புடவை எடுக்க வந்திருக்கும் துணிக் கடையின் முன்னால் வந்து நின்ற தீஷிதனின் காரைப் பார்த்த துணிக்கடையின் முதலாளி வேகமாக பதறி அடித்துக் கொண்டு வெளியே ஓடி வந்தார். தீஷிதன் முன்னால் கிட்டத்தட்ட மண்டியிட்டவாறு குனிந்து வணக்கம் போட்டார்.
“சார் நீங்களா எங்க கடைக்கு வந்திருக்கிறீங்க.. என்னால நம்பவே முடியவில்லை சார்… உள்ள வாங்க சார்….” என்று கும்பிடு போட்டு உள்ளே அழைத்துச் சென்றார். அவருக்கு சிறு தலையசைப்பை மாத்திரம் கொடுத்துவிட்டு நடந்த தீஷிதனை பார்த்த சம்யுக்தா அவன் பின்னாடி செல்ல, அவனோ அவளது கையை தனது வலிமையான கையினால் பிடித்துக் கொண்டு சென்றாள். அவர்கள் முன்னே செல்ல மதுரா, புகழ், வித்யா மூவரும் பின்னால் சென்றனர்.
“சார் என்ன பார்க்கலாம்னு சொல்லுங்க….” என்றார் கடை முதலாளி.
“கல்யாணத்துக்கு புடவை எடுக்கணும்…” என்றான்.
“அதோ அந்தப்பக்கம் இருக்கிறது விஐபிகளின் ஃபங்ஷனுக்குனு இருக்கிற ட்ரெஸ் அங்க போகலாம்….” என்றவர் அந்த இடத்திற்கு அவர்களை அழைத்து வந்தார்.
அங்கிருந்த பணியாட்களிடம், “சார் கேக்கிற புடவையை எடுத்துக் காட்டுங்க… சார் நீங்க பார்த்திட்டு இருங்க நான் இப்போ வந்திடுறன்…”என்று அங்கிருந்து சென்றுவிட்டார்.
மதுராவும் வித்யாவும், “எங்களுக்கு புடவை எல்லாம் வேண்டாம்… லெகேங்கா எடுத்துக்கிறம்… நீங்க ரெண்டு பேரும் சேர்ந்து புடவை எடுங்க…” என்று சொல்லிவிட்டு புகழை அழைத்துக் கொண்டு லெகேங்கா எடுக்க சென்று விட்டனர்.
சம்யுக்தா குனிந்த தலை நிமிராமல் அமர்ந்திருந்தாள். அவளைப் பார்த்த தீக்ஷிதன், “யுக்தா இப்பிடி நிலத்தையே பார்த்திட்டு இருந்தா எப்படி புடவை எடுக்கிறது? கொஞ்சம் நிமிர்ந்து புடவையை பாரு…” என்றதும் சம்யுக்தா நிமிர்ந்து அமர்ந்தாள்.
அங்கிருந்த சேல்ஸ் கேர்ள்ஸ், “இங்க பாருடி பார்க்க ஹாலிவுட் நடிகர் மாதிரி எவ்வளவு அழகா இருக்கிறாரு…. இவரு ஏன் இப்படி குண்டா பார்க்க சிலிண்டர் மாதிரி இருக்கிற இந்த பொண்ணை கல்யாணம் பண்ணிக்க போறாரு?” என்று ஒருத்தி சொல்ல, மற்றவளோ, “ஆமாடி என்ன சொல்றதுனே தெரியலை… சரி விடு நமக்கு எதுக்கு பெரிய இடத்து விஷயம்… நம்மளோடநம்மளோட வேலையை பார்ப்போம்…” என்றாள். இவர்கள் பேசியது தீஷிதனுக்கும் சம்யுக்தாவிற்கும் நன்றாக கேட்டது. கோபத்தில் கையை முறுக்கி கொண்டு எழச்சென்ற தீஷிதனின் கையைப் பிடித்துக் கொண்ட சம்யுக்தா, “வேண்டாம்…” என்று தனது கலங்கிய கண்களால் அவனிடம் கூற, அவனும் கண்களை மூடித்திறந்து தனது கோபத்தை அடக்கிக் கொண்டவன், அவர்களுக்கு வேறு மாதிரி தண்டனை கொடுக்க நினைத்தான்.
அவர்கள் ஒவ்வொரு புடவையாக எடுத்துக் காட்ட, “நோ இது நல்லா இல்லை… இந்தஇந்த கலர் நல்லா இல்லை… பார்டர் நல்லா இல்லை… பெரிய பார்டர் இல்லையா… அதை எடுங்க…. இது வேண்டாம்…” என்று அவர்கள் எடுத்துக் காட்டிய கண்களை கவரும் அழகிய புடவைகள் எல்லாவற்றையும் வேண்டாம், நல்லாவே இல்லை என்று சொல்லி நிராகரித்தான். அவர்கள் இருவரும் இவனுக்கு புடவையை காட்டி களைத்து விட்டனர். சம்யுக்தாவிற்கு அவனது இந்த செயலுக்கான காரணம் புரிந்து விட்டது. அவர்களை நினைத்து பாவப்பட்டவள், அவர்கள் காட்டிய புடவை ஒன்றை எடுத்து, “இது ரொம்ப நல்லா இருக்குங்க…” என்றாள்.
அவளையே பார்த்த தீக்ஷிதன் சிரித்துக் கொண்டு, “யுக்தா பேபி… நீ என்ன இவ்ளோ குறைவான விலையில புடவை எடுத்திருக்க? உனக்கு நான் ரொம்ப காஸ்ட்லியான புடவை எடுக்கலாம்னு இருக்கிறன்…”என்றான்.
அங்கிருந்த சேல்ஸ் கேர்ள்ஸைப் பார்த்தவன், “நீங்க இங்க இருந்து போயிட்டு வேற சேல்ஸ் கேர்ள்ஸை அனுப்புங்க….” என்றான். அவர்களும் விட்டா போதும்டா சாமி என்று நினைத்துக் கொண்டு உடனே அங்கிருந்து ஓடி விட்டனர்.
அங்கே வந்தனர் வேறு இரண்டு பெண்கள். அவர்கள் முகத் அனுபவம் தெரிந்தது. அவர்கள் ஒவ்வொரு புடவையாக எடுத்து அதைப் பற்றி சொல்லியவாறு எடுத்துக் காட்டினார்கள். அதுமட்டுமல்லாது சம்யுக்தாவைப் பார்த்து, “அம்மாடி இதை எடுத்துக்கோ உன்னோட நிறத்துக்கு அழகா இருக்கும்…” என்று சொல்லியவாறு இருந்தனர்.
அப்போது தீஷிதனுக்கு கால் வர, அதை எடுத்துப் பார்த்தான். முக்கியமான கால், அதனால் சம்யுக்தாவிடம், “பேபி நீ புடவையை பாரு டூ மினிட்ஸ்ல வந்திர்றன்…” என்றவாறு போனை எடுத்துக் கொண்டு திரும்ப, அங்கே பிரகாஷ் அவனின் இரண்டாவது மனைவி சீமாவுடன் வந்து கொண்டிருந்தான். அதைப் பார்த்த தீக்ஷிதன் போனில் இருந்தவரிடம், “கொஞ்சம் பிஸியாக இருக்கேன்… லேலேட்டா கால் பண்றன்….” என்று சொல்லிவிட்டு போனை வைத்து விட்டு மீண்டும் சம்யுக்தா அருகில் அமர்ந்தவன், அங்கிருந்த புடவையில் அவனுக்கு பிடித்த ஒன்றை எடுத்து சம்யுக்தா மீது வைத்துப் பார்த்தான்.
“வாவ் பேபி இது சூப்பரா இருக்கு நம்மளோட வெடிங்ல எல்லோரும் உன்னைப் பார்த்து அசர போறாங்க யுக்தா பேபி…” என்றான். தீக்ஷிதன் குரலைக் கேட்ட பிரகாஷ் திரும்பிப் பார்க்க, அவனுடன் சம்யுக்தாவும் இருப்பது தெரிந்தது. உடனே தன்னருகில் இருந்து புடவை பார்த்துக் கொண்டு இருந்த சீமாவிடம், “இங்க பாரு சீமா… அந்த தீஷிதனும் சம்யுக்தாவும் வந்திருக்கிறாங்க…”என்றான். அவன் காட்டிய திசையில் பார்த்த சீமா சம்யுக்தாவைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தாள்.
“என்ன பிரகாஷ் இந்த சம்யுக்தா இப்பிடி இருக்கிறா? பார்க்க ஆளே மாறிட்டா… ஆனால் அவளோட பூசிப்போன சிலிண்டர் உடம்பு மட்டும் குறையவே இல்லை போல…”என்று கேலி செய்தவள் காதில் வந்தது விழுந்தது தீஷிதன் சொன்னது.
“என்னோட பேபிக்கு 5 லக்ஸ்க்கு புடவை எடுத்துக் காட்டுங்க…” என்று சொன்னதைக் கேட்ட சம்யுக்தா, “ஐயோ எதுக்குங்க அவ்வளவு காஸ்ட்லியா.. அதெல்லாம் வேணாம்ங்க…” என்றாள். ஆனால் தீஷிதன் குறைந்த விலையில் எடுக்க முடியாதுனு சொல்லி விட்டான்.
இங்கே பிரகாஷிடம், “பிரகாஷ் இங்க பாருங்க எனக்கும் ரொம்ப காஸ்ட்லியான புடவை எடுத்துக் கொடுங்க…” என்றாள்.
“எதுக்காக அந்த வீணாப்போனவ காஸ்ட்லியான புடவை கட்டும் போது நான் மட்டும் எந்த விதத்துல குறைஞ்சிட்டேன்?” என்றாள்.
பிரகாஷிற்கு கோபம் வந்தாலும் அதை அடக்கிக் கொண்டு சீமா கேட்ட விலையிலேயே புடவையை காட்டச் சொன்னான். சீமா புடவையை பார்த்துக் கொண்டு இருக்க, பிரகாஷின் கண்களோ அடிக்கடி சம்யுக்தாவின் பக்கம் சென்று வந்தது.
“பேபி இது உனக்கு ரொம்ப ரொம்ப சூப்பரா இருக்கு…” என்று அழகிய புடவை ஒன்றை எடுத்து சம்யுக்தாவின் மீது வைத்துப் பார்த்தான். சம்யுக்தாவிற்கும் அந்த புடவையை பிடித்துள்ளதை அவளது விரிந்த கண்களின் மூலம் அறிந்து கொண்ட தீஷிதன் அதையே செலக்ட் பண்ணினான்.
“சரி போலாமாங்க?” என்று கேட்க,
“இரு பேபி கல்யாணத்துக்குதானே புடவை எடுத்திருக்கிறம்… இனஇன்னும் மற்ற சடங்கு, ரிஷெப்ஷன் எல்லாத்துக்கும் எடுக்கணும்ல….” என்றவன், மேலும் பல புடவைகளை சம்யுக்தாவிற்கு எடுத்து அதை பேக் பண்ண சொல்லிவிட்டு, எழுந்தான். இப்பவாவது முடிஞ்சிதே என்று பெருமூச்சு விட்டவாறு எழுந்தாள் சம்யுக்தா. அவளைப் பார்த்து சிரித்துக் கொண்டு, “என்ன யுக்தா பேபி இப்போவாவது விட்டானேனு பார்க்கிற…?” என்றவாறு அவளது தோளில் கையைப் போட்டவனை விழி விரித்துப் பார்த்தாள்.
“யுக்தா பேபி இப்படி எல்லாம் என்னைப் பார்த்த என்னால சும்மா இருக்க முடியாது….” என்றவன் அவள் காதில் ஏதோ சொல்ல அவளது முகம் சிவந்தது.
இருவரும் இப்படியே பேசிக் கொண்டு போனதைப் பார்த்த பிரகாஷின் தலையில் தட்டிய சீமா, “அங்க என்ன பார்வை… இங்க பாருங்க…” என்றாள்.
தீஷிதனும் சம்யுக்தாவும் லெகேங்கா இருக்கும் பகுதிக்கு வர, அங்கே புகழ் தலையில் கையை வைத்துக் கொண்டு உட்கார்ந்து இருந்தான்.
படிச்சிட்டு உங்களோட கருத்துக்களை சொல்லுங்க பட்டூஸ் 😊
Super divi