ராகவ் – இனியா இருவருக்க திருமணம் நல்ல முறையில் நடை பெற்றது… மண்டபத்தின் வாயிலில் தங்கள் காரில் வந்து இறங்கினார்கள் வெண்ணிலா திவேஷ் இருவரும்… வெண்ணிலாவை கண்ட மஞ்சுளாவும் இந்துமதியும் ஓடி வந்து அவளை கட்டி கொண்டனர்…
“ஏன் நிலா இவ்வளோ லேட்டா வர?, நீ நேத்தே வருவன்னு நான் எதிர் பார்த்தேன்” ….
“இல்ல இந்து அவர் ஃப்ரெண்ட் வீட்டில் ஒரு பங்ஷன் அங்க போயிட்டு வந்தோம் அதான் லேட்”…
“சரி இப்பவாவது வந்தீங்களே, வாங்க” என்று அவர்களை உள்ளே அழைத்து சென்றார் மஞ்சுளா… வெண்ணிலா மஞ்சுளாவின் தங்கை இந்துமதிக்கும் தோழி…
வெண்ணிலா தனது அக்காவிடம் “சூர்யா வந்தானா” என்று மஞ்சுவிற்கு மட்டும் கேட்கும் குரலில் மெதுவாக கேட்டாள்.. சூர்யா மஞ்சுளாவகற்கு தம்பி வெண்ணிலாவுக்கு அண்ணன்…
“அவன் வரலை அந்த தேவா வராததால் அவனும் வரமாட்டானாமா, ஷோபாவும் அம்மாவும் வந்து இருக்காங்க… பெரிய தளபதி படத்தில் வர தேவா, சூர்யானு மனசுக்குள்ள நினைப்பு… அந்த தேவாக்கூட சேர்ந்து இவனும் கெட்டு போக போறான் பாரு” என்றாள் மஞ்சு அதே போன்று மெதுவாக, அவர்கள் பின்னே
வெண்ணிலா கணவன் திவேஷ் அவர்கள் பின்னால் வந்தான்….
தேவாவை பற்றியே சிந்தித்துக் கொண்டு வந்த தியா திவேஷை கவனிக்காமல் வந்து அவனை இடித்து விட்டாள்…
கையில் அவள் வைத்து இருந்த க்ளாஸில் இருந்த மொத்த காப்பியும் அவன் மேலே ஊற்றியது…
“அச்சோ சாரி ப்ரோ சாரி ப்ரோ “என்ற தியாவை நிமிர்ந்து கோவமாக “ஏய் உனக்கு எல்லாம்” என்று திட்ட வந்த திவேஷ் தியா முகத்தை கண்டதும் புருவ முடிச்சுகளுடன் ஏதோ யோசனை உண்டாக அமைதியாகி விட்டான்…
இதை பார்த்த வெண்ணிலாவிற்கு கோவம் வர “பார்த்து வரமாட்டியாமா?” என்று தியாவை சத்தம் போட்டாள்… மஞ்சுளாவிற்கும் தியா மேல் கோவம் புசு புசு வென ஏறியது… தன் தங்கை கணவரின் மேல் எதையோ ஊற்றி விட்டாளே என்று,
“சாரி அக்கா நான் சரியா கவனிக்கல என் மேல் தான் தப்பு… சாரி ப்ரோ” என்று திரும்ப கூற அதை திவேஷ் கவனிக்கும் நிலையில் இல்லை…
அவனின் எண்ணமும் முழுவதும் அந்த நாளை தொட்டு மீண்டது…. அவன் மூளைக்கு உள்ளே இந்த பொண்ணை பார்த்தா அந்த பொண்ணு மாதிரி இருக்கே என்ற எண்ணம் தோன்ற, அடுத்த நொடியே அவளை மாதிரி எல்லாம் இல்ல அவளே தான் என்று உறுதிபடுத்தி கொண்டான் இவர்களை நோக்கி வந்த யமுனா தியாவை பார்த்து “என்ன ப்ராளம்டா” என்று கேட்ட போது,
இவர்களின் அருகில் வந்த யமுனா என்ன பிரச்சனை என்று விசாரிக்க, மஞ்சுளா உங்க பொண்ணை பாருங்க என் தங்கச்சி ஹஸ்பண்ட் மேல் காபி கொட்டிடா என்று புகார் கூற, யமுனா தியாவை முறைத்தார்..
மஞ்சுளா ஏற்கெனவே மூத்த மருமகள் என்ற பெயரில் திருமண பேச்சு தொடங்கியதில் இருந்தே பாலகிருஷ்ணன் யமுனா இருவரையும் எதாவது குறை கூறி கொண்டே இருக்கிளாள்… இப்போது இதையும் பிரச்சினை ஆக்கி விடுவாளோ என்று,
‘அய்யோ இந்த அக்கா வேற நான் ஏதோ வேணும்னு செஞ்சது போல இந்த ஹீட்லர் மம்மி கிட்ட மாட்டி விடுறாங்களே’ என்று நினைத்து கொண்டு “கவனிக்கல மம்மி வேணும்னு செய்யல, நான் அவங்க கிட்ட சாரி கூட சொல்லிட்டேன்” என்றாள் தியா…
மஞ்சுவோ “சாரி சொல்லிட்டா போதுமா, சட்டை ஃபுல்லா கறை… இதை போட்டுட்டு எப்படி பங்ஷன் அட்டன் பண்ணுவாங்க” என்று கொஞ்சம் கோவமாக பேச,
யமுனா தியாவை பார்த்து “எல்லா விஷயத்திலும் விளையாட்டு, கொஞ்சம் கவனமா இருங்க மாட்டியா?” என்று திட்டி விட்டு “சாரி தம்பி விளையாட்டு பொண்ணு ஏதோ கவனிக்காம”
“அச்சோ ஆன்டி இட்ஸ் ஓகே நோ ப்ராப்ளம், இது ஒரு சின்ன விஷயம் இதுக்கு போய் நீங்க ஏன் சாரி சொல்றீங்க… அவங்களை திட்டாதீங்க… என் மேலேயும் தப்பு இருக்கு… நான் மொபைல் பார்த்துட்டே எதிரே வந்தவங்களை கவனிக்கல.. சாரிமா” என்றான் தியாவை பார்த்து,
அவளும் “சாரி ப்ரோ” என்றாள்… யமுனா “தாங்க்ஸ் தம்பி, உங்களுக்கு நல்ல மனசு” என்று விட்டு தியாவை அழைத்து கொண்டு உள்ளே சென்றார்…
செல்லும் தியாவையே கூர்ந்து பார்த்து கொண்டு இருந்தான் திவேஷ்… அவன் மனத்திரையில் கடந்த காலத்தின் சில நினைவுகள் காட்சி கொடுத்தது…
“திவேஷ்” மனைவியின் குரலில் தெளிந்தவன், “கார்ல் இன்னோரு செட் டிரஸ் இருக்கு சேன்ஜ் பண்ணிட்டு வரேன்” என்று கூறி விட்டூ அங்கு இருந்து வெளியே சென்றான்…
செல்லும் அவனையே பார்த்து கொண்டு நின்றாள் வெண்ணிலா… திவேஷ் சாரி கேட்டதே அவளுக்கு அதிர்ச்சி தான்… அவளுக்கு தெரியாத தன் கணவனை பற்றி, திவேஷ் தன் மீது தவறு இருந்தாலே சாரி கேட்க மாட்டான்… சின்ன ஒரு பிரச்சனையை கூட பேசி பேசியே பெரிய பிரச்சினை ஆக்குபவன்… இன்று தியா மேல் தவறு இருந்தும்… அதை பெரிதுப்படுத்தாமல் அவன் மன்னிப்பு கேட்டு அமைதியாக இருந்தது அவளுக்கு யோசனையை கொடுத்தது…
திவேஷ் செயலுக்கு பின்னால் வேறு ஏதோ ஒரு காரணம் நிச்சயம் இருக்க வேண்டும் என்ற எண்ணம் எழுந்தது… இருந்தாலும் இப்போதைக்கு அந்த எண்ணத்தை வெளி காட்டாமல் அவன் உடை மாற்றி வந்ததும் உள்ளே சென்றாள்…
சிறிது நேரத்தில் மண்டபத்தில் சடங்குகள் அனைத்தும் முடிந்து புதுமண தம்பதிகளை மாப்பிள்ளை வீட்டிற்கு அழைத்து சென்றனர்…
தியா ராகவ் இனியா வந்த காரில் அவர்களுடன் தான் வந்தாள்… கார் வீட்டிற்குள் நுழையும் போது திரவியா கண்களில் பட்டது வீட்டு வாயிலில் பொறிக்கப்பட்டு இருந்த தேவேந்திரன் இல்லம் என்ற பெயர் பலகை தான்...
கார் கண்ணாடியை இறக்கி விட்டு அதை திரும்பி பார்த்து கொண்டே வந்தாள்… இந்துமதி ஆர்த்தி எடுக்க இனியா ராகவ் இருவரும் வலது காலை எடுத்து வைத்து வீட்டிற்குள் சென்றனர்..
இனியா பூஜை அறை சென்று விளக்கேற்றி சாமி கும்பிட்டு வந்த பிறகு பாலும் பழமும் கொடுக்கப்பட்டது… மாலை வரை அங்கு தனது மகளுடன் இருந்த பாலகிருஷ்ணன், யமுனா இருவரும் வேதாசலம் குடும்பத்தினரிடம் கூறி விட்டு கிளம்பும் வேளையில்,
இனியா என்ன தான் காதலித்து ராகவை திருமணம் செய்து இருந்தாலும், இங்கு தனித்து விட்டு தன் வீட்டினர் கிளம்புவது வருத்ததை கொடுக்க கண்ணை கசக்கினாள்…
அதை பார்த்து பாலகிருஷ்ணனுக்கும் யமுனாவிற்கும் சங்கடமாக இருந்தது… யமுனாவால் இனியா நிலையை புரிந்து கொள்ள முடிந்தது…
ஆனாலும் எல்லா பெண்களுக்கும் இது தானே நிலை திருமணம் செய்தால் பெற்றவர்களையும் உடன் பிறந்தவர்களையும் பிரிந்தது தானே வாழ வேண்டும்… அதை இனியாவிற்கு சொல்லி புரிய வைத்து விட்டு அவள் தனிமையாக உணர கூடாது என்பதால் தியாவிடம் ‘இரண்டு நாள் அக்கா உடன் இரு, மறுவீட்டு அக்கா வரும்போது நீயும் வா’ என்று கூறி தியாவை அங்கு விட்டு சென்றார்… யமுனா செய்யும் இரண்டாவது தவறு இது என்பதை பின்னர் அவர் உணர்வார்…
இரவு இனியாவை முதல் இரவிற்கு அழகா அலங்காரம் செய்த இந்துமதி மஞ்சுளா இருவரும் ராகவ் அறைக்கு அழைத்து சென்றனர்… முதலிரவு அறையில் அவளுக்காக காத்திருந்தான் ராகவ்… இனியா உள்ளே வந்ததும் பேச வேண்டியதை எல்லாம் காதலிக்கும் காலத்திலே நிறைய பேசி முடித்து விட்டதால், இப்போது பேசி நேரத்தை வீணாக்காமல் தனது மனைவியை அணைத்து கொண்டு அவளிடம் சம்மதம் பெற்று இல்லற வாழ்வை தொடங்கினான்…
நள்ளிரவு 1 மணி திரவியா நன்றாக உறங்கி கொண்டு இருந்தாள்… அவளின் அருகே மீனாட்சி படுத்து இருந்தார்… அப்போது அவளுக்கு எ
ஒரு கனவு… அதில் ஒரு பெண் மெத்தையில் படுக்க வைக்கப்பட்டு இருக்கிறாள்… அவளை சுற்றி மூவர் நின்று கொண்டு இருக்கின்றனர்…
எந்த இடம் யார் அந்த பெண் என்று தெளிவாக தெரியவில்லை… அப்போது யாரோ ஒருவன் ஓடி வந்து சொல்கிறான் டேய் தேவேந்திரன் வரான்டா என்று சொல்ல, அதன் பிறகு என்ன நடந்தது என்று தெரியவில்லை, அனைத்துமே கருப்பாக தெரிந்தது… அய்யோ அம்மா ஐய்யயோ என சில குரல்கள் காதில் விழுந்தது…
ஆ…. என கத்தியபடி அடித்து பிடித்து கொண்டு எழுந்தாள்… என்னது இது இப்படி ஒரு கனவு என்ற அதிர்ச்சி எல்லாம் அவளிடம் இல்லை…
இதுக்கு முன்பே சில தடவை இந்த கனவு அவளுக்கு வந்து இருக்கிறது.. என்ன காட்சி மட்டுமே வரும், இப்போது பேசியது எதுவும் வராது.. இன்று தான் அந்த குரல்கள் கேட்கிறது…
என்ன இப்புடி என பதட்டமடைந்த நெஞ்சை தடவியபடி பக்கத்தில் பார்த்தால் மீனாட்சி நன்றாக உறங்கி கொண்டு இருந்தார்…
பின்பு மெத்தையை விட்டு இறங்கியவள் அருகில் இருந்த டேபிளில் வைக்கப்பட்டு இருந்த தண்ணீரை எடுத்து குடித்தாள்… ‘கனவுல கூட தேவேந்திரன் அப்படின்ற பேரா, அய்யோ சாமி என்னால முடியலைடா’ என்று தன் தலையில் கை வைத்து கொண்டாள்…
தியா இது நாள் வரை அவர்கள் வீடு தவிர வேறு எங்கும் சென்று தங்கி பழக்கம் இல்லை… அது தியாவுக்கு பிடிக்காது.. பாட்டி வீட்டுக்கு சென்றால் கூட பகல் நேரத்தில் இருந்து விட்டு இரவு அவர்கள் வீட்டுக்கு சென்று விடுவாள்…
இன்று தனது அம்மா அக்காவுடன் இரு என்று சொன்ன போது அவள் ஒத்து கொண்டதற்கு ஒரே காரணம், திருமணத்திற்கு வராத தேவா எப்படியும் இரவு வீட்டிற்கு வருவான் அவனை பார்க்கலாம் என்று தான்,
ஆனால் அவன் வரவில்லை வீட்டில் இருப்பவர்களிடம் தேவாவை பற்றி கேட்டால் சொல்ல மாட்டார்கள் என்பதால், அங்கு வேலை செய்யும் ஆட்களிடம் கேட்ட போது தேவா வீட்டுக்கு தினமும் வர மாட்டான் எப்போதாவது தான் வருவான் என்றும் கூறினர்… அதை நினைத்து கொண்டே படுத்தால் தான் இப்படி ஒரு கனவு வந்தது போல் என்று நினைத்து கொண்டாள்…
அதன் பின்பு உறக்கம் வராததால் அறைக்கு உள்ளேயே நடந்தாள்… அவளின் மனதிலோ ‘நான் ஏன் அவரை பார்க்கவும், அவரை பத்தி தெரிஞ்சிக்கவும் இவ்வளோ ஆர்வம் காட்றேன்’ எதனால் என்று யோசித்தாள்.. அவளுக்கு விடை தான் கிடைத்த பாடில்லை…
பின்பு அறையை விட்டு வெளியே வந்தாள்… அங்கு சுவற்றில் மாட்டப்பட்டு இருந்த புகைப்படங்களை பார்த்து கொண்டே நடந்தாள்… இந்த வீட்டை மதியம் வந்ததிலிருந்து இரண்டு மூன்று முறை சுற்றி பார்த்து விட்டாள்… ஆனால் ஒரு மூலையில் கூட தேவா புகைப்படம் சின்னதாக கூட இல்லை… மற்ற அனைவரின் புகைப்படங்கள் இருந்தது…
அப்போது தான் அவளுக்கு அந்த எண்ணம் தோன்றியது… தேவா அறைக்கு சென்றால் நிச்சயம் அங்கு அவனது ஒரு போட்டோவாது இருக்கும் என்று, அதனால் தேவா அறைக்கு செல்ல முடிவெடுத்தாள்…
ஏற்கெனவே வேலையாள் மூலம் தேவா அறை எது என்று கேட்டு தெரிந்து வைத்திருந்தாள்…
தேவா ரூம்க்கு முன்பு நின்று இருந்தாள்… அறை லாக் இல்லாமல் தான் இருந்தது... அடுத்தவர்கள் அறைக்கு அவர்கள் பர்மிஷன் இல்லாமல் செல்வது அநாகரிகம் என்பதால் சற்று தயங்கி நின்றாள்…
‘தியா யாருக்கு தெரிய போகுது உள்ள போய் பார்க்க போறோம் திரும்ப வர போறோம் அவ்ளோ தான் ஜஸ்ட் 2 மினிட்ஸ் அவ்ளோ தான்’ என்று தனக்கு தானே தைரியம் கூறி கொண்டவள் அறைக்குள் சென்றாள்…
அறை இருட்டாக இருக்கவே தட்டு தடுமாறி சுவிட்ச் போர்டூ தேடி லைட்டை போட்டாள்… வெளிச்சம் வந்ததும் அறையை பார்க்க, அந்த வீட்டிலே தேவா அறை தான் பெரியது என்பது தெரிந்தது…
அங்கு இருந்த கட்டில் மெத்தை ஷோபா கபோர்டு மற்றும் அலங்கார பொருட்கள் அனைத்துமே விலையுயர்ந்த பொருட்களாக இருந்தது… அங்கு இருந்த டேபிளில் சில பேப்பர்ஸ் இருந்தது… அது என்னவென்று தியா கையில் எடுத்து பார்க்க அது பாண்டு பேப்பர் அதில் சிலரின் கையெழுத்து இருந்தது…
ஏதோ பத்திரம் போல என்று நினைத்த தியா அதை அந்த டேபிளில் முதலில் இருந்தது போல வைத்து விட்டாள்… இந்த அறையிலும் தேவா போட்டோ இல்லை…
‘அட என்னங்கடா இது நாங்க பரம்பரை பரம்பரையா பணக்காரங்க… அம்பானி வீட்டுக்கு அடுத்த வீட்டுக்காரங்கன்னு இந்த ராகவ் மாமா ஓவரா டயலாக் எல்லாம் விட்டாரு, ஆனா இங்க கஞ்ச பிசுனாரி தனமா ஒரு போட்டோ கூட ஃப்ரேம் பண்ணி மாட்டல’ என்று வாய் விட்டு புலம்பியவள் வெளியே செல்ல திரும்பும் போது யாரோ அறையை திறக்கும் சத்தம் கேட்டது…
‘அய்யயோ யாரோ வராங்க போல, யாருடா அது? இந்த டைம்ல வரறது… அய்யோ போச்சு போச்சு இந்த நேரத்தில் என்னை இங்க பார்த்தா என்ன நினைப்பாங்க, ஒரே வேளை மம்மி கிட்ட சொல்லிட்டா, அவ்ளோ தான் என் சோலி முடிஞ்சது,இப்ப என்ன பண்றது? எப்படி வெளிய போறது? என்று பயந்து கையை பிசைந்து கொண்டு நிற்க,
அறை கைப்பிடி திருகி கதவு பாதி திறந்தது… பயந்து போன தியா அங்கு இருந்த திரைச்சீலை பின்பு போய் ஒளிந்து கொண்டாள்… தியா ஒளிந்து இருந்தது வெள்ளை தீரைச்சீலை தான் அதில் இருந்து பார்த்தால் வெளியே என்ன நடக்கிறது என்பது கொஞ்சம் தெளிவாக தெரியும்…
கதவை திறந்து கொண்டு உள்ளே வந்தான் தேவேந்திரன்… அவனை பார்த்து தியா ‘யார் இந்த ஆறடி ஹல்க் மேன்’ என முதலில் யோசித்தவள்,
‘ஒருவேளை இது தான் தேவேந்திரனோ, அய்யோ வர மாட்டார் தானே சொன்னாங்க… இப்படி தீடிர்னு வந்து நிற்கிறார்’ என முதலில் பதட்டமானவள்
பின்பு ‘இதுவும் நல்லது தான் தியா நாம நிழற்படம் தேடினோம் இப்ப நிஜமே வந்து நிற்குதே என்று மகிழ்ந்தாள்’, தற்போது தான் அவன் அறையில் மாட்டி கொண்டு இருக்கோம் என்ற நினைவு இல்லாமல்,
‘ஹலோ பாஸ் சீக்கிரமா திரும்பி உங்க ஃபேஸ்ஸ காட்டுங்க காலையில் இருந்து பார்க்க திரவியா வெயிட்டிங்’ என்றாள் தனக்கு மட்டும் கேட்கும் குரலில், ஏனெனில் தேவா தியாவுக்கு முதுகு காட்டியபடி நின்று இருந்தான்..
‘தேவா அதே நிலையில் இருக்க உங்க திருமுகத்தை தான் ஒரு முறை திருப்பி காட்டுங்களேன் பாஸ்’ என்றாள் கடுப்பாகி அடுத்து நடக்க போகும் விபரிதம் தெரியாமல்,
தேவா கதவை லாக் செய்தான் தன்னிடம் இருந்த சாவியை வைத்து… அதன் பின்பு ஸ்டைலாக நடந்து உள்ளே வந்தான்… அவன் கதவை லாக் செய்வதை பார்த்த தியா அதிர்ந்தாள்…
‘அய்யோ இவன் என்ன கதவை லாக் பண்ணிட்டான் நான் இப்ப எப்படி வெளிய போறது’என்று அதிர்ந்தாள்…
‘தியா வசமா மாட்டிக்கிட்ட உனக்கு இது தேவையா, கதவை அவன் திறக்கற வரை இங்க தான் இருக்கனுமா,என்று தன் தலையில் கை வைத்து கொண்டாள்… நாம் யாருக்கு என்ன தீங்கு செய்தோம், நமக்கு மட்டும் ஏன் இவ்வாறு எல்லாம் நிகழ்கிறது’ என்று அந்நிலையிலும் கூட வடிவேல் டயலாக் பேசி அவரை போல் அழுதாள்…
பிறகு அவளே தியா பயப்படாத அவன் எப்படியும் ரெப்ரேஷ் ஆக ரெஸ்ட்ரூம் போவான் இல்ல கொஞ்ச நேரத்தில் தூங்கிருவான், அப்ப நாமா வெளிய போயிரலாம் அதுவரை இப்படி சத்தம் போடாமா நிற்போம் என்றாள் தனக்கு தானே சமாதானம் செய்து கொண்டவள்,
இப்போதும் கூட தீரைச்சீலை வழியே உற்று உற்று பார்த்தால் தேவா முகம் தெரிகிறதா என்று,
தேவா தான் அணிந்து இருந்த சட்டையை கழற்றினான்… ‘அச்சோ’ என சங்கடமாக வேறு பார்க்கும் திரும்பியவள், ‘ஹய்யா அப்படினா ரெஸ்ட் ரூம் போயிருவான் நாமா வெளியே போயிடலாம்’ என்று எண்ணினாள்…
ஆனால் அவனோ அவள் நினைப்பிற்கு மாறாக இடுப்பில் கை வைத்து மேலே பார்த்தபடி நின்று கொண்டு இருந்தான்… ‘இப்ப இந்த ஆளு ஏன் விட்டத்தை இப்படி வெறிக்க வெறிக்க பார்த்துட்டு நிற்கிறான்… அங்க என்ன ஐட்டம் சாங்கா ஓடுது.. ஓ… ஃபீல் பண்றாராமா வானத்தை பார்த்து, உனக்கு என்னயா ஃபீலிங் உன்கிட்ட வந்து மாட்டிக்கிட்டேன் பார்த்தியா எனக்கு தான்டா ஃபீலிங் எனக்கு தான்’ என்றாள் அடுத்து வடிவேல் பாணியில்,
‘சீக்கிரமா ஒரு முடிவுக்கு வாயா நான் எவ்ளோ நேரம் இப்படியே நிற்கிறது’ என்று தன் நிலையை நொந்து கொண்டாள்…
சிறிது நேரம் அப்படியே நின்று தேவா பிறகு தனது பெல்ட்டை கழற்றினான்…அடுத்து பேன்டின் மீது கை வைக்க இனி என்ன செய்ய போகிறான் என்பது தியாவிற்கு புரிய இரு கை கொண்டு தனது முகத்தை மூடினாள்…
‘யோவ் இங்க என்னயா ஜட்டி விளம்பரமா எடுக்குறாங்க பேன்ட்டை கழட்டிட்டு போஸ் கொடுக்க ரெஸ்ட் ரூம் போய் தொலையா’ என்று முகத்தை மூடியபடி தியா அவன் மீது எரிச்சல் பட்டாள்…
‘மேடம் இது அவனோட ரூம் இங்க அவன் ஜட்டியோட நிற்பான்.. ஏன் அது இல்லாமா கூட நிற்பான்… அடுத்தவன் ரூமை அநாகரிகமா எட்டி பார்க்க வந்தது உன் தப்பு’ என்று அவளின் மனசாட்சி அவளுக்கு இடித்துரைத்தது…
‘ஆமா ஆமா என் தப்பு தான் என் தப்பு தான்’ என முகத்தை மூடி கொண்டு புலம்பி கொண்டு இருந்தவளை ஒரு வலிய கரம் பிடித்து வெளியே இழுத்தது…
தீடிரென இழுக்கவும் பயந்தவள் ஆவென கத்தினாள்… தெரியாமல் வந்துட்டேன் சாரி சாரி என கண்ணை மூடியபடி உளற,
ஏய் யார் நீ ?
இங்க என்ன பண்ற? என்று தேவா கம்பீர குரலில் கேட்க ,
அதுவரை கண்களை மூடி இருந்தவள் அவனின் குரலில் ஈர்க்கப்பட்டு விழிகளை திறந்து எதிரே இருந்தவனை பார்த்தாள்…
யாரை பார்க்க வேண்டும் என்று காலையில் இருந்து தவித்தாளோ அவனின் முகத்தை இமைக்க கூட மறந்து பார்த்து கொண்டு இருந்தாள் திரவியா… அவளின் உதடுகளோ ‘தேவேந்திரன் அப்படின்னு கரெக்டா தான் பெயர் வச்சிருக்காங்க’ என்று மெல்ல முனுமுனுத்தது…