காத்திருப்பு :34
வதனாவின் அறைக்குள் நுழைந்த கீர்த்தி ஏதோ கூறிவிட்டுச் செல்ல. அதைக்கேட்ட வதனா கீர்த்தியிடம் சவால் விட்டாள். கீர்த்தியோ அவளை ஏளனப்பார்வை பார்த்துவிட்டு வெளியேறினாள்.
அதில் அதிர்ந்த வதனா சூர்யாவுக்கு போன் பண்ணினாள். அழைப்பு போய் கொண்டிருக்க சூர்யா அழைப்பைக் கட் பண்ணினான். மீண்டும் மீண்டும் வதனா எடுக்க கட் பண்ணிட்டே இருந்த கோபத்தில் போனை எடுத்து அவள் சொல்ல வருவதைக் கேட்காமல் அவனே ஏதோ பேசிவிட்டு கட் பண்ணினான்.
கண்களில்ல நீர் வர பேப்பர் ஒன்றினை எடுத்தவள். “என்னால் யாரும் அவமானப்பட வேண்டாம் நானே போகிறேன்.” என எழுதியவள் அவனது முக்கியமான ஃபைல் வைக்கும் இடத்தில் வைத்தவள் அவனது போட்டோ ஒன்றினையும் ஆடைகள் சிலவற்றினையும் எடுத்துக்கொண்டு வீட்டை விட்டு வெளியேறினாள்.
கீர்த்தியின் தந்தைக்கு உடல்நிலை சரியில்லை என போன் வந்ததால் அவள் மதியை அழைத்து தான் செல்வதாகவும் வதனா வீட்டில் தனியே இருப்பதாகவும் கூறினாள்.
(வதனா வீட்டை விட்டுப்போனது அவளுக்குத் தெரியாது..)
வீட்டிற்கு வந்த மதி வதனாவைக்க காணவில்லை. சரி தூங்குவாள் என நினைத்தார். ஏழுமணியானதும் குமார் வந்தார்.
“மதி ஒரு காப்பி”
“இருங்க எடுத்திட்டு வர்றன்”
காப்பியைக் கொடுத்ததும்
“என்ன மதி வதனாவ காணல்ல?”
“றூம்ல இருப்பாப போலங்க”
“நான் வந்ததும் எங்கூட பேச வந்திருப்பா. போய் பாரு மதி உடம்புசரியில்லையோ தெரியல”
“சரிங்க” என்றவர். அவள் அறைக்குள் வந்தார். வதனாவைக் காணவில்லை பயந்துவிட்டார் மதி.
“என்னங்க…….”
“என்ன மதி?”
“வதனாவ காணோம்க”
கோயிலுக்கு போனவ வந்தது தெரியுமா உனக்கு?”
“கீர்த்தி சொன்னாங்க. என்னோட அப்பாக்கு உடம்புசரியில்லைனு போன் வந்தது ஆண்ட்டி . நான் ஊருக்கு போகணும் வதனா தனிய இருப்பா சீக்கிரம் வாங்கனு சொன்னாங்க”
“எல்லா இடமும் பார்த்தியா மதி?”
“ஆமாங்க நான் தேடிப் பார்த்திட்டன் காணோம்க.”
“முதல்ல கமலேஷ் தேவிக்கு போன் பண்ணி வரச்சொல்லுமா”
சிறிது நேரத்தில் வந்தனர் தேவியும் கமலேஷூம்
“என்ன அத்தை அவசரமா வரச்சொன்னீங்க?”
“அது வந்து கமலேஷ்……”
“சொல்லுங்க அத்தை ஏன் தயங்குறீங்க? வதனா எங்க?”
“சொல்லுமா”
“வதனாவ காணல….”
“என்னம்மா சொல்ற எங்க போனா?”
“கோயிலுக்கு போயிட்டு வந்தவடா அப்புறம் காணல தேவி”
“அத்தை சூர்யாக்கு தெரியுமா?”
“இல்லப்பா “
“அவனுக்கு தெரிஞ்சிது செத்தம் அத்தை இப்போதைக்கு அவனுக்கு சொல்ல வேண்டாம் நம்ம வதனாவ தேடுவம் சரியா?”
“நீ சொல்றதும் சரிதான் கமலேஷ்”
“அப்போதும் அண்ணா வதனாவ பத்திரமா பார்த்துக்கோங்க என்று சொன்னான். எனக்கு பயமா இருக்குங்க வதனாக்கு எதுவும் தெரியாது. இந்த நேரத்தில எங்க போயிருப்பா?”
“பயப்படாத ரதிம்மா வதனாவ கண்டுபிடிச்சிடலாம். மாமா நீங்க ஒரு பக்கம் தேடுங்க நான் ஒரு பக்கம் பார்க்கிறன்”
“சரி கமலேஷ்”
“ரதி நீ அத்தைகூடவே இருமா நான் வர்றன்”
” நானும் ஒரு பக்கம் பார்க்கிறன் கமலேஷ். வர்றன்”
இருவரும் வதனாவைத் தேடிச் சென்றனர். வதனாவோ சோலையூர் செல்லும் ரயிலில் பயணித்துக்கொண்டிருந்தாள்.
(வீட்டை விட்டு வந்த வதனாவுக்கு எங்க போகணும்னு தெரியவில்லை. தாய் தந்தையிடமே போகலாம் என நினைத்தாள். அவர்கள் இவள் மீது கோபத்தில் இருப்பதை மறந்துவிட்டாள். ரயிலில் ஏறி அமர்ந்தாள். )
இடையில் ஒரு ஸ்டேஷனில் சாப்பாடு விற்றுக்கொண்டிருந்த பெண்ணிடம் சாப்பாடு வாங்கியவள் தனது வயிற்றில் வளரும் சிசுவுக்காக சாப்பிட்டாள்.
இரவு பதினொரு மணிபோல் கமலேஷூம் குமாரும் திரும்பி வந்தனர்.
“வதனா பற்றி ஏதும் தகவல் கிடைச்சதாங்க?”
“இல்லம்மா”
“எங்க போயிருப்பா?”
“தெரியல ரதிமா தேடாத இடமில்லை” எனும் போதே சூர்யாவின் அழைப்பு வந்தது.
“சொல்லு சூர்யா”
“அம்மா வதனா எங்கம்மா?”
“வ…த..னா…தூ..தூங்குறாப்பா”
“என்னாச்சிமா ஏன் ஒரு மாதரி பேசுறீங்க?”
“ஒ..ண்ணு..மில்லைபா”
“வதனா போன் பண்ணினாள்மா நான் மீட்டிங்ல இருந்ததால பேசமுடியல அதுசான் பேசலாம்னு கூப்டன். அவ போன் ஸ்விட்ச் ஆஃப் னு வருதுமா”
“சார்ச் இல்ல போலப்பா”
“சரிமா வதனா எழுந்ததும் சொல்லுங்கமா”
“சரிப்பா நீ எப்போ வர்ற?”
“தெரியலமா சீக்கிரமா வரப்பார்க்கிறன்”
“சரிப்பா”
“சரிமா நான் வைக்கிறன்.”
( என்ன அம்மா நல்லாவே பேசல. சாப்டியானுகூட கேக்காம இருக்காங்க.சரி பார்க்கலாம்)
“என்னம்மா அண்ணா என்ன சொன்னான்?”
“வதனா போன் பண்ணிருக்கா அவனுக்கு மீட்டிங்ல இருந்ததால பேசமுடியலையாம் அதுதான் இப்போ பேச எடுத்திருக்கான். போன் ஸ்விட்ச் ஆஃப் னு வந்திருக்கு அதுதான் எனக்கு எடுத்துக் கேக்கிறான்மா”
“சூர்யா எப்போ வர்றானாம் அத்தை?”
“தெரியலனு சொன்னான் கமலேஷ்”
“அவன் வர்றதுக்குள்ள வதனாவ கண்டுபிடிக்கணும் மாமா”
“ஆமாப்பா. நாளைக்கு தேடுவம் போலீஸ் compliant குடுக்கணுமா?”
“வேணாம் மாமா அதால பிரச்சனை வரும் நம்ம யாருக்கும் தெரியாம தேடலாம்.”
“அதுவும் சரிதாங்க “
பின் அனைவரும் தூங்கச் சென்றனர்.
அதிகாலை மூணு மணிக்கு சோலையூர் வந்திறங்கினாள் வதனா. அங்கிருந்து ஆட்டோ ஒன்றில் ஏறியவள் தன் வீட்டினை வந்தடைந்தாள்.
சிறிது தயக்கத்துடன் வீட்டுக் கதவைத் தட்டினாள்.
“மாமா”
“என்ன தங்கம்?”
“கதவை யாரோ தட்டுறாங்க மாமா”
“இந்த நேரத்தில யாரு தங்கம் வரப்போறா நீ தூங்கு”
மீண்டும் கதவைத் தட்டினாள் வதனா.
“ஆமா தங்கம் கதவை தட்டுற சத்தம் கேக்குது. நீ லைட்டப்போடு நான் யாருனு பார்கிறன்?”
“சரி மாமா” என்றவர் லைட்டைப் போட சுந்தரம் கதவைத் திறந்தார்.
வாயிலில் வதனா நிற்பதைக் கண்டார். கோபத்தில் கண்கள் சிவக்க
“யாரு நீ?” என்றார்.
அவரது சத்தம் கேட்டு பின்னால் வந்த தங்கம் வதனாவைக் கண்டு அவளருகில் செல்லப்போக அதைத் தடுத்த சுந்தரம் மீண்டும்
“உன்னத்தான் கேக்கிறன் யார் நீ?”
“அ..ப்…பா?”
“சீ.. நீ அப்பானு சொல்லாத எனக்கு இருந்த பொண்ணு செத்திட்டா. நீ எதுக்கு வந்த?”
“என்ன மாமா நீங்க ?”
“நீ பேசாத தங்கம்.”
“அப்பா நான் உங்க பொண்ணுப்பா” என்று அழுதாள்.
” எதுக்கு வந்த ?”
“அம்மா நான் கர்ப்பமா இருக்கன்மா”
“மாமா வாயும்வயிறுமா இருக்க புள்ளைய எதுவும் பேசாதீங்க”
“ஓ…. அதுதான் உன்ன புருஷன் துரத்திவிட்டுட்டானா. போறத்துக்கு இடமில்லாம இங்க வந்தியா?”
“அப்பா அவரப் பற்றி தப்பா பேசாதீங்க”
“ஏய் என்ன வயித்துல புள்ளையோட துரத்திவிட்டவன் நல்லவனா”
“அவரப்பற்றி நீங்க பேசத் தேவையில்ல.”
“ஏன் வீட்ட வந்தது நீதான் நான் அப்பிடித்தான் பேசுவன்.”
“சரி நீங்க பேசுவதைக் கேட்டுட்டு நான் சும்மா இருக்கமாட்டன்பா”
“நீ எதுக்கு இங்க வந்த போறதுக்கு இடமில்லைனுதானே… இவ்வளவு பேசுற நீ இங்க இருக்க கூடாது போடி வெளில “
“மாமா “
“உனக்கு பொண்ணு வேணும்னா நீ அவகூடவே போ”
“நான் போறன் அப்பா ஆனா நடந்த உண்மை தெரிஞ்ச பிறகு என்ன மகள்னு சொல்லிட்டு வரவேணாம் உங்க மகள் செத்ததாவே இருக்கட்டும் ” என்றவள் அவர்களை திரும்பியும் பாராது நடந்தவள் மீண்டும் ரெயில்வே ஸ்டேஷன் வந்தாள்.
நடந்ததை எண்ணி அழுதாள். சூர்யா வீட்டிற்கு போகலாம்னு யோசிச்சபடி இருந்தாள் வதனா. பின் ஒரு முடிவெடுத்தவளாய் கோட்டை செல்லும் ரெயிலில் ஏறி அமர்ந்தாள். பயணம் முழுவதும் பல சிந்தனையுடனே வந்தாள்.
மதுரா இல்லம்……
“அம்மா வதனா எங்கம்மா போயிருப்பா?”
“தெரியலையே தேவிமா.பாவம்டா அவ”
“அம்மா அண்ணி போவதுக்கு முதல் அண்ணாக்கு போன் பண்ணிருக்காங்க ஏன்மா?”
“அதுதான் ரதி நானும் யோசிச்சன் ஒண்ணுமே புரயலடா”
“கமலேஷ்”
“சொல்லுங்க மாமா”
“நாம போய் வதனா தேடலாம் வாப்பா”
“சரி மாமா ரதி அத்தைய பார்த்துக்க” என்றதும் இருவரும் வதனாவைத் தேடச் சென்றனர்.
நண்பகல் நேரம் கோட்டை ரெயில்வே ஸ்டேஷனில் வந்திறங்கினாள் வதனா.
மதுரா இல்லம்………..
“தேவிமா மாப்பிள்ளைக்கு போன் போடுமா”
“சரிமா”
“ஹலோ ரதி”
“அத்தான் எங்க இருக்கிறீங்க?”
“நானும் மாமாவும் வீட்டுக்குத்தான் வந்திட்டு இருக்கம் ரதிமா பத்து நிமிசத்தில வந்திடுவம்”
” சரி அத்தான்”
“என்னமா தேவி?”
“அம்மா பக்கத்தில வந்திட்டாங்களாம் மா வந்திர்றம் என்று சொன்னாரு”
“சரி மா”
பத்து நிமிடத்தில் வீட்டினையடைந்தனர் கமலேஷூம் குமாரும்.
“என்னங்க ஏதும் தகவல் கிடைச்சிதா?”
“இல்லமா எந்த தகவலும் கிடைக்கல”
“என்னங்க இப்பிடி சொல்றீங்க வதனாவ எங்க போயிருப்பாங்க?”
“தெரியல அத்தை ஆச்சிரமம், ஹாஸ்பிடல் , கோயில்னு எல்லா இடமும் தேடிட்டம். வதனாக்கு என்னாச்சினே தெரியல”
“அண்ணா கேட்டா என்ன அத்தான் சொல்றது?” என அவனைப் பார்த்துக்க கேட்டபடி திரும்பிய தேவி அதிர்ச்சியானாள்.
தேவி யாரைப் பார்த்து அதிர்ச்சியானாள்?????
காத்திருப்புத் தொடரும்…………………..