விடாமல் துரத்துராளே 11

4.6
(16)

விடாமல் துரத்துராளே 11

மறுநாள் காலை வேளை “டேய் எருமைமாடே எழுந்திரு என்ன இப்புடி நடுஹால்ல படுத்து இருக்க” என பாட்டில்கள் நடுவே மிக்சரில் முகத்தை வைத்து தூங்கி கொண்டு இருந்த தேவா முதுகிலே இரண்டு அடி போட்டான் சூர்யா…

அவன் அடித்த அடியிலும் போட்ட சத்தத்திலும் இரவு குடித்த போதையின் தாக்கம் இன்னும் இருந்தாலும் கஷ்டப்பட்டு கண் விழித்தான் தேவா…

“ குடிக்கார பக்கி இப்புடியா கண்ணு மண்ணு தெரியாம குடிப்பாங்க”.. என கன்னத்தில் ஒட்டி இருந்த மிக்சரை தட்டி விட்ட சூர்யா என்னாச்சு என கேட்க,

ஒன்னுமில்ல என தலை ஆட்டினான்..

மேலும் சூர்யா எதையும் அழுத்தி கேட்கவில்லை.. கேட்டாலும் தேவா சொல்ல மாட்டான்.. ஏதோ ஒன்று அவனை வருத்தப்படுத்தும் நிகழ்வு நடந்து இருக்கின்றது புரிந்தது..

அதோடு அதை விட முக்கியமான் ஒரு நிகழ்வை பற்றி கேட்க வந்து இருக்கும் போது,

இந்த கசப்பான விஷயத்தை நியாபகபடுத்த வேண்டாம் என நினைத்து அமைதியாக இருந்தான் தேவா..

மஞ்சு நேற்று மாலில் எடுத்த போட்டோவை பாரு உன் ஃப்ரெண்ட்டோட லட்சணத்தை என்ற வாசகத்தோடு சூர்யாவுக்கும் அனுப்பி இருக்க,

“உனக்கு வேற வேலையே இல்லையா, எப்ப பாரு அவன் என்ன பண்றான்னு நோட்டம் விட்டுட்டு தான் இருப்பியா,இன்னோரு தடவை இந்த மாதிரி பண்ணுனே அவ்வளவு தான் அக்கான்னு எல்லாம் பார்க்க மாட்டேன்” என மஞ்சுவை திட்டி விட்டு,

அவள் அனுப்பிய புகைப்படத்தை பார்த்த சூர்யாவிற்கு குழப்பமும் மகிழ்ச்சியும் ஒரு சேர வந்தது… ஏனெனில் தேவா பெண்களுடன் பழகுகிறான் தான். ஆனால் அது எல்லாம் இரவு மட்டுமே. மற்றபடி எந்த பெண்ணையும் வெளியே கூட்டி கொண்டு சுற்றுவது எல்லாம் இல்லை… அப்படி இருக்கையில் ஒரு பெண்ணுடன் அமர்ந்து பேசுகிறான் என்றால்,

 அந்த பெண் யாராக இருக்கும் என்னவாக இருக்கும் ஒரு வேளை அப்புடி இருக்குமோ அதற்கு வாய்ப்பு இல்லை என்றாலும் இருந்து விட்டால் நப்பாசை தோன்ற அதை பற்றி கேட்க ஓடி வந்து விட்டான்…

“ சரி நீ போய் முகத்தை வாஸ் பண்ணிட்டு வா நான் ஸ்ட்ராங்கா நீ போட்டுட்டு வரேன்” என தேவாவை அனுப்பிய சூர்யா டீ போட்டப்படியே ஹால்லை சுத்தம் செய்ய,

“டேய் நீ எதுக்கு இது எல்லாம் பண்ற, நான் வந்து பார்த்துக்க மாட்டான்னா” என சூர்யா சுத்தம் செய்வதை பார்த்து கோபப்பட,

“ஏன் இப்ப நான் பண்ணதால் உனக்கு எங்க குறைஞ்சு போயிருச்சு” என கடிந்த சூர்யா ஒரு கோப்பை அவன் கையில் திணித்து விட்டு அவனும் ஒரு கப்போடு அமர்ந்தான்..

இருவரும் சில கதைகள் பேசியபடி டீயை அருந்த,

“யார்டா அந்த பொண்ணு” சூர்யா கேட்க,

“புண்ணா” தேவா குழப்பமாக பார்க்க,

“புண் இல்லடா பொண்ணு பொண்ணு”,

“என்ன பொண்ணு”?

“அதை தான் நானும் கேட்கிறேன் என்ன பொண்ணு? யார் பொண்ணு?”

“டேய் நாயே குடிச்சது நானா இல்லை நீயா ஏன் இப்புடி உளறிட்டு இருக்க” என கோவம் பட்டவன் முன்பு சூர்யா மஞ்சு அனுப்பிய போட்டோவை காட்ட,

இதை யார் அனுப்பியது என கேள்வியாக சூர்யா முகத்தை தேவா கோவமாக பார்க்க,

“மஞ்சு” என்றான் சூர்யா..

“உன் அக்காவுக்கு வேற வேலையே இல்லையா” தேவா கோவப்பட,

“மஞ்சுவை விடு அப்புறம் பார்த்துக்கலாம்” யார் இது? என்ன விஷயம்? அதை பர்ஸ்ட் சொல்லு” என கேட்டான் சூர்யா ஆர்வமாக போட்டோவில் இருந்த தியாவை காண்பித்து,

சூர்யா முகத்தில் இருந்த பாவனையை வைத்தே அவன் என்ன நினைத்து இதை கேட்கிறான் என்பதை புரிந்த தேவா, “டேய் நீ எதிர்பார்க்கிற மாதிரி எல்லாம் ஒரு விஷயமும் இல்லை, அது ராகவோட மச்சினிச்சி சின்ன பொண்ணு” என்றான்..

“ஓ… ராகவோட மச்சினியா? நீ தான் அவன் மேரேஜ் போகவே இல்லையே, அப்புறம் எப்படி பார்த்த, எப்ப பேசுன, அதுக்குள்ள தனியா மீட் பண்ற அளவுக்கு வந்தாச்சா. ..அப்படி என்ன பேசுனீங்க” என ஆர்வமாக புருவம் உயர்த்தி கேட்டான் சூர்யா…

“இப்ப நீ என்கிட்ட அடிவாங்கி சாக போற… ஒரு விஷயமும் இல்லைன்னு சொல்றேன்ல” என்றான் எரிச்சலாக,

“சரி சரி கோவப்படாத யார் கூடவும் பேச மாட்டியே. இந்த பொண்ணு கூட பேசி இருக்கியே. அதான் சம்திங் ஏதோ ஸ்பெஷல்ன்னு நினைச்சு கேட்டேன்”…

அவனை முறைத்த தேவா “ஒரு மண்ணாங்கட்டியும் இல்ல… இந்த மாதிரி இன்னோரு தடவை நீ பேச கூடாது.. ஏன் நினைக்க கூட கூடாது… அது ரொம்ப சின்ன பொண்ணு… அதை விட சரியான இரிட்டேங் கேரெக்டர்…. உன்னை மாதிரியே அதுவும் ஒரு அரமெண்டல்… பேச ஆரம்பிச்சா நிறுத்தவே மாட்டா… அதனால் எனக்கு பிடிக்காது… சுத்தமா பிடிக்கவே பிடிக்காது போதுமா”…

“அப்ப ஒன்னுமில்லையா” சூர்யா சோகமாக கேட்க,,

“ஏன் இல்லை? இருக்கே” தேவா சொல்ல,

இருக்கா சூர்யா ஆர்வமாக தேவா அருகே வர,

“ஆமா செருப்பு இருக்கு, அது பிய்ய பிய்ய உனக்கு அடியும் இருக்கு, அது சின்ன பொண்ணு இந்த மாதிரி பேசாதன்னு எத்தனை தடவை சொல்றது, இனிமே இந்த மாதிரி பேசுன அவ்வளவு தான்” என எச்சரித்து விட்டு,

தனது மொபைலை கையில் எடுத்தான். இரவு அணைத்து வைத்து இருந்தவன்.. இப்போது ஆன் செய்ய, ஒரே எண்ணில் இருந்து பல அழைப்புகள் வந்து இருக்க யாராக இருக்கும் என்று தனது நெற்றி நீவி யோசித்தவன், யாராக இருந்தால் என்ன திரும்ப அழைத்தால் பேசி கொள்ளலாம் என்று அலட்சியமாக எண்ணி கொண்டு, அடுத்து நெட்டை ஆன் செய்ய, அவனது மொபைலே ஹேங் ஆகும் அளவு டொக் டொக் என்ற சத்தத்துடன் மெசேஜ்கள் வந்து குவிந்தது, சூர்யாவே கிட்ட வந்து பார்த்தான். குறைந்த பட்சம் நூறுக்கு மேற்பட்ட மெசேஜ்கள் வந்துதற்கான நோட்டிபிகேஷன்

“இடியட் யார் இது” என்று எரிச்சலாக ஓபன் செய்து பார்க்க அது திரவியா என்பது தெரிந்தது. “பைத்தியம் பைத்தியம், இடியட்” என்று தேவா திட்ட, அவன் கையில் இருந்த மொபலை வாங்கி அதில் இருந்த மெசேஜை சத்தமாக படித்தான் சூர்யா…

“பாவா ஆர்.யூ ஆல்ரைட்”?

“பாவா ஃஷேப்பா வீட்டுக்கு போய்டிங்களா”?

“பாவா சாப்டிங்களா”?

“பாவா நான் தான் ஏன் ரிப்ளை பண்ண மாட்டேங்றீங்க”,

“உங்களுக்கு ஒன்னும் இல்லையே” என வரிசையாக மெசேஜ்..

“என்னடா ஒரு விஷயமும் இல்லைன்னு சொன்ன பார்த்தா ஐநூறு விஷயம் இருக்கும் போலயே பாவா” என்று சிரிக்க ஆரம்பித்தான் சூர்யா…

அவனை தீயாய் முறைத்த தேவா அவன் கையில் இருந்த தனது மொபைலை வாங்கி தியாவிற்கு ஏதோ மெசேஜ் வேகமாக டைப் செய்ய.

இரவு முழுவதும் தூங்கமால் தேவா தான் அனுப்பிய மெசேஜை பார்த்தானா என்று மொபைலையே பாராத்து கொண்டு சோர்ந்து போய் அமர்ந்து இருந்த தியா. அவன் மெசேஜை பார்த்தற்கு அடையாளமாக இரண்டு நீல நிற கோடுகள் தெரிந்தது மட்டும் இன்றி அவன் ஏதோ ரிப்ளை செய்ய டைப் செய்கிறான் என்பது தெரிய, 

என்ன அனுப்ப போகிறான் என ஆர்வத்தோடு இமை கொட்டாது தியா மொபைலையே பார்த்து இருக்க,

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.6 / 5. Vote count: 16

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!