வருவாயா என்னவனே : 19

5
(9)

காத்திருப்பு : 19

ஆதவன் தன் கரங்களை நீட்டி மக்களை அணைத்தவாறு எழுந்து வந்தான். விடியலிலேயே கண் விழித்த வதனா குளித்துவிட்டு பாட்டியை பார்த்துவிட்டு கீழே வந்தாள்.சமையலறைக்கு சென்றாள். அங்கு யாரும் இல்லாமையால் அவளே காபி போட்டாள். அப்போது அங்கு வந்த மதி

“என்னம்மா நேரத்துக்கு எழும்பிட்டயாடா?”

“ஆமா அத்தை அதுதான் நானே காபி போட்டுடன் நீங்க மாமாக்கு எடுத்துட்டு போங்க நான் மற்றவங்களுக்கு கொடுக்கிறன்”

“உனக்கெதுக்குமா கஸ்ரம் நானே கொடுக்கிறன்”

“பரவால்ல அத்தை நீங்க போங்க” என்றவள் பாட்டிக்கும் தேவிக்கும் கொடுத்துவிட்டு மல்லிகாவுக்கும் நீலூக்கும் கொடுக்கச் சென்றாள்.

“அம்மா அவ காபி கொண்டு வர்றாமா”

“நம்ம பிளான்படி அவள நாம தொடர்ந்து அவமானப்படுத்திட்டே இருக்கணும் சரியா?”

“சரிமா”

“இந்தாங்கம்மா காபி ”

“ம்…ம்… நீலூ காபி குடிக்க மாட்டாள் போய் டீ கொண்டுவா”

“சரிமா” என்ற வதனா மீண்டும் போய் டீ கொண்டுவந்தாள்.

டீயை குடித்த நீலூ” என்னடி நான் என்ன சுகர்பேசண்டாடி. டீயில இனிப்பு இல்ல போ போய் போட்டு எடுத்துட்டு வா”

“சரி ” மீண்டும் வந்தாள்.

“தூ.. காப்பி ஆறிப் போயிட்டு போய் சூடா எடுத்து வா”

“முதல்லயே சொல்லிருக்கலாமே நீலூ”

“பளார்” ஒரு பட்டிக்காட்டு நீ என்ன பேரு சொல்லிக்கூப்பிடுற உனக்கு எவ்வளவு தைரியம்டி?”

“இங்க நடந்ததை யார்கிட்டையாவது சொன்ன தேவி கல்யாணத்தையே நிறுத்திருவன்.ஞாபகம் வச்சிக்கோ. போ ”

“சரிமா” என்றபடி கலங்கிய தன் கண்களை துடைத்தவள். தன் அறைக்கு வந்தாள். பால்கனியில் வந்து நின்றாள்.”ஏன் எல்லாரும் நம்மள பட்டிக்காடு பட்டிக்காடு என்று சொல்றாங்க பட்டிக்காடு என்றா என்ன? சீக்கிரம் இங்க இருந்து போயிடணும்”

(நீ காலம்பூரா இங்கதான் இருக்கப்போறா என விதி அவளைப்பார்த்து சிரித்தது.)

“என்ன வதனா கூப்பிட கூப்பிட திரும்பாம இருக்கா?”

“நான் கவனிக்கல தேவி ”

“என்ன முகம் ஒரு மாதிரி இருக்கு ?”

“ஒண்ணுமில்ல தேவி அம்மா ஞாபகம்”

“சரி சரி வா கீழ போலாம்”

“சரிவா ” இருவரும் கீழே வர தேவி குமாருக்கு அருகில் அமர வதனா சமையலறைக்குச் சென்றாள்.

“தேவி கல்யாண பத்திரிக்கை இன்னைக்கு வந்திரும்டா ”

“சரிப்பா” என்றாள் வெட்கத்துடன்.

“பாருடா என் பொண்ணுக்கு வெட்கமெல்லாம் வருது”

“போங்கப்பா” என்றபடி தந்தையின் தோளில் சாய்ந்து கொண்டாள்.

அப்போது வீட்டில் தொலைபேசி ஒலித்தது. அதை எடுத்தாள் தேவி

“ஹலோ ”

“ஹலோ வதனா இருக்காளாமா?”

“ஆமா சுந்தரம் மாமாவா ?”

“ஆமாடா தேவிமாவ பேசுற?”

“ஆமா மாமா எப்பிடி இருக்கீங்க?அத்தை எப்பிடி இருக்காங்க? நீங்களும் வந்திருக்கலாமே மாமா?”

“எல்லாரும் நல்லா இருக்கம் மா நாங்க கல்யாணத்துக்கு முதல்நாள் வர்றம்மா இங்க அறுவடை நேரம்மா அங்க எல்லாரும் எப்பிடி இருக்கீங்க?”

“சரிமாமா இங்க எல்லாரும் நல்லா இருக்கம் இருங்க வதனாவ கூப்றன்”

“சரிமா”

வதனாவைக் கூப்பிட்சாள் தேவி

“அப்பா ”

“வதனாமா எப்பிடி இருக்கடா”

“நல்லா இருக்கன்பா நீங்க எப்பிடி இருக்கீங்க அம்மா எங்கப்பா?”

“நல்லா இருக்கம்மா அம்மா பங்கஜம் வீட்ட போனாமா சாப்டியாமா?”

“இன்னும் இல்லப்பா இனிமேல்தான் நீங்க சாப்டாச்சா?”

“ஆமாடா சாப்டன் வயலுக்கு போகணும்மா அதுதான் உன்னோட பேசிட்டா நல்லா இருக்கும்னு கூப்டன்.”

“சரிப்பா கவனமா போயிட்டு வாங்க”

“சரிடாமா எல்லாரையும் கேட்டதா சொல்லு அம்மா வந்த பிறகு போன் பண்றன்மா வைக்கிறன்”

“சரிப்பா நான் வைக்கிறன்”

“என்ன வதனா சொல்றான் சுந்தரம்?”

“உங்க எல்லாரையும் கேட்டதா சொல்லட்டாம் கல்யாணத்துக்கு முதல்நாள்தான் வருவாங்களாம் பாட்டி ”

“சரிடா மா”

“வாங்க அத்தை சாப்பிடலாம் எல்லாரும் வாங்க மல்லிகா அனண்ணி நீங்களும் வாங்க”

எல்லோரும் வந்து சாப்பிட அமர மதி பரிமாறப்போக மல்லிகா

“நீ உக்காரு மதி வதனா பரிமாறட்டும்”

“இல்ல அண்ணி நான் பரிமார்றன் வதனா நீ உக்காருமா”

“இவ நம்மளோட ஒண்ணா உக்காந்து சாப்பிடணுமா” என மனதுக்குள் பொரிந்தாள் நீலூ.

“இல்ல அத்தை நீங்க இருங்க நான் பரிமார்றன்”

“எல்லாரும் இருங்க அவங்களுக்கு தேவையானதை அவங்களே எடுத்துக்கட்டும்”

“ஆமா அம்மா சொல்றமாதிரியே செஞ்சிடலாம் மதி வதனா உக்காருங்க”

எல்லாரும் உக்கார வதனா தேவிக்கும் நீலூக்கும் இடையில் இருந்தாள்.

நீலூ வதனாவை சாப்பிட விடாமல் வதனா அதை எடுத்துக்கொடு இதை எடுத்துக்கொடு என்று தொந்தரவு செய்ய வதனாவால் சாப்பிட முடியாமல் போனது. அதனைப் பார்த்த தேவி,

“நீலூ நீ எடுத்து சாப்பிட வேண்டியதுதானே எதுக்கு வதனாவ சாப்பிட விடாம இருக்க?”

“எனக்கு எட்டவில்லை அதனாலதான் வதனாகிட்ட சொன்னன்”

இவர்கள் தொடர்ந்து பேசினால் தன்னால்ல சண்டை வரும் என நினைத்த வதனா

“தேவி நான் சாப்டன்டி எனக்குப் போதும் நீ சாப்டு வா” என்றபடி எழுந்தாள்.

“சாப்பிடு வதனா நீ சரியா சாப்டல”

“இல்ல பாட்டி போதும் ” என்றவள் கைகழுவிவிட்டு வந்து hallல் இருந்தாள். அப்போது போன் ஒலித்தது.

“வதனா போனை எடும்மா”

“சரி அத்தை”

“ஹலோ” என்றாள்

“ஹலோ யாரு பேசுறது?”

“வதனா பேசுறன் நீங்க?”

ஓ அந்த பட்டிக்காடா ஆனா வாய்ஸ் நல்லா இருக்கே என்று நினைத்தவன். என்ன இது நம்ம ஏன் இப்பிடி நினைக்கிறம். ச…

“ஏய் நீ ஏன் போன் எடுத்த? அம்மா தேவி இல்லையா?”என கடுமையான குரலில் கேட்டாள்

அவனது குரலில் பயந்தவள்” அ…த்…தை….வ…த…னா…. சா.ப்…பி…டு…றா…ங்…க…” என்றாள் திக்கியபடி.

“சரி வந்ததும் நான் எடுத்ததா சொல்லு சரியா”

“ச…ரி…ங்…க” என்றபடி போனை வைத்தவள். ஏன் இப்பிடி கடுகடு என்று பேசுறாரு ஒழுங்கா பேசுறதுக்கு என்ன என நினைத்தாள்.

“யாரு வதனா?”

“உங்க…..பையன்….. போல அத்த”

“நீ ஏன்மா இப்பிடி பேசுற?”

“அவரு பேசினதக்கேட்டு பயந்திட்டன் அத்தை”

“அவன் அப்பிடித்தான்மா பேசுவான் ஆனா ரொம்ப நல்லவன்மா”

“சரி அத்தை”

“வதனா வர்றியா என்னோட பிரண்ட்ஸ பாத்திட்டு வரலாம்?”

“நான் எதுக்கு தேவி நான் வரல நீ போயிட்டு வா”

“நீயும் வா இல்லனா நான் போகமாட்டன்”

“போயிட்டு வா வதனா”

“சரி அத்தை”

“ரெடியாயிட்டு வா ”

“எங்க போறீங்க ரெண்டு பேரும்?”

“பிரண்ஸ பார்க்க போறம் நீலூ”

“நானும் வரலாமாம தேவி”

“அதுக்கென்ன நீலூவையும் கூட்டிட்டு போ தேவி”

“சரிமா வாங்க நீலூ போலாம்”

“நீ எங்க போற நீலூ?”

“நான் அவங்ககூட போயிட்டு வர்றன்மா”

“நீ எதுக்குடி அதுங்க கூட?”

“அம்மா அங்க போனா பட்டிக்காட அவமானப்படுத்த ஏதாவது வழி கிடைக்கும்னுதான் போறன்”

“சரிடி பார்த்துக்க”

“சரி சரி”

மூவரும் ஒன்றாக காரில் சென்றனர். நடக்க இருக்கும் விபரீதம் தெரியாமல் வதனாவும் சென்றாள். மூவரும் ******hotel வந்து சேர்ந்தனர். தனது பிரண்ட்ஸை வதனாவுக்கும் நீலூவுக்கும் அறிமுகப்படுத்தி வைத்தாள்.

“நானும் உங்க கூட உக்காரலாமா?” என கேட்டவனைத் திரும்பி பார்த்த தேவி எழுந்து நின்றாள்.

தேவி யாரைப் பார்த்து எழுந்து நின்றாள்?

காத்திருப்புத் தொடரும்…………..

 

 

 

 

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 5 / 5. Vote count: 9

No votes so far! Be the first to rate this post.

4 thoughts on “வருவாயா என்னவனே : 19”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!