வருவாயா என்னவனே : 18

4.9
(10)

காத்திருப்பு : 18

கமலேஷ் hospital உள்ளே செல்ல அவனை சிறிது நேரம் பார்த்தபடி நின்றிருந்த தேவியை அழைத்தது அங்குள்ள நர்ஸின் குரல்

“ஏய் யார் நீ ?”

“நீங்க யாரு முதல்ல மரியாதையா பேசுங்க ”

“உனக்கெதுக்குடி மரியாதை டாக்டரேயே பாத்திட்டு இருக்க என்ன இன்னைக்கு பார்ட்டி யாரும் மாட்டலயா?”

“யேய் என்ன சொன்ன?”

“உன்னோட தொழிலுக்கு யாரும் கிடைக்கலயா ஆளும் நீயும் போ அங்கிட்டு டாக்டர் என்னோடவரு சரியா” என்றுவிட்டு தேவியை ஒரு ஏளனப் பார்வை பார்த்து விட்டு சென்றாள். (கமலேஷ் தேவியுடன் வருவதைப் பார்த்தவள். தேவி மீது கோவம் வரவே அவள் கமலேஷை விட்டு போயிடணும் என்று நெனச்சே அப்பிடி பேசினாள்.)

இவற்றை தேவி வதனாவிடம் சொன்னதும் வதனா கோபத்துடன் தேவியை அழைத்துக் கொண்டு கீழே பாட்டியிடம் சென்றவள்.

“பாட்டி நானும் தேவியும் கொஞ்சம் வெளில போயிட்டு வர்றம்” என்றவள் பாட்டியின் பதிலை எதிர்பார்க்காது சென்றாள். வதனாவை இப்படி கோபத்தோடு ஒருபோதும் பார்காத பாட்டி திகைத்தபடி இருந்தார்.

வதனா தேவியை அழைத்து வந்தது கமலேஷ் வீட்டுக்கே. கார் சத்தம் கேட்டு வெளியில் வந்த கமலேஷ் இருவரையும் பார்தது என்ன “ரெண்டு பேரும் வந்திருக்கீங்க என்னாச்சி?”

“அண்ணா கொஞ்சம் எங்க கூட வர்றீங்களா?”

அவர்களது முகத்தைப் பார்த்தே ஏதோ சரியில்லை என்பதை உணர்ந்தவன். “இருங்க வர்றன் என்றவன் இரண்டு நிமிடங்களில் வந்தான். அவன் வந்ததும் டிரைவரிடம் அண்ணா கமலேஷ் அண்ணா hospital போங்க”

“இப்போ hospital எதுக்கு வதனா?”

“சொல்றன் அண்ணா”

“தேவி உனக்கு என்னடா ஏன் தலைகுனிஞ்சிருக்க?”

“ஒண்ணுமில்லை என தலையசைத்தவளைப் பார்த்த கமலேஷ் யோசித்தான்.hospital வந்ததும் வாங்க என ரெண்டு பேரையும் அழைத்துக்கொண்டு உள்ளேள வந்தவள்

” தேவி அந்த நர்ஸ் யாரென்று காட்டு”

“யார் நர்ஸ் என்ன சொல்ற வதனா?”

“கொஞ்ச நேரம் இருங்க அண்ணா”

“சொல்லு தேவி யாரு?”

“வதனா போலாம் பிளீஸ்”

“தேவி யாரென்று தெரியாம நான் வரமாட்டன் ” என்றவள் அவளை கைபிடித்து அழைத்துச்சென்று ஒவ்வொரு நர்ஸாக காட்டினாள். இவங்க யாரும் இல்ல வதனா என்றாள்.

“ஏய் நீ இன்னும் போலயா? இது hospital இங்க உனக்கு யாரும் கிடைக்கமாட்டாங்களே” என்றபடி வந்தாள் தேவியை தப்பாக பேசிய நர்ஸ்.

“தேவி இவள்தானா?”

“ம்…” என்றாள் கண்ணீருடன்

வதனா நர்ஸ் அருகே வந்தவள் யாரும் எதிர்பாரா வண்ணம் பளாரென அறைந்தாள்.

அவளது அறையில் விழுந்தவளை தூக்கியவள் மீண்டும் மீண்டும் அறைந்தாள். அவ் இடத்தில் கூட்டம் கூட ஒருவருடன் பேசிக்கொண்டிருந்த கமலேஷ் அங்கே வந்தவன் வதனா நர்ஸை அறைவதைக் கண்டவன் தடுத்தான்.

“என்ன வதனா இது”

கமலேஷைப் பார்த்தவள் தேவியை அவன் முன்னால் கொண்டு வந்து”இவ யாரு உங்களுக்கு ?”

“என்ன கேள்வி வதனா இது தேவி என்னோட பொண்டாட்டி”

“உங்க பொண்டாட்டிய இவ பிராஸ்டிடியூட் என்று சொல்றா இப்ப சொல்லுங்கண்ணா நான் செஞ்சது தப்பா?”

நர்ஸை பளாரென அறைந்த கமலேஷ் பொண்ணு என்றதால உன்ன ஒரு அடியோட விட்டன். இனிமேல் உனக்கு இங்க வேலை இல்ல இன்னொரு தடவ என் கண்முன்னாடி வந்த கொன்றுவன் உன்ன என்றான்.

கமலேஷ் இதுவரை கோபப்பட்டு பாத்திராதவர்கள் முதன்முறை அவனது கோபத்தில்ல பயந்தபடி நின்றனர்.

“இவ என்னோட உயிர் இவதான் எனக்கு எல்லாமே அவளப்போய் என்ன வார்த்த சொல்லிட்ட உன்ன சும்மா விடக்கூடாது என்றவன் மீண்டும் இரண்டு அறை கொடுத்துவிட்டு தேவியை அணைத்தபடி அங்கிருந்து அழைத்துச்சென்றான்.

“ரதி ஏன்மா எங்கிட்ட சொல்லல?”

“எனக்கு என்ன பண்ற என்று தெரியலங்க என்றவள் அவனை அணைத்து அழுதாள். என்ன பார்த்தா அப்பிடிப்பட்ட பொண்ணா தெரியுதா?” என கேட்டவள் கேவிக் கேவி அழுதாள்.

“நீ நல்ல பொண்ணுடி அவ ஏதோ தெரியாம பேசிட்டா நீ feel பண்ணாத இந்த விஷயத்தை மறந்திட்டு நம்ம கல்யாணத்தைப் பத்தி மட்டும் யோசி சரியா”

“சரி”

“thanks வதனா”

“எதுக்கு அண்ணா thanks அதெல்லாம் தேவை இல்லை”

“வதனா உனக்கு கோவம் வரும்னு எனக்கு இன்னைக்குத்தாண்டி தெரியும்”

“எனக்கே இன்னைக்குதான் தெரியும் தேவி உன்ன அவ அப்பிடி சொன்னதும் ரொம்ப கோவம் வந்திச்சு அவ எப்பிடி என்னோட தேவிய அப்பிடி பேசலாம்னு”

“வதனா” என்றபடி தேவி வதனாவைக் கட்டிக்கொண்டாள். கமலேஷ் இவர்கள் எப்போதும் பிரியக்கூடாகதென்று வேண்டிக்கொண்டான். அவனது வேண்டுகோளை கடவுள் நிறைவேற்றுவாரா?

“சரி நேரமாயிட்டு வாங்க போலாம்”

“சரிணா வா தேவி”

கமலேஷை வீட்டில் விட்டு விட்டு மதுராஇல்லம் வந்து சேர்ந்தனர். பாட்டியிடம் நடந்தவற்றைக் கூற பாட்டி வதனா உச்சிமுகர்ந்தார்.

” உன்ன நெனச்சா பெருமையா இருக்குடா வதனா.”

“இதில என்ன பாட்டி இருக்கு தேவி என்னோட உயிர்த்தோழி அவளுக்காக என்னவேணாலும் செய்வன் பாட்டி”

“ரொம்ப சந்தோஷம்டா ரெண்டு பேரும் எப்பவும் இப்பிடியே இருக்கணும் சரியா?”

“கண்டிப்பா பாட்டி “என்று இருவரும் ஒருமித்த குரலில் கூறினர்.

“சரிடா தங்கங்களா போய் தூங்குங்க நேரமாயிட்டுது”

“சரி பாட்டி” என்றபடி இருவரும் தங்களது அறைக்குச் சென்றனர்.

“வதனா உன்ன பிரண்ட் என்று சொல்ல பெருமையா இருக்குடி என்ன அவ தப்பா பேசினதும் என்ன பேசுறனு தெரியலடி ”

“சரி விடு தேவிமா அதப்பத்தி இனிமேல் நீ யோசிக்கக்கூடாது. என்னோட அண்ணாவ பத்தி மட்டும் யோசி சரியா?”

“சரிடி” என்றவளது முகம் நாணத்தால் சிவந்தது. அதனைப் பார்த்து ரசித்த வதனா நீ எப்பவும் இப்பிடி சந்தோஷமா இருடி என்றாள்.

“சரிங்க madam தூங்க போலாமா?”

“ம்…. குட்நைட் தேவி”

“குட்நைட் வதனா ” என்றபடி தூங்கச்சென்றனர்.

“அம்மா அந்த வதனாவ ஏதாச்சும் பண்ணணும்மா எல்லாரும் அவளையே தலையில தூக்கிவைச்சி கொண்டாடுராங்க”

“ஆமா நீலூ அதுக்கு ஏதாச்சும் பண்ணணும்”

“அம்மா ஒருவேளை சூர்யாக்கு வதனாவை கட்டிவைச்சிருவாங்களோ”

“அப்பிடி நடக்க நான் விட்றுவனா நீலூ ”

“சூர்யாக்கு இந்த பட்டிக்காட்ட பிடிக்காதும. அவன் ஸ்டேடஸ் பாக்கிரவன்மா”

“சரிடா ஆனா இதுங்க ஏதாச்சும் பண்ணி கட்டிவைச்சிட்டா”

“அதுக்கு முன்னாடி அவள ஏதாவது பண்ணணும்மா”

“இங்க வா நீலூ நாளைக்கு……… பண்ணிடலாம்”

“சரிமா அப்டியே செஞ்சிடலாம்” வதனாவை ஒழிப்பதற்கு திட்டமிட்டபடியே தூங்கினர் மல்லிகாவும் நீலூவும்.

மல்லிகாவும் நீலூவும் போட்ட திட்டம் என்ன?

அவர்களின் திட்டத்தில் அகப்படுவாளா வதனா?

காத்திருப்புத் தொடரும்………..

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.9 / 5. Vote count: 10

No votes so far! Be the first to rate this post.

4 thoughts on “வருவாயா என்னவனே : 18”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!