வருவாயா என்னவனே : 27

5
(8)

காத்திருப்பு : 27

மதி கதவைத் திறந்ததும் hi aunty” என்ற குரல் கேட்டது. அக் குரலுக்கு சொந்தக்காரியாக நின்றிருந்தாள் ஓர் இளம்பெண். நவநாகரீக யுவதியாக காணப்பட்டாள்.

“வாம்மா கீர்த்தி”

(கீர்த்தி சூர்யாவின் பல்கலைக்கழகத் தோழி. தற்போது சூர்யாவின் வெளிநாட்டுக் கம்பனியில் வேலை பார்க்கிறாள். அதுமட்டுமில்லைங்க கீர்த்தி சூர்யாவை one sidea லவ் பண்றா.

இது சூர்யாக்குத் தெரியாது. இப்ப கீர்த்தி வந்தது தேவி கமலேஷ் கல்யாணத்துக்கு.அவளுக்கு சூர்யா கல்யாணம் நடந்தது தெரியாது. தெரியும் போது…………)

“என்ன aunty யாரையும் காணம்?” என்றபடி உள்ளே வந்தாள்.

“எல்லோரும் தூங்குறாங்கம்மா”

“சூர்யா இந்நேரத்துக்கு எழும்பிருப்பானே aunty?”

“நீ சொல்றது சரிதான்டா ஆனா இப்போ சூர்யா குடும்பஸ்தனாயிட்டானே அதுதான் எழும்பல்ல”

“எனக்கு புரியல aunty”

“சூர்யாக்கு கல்யாணமாயிட்டுதுடாமா நேற்று”

“என்ன aunty இது தேவிக்குத்தானே கல்யாணம்னு சொன்னான். “

“அது எதிர்பாராதவிதமா நடந்திடுச்சிமா. நீ அவன்கிட்டையே கேளுடா. சரி நீ என்ன குடிக்கிற டீயா? காப்பியா? “

“நான் freshஆகிட்டு வந்து காப்பி குடிக்கிறன் aunty.”

“சரிமா நீ கீழ இருக்கிற ரெண்டாவது றூம்ல இரும்மா”

“சரி aunty “என்றவள் றூமுக்கு வந்தாள்.

கோவத்தில் கீர்த்தியின் முகம் சிவந்திருந்தது. “உன்ன நான் லவ் பண்ணா நீ யாரே ஒருத்திய கல்யாணம் பண்ணிக்கிட்டியே சூர்யா. இந்த கீர்த்தி ஒன்ன விரும்பினா அத அடையாம விடமாட்டா. கல்யாணம் நடந்தா உன்ன விட்டுட்டு போயிடணுமா? அவள உங்கிட்ட இருந்து பிரிச்சி நான் உன்ன கல்யாணம் பண்ணிக்காம விடமாட்டன்” என சபதமிட்டவள் freshஆக சென்றாள்.

சூர்யா அறையில்……….

கீர்த்தியின் சபதம் தெரியாத இருவரும் நன்றாக தூங்கிக்கொண்டிருந்தனர். சூரியனின் ஒளி அறைக்குள் நுழைய முதலில் கண்விழித்தது நம்ம வதனாதான். எழும்ப முயன்றாள். அவளால் முடியவில்லை. ஆம் சூர்யாவின் மார்பில் தூங்கியபடி இருந்தவளை தன் கரத்தினால் அணைத்தபடி இருந்தான் சூர்யா.

வதனா விலக முயன்றாள். விலக முயன்றவளை மேலும் இறுக்கியபடி “தூங்குடி கண்ணம்மா ” என்றான்.

“மா..மா… வி.டி..ஞ்…சி..ட்..டு ..து”

“அதுக்கு ஒழுங்கா பேசுடி”

“விடிஞ்சிட்டுது இதுக்கு மேல தூங்கினா தப்பா நினைப்பாங்க”

“சரி விடுங்க மாமானு சொல்லு விட்டுடுவன்.”

“ம்…விடுங்க மாமா ” என்றவள் முகம் நாணத்தால் சிவந்தது.

“கண்ணம்மா ஏன் நீ மாமானு சொல்லும்போது கன்னம் சிவக்குது”

“போங்க மாமா ” என்றவள் குளியலறைக்குள் சென்றாள். சூர்யா சிரித்தபடி இருந்தான்.

கமலேஷ் அறை…..

” ரதிமா எழும்புடா “

“போங்க எனக்கு தூக்கம் வருதுங்க”

“நைட் என்னவோ தூங்காம இருந்தமாதிரி இப்ப தூக்கம் வருதுனு சொல்ற ஒண்ணுமே நடக்கலதானே எந்திரிடா அப்புறம் எல்லாரும் ஒரு மாதிரி பார்ப்பாங்கடா”

“போங்க என்ன தூங்கவிடலதானே நீங்க உங்க கூட பேசவே மாட்டன்” என்று எழுந்து குளிக்கச் சென்றாள். போகும் அவளைப் பார்த்து சிரித்தபடி இருந்தான் கமலேஷ்.

கீழே hallல் பாட்டி , குமார், மதி இவர்கள் பேசிக்கொண்டிருந்தனர்.

“என்னம்மா யாரையும் காணம்?”

“இரு குமாரு வருவாங்க”

“எனக்கு பயமா இருக்கு அத்தை. சூர்யா வதனாவ நெனச்சா. வதனா சூர்யாவ பார்க்கவே பயப்படுவா”

“எல்லாம் சரியாயிடும்மா “

“hi uncle , hi பாட்டி” என்றபடி வந்த கீர்த்தி தனியாக இருந்த சோபாவில் அமர்ந்தாள்.

அவளைப் பார்த்ததுமே பாட்டிக்கும் குமாருக்கும் பிடிக்கவில்லை.

“வாம்மா எப்ப வந்த”

“காலைலதான் uncle வந்தன்”

“காப்பி தரவா கீர்த்தி?”

“இருக்கட்டும் aunty சூர்யாவும் வரட்டும்”

“நீ எதுக்குமா சூர்யாவுக்காக காத்திட்டு இருக்கணும். அவனுக்காக காத்திட்டு இருக்க அவனுக்கு பொண்டாட்டி இருக்காமா. மதி நீ போய் கீர்த்திக்கு காப்பி கொண்டுவா”

“சரி அத்தை”

எதுவும் சொல்லாது இருந்தாள் கீர்த்தி. ஆனால் உள்ளுக்குள் கோபத்திலே இருந்தாள். மதி காப்பி குடுக்க வாங்கிக் குடித்தாள்.

மேலே……

“வது போலாம்மா”

“இருங்க மாமா”என்றவள் தயங்கியபடி அவனருகில் வந்தாள்.

சேட்டை போட்டபடி இருந்தவன் வதனா அருகில் வந்ததும் “என்னடா”என்றான் மிகவும் மிருதுவான குரலில். ஆம் அவனது சத்தமான பேச்சே வதனாவை பயம்கொள்ளச் செய்கிறது என்பதை உணர்ந்தவன் வதனாவிடம் மிருதுவாக பேசவேண்டுமென முடிவெடுத்தான்.

அவனது மிருதுவான பேச்சில் கண்கள் கலங்கியது வதனாவிற்கு. இவருக்கு இப்பிடி மிருதுவாக பேசத்தெரியுமா என நினைத்தாள். அவளிடம் இருந்து பதில் வராததால் நிமிர்ந்து அவளைப் பார்த்தான்.

அவளருகில் வந்து குனிந்தபடி இருந்த வதனாவின் முகத்தை உயர்த்தி தன் முகத்தைப் பார்க்க வைத்தவன். “என்னடா கண்ணம்மா ?”

“ஒ…ண்..ணு..மி..ல்..ல…”

“என்ன பார்த்து பயப்படாதடா றிலாக்ஸா பேசு என்னோட சரியா?”

“ம்..”

“சரி சொல்லு “

“நீங்க ஏன் கண்ணம்மானு கூப்டனீங்க?”

“உன் மேல என்னோட லவ் அதிகமாகும் போது உன்ன கண்ணம்மானு கூப்ட எனக்கு பிடிக்கும்.”

“அப்போ வது”

சிரித்தவன் “வது எல்லாரும் வதனானு சொல்லுவாங்க so நான் உனக்கு special அதனால வது “

“ம்…”

“உனக்கு எது பிடிக்கும் ?”

“கண்ணம்மா”

“சரிடா செல்லம் நாம தனியா இருக்கும் போது கண்ணம்மானே கூப்டுவன் சரியா?”

“ம் …”

“நீ மட்டும் என்ன ம்.. ம்…னு சொல்ற அழகா மாமானு சொல்லுடா”

“சரி மாமா”

“கண்ணம்மா நீ மாமானு சொல்லும் போது ரொம்ப happy டா நான். சரி கீழ போலாமா?”

“மாமா நான் பொட்டு வைக்கல “

“வைச்சிட்டு வாடா போலாம்”

“இல்ல அதுவந்து….”

“என்னடா”

“நீ..ங்..க..வைச்சிவிடுங்க… மாமா வைச்சிவிடுவீங்களா?”

“கண்டிப்பாடா கண்ணம்மா வா” என்றவன் அவளுக்கு குங்குமம் வைத்துவிட்டு நெற்றியில் முத்தமிட்டான். ஒரு குழந்தைக்கு தாய் முத்தமிடுவது போன்றிருந்தது அது.

“சரி கண்ணம்மா நாம ஒரு selfie எடுத்திட்டு போலாம்” என்றவன் அவளை அருகில் அணைத்தவாறு நின்று பல போட்டோ எடுத்த பிறகே கீழே வர கதவைத் திறந்தனர். அப்போதுதான் கமலேஷ்ம் தேவியும் வந்தனர்.

பின் இருஜோடிகளும் சேர்ந்து வர கீழே இருந்தவர்களைப் பார்த்த வதனா தேவியின் அருகில் வர அதை உணர்ந்த மற்றவர்கள் முன்னால் வந்தனர். அதாவது கமலேஷ் சூர்யாவும் முன்னால்ல வர தேவியும் வதனாவும் பின்னால் வந்தனர்.

இவர்கள் வருவதைக் பார்த்த கீர்த்தி வதனாவை அடையாளம் கண்டுகொண்டாள். வதனாவைப் பார்த்தவுடன் அவளுக்கு விளங்கிவிட்டது. வதனா கிராமத்து பெண்போல இருந்தாள். சூர்யாக்கு கிராமம் என்றாலே பிடிக்காது பிறகு எப்பிடி இவளபோய் திருமணம் செய்தான் என யோசித்தாள்.

நால்வரும் கீழே வர சூர்யாவைக் கண்ட கீர்த்தி “hi சூர்யா” என்றபடி அவனை அணைத்தாள். சூர்யா வெளிநாட்டில் படித்தவன் அதனால் அவனுக்கு தப்பாக படவில்லை. ஆனால் மற்றைய யாருக்கும் இது பிடிக்கவில்லை. வதனாவுக்கு அதைப் பார்தததும் கண்கள் கலங்கியது.

“hi keerthi எப்போ வந்த?”

“காலைலதான் வந்தன் தேவி கல்யாணத்துக்கு வந்தன். நீயும் கல்யாணம் பண்ணிக்கிட்ட சொல்லாம. உனக்குத்தான் கல்யாணத்திலே intrest இல்லையே”

“அது அப்பிடித்தான் கீர்த்தி. அத அப்புறம் சொல்றன். உக்காரு கீர்த்தி”

வதனாவைப் பார்த்த பாட்டிக்கு அவளது நிலை புரந்தது. உடனே மதியிடம்

“மதி ரெண்டு பேரையும் கூட்டிட்டு போய் சாமிக்கு விளக்கேத்த சொல்லுடா”

“சரி அத்தை வாங்கடா” என்றவர்றவர பின்னே சென்றனர் வதனாவும் தேவியும். விளக்கேற்றிய பின் இருவரையும் பாரத்த மதி

” நீங்க ரெண்டு பேரும் எப்பவும் நெத்தியிலையும் தாலயிலையும் குங்குமம் வைச்சிக்கணும். அப்போதான் புருஷன் நல்லா இருப்பாங்க. சரியா?”

“சரிமா”

“சரி அத்தை”

எல்லோரும் hallக்கு வந்ததும் தேவி கமலேஷ் அருகில் இருக்க வதனா எங்கே இருப்பது என்று தெரியாமல் மதியின் அருகில் இருந்தாள். ஏனென்றால் கீர்த்தி சூர்யா அருகில் இருந்தாள்.

“தேவி கமலேஷ் வீட்டுக்கு பத்துமணிக்கு புறப்படுங்கடா. அதுதான் நல்ல நேரம் சரியா?”

“சரி பாட்டி”

“தேவி உனக்கு தேவையான எல்லாத்தையும் எடுத்துவை சரியா?”

“சரி பாட்டி”

“சூர்யா கமலேஷ் உங்களுக்கு காப்பி கொண்டு வரவா இல்ல சாப்பிடலாமா?”

“சாப்பிடலாம்மா என மச்சான்”

“ஆமாடா சாப்பிடுவம்”

“சரி வாங்க எல்லாரும்”

எல்லாரும் சாப்பாட்டு மேசையில் சாப்பிட அமர்ந்தனர். அங்கும் கீர்த்தி சூர்யா அருகில் அமர்ந்தாள். அதைப் பார்த்த வதனா நிற்காமல் சமையலறைக்குள் சென்று சாப்பாடை எடுத்து வந்து மதிக்கு உதவி செய்தாள்.

“நீயும் இரு வதனா நான் பரிமார்றன்”

“இல்லம்மா வதனா பரிமாறட்டும் ” என்றான் சூர்யா. அவனுக்கு தன் பொண்டாட்டி கையால் தனக்கு பரிமாற வேண்டும் என ஆசை. ஆகையினாலே சூர்யா அவ்வாறு கூறினான். ஆனால் கீர்த்தியோ சூர்யாக்கு அவளைப் பிடிக்கவில்லை. அதனால் வேலை சொல்கிறான். என நினைத்தாள். வதனா எதுவும் பேசாது சூர்யாவுககு பரிமாறினாள்.

அனைவரும் சாப்பிட்டதும் தேவி தனக்கு தேவையானதை எடுத்து வைக்கச் சென்றாள். கமலேஷ் தேவிக்கு உதவச் சென்றான். குமார் கம்பனிக்கு செல்ல மரகதம்மா கோவிலுக்கு சென்றார். மதி மதியத்திற்கு சமைக்க சென்றார். கீர்த்தி சூர்யாவிடம் “சூர்யா ஏன் திடீர்னு கல்யாணம் பண்ணிக்கிட்ட?”

“அத நான் சாயந்தரம் சொல்றன்” என்றான்.

“சரி சூர்யா நான் வெளில போயிட்டு வர்றன்”

“சரி பார்த்து போயிட்டு வா”

வதனா சாப்பிடவில்லை. ஏன் சாப்பிடல என கேட்ட மதியிடம் தலைவலிப்பதாகக் கூறியவள் தங்களது அறைக்கு வந்து பால்கனி ஊஞ்சலில் இருந்தாள். அவள் சாப்பிடவில்லை என்பது தெரிந்த சூர்யா மதியிடம் வந்து அவளுக்கு சாப்பாட்டை எடுத்துக்கொண்டு சென்றான்.

வதனா அருகில் சாப்பாட்டுடன் அமர்ந்தவன்.

“ஏன்டா சாப்பிடல”

“தலைவலி”

“மாத்திரை போட்டியா?”

“ம்…”

“மாத்திரை போட்டா சாப்பிடணும்டா சாப்பிடு”

“வேண்டாம்”

“என்னாச்சிடா நல்லாத்தானே இருந்த “

“எனக்கு ஒண்ணுமில்லை ” என சத்தமிட்டாள்.

“பார்டா சத்தமா பேசத் தெரியுமா வது உனக்கு”

“மன்னிச்சிடுங்க தலைவலி அதுதான் சத்தம்போட்டுட்டன்”

“பரவால்லடா சாப்பிடு “என்றவன் உணவை ஊட்ட வந்தான்.

“நானே சாப்பிடுவன் குடுங்க”

“நானே ஊட்டிவிடுவன் பேசாம சாப்பிடு”

என்றவன் உணவை ஊட்டி முடித்தான். அப்போது அவனுக்கு போன் வந்தது. போனை எடுத்துக் கொண்டு பேசச் சென்றான்.

வதனா ஊஞ்சலில் இருந்தவாறே கீர்த்தியை பற்றி யோசித்தவண்ணம் இருந்தாள்.

“இவ அவரோட பேசினா கட்டிபபுடிச்சா எனக்கு ஏன் இவ்வளவு கோவம் வருது. ஒருவேளை அவர நான் கணவனா ஏத்துக்கிட்டனா?அதெப்பிடி ஒரே நாள்ல அப்பிட ஏத்துக்க முடியும்? தாலி கட்டினதாலா? அவரு பாசமா பேசும் போது நல்லா இருக்கே.

அதிலையும் கண்ணம்மானு அவரு சொல்றத்த கேக்கும்போது மனசெல்லாம் ஜில்லுனு இருக்கே ஏன்? ” என தனக்குள் கேள்வி கேட்டபடி இருந்தவள் அவளறியாது தூங்கினாள்.

போன் பேசிவிட்டு வந்த சூர்யா வதனாவைக் கண்டு சிரித்தபடி வந்து அவளை தூக்கி வந்து கட்டிலில்விட்டான். பின் அவளருகில் இருந்து தனது வேலையை செய்ய ஆரம்பித்தான்.

கமலேஷ் அறையில் தேவி தனக்குத் தேவையானவற்றை எடுத்து வைத்தாள். “அத்தான் நாம மறுபடி இங்க எப்ப வரணும்?”

“உனக்கு எப்போல்லாம் இங்க வரணும்னு தோணுதோ அப்போ வரலாம்டா”

“என்ன அடிக்கடி கூட்டிட்டு வருவீங்களா?”

“நீ கூட்டிட்டுபோனு சொன்னா கூட்டிட்டு வருவன்டா”

“சரி”

“அம்மு நான் உன்ன பத்திரமா பார்த்துக்குவன் சரியா?”

“ம்…” என்றவள்றவளது குரல் உடைந்தது.

“அழாதடா உனக்கு அங்க வர பிடிக்கலனா இங்க இருப்பமா? என்ன என்னத்தான் தப்பா பேசுவாங்க. ஆனா பரவால்லடா உனக்கு இங்க இருக்கணும்னா சொல்லுடா இங்கேயே இருப்பம்”

“வேண்டாம்க நம்ம நம்ம வீட்டுக்கே போலாம்”

“நம்ம வீடா அப்போ இது”

“இது என்னோட அம்மா வீடு”

“நீ அந்த வீட்ட நம்ம வீடுனு சொன்னது ரொம்ப happyயா இருக்குடா . சரி நேரமாச்சு நாம நம்ம வீட்ட போலாமா”

“சரி”

சரி நீ போய் எல்லார்கூடவும் பேசு நான் பெட்டி எடுத்திட்டு வர்றன்”

“சரிங்க”

தேவி எல்லோருடனும் பேசிக்கொண்டிருக்க கமலேஷ் பெட்டியுடன் வந்தான்.

சூர்யாவிடம் வந்த கமலேஷ் நண்பனை அணைத்துக்கொண்டான். சூர்யாவும் தன் நண்பனை அணைத்தான்.

“மச்சான் வர்றன்டா”

“பார்த்துடா தேவிமாவ பார்த்துக்கடா”

“கண்டிப்பாடா நீயும் என்னோட தங்கைய பார்த்துக்கோ”

“சரிடா மச்சான்”

“வதனா எங்கண்ணா?”

“அவ தலைவலினு தூங்குறாடா “

“ஓ அப்போ அவள்ட சொல்லிடுணா நான் அப்புறமா போன் பண்றன்”

“சரிடாமா”

“அண்ணா miss youணா” என சூர்யாவை அணைத்தவளது விழிகள் கண்ணீரைப் பொழிந்தன.

“அழக்கூடாதுடா தேவிம்மா அண்ணா இங்கதானேடா இருக்கிறன். ஒரு போன் பண்ணு அண்ணா உடனே வந்திர்றன்” என சொன்னவன் விழிகளும் நனைந்திருந்தன.

பின் அனைவரிடமும் விடைபெற்று தன் புகுந்தகம் நோக்கிச் சென்றாள் தேவி. அவளுடன் குமாரும் மதியும் சென்றிருந்தனர்.

அவர்கள் சென்றதும் தன் அறைக்கு வந்த சூர்யா வதனாவை அணைத்துக்கொண்டு தூங்கினான். சிலமணி நேரங்களில் எழுந்த வதனா ” நான் ஊஞ்சல்லதானே இருந்தன் பிறகு எப்பிடி இங்க வந்தன். என நினைத்தவள் அருகில் இருந்த சூர்யாவைப் பார்த்தாள். ஒருவேளை இவருதான் இங்க தூக்கிட்டு வந்திருப்பாராக்கும்” என்றவள் முகம் கழுவிவிட்டு கீழே வந்தாள்.

“வாம்மா வதனா இப்போ தலைவலி எப்பிடி இருக்கு?”

“பரவால்ல பாட்டி எங்க யாரையும் காணம்”

“தேவி கமலேஷ் வீட்ல கொண்டுபோய்விட போனாங்கடா. உன்ன தேவி கேட்டா சூர்யாதான் நீ தலைவலினு தூங்குறதா சொன்னான். தேவி உனக்கு போன் பண்றன்னு சொன்னாடா”

“சரிப் பாட்டி “

“போய் சூர்யாவ கூட்டிட்டு வாடா சாப்பிடலாம்”

“பாட்டி நீங்க கூப்பிடுங்க பாட்டி “

“ஏன்டா”

“ஒண்ணுமில்லை பாட்டி பிளீஸ்”

“சரிடா ” என்றவர் சூர்யாக்கு போன் போட்டு சாப்பிட வரச்சொன்னார். சில நிமிடங்களில் சூர்யா வந்தான். பின் அனைவரும் சேர்ந்து சாப்பிட்டனர்.

சாப்டதும் hallல் இருந்த சூர்யாவை பேசவேண்டுமென கீர்த்தி தோட்டத்திற்குள் அழைத்துச் சென்றாள். பாட்டி தூங்கச் செல்ல வதனா சமையலறைய ஒழுங்குபடுத்தினாள்.

தோட்டத்தில்………

“என்ன கீர்த்தி”

“சூர்யா நீ எப்பிடி வதனாவ கல்யாணம் பண்ணிக்க சம்மதிச்ச?”

“ஏன் கீர்த்தி அவளுக்கென்ன ?”

“இல்ல சூர்யா உனக்கு கிராமம்னாலே பிடிக்காது பிறகு எப்பிடி?”

“உண்மைதான் கீர்த்தி “

“அப்போ உங்க கல்யாணம் ஏன் திடீர்னு நடந்திச்சி?”

தன் தோழிதானே என நினைத்தவன் தன் திருமணம் எப்பிடி நடந்தது என சொன்னான். அப்போது அவனுக்கு போன் வர எடுத்து பேசினான்.

அதைக் கேட்ட கீர்த்திக்கு ரொம்ப சந்தோசம். ரெண்டு பேரும் ஒண்ணா இருந்ததாலதான் கல்யாணம் நடந்திச்சி இல்லன்னா சூர்யா வதனாவ கல்யாணம் பண்னிருக்க மாட்டான் அப்போ வதனாவ சூர்யாவ விட்டு போனா நம்ம சூர்யாவ கல்யாணம் பண்ணிக்கலாம் என நினைத்தாள் கீர்த்தி.

“கீர்த்தி எனக்கு officela இருந்து போன் வந்திச்சி நான் அவசரமா office போகணும் நீ வதனாக்கும் பாட்டிக்கும் சொல்லிடு” என்றவன் officekku சென்றான்.

வீட்டுக்குள் வந்து hallல் இருந்த கீர்த்தியோ வதனா எப்பிடி வீட்டவிட்டு அனுப்பலாம்னு யோசிச்சிட்டே இருந்தாள்.

மாலையானதும் எழுந்து வந்த பாட்டி வதனாவிடம் காப்பி கேட்டபடி வந்து hallல் இருந்தார். வதனா காப்பி கொண்டு வர

“வதனாமா சூர்யா எங்கடா?”

“தெரியல பாட்டி”

“என்னடா புருஷன் எங்க போறான்னு தெரிஞ்சிக்க வேண்டாமாடா”

“அ..து…பா..ட்..டி”

“பாட்டி officeல இருந்து போன் வந்தது. அதுதான் சூர்யா அங்க போயிருக்காரு”

“உனக்கு எப்பிடி தெரியும்?”

“எங்கிட்ட சொன்னாரு பாட்டி” என்றவள் சூர்யா அவர்களிடம் சொல்லச்சொன்னதை மறைத்துவிட்டாள்.

தன்னிடம் சொல்லாமல் போனதை பற்றி வதனாவுக்கு கவலையில்லை ஆனால் கீர்த்தியிடம் சொல்லிவிட்டு போனதை வதனாவால் ஜீரணிக்க முடியவில்லை.

“பாட்டி நான் றூமுக்கு போறன்னு” சொல்லிட்டு வதனா றூமுக்குச் சென்றாள். கீர்த்தியும் தனது அறைக்குச் சென்றாள். பாட்டி சூர்யாவிடம் பேசவேண்டுமென எண்ணியபடி இருந்தார். மேலே வந்த வதனாவோ தங்களது அறைக்குச் செல்லாது மொட்டமாடிக்கு வந்து ஒரு இடத்தில் அமரந்திருந்தாள்.

அவள் இருப்பதை அறியாத கீர்த்தியோ தன் தோழியிடம் போன் பேச வந்தாள்.

“ஹலோ நான் கீர்த்தி பேசுறன்டி”

“சொல்லுடி”

“சூர்யா கல்யாணம் எப்பிடி நடந்திச்சினு தெரியுமாடி என்றவள் நடந்த அனைத்தையும் சொன்னாள்”

(இதைக் கேட்ட வதனா இவளுக்கு எப்பிடித் தெரியும்? என யோசித்தாள்)

“என்னடி சொல்ற? உனக்கு எப்பிடித் தெரியும்?”

“சூர்யா சொன்னான்டி. வதனாக்கும் சூர்யாக்கும் கொஞ்சம்கூட பொருத்தமே இல்லடி சூர்யாவோட படிப்பு , ஸ்டைல் எல்லாத்துக்கும் பொருத்தமே இல்லடி இவள். சரியான பட்டிக்காடுடி. இவ சூர்யாவ விட்டு போயிட்டானா நான் சூர்யாவ கல்யாணம் பண்ணிப்பன்டி”

“நீ எப்பிடிடி?”

“சூர்யாவ பற்றி எனக்கு நல்லா தெரியும்டி நான் நாலு வருஷம் அவன்கூட படிச்சிருக்கன். எப்பிடியோ சமாளிச்சி நான் கல்யாணம் பண்னிப்பன்.”

“சரிடி”

“சரிடி நான் அப்புறமா பேசுறன்” என போனைக் கட் பண்ணியவள் கீழே சென்றாள். வதனாவுக்கு சூர்யாவுக்கு தான் பொருத்தமில்லை என்ற எண்ணம் முதல்லையே இருந்தது. இப்போ இவ வேற பட்டிக்காடு பொருத்தமில்லை என்று சொன்னதும் தாங்க முடியாத வதனா அவர்களது அறைக்குள் சென்று கதவை சாத்தினாள்.

மதியும் குமாரும் இன்று கமலேஷ் வீட்டில் தங்கிவிட்டு நாளை வருவதாகக் கூற பாட்டி hallல் சூர்யா வருவதை எதிர்பார்த்தபடி இருந்தார். ஒன்பது மணியானதும் சூர்யா வந்தான். வந்தவனை பார்த்த பாட்டி

“என்ன சூர்யா இது?”

“officela கொஞ்சம் வேலை பாட்டி ரெண்டு மிஷின் வேலை செய்யல அத சரி பார்க்க நாளைக்குத்தான் மெக்கானிக் வர்றனு சொன்னாங்க. அதானால நமக்குத்தான் ஒருநாள் வேலை பாதிக்கப்படும். அதுதான் நானே பார்த்தன் பாட்டி. ரொம்ப களைப்பா இருக்கு பாட்டி”

அவனது முகமே களைப்பைக் காட்டியது. அதனால் நாளைக்கு சூர்யாவுடன் பேசலாம் என நினைத்தவர் ” சரி சூர்யா சாப்பிட்டு போறியா?”

“இல்ல பாட்டி officeலயே சாப்டன். வது சாப்டாளா பாட்டி?”

“வது ஓ…. வதனாவா சாப்டலப்பா சாயந்தரம் மேல போனவ கீழ வரவேயில்லப்பா. என்னாலையும் போய்ப்பார்க்க முடியல. நீ officeகு போறனு வதனாகிட்ட சொல்லிட்டு போயிருக்கலாமேப்பா”

“நான் வதனாக்கும் உங்களுக்கும் office போறன்னு சொல்லுனு கீர்த்தியிடம்  சொன்னனே பாட்டி”

“அவ சொல்லவேயில்ல சூர்யா. சரி நீ போய் வதனாவ பாருப்பா”

“சரி பாட்டி”

தங்களது அறைக்கு வந்த சூர்யா கதவைத் திறந்ததும் அதிர்ந்து நின்றான்.

சூர்யாவின் அதிர்ச்சிக்கு காரணம் என்ன???

காத்திருப்புத் தொடரும்………………

 

 

 

 

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 5 / 5. Vote count: 8

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!