காத்திருப்பு : 31
உற்சாகத்துடன் அனைவரும் காரின் அருகில் வந்தனர். அப்போது காரின் அருகில் வந்த வதனா காரினுள் இருந்தவரைப் பார்த்து கவலையடைந்தாள். ஆம் காரில் கீர்த்தி அமர்ந்திருந்தாள்.
” என்ன மச்சான் கீர்த்தி எதுக்கு வர்றா?”
“அவளோட சொந்தக்காராக்கள் அங்க இருக்காங்களாம்டா. நம்ம போறத பற்றி சொன்னன். அவளும் வர்றனு சொன்னாடா”
“சரிடா எல்லோரும் கவனமா போயிட்டு வாங்க”
காரில் ரைவர் சீட்டல் சூர்யா அமர அவனுக்கு அருகில் கீர்த்தி அமரப்போனாள். கமலேஷ்” கீர்த்தி சூர்யா பக்கத்தில வதனா இருக்கட்டும் நீ பின்னாடி இரு “
“எனக்கு முன்னாடி இருந்துதான் பழக்கம்” என்றவள் காரில் அமர்ந்துகொள்ள கமலேஷ் சூர்யாவை முறைத்தான்.
சூர்யா உடனே காரை விட்டு வெளியே வந்தான். “என்ன சூர்யா இறங்கிட்ட?” என்றபடி மறுபக்கத்திலிருந்து கீர்த்தி இறங்கினாள்.
“ஒண்ணுமில்லை கீர்த்தி. அப்பா நாங்க டிரைவரை கூட்டிட்டி போறம்பா”
“சரிப்பா “
டிரைவர் வந்து இருக்க கீர்த்தி வேறு வழியில்லாமல் driverகு அருகில்லே அமர்ந்தாள். அடுத்து கமலேஷ் தேவியும் இறுதியாக சூர்யா வதனாவும் இருந்தனர்.
அமைதியாகவே பயணம் சென்றது. தேவியும் கமலேஷும் தங்களுக்குள் பேசிக்கொண்டு வர சூர்யாவும் வதனாவும் அமைதியாக வந்தனர்.
“கண்ணம்மா”
“ம்…”
“கண்ணம்மா”
“ம்.. சொல்லுங்க”
அவள் மாமா என சொல்லாமல் இருக்க சூர்யாவுக்கு கோபம் வந்தது.அதனால் வதனாவின் புறம் திரும்பாமல் தனது லப்டொப்பில் வேலையில் இறங்கினான். சிறிது நேரத்தில் அவனது தோளில் பாரமேற்பட்டது. ஆம் வதனாதான் அவனது தோளில் சாய்ந்தவண்ணம் தூங்கிக்கொண்டிருந்தாள். அதைப் பார்த்தவனின் கோபம் குறைந்தது.
சிரிப்புடன் லப்டொப்பை மூடிவைத்தவன் தன்னவளை மார்பில் சாய்த்துக்கொண்டு அவளது தலைமேல் தனது தலையை வைத்துக்கொண்டிருந்தான். வண்டி காலை சாப்பாட்டிற்காக நிறுத்தப்பட்து. அனைவரும் இறங்கினர். அப்போதுதான் சூர்யாவைக் கவனித்த கமலேஷ் சிரித்துக்கொண்டான்.
“சூர்யா எழும்புடா”
“என்னடா”
“சாப்பிட வாடா “
“வது நல்லா தூங்குறாடா நீங்க சாப்டு வாங்க நாங்க அப்புறம் சாப்டுவம்”
“நான்வேணா உங்க ரெண்டு பேருக்கும் சாப்பாடு வாங்கிட்டு வரவா?”
“சரிடா”
அவர்கள் சாப்பிட்டு விட்டு சூர்யாக்கும் வதனாவுக்கும் சாப்பாடு பார்ஸலில் வாங்கி வந்தனர். பின் மீண்டும் பயணம் தொடங்கியது. சில நிமிடங்களில் வதனா கண்விழித்ததும் சாப்பாட்டை கொடுத்தான் சூர்யா. மறுக்காது வாங்கிக்கொண்ட வதனா சாப்பிடாமல் பார்சலைப் பார்ப்பதும் சூர்யாவைப் பார்ப்பதுமாக இருந்தாள்.
சூர்யாவுக்கு வதனாவின் செயல் சிரிப்பை ஏற்படுத்த சிரித்தபடி அவளது பார்சலில் இருந்த உணவை எடுத்து ஊட்டிவிட்டான்.அவளும் வாங்கிக்கொண்டாள்.
“சரி நீயே சாப்பிடு கண்ணம்மா”
இல்லை என தலையசைத்தாள். பின் சூர்யாவே அனைத்தையும் ஊட்டிவிட அவள் எதுவும் பேசாமல் சாப்பிட்டாள். இதனைப் பார்த்த கமலேஷ் தேவி தம்பதிகளுக்கு ஆனந்தமாக இருக்க கீர்த்திக்கோ ஆத்திரம் ஆத்திரமாக வந்தது.
சூர்யாவும் சாப்பிட்டு முடிந்ததும் வதனா அவனது தோளில் சாய்ந்து தூங்கினாள். சிலமணி நேரங்களில் ஹற்றனில் உள்ள ஒரு வீட்டில் கீர்த்தியை விட்டு விட்டு இவர்கள் ஒரு காட்டேஜில் தங்கினர்.
“சரிடா மச்சான் கொஞ்சநேரம் தூங்கி எழும்புவம். ஈவினிங் சுத்திப் பார்க்கலாம். “
“சரிடா சூர்யா”
தங்களது அறைக்குள் வந்த வதனாவிடம்
“கண்ணம்மா தலைக்கு குளிக்கச் வேண்டாம்டா ரொம்ப குளிரா இருக்கும் சரியா?”
“சரி ” என்றவள் குளியலறைக்குச் செல்ல சூர்யா “என்னாச்சி இவளுக்கு ” என யோசிச்சிட்டு இருந்தான்.
வதனா வரவும் தானும் போய் குளித்துவிட்டு வந்தவன் வதனாவை அழைத்து தனதருகில் உக்காரவைத்தான்.
“கண்ணம்மா என்னாச்சுடா? உனக்கு இங்க வரப் பிடிக்கலையாடா?”
“எனக்கு ஒன்னும் இல்லை. “
“அப்போ உன்னோட மாமா எங்க போச்சு?”
“அ..து….”
“எதுவா இருந்தாலும் சொல்லுடா?”
“எனக்கு பயமா இருக்கு மாமா” என்றவள் தன்னவன் தோளில் சாய்ந்தாள்.
“ஏன்டா கண்ணம்மா?”
“உங்கள விட்டு போயிடுவனோனு பயமா இருக்கு”
“அப்பிடி ஒன்னுமாகாதுடா கண்ணம்மா”
“நெஜமாவா மாமா”
“ஆமாடா கண்ணம்மா”
“சரி மாமா “
“சரிடா கொஞ்சநேரம் தூங்கலாம் வாடா”
“வேணாம் மாமா நான் வரும்போது நல்லா தூங்கிட்டன். இப்போ தூக்கம் வரல மாமா”
“ஆனா எனக்கு தூக்கம் வருதேடா”
“அப்போ தூங்குங்க மாமா”
“நீ இல்லாம தூங்க முடியாடா கண்ணம்மா”
“சரி வா மாமா ” என்றவள் தன்னவனுடன் தூங்கினாள்.
மாலையானதும் இருஜோடிகளும் வெளியில் தயாராகி வந்தனர். முதன் முதலில் ஜோடியாக வெளியே செல்வதால் முதலாவதாக கோயிலுக்குச் செல்லலாம் என வதனா கூற அனைவரும் சரி என்றனர். பின் காரில் அனைவரும் முருகன் கோயிலுக்கு வந்தனர்.
“நீங்க இருங்க நானும் தேவியும் போய் அர்ச்சனைத்தட்டு வாங்கிட்டு வர்றம்”
“சரிடா”
அர்ச்சனைத் தட்டு வாங்கிவரவும் நால்வரும் சேர்ந்து ஆலயத்திற்குள் வந்தனர். தேவியும் கமலேஷும் சேர்ந்து வர சூர்யாவும் வதனாவும் சேர்ந்து வந்தனர்.
இவர்கள் ஏதோ பேசிச் சிரித்தபடி வந்தனர். அச் சிரிப்புச் சத்தத்தில் திரும்பிய ஒருவர் வதனாவைக் கண்டதும் கோபத்துடன் அவளருகில் வந்து வதனாவிடம் கடுமையாக பேசினார்.
காத்திருப்புத் தொடரும்…………..
யார் வதனாவிடம் கடுமையாகப் பேசியது???
Nice