காத்திருப்பு : 28
பாட்டியுடன் பேசிவிட்டு வந்த தங்களது அறைக்குள் வந்த சூர்யா அதிர்ச்சியானான். ஆம் அவனது அறை இருள் நிறைந்ததாக இருந்தது. பின் அவனே மின்விளக்கை ஒளிரவைத்தான். தன் மனைவியைத் தேடினான்.
கட்டிலின் கீழே ஒரு ஓரத்தில் சாய்ந்தமர்ந்து தலையினை முழங்காலில் வைத்தபடி விம்மிக்கொண்டிருந்தாள். ஆம் கீர்த்தி பேசியதை கேட்டதிலிருந்து அழுதுகொண்டே இருந்தாள். அவன் வந்ததையோ லைட் போட்டதையோ கவனிக்கவில்லையவள்.
மெல்ல அவளருகில் வந்தவன் கண்ணம்மா என தோள்களைத் தொட்டான். மாமா என்ற கதறலுடன் அவனது மார்பில் சாய்ந்து அழுதாள். ஏன் இந்தக் கண்ணீரென அவனுக்குப் புரியவில்லை. இருந்தாலும் அவளை ஆதரவாக அணைத்தபடி தலையை வருடிக்கொடுத்தான்.
“என்னாச்சிடா கண்ணம்மா?”
“மா…மா…”
“அப்பா ஞாபகமாடா?”
“இல்லை”என தலையை அசைத்தாள்.
பிறகு ஏன் இப்பிடி அழுகிறாள் என அவனுக்குத் தெரியவில்லை.சிறிது நேரத்தில் தெளிந்தவள் அவனை விட்டு விலகினாள்.
“என்னடாச்சு”
“ஒண்ணு…மில்லை என்ன எங்கேயாவது விட்டுடுங்க”
“நேற்றுதானே நாம முடிவெடுத்தம் இப்போ என்னடா ?”
“நான் உங்களுக்கு பொருத்தமானவ இல்ல என்ன விட்டுடுங்க”
“கண்ணம்மா ” என அவளருகில் வந்தான்.
தள்ளிப்போனாள்.
“என்ன விட்டுடுங்க உங்களுக்கு நான் பொருத்தமானவ இல்ல”
அவள் திரும்பத் திரும்ப அதையே சொல்ல ஏற்கனவே களைப்படைந்து வந்திருந்த சூர்யாக்கு கோபத்தை ஏற்படுத்த
“ஏய் உனக்கு சொல்றது புரியலையா நீ என்னோட பொண்டாட்டி உன்ன விட முடியாதுடி”
தன்னால் அவன் கௌரவத்துக்கு பாதிப்பு வரக்கூடாது என நினைத்தாள். அதோடு அவனை விரும்ப ஆரம்பித்தாள். அது கட்டிய தாலியினால் வந்ததா இல்லை அவன் இவள் மீது கொண்ட காதலால்ல வந்ததா என்றே தெரியவில்லை. அதனாலே அவள் பிரிந்து செல்ல முடிவெடுத்தாள்.
“தாலி கட்டினா மட்டும் பொண்டாட்டியாயிடுவனா என்ன விட்டுடுங்க நான் எங்கேயாவது போறன்”
இதைக் கேட்டதும் சூர்யாவுக்கு பொறுமை காற்றில் பறக்க அவளது அருகில் வந்து அவளைத் தூக்கினான். அவள் அவனிடமிருந்து விலகப் பார்க்க அதை தடுத்தவாறு தூக்கி வந்து கட்டிலில் விட்டவன். அவள் தடுக்க தடுக்க அவளுடன் இணைந்தான்.
இருவரும் விரும்பி ஏற்க வேண்டிய இல்லறம். அவன் கோபத்துடனும் அவள் அழுகையுடனும் நடந்தது. அவளை தன்னவளாக்கி விட்டு அவளை அணைத்தவாறே உறங்கினான். அவளோ துவண்ட கொடியாக கிடந்தாள்.
காலைக் கதிரவன் கவலைகளை விடுத்து களிப்புடன் எழுந்து வந்தான்.
நேரத்துடன் கண்விழித்த சூர்யா கவலையடைந்தான். எப்படியெல்லாம் அவளுடன் வாழ வேண்டும் என நினைத்திருந்தான். ஆனா இவளோ என்ன விட்டுடு விட்டுடு என சொல்லிக்கொண்டே இருக்க. இருந்த கோபத்தில…..ச….நான் என்ன பண்ணிட்டன். அவ முகத்தில எப்பிடி நான் முழிப்பன். என எண்ணியவன் வேதனையடைந்தான்.
அவளை விலக்கிவிட்டு எழுந்து குளித்துவிட்டு அவள் எழுவதற்காக காத்திருந்தான் பால்கனியில். சில நிமிடங்களின் பின் எழுந்தவள் தன் நிலைமை நினைவு வர மீண்டும் கண்ணில் காவேரி ஊற்றெடுத்தது. சில நொடிகளில் தன்னை திடப்படுத்தியவள் எழுந்து குளித்துவிட்டு வரவும் சூர்யா அறைக்குள் வரவும் சரியாக இருந்தது.
“வது”
நின்றாள் நிமிர்ந்து அவனைப் பார்க்கவில்லை.
“மன்னிச்சிடு வது நீ என்னவிட்டு போயிடுவ என்ற கோபத்தில இப்பிடி நடந்துகிட்டன்.”
“பரவால்ல விடுங்க ” அவளது மாமா என்ற அழைப்பை எதிர்பார்த்தவன் ஏமார்ந்துவிட்டான்.
இன்றோடு பேசி முடிவெடுக்க வேண்டும் என நினைத்தவன்.
“வது நாம கொஞ்சம் பேசணும் பிளீஸ் என்னோட வர்றீயா”
“எங்க”
“நம்ம கெஸ்ற்கவுஸ்க்கு “
“சரி”
“சரி எனக்கு கொஞ்சம் கம்பனில வேலை இருக்கு நான் சாயந்தரம் வந்து கூப்டு போறன் சரியா?”
“ம்”
“என்ன விட்டு போயிடமாட்டல்ல”
“இல்ல”
“சரி வர்றன்”
“இருங்க சாப்டு போங்க”
“நேரமாச்சுடா”
அவனை நிமிர்ந்து பார்க்க
“சரி சாப்டு போறன்” என்றான்.
அவள் சாப்பாடு செய்ய கீழே செல்ல அவன் யோசிக்க ஆரம்பித்தான்.
“நம்மகூட இருந்தவரைக்கும் நல்லாதானே இருந்தா நான் officekku போயிட்டு வர்றதுக்கு நடுவுல என்ன நடந்திருக்கும்?யாரும் அவளுக்கு ஏதாச்சும் சொல்லிருப்பாங்களா? அப்பிடி தொல்றளவுக்கு யாரும் இல்லையே மல்லிகா அத்தையும் நீலுவும் போயிட்டாங்க. கீர்த்தி..இல்ல அவ சொல்லிருக்க மாட்டாள். அவள் என்னோட தோழி.So வேற யாரு சொல்லிருப்பா சரி சாயந்தரம் அவகிட்டையே கேட்டுடுவம்”
சமையலறைக்கு வந்த வதனா பாட்டிக்கு காப்பி கொடுத்துவிட்டு வந்தவள் சூர்யாக்கு பிடித்ததையே செய்ய ஆரம்பித்தாள். பின் சாப்பாட்டு மேசையில் வைத்துவிட்டு சூர்யாவை அழைத்து வந்தாள். சூர்யா அமர்ந்ததும் பரிமாற ஆரம்பித்தாள். அப்போதுதான் அவள் சாப்பிடவில்லை என பாட்டி சொன்னது ஞாபகம் வந்தது.
“வது என் பக்கத்தில உக்காருடா”
“ஏ..ன்?”
“உக்காரு” என்றவன் அவளது கைபிடித்து அவனுக்கருகில் இருக்கவைத்தான். இதன் மூலம் அவள் அவனுக்கு பொருத்தமானவள் என சொல்லவே நினைத்தான்.
“சாப்பிடு வது “
“ம்”
“வது நான் உன்னோட சமையலுக்கு அடிமைடி. ரொம்ப நல்லா சமைக்கிறாடி”
“அப்பிடில்ல ஏதோ சமைப்பன்ங்க”
“ஆனா வது எனக்கு பிடிச்சது உனக்கெப்பிடித் தெரியும்?”
“அத்தை சொல்லிருக்காங்க”
சாப்பிட்டு முடித்தவன் எழ வதனாவும் எழுந்தாள்.
“நீ சாப்பிடுடா நான் வர்றன்”
“இல்லங்க நான் சாப்டுட்டன் ” என்றாள்.
“சரி நான் போய் லப்டொப்ப எடுத்திடேடு வர்றன்” என்றவன் மேலே செல்ல அவளும் அவன் பின்னால் சென்றாள்.
“என்ன கண்ணம்மா?”
“பொட்டு”
“ஓ… இரு ” என்றவன் அவளது வகுட்டில் குங்குமம் வைத்துவிட்டான்.அவள் அவனது காலில் விழுந்தாள். அதற்கு
“என்ன கண்ணம்மா இது?”
“என்ன ஆசிர்வாதம் பண்ணுங்க”
“சரி….என்ன விட்டு எப்பவும் போயிடாத. சந்தோசமா இரு” என்றான். அதன் பின்பே எழுந்தாள்.
“சரி நான் சாயந்தரம் வந்திர்றன். ரெடியா இருடா என்றவன் நெற்றியில் முத்தமிட்டு விட்டுச் சென்றான்.”
அவன் சென்ற பின்பே குமாரும் மதியும் வந்தனர்.
“வாங்க அத்தை வாங்க மாமா”
“வதனாமா சூர்யா எங்க?”
“அவரு கம்பனிக்கு போயிட்டாரு அத்தை”
“ஓ… சாப்டானாமா?”
“ஆமா அத்தை . நீங்க சாப்டீங்களா இல்லை சாப்பாடு எடுத்து வைக்கவா ?”
“இல்லம்மா நாங்க தேவி வீட்ல சாப்டு வந்திட்டம்”
“தேவி எப்பிடி இருக்கா அத்தை ?”
“நல்லா இருக்காடா நாங்க வர்றம்னு சொன்னதும் அழ ஆரம்பிச்சிட்டா மாப்பிள்ளைதான் சமாதானப்படுத்தினாரு.”
“ஆ… நான் தேவிக்கு அப்புறம் போன் பண்ணிபேசுறன் அத்தை”
“சரிமா”
“மதி நான் கம்பனிக்கு போயிட்டு வர்றன்.”
“சரிங்க”
“வர்றன் வதனாமா”
“சரி மாமா”
வதனாவின் முகத்தில் தெரிந்த புதுப்பொலிவினைக் கண்டுகொண்ட மதி தன் மகன் வாழ்க்கையை ஆரம்பித்து விட்டான் என நினைத்தவர். வதனாவை அழைத்து நெற்றியில் முத்தமிட்டார்.
“என்ன அத்தை?”
“ஒண்ணுமில்லம்மா சும்மாதான் ஏன் உனக்கு பிடிக்கலையா?”
“அப்பிடி இல்லத்தை திடீர்னு முத்தம் தரவும் பயந்துட்டன்”
“குடுக்கணும் போல இருந்திச்சுடா அதுதான்”
“சரி அத்தை நான் போய் உள்ள வேலை இருக்கு பார்க்கட்டுமா அத்தை”
“சரிடாமா நான் அத்தைய பார்த்திட்டு வர்றன்”
“சரி அத்தை”
“அத்தை” என்று அழைத்து மரகதம்மாவின் அறைக்குள்ள சென்றவர். அவரைப் பார்த்தவர் உடனடியாக குமார், சூர்யாவை வீ்ட்டுக்கு வருமாறு கூறி போனைக் கட் பண்ணினார்.
கம்பனியிலிருந்த சூர்யா வதுக்கு என்னாச்சோ என்ற பதட்டத்திலும் குமார் யாருக்கு என்னாச்சு என்ற கேள்வியிலும் வீட்டிற்கு வந்து சேர்ந்தனர்.
மதி போன் பண்ணக் காரணம் என்ன??
காத்திருப்புத் தொடரும்………….