காத்திருப்பு : 17
“என்ன ரதி நன்றி சொல்லணுமா?” என்று கமலேஷ் கேட்டதும் ரதி அதிர்ந்தாள்.
ஆம் தேவி நன்றி சொல்லத்தான் கமலேஷ்கூட வந்தாள்.
“உங்களுக்கு எப்பிடித் தெரியும்?”
“முதல்ல கார ஓரமா நிறுத்து ரதி”
அவள் காரை நிறுத்தியதும்.
“உங்களுக்கு எப்பிடித் தெரியும்?”
“வீட்ல நான் வதனாவ தங்கச்சினு சொல்லி உன்ன பார்த்ததும் உன்னோட கண்கள் என்னை நன்றியோட பார்த்துச்சிடா அதுதான்”
“ஆமாங்க வதனா கிராமத்தில வளர்ந்தவ. ரொம்ப நல்லவ. கோவப்படக்கூட மாட்டா. அவள இங்க மல்லிகா அத்தை பட்டிக்காடுனு சொன்னதும் எனக்கு கோவம் வந்திச்சு. அதான் திட்டிட்டன். அவள எனக்கு ரொம்ப பிடிக்கும். அண்ணாவும் பட்டிக்காட்டு பொண்ணுகூட ஏன் பேசுறனு கேட்டாங்க. எங்க நீங்களும் அவள புடிக்காதுனு சொல்லிடுவீங்களோனு நான் பயந்திட்டன். ஆனா நீங்க தங்கச்சியா அவள ஏத்துக்கிட்டதில I’m so happy.”
“எனக்கு வதனா ஒரு சின்ன பிள்ளை மாதிரி தெரிஞ்சா அவள பார்த்ததும் தங்கச்சி என்ற உணர்வுதான் வந்திச்சு. அதுமட்டுமல்ல உனக்கு பிடிச்சது எதுவா இருந்தாலும் எனக்கு பிடிக்கும் ரதிமா”
“thank you so much”
“நமக்குள்ள எதுக்கு thanks அதெல்லாம் வேணாம் ok”
“சரி போலாமா”
“ம்… போலாம்”
“bye ரதி பத்திரமா போ போயிட்டு போன் பண்ணு சரியா ”
“bye சரி ”
பெரிய டாக்டரிடம் பேசிவிட்டு வந்த கமலேஷ் தேவி போகாமல் தயங்கியபடி நிற்பதைக் கண்டான்.
“என்னாச்சு ரதி வீட்டுக்கு போகல”
“என்ன உங்க வீட்டுக்கு கூட்டிட்டு போக முடியுமா?”
“ஏன் என்னாச்சுடா?”
“பிளீஸ்”
“வா ரதி போலாம்”
” சரி நீங்க உங்க வண்டிய எடுத்திட்டு வாங்க நாம வந்த காரை டிரைவர் பின்னாடி எடுத்திட்ட வருவாரு நான் அவர வரச்சொல்லிருக்கன்.”
“சரி வா ” என்றபடி வந்ததுகாரில் ஏறினான் hospital இருந்து பத்து நிமிடத்தில் வந்து சேர்ந்தான் தன் வீட்டுக்கு. உள்ளே ரதியை அழைத்துச் சென்றான்.
“வீட்ல யாரும் இல்லையா?”
“யாருமே இல்ல வீட்டு வேலை செய்ய ஒரு அம்மா காலையில வருவாங்க செஞ்சிட்டு evng சமைச்சி வைச்சிட்டு போயிருவாங்க”
“வா நான் வீட்ட சுத்திக் காட்றன்”
“வேணாம் உங்க றூமுக்கு கூட்டிட்டு போங்க பிளிஸ்”
“வா” என்றவன் தன் அறைக்குச் சென்றதும் பின்னாடி வந்த தேவி அவனை அணைத்தாள். அவளது அணைப்பு அவள் எதிர்பாராத ஒன்றாகும். அவனது சட்டையில் ஈரத்தை உணர்ந்தவன்
” ரதிமா என்னடா ஏன் அழுறா?”
“I love u so much”
“ஏய் என்னடா?”
“என்ன எவ்வளவு புரிஞ்சிக்கிட்டு இருக்கீங்க நீங்க கிடைக்க நான் குடுத்து வைச்சிருக்கணும்ங்க”
“அழதடா ரதிமா உன்ன எனக்குப் பிடிக்கும் so உனக்குப் பிடிச்சதும் எனக்கு பிடிக்கும்டா but நீ எதுக்காக அழற? வதனா விஷயம் மட்டும் காரணமா இல்ல வேற ஏதும் காரணமாடா?”
“இல்லங்க அதுமட்டும்தான் காரணம்”
“சரி வீட்ல தேட மாட்டாங்க போலாமா?”
“நான் கொஞ்சநேரம் இப்பிடியே இருக்கன் பிளீஸ்”
“சரி சரி ” அவளை அணைப்பில் வைத்திருந்தபடியே யோசனையிலிருந்தான் கமலேஷ் ஏன் இவ இப்பிடி பயப்பர்றா வதனா விஷயம்னா கார்ல இருக்கும் போதே கட்டிப்பிடிச்சிருக்கலாம் ஆனா நான் டாக்டர பாத்திட்டு வந்தப்புறம் இப்பிடினா என்ன நடந்திருக்கும்?” தேவி விடாது இறுக்கிப்பிடித்தபடியே இருந்தாள். நேரமாவதை உணர்ந்த கமலேஷ்
“ரதிமா நேரமாச்சு வா போலாம் ”
“நான் போகமாட்டன் உங்ககூடவேதான் இருப்பன் ” என்றவளது பிடி இறுகியது.
“பாட்டி என்னடா நினைப்பாங்க இன்னும் ஒன்பது நாள்ல நீ இங்க வரப்போறா பிறகு உன்ன போக சொல்லமாட்டன் சரியா?”என்றவன் தலையை தடவிவிட்டான்.
“நெஜமா என்ன விட்டு போகமாட்டிங்கதானே?”
“இல்லடா என்னோட ரதிய விட்டு எப்பவும் போகமாட்டன்” என்றவன். அவளது நெற்றியில் இதமாக முத்தமிட்டான்.
“சரி நான் வர்றன்”
“சரிடா பத்ரமா போ”
“நான் உங்களுக்கு நைட்டுக்கு போன் பண்ணவா?”
“நீ எங்கிட்ட இதெல்லாம் கேக்கலாமாடா? தாராளமா பண்ணலாம் சரியா”
“சரி நான் வர்றன்” அவளை அனுப்பிவிட்டு வந்தவன் மரகதம்மாள் பாட்டிக்கு போன் பண்ணி நடந்தவற்றைக் கூறி பத்திரமாக பார்த்துக்கொள்ளச் சொன்னான். அவரும் சரி என்றார்.
“வாம்மா தேவி சாப்பிடலாம்”
“வேணாம் பாட்டி பசிக்கல”
“ஏன்மா வதனாவ பாரு பேச ஆளில்லாம இருக்கா சாப்ட கூப்டன் நீ வரட்டும் என்று சொல்லிட்டு பார்த்திட்டு இருக்கா”
“ஏன் வதனா சாப்பிடல ? வாடா சாப்பிட என வதனாவை அழைத்துக்கொண்டு சாப்பிட அமர்ந்தாள். அவர்கள் இருவரது நட்பையும் கண்டு பூரித்தனர் மற்றையவர்கள்.
இதனைப் பார்த்து மல்லிகா நீலுவிடம்
“பாத்தியா நீலூ இதுங்க கொழுப்ப?”
“ஆமாமா சூர்யா வரட்டும் இதுங்களுக்கு இருக்கு”
அனைவரும் அவர்களது அறைக்கு தூங்கச் சென்றனர். அப்போது தேவியின் போன் ஒலித்தது.
“யார் தேவி போன்ல”
“அண்ணன்மா”
“சொல்லுணா ”
“என்ன பண்ற சாப்டியா பாட்டி எப்பிடி இருக்காங்க?”
“ம் நல்லா இருக்காங்கண்ணா நீ சாப்டியா எப்போப வர்ற?” என தேவி கேட்கும் போது தேவி கொஞ்சம் வா என வதனா அழைத்தாள்.
“அண்ணா வதனா கூப்டா நீ பாட்டி கூட பேசு” என்றவள் அவனது பதிலை எதிர்பார்க்காது பாட்டியிடம் கொடுத்துவிட்டு வதனாவிடம் சென்றாள்.
“எப்பிடி இருக்க சூர்யா?”
“நல்லா இருக்கன் பாட்டி நீங்க?”
“நான் நல்லாருக்கன் பாட்டி”
“எப்பப்பா வர்ற?”
“மூணுநாள்ல வர்றன் பாட்டி”
“சரிப்பா மாப்ள கூட பேசிட்டியா?”
“இல்ல பாட்டி தேவிகூட பேசிட்டு கமலேஷ் கூட பேசலாம்னு பாத்தன் அதுக்குள்ள யாரோ கூப்ட தேவி எங்கூட பேசாம போயிட்டா”
“ஓ அது வதனா கூப்டாப்பா அதுதான் போயிட்டா சரி நீ நாளைக்கு பேசுப்பா அவகூட”
“சரிபாட்டி”
“சரிப்பா நான் வதனா தூங்கிட்டாளானு பாத்திட்டு வர்றன்”
“சரி நான் போனை வைக்கிறன்.”
போனை வைத்ததும் சூர்யாக்கு கோபம் அதிகமானது. இத்தனை நாள் எல்லோருக்கும் நான் முக்கியமானவனா இருந்தன் ஆனா இன்னைக்கு நீ முக்கியமானவளா மாறிட்ட அங்க வந்து இருக்குடி உனக்கு என்று வதனா மீது வன்மத்தை வளர்த்தான் சூர்யா.
“என்ன வதனா கூப்ட”
“நான் உங்கூட கொஞ்சம் பேசலாமா தேவி”
“ஏய் நீ என்னோட தோழிடி நீ எவ்ளவு நேரம்னாலும் பேசுடி”
“உனக்கு இந்த கல்யாணத்துல சம்மதம்தானே”
“ஆமாடி சம்மதம்”
“உனக்கும் அண்ணாக்கும் ஏதும் பிரச்சனையா?”
“இல்லையே ஏன் கேக்கிறா?”
“இல்ல வெளில போயிட்டு வந்ததில இருந்து நீ சரியாயில்ல அதுதான்”
“நான் நல்லாதான்டி இருக்கன்”
“உங்க வீட்ல உள்ளவங்கவேணா உன்ன கண்டுபிடிக்காம இருக்கலாம் ஆனா நான் உன்னோட தோழி சொல்லுடி என்னாச்சி?”
“அது… வந்துடி…. இன்னைக்கி hospitalல”
“உனக்கு ஏங்கிட்ட சொல்ல தயக்கமா இருந்தா சொல்லாதடி விடு பரவால்ல ஆனா எதையும் போட்டு குழப்பிக்காத”
“இல்லடி உங்கிட்ட சொல்லாம இல்லடி என்றவள் நடந்ததைக் கூற
என்ன சொல்ற தேவி என்றாள் கோபத்துன் வதனா.
வதனாவின்ன கோபத்திற்கு காரணம் என்ன?
காத்திருப்புத் தொடரும்……..
❤️❤️
Thank you da💜
Nice da