காத்திருப்பு : 14
சிறிது நேரம் யோசனை செய்த சுந்தரம் மகள் போவதற்கு அனுமதி வழங்கினார்.
“நீ இப்பிடி சொல்லுவனு எதிர்பார்க்கல நன்றிப்பா”
“என்னம்மா இது வதனா உங்க கூடதானே வர்றா இதுல சொல்றத்துக்கு என்ன இருக்கு”
“வதனா நீ என்கூட வர்றியாமா?”
“நீங்க சொல்லி நான் என்ன பாட்டி மறுத்திருக்கன் நான் உங்ககூட வர்றன் பாட்டி”
“சரிடாமா வேலை கிடக்கு அதெல்லாம் சீக்கிரமா முடிக்கணும் அப்போதான் அங்க நிம்மதியா வேலை பாக்கலாம் நான் வர்றன்மா”
“சரிமா போயிட்டு வாங்க”
மரகதம்மாள் சென்றதும் தங்கம்மா
“ஏங்க பட்டணத்துக்கு நம்ம பொண்ண தனியா அனுப்பலாமா?”
“பயப்படாதம்மா அவங்க ரொம்ப நல்லவங்க வதனா பத்திரமா இருப்பாங்க”
“நீங்க சொன்னா சரிதான்” என்றவாறு தனது வேலையைப் பார்க்க சென்றார்.
மதுரா இல்லம்……..
“அம்மா” என்றவாறு வந்து மதியை அணைத்தாள் தேவி.
“வாடாமா பிரயாணம் எப்பிடி இருந்திச்சு?”
“ம்.. நல்லம்மா. நான் கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துட்டு வர்றன்மா”
“சரிடா போ”
“மதி எனக்கு டீ எடுத்துட்டு வா”
“சரிங்க”
சில மணிநேரங்களின் பின்…..
தேவி ரெடியாகியபடி வந்தாள்.
“அம்மா அப்பா எங்க?”
“ஏதோ மீட்டிங் இருக்காம் போயிட்டாருடா ஏன்?”
“இல்லம்மா கமலேஷ் கூட பேசணும்னு சொன்னேமா அதுதான்”
“ஏய் என்னடி மாப்பிள்ளை பேர சொல்ற மரியாதையா பேசுடி”
“போம்மா அப்பிடியெல்லாம் சொல்ல முடியாது”
“சொன்னா கேளுடி கழுத”
“சரி சரி நான் அப்பாக்கு போன் பண்றன் பேசாதீங்க”
“அப்பா”
“சொல்லுடாமா”
“அப்பா எனக்கு க….அவர்ட நம்பர் தர்றீங்களா?”
“யார்டமா”
“அவர்ப்பா”
“அது யாருமா அவரு”
“ம்….உங்க மாப்பிள்ளையோட நம்பர் நான் பேசணும்”
“சரிமா சரி” என்றவர் நம்பர் கொடுக்க தேவி கமலேஷ்கு போன் பண்ணாள். அப்போது கமலேஷ் ஒரு ஆபரேஷன்ல இருந்ததால் அவனது போன் அவனது அறையில் இருந்தது. அப்போது ஒரு மருந்து எடுப்பதற்காய் வந்த நர்ஸ் கமலேஷின் போன் ஒலிப்பதைப் பார்த்து ஒன் பண்ணினாள்.
“ஹலோ கமலேஷ்”
“டாக்டர் ஆபரேஷன்ல இருக்காரு நீங்க”
என்ன அவருக்கு போன் பண்ணினா நர்ஸ் பேசுறாங்க ” நான் யாராவேணா இருக்கன் அவர்ட போன நீங்க ஏன் ஆன்சர் பண்ணீங்க?”
“ஹலோ எங்க டாக்டர் ஆபரேஷன்ல இருந்தார் அதுதான் நான் ஆன்சர் பண்ணன் உங்களுக்கு என்ன பிரச்சன?”
“எனக்கு ஒண்ணுமில்லை எப்போ ஆபரேஷன் முடியும்?” என அவள் கேட்கும் போதே ஆபரேஷன் முடிந்து உள்ளே வந்த கமலேஷ்.
“யாரு போண்ல”
“தெரியல சேர் ”
“சரி குடு ”
“ஹலோ யாரு?”
“ம்… உங்க பொண்டாட்டி”
“தேவி”
“நான்தான்”
“நீங்க போங்க நர்ஸ். சொல்லு தேவி”
“நான் உங்களப் பாக்கணும்”
“எப்போ?”
“இன்னைக்கு இரவு 7.00கு கோல்பிஷ்கு வந்திருங்க”
“சரி தேவி”
“bye”
“bye”
(தேவி கமலேஷிடம் உரிமையாக உங்க பொண்டாட்டினு சொன்னதைக் கேட்ட மதி மகிழ்ந்தார்.)
கோல்பிஷ்…….
“hi தேவி”
“hello”
“என்ன வரச்சொன்ன?”
“யாரது”
“எது”
“உங்க போன எடுத்து பேசினது?”
“அது நர்ஸ்”
” அவ எதுக்கு உங்க போன எடுத்தா?”
“போன் வரவும் எடுத்திருப்பா அதுக்கென்ன?”
“இனிமேல் யாராவது உங்க போன ஆன்சர் பண்ணாங்க செத்தீங்க”
“என்ன சந்தேகமா?”
“இல்ல பொறாமை”
“சரி சரி எதுக்கு வரச்சொன்ன?”
“உங்களுக்கு கல்யாணத்துல இஸ்ரமா? இல்ல யாராவது கட்டாயப்படுத்தினாங்களா?”
“அப்பிடி இல்ல கேட்டாங்க சரிணு சொன்னன்”
“ஏன்”
“என்ன ஏன்”
“இல்ல எப்பிடி சரிணு சொன்னீங்க நன்றிக்கடனுக்காகவா?”
“தெரியல கேட்டாங்க நான் சரிணு சொன்னன் ஆனா நன்றிக்கடனுக்காக சரி சொல்லல”
“சரி அதெப்பிடி நான் யாருனு கேட்டப்ப உங்க பொண்டாட்டினு சொல்ல எப்பிடி சரியா நீங்க என்னோட பேர சொன்னீங்க?”
“உன்ன என்னோட பொண்டாட்டியா நெனச்சதாலதான் அப்பிடி சொன்னன்”
“நான் கல்யாணத்துக்கு சரினு சொல்லாட்டி”
“நீ உங்க அம்மா அப்பாவ கஸ்ரப்படுத்த மாட்ட அது எனக்குத் தெரியும் அதுதான் ”
“சரிதான் but எனக்கு time வேணும்”
“no problem take your time”
“thanks ”
“பரவால்ல சரி போலாமா lateஆச்சி”
“சரி போலாம்”
“உன்ன வீட்ல விட்டுட்டு போறன்”
“சரி”
வீட்டுக்கு வந்ததும் உள்ள வாங்க என்று அவள் அழைக்கும் போதே கார் சத்தம் கேட்டு வந்த மதி அவரும் அவனை அழைக்க உள்ளே வந்தான்.
“வாங்க மாப்பிள்ளை”என்றபடி வந்தார் குமார்.
“என்ன மாமா நீங்க எப்பவும் போல பேரச்சொல்லியே கூப்பிடுங்க மாமா”
“என்ன இருந்தாலும்….”
“no மாமா நான் எப்பவும் உங்க கமலேஷ்தான் சரியா?”
“சரிப்பா உங்க ரெண்டுபேருக்கும் இந்தக் கல்யாணத்துல சம்மதமா?”
“சம்மதம் மாமா ”
“சம்மதம் பா”
” ரொம்ப happyda நீங்க ஏதாவது சொல்லணுமா?”
இருவரும் “ஆமா”
“என்னது”
“அண்ணன் வரணும்”
“நீங்க என்ன கமலேஷ் சொல்லணும்?”
“நானும் அதுதான் மாமா சொல்ல வந்தன்”
“சரிப்பா அவன் வந்திடுவான்”
“சரிப்பா நான் வர்றன்”
“சாப்டு போபா”
“இல்லமா நான் பிறகு வர்றன்” என்றவன் அனைவரிடமும் விடை பெற்றுச் சென்றான்.
சோலையூர்…..
என்றுமில்லாதவாறு இன்று நேரத்திற்கு தூங்கிய வதனா பயந்து அலறியபடி எழுந்தாள்.
வதனா பயந்து எழக் காரணம் என்ன????
காத்திருப்புத் தொடரும்……….
Nice 👍
Thank you akkachi 😊
❤️❤️❤️
Thank you ma😊