்யகுமார் அம்மா சந்திரவதனா”
“சரி madam பையன classla விட்றுங்க”
“வா ஆதி class போலாம்”
“சரிமா ”
“அம்மா அம்மா இங்க பாருமா நதி”வகுப்பறையை நோக்கி வந்துகொண்டிருந்த நட்சத்திராவைக் காட்டினான்.
“ஆதி நீயும் இந்த ஸ்கூல்தானா super இது யாரு”
“”நதி இது என்னோத அம்மா”
” hai aunty இல்ல நான் உங்கள அத்தமா என்னு சொல்லத்துமா?”
தேவதை போல இருந்த நதி சந்திராவை கவர்ந்தாள்.
“ஏன்டாமா அப்பிடி சொல்றா?”
“இல்ல அன்னைக்கு ஆதி என்னோத அம்மாவ அத்தம்மா என்னு கூப்பித்தான் அதுதான்”
“சரிடாமா உனக்கு பிடிச்ச மாதிரியே கூப்பிடுடா. எனக்கு நேரமாயிட்டு நான் evng வந்து கூட்டிட்டு போறன் ஆதி. ரெண்டு பேரும் பத்திரமா இருங்கடா bye”
“bye ” என்றனர் இருவரும் கோரஸாக.
சந்திரா புது கம்பனியின் மேலதிகாரியிடம் பேசிவிட்டு வந்து தனது வேலையைத் தொடர்ந்தாள். சூர்யாவோ தனது புதுக் கம்பனிக்கு வந்திறங்கினான்.
ஆறடி உயரத்தில் ஆணழகனாய் வந்திறங்கியவனை அனைவரும் பார்த்தபடி இருந்தனர்.ஆனால் சந்தனாவோ இலதுவாக welcome sir என்று பூங்கொத்தைக் கொடுத்தாள். அதை வாங்கியவன் அவளின் நேர்பார்வையை புரிந்து கொண்டான். வழமையான தனது துரித நடையில் meeting hall சென்றான்.
அவனைத் தொடர்ந்து வந்த வாசு அனைவரும் சூர்யாவை பச்சையாக சைற் அடித்தபடி நிற்க சந்தனா மட்டும் இயல்பாக இருப்பவளைப் பார்த்தான். பின் சூர்யாவைத் தொடர்ந்து meeting hall சென்றான்.
சூர்யா தனது உரையினையாற்றினான். அதாவது இந்த கம்பனியில் நேர்மையாக வேலை செய்ய வேண்டும் என்றும் நேரத்திற்கு வேலையைச் செய்ய வேண்டுமென்றும் மேலும் சில விடயங்களைக் கூறினான். பின் meeting முடிந்ததும் தன் அறைக்கு வந்தான்.
எல்லாவற்றையும் முடித்துக் கொண்டு வந்த வாசுவை வழிமறித்த சந்தனா.
“sorry sir உங்கள யாரெண்டு தெரியாம பேசுனதுக்கு ”
“பரவால்ல விடுங்க சந்தனா and sorry நான் தெரியாம இடிச்சதுக்கு”
“இத முதல்லயே சொல்லிருக்கலாமே நம்ம சண்ட போட்டிருக்க தேவல.”
“அதுக்கென்ன இனி friendsஆயிட்டா போயிட்டு”
“என்ன sir இப்பிடி சொல்றீங்க நீங்க இந்த கம்பனியோட எம்டி P.A நீங்க எப்பிடி sir எங்களோட சாதாரணமா பேசுறீங்க?”
“ஐயோ சந்தனா நீங்களும் அவர்கிட்ட சம்பளம் வாங்கிறீங்க நானும் அப்பிடித்தான் எல்லோரும் தொழிலாளிங்கதான் சரியா? இனிமேல் நாம friends”
“ok friends”
“சரி சந்தனா நான் போறன் நீங்களும் போய் உங்க வேலைய பாருங்க”
“ok bye”
இப்பிடியே மாலை நேரம் வர சந்திரா ஆதியின் ஸ்கூல்க்கு வந்து ஆதியை வீட்டிற்கு அழைத்துச் சென்றாள்.
வேலையில் தீவிரமாக இருந்த சூர்யாவை
“சூர்யா” என்ற குரலின் ஒலியில் தலையை உயர்த்தியவன் வந்தவரைப் பார்த்து எழுந்து நின்றான்.
சூர்யா யாரைப் பார்த்து எழுந்து நின்றான்?
காத்திருப்புத் தொடரும்………….
❤️❤️❤️
Thank you ma😊
Nice 🙂👍
Thank you ma😊
Nice 😍🥰💗
Thank you ma😊