அவள் பக்கத்தில் ஏற்கெனவே அடி வாங்கி விழுந்திருந்த சூர்யாவுக்கு தியாவின் முகத்தில் வலியின் சாயல் தெரிய தேவா மீது பயங்கர கோவம் எழுந்தது அந்த பாசக்கார அண்ணனுக்கு..
சூர்யாவிற்கும் தியாவிற்கும் தேவாவை வைத்து தான் பழக்கம் ஆனது. ஆனால் இந்த குறுகிய காலத்திலே இருவரும் பாசமலரில் ஆரம்பித்து நம்ம வீட்டு பிள்ளை படத்தில் வரும் அண்ணன் தங்கச்சியை மிஞ்சும் அளவுக்கு அப்படியோரு பாசம் இருவருக்குள்ளும், சூர்யா தியாவை பாப்பு என்றும் தியா சூர்யாவை டேய் அண்ணா என்று அழைக்கும் அளவு ஒரு பாசம்..
கோவமாக ஷோபாவில் இருந்து எழுந்த சூர்யா “டேய் இப்ப எதுக்குடா பாப்புவ அடிக்கிற, இன்னோரு தடவை என் பாப்பு மேல்ல கையை வச்சா அவ்ளோ தான்” என்று எச்சரிக்க… இப்போது சூர்யாவை தேவாவை விட தியாவே அதிகம் முறைத்தாள்…
‘அய்யோ இவன் வேற தங்கச்சி பாசத்துல டி.ஆர் மிஞ்சிருவா போலேயே, இந்த டயலாக் கை திரும்ப திரும்ப சொல்லி எக்ஸ்ட்ரா அடி வாங்கி கொடுக்குறானே.. இவனை அண்ணாண தத்தெடுத்தது ரொம்ப ரொம்ப தப்பு போலேயே’ என தியா மனதிற்குள் சூர்யாவை திட்டி கொண்டு இருக்க,
சூர்யா கன்னத்தில் தேவா மறுபடியும் அறையை வைத்து இருந்தான்… அதை பார்த்த தியா மறுபடியும் சிரிக்க, தேவா மறுபடியும் அவளை அடிக்க, சூர்யா மறுபடியும் எழுந்து அதே டயலாக் பேசி மறுபடியும் அடி வாங்க, தியா மறுபடியும் சிரிக்க அவளை தேவா அடிக்க ரீப்பீட்டு,
( இவங்க இப்புடி அடிச்சு அடிச்சு விளையாடிட்டு இருக்கட்டும்.. நாம அப்புடியே காலச்சக்கரத்தை இரண்டு மாசம் முன்னோக்கி நகர்த்தி, இவங்க வாழ்க்கையில் என்ன நடந்தது. எப்புடி கல்யாணம் ஆச்சு.. எதுக்கு இப்புடி அண்ணனும் தங்கச்சியும் போட்டி போட்டு அடி வாங்குறாங்க அப்புடிங்கிற கதையை பார்த்ததுட்டு வரலாம்..)
இரண்டு மாதங்களுக்கு முன்பு
அந்த பெரிய சூப்பர் மார்க்கெடில் பெண்களுக்கான காஸ்மெட்டிக் பிரிவில் தனக்கு தேவையான பொருட்களை பார்த்து கொண்டு இருந்தாள் ஹரிணி…
அப்போது யாரோ தன்னை உற்று பார்த்து கொண்டு இருப்பது போல் தோன்ற சட்டென நிமிர்ந்து பார்த்தாள்…
எதிரே நின்று இருந்தவனை பார்த்ததும் அதிர்ச்சியும் ஒரு சின்ன பயமும் அதை விட அதிகமான கோவமும் வந்தது.. அவனை கண்களால் முறைத்து கொண்டே பொறுக்கி “செக்ஸ் டாக்டர்” என்று முனுமுனுத்து கொண்டாள்..
அவள் உதடுகளின் அசைவை வைத்தே என்ன சொன்னாள் என்பது புரிந்தது எதிரே இருந்த ஹர்ஷாவிற்கு,
நேற்றைய தினம் இருவருக்கும் நினைவிற்கு வந்தது…
( போன யுடி தியா ஹரிணி ஹாஸ்பிடல் சீன் நியாபகம் இருக்குல்லப்பா தியாகம் இல்லாதவங்க ஒரு எட்டு அங்கன போய் படிச்சிட்டு வந்துருங்க தங்கங்களே)
இங்க யாருங்க ஹரிணி அடுத்து நீங்க தான் உள்ளே போகனும் என்று அந்த ரிஷப்ஸனிஷ்ட் சொல்ல ஹரிணி தியாவை வெளியே இருக்கும் படி கூறி விட்டு சென்றாள்..
டாக்டர்.. பிச்சாண்டி என கதவில் தமிழிலும் ஆங்கிலத்திலும் ஒட்டி இருந்ததை வாசித்தபடி கதவை திறந்து கொண்டு உள்ளே சென்றாள்..
அங்கு அமர்ந்து இருந்தது ஹர்ஷா.. அவனை பார்த்த ஹரிணி பார்க்க நல்லா ஹிந்தி பட ஹீரோ ரேஞ்சுக்கு இருக்காரு இவருக்கு போய் பிச்சாண்டின்னு போர் வைச்சே இருக்காங்களே அய்யோ பாவம் என மனதில் நினைத்து கொண்டவள்… நன்றாக சைட் அடிக்கவும் ஆரம்பித்தாள்…
ஹரிணி உள்ளே வந்ததும் “என்ன பிரச்சினை” என கேட்டவன் அவளின் கையில் இருந்த காயத்தை ஆராய்ந்து பார்த்தான். காலிலும் கூட சில காயங்கள் இருந்தது அனைத்தையும் பார்த்தவன் ஹரிணியின் காயத்தை நன்கு துடைத்து மருந்திட்டு ஒரு டிடி இன்ஞ்சக்சன் போட்டு விட்டான்..
இறுதியாக மருந்து மாத்திரைகள் எழுதிய டிஸ்கிரிப்ஷனை அவள் கையில் கொடுத்தான். அதுவரை ஹரிணி அவனை ரசித்து கொண்டு தான் இருந்தாள்… அதை வாங்கி கொண்டவள் தாங்க்ஸ் டாக்டர் என்று கூறி விட்டு எழுந்து போக முடியவில்லை. அவளின் அடிபடாத மற்றோரு கையை பிடித்து இருந்தான் ஹர்ஷா…
“என்ன டாக்டர்” என்று சாதரணமாகவே கேட்டாள்.. அவன் கை பிடித்ததை தவறாக நினைக்கவில்லை.. காயத்தை பற்றி தான் ஏதோ சொல்வதற்காக தடுக்கின்றான் என்று நினைத்தாள்.
“சாரி சொல்லிட்டு போ” என்று மெதுவாக கூறினாலும் குரலில் கோவம் இருக்கத்தான் செய்தது..
“ஹர்ஷா கூறியதில் முதலில் ஙே என்று முழித்தவள், எதுக்கு சாரி கேட்கனும்? ஏன் கேட்கனும்? பொதுவாக ஹாஸ்பிடல் டீரிட்மெண்ட் பார்த்தா பணம் தான் கட்ட சொல்வாங்க. இது என்ன உங்க ஹாஸ்பிட்டல்ல பணம் கூட சேர்த்து சாரியும் சொல்லனுமா”, என்று ஹரிணியும் சற்று கடுப்புடன் கேட்டாள்…
“உனக்கு எவ்ளோ தைரியம் இருந்தா வெளியில்ல உன் ப்ரெண்ட் கிட்ட எங்க ஹாஸ்பிட்டல பத்தி தப்பு தப்பா பேசுவ, உனக்கு என்ன தெரியும் எங்க ஹாஸ்ப்பிடல் பத்தி எத்தனை பேரோட உழைப்பு தெரியாமா இது, எத்தனை பேருக்கு எங்க ஹாஸ்பிடல் உதவி பண்ணுதுனு தெரியுமா? ஒரு மண்ணும் தெரியாமலா உன் இஷ்டத்திற்கு வாய்க்கு வந்த மாதிரி பேசுவியா நீ, ஒழுங்கா தெரியாம பேசிட்டேன் சாரின்னு சொல்லிட்டு போ என்றான் கோவமாக,
கொஞ்ச நேரத்திற்கு முன்பு ஹரிணி தியாவிடம் ஹாஸ்பிடல் பற்றி கிண்டல் செய்து பேசியது அப்போது உள்ளே வந்த ஹர்ஷா காதில் விழுந்தது.. கேட்டவன் கொதி நிலைக்கே சென்று விட்டான்.. மருத்துவமனையின் வெளியே வைத்து கூறி இருந்தால் அவளின் கன்னம் பழுத்து இருக்கும்.. இங்கு வைத்து அவளை எதுவும் சொல்ல முடியாதல்லவா.. ஆனால் பேசியதற்கு அவளை மன்னிப்பு கேட்க வைக்க வேண்டும் என்பதற்காக, இன்று ஓ.பி பேஷன்ட்டை பார்க்க இருந்த டாக்டர் பிச்சாண்டியை வார்டுக்கு ரவுண்ட்ஸ் போங்க டாக்டர் நான் பார்த்துக்கிறேன் என அனுப்பி விட்டு அவன் இருந்தான்...
ஹர்ஷா கூறியதை கேட்டு கோவமான “சாரியா?? நான் உங்களை பத்தி ஏதாவது பேசினான இல்லைல அப்புறம் எதுக்கு உங்களை பத்தி பேசுன மாதிரி இவ்வளோ சீன் போடுறீங்க… சாரியாவது பூரியாவது அது எல்லாம் சொல்ல முடியாது.. ஒழுங்கு மரியாதையா என் கையை விடுங்க… இல்லனா அவ்ளோ தான்” என்று விரல் நீட்டி எச்சரித்தாள்…
“ஏய் இங்க பாரு உன் கையை பிடிக்கும்னு எனக்கு ஒன்னும் ஆசை இல்லை. அதே போல் என்னை பத்தி நீ ஏதாவது கமெண்ட் பண்ணி இருந்திருந்தா கூட ஒன்னும் சொல்லி இருக்க மாட்டேன்… ஆனா இந்த ஹாஸ்பிடல் எனக்கு உயிர் மாதிரி அதை பத்தி பேசி இருக்க, சாரி சொல்லி தான் ஆகனும். இல்லைனா கையையும் விட முடியாது. இந்த இடத்தில் இருந்து போகவும் முடியாது”..
“யோவ் டாக்டர் நீ என்ன லூசா? சாரி சொல்ல முடியாதுன்னு தான் ஏற்கேனவே சொல்லிட்டனே, நான் எல்லாம் தப்பு பண்ணுனாலே சாரி கேட்க மாட்டேன்.. இதுல இந்த பிஸ்கோத் ஹாஸ்பிடல் பத்தி பேசுனதுக்கு சாரி கேட்கனுமா? ஆசை தான் போய்யா” என்றவளுக்கு அன்று நேரம் சரியில்லை தான் போல்,
“ஏய் மறுபடியும் மறுபடியும் தப்பு பண்ற, இன்னோரு தடவை ஹாஸ்பிடல் பத்தி பேசுனா நடக்குறத வேற” என்று எச்சரித்தவன். கையை இன்னும் இறுக பற்றினான்…
“ஓ….. நடக்கறதே வேறயா இருக்குமா? அப்புடி என்ன நடக்கும் நானும் தெரிஞ்சிக்குறேன்.. ஒரு தடவை என்ன, ஓராயிரம் தடவை சொல்லுவேன், ஏன் ஒரு லட்சம் கோடி தடவை கூட சொல்லுவேன்.. இந்த ரூம்ல மட்டுமில்ல, வெளிய போய் சொல்லுவேன்.. ஹாஸ்பிடல் முன்னாடி நடுரோட்டில் போய் நின்று கத்தி சொல்லுவேன்… பிஸ்கோத் ஹாஸ்பிடல்,பிஸ்கோத் ஹாஸ்பிடல், பிஸ்கோத் ஹாஸ்பிடல், அப்புடின்னு கத்துவேன். என் வாய் என் இஷ்டம் என்ன வேணா பேசுவேன் என்று அவனின் கோவத்தை தூண்டி விட்டு அவளும் எகிறினாள்…
கையை விட்டான். ஹரிணி ஒரு வெற்றி சிரிப்பு லேசாக சிரிக்க அடுத்த நொடி அவளின் பின்மண்டையை அழுந்த பற்றி தன்னருகே இழுத்து அவளின் இதழை சிறைப்பிடித்தான் வன்மையாக, அவளின் இதழ் இவ்வளவு நேரம் அவனிடம் வாயாடி எழுந்த கோவத்தை எல்லாம் அந்த இதழ் மீதே காட்டி கொண்டு இருந்தான்…
ஹர்ஷா வின் செயலில் ஹரிணிக்கு பயங்கர அதிர்ச்சி.. நடப்பது எதுவும் அவளுக்கு புரியவில்லை… சில நொடி தான் பின்பு அவனின் பிடியிலிருந்து விடுபட திமிறினாள், இரு கை கொண்டு முடிந்த மட்டும் அவனை அடித்தாள்… ஆனால் உடும்பு போல் இருந்த அவனின் பிடியிலிருந்து விடுபட முடியவில்லை.. அவனை நகர்த்தவும் முடியவில்லை..
ஹர்ஷாவின் நிலையோ வன்மையாக ஆரம்பித்தான் தான் ஆனால் ஹரிணியின் நெருக்கம், அவளின் வாசனை இதழ் தந்த சுவை அனைத்தும் வன்மையான முத்தத்தை மென்மையாக்கியது.. அவனை அறியாமலே தன் சுயத்தை ஹரிணியிடம் அவளின் இதழில் இழந்து கொண்டு இருந்தான்…
அவன் மூளையே அவன் செய்யும் தவறை எடுத்துரைக்க அவளின் இதழ் தந்த போதையிலிருந்து வெளியேறி சட்டென்று அவளை விடுவித்தான்… ஹரிணியின் கண்கள் கலங்கியது… பார்த்தவனுக்கு செய்தது தவறு முட்டாள் தனம் என புரிந்தாலும் அவ பேசினா அதனால் அப்புடி நடந்துக்கிட்டேன் என அலட்சியமாக எண்ணியவன்,
“உன் வாய் உன் இஷ்டத்திற்கு பேசுனா, இப்புடி தான் என் வாயும் என் இஷ்டத்திற்கு நடந்துக்கும்” என்றான்..,
“யூ பொறுக்கி ராஸ்கல் உனக்கு எவ்ளோ தைரியம் இருந்தா என்கிட்ட இப்புடி நடந்திருப்ப உன்னை சும்மா விட மாட்டேன்டா” என்றபடி ஆத்திரத்தில் அவன் டேபிள் மீதிருந்த பொருட்களை ஒன்று ஒன்றாக எடுத்து அவன் மீது வீசினாள்… ஒன்று கூட அவன் மேல் படவில்லை அதில் இன்னும் ஆத்திரம் எழ, அவனை அடிக்க அருகே சென்றவள்,
ஹர்ஷா அசையாது அப்புடியே நிற்க, சற்று நேரத்திற்கு முன்பு நடந்த சம்பவம் நினைவு வர அவன் அருகே செல்லாது பின்னாடி இரண்டு அடி எடுத்து வைத்தவள்,”டேய் பிச்சை என் மாமா போலீஸ் அவர்கிட்ட சொல்லி உன்னை உள்ள தள்ளி முட்டிக்கு முட்டி தட்ட சொல்றேன் பாருடா” என்று ஆவேசமாக கத்தி விட்டு வெளியேற கதவு வரை வந்தாள்..
“போ போ போய் எவனை வேணா கூட்டிட்டு வாடி நான் இங்கே தான் இருப்பேன்” என்று ஹர்ஷாவின் திமிரான பதிலில் மேலும் கடுப்பானவள் “போடா செக்ஸ் டாக்டர் பிச்சை” என்றதும்,
“என்னடி சொன்ன உன்னை” என அவன் அருகே வர பார்க்க வேகமாக வெளியே ஓடி வந்து இருந்தாள்..
நேற்று நடந்தை எல்லாம் நினைத்து பார்த்தவள் ஹர்ஷாவை முறைத்தாள்..
ஹர்ஷா ஹரிணியை முதலில் இங்கு பார்த்ததும் அவளிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று எண்ணி தான் அருகில் வந்தான்.. நேற்று அவள் சென்ற பிறகு கொஞ்ச நேரம் கழித்து தான் அவன் செய்தத தவறு அவன் புத்திக்கு ஏறியது..
ஒரு பெண்ணிடம் அநாகரிகமாக நடந்து கொண்டது தவறு என்று புரிந்தது.. அந்த பெண் இடத்தில் ஒரு ஆண் இருந்திருந்தால் இப்படி தான் முத்தம் இட்டுருப்பாயா என்று அவன் மனசாட்சியே அவனை காரி துப்பியது.. அடுத்து அவளை எங்கு பார்த்தாலும் மன்னிப்பு கட்டாயம் கேட்க வேண்டும் என்று எண்ணி கொண்டான்…
இங்கு அவளை கண்டதும் மன்னிப்பு கேட்கவே அருகில் வந்தான்.. ஹரிணி தான் இவனை கண்டதும் பொறுக்கி என்று திட்டியதும் மறுபடியும் கோவம் வந்து விட்டது.. ஹர்ஷா நீ அன்னைக்கு பண்ண வேலைக்கு இந்த பொண்ணு இந்த அளவு கூட கோவம் படலைனா எப்புடி? நீ வந்த வேலையை பார்த்ததுட்டு கிளம்பு என்றது மனசாட்சி.
ஆனால் அவன் விழி தான் வந்த வேலையை விட்டுவிட்டு அவன் பேச்சை கொஞ்சம் கூட கேட்காமல் அவளை உச்சி முதல் பாதம் வரை கட்டுப்பாடு ஏதுமின்றி ரசித்தது.. அதிலும் அவள் உதட்டின் மீது படரும் அவன் பார்வையை அவனாலே தடுக்க முடியவில்லை..
அவனின் இந்த பார்வையில் ஹரிணிக்கு எரிச்சல் தான் வந்தது.. ஆனால் அவனிடம் அன்று போல் சண்டையிட வேண்டாம் என்று நினைத்தவள் அங்கிருந்து நகர போனாள்..
அதில் தன்னை மறந்து அவளை ரசித்து கொண்டு இருந்தவன் தலையை உலுக்கி சுய நினைவுக்கு வந்தான்… “ஹலோ ஒரு நிமிஷம் நில்லு உன்கிட்ட” என்று ஹர்ஷா ஆரம்பிக்கும்போதே ஹரிணி அதை கவனிக்க விருப்பம் இல்லாமல் நகர்ந்தாள்…
தான் பேசி கொண்டு இருக்கும் போது அதை கேட்கமால் தன்னை உதாசீன படுத்தி ஒருவள் செல்வதா எவ்வளவு திமிர் என்று மறுபடியும் கோவம் வர ஹரிணி கைப்பிடித்து தடுத்தான்…
“நான் பேசிட்டு இருக்கும் போது அதை கேட்காம போன என்ன அர்த்தம்”…
“உன்னை மாதிரி பொறுக்கி பேசுறதை எல்லாம் கேட்க விருப்பம் இல்லைன்னு அர்த்தம் கை விட்டுறா பொறுக்கி” என்றாள் ஹரிணி கோவமாக, ஆனால் சத்தமின்றி அவனுக்கு மட்டும் கேட்கும் குரலில் கையை உறுவ முயன்று கொண்டே,
“இந்த வாயால தானடி நேத்து அப்புடி எல்லாம் நடந்தது.. இன்னும் நீ அடங்கமா அதே திமிரோட வாய் பேசுற, இது உனக்கு நல்லதுக்கு இல்ல, மறுபடியும் ஏதாவது சேதாரம் ஆனா நான் பொறுப்பு கிடையாது” ..
ஹரிணி மேலே பேச வாயெடுக்கும் முன்பு அங்கு வந்து சேர்ந்தாள் தியா… ஹனிமா என்றபடி அருகில் வந்த தியா அப்போது தான் கவனித்தாள் ஹர்ஷா ஹரிணியின் கை பிடித்து இருப்பதையும் அவள் அவனிடம் இருந்து கையை உருவ முயற்சித்து கொண்டு இருப்பதையும்,
தன் தோழியை முன்பின் தெரியாத ஒருத்தன் பொது இடத்தில் கையை பிடித்து இழுப்பதா கோவம் எழுந்தது தியாவிற்கு, அதே கோவத்துடன் “ஏய் யாருடா நீ? அவ மேல் இருந்து கையை எடுடா?” என்றாள் கோவமாக,
ஹரிணிக்கும் அவனுக்கும் இடையில் இவள் யார்? அதுவும் எடுத்த எடுப்பிலேயே ஒரு சின்ன பெண் தன்னை டா என்று அழைப்பதா, ஏற்கெனவே ஹரிணியின் செயலில் கோவத்தின் உச்சியில் இருந்தவன் தியாவின் பேச்சிலும் மேலும் கோவம் வர,
“முதல்ல நீ யாரு? அவ கையை தான பிடிச்சு இருக்கேன், ஏதோ உன் கையை பிடிச்சு இழுத்த மாதிரி இந்த குதி குதிக்கிற” என்று வார்த்தையை விட்ட அடுத்த நொடி ஹரிணியை விட்டவன் அவன் கன்னத்தில் கை வைத்து கொண்டான்..
சப்….. என்று அவனை அறைந்து இருந்தாள் தியா.. அவனுக்கு வலித்தாத என்று தெரியாது ஆனால் தியா தன் மொத்த பலத்தையும் கோபத்தையும் அந்த அடியில் காட்டி இருந்தாள்.. ஹர்ஷாவின் கன்னத்தில் மூன்று விரல் பதியும் வரை, “என் கையை பிடிச்சு இழுப்பானா சொல்ற, தைரியம் இருந்தா செஞ்சு பாருடா அதற்கு அப்புறம் நீ உயிரோடையே இருக்க மாட்ட” என்று மற்றோரு கன்னத்திலும் அறைந்து இருந்தாள், என் ஹனிமா கையை பிடிச்சு இழுத்தற்கு என்றபடி,
அதே நேரம் ஹர்ஷா வை தேடி வந்த அவனின் நண்பர்களும், திவேஷும் கூட தியா அறைந்தை பார்த்தனர்…
“ஏய் உன்னை” என்று தியாவை அடிக்க வந்த ஹர்ஷாவை இடையில் புகுந்து தடுத்தான் திவேஷ்..
“தியாமா வா போலாம் எந்த பிரச்சினையும் வேணாம். ப்ளீஸ் வாடா” என்று ஹரிணி அவளை பிடித்து இழுத்து கொண்டு சென்றாள்.. போகும் போது ஹர்ஷவை அருவருப்பாக பார்த்து விட்டு தான் சென்றாள்… அவன் நேற்றிலிருந்து தன்னிடம் நடந்து கொண்ட விதத்தை விட இப்போது தியாவிடம் பேசிய வார்த்தை தான் அவளுக்கு வெறுப்பாக இருந்தது…
“ஹர்ஷா பப்ளிக்ல ஒரு பொண்ணு மேல்ல கையை வச்சா பெரிய இஷ்யூ ஆகிரும்டா, வாடா வா” என்று அவனை இழுத்து கொண்டு சென்றான் திவேஷ்..
போகும் வழியிலேயே தியா ஹரிணியிடம் ஹர்ஷா யார் என்ன பிரச்சினை என்று கேட்டாள்… நேற்று தியா ஹர்ஷாவை பார்க்கவில்லை… ஹர்ஷாவும் தியாவை பார்க்கவில்லை.. ஹரிணி அவன் முத்தமிட்டதை மட்டும் மறைத்து விட்டு அனைத்தையும் கூறினாள்… அதை கேட்ட தியா “உன்கிட்ட அவன் சண்டை போட்டானா, இதை ஏன் என்கிட்ட முன்னாடியே சொல்லல, அவனை நேத்தே ஒரு வழி பண்ணிருப்பேன்” என்றாள் தியா ஹர்ஷா மீது ஆத்திரம் அடங்காமல்,
“அய்யோ தியாமா ப்ளீஸ் இந்த பிரச்சினையை இதோட விட்டுரேன் ப்ளீஸ் என்று ஹரிணி கேட்டாலும், தியா விடுவதாய் இல்லை” ஹர்ஷாவை திட்டி தீர்த்து கொண்டே சென்றாள்…
ஹர்ஷா பயங்கர கோவமாக இல்லை இல்லை தியா மீது கொலை வெறியில் இருந்தான்… அதை ஏற்றி விட்டது ஒரு சின்ன பொண்ணுக்கிட்ட அடி வாங்கிட்டு வந்து நிற்கிறியே என்ற நண்பர்களின் கேலி…
ஆ……. என்று கோவத்தில் கத்தியவன் “என்னை ஏன் தடுத்த திவா அவளை சும்மா விட்டு இருக்க கூடாது அவளை” என்று கிளம்பிய ஹர்ஷாவை “பிரச்சினை வேணாம் சொன்னா கேளுடா” என தடுத்தான் திவேஷ்..
ராகவ் மச்சினிச்சுன்னா பெரிய இவளா அவ, ராகவ், வேதாசலம் அவளுக்கு யாரு வந்தாலும் நான் பார்த்துக்கிறேன் என்னை விடுடா என திமிறினான் ஹர்ஷா..
ஹர்ஷா வேணாம் தியாக்கு ஒன்னுனா ராகவ் வேதசாலத்திற்கு முன்ன தேவா வருவான் அவன் உன்னை சும்மா விட மாட்டான் சொன்னா கேளுடா
தேவா வா என ஹர்ஷா புருவம் சுருக்கி யோசனையாக திவேஷை பார்க்க,
ம்.. என்ற திவேஷ் தியா தேவாவை காதலிப்பதை பற்றி சொல்ல,
ச்சீ அவனையா என முகம் சுளித்தான் ஹர்ஷாவிற்கு தியா மீது நல்ல அபிப்ராயம் இல்லை.. இந்த மாதிரி பொண்ணு கூட ஏன் இவ பழகுறா ஹரிணியையும் மனதிற்குள் திட்டி கொண்டான் அந்த உத்தமன்…
“அதான் ஹர்ஷா உன்னை அமைதியா இருக்க சொல்றேன்” திவேஷ் சொல்ல,
“என்ன அவன் வருவான் இவன் வருவான்னு பூச்சாண்டி காட்றியா, அதற்கு எல்லாம் நான் பயப்பட மாட்டேன்.. என்னை அடிச்சு அவமானப்படுத்தன அவளை சும்மா விடுறதா?” ஹர்ஷா கோவம் கொள்ள,
வாடா வாடா இதுக்கு தான்டா நான் காத்துட்டு இருந்தேன் மனதிற்குள் நினைத்த திவேஷ் தேவா ஹர்ஷா இருவரையும் மோத விட்டு வேடிக்கை பார்க்க போகும் குஷியில் உள்ளுக்குள் குத்தாட்டம் போட்டு கொண்டான்..
“நான் அவளை சும்மா விட சொல்லைல ஹர்ஷா.. உன்னை அவமானப்படுத்தன அவளை நீ திருப்பி அடிச்சு தான் அவமானப்படுத்தனும் இல்லை.. அவளை அவமானப்படுத்தறதிற்கு நிறைய வழி இருக்கு. பொறுமையா இரு ஹர்ஷா நேரம் வரும் போது நான் சொல்றேன்.. 4 பேர் முன்னாடி தானே நீ அசிங்கப்பட்ட, இந்த ஊர் முன்னாடி அவ அசிங்கப்பட்டு நிற்பா என்று ஹர்ஷாக்குள்ளும் தன் விஷ எண்ணத்தை கொஞ்சம் கொஞ்சமாக செலுத்தினான் திவேஷ்..
திவேஷிம் ஹர்ஷாவும் தியாவை பழி வாங்க சந்தர்ப்மம் எதிர் பார்த்து காத்து இருந்தனர்.. தியாவே அந்த சந்தர்ப்பத்தை அவர்களுக்கு உருவாக்கி தந்தால்.