காத்திருப்பு : 41
நான்கு மணிநேரம் கடந்ததும் வெளியே வந்த டாக்டர் அவர்களிடம் “சூர்யா அபாயக்கட்டத்தை தாண்டிவிட்டார். இனிப்பயப்பட ஒன்றுமில்லை.” என்றதும் இதுவரை அனைவரிடமும் இருந்த இறுக்கம் தளர்ந்தது.
ஏற்கனவே மனஅழுத்தத்தில் இருந்த வதனா இப்போது சூர்யாவுக்கு ஒன்றுமில்லை என்றதும் அதுவரை இருந்த இறுக்கம் தளர மயங்கி விழுந்தாள். விழுந்தவளைப் பிடித்தான் வாசு.
“வாசு நீங்க பக்கத்தில இருக்கிற றூம்ல வதனாவை அட்மிட் பண்ணுங்க. நான் செக்பண்ண வர்றன்”என்றான் கமலேஷ்.
வதனாவைச் செக் பண்ண கமலேஷ். சூர்யாவுக்கு என்ன நடந்ததோ என்ற பயத்தில் இருந்திருக்கிறாள். டாக்டர் சூர்யாவுக்கு ஒன்றுமில்லை என்றதும் இறுக்கம் தளர்ந்ததால் மயங்கிருக்கிறாள். ஐந்து நிமிடங்களில் எழுந்திடுவாள். என்றான் கமலேஷ் வாசுவிடம்.
பின் சூர்யாவுக்கு ஒன்றுமில்லை என்ற செய்தி வீட்டினருக்குத் தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து அவர்கள் hospitalkku வந்தனர். வதனாவும் அவர்கள் வரும் முன்பே மயக்கம் தெளிந்திருந்தாள். அனைவரும் சூர்யா மயக்கம் தெளிவதற்காக காத்திருந்தனர்.
ஹோட்டல்………….
“என்ன கீர்த்தி அவசரமா வரச்சொன்ன?”
“நந்தன் நாம சூர்யா பையனைத்தானே accident பண்ண பிளான் பண்ணினம் அப்புறம் எப்பிடி சூர்யாவுக்கு accident ?”
“அதுதான் எனக்கும் புரியல கீர்த்தி. கொஞ்சம் டைம் கொடு கண்டுபிடிச்சிடலாம்.”
“ok நந்தன். இந்த accident நடந்ததால வதனா திரும்ப வந்திட்டா. இனிமேல் அவள எப்பிடி தொரத்தரது நந்தன்”
“என்ன கீர்த்தி ஒண்ணுமில்லாதப்போவே அவள தொரத்தின நாம இப்ப பெரிய துருப்பவச் சீட்டே கெடைச்சிருக்கு அப்புறம் என்ன?”
“correct நந்தன். இப்ப புரிஞ்சிடுச்சி. அந்த துருப்புச் சீட்டு ஆதிதானே. வதனாவோட வளர்ப்பாச்சே அப்போ அவளப்போலதான் இருக்கும். “
(அவளுக்குத் தெரியவில்லை வளர்ப்பு வதனாவோடதா இருக்கலாம். ஆனா அவன் சூர்யாவின் ரெத்தம் என்பதை மறந்துவிட்டாள்.)
“கீர்த்தி நீ சொல்றது சரி முன்னாடி நீ அவளோட பட்டிக்காட்டுத்தனம் சூர்யாவோட பணக்காரத்தனம் பற்றி அவளிடம் சொல்லிச் சொல்லியே அவ மேல அவளுக்கே ஒரு தாழ்வு மனப்பான்மையை உண்டாக்கி விரட்டிவிட்டுட்ட. இந்ந தடவை அவளோட பையன். செம கீர்த்தி.”
“சரி நந்தன். சூர்யாவோட accidentகு யாரு காரணம்னு பாரு. நான் போய் சூர்யாவை பார்ததிட்டு வர்றன்.”
“சரி கீர்த்தி. ஏதாச்சும்னா போன் பண்ணு”
“சரி “
இருவரும் சென்ற பிறகு அவர்களது மேசைக்கு அருகில் இருந்த ஒரு உருவம் சிரிப்புடன் எழுந்து சென்றது.
யார் அந்த உருவம்????
காத்திருப்புத் தொடரும்…………………..