காத்திருப்பு : 26
வதனா அருகில் வந்த சூர்யா அதிர்ந்து நின்றான். காரணம் வதனாவுக்கு பயத்தில் உடல் தூக்கிப்போட்டது. அதோடு “நான் எதுவும் பண்ணல்லப்பா என்ன நம்புங்க அப்பா. சூர்யா Sirகு என்ன பிடிக்காது அப்பா என்ன கூட்டிட்டு போங்க” என உளறிக்கொண்டிருந்தாள். அவளருகில்வந்த சூர்யா சாப்பாட்டினை அருகில் இருந்த மேசையில் வைத்தான்.
பின்னர் வதனாவை எழுப்பமுயன்றான்.
“வதனா…..வதனா”
“எழுந்திருமா”
அவள் எழாமல் இருக்கவும் சூர்யா மெல்ல அவளது தோளைத் அசைத்தான். அதில் பதறி எழுந்த வதனா சூர்யாவைக் கண்டதும் கட்டிலில் பின்னோக்கிப் போனாள். அவளது கண்ணில் தெரிந்த பயத்தைப் பார்த்த சூர்யா வருந்தினான்.
“எ….ன…..க்…..கு….. எ….து…..வு….ம்…. தெ…..ரி….யா….து….ங்…க…. நா….ன்….. உ….ங்….க… றூ….மு….க்….கு…..பொ….ரு….ட்….க…..ளை….. எ….டு…..க்….க….த்…..தா…..ன்……வ…..ந்….த….ன்…. த…..ப்….பா….நெ….னை….க்….கா….தீ….ங்….க….. எ…ன….க்……கு….த்….தெ….ரி….யு….ம்…. உ….ங்….க….ளு….க்….கு….எ….ன்….னை….. பி….டி….க்…கா….து…னு…..எ….ன்….னை….. எ….ங்….கை….யா….ச்…..சு…..ம்…..ஒ…..ரு….. ஆ….ச்….சி…..ர….ம….த்….தி….ல….கொ….ண்….டு….வி…ட்…டு…..டு…..ங்….க….
“முதல்ல சாப்பிடு ” என்றவன் தட்டை அவளிடம் நீட்டினான். நான் என்ன சொல்றன் இவரு என்ன சொல்லாரு என அவனைப் பார்த்தான். அவளது பார்வை புரிந்தவன் “முதல்ல சாப்பிடு அப்புறம் பேசலாம்” என்றான்.
தட்டை வாங்கிய வதனாவின் கைகள் நடுங்கியது. அதனால் சூர்யா தட்டை தான் வாங்கி அவளுக்கு ஊட்டிவிட்டான். முதலில் விழித்தவள். பின் வாங்கிக்கொண்டாள். சாப்பிட்டதும் அவளிடம் பேச ஆரம்பித்தான்.
“வதனா உடம்பு இப்ப எப்பிடி இருக்கு?”
“நல்லா….. இருக்குங்க “
“அப்போ சரி நாம பால்கனிக்கு போயிருந்து பேசுவமா?”
“ம்…”
“வா என்றவன் அவளது கையைப்பிடித்து கூட்டி வந்தான்.அவனது ஸ்பரிசத்தில் உடல் சிலிர்த்தது. அப்போது அவள் கட்டியிருந்த சேலை தடைக்கி விழப்போனவளை விழவிடாமல் இடையைப்பிடித்தான் சூர்யா. அப்போது வதனாவுக்கு தான் கண்ட கனவு ஞாபகம் வந்தது.
அவனை இமைக்காது பார்த்தான். இருவரது கண்களும் பேசிக்கொண்டது சில நிமிடங்களே. முதலில் நினைவுக்கு வந்த சூர்யா “வா வதனா போலாம்” என அழைத்து வந்தவன் அங்கிருந்த ஊஞ்சலில் அவளை அமர வைத்தான்.
“ஏன் வதனா உன்ன ஆச்சிரமத்தில கொண்டுவிடச்சொன்ன? பயப்படாம நீ உன்னோட மனசுல இருக்கிறத சொல்லு சரியா?”
“ம்.. சத்தியமா நான் உங்க றூமுக்கு பொருட்களை எடுக்கத்தான் வந்தன் திடீர்னு மயக்கம் வர்றமாதிரி இருந்துச்சி இவ்வளவுதான் எனக்குத் தெரியும். அது தெரியாம எல்லோரும் எப்பிடி பேசிட்டாங்க” என்றவள் அழுதாள்.
“அழாம பேசு வதனா அப்புறம் அழு”
“என்னோட அப்பா என்ன நம்பலங்க உங்களுக்கு என்னை பிடிக்காது. அதோட உங்க தகுதிக்கு நான் உங்களுக்கு பொருத்தமானவ இல்ல. அப்போ நான் இங்க இருந்து போகணும்தானே ஊருக்கு போக முடியாது. அதுதான் ஆச்சிரத்தில விடச்சொன்னன்” என்றவள் கேவிக் கேவி அழுதாள்.
அவளது அழுகையை பார்க்க முடியாத சூர்யா அவளை தோளோடு அணைத்துக்கொண்டான். முதலில் விடுபட முயன்றவள்.முடியவில்லை. பின் அவனது அணைப்பில் அடங்கினாள்.அவன் எதுவும் பேசாமல் அவளது தலையை தடவிக்கொடுத்தான். அதில் கொஞ்சம் தெளிந்தவள் அவனிடமிருந்து விலகினாள். சூர்யாவும் தடுக்கவில்லை.
“வதனா ஏன் எனக்கு உன்னை பிடிக்காது என்று சொல்ற?”
“அது நீங்க எப்ப பார்த்தாலும் சத்தமா பேசுறீங்க எனக்கு அடிக்கிறீங்க. என்ன பிடிக்கும்னா எனக்கு அடிப்பீங்களா? பிடிக்கலதானே உங்களுக்கு அதுதான் அடிக்கிறீங்க” என்றாள் சிறு பிள்ளை போல. அதில் கவரப்பட்டவன். சத்தமாக சிரித்தான்.
“அப்போ உனக்கு என்ன பிடிக்குமா ?”
“ஓ.. பிடிக்குமே..”சற்றும் தயங்காமல் பதில் வந்தது.
“ஏன் பிடிக்கும்?”
“எல்லாருக்கும் நல்ல மகனா நல்ல பேரனா நல்ல அண்ணனா நல்ல பிரண்டா இருக்கீங்க. அதுதான்.”
“ஓ…. எனக்கு உன்ன பிடிக்கும் வதனா”
“உண்மையா என்ன பிடிக்குமா பொய் சொல்லாதீங்க நீங்க பெரிய ஆள் நான் பட்டிக்காடு என்ன பிடிக்குமா உங்களுக்கு? இங்க அத்தை மாமா பாட்டி தேவி கமலேஷ் இவங்கள தவிர எல்லோரும் பட்டிக்காடு பட்டிக்காடுனு என்ன கேலி பண்றாங்க. நீங்களும் அப்பிடித்தானே சொன்னீங்க. இப்ப என்ன பிடிக்கும் என்று சொல்றீங்க?”
“இனிமேல் யாரும் அப்பிடி சொல்லமாட்டாங்க சரியா? நமக்கு உரிமை உள்ளவங்க மேலதானே நம்ம கோவம் சந்தோசம் கவலைகளைக் காட்டுவம் அப்பிடித்தான் உன்மேல நான் காட்டினன். எனக்கு உன்ன ரொம்ப பிடிக்கும் வதனா. நானே உங்க அப்பாகிட்ட நம்ம கல்யாணத்தைப் பற்றி பேசணும்னு இருந்தன் ஆனா இப்பிடியாயிட்டுது “
“ஆனா நீங்க ரொம்ப படிச்சவங்க நான் பெரிசா படிக்கலயே. அப்பா ஏங்கிட்ட ஏதாச்சும் கேட்டிருக்கலாம்தானே அவங்களுக்கு நம்பிக்கை இல்லையா என்மேல எனக்கு அத நெனச்சா இங்க ரொம்ப கஸ்ரமா இருக்குங்க. செத்திடலாம் போல இருக்கு” என்றாள் தனது நெஞ்சில் கைவைத்தபடி.
“இங்க பாரு வதனா நடந்தது நடந்துபோயிட்டு. இத நீ நெனச்சு கவலப்படக்கூடாது சரியா? நானே உங்க அப்பாகிட்ட போய் நடந்தத சொல்லி உன்கூட சேர்த்து வைக்கிறன் சரியா?”
“உண்மையாவா? ஆனா வேணாங்க யாரு சொன்னத நம்பினாங்க பெத்த பொண்ணுட்ட ஒரு வார்த்தை கேக்கல என்ன வேண்டாம்னு சொன்னவங்க எனக்கும் வேணாம். என்ன எங்கையாச்சும் கொண்டுபோய்விட்டுடுங்க”
“சரி உன்னோட அப்பாட பேசல. ஆனா நீ என்னவிட்டு எங்கையும் போக முடியாது போகவும் நான் விடமாட்டன். ” என்றவன் அவளது அருகில் வந்தவன் அவளது கன்னம் இரண்டையும் தன் கைகளால் பற்றி அவளிடம்
“வதனா என் கண்ணப் பாரு.” என்றான். அவளும் அவனது கண்ணை பார்த்தவாறு இருக்க…
“வது (வதனா) நான் உன்ன லவ் பண்றன்டா. உன்ன நல்லால பார்த்துக்குவன்டி. என்னோட கோவத்தை உன்மேல காட்டமாட்டன். நீ என்னோட காதல புரிஞ்சிக்கிற வரைக்கும் காத்திருப்பேன். புரிஞ்சிதா”
அவனது வது என்ற அழைப்பிலேயே தன்னை மறந்தவள். அவனது லவ் பண்றன்னு சொன்னதும் அதிர்ச்சியாகிவிட்டாள்.
“எனக்கு கொஞ்சம் time வேணும்”
“நீ எவ்வளவு நேரம்னாலும் எடுத்துக்க சரியா.ஆனா நான் உன்ன விரும்பித்தான் கல்யாணம் பண்ணிக்கிட்டன். நீ மட்டும்தான் எப்பவும் எனக்கு பொண்டாட்டி சரியா.?”
“நான் கனவு காணலையே இதெல்லாம் உண்மையா மாமா?” அவளை அறியாமலே மாமா என்றாள்.
“வது எல்லாம் உண்மைதான்டா. அதென்ன மாமா என்று சொல்ற?”
அப்போதுதான் தான் அவனை மாமா என்று அழைத்ததை உணர்ந்தாள். வெட்கத்தில் அவளது கன்னம் சிவந்தது. அதை ரசித்தான் சூர்யா.
“சொல்லு வது “
“அ…து…”
“ஒழுங்கா சொல்லுடா”
“எங்க ஊர்ல கணவனை மாமா , அத்தான் என்றுதான் கூப்பிடுவாங்க உங்களுக்கு பிடிக்கலையா?”என்றாள்.
“ரொம்ப பிடிச்சிருக்கு அப்போ என்ன கணவனா நீ ஏத்துக்கிட்டியாடி?”
அவனது டி என்றதில்ல உருகினாள். “தெரியலை ஆனா சட்டுனு மாமா என்று சொல்லிட்டன். கழுத்தில இருக்கிற தாலினாலகூட இருக்கலாம்”
“சரிடி என்னோட பொண்டாட்டி நீ தேவையான நேரம் எடுத்துக்கோடி. ஆனா நான் என்னோட பொண்டாட்டிய கட்டிப்பன் முத்தம் கொடுப்பன் நீ தடுக்கக்கூடாது சரியா?”
“என்…ன நீ..ங்..க இப்..பிடி..யெல்லாம்..பே..சு…றீ…ங்க?”
“எப்பிடி”
“போங்க மாமா” என்றவளின் இடையினை அணைக்க அவனது மார்பில் சாய்ந்தாள் வதனா.
“வது நீ நீயா இருடா சரியா உனக்கு எப்ப என்ன லவ் பண்றனு தோணுதோ அப்போ எங்கிட்ட சொல்லணும் சரியா?”
“சரி மாமா”
“சரிடா நேரமாச்சி போய் தூங்கலாமா?”
” சரி மாமா”
இருவரும் அறைக்குள் வந்தனர்.
“வதும்மா நாம ரெண்டு பேரும் தனித் தனியா தூங்காம சேர்ந்து தூங்கிறதுல உனக்கு பிரச்சனை இருக்காடா”
“இல்ல மாமா பரவால்ல”
“அப்பிடினா மாமாவோட நெஞ்சில வந்து தூங்குடி ஏன் பொண்டாட்டி”
வெட்கத்துடன் வந்து சூர்யாவின் மார்பில் வந்து அடைக்கலமானாள் வது.
அவங்க தூங்கட்டும் தேவியையும் கமலேஷையும் பார்க்கலாம் வாங்கன
முதலிரவு அறைக்குள் வந்த தேவியின் கையைப் பிடித்து தனதருகில் அமரவைத்தான் கமலேஷ்.
“ரதி”
“ம்”
“ரதி நான் ஒன்னு சொல்லட்டா”
“சொல்லுங்க”
“தப்பா நினைக்கமாட்டியேடா”
“இல்லங்க சொல்லுங்க”
“சூர்யா வதனா வாழ்க்கை சரியான பிறகு நம்ம வாழ்க்கைய நாம தொடங்கலாமாடா?”
“ஏங்க நானும் அதைத்தான் சொல்ல வந்தன்க. பாவம் வதனா.”
“ம் சூர்யா அவள நல்லா பார்த்துப்பாடா”
“அண்ணாக்கு வதனாவ பிடிக்காதேங்க”
“இல்லடா அவன் வதனாவ லவ் பண்றான்”என்றவன் சூர்யா சொன்னதை ரதியிடம் சொன்னான்.
“அப்பாடா இப்பதான் சந்தோசமா இருக்குங்க.”
“ம் அவங்க ரெண்டுபேரும் நல்லால இருக்கணும்டா.”
“என்னங்க தூக்கம் வருது”
“சரி தூங்கலாம் வா”
“நீங்க எங்க வர்றீங்க?”
“தூங்கடி”
“நீங்க கீழ தூங்குங்க நான் கட்டில்ல தூங்குறன்.”
“ஏய் ஏண்டி இப்பிடி”
“நீங்கதானே நம்ம வாழ்க்கையை பிறகு ஆரம்பிக்கலாம்னு அதுதான்”
“ரதிமா அதுக்காக தனித்தனியா இருக்கணும்னு இல்லடா வா” என்று கைபிடித்து இழுத்தவன் மார்பில்ல அடைக்கலமானாள் ரதி.
இருஜோடிகளும் தூக்கத்தை தழுவினர்.
சூரியன் தன் கரங்களால் புவிமகளை அணைத்துக்கொள்ள விடியலும் வந்தது.
மதுரா இல்லத்தில் காலையில் எழுந்த மதி தனது ஆஸ்தான இடமான சமையலறைக்குள் நுழைந்தார். அப்போது வாயில் அழைப்புமணி ஒலித்தது. இப்பிடி காலைலேயே யாரு வந்திருக்கா என எண்ணியபடி கதவைத் திறந்த மதியை “hi aunty” என்றது ஒரு குரல்.
குரலுக்கு சொந்தக்காரர் யார்????
காத்திருப்புத் தொடரும்…………….
❤️🔥