வருவாயா என்னவனே : 33

4.9
(13)

காத்திருப்பு : 33

“வதனாவையும் உன்னோட கூட்டிட்டு போறியா சூர்யா?”

“இல்லப்பா. வதனாக்கு passport எடுக்கணும் அதுக்கு டைம் எடுக்கும். அதனால நான் மட்டும் போறன்பா.”

“சரிப்பா எப்ப போற?”

“இன்னைக்கு 2.O’clock ஃப்ளைட்பா”

“சரிப்பா பத்திரமா போயிட்டு வா”

“சரிமா நான் உங்க எல்லாரையும் எதுக்கு வரச்சொன்னன் தெரியுமா?”

“இல்லை சூர்யா சொல்லுடா”

“நான் திரும்பி வர்ற வரைக்கும் என்னோட பொண்டாட்டிய பத்திரமா பார்த்துக்கணும் என்று சொல்லத்தான் வரச்சொன்னன்”

“மச்சான் இத நீ சொல்லணுமாடா நாங்க எல்லாரும் இருக்கும் போது எதுக்கு பயப்படறடா? நாங்க வதனாவ பார்த்துக்குவம் சரியா?”

“சரி மச்சான். திரும்பவும் சொல்றன் வதனாக்கு ஏதாவதாச்சு நான் யாரையும் மன்னிக்கமாட்டன்.”

“சரிடா. வதனா போய் அவனுக்கு தேவையானதை எடுத்து வைடாம்மா”

“சரி அண்ணா” என்றவள் அறைக்குள் சென்றாள்.

“மச்சான் ஏதும் பிரச்சனையாடா?”

“தெரியல மச்சான் நான் அங்க போய்ப்பார்த்தாத்தான் தெரியும்டா. சரிடா நான் வதனாவோட பேசிட்டு வர்றன்”

சூர்யாவின் பெட்டியில் ஆடைகளையும் அவனுக்குத் தேவையானவற்றையும் அடுக்கி வைத்துக்கொண்டிருந்த வதனாவை பின்னிருந்து அணைத்தான்.

“கண்ணம்மா “

“ம்..”

“கண்ணம்மா மாமா சொல்லுடா”

“மாமா” என்றவள் கதறலுடன் அவன் மார்பில்ல சரணடைந்தாள். அவனும் தன்னவளை இறுக்கி அணைத்துக்கொண்டான்.

“மாமா “

“கண்ணம்மா சொல்லுடா” என்றவன் கண்களும் கலங்கியிருந்தன.

“என்ன விட்டு போகாத மாமா” என்றவள் அவனை மேலும் மேலும் இறுக்கினாள்.

“கண்ணம்மா நான் அங்க போயிட்டு சீக்கிரமா பிரச்சனைய முடிச்சிட்டு என்னோட கண்ணம்மாவ பார்க்க ஓடி வந்திருவன் சரியாடா?”

“வேணாம் நீ போகாத ” சூர்யாவுக்கு அவளது ஒருமையான பேச்சு மிகவும் பிடிக்கும். ஆனால் அவள் அதை எப்போதும் சொல்லமாட்டாள். உணர்ச்சிவசப்படும்போது தான் பேசுவாள்.

“கண்ணம்மா நான் போயிட்டு வேலை சீக்கிரம் முடியலனா நான் கமலேஷ்கிட்ட சொல்லுவன் அவன் கூட்டிட்டுவந்து உன்ன எங்கிட்ட சேர்த்திடுவான் சரியாடா?”

“மா…மா….”

“கண்ணம்மா” என்றவன் அவளது முகத்தை தனது இருகைகளால் பிடித்தவன்

“கண்ணம்மா நான் உன்ன விட்டு எப்பவும் போகமாட்டன். சீக்கிரமா உன் மாமா உங்கிட்ட வந்திடுவன் சரியாடாமா? இப்ப நான் போலனா யார்கிட்டையோ நான் தோத்துடுவன்டா. உனக்கு நான் யார்கிட்டையாவது தோத்துப்போறது உனக்கு பிடிக்குமாடா?”

“இல்லை”

“அப்போ நான் போயிட்டு வர்றன் சரியா? நீ எப்பவும் கவனமா இருக்கணும் தினமும் நான் போன் பண்ணுவன் சரியாடாமா?”

“ச..ரி…மா..மா..”

“சூர்யா டைமாச்சு” என குரல் கொடுத்தான் கமலேஷ்.

” வர்றன்டா ” என்றவன் வதனாவை இதழில் அழுந்த முத்தமிட்டான். அவள் மூச்சுக்காற்றுக்காக ஏங்கவும் அவனது மூச்சினை வழங்கினானே தவிர அவளை விடவில்லை. பின் ஒருவாராக அவளை விட்டவன் அவளை இறுக்கி அணைத்துக்கொண்டான். அதில் ஒருவித பயம் இருந்தது.

பின் அவளுடன் கீழே வந்தவன். எல்லோரிடமும் விடைபெற்றவன். திரும்பத் திரும்ப வதனாவைப் பார்த்தபடி காரில் ஏறினான்.

(மீண்டும் அவளைப் பார்க்க முடியாது என்பதால் திரும்பத் திரும்ப பார்த்தானோ)

பிரான்ஸில் சென்று இறங்கியவனை வெங்கட் வந்து அழைத்துச் சென்றான். சிறிது நேரம் ஓய்வெடுத்தவன். கம்பனியில் நடந்த விடயங்களைப்பற்றிக் கேட்டுக்கொண்டான். பின் நாளைக்கு செய்ய வேண்டியவற்றை திட்டமிட்டவன் நீண்டநேரத்தின் பின்பே தூங்க வந்தான்.

வதனாவுடன் பேசலாம் என எண்ணியவன் பின் அவளுடன் பேசினால் மேலும் அவள் வருத்தப்படுவாள். அழுவாள். அவள் அழுதால் தன்னால் வேலையை செய்ய முடியாது என நினைத்தவன் தாயுடன் மட்டுமே பேசிவிட்டு தூங்கினான்.

காலையில் நேரத்திற்கு எழுந்த சூர்யா வெங்கட்டுடன் கம்பனிக்குச் சென்றவன். அங்கிருந்த வேலையில் மூழ்கிப்போனான்.

மதுரா இல்லம்……

“அத்தை “

“என்னடாம்மா?”

“அவரு போன் பண்ணினாரா அத்தை?”

“ஆமாடா நைட் எடுத்தான் நல்லபடியா போயிட்டன்னு சொன்னான்டா”

“சரி அத்தை ” என்றவள் அவருடன் சேர்ந்து சமையல் வேலைகளில் ஈடுபட்டாள். வேலை முடிந்ததும் தங்களது அறைக்குள் வந்தவள்

அவனது போட்டோவை எடுத்தவள் ” ஏன் மாமா எங்கூட பேசல ” என அதனுடன்டன பேசியவாறே தூங்கினாள்.

இப்படியாக நாட்களும் செல்ல ஒருமாதமாகியது. இந்த ஒருமாதத்தில் சூர்யாய வதனாவுடன் பேசவேயில்லை. வதனாவும் எதுவும் கேட்கவில்லை.

“அத்தை “

“சொல்லுடாமா”

“நான் கோயிலுக்கு போயிட்டு வரட்டுமா அத்தை?”

“போயிட்டு வாடா தனிய போயிட்டு வந்திடுவியா நான் கூட வரட்டுமா?”

“இல்ல அத்தை பக்கத்திலதானே நானே போயிட்டு வந்திடுவன் அத்தை”

“சரிடாம்மா பத்திரமா போயிட்டு வாடா”

“சரி அத்தை ” என்றவள் கோயிலுக்குச் சென்றாள். அங்கே அலங்காரத்துடன் அம்மன் வீற்றிருந்தாள். அவளைப் பார்த்து

“என்னை ஏன்மா இப்பிடி சோதிக்கிற? நான் அப்பிடி என்னம்மா பாவம் பண்ணினன்? பாசமா வளர்த்த அப்பா நான் செத்துட்டதா சொன்னாரு? பாசமா இருந்த புருஷன் இப்ப பேசுறதே இல்ல? ஏன்மா எனக்கு இத்தனை சோதனை?” என்றவள் அழுதபடி அம்மனை பார்க்க அவளோ

“இது பெரிய சோதனை இல்லை மகளே….இதைவிட பெருஞ் சோதனை உன்னை நோக்கி வந்துகொண்டிருக்கிறது” என்பதைப் போல பார்த்துக்கொண்டிருந்தார்.

கோயிலில் இருந்துவிட்டு வீடு நோக்கித் திரும்பிய வதனாவுக்கு கண்கள் இருட்டிக்கொண்டு வர தலையை அசைத்து தன்னை சமன் செய்துவிட்டு நடக்க மீண்டும் தலை சுற்றி விழப்போனவளை வீதியில் சென்ற ஒரு பெண்மணியின் கரங்கள் தாங்கியது. அவளைப் பிடித்தவர் ஆட்டோ ஒன்றை அழைத்தவர் அவளை அருகிலிருந்த ஹாஸ்பிடல்க்கு கூட்டிச் சென்று அட்மிட் செய்தார்.

சிறிது நேரத்தில் மயக்கம் தெளிந்ததும் கண்விழித்த வதனாவிடம் வந்த பெண்மணி

“என்னம்மா பார்த்து பத்திரமா வர்றலயாமா? இந்த நேரத்தில நீ இப்பிடி தனியா எங்கேயும் போகக்கூடாதுமா.துணைக்கு யாரையாச்சும் கூட்டிக்கிட்டு போகணும் சரியாமா?” எனச் சொன்ன பெண்மணியைப் பார்த்த வதனா

“நீங்க என்ன சொல்றீங்கம்மா?”

“என்ன பொண்ணுடா நீ.. நீ தாயாகப்போறாடா” என்றார் சிரிப்புடன். இதைக் கேட்டதும் ஆனந்தத்தில் வதனாவுக்கு கண்கள் கலங்கின. தனது வயிற்றினை மெதுவாக தொட்டுப் பார்த்தவள். மெய்சிலிர்த்தாள்.

“உண்மையாம்மா?”

“ஆமாம்மா அதனாலதான் உன்ன தனியபோகவேணாம்னு சொன்னன். சரியா வீட்டுக்கு போயிடுவியாமா? வீட்ல இருந்து யாரையாச்சும் வரச் சொல்றியா?”

“இல்லம்மா நானே போயிடுவன். ரொம்ப நன்றிமா”

“நன்றியெல்லாம் எதுக்குமா? பார்த்து பத்திரமா போயிட்டு வாம்மா”

“சரிமா நான் வர்றன்.” என்றவள் மனமெங்கும் மகிழ்வுடன் வீட்டைநோக்கிச் சென்றாள். வீட்டில் யாரும் இருக்கவில்லை மதி தேவியைப் பார்க்கச் சென்றிருந்தார். முகமெங்கும் மகிழ்வுடன் வந்த வதனைவைப் பார்த்த கீர்த்தி இவளுக்கு என்னாச்சினு யோசிச்சிட்டே அவளுக்குத் தெரியாமல் அவர்கள் அறைக்கு வெளியே நின்றிருந்தாள்.

தான் தாயாகப்போகும் விடயத்தை முதலில் தன்னவனிடமே கூறவேண்டுமென நினைத்தவள் அவனுக்கு அழைப்பை ஏற்படுத்த அவனது போன் off என்றே வந்தது. பின் வழமைபோல் அவனது போட்டோவை எடுத்தவள். அதனுடன் பேச ஆரம்பித்தாள்.

“மாமா உங்களோட உயிரு என்னோட வயித்துல வளருது மாமா இது ஒன்னே எனக்கு போதும் மாமா. சீக்கிரமா எங்கிட்டே வாங்க மாமா” என்றவளுக்கு அழுகை முட்டியது.

இதனைக் கேட்ட கீர்த்தி இவளை எப்பிடியாவது வீட்டை விட்டு துரத்தணணுமே என யோசித்தவளுக்கு ஒரு திட்டம் வந்தது. சரி இப்பிடியே செய்யலாம் என நினைத்தவள் வதனாவை அழைத்தபடி அறைக்குள் நுழைந்தாள்.

கீர்த்தியின் திட்டம் எண்ண???

கீர்த்தியின் திட்டத்தில் அகப்படுவாளா வதனா???

காத்திருப்புத் தொடரும்……………….

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.9 / 5. Vote count: 13

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!