காத்திருப்பு : 23
முனிவரின் வாக்கினைக்கேட்ட கேட்ட மதி மயங்கி விழுந்தார். பின் கமலேஷ் பரிசோதித்துப் பார்க்க அதிர்ச்சியினால் மயங்கி விழுந்துள்ளார் என்றார். முகத்தில் தண்ணீர் தெளிக்க சிறிது நேரத்தில் எழுந்தார். முனிவரிடம் சென்றார்.
முனிவர் புன்னகையுடன் நான் சொல்ல வந்ததை முழுமையாக கேளம்மா என்றார்.
” பலரின் அவச்சொல்லின் மத்தியிலே உன் மகன் திருமணம் நடக்கும். சூழ்ச்சியில் அகப்பட்டு நண்பன் துணையால் சூழ்ச்சியினை வெல்வான். மனைவியை பிரிந்திருக்கும் காலம் வரும். சில காலங்கள்தான். மீண்டும் அவனவள் சேர்வாள். துயர் விலகி சுபீட்சமாய் வாழ்வான்” என்றார்.
“என்ன சாமி இப்பிடி சொல்றீங்க?”
“கவலப்படாதம்மா எல்லாம் நல்லதாவே நடக்கும்”
மரகதம்மாவை அழைத்தவர் ” நீ எண்ணியது நல்லதாக நடக்கும் ” என்றார்.
பின் அனைவருக்கும் விபூதி கொடுத்தனுப்பினார்.
“என்ன அத்தை இப்பிடி சொல்றாரு?”
“கவலப்படாத மதி நடக்குறத மாத்தமுடியாது. எது நடந்தாலும் அது நல்லதாகவே நடக்கும்”
“சரி போலாம் குமார் வீட்ல வதனா தனியா இருப்பா “
“ஆமா போலாம்.”
எல்லோரும் காரில் மீண்டும் பயணத்தைத் தொடர்ந்தனர்.
மதுரா இல்லம்…….
” வதனா நேரமாயிட்டு நீ தூங்கு நாளைக்கு பேசலாம்.”
“சரி”
“குட்நைட் வதனா”
“குட்நைட்”
சூர்யா தனதறைக்கு வர வதனா தூங்கினாள்.
தனதறைக்கு வந்த சூர்யா
“என்ன சூர்யா நீ இப்பிடி மாறிட்ட. உன்ன பாத்தாலே எல்லோரும் பயந்து நடுங்குவாங்க. உன் பார்வையாலே பொண்ணுங்கள தள்ளி வைக்கிற நீ எப்பிடிடா வதனாவ லவ் பண்ற?..” என எண்ணியபடியே தூங்கினான்.
நள்ளிரவு நேரத்திலே அனைவரும் வீடு வந்து சேர்ந்தனர். கமலேஷ் சூர்யா அறைக்குச் சென்று தூங்கினான்.அனைவரும் தத்தமது அறையில் தூங்கினர்.
காலையில் கதிரவன் கண்விழித்து வந்து மாந்தர்களைத் துயிலெழுப்பினான். மதுரா இல்லத்தில் அனைவரும் ஒன்றுகூடினர்.
“தேவிமா எல்லாருக்கும் காப்பி எடுத்திட்டு வாமா”
“சரிமா “
“இரு தேவி நானும் வர்றன் “என வதனாவும் எழுந்து சென்றாள்.
“எல்லோரும் கேட்டுக்கோங்க முனிவர் சொன்ன விசயம் நம்ம சூர்யாக்கு தெரியக்கூடாது சரியா”
“சரிமா”
“சரி அத்தை”
“குட் மோர்னிங்மா”என்றபடி சூர்யா வந்து சோபாவில் அமரவும் தேவியும் வதனாவும் வந்தனர். எல்லோரும் காப்பி குடித்து முடிந்ததும் மரகதம்மா பேச ஆரம்பித்தார்.
“சூர்யா தேவி கல்யாணத்துக்கு எல்லா வேலையும் செய்ய தொடங்கியாச்சு. இன்னும் ரெண்டு நாள்ல கல்யாணம் பார்த்து வேலையை செய்ங்க சரியா?”
“சரிப்பாட்டி மண்டப வேலை மட்டும்தான் இருக்குப்பா”
“சரிப்பா. வதனாமா உங்க அப்பா அம்மா எப்ப வர்றாங்க?”
“வயல்ல அறுவடை நடக்குதாம் மாமா கல்யாணத்துக்கு மொதநாள் தான் வருவாங்களாம்”
“சரிம்மா பரவால்ல”
பின் எல்லாரும் வேலையை பிரித்தெடுத்தனர்.
அப்போது நீலூ அறையில்
“என்னம்மா அந்த முனிவரு இப்பிடி சொல்லிட்டாரு”
“ஆமா நீலூ நானும் அதைத்தான் யோசிக்கிறன்டி நாம இத வச்சி ஏதும் பிளான் பண்ணலாம்டி “
“சரிமா”
கமலேஷ் வீட்டில் கமலேஷ் தேவியுடன் பேசிக்கொண்டிருந்தான்.
“என்ன ரதிமா இந்த முனிவரு இப்பிடி சொல்லித்தாரு?”
“அதுதாங்க எனக்கு ரொம்ப கஸ்ரமா இருக்கு அண்ணா பாவம்க”
“கவலப்படாத ரதிமா சூர்யாக்கு எதுவும் நடக்காது நான் பாத்துக்கிறன்.”
“சரிங்க”
“சரி ரதி அப்புறம்….”
“அப்புறம் என்னங்க?”
“வேற ஒன்னும் இல்லையா?”
“வேற என்னங்க?”
“ரெண்டு நாள்ல கல்யாணத்தை வைச்சிட்டு என்ன பேசுறனு கேக்கிறியேமா?” என்றவன் ஏதோ பேச தேவி வெட்கத்தில் முகம் சிவந்தாள்.
“என்ன டாக்டர் ரொமான்டிக்கா பேசுறீங்க?”
“ஏன் பொண்டாட்டி அப்பிடிதான் இனிமேல் பேசணும்”
“என்ன புதுசா?”
“என்ன புதுசானு கேக்குற?”
“இல்ல பொண்சாட்டினு சொல்றீங்க?”
“ஏன் நான் சொல்லக் கூடாதா?”
“அப்பிடி இல்லங்க பொண்டாட்டினு சொல்றீங்க”
“அது இனி நமக்குத்தான் கல்யாணம் நடக்கப்போகுதே அதுதான்”
“ம்…சரிங்க”
“ரதி” மெதுவாக அழைக்க தேவியோ பனியாக உருகினாள்.
“ம் ஒண்ணே ஒண்ணு குடுடா”
“போங்க”
“சரி அப்போ நான் கொடுக்கிறன்”
“வேண்டாம்” என்றாள் வெட்கத்தில்.
“அப்போ சரி “என்றவன் எதிர்பாரா நேரத்தில் முத்தொன்றை வழங்கினான் அந்தக் கள்வன்.
“ரதி”
“ம்”
“நான் கொடுத்தத பத்திரமா வைச்சிக்கோ சரியா? நான் அப்புறமா வாங்கிக்கிறன்”
“ம்.. நான் போனை வைக்கட்டுமா?”
“சரிமா “
இரண்டு நாள்கள் வேகமாக நகர்ந்திட நாளை திருமணம் எனும் நிலை வந்தது. அனைவரும் மண்டபத்திற்கு வந்து சேர்ந்தனர்.
“வதனா “
“என்ன பாட்டி “
“உங்கப்பா போன் பண்ணினான்மா”
“என்னவாம் பாட்டி”
“நாளைக்கு கல்யாணத்துக்குள்ளதான் வர முடியுமாம்னு சொல்லச் சொன்னான்மா”
“சரிப்பாட்டி அப்பாக்கு வேலை இருந்திருக்கும் பாட்டி”
“சரிடாமா போய் மதியப் பாரு பார்லர்க்கு போன ரதி வந்திட்டாளா?”
“இல்லப் பாட்டி அவ வரல சிந்து( தேவி பிரண்ட்) அக்காகூட வந்திருவா பாட்டி “
“சரிடாமா இதெல்லாம் நாளைக்கு கல்யாணத்துக்கு வர்றவங்களுக்கு கொடுக்கிறது. இத சூர்யாய றூம்ல வைச்சிடுமா அப்புறம் எடுத்துக்கலாம்”
“சரி பாட்டி” என்றவள். அவற்றை எடுத்துக்கொண்டு சூர்யா அறைக்குச் சென்று கதவைத் தட்டினாள்.
“Yes come in”
கதவைத் திறந்து கொண்டு வந்தாள் வதனா.
“நீயா வதனா நீ எதுக்கு கதவைத் தட்டின? கதவ தட்டாமலே வந்திருக்கலாமே”
“பரவால்லங்க “
“கையில என்ன?”
“இதுவா நாளைக்கு கல்யாணத்துக்கு வர்றவங்களுக்கு கொடுக்கணுமாம் உங்க றூம்ல இருக்கட்டுமாம் அப்புறம் எடுக்கணும்னு பாட்டி சொன்னாங்க”
“சரி அங்க வை வதனா” வதனா வைச்சிட்டு நிமிர்ந்து சூர்யாவைப் பார்த்தாள்.
“நான் வர்றன்”
“கொஞ்ச நேரம் இரு பேசலாம்”
“கீழ வேலை இருக்கு அதுமட்டுமில்லாம மண்டபம் நிறைய சொந்தக்காரங்களா இருக்காங்க நம்ம தனியா பேசுறதப்பார்த்தா தப்பா நினைச்சிருவாங்க”
“அப்டியெல்லாம் பேசமாட்டாங்க “
“எனக்கு பயமா இருக்கு நான் போறன்னு சொன்ன வதனா றூமை விட்டு வந்து விட்டாள்”
சூர்யாக்கு பயங்கர கோவம் வந்தது. “நீ எங்கிட்ட மாட்டாமலா போவா பாத்துக்கிறன் உன்ன” என நினைத்தவன் கமலேஷை பார்க்க செல்ல கீழே வந்தான்.
“சூர்யா”
“பாட்டி”
“சூர்யா சாயந்தரம் மாப்பிள்ளை வீட்ல இருந்து யார் யாரு வர்றாங்க?”
“கமலேஷோட சித்தப்பா சித்திங்க அவங்க சொந்தக்காராக்கள் வர்றாங்க பாட்டி”
“சரிப்பா எல்லாத்தையும் பார்த்துக்கோப்பா அப்டியே நீயும் கவனமா இரு “
“சரி பாட்டி ஆனா எனக்கு என்ன பாட்டி?”
“ஒண்ணுமில்லை சொல்றன்.”
“சரிப் பாட்டி நான் மச்சான பாத்திட்டு வர்றன்”
“சரிப்பா”
கமலேஷ் வீட்டில்….
“கமலேஷ்”
“சொல்லுங்க சித்தி “
“எத்தனை மணிக்கு நாம மண்டபத்துக்கு போகணும்?”
“நாலு மணிக்குச் சித்தி”
“சரிப்பா நீ கொஞ்சநேரம் போய் ரெஸ்ட் எடு “
“சரி சித்தி”
தனது அறைக்கு வந்த கமலேஷ் கட்டிலில் இருந்தபடி தனது தாய் தந்தையரின் போட்டோவை எடுத்துப் பார்த்தான்.
“அம்மா அப்பா நாளைக்கு உங்க பையனுக்கு கல்யாணம். நீங்க இருந்திருந்தா எப்பிடியெல்லாம் செய்திருப்பீங்க….. கொண்டாடிருப்பீங்க….
அம்மா எனக்கு மனசுக்கு ரொம்ப கஸ்டமா இருக்குமா உங்கள ரொம்ப மிஸ் பண்றன். அம்மா உங்க மடில படுத்துக்கணும் போல இருக்கு அப்பா உங்க தோள்ல சாயணும் போல இருக்கு. நான் தனிய இருக்கிறன்மா. நான் இதுவரைக்கும் அழலை ஆனால் இப்போ அழணும்போல இருக்கு.” என்றவன் போட்டோவை அணைத்துக் கொண்டு அழுதான்.
அப்போது அழுதவனின் தலையை மெதுவாக வருடியது ஒரு கரம். வருடலில் நிமிர்ந்த கமலேஷ் தன் முன்னால்ல நிற்கும் ஆருயீர் தோழன் சூர்யாவைக் கண்டவன் அவனை “சூர்யா” என அழைத்தபடி அவனை அணைத்துக்கொண்டு அழுதான். தானும் தன் நண்பனை அணைத்தபடி அவனது முதுகை மெதுவாக வருடினான்.
சூர்யா அவனது அழுகையை நிறுத்தவில்லை காரணம் அவன் அழுதால் கொஞ்சம் அவனது பாரம் இறங்கும் என்று. கமலேஷ் கவலையா இருப்பான் என்று தெரிந்துதான் சூர்யா வந்தது. சிறிது நேரம் அழவிட்டவன் பின்
“கமலேஷ் போ போய் முகம் கழுவிட்டு வா”
“சூர்யா எனக்கு ரொம்ப கஸ்ரமா இருக்குடா என்னோட வாழ்க்கைல நடக்கிற முக்கியமான நிகழ்வில அம்மா அப்பா இல்லன்றதை நெனச்சா முடியல சூர்யா”
“சரிடா ஆனா அவங்க உன்ன பாத்திட்டுதான் இருப்பாங்க நீ இப்பிடி அழுறத பார்த்தா அழவங்களுக்கு ரொம்ப கஸ்ரமா இருக்கும்டா. அழாதடா உனக்கு நான் இருக்கன். பாட்டி அம்மா அப்பா தேவி வதனா எல்லோரும் இருக்கம்.எப்பவும் இருப்பம். நீ இப்பிடி இருக்கிறது நல்லா இல்லடா. “
“நீ எப்பிடிடா இந் நேரத்துக்கு வந்த?”
“நீ இப்பிடி யோசிச்சிட்டு கவலப்பட்டுட்டே இருப்பனு தெரியும் அதுதான் வந்தன்.”
“ரொம்ப தாங்ஸ்டா”
“டேய் தங்ஸ் சொன்ன கொன்றுவன் உன்ன போ போய் freshஆகிட்டு வா வெளில போலாம்.”
“சரிடா ” என்றவன் freshஆகி வர இருவரும் கீழே வந்தனர்.
“சித்தி வெளில போயிட்டு வர்றம்”
“கமலேஷ் நாலுமணிக்கு மண்டபத்துக்கு போகணும் அது வரைக்கும் வெளில போகக்கூடாதுனு சொல்லுவாங்க”
“சரி சித்தி கமலேஷ் அப்போ இங்கேயே இருப்பம்”
“ஓகே சூர்யா”
“குடிக்க ஏதாச்சும் கொண்டுவரவாப்பா?”
“ஜூஸ் கொடுங்க சித்தி”
“சரிப்பா ” ஜூஸை கொண்டு வந்தார். அதைக் குடித்தபடி பேசிக்கொண்டிருந்தனர். அப்போது சூர்யாக்கு போன் வந்தது.
“ஹலோ”
“ஹலோ sir”
“சொல்லுங்க கோபி (சூர்யாவின் P.A)”
“sir உங்களுக்கு இன்னைக்கு ஆறுமணிக்கு foreign companyயோட மீட்டிங் இருக்கு sir”
“yes அதுக்கென்ன கோபி?”
“sir நம்மளோட போட்டி கம்பனி ஒன்னும் அதுல கலந்துக்க இருக்கிறாங்க sir. foreign company project யாருக்கு கிடைக்கும்னு இன்னைக்கே சொல்லிடுவாங்களாம்”
“what “
“ஆமா sir இப்போதான் சொன்னாங்க ரெடியாகட்டுமாம்னு”
“ok kopi I will do it thanks for your news”
“ok sir”
“bye kopi”
“bye sir”
“என்னாச்சி சூர்யா?”
“foreign company ஒன்னோட மீட்டிங் இருந்திச்சிடா இன்னைக்கி. இப்போ அந்த மீட்டிங்ல ஒரு project யாருக்கு கிடைக்கும்னு சொல்லுவாங்கடா”
“உனக்குத்தான்டா கிடைக்கும்”
“நான் நேர்மையான வழில போறவன்டா ஆனா என்னோட ஒரு போட்டிக் கம்பனி ஒன்னு இருக்குடா அவனுங்க திருட்டுத்தனமா project அவனுங்களுக்கு வர்ற மாதிரி செஞ்சிடுவானுங்கடா. இது வரைக்கும் எட்டு project எடுத்திருக்கானுங்க இந்த தடவை அப்பிடி செஞ்சானுங்க செத்தாங்கடா”
“விடு சூர்யா இந்தடவை உனக்குத்தான் கிடைக்கும் சரியா?”
“சரிடா project சம்மந்தமா கொஞ்சம் பார்க்கணும்டா நான் கெளம்புறன். மண்டபத்தில மீற் பண்ணலாம்”
“சரிடா பார்த்துப்போ”
“சரிடா bye நீயும் எதப்பத்தியும் யோசிக்காத சரியா?”
“சரிா bye”
வீட்டுக்கு வந்த சூர்யா project வேலையை செய்து கொண்டிருந்தான். மற்றைய அனைவரும் தத்தம் வேலைகளில் ஈடுபட்டிருந்தனர். மாலை நான்குமணியளவில் கமலேஷ் தனது உறவினர்களுடன் வந்தான்.
சூர்யா வந்து மாலை போட்டு கமலேஷை வரவேற்றான்.
அனைத்து சொந்தபந்தங்களுடன் மண்டபம் ஆரவாரம் நிறைந்து காணப்பட்டது. வதனாவும் மதியும் அதிக வேலை செய்தனர். அதனைப் பார்த்த கமலேஷின் சித்தி,
“யாருங்க இந்தப்பொண்ணு?” என பக்கத்தில் இருந்தவரைக் கேட்க அவரோ
“தெரியலமா ஒருவேளை சூர்யாக்கு பாத்திருக்கிற பொண்ணோ தெரியல”
“ஓ.. சூர்யாக்கு பொருத்தமா இருப்பா” என்றார். இதனை அருகில் இருந்து கேட்ட மல்லிகா கோவத்துடன் அங்கிருந்து சென்றார்.
மாலை ஆறு மணியானதும் சூர்யா தனது லப்டொப்பை எடுத்துக்கொண்டு மீட்டிங்கில்ல கலந்து கொண்டான் மீட்டிங் முடிவடையும் நேரத்தில் project யாருக்கென அறிவித்தது foreign company.
project சூர்யாவுக்கு கிடைக்குமா??
காத்திருப்புத் தொடரும்………………
♥️♥️♥️
❤️❤️❤️
🥰🥰🥰
❤️❤️❤️