காத்திருப்பு : 24
foreign company மீட்டிங் முடியும் நேரத்தில் project யாருக்கு என அறிவித்தது. அதனைக்கேட்ட சூர்யா தனக்கு பக்கத்தில் இருந்த கதிரையை தூக்கி வீசினான். கண்கள் கோவைப்பழம் போல சிவந்து காணப்பட்டான். ஆம் இம் முறையும் சூர்யாவின் எதிர் கம்பனியே projectஐ கைப்பற்றியது. இதனால் பெரிதும் கோபத்திற்குள்ளானான் சூர்யா.
அதே நேரம் மண்டபத்தில் இருந்த மதி வதனாவிடம் “வதனாமா மேல சூர்யா இருக்கான் மதியம் சாப்பிடல்ல இந்த காப்பியைக் கொடுத்திட்டு வாம்மா”
“சரி அத்தை குடுங்க” என காப்பியை வாங்கிக்கொண்டு போனாள் வதனா. சூர்யாவின் றூம் கதவைத் தட்டாமல் திறந்து கொண்டு சென்றவள். சூர்யாவிடம்
“காப்பி குடிங்க ” என்றாள். கோபத்தில் இருந்த சூர்யா காப்பியைத் தட்டிவிட்டவன்.
“ஏய் றூமுக்குள்ள வரம்போது கதவைத் தட்டிட்டு வரத் தெரியாதா?”
அவனது சத்தத்தில் பயந்த வதனா” நீங்க…..தான்….. கதவைத்……. தட்டாம……. வரலாம்னு……சொன்னீங்க?”
“நான் சொன்னா சரியா சுத்தப் பட்டிக்காடா இருக்கியே நீ “என தனக்குப் project கிடைக்காத கோபத்தை வதனாவிடமே காட்டினான்.
“ம..ன்…னி….ச்…சி….டு….ங்….க”
“போ வெளில ” என பிடித்துத் தள்ளினான். வதனா றூமுக்கு வெளியே வந்து விழுந்தாள். இதனை கண்ட மல்லிகா நீலூவை அழைத்துக்கொண்டு மொட்டைமாடிக்கு வந்தார். வதனா எழுந்து கண்ணீரை துடைத்துவிட்டு கீழே சென்றாள்.
மேலே மொட்டைமாடியில் கமலேஷ் ஒரு ஓரத்தில் நின்று போன்பேசிக்கொண்டிருந்தான். அப்போது மல்லிகாவும் நீலூவும் யாரும் பின்னால் வருகிறார்களா என திரும்பிப் பார்த்தபடி வருவதைக் கண்டவன் போனைக் கட் பண்ணிவிட்டு ஒளிந்து நின்றான். கமலேஷ் அங்கிருப்பதைக் கவனிக்காத இருவரும் பேசத்தொடங்கினர்.
“நீலூ பார்த்தியா அந்த சூர்யா வதனாவ றூமை விட்டு தள்ளிவிட்டதை?”
“ஆமாம்மா அப்பிடி என்ன நடந்திருக்கும்?”
“தெரியலையேடி ஆனா இப்ப சூர்யா அவ மேல கோபத்தில இருக்கிறான் அத நாம பயன்படுத்தணும்”
“என்னம்மா செய்யலாம்?”
“நான் சொல்ற மாதிரி செய் சூர்யாக்கு நைட் பால்ல போதை மருந்த கலந்து குடுத்திடு. நான் வதனாக்கு குடுத்திடுவன் பிறகு சூர்யா றூம்ல நாளைக்கு கல்யாணத்துக்கு வர்றவங்களுக்கு குடுக்கவேண்டிய சில பொருட்களை வைச்சிருக்கு அத எடுத்திட்டு வரச் சொல்லி அவள அனுப்பிவைக்கிறன்.
நீ அவ உள்ள போனதும் கதவை லாக் பண்ணிருவம். அப்புறம் காலைல தொரந்துவிட்டிருவம் ஒரே நேரத்தில ரெண்டு மாங்கா நீ சூர்யாவை கல்யாணம் பண்ணிக்கலாம் அடுத்தது வதனாவ பழி வாங்கிரலாம்”
“அம்மா சூர்யாவோட எனக்கு எப்பிடிமா கல்யாணம் நடக்கும் றூம்ல வதனாதானே இருப்பாள்?”
“அடியே சூர்யாக்கு வதனாவ பிடிக்காதுடி நான் அங்க பேசி உனக்கு கட்டி வைச்சிடுவன்டி. நீ சொன்னதை செய் சரியா?”
“சரிமா”
“சரி வா போலாம்”
இதனைக் கேட்ட கமலேஷ்க்கு கோவம் வந்தது. அத்தோடு முனிவர் சொன்னதும் ஞாபகம் வர இதை விட்டா சூர்யா வதனாவை கல்யாணம் பண்ணிக்க சான்ஸ் கிடைக்காது ஆனா இதனால ரெண்டுபேரும் அவமானப்படணும்.
பரவால்ல இல்லாவிட்டால் அந்த நீலூவ சூர்யா தலைல கட்டிருவாங்க. மல்லிகா நாளைக்கிருக்கு உனக்கு சூர்யா நான் உனக்கும் நீலூக்கும் கல்யாணம் நடக்க விடமாட்டன்டா என சொல்லியவன் கீழே சென்றான்.
நைட் எல்லோரும் தூங்க ஆரம்பிக்க நீலூ போதை மாத்திரை கலந்த பாலை ஒரு வழியாக சமாளித்து சூர்யாக்கு குடுத்து குடிக்க வைத்துவிட்டாள். மல்லிகாவும் வதனாவுக்கு அதே மாதிரிப் பாலை குடிக்கவைத்தவர் சிறிது நேரத்தின் பின் சூர்யா அறையிலிருந்த பொருட்களை எடுத்து வரச் சொன்னார்.
வதனாவோ பயத்தில்ல மறுக்க ஒருவாராக சமாளித்து அனுப்பியவர். அவள் உள்ளே சென்றதும் சூர்யா றூம் கதவை வெளியே பூட்டிவிட்டு சென்றார்.
சூர்யா அறையில் கட்டிலில் இருந்தவன் வதனா வருவதைக் கண்டான். அவன் அருகில்ல வந்த வதனா அவனிடம் பேச ஆரம்பிக்கும் போதே மயக்கத்தில் அவன் மேலேயே சரிய அவனின் செவ்விதழ்களை கவ்வின அவளது செவ்விதழ்கள். இருவரும் கட்டிலில் விழுந்தனர். போதை மாத்திரையின் காரணமாக மயக்கத்திற்குச் சென்றனர்.
பல திருப்பங்களுக்காக பகலவனும் நேரத்திற்கே எழுந்து வந்தான்.தேவியை காலையில் நேரத்திற்கு எழுப்ப வந்த மதி தேவி மட்டும் இருப்பதைப் பார்த்தவர்.
“தேவிமா வதனா எங்க?”
“உங்ககூட இல்லையாமா?”
“என்னடி அவ உன்னோடதானே இருந்திருப்பா?”
“இல்லம்மா நைட் நான் மட்டும்தான் தூங்கினன். அவ வரல உங்ககூட இருப்பானு நெனச்சிட்டன்.”
“இல்லையேமா நான் தூங்கப்போறத்துக்கு முதல்ல அவளப்பார்த்தன் அப்புறம் பார்க்கலையேடா. சரி பார்லர்ல இருந்து வந்துட்டாங்க நீ ரெடியாகு நான் அத்தைட்ட கேக்குறன்.”
“சரிமா வதனாவ பார்த்தா அனுப்பிவைங்கம்மா அவ கூட இருந்தானா எனக்கு நல்லா இருக்கும்”
“சரிடாம்மா நான் பார்க்குறன்”
மதி தன் கணவரிடமும் அத்தையிடமும் கேட்க யாருமே வதனாவைக் காணவில்லை என்றனர். அதே நேரம் மல்லிகா மெதுவாக வந்து சூர்யா அறையின் வெளிப்புறம் போட்ட பூட்டினை திறந்து விட்டவர் இவர்களுடன் வந்து சேர்ந்தார். கமலேஷூம் வந்து “என்ன பாட்டி எல்லோரும் இங்க என்ன பண்றீங்க?”
“வதனாவைக் காணல கமலேஷ்”
அதிர்ச்சியடைந்தவன் போல “என்ன பாட்டி சொல்றீங்க வதனாவ காணமா? எங்க போயிருப்பா? நல்லா தேடினீங்களா?”
“ஆமாப்பா நல்லா தேடியாச்சிப்பா “
“எங்க போனாளோ தெரியலையே”
அப்போ மல்லிகா “சூர்யாக்கு இது தெரியுமா?”
அப்போதுதான் சூர்யாவிடம் சொல்லாதது ஞாபகம் வர பாட்டி “வாங்க சூர்யாகிட்ட சொல்லி தேடச் சொல்லுவம் மற்றைய வேலைய நாம செய்வம் வதனா எங்கையும் போயிருக்க மாட்டா பக்கத்தில எங்கையாச்சும் போயிருப்பா”
“சரி வாங்க அத்தை சூர்யாகிட்ட சொல்லுவம்”என்றான் கமலேஷ். அனைவரும் சூர்யா றூம் அருகில் செல்ல குமார் கதவைத் தட்டினார். கதவு தட்டும் சத்தம் கேட்டு கண்விழித்தனர் சூர்யாவும் வதனாவும்.
இருவரும் தங்களது நிலை பார்த்து அதிர்ந்தனர். வதனா சூர்யாவின் மார்பில் சாய்ந்தவாறு இருக்க சூர்யா அவளை அணைத்தவாறு இருந்தான். மீண்டும் கதவு தட்டவும் சட்டென்று இருவரும் பிரிந்தார்கள்.
“சூர்யா கதவைத் திறப்பா” என பாட்டி சொல்ல வதனாவைப் பார்த்தான். வதனாவோ என்ன நடந்தது என தெரியாதவள் அவமானத்தில் தலைகுனிந்திருந்தாள்.
மீண்டும் “சூர்யா” என பாட்டி அழைக்க மெதுவாக வதனாவைப் பார்த்தவாறு வந்து கதவைத் திறந்தான் சூர்யா.
“சூர்யா வதனாவைக் காணோம்டா” என்றான் கமலேஷ். சூர்யா தன் பின்னால் திரும்பிப் பார்த்தான் வதனா நின்றிருந்தாள். சூர்யாக்கு பின்னால் வந்த வதனாவைக் கண்ட அனைவரும் அதிர்சியாக மல்லிகா பேச இல்லை கத்த தொடங்கினார்.
“என்ன இவ சூர்யா அறையில இருந்து வர்றா? அப்போ நைட் முழுதும் இவன் கூடத்தான் இருந்தாளா?”
“மல்லிகா”
“சும்மா இருங்க பாட்டி நீங்க இவளுக்கு குடுத்த இடம்தான் இப்ப பாருங்க என்ன நடந்திச்சினு?”
“சூர்யா வதனா என்ன இது?”
இருவரும் மௌனமாக இருந்தனர். அப்போது மல்லிகா சூர்யாக்கு இனி யாரு பொண்ணுகொடுப்பா? மதி பேசாம சூர்யாவ நீலூக்கே கல்யாணம் பண்ணிவைச்சிடுங்க”
அப்போதும் சூர்யாவும் வதனாவும் பேசவில்லை. அனைவரும் அமைதியாக இருக்க கமலேஷ் வாய்திறந்தான்.
“அப்போ வதனா நிலைமை?”
மல்லிகா” அவள ஊருக்கு அனுப்பிவைச்சிடுங்க இந்த பட்டிக்காட சூர்யா தலைல கட்டப்பாக்குறீங்களா? சூர்யாட தகுதிக்கு இவ தகுதியில்லையே மாப்பிள்ளை”
தான் பேசவேண்டியதை உணர்ந்த கமலேஷ் ” சூர்யா வதனா கல்யாணம் நடந்தா எனக்கும் தேவிக்கும் கல்யாணம் நடக்கும் வதனா எனக்கு கூடப்பிறந்த தங்கச்சி மாதிரி அவளுக்கு கெட்ட பேரு வர நான் விடமாட்டன்.” என்ற கமலேஷை பார்த்தான் சூர்யா.
“அதெப்பிடி நீலூதான் சூர்யாக்கு பொண்டாட்டி”
“கொஞ்சம் அமைதியா இருங்க”என்ற பாட்டி குமார் மதி கமலேஷ் கொஞ்சம் உள்ள வாங்க என பக்கத்து அறைக்கு கூட்டிச்சென்றார்.
“முனிவர் சொன்னது ஞாபகம் இருக்கா எல்லாருக்கும் “என கேட்டார்.
“ஆமாம் “என்றனர். அப்போது கமலேஷ் இரவு மல்லிகா போட்டதிட்டத்தைக் கூறினான். “ஏன் இத முதல்லையே சொல்லல கமலேஷ்.”
“சொல்லிருந்தா மல்லிகா வேற திட்டம் போட்டு சூர்யாக்கு நீலூவ கல்யாணம் பண்ணி வைச்சிடுவா அதனாலதான் நான் சொல்லல அதுமட்டுமில்ல சூர்யாக்கு வதனாவை பிடிக்கும் ” என்றான்.
“அப்போ சூர்யாக்கும் வதனாவுக்கும் தேவி கமலேஷ் கல்யாணத்தோட சேர்த்து கல்யாணம் பண்ணி வைச்சிடுவம்”
“சரி அம்மா “
“ஆனாப்பா எனக்கு சுந்தரத்தை நெனச்சாத்தான் கவலையா இருக்கு”
“அத அப்புறம் பார்த்துக்கலாம் அத்தை முகூர்த்தத்துக்கு நேரமாயிட்டு வாங்க வதனாவைவ ரெடி பண்ணணும்” என்றதும் எல்லாரும் வெளியில் வந்தனர்.
“என்ன மதி நீலூவை ரெடி பண்ணவா?”
பாட்டி”தேவையில்லை மல்லிகா வதனாக்கும் சூர்யாக்கும்தான் கல்யாணம் கமலேஷ் சூர்யாவைகூட்டிட்டு போ மதி வதனாவை கூட்டிட்டுப் போ “
“சரி என்ற கமலேஷ் சூர்யாவை தனதறைக்கு கூட்டிச்சென்றான்.”
“மதியும் வதனாவை கூட்டிச் செல்ல அதை தடுக்க வந்த மல்லிகா மரகதம்மாவின் ஒற்றைப் பார்வையில் பின்னடைந்தார்.
கமலேஷூடன் வந்த சூர்யா எதுவும் பேசாது நண்பனை கட்டியணைத்தான். கமலேஷூக்கு புரிந்தது. சூர்யா உனக்கு எதுவுமாக நான் விடமாட்டன். உனக்கு புடிச்ச வதனாவ உங்கிட்டையே குடுக்கிறன் பார்த்துக்கோடா. கண்டிப்பாடா என்றான்.
அதன்பிறகு மணவறையில் கமலேஷ்ம் சூர்யாவும் தத்தமது துணைகளுக்காக காத்திருக்க அவர்களை நீண்டநேரம் காத்திருக்கவிடாது வந்தனர் வதனாவும் தேவியும்.
தேவலோகத்திலிருந்து வந்த தேவதைகள் போன்று இருந்தனர். தேவி தலை வெட்கத்தில் குனிந்தபடி வர வதனாவோ வேதனையில் தலை குனிந்தபடி வந்து தத்தம் துணைகளுக்கருகில் அமர்ந்தனர்.
பின் உறவினர்கள் வாழ்த்த மூன்று முடிச்சுக்களை தேவதைகளுக்குஇட்டு தங்களது வாழ்க்கைத் துணைகளாக்கிக்கொண்டனர். அனைத்து சடங்குகளும் நடைபெற்றன.
கமலேஷூம் தேவியும் ஆனந்தமாக அதில் கலந்து கொள்ள வதனா கடமைக்கும் சூர்யா அமைதியாகவும் கலந்துகொண்டனர்.
அனைத்தும் முடிந்து உறவினர்கள் சாப்பிடச் சென்றனர். புதுமணத்தம்பதிகள் சற்று நேரம் செல்ல சாப்பிடலாம் எனக்கூற மேடையில் நின்றிருந்தனர். அப்போது “வதனா ” என்ற குரல் கேட்டு தலைநிமிர்ந்து பார்த்த வதனா பயத்தில் நடுங்கினாள்.
வதனா யாரைப் பார்த்து நடுங்கினாள்???
காத்திருப்புத் தொடரும்………..
🥰🥰🥰🥰
❤️❤️❤️