காத்திருப்பு : 43
சூர்யாவின் கண்ணசைவில் முன்னால் பார்க்க அங்கே அவளது தாய் ஆரத்தி தட்டுடன் நின்றிருந்தார். அவரைப் பார்த்த வதனாவுக்கு கோபம் வந்தது. தன் அருகில் நின்றவனை திரும்பிப் பார்க்க சூர்யா அவளருகில் வந்து மெதுவாக “இப்போ எதுவும் பேசாத வதனா அப்புறம் பேசலாம் பிளீஸ்” என்றான். வதனாவும் எதுவும் பேசாமல் இருக்க தங்கம்மா ஆரத்தியெடுத்தார். மூவரும் உள்ளே வந்தனர்.
hallல் எல்லோரும் கூடி இருந்தனர். வாசு சந்தனாவும்கூட இருந்தனர். குமார்தான் பேச ஆரம்பித்தார்.
“சூர்யா ஆதிக்கு எங்கள introduce பண்ணி வைப்பா”
“ஏன்பா நீங்களே சொல்லிருக்கலாமே”
“உன் பையன்தான் அப்பாதான் உறவுகளை அறிமுகப்படுத்தணும் அதுதான் அப்பாவுக்கு மரியாதைனு சொன்னான்.”
தன்மகனை உச்சிமுகர்ந்த சூர்யா அனைவரையும் அறிமுகப்படுத்தினான். ஆதியும் புன்னகையுடன் அனைத்தையும் கேட்டபடி இருந்தான். வதனா குனிந்த தலை நிமிராமல் இருந்தாள்.
சுந்தரம் அனைவரிடமும் மன்னிப்புக் கேட்டார். (சூர்யாதான் அவரிடம் நடந்தவற்றை சொல்லி வதனா கிடைத்தவுடன் அவரை வரச்சொல்லியிருந்தான். அந்த சமயத்தில் accident நடந்ததால் இன்று அவர்களை கமலேஷ் மூலம் அழைத்திருந்தான்.)
வதனாவிடம் மன்னிப்பு கேட்க வர வதனா எதுவும் பேசாமல் இருந்தாள். சூர்யாக்கு அவளது நிலை புரிந்தது. அதனால் நிலமையை மாற்றும் பொருட்டு “அம்மா நாங்க freshஆகிட்டு வர்றம் சாப்பிடலாம். வாசு நீங்க எங்ககூட கொஞ்சநாளைக்கு இங்க தங்கிக்கோங்க “என்றான்.
ஆதி தீராவுடன் விளையாடச் சென்றான். அனைவரும் தங்கள் அறைக்குள் செல்ல வதனா hallல் நின்றிருந்தாள். அதைப் பார்த்த சூர்யா
“வதனா என்கூட வா” என அழைத்துச் சென்றான். அவன் ஸ்ரெயின் பண்ணக்கூடாதென்று கீழே இருந்த அறையில் கமலேஷ் தங்கச்சொன்னான். அவ் அறைக்குத்தான் வதனாவை அழைத்துச் சென்றான். வதனா பயத்துடனே சென்றாள்.
“உள்ள போய் குளிச்சிட்டு வா” என்றவன் கட்டிலில் அமர்ந்தான். சிறிது நேரத்தில் வெளியே வந்த வதனாவை கண்டுகொள்ளாமல் தானும் சென்று குளித்துவிட்டு வந்தவன் எதுவும் பேசாமல் வெளியே செல்ல வதனாவும் பின்னால் வந்தாள்.
அனைவரும் வந்ததும் சாப்பிட அமர்ந்தனர். சூர்யா அருகில் ஆதியும் ஆதிக்கு அருகில் வதனாவும் இருந்தனர். ஆதி சூர்யாவுக்கு பிடித்த உணவையே அவனைப்போலவே சாப்டான்.
“வதனா ஆதி சூர்யாக்கு பிடிச்சதையே சாப்டுவானாமா?”
“ஆதி அவங்க அப்பா போலத்தான் அத்தை” வந்ததிற்கு இப்போதுதான் பேசினாள்.
சூர்யா ஆதிக்கு ஊட்டிவிட ஆதியும் சூர்யாக்கு ஊட்டிவிட்டான். அனைவரும் சகஜமாக பேசிக்கொண்டு சாப்டனர். வதனா சூர்யா, தாய் தந்தை ,கீர்த்தி இவர்களைத் தவிர்த்து ஏனையோருடன் பேசினாள்.
சாப்டு முடிந்ததும் பெரியவர்கள் தூங்கச் செல்ல கீர்த்தி போன் பேசச் சென்றாள். ஏனையோர் தோட்டத்திற்குச் சென்றனர்.
தீரா வதனா மடியிலிருந்துகொண்டாள். ஆதி தந்தையின் அருகிலிருந்து அவனது கையை பிடித்தபடி இருந்தான். பழைய விசயங்களைப் பேசாமல் வேறு விசயங்களைப் பேசிக்கொண்டிருந்தனர். சிறிது நேரம் சென்றதும் சூர்யாவின் தோள் பாரமானது.
அது என்னவென்று பார்க்காமலே உணர்ந்த சூர்யா சிரித்தான். ஆம் அவனின் கண்ணம்மா தோளில் சாய்ந்து தூங்கிக்கொண்டிருந்தாள்.
(இவர்களது பேச்சைக் கேட்டபடி இருந்த வதனாவுக்கு இன்று தானாகவே தூக்கம் வந்தது. அது தன்னவனிடம் வந்து சேர்ந்ததாலோ என்னவோ தெரியவில்லை. தூங்கிவிட்டாள்)
“சூர்யா வதனா இன்னும் மாறவே இல்லடா”
“ஆமாடா”
“ஆனா ஏன் சூர்யா வதனா நம்மள விட்டு போனா?”
“தெரியலடா பட் யாரும் பழைசைப் பற்றி அவகிட்ட பேசவே கூடாது கமலேஷ்”
“சரிடா மச்சான்”
“வாசு நீங்க எப்போ வதனாவப் பார்த்தீங்க?”
வாசு நடந்தவற்றைக் கூறினான். அப்போதுதான் சூர்யாவுக்கு அன்று ரெயில்வே ஸ்டேஷனில் ஏதோ தன்னைவிட்டுப்போவதைப் போல் இருந்தது ஏனென்று.
“அண்ணா எனக்கு ஆதிய முதல்தடவை பார்த்த போதே ஏதோ feelலாச்சுணா”
“sir வதனா ரொம்ப பாவம். வீட்ல சில நேரங்கள்ல அப்பிடியே தன்னை மறந்து இருந்திருவா. எனக்கு ஏன் அப்டி இருக்கானு தெரியாது ஒருநாள் அவ அப்டி இருக்கும் போது நான் அவள கூப்டபோக ஆதிதான் “மாமா அம்மாவ டிஸ்ரப் பண்ண வேணாம். அவங்க அப்பாவ நெனைச்சிட்டு இருக்காங்கனு சொன்னான்.”
“இப்பிடி வதனா இருக்க என்ன காரணம்னு பாரு சூர்யா”
“சரிடா”
“அப்பா”
“என்னடா கண்ணா?”
“பனியா இருக்குப்பா உள்ள போலாமா?”
“ஏன் ஆதி உனக்கு பனி ஒத்துக்காதா?”
“எனக்கு இல்ல மாமா அப்பாவுக்கு ஒத்துக்காது”
“என்ன சூர்யாவுக்கு பனி ஒத்துக்காதா? உண்மையா சூர்யா?”
“ஆமாடா மச்சான். ஆதி உனக்கு எப்பிடி தெரியும்?”
“அம்மா சொல்லிருக்கங்க பா”
” ஆதி”
“மாமா”
“அப்பாவப் பத்தி வேற என்ன சொல்லிருக்காங்க அம்மா?”
“அப்பா தொம்ப நல்லவதாம். கோபம் கொஞ்சம் வதுமாம். தப்பு பண்தது பிதிக்காதாம். அப்பா யாதுக்கித்தையுமே தோத்தது இல்லையாம். நான் அப்பாவப் போலவே இதுக்கணுமாம் ஆனா அப்பாகித்த மத்தும் தோத்துப் போகலாமாம். அப்பா கண்திப்பா நம்மள கூத்தித்துப் போக வதுவாதுனு சொல்லுவாங்க. அப்பாக்கு பிதிச்சது பிதிக்காதது எல்லாம் சொன்னாங்க.” என்றான் பெருமையாக.
அனைவரும் ஆதி சொன்னதைக் கேட்டு உறைந்திருந்தனர். பின் தேவிக்கும் பனி நல்லதல்ல என்பதால் அனைவரும் உள்ளே செல்ல எழுந்தனர். சூர்யா ” நீங்க போங்க நான் கொஞ்சம் நேரமானபிறகு வர்றன்”
அவர்களும் மறுப்பேதும் சொல்லாமல் சென்றனர். ஆதியை தீராவுடன் தூங்கச் சொன்னான். ஆதியும் சரிப்பானு சொல்லிட்டு போனான்.
அனைவரும் சென்றபின் தன்னவளை தோளிலிருந்து மடியில் சாய்த்துக்கொண்டான். நிலவொளியில் அழகாக தெரிந்த மனைவியை பார்த்து ரசித்தான்.
“ஏன் கண்ணம்மா என்னவிட்டு போன? நான் உன்ன தேடி வருவனு எதிர்பார்த்தியாடாமா? ” என பார்வையால் அவளை வருடினான். “இப்பிடி மெலிஞ்சிபோயிட்டியேடி” என்றவன் அவளை லேசாக அணைத்து நெற்றியில் முத்தமிட்டான்.
அவனது முத்தத்தில் “மாமா ” என்றாள். தன்னை மறந்து சூர்யா “கண்ணம்மா” என்று சொல்ல ” மாமா சீக்கிரமா எங்கிட்ட வந்திரு மாமா நீ இல்லாம கஸ்ரமா இருக்கு மாமா. ஆதி அப்பா இல்லாம இருக்ககூடாது மாமா. ஏன் மாமா என்ன தேடி இன்னும் வரல. ” என தூக்கத்தில் புலம்பினாள். இதைக் கேட்ட சூர்யாவுக்கு கண்ணீர்வர துடைத்துக்கொண்டு மேலும் ஒரு முத்தத்தை தன்னவளுக்கு வழங்கினான்.
விக்கியின் வீட்டில்…………….
காளி சொன்ன தகவலைக் கேட்டு கோபத்தில் வீட்டிலுள்ள பொருட்களை எல்லாம் உடைத்துக்கொண்டிருந்தான் விக்கி.
காளி சூர்யா பிழைத்ததையும் வதனா சூர்யாவின் மனைவி என்பதையும் விக்கியிடம் கூறியதாலே விக்கிக்கு இவ்வளவு கோபம்.
“உன்ன விடமாட்டன் சூர்யா. உனக்கு என் கையாலதான் சாவு. உன்ன கொன்னுட்டு வதனாவ சொந்தமாக்கிக்கிறன் சூர்யா” என சூளுரைத்தான் விக்கி. பின் காளியை அழைத்து சில விசயங்களை கூறிவிட்டு தனதறைக்குச் சென்றான்.
தேவி வீட்டில்………..
வதனாவை மடியில் வைத்துக்கொண்டிருந்த சூர்யாவுக்கு கால்கள் வலிக்கத் தொடங்கியது. அதனால் கால்களை லேசாக அசைத்தான் சூர்யா. அவ் அசைவிலே எழுந்த வதனா பார்த்தது தன்னருகிலிருக்கும் தன்னவன் முகத்தையே. சில நொடிகளில் எழுந்தவள் பயத்துடன் நின்றாள். எங்கே கோபத்தில் அடித்துவிடுவானோ என்று.
சூர்யா எதுவும் சொல்லாமல் உள்ளே செல்ல வதனாவும் பின்னாடியே சென்றாள். சூர்யா அறைக்குள் வந்ததும் அருகில் இருந்த அறையைக் காட்டி அங்கே வதனாவைத் தூங்கச் சொன்னான்.
வதனா அவனை ஒருவித வலியுடன் அவனைப் பார்க்க சூர்யாவோ எதுவும் பேசாமல் கட்டிலில் சென்று படுத்தான். வதனா அவனை பார்த்துவிட்டு பக்கத்து அறைக்குள் சென்றாள்.
ஆதி தீரா அறையில் தூங்கியதால் தனியாக இருந்த வதனாவுக்கு சூர்யா தன்னை விட்டு விலகியே இருப்பது வலித்தது. அதை நினைத்து அழுதழு இருந்தவள் அப்பிடியே தூங்கினாள்.
காலையில் அனைவரும் எழுந்து தங்களது வேலைகளைப் பார்த்தனர். வதனா இன்னும் எழும்பவில்லை. தனது அறையிலிருந்து வந்தவன்.
“அம்மா காப்பி”
“சூர்யா வதனா இன்னும் எழும்பலயாபா?”
“தெரியலமா அவ றூம்ல பாருங்க அம்மா”
“என்னப்பா சொல்ற உங்கூட இல்லையா?”
“இல்லமா “
“மதி நீ போய் வதனாவைப் பாருமா தேவி சூர்யாவுக்கு காப்பி எடுத்து வா”
மதி வதனாவை எழுப்பச் செல்லும் போதே வதனா எழுந்து வந்தாள். வந்தவள் சுவாமியறைக்குச் சென்று தாலியில் குங்குமம் வைத்துவிட்டு கைகூப்பி நின்று கடவுளை வணங்கினாள். கண் திறந்த வதனா பார்த்தது சூர்யாவைத் தான்.
அங்கிருந்த குங்குமத்தை எடுத்து வகிட்டில் வைத்த சூர்யா ஹால்க்குள் சென்றவன் தேவி கொடுத்த காப்பியைக் குடித்தான். பின் தன் தந்தையிடம் அவன் சொன்ன செய்தியில் அனைவரும் சூர்யாவை அதிர்ச்சியாகப் பார்த்தனர்…..
சூர்யா என்ன சொன்னான்????
காத்திருப்புத் தொடரும்………