விடாமல் துரத்துராளே 10

4.6
(22)

பாகம் 10

தேவா தனக்கு ஹச் ஐ வி என்று சொல்லி விட்டு தனக்குள் எழுந்த சிரிப்பை அடக்கி கொண்டு அமர்ந்து இருந்தான்.

அதை கேட்ட தியாவிற்கு தான் பெரும் அதிர்ச்சி. அவளின் இதயமே துடிப்பதை ஒரு நொடி நிறுத்தியது… இப்படி ஒரு காரணம் இருக்கும் என அவள் எதிர்பார்க்கவில்லை. தன்னை அறியாமல் கண்கள் கண்ணீரை வெளி ஏற்றியது…

தேவாவிற்கு தியாவின் கண்ணீரை பார்த்து ஆச்சர்யமாக இருந்தது. அவன் இவ்வாறு கூறியதும் அவள் எழுந்து ஓடி விடுவாள் இனி தன்னை தொந்தரவு செய்ய மாட்டாள் என்று நினைத்து தான் விளையாட்டாக கூறினான். ஆனால் தியா அதை உண்மை என நினைத்து அவள் அழுவாள் என்று நினைக்கவில்லை.. தனக்காக இவள் கண்களில் ஏன் இந்த கண்ணீர் என்ன காரணம் என்று கேள்வி எழுந்தாலும் அமைதியாக இருந்தான்…

தியாவோ தேவா சொன்ன இந்த இரண்டு மூன்று நொடிகளுக்குள் கடவுளை திட்டி தீர்த்தாள்… பாவாவிற்கு ஏன் இப்படி என்று,

அப்போது பக்கத்து டேபிளில் இருந்து ஒரு சத்தம் வந்தது.‌ அங்கு இரு ஒரு குழந்தை தனது அண்ணனிடம் “டேய் பொய் சொல்லாத, நீ சொல்றது பொய் என்னை ஏமாத்த பார்க்குற” என்றது. அது தியா காதில் விழுந்தது…

பின்பு தான் உலகின் எட்டாவது அதிசயமாய் அவள் மூளை வேலை செய்தது. ஏன் அவன் பொய்யுரைத்து இருக்க கூடாதென்று,

“பாவா நீங்க பொய் தானே சொன்னீங்க.‌ அப்படி எல்லாம் எதுவும் இல்லைல… நீங்க என்னை ஏமாத்தறதுக்காக விளையாட்டா தானே சொன்னீங்க” என்று கேட்டாள்.. ஆம் பொய் தான் என்று கூறி விட மாட்டானா என்ற ஒரு வித தவிப்புடன்.

“ஏய் எனக்கு வேற வேலை இல்லை பாரு உன் கூட பொய் சொல்லி விளையாடிட்டு இருக்க பைத்தியம்” என்று தேவா திட்ட,

“இல்ல இல்ல நீங்க பொய் தான் சொல்றீங்க நான் நம்ப மாட்டேன்”..

“நீ கேட்ட கேள்விக்கு நான் பதில் சொல்லிட்டேன். அதுவே பெரிய விஷயம். எதோ நான் நல்ல மூட்ல இருந்ததால் சொன்னேன்.. அதை நீ நம்புறதும் நம்பாததும் உன் இஷ்டம்.. இனிமே என்னை தொந்தரவு பண்ணாத…ப்ராமிஸ் பண்ணிருக்க மீறினேன்னு வையேன் சாமி கண்ணை குத்துதோ இல்லையோ நான் குத்துவேன். மறுபடியும் எல்லா ஐட்டமும் ஆர்டர் பண்ணிட்டு போறேன் பாப்பா எல்லாத்தையும் நல்லா சாப்பிட்டு பத்திரமா வீட்டுக்கு போய் சேரு” என்று கூறி விட்டு எழுந்தான்.

தேவா எழுந்து திரும்ப அங்கே நடுத்தர வயது பெண்மணி ஒருவர் வந்து நின்றார்… அவர் அருகே தியா வயதை ஒட்டிய ஒரு இளம் பெண்ணும் இருந்தாள்.. அவர்களை பார்த்த தேவாவின் கண்கள் வேதனையும் குற்ற உணர்வையும் கொண்டது..

ஆனால் அவரோ தேவாவை எரிப்பது போல கோவமாக பார்த்து கொண்டு இருந்தார்.‌ “என்ன டாக்டர் தேவா ரொம்ப சந்தோஷமா இருக்கீங்க போல” என்று கேட்டார் பார்வையை தியா மேல் பதித்து, எந்த பதிலும் தேவா கூறவில்லை…

“நீ சந்தோஷமா தான் இருப்ப உனக்கு என்ன பிரச்சனை… நாங்க தான் உன்னால் எங்க பிள்ளையை இழந்துட்டு தினம் தினம் தவிச்சுட்டு இருக்கோம். வாழ வேண்டிய என் பிள்ளையை இப்படி பண்ணீட்டியே. உன்னை மாதிரி அயோக்கியனை எல்லாம் அந்த கடவுள் தண்டிக்கமா எப்படி ஜாலியா சுத்த விடுறாருன்னு தெரியலடா. பெத்த வயிறு பத்தி எரியுதடா. நீ நல்லாவே இருக்க மாட்டா. நாசமா தான் போவ. கல்யாணம் குடும்பம் புள்ளை குட்டின்னு எதுவும் அமையாது. அப்படியே அமைஞ்சாலும் பொண்டாட்டி புள்ளை எல்லாத்தையும் இழுந்திட்டு அநாதையா தான் நிப்ப என்றார். கடைசியாக கூறிய வார்த்தைகள் தியா வை பார்த்து தான் கூறினார்.

அவர் பேசுவதை கேட்ட தியாவிற்கு ‘யார் இவங்க ஏன் இப்படி பேசுறாங்க’ என்ற எண்ணமும் கோவமும் அவர்கள் மேல் வந்தது. என்ன பிரச்சனை என்று தெரியாமல் என்ன பேசுவது. தேவாவே அமைதியாக தான் நின்று இருந்தான்.. தியாவிற்கு தான் அவர் தேவாவை திட்டுவதை கேட்க முடியவில்லை. அவளுக்கு மிகவும் வலித்தது. தேவா எந்த உணர்வையும் காட்டாது அமைதியாக இருந்தான்.. அவரின் சத்தத்தில் கூட்டமே கூடி விட்டது..

மேலும் சில வார்த்தைகளால் தேவாவை அந்த பெண்மணி திட்ட அவரோட இருந்த மகளோ ம்மா வாங்க வாங்க என அழைக்க அந்த பெண்மணி கேட்பதாக இல்லை.. அந்த நேரம் அங்கு வந்த அவரின் கணவன் தேவாவை எரிப்பது போல் பார்த்து விட்டு “எல்லாரும் பார்க்குறாங்க வா” என்று தனது மனைவியை அழைத்து சென்றார்.

அவர்கள் சென்ற பின் தியா தேவாவின் முகம் பார்த்தால் இறுக்கமாக இருந்தது.. கண்களிலோ வேதனை அப்பட்டமாக தெரிந்தது..

“யாரு இவங்க ஏன் இப்புடி பேசுறாங்க” என்று தியா தேவாவின் தோள் மீது கை வைத்து பாவா என்க. அவன் அவள் கையை தட்டி விட்டு அங்கிருந்து வேகமாக சென்றான். பின்னால் தியா ஓடி சென்றும் கூட இந்த முறை தேவா காரை புயல் வேகத்தில் கிளப்பி சென்று இருந்தான்…

காரில் சென்ற அவன் மனமோ பழையதை நினைத்து பார்த்தது. இன்று சபிக்கும் இவர் ஒரு காலத்தில் எவ்வளவு அன்பாக பாசமாக தேவா என்று அழைப்பார். நடந்த கோர சம்பவம் அனைத்தையும் மாற்றி விட்டதே.‌ அவர் கூறியது போல் தன்னால் அவருக்கு இழப்பு ஏற்பட்டது உண்மை தான்..

ஆனால் திட்டமிட்டு தான் எதையும் செய்யவில்லை. நடந்த நிகழ்வுகளில் தனக்கு இழைக்கப்பட்ட துரோகம் ஒரு புறம் அவனை வதைக்கிறது என்றால் மறுபுறம் குற்ற உணர்ச்சி கொல்லாமல் கொல்கிறது. ஏதோதோ எண்ணங்களால் மனம் குழம்பியது போல் காரும் சீரற்ற வேகத்தில் சாலையில் பறந்தது…

தியா அடுத்து யமுனாவிடம் மீண்டேம் சிலபல பொய்களை சொல்லி விட்டு போய் நின்றது தேவா வீட்டின் முன்பு அவர்கள் குடும்பத்தினர் வசிக்கும் வீட்டு முன்பு தான்…

தேவாவை அந்த பெண்மணி என்ன என்ன வார்த்தைகளால் எல்லாம் பேசி சாபம் வேறு அளித்தாரே, எதற்காக அவர் இவ்வாறு பேசினார். என்னவாயிருக்கும் அப்படி என்ன தவறு செய்து இருப்பான் என்று சிந்தித்தவள். அது எதுவாக இருந்தாலும் அதற்காக இப்படியா பேச வேண்டும் என்று அந்த பெண்மணி மீது கோவம் எழுந்தது.. அது தனக்கே இவ்வளவு வருத்தத்தை அளித்தது என்றால் தேவா எவ்வளவு வேதனையில் இருப்பான். அங்கு இருந்து கிளம்பும் போது வேற அவ்வளவு வேகத்தில் சென்றானே, பத்திரமாக சென்று இருப்பானா, இப்போது என்ன மனநிலையில் இருப்பான். வேதனையான அவன் முகமே அவளின் நினைவுக்கு வர,

தேவாவை சந்தித்து அவன் எப்படி இருக்கிறான் என்று தெரிந்து கொள்ள வேண்டும் என்று தோன்றியது. ஆனால் அவன் தான் எங்கு இருக்கின்றான் என்று தெரியாது. அதனால் தான் இப்போது தேவா வீட்டின் முன்பு வந்து நிற்கிறாள்.

தேவா அன்னை மீனாட்சியிடம் எப்படியாவது பேசி தேவா இருப்பிடம் பற்றி தெரிந்து கொள்ள வேண்டுமென்று, வாசல் வரை வந்து விட்டாள் உள்ளே செல்ல தயக்கமாக இருந்தது. காரணம் இனியா ராகவ் இருவரும் வெளியூர் சென்று இருக்கின்றனர்..

இனியாவுக்கு திருமணமான இரண்டு நாளில் இங்கிருந்து சென்றவள் தான் அதன் பின்பு இந்த வீட்டுக்கு வரவில்லை. வரவில்லை என்பதை விட வர பிடிக்கவில்லை என்று தான் கூற வேண்டும்.. அன்று அவர்கள் தேவாவை நடத்திய விதத்தினால், தனது அக்காவை பார்க்க வேண்டும் என்று தோன்றினால் அவள் அலுவலகத்திற்கு சென்று பார்த்து கொள்வாள். இனியா இல்லாத நேரத்தில் உள்ளே சென்றால் என்ன காரணம் சொல்வது என்று தயக்கத்தில் நின்றாள்..

தேவா என்று வரும் போது தயக்கம் எல்லாம் தள்ளி போக எதையாவது கூறி சமாளிப்போம் என்றபடி உள்ளே சென்றாள். அங்கு மஞ்சுவை தவிர வேறு யாரும் எந்த கேள்வியும் கேட்கவில்லை. அவளிடம் பக்கத்தில் ஃப்ரெண்ட் வீட்டுக்கு வந்தேன் அப்படியே உங்களையும் பார்த்ததுண்டு போலாம் வந்தேன் என்றாள்..

மேலும் ஏதோ கேள்வி கேட்க வந்த மஞ்சுவை மீனாட்சி தான் “வீட்டுக்கு வந்த பிள்ளையை ஏன் இவ்வளோ கேள்வி கேட்கிற மஞ்சு” என்று கண்டித்தார்.. மீனாட்சியிடம் பேச தான் சென்றால் ஆனால் பேச முடியவில்லை. கருவாட்டு பானையை சுற்றும் பூனை போல் மஞ்சு தியா பின்னாலே வந்தாள். ஆனால் சென்றதற்கு ஒரு பலன் மஞ்சு மீனாட்சி இருவரும் அசந்த நேரம் மீனாட்சி போனில் இருந்து தேவ் கண்ணா என சேமித்து வைக்கப்ட்டு ஒரு நம்பர் இருக்க, நிச்சயம் அது தேவா நம்பர் தான் என எடுத்து விட்டாள்… அதன் பின்பு ஒரு நொடி கூட அங்கு இருக்கவில்லை டைம் ஆச்சு வீட்டுக்கு போறேன் என்று கிளம்பி விட்டாள்.

இதோ நம்பர் கிடைத்த நொடியில் இருந்து இப்போது வரை கை ரேகையே தேய்ந்து போகும் அளவுக்கு அவனுக்கு கால் செய்து பார்க்காறாள் அவன் எடுக்கவில்லை.பின்பு எண்ணற்ற மெசேஜை வாட்ஸ்அப்பில் அனுப்ப ஒன்று கூட இன்னும் அவனால் பார்க்கப்படவில்லை. அவனின் நிலை என்னவென்று தெரியாமல் வேதனை கொள்கிறாள்…

மேலே வந்த யமுனா “தியா சாப்பிட வாடா டாடி கூப்பிடுறாங்க” என அழைக்க,

“கொஞ்ச நேரமாகட்டும்மா என்றாள்..

அவளுக்கும் பசி தான்.. ஆனால் சாப்பிட போகும் நேரம் தேவா அழைத்து விட்டால் என்ன செய்வது,

மொபைலை கையில் வைத்து கொண்டு சென்றால் யமுனா திட்டுவார்..

தியா உனக்கு பிரச்சினை யமுனா அழுத்தமான குரலில் கேட்டார்..

ஒன்னுமில்லம்மா என்றவளை கையை கட்டி யமுனா ஒரு பார்வை பார்க்க,

 இதுக்கு மேல் முகத்தை இப்புடி வைத்து இருந்தால் யமுனா என்ன என்ன என கேட்டே விஷயத்தை அவள் வாயில் இருந்து கறந்து முதுகு தோலையும் உரித்து விடுவார் என்பது புரிய, சாப்பிட சென்றால்,

என்னவோ நிச்சயம் இருக்கின்றது யமுனா மனம் அடித்து சொன்னது.. இதற்கு மேல் தான் கேட்டு அழுத்தம் கொடுக்க கூடாது.. பெரிய மகளை விட்டு பேச வைக்க வேண்டும் என நினைத்து கொண்டவரும் கீழே சென்றார்…

இனியாவும் தியாவிடம் ஊருக்கு வந்த பின் நிச்சயமாக பேச வேண்டும் என்ற எண்ணத்தோடு தான் இருந்தாள்…

மஞ்சு அனுப்பிய போட்டோவை பார்த்தவளுக்கு அதிரிச்சி.. அது தங்கை தான் என அக்காகாரிக்கு தெரியாமல் போகுமா,

தேவாவோடு அமர்ந்து இருக்கும் ஒரே காரணத்திற்காக தங்கையை அந்த மஞ்சுவும் திவேஷும் என்ன பேச்சு பேசி விட்டார்கள், யார் என்று தெரியாமல் தான் பேசினார்கள் என எடுத்து கொள்ள முடியாது,

 தெரிந்தாலும் பேசுவார்கள்.. அவர்கள் இருவருக்கும் மற்ற எல்லாரையும் விட தேவா மீது பயங்கர கடுப்பு கருவாட்டுக்கு அலையும் மீன் போல தேவா விஷயம் எப்போதடா கிடைக்கும் மனதிலிருக்கும் வன்மத்தை கக்கலாம் என அலைபவர்களுக்கு அவலாக மாறி விட்டாளே இந்த பையத்தியகாரி இனியாவிற்கு தங்கை மீது கோவம் வந்தது..

அடுத்தவங்க தனிப்பட்ட விஷயத்தை போட்டோ எடுத்து அதை வைத்து கேலி கிண்டல் அடிக்குதுங்களே இங்கிதம் தெரியாத எருமைங்க.. மஞ்சு திவேஷை வறுத்து எடுத்தவள், இந்த மஞ்சுக்கு ஒரு நாள் நல்லா திருப்பி கொடுக்க வேண்டும் என்றும் நினைத்து கொண்டாள்..

அவசர அவசரமாக அள்ளி போட்டு விட்டு வந்த தியா மிஸ்டு காலில் இருக்கும் தன் எண்ணை பார்த்து விட்டு தனக்கு அழைப்பானா, இல்லை மெசேஜ்க்கு ரிப்ளை பண்ணுவா என்று தனது மொபைலின் டிஸ்பேளயை பார்த்து கொண்டு இருக்கிறாள். இரவு முழுவதும் தூங்காமல்,

இங்கு இவள் இப்படி இருக்க அங்கு தேவாவோ இன்று நடந்த நிகழ்வுகளால் பழைய கசப்பான நினைவுகள் வந்து அவனை தாக்க, அந்த நினைவை மறக்க, தன்னையே மறக்க குடித்து குடித்து உலகத்தையே மறந்தளவு கண்ணை திறக்க முடியாதளவு போதையில் நடுஹாலில் சைட் டிஷ்ஷாக வைத்து இருந்த மிக்சர் பாக்கெட் மீது இவன் கிடக்க, அவன் போன் எந்த மூலையிலோ கிடந்தது..‌.

மாலில் இருந்து அந்த பெண்மணியை வீட்டுக்கு அழைத்து சென்றார் அவர் கணவர்..

“கெளரி ஏன்மா இவ்வளோ டென்ஷன் ஆகுற, கொஞ்சம் அமைதியா இரு அழதா” என்றார் செந்தில்.

“அந்த தேவாவை பார்த்ததும் டென்ஷன் ஆகாம என்ன பண்றதுங்க. அவனை பாருங்க எவ்ளோ சந்தோஷமா இருக்கானு. ஆனா நம்ம பிள்ளை” என்றவருக்கு மேலும் பேச முடியவில்லை அழுகை தான் வந்தது.

“அவன் உயிரோடு இருக்கிறதை பார்க்க பார்க்க ஆத்திரமாக வருதுங்க. அவனும் சாகனும் என் பிள்ளை செத்தது போல் அவனும் சாகனும்ங்க. அப்ப தான் என் பிள்ளை ஆத்மா நிம்மதியா இருக்கும்” என்று சொல்லி கெளரி இன்னும் இன்னும் அழுதார்… அவர் பிள்ளையின் நினைவில்,

“நடக்கும் மா நீ சொல்றது நடக்கும் கவலைப்படாத” என்று கூறிய செந்தில் கண்களில் தேவா மீது அவ்வளவு வன்மம்.

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.6 / 5. Vote count: 22

No votes so far! Be the first to rate this post.

1 thought on “விடாமல் துரத்துராளே 10”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!