தேவா, சூர்யா இருவரும் கிச்சனில் சமைத்து கொண்டு இருந்தார்கள்.. தியா ஷோபாவில் படுத்து மொபைல் நோண்டி கொண்டு இருந்தாள்…
“தியாமா” என்று சந்தோஷமாக கத்திக் கொண்டே உள்ளே ஓடி வந்து அவளை அணைத்து கொண்டாள் ஹரிணி..
“காலையில்ல நான் எழுந்த போது தான் தெரிஞ்சது நீ நைட்டு வீட்டுக்கு வரவே இல்லைன்னு, உன் நம்பருக்கு கால் பண்ணா சுவிட்ச் ஆஃப்ன்னு வந்துச்சு, என்னவோ ஏதோன்னு பயந்துட்டேன்டா, அதுக்கு அப்புறம் சபரி மூலமா தான் தெரிஞ்சது நைட்டு நடந்தது எல்லாம் ஹாப்பி மேரிட் லைஃப் தியாமா, சொன்ன மாதிரியே உன் பாவாவையே கல்யாணம் பண்ணிட்டியே, உனக்கு மேரேஜ் ஆனதில் உன்னை விட எனக்கு தான் ரொம்ப சந்தோஷம் தெரியுமா?
“தெரியும் ஹனிமா ஏன்னா நீ தான் என் நண்பேன்டா ஆச்சே, எனக்கு ஒரு நல்லது நடந்தா என்னை விட நீ தான் அதுக்கு சந்தோஷப்படுவேன்னு தெரியும்டா”,
அது எல்லாம் ஒன்னுமில்லை, பாவா எங்க இருப்பார்? ஹனிமா,பாவா சாப்பிடுருப்பாரா? பாவா தூங்கி இருப்பாரே? பாவா ஏன் வீட்டில் இருக்க மாட்டேங்கிறார்?பாவாக்கு என்ன பிரச்சினை எதற்காக இப்புடி இருக்கிறார்? பாவா, பாவா, பாவான்னு மொக்கை போட்டு என் உயிரை எடுக்க மாட்டால்ல அதான் ஹாப்பின்னு சொன்னேன்” என்று கூறி சிரித்த ஹரிணியை தியா முறைத்தாள்…
“கூல் கூல் சும்மா ஒரு ஜாலிக்கு சொன்னேன் டா, நிஜமா ரொம்ப சந்தோஷமா இருக்குடா” என்று ஹரிணி உள்ளார்ந்த மகிழ்வுடன் கூற தியா அவளை அணைத்து கொண்டாள்…
மற்ற அனைவரையும் விட ஹரிணிக்கு தானே தெரியும். தியா தேவா மீது எவ்வளவு காதல் வைத்து இருந்ததால், அவனை பார்க்க வேண்டும் என்பதற்காக எவ்வளவு கஷ்டப்பட்டாள், கடந்த காலத்தில் அவன் பட்ட கஷ்டங்களை நினைத்து எவ்வளவு அழுது வருத்தப்பட்டாள் என்பது, தியாவின் காதல் ஒரு வகை பைத்தியக்கார தனமாக ஹரிணிக்கு தோன்றினாலும், அவளின் அன்பை பார்த்து அவள் காதல் கைக்கூட வேண்டும்.. தேவாவோ தியா பெற்றோரோ அவளின் காதலை ஏற்காமல் அவள் மனதை கஷ்டப்படுத்தி விடுவார்களோ, அதனால் தன் தோழி வருத்தப்படுவாளோ என்று எல்லாம் நினைத்த ஹரிணிக்கு, இப்போது தியா தேவா திருமணம் மகிழ்ச்சியையே கொடுத்தது.
அதன் பிறகு தியா இரவு என்னவெல்லாம் நடந்தது தன் திருமணம் நடந்த விதம் அனைத்தையும் கதை போல ஹரிணியிடம் கூறி முடித்தாள்..
அனைத்தையும் கேட்ட ஹரிணி அமைதியாக எதையோ யோசித்து கொண்டு அமர்ந்து இருக்க,
என்னாச்சு ஹனி அமைதியா இருக்க?
“ஒன்னும் இல்லடா நான் உன் க்ளோஸ் ப்ரெண்ட்டு தானே”
“ஆமா அதில்ல என்னடா உனக்கு சந்தேகம்”
“அப்ப என்கிட்ட மட்டும் உண்மையை சொல்லு போலீஸ் அவங்களாவே வந்தாங்களா? இல்ல இந்த போலீஸ் மேரேஜ் எல்லாம் உன்னோட செட்டப்பா?” என்று ஹரிணி மெதுவாக கேட்டாலும் சமையலை முடித்து விட்டு வெளியே வந்த தேவா காதிலும் அது விழுந்தது..
அட மலகுரங்கே உனக்கு ஏண்டி இப்புடி ஒரு டவுட்டு என்று ஹரிணியை திட்டிய தியா அப்போது தான் அங்கு கையை கட்டிக் கொண்டு தன்னை முறைத்து கொண்டு இருக்கும் தேவாவை பார்த்தாள்..
“அப்ப இது எல்லாம் உன் ப்ளானிங் தானா” கோவமாக தேவா கேட்டான்.
“அய்யோ பாவா என தன் தலை மீது கை வைத்தவள் ப்ராமிஸ்ஸா நான் எதுவுமே பண்ணலை, இந்த குரங்கு பேச்சை எல்லாம் கேட்காதீங்க..
நீ எல்லாம் ஒரு ப்ரெண்டா எருமை? இப்புடி கோர்த்து விட்டுறீயே என ஹரிணியை திட்ட
“தியாமா நீ எதுவுமே பண்ணல ஓகே, ஆனா எப்படி போலீஸ் கரெக்டா அந்த டைம்க்கு அந்த இடத்துக்கு வந்துருக்கும் ” என்று மறுபடியும் தனது சந்தேகத்தை கேட்க.
“போலீஸ் தானா வரலை, அவங்களை பணம் கொடுத்து வர வச்சு இருக்காங்க” என்றபடியே வீட்டுக்குள் வந்தான் சபரி..
“யாரு?” தியா, ஹரிணி, சூர்யா மூவரும் ஒரு சேர கேட்க.
ஹர்ஷா என்றான் சபரி. அந்த பெயரை கேட்டதும் தேவா புருவத்தை சுருக்கி யோசிக்க ஆரம்பிக்க…
“யாரு அது?”என கேட்டனர் தியா ஹரிணி இருவரும்…
தியா அன்று அவனை சூப்பர் மார்க்கெட்டில் வைத்து பார்த்து இருந்தாலுமே அவன் பெயர் அவளுக்கு தெரியாது… ஹரிணியை பொறுத்தவரை அவன் பெயர் பிச்சாண்டி என்பதே, அதனால் ஹர்ஷா என்றதும் இருவருக்கும் தெரியவில்லை..
“ஆரோக்கியம் ஹாஸ்பிடல் டீன் மகேஸ்வரனோட ரிலேட்டிவ்”என்று கூறினான் சபரி..
ஹர்ஷாவா அது எப்புடி உனக்கு தெரியும்.. நீ எப்புடி கண்டுபிடிச்ச சூர்யா சபரியை பார்த்து கேட்க,
“அதுவா நேத்து நைட்டு போலீஸ் எப்படி வந்தாங்கனு உங்களுக்கு எல்லாம் இப்ப டவுட்டு வந்ததுல்ல, ஆனா தேவா சார்க்கு நைட்டே வந்துட்டு, இன்ஸ்பெக்டர் சரவணன் தானா அதை பண்ணலை யாரோ சொல்லி தான் பண்ணி இருக்கார்.. அது யாரு என்னனு கண்டுபிடின்னு சொன்னாங்க..அதனால் நானும் அந்த இன்ஸ்பெக்டர் கிட்ட பலவிதமா நைசா பேசி விஷயத்தை கறந்துட்டேன். ஹர்ஷா தான் இப்புடி எல்லாம் பண்ண சொல்லி பணத்தையும் கொடுத்து இருக்கான்” என்றதும் சூர்யாவுக்கு பயங்கர கோவம் வந்தது..
“இந்த பரதேசி எதுக்காக இப்படி எல்லாம் பண்ணுனான். பாப்பு உனக்கும் ஹர்ஷாவுக்கும் என்ன பிரச்சினை?”
“ஹர்ஷா யாருன்னே எனக்கு தெரியலையே” என்று தியா கூறியதும் சூர்யா தனதே மொபைலை எடுத்து அதில் இருந்த ஹர்ஷா புகைப்படத்தை காண்பித்தான்…
“இவனா” என்ற தியா அதிர்ச்சியாக, அவளை விட அதிர்ந்தது ஹரிணி..
“அப்ப இவனை உனக்கு முன்னவே தெரியுமா?” தேவா கேட்க
தெரியும் என்ற தியா அன்று சூப்பர் மார்க்கெட்டில் ஹர்ஷா ஹரிணியிடம் வம்பு இழுத்தது அதன் பிறகு தியா அவனை அடித்தது என் அனைத்தையும் கூறி முடித்தாள்…
தேவாவுக்கு ஹர்ஷா மீது பயங்கர கோவம் வந்தது. எப்புடி அவன் தியாவை அசிங்கப்படுத்த நினைப்பான் என்று,
“இவ்வளவு நடந்து இருக்கு ஏன் நீங்க இரண்டு பேரும் எங்க கிட்ட சொல்லவே இல்லை. ஹரிணி உன்கிட்ட அவன் ஹாஸ்பிடல் வச்சு பர்ஸ்ட் டைம் பிரச்சினை பண்ண அப்பவே என்கிட்ட சொல்லி இருந்தா நான் அவனை உண்டு இல்லைன்னு பண்ணி இருப்பேனே சபரி ஹரிணியை திட்டிய கொண்டு இருந்தான்…
ஹரிணி காதில் சபரி திட்டியது எதுவுமே விழவில்லை.. ஹர்ஷா தான் இதை செய்திருக்கின்றான் என்றதுமே உள்ளுக்குள்ளே உடைந்து போனாள். அழுகை வரும் போல இருந்தது. பல்லை கடித்து நின்றாள். கடந்த ஒரு வார காலமாகவே பொறுக்கி பொறுக்கி எப்புடி எனக்கே அவன் முத்தம் கொடுப்பான் பொறுக்கி என்று ஹர்ஷாவை பல முறை திட்டினாலும், அவனை பற்றியே நினைக்க கூடாது என்று தனக்கு தானே கோடி முறை கூறினாலும். அவனின் நினைவும் அவன் முத்தமிட்ட காட்சியும் நினைவடுக்கில் இருந்து மறைய மறுத்தது.. அவன் முத்தமிட்ட உதடு இன்னுமே குறுகுறுப்பை உணர்ந்தது. உடலிலும் உள்ளத்திலும் இதுவரை அவள் அறியாத உணர்வுகளை உணர்ந்தாள்.. ஹர்ஷா மீது அவளுக்கே தெரியாமல் மனதில் சின்ன ஈர்ப்பு ஏற்பட்டு இருந்தது. அதனாலேயே இப்போது அவன் தோழிக்கு அநீதி இழைத்து உள்ளான் என்பதை அறிந்ததும் அந்த உள்ளம் கலங்கியது… அவனே ஒரு பொறுக்கி, பார்த்த முதல் தடவையே ஒரு பொண்ணுக்கு முத்தம் கொடுத்து அநாகரீகமான நடந்துக்கிட்ட பொறுக்கி. அவன் இப்புடி தான் நடந்திருப்பான். அதுக்காக நீ ஏன் வருத்தப்படுற தனக்குள்ளே இந்த கேள்வியை கேட்டு தன்னை தானே சமன்படுத்தி கொண்டு இருந்தான்…
அந்த ஹர்ஷாவை சும்மா விடவே கூடாது மச்சான்.. எவ்ளோ தைரியம் இருந்தா பாப்புவை அசிங்கப்படுத்த நினைச்சு இருப்பான்.. அவனை என்று சூர்யா பேசி கொண்டு இருக்கும் போதே, தேவா அங்கிருந்து வெளியேறி இருந்தான் தியாவை இழுத்து கொண்டு,
“ஏன் திவா அண்ணா இப்புடி பண்ணுன? “திவேஷ் சண்டையை பிடித்து கோவமாக கேட்டான் ஹர்ஷா..
அவனின் கையை சட்டையிலிருந்து தட்டி விட்ட திவேஷ் “டேய் நீ சொல்லி தானே டா நான் பண்ணுனேன்.. இப்ப வந்து என்ன கேள்வி கேட்கிற”?
பொய் சொல்லாத நான் எப்ப சொன்னேன்.
“நீதானடா அந்த தியா புள்ளை உன்னை அடிச்சிட்டான்னு அவளை சும்மா விடக்கூடாது ஏதாவது பண்ணனும்னு சொல்லி இரண்டு நாளா புலம்பிட்டு இருந்த, அதனால் தான் உன்னை பொது இடத்தில்ல வச்சு அடிச்சி அசிங்கப்படுத்தி வருத்தப்பட வச்ச தியா வை பழி வாங்க தான் இப்புடி பண்ணுனேன்”..
அவ என்னை அடிச்சது கோவம் தான். கோவத்தில் அவளை ஏதாவது பண்ணனும் சொன்னேன் தான். ஆனா இவ்வளோ கீழ்தரமான காரியத்தை பண்ண சொல்லவே இல்லை. அதும் உன்கிட்ட நான் எதுவுமே பண்ண சொல்லல. அப்புறம் எதுக்காக நீ இப்புடி பண்ணுன? அதும் என் பேரை பயன்படுத்தி,
“ஆமாடா நீ எதுவும் சொல்லல தான். நானா தான் பண்ணுனேன். ஏன்னா நான் உன்னை என் சொந்த தம்பியா தான் பார்க்கிறேன். உன்னை ஒரு சின்ன பொண்ணு அசிங்கப்படுத்தினதை என்னால் தாங்கிக்க முடியலை அதனால் தான் அவளை அசிங்கப்படுத்தனும் நினைச்சு பண்ணுனேன்”..
திவேஷ் கூறியதை கேட்ட ஹர்ஷா அவனை பார்த்து நக்கலாக சிரித்து விட்டு “இந்த மாதிரி நெஞ்சை நக்குற வசனத்தை எல்லாம் வேற யார்கிட்டயாவது பேசு திவா அண்ணா. என்கிட்ட வச்சிக்காதா. எனக்காக நீ பண்ணுனயா? விரல் சப்பிக்கிட்ட இருக்கிற பாப்பா கூட நீ சொல்றதை எல்லாம் நம்பாது.. உனக்கு தேவா மேல்ல காண்டு, அவன் கிட்ட நேரடியா மோத பயம், அதான் கோழை மாதிரி எனக்கும் அந்த பொண்ணு தியாவுக்கும் இருந்த சின்ன பிரச்சினையை வச்சு இடையில்ல உன் இஷ்டத்துக்கு விளையாடிட்ட”,
“அப்புடி எல்லாம் இல்லடா என்று பேச வந்த திவேஷை கை நீட்டி தடுத்த ஹர்ஷா, நீ தேவாவுக்கு எதிராக என்ன வேணா பண்ணு ஆனா அதை நேரடியா பண்ணு, என் பேரை பயன்படுத்தி இனிமே எதுவும் பண்ணாத, அப்புடி மறுபடியும் ஏதாவது என் பெயரை மிஸ்யூஸ் பண்ணினன்னு வை அவ்ளோ தான் வேற மாதிரி ஒரு ஹர்ஷா வை நீ பார்ப்ப, பர்ஸ்ட் இங்கிருந்து வெளிய போ கெட் அவுட்” என்றதும் திவேஷ் கோவமாக அந்த அறையில் இருந்து வெளியேறினான்…
ஹர்ஷா தொப்பென சேரில் அமர்ந்தான்.. திவேஷ் மீது பயங்கர கோவமாக வந்தது.. வாட்டர் கேனை ஓபன் பண்ணி தண்ணிரை மளமளவென குடித்தான். கோவம் கொஞ்சமாக மட்டுபட்டது. தியாவை போலீஸ் அழைத்து சென்றதற்கு காரணம் திவேஷ் தான். அவன் தான் ஹர்ஷா பெயரை பயன்படுத்தி போலீஸ்க்கு பணம் கொடுத்து அவ்வாறு செய்ய வைத்தது.. அதை தெரிந்ததும் ஹர்ஷா அதிர்ந்தான்.. ஏனெனில் ஹர்ஷா அந்த அளவுக்கு கெட்டவன் இல்லையே. அவனுக்கு முன் கோவம் பயங்கரமாக வரும். கோவத்தில் வார்த்தைகளை விடுவான் இல்லை முட்டாள் தனமாக எதையாவது செய்வான் அவ்வளவு தான்.. கல்லூரியில் கூட எவ்வளவோ பிரச்சினைகளை செய்து உள்ளான் தான்.. ஆனால் பெண்களிடம் எந்த வம்பும் பிரச்சினையும் வைத்து கொள்ள மாட்டான்.
அன்று ஹரிணியிடம் ஏன் அவ்வாறு நடந்து கொண்டோம் என்று தன்னைத் தானே கடிந்து கொண்டான். அதற்காக அவளிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று நினைத்தான். சூப்பர் மார்கெட்டில் ஹரிணியை பார்த்து மன்னிப்பு கேட்க போன இடத்தில் தான் அவனுக்கும் தியாவிற்குமான பிரச்சினையே நடந்தது. தியா அடித்ததும் இவனுக்கு கோவம் வந்தது தான். பதிலுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைத்தான் தான். இப்போது கூட அவளை பிடிக்கவில்லை தான். அதற்காக தியா வை இப்புடி அசிங்கப்படுத்த வேண்டும் என்று அவன் நினைத்ததில்லை..
அதிலும் திவேஷ் இதில் தன் பெயரை பயன்படுத்தியது தான் பயங்கர கோவமாக வந்தது.. இது வெளிய தெரிந்தால் மகேஸ்வரன் கோவப்படுவார்.. மற்றவர்கள் தன்னை தவறாக எண்ணுவார்கள் என்பது எல்லாம் விட, அவள் என்ன நினைப்பாள்.. தன்னை தவறாக எண்ணி விடுவாளோ அந்த கவலை தான் அதிகம் இருந்தது.. யார் தன்னை பற்றி என்ன நினைத்தால் எனக்கென்ன என்று எண்ணுபவன் தான். ஆனால் அவள் ஒருத்தி மட்டும் ஹரிணி மட்டும் தன்னை தவறாக நினைக்க கூடாது என்று மனம் ஏங்கியது. ஏன் என்று தெரியவில்லை. ஒரே ஒரு முறை மட்டுமே பார்த்த அவள் தன்னை தவறாக நினைக்க கூடாது என்று ஏன் தோன்றுகிறது? என்று சிந்தித்து கொண்டு இருக்கும் போதே கதவு படாரென என்ற சத்தத்துடன் திறந்தது. தேவா எதிரே நின்று இருந்தான்.
தொடரும்…
விடாமல் துரத்துராளே 33
தேவா எங்கு திரும்பி வரவே கூடாது என்று முடிவு எடுத்து இருந்தானோ இன்று அந்த ஆரோக்கியம் மருத்துவமனையில் கால் எடுத்து வைத்திருக்கின்றான் தியாவுக்காக, நேற்று அவன் திருமணம் முடிந்ததிலிருந்தே அவனுக்கு ஒரு சந்தேகம்.. எதர்சையாக அந்த நேரத்தில் போலீஸ் அங்கு வந்து இருக்க வாய்ப்பில்லை, நிச்சயம் இதில் வேறு ஏதோ காரணம் உள்ளது என்ற சந்தேகம் ஏற்பட்ட சபரியை விசாரிக்க சொன்னான். சபரி ஹர்ஷா தான் என்று கூறியதுமே தேவாவுக்கு முதலில் அதிர்ச்சி தான். ஹர்ஷா இவ்வளவு கீழிறங்க மாட்டான் என்று தோன்றியது. ஆனால் சில நொடிகளிலே யாரையுமே நம்ப கூடாது என்று அவனின் இந்த 5 வருட வாழ்க்கை இடித்துரைத்தது.. அது போக இப்போது ஹர்ஷா திவேஷ் நெருக்கத்தில் உள்ளான். அதனால் ஹர்ஷா இதை செய்திருக்க அதிக வாய்ப்பிருக்கிறது என்றும் நம்பினான். நேற்று தியா போலீஸ் ஸ்டேஷனில் அழுத முகமாக நின்று இருந்த காட்சியே திரும்ப திரும்ப கண்முன் வந்தது. அதனால் தியாவையும் இழுத்து கொண்டு இங்கு வந்து விட்டான்…
தேவாவும் தியாவும் ஹர்ஷா எதிரே நின்று இருந்தார்கள்..
தியா விஷயம் அறிந்து தான் தேவா வந்து இருக்கின்றான் என்பது புரிந்தது ஹர்ஷாவுக்கு, தன்னிச்சையாக இருக்கையில் இருந்து எழுந்து நின்றான். 5 வருடங்களுக்கு முன்பு வரை எப்போது இங்கு வந்தாலும் தேவா அண்ணா தேவா அண்ணா என்று தேவா பின்பே சுற்றியது நினைவுக்கு வந்தது ஹர்ஷாவுக்கு, தன் தலையை உலுக்கி நினைவை எல்லாம் ஓரம் தள்ளி வைத்தான். அதன் பின்பு தேவாவை பற்றி அவனிடம் கூறப்பட்ட வதந்திகளை நினைவில் கொண்டு வந்து நிறுத்தினான். தேவா மீது கோவம் ஏற்பட்டது நிமிர்ந்து நேராக நின்றான்…
தேவாவும் அவனை கூர்மையாக பார்த்தபடி அந்த அறைக்குள் வந்தான். இருவரும் எதிரெதிரே நின்று இருந்தனர். இருவருமே ஒரு வார்த்தை கூட பேசவில்லை. ஆனால் பார்வையால் ஒருவரை ஒருவர் எரித்துக் கொண்டு நின்று இருந்தனர்..
அதே நேரம் தேவா வந்த விஷயம் கேள்விப்பட்டு மகேஸ்வரனும் திவேஷும் கூட அங்கு வந்தனர்.
திவா வாயை மூடு என்று சத்தம் போட்ட மகேஸ்வரன் தேவாவை பார்த்தார்.
கண்ணா என்று அழைத்தபடி அருகில் வந்த மகேஸ்வரனையும் திவேஷையும் தேவா ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை அலட்சியமாக அவர்களை ஒரு பார்வை பார்த்தவன்,
ஹர்ஷா விடம் திரும்பி, “சின்ன பொண்ணு அவளே உன்னை நேருக்கு நேரா அறைஞ்சு இருக்கா, அவளை பழி வாங்குறேன்னு நீ கேவலமா கோழை மாதிரியான வேலையை பார்த்து வச்சு இருக்க அசிங்கமா இல்ல” என்று பேசியபடியே அருகே வந்த தேவா ஐந்து விரல்களை மடிக்கி ஓங்கி குத்த போக,
இதை சற்றும் எதிர்பார்க்காத ஹர்ஷா தனது கை இரண்டையும் எக்ஸ் வடிவத்தில் முகத்துக்கு நேராக வைத்து தடுத்தான். ஆனால் தேவா குத்தவில்லை…
“பொண்ணுங்க கிட்ட மட்டும் வீரத்தை காட்டுற உன்னை மாதிரி ஆளுங்களை எல்லாம் அடிச்சா அது எனக்கு தான் அசிங்கம். நீ பண்ணுன காரியத்திற்கு ஒழுங்கா என் பொண்டாட்டி கிட்ட மன்னிப்பு கேளு” ஹர்ஷா வை பார்த்தபடி அழுத்தமாக கூறினான்.
“ஏய் யாரை மன்னிப்பு கேட்க சொல்ற என்னால்ல எல்லாம் முடியாது” என்று ஹர்ஷா எகிறி கொண்டு வர, அவனின் கையை பிடித்து தடுத்து நிறுத்தினார் மகேஸ்வரன்.
“ஹர்ஷா என்ன நடந்தது? தியா கிட்ட நீ மன்னிப்பு கேட்கனும் கண்ணா சொல்ற அளவுக்கு நீ என்ன பண்ணுன?” என்று கேட்டார்..
“உன் மருமகன் தானே அதான் உன்னை மாதிரியே பொறுக்கி தனம் எல்லாம் பண்றான்” என்றபடியே உள்ளே வந்தான் சூர்யா கூடவே சபரியும் வந்து இருந்தான்…
“ஏய் என் மாமாவை மரியாதை இல்லாமா பேசாதா?”
ஆமா இந்தாளுக்கு மரியாதை ஒன்னு தான் குறைச்சல் சூர்யா அலட்சியமாக மகேஸ்வரனை பார்க்க
ஏய் என்று சூர்யாவிடமும் ஹர்ஷா சண்டைக்கு போக “ஹர்ஷா”என அவனை அடக்கிய மகேஸ்வரன் “அப்புடி என்ன தான் பண்ணுனான்” என்று சூர்யாவிடம் கேட்க.
சபரி நேற்று இரவு நடந்ததை சொல்லி முடித்தான்.
அதை கேட்ட மகேஸ்வரன் “என்ன ஹர்ஷா இது எல்லாம். உன்கிட்ட இருந்து இதை நான் எதகர்பார்க்கவே இல்லை என அதிருப்தியை அவனிடம் காட்டியவர் “தியா கிட்ட முதல்ல மன்னிப்பு கேளு” என்றார்..
ஹர்ஷா முடியாது எனும் விதமாக அமைதியாக நின்றான்.
“சார் ஹர்ஷா எதுக்காக மன்னிப்பு கேட்கனும்? அவன் என்ன பண்ணுனான். நடுராத்திரி எந்த நல்ல குடும்பத்து நல்ல பொண்ணாவது வெளிய போகுமா? இந்த பொண்ணு அர்த்த ராத்திரியில்ல எவனையோ எங்கையோ தேடி போய் போலிஸ்கிட்ட பிராத்தல் கே…” அதுக்கு மேல் திவேஷால் எந்த ஒரு வார்த்தையையும் பேச முடியவில்லை. அந்த அளவு தேவா அவன் கழுத்தை அழுத்தி பிடித்து இருந்தான்.. கழுத்தை பிடித்தபடியே திவேஷை பின்னால் இருந்த சுவரோடு சேர்த்தபடி இரண்டடி மேலே தூக்கினான்.
இவ்வளவு நேரம் இங்கு நடப்பதை எல்லாம் வேடிக்கை பார்த்து கொண்டு இருந்த தியா அதிர்ந்தாள்..
திவேஷ் கால்கள் தொங்கியபடி தேவாவிடமிருந்து விடுபட முயற்சித்தான்… அவன் தன் இரு கைகளாலும் தேவா கையை எடுக்க முயற்சி செய்தான். சுற்றி இருந்த மகேஸ்வரன் ஹர்ஷா ஒரு புறமும், சூர்யா சபரி ஒரு புறமும் தேவா கையை பற்றி இழுத்தார்கள் ஆனால் அவர்கள் முயற்சி வீணானது. தேவா கையை அசைக்க கூட முடியவில்லை. திவேஷ்க்கு கண் முழி பிதுங்க தொடங்கியது.
மகேஸ்வரன்,”கண்ணா அவனை விட்டுரு ப்ளீஸ் கண்ணா”
சபரி,”சார் விட்டுருங்க ஏதாவது ஆகிட போகுது”.
“டேய் தேவா இந்த நாயை விட்டு தொலை செத்து கித்து தொலைச்சிட போறான். தேவா வேண்டாம்டா கையை எடு”.
“பாவா விடுங்க வேணாம் பாவா விட்டுருங்க.. ப்ளீஸ் பாவா சண்டை எதுவும் வேணாம்”..
தேவா கண்கள் சிவக்க திவேஷை பார்த்தவன் “இன்னோரு முறை என் பொண்டாட்டி பத்தி ஒரு வார்த்தை பேசுனா அவ்ளோ தான்* என்றவன் இன்னும் அழுத்தமாக கழுத்தை ஒரு முறை அழுத்தி விட்டு கையை எடுத்தான். திவேஷ் பொத்தென தரையில் விழுந்தான். கழுத்தை பிடித்து கொண்டு இரும ஆரம்பித்தான்.
“எங்க ஹாஸ்ப்பிடலுக்கு வந்து எங்க கிட்டயே பிரச்சனை பண்றாயா உன்னை” என்று தேவா மேல் பாய போன ஹர்ஷா கன்னத்தில் அறைந்தார் மகேஸ்வரன்.
“எல்லாம் உன்னால்ல தான்டா முதல்ல தியா கிட்ட மன்னிப்பு கேளு” என கோவப்பட்,
“முடியாது… அவ என்னை அடிச்சா பதிலுக்கு நான் இப்புடி பண்ண பண்ணுனேன்.. அவ்ளோ தான் அது முடிஞ்சது.. இவன் வேணும்னே வந்து இப்ப சீன் கிரியேட் பண்ணிட்டு இருக்கான்,நீங்க தள்ளிக்கோங்க அவனா நானான்னு பார்த்துக்கிறேன்” என்றவன் கன்னத்தில் மறுபடியும் அறைந்த மகேஸ்வரன் “மன்னிப்பு கேளு ஹர்ஷா” முடிவாக கூறினார்.
ஹர்ஷா அமைதியாக நின்றான்.
“ஹர்ஷா சாரி கேட்க சொன்னேன்..
இப்ப சாரி கேட்க முடியுமா முடியாதா” என்ற மகேஸ்வரனிம் முடியாது என தலை அசைத்தான் ஹர்ஷா.
“ம்ம். அப்ப சரி உனக்கு பதிலா நான் கேட்கிறேன் என்றவர் தேவா புறம் திரும்பி “கண்ணா பிரச்சினை எதுவும் வேணாம் அவனுக்கு பதிலா நான் மன்னிப்பு கேட்கிறேன். அவனை மன்னிச்சிரு. இனிமே அவன் உன் விஷயத்திலோ தியா விஷயத்தில்லோ தலையிட மாட்டான்.. தியாம்மா நீயும் அவனை மன்னிச்சிடும்மா” என்று உண்மையான வருத்தத்துடன் மன்னிப்பு கேட்டார்…
“நீங்க இரண்டு பேரும் இன்னோரு தடவை என் பொண்டாட்டி விஷயத்தில் ஏதாவது பண்ணீங்கனா, இப்புடி பேசிட்டு எல்லாம் இருக்க மாட்டேன்.. உங்களை எல்லாம் மொத்தமா வச்சு கொளுத்தி விட்டுருவேன்” என்று திவேஷ் சபரியை எச்சரித்து விட்டு வெளியேறினான்..
“பாப்பு வா போலாம்” சூர்யா அழைக்க,
“இருடா அண்ணா என்றவள், ஹர்ஷா அருகே வந்து, ஹர்ஷா ரொம்ப ரொம்ப தாங்க்ஸ் என்றாள்…
“அவனுக்கு எதுக்கு தாங்க்ஸ் சொல்ற? “சபரி சூர்யா இருவரும் ஒரு சேர கேட்டார்கள்..
“ஏன்னா எனக்கும் பாவாக்கும் கல்யாணம் நடந்ததே இவனால்ல இல்ல இல்ல இவரால் தானே அதுக்கு தான் தாங்க்ஸ்”. இவர் இந்த மாதிரி பண்ணதால்ல தானே பாவா என்னை கல்யாணம் பண்ணுனார்… நீங்க இரண்டு பேரும் வேஸ்ட்டுடா எத்தனை ப்ளான் சொன்னீங்க அத்தனையும் மொக்கை. ஆனா பாரேன் இவன் ஒரே ஒரு ப்ளான் பண்ணி எங்களை ஒன்னு சேர்த்து வச்சிட்டான், ஹர்ஷா உன்மேல்ல எனக்கு இருந்த கோவம் கூட ஓடியே போயிருச்சு.. நாளைக்கு நீ யாரையாவது லவ் பண்ணி அதுல்ல ஏதாவது பிரச்சினை வந்தா, நான் உன் லவ்க்கு ஹெல்ப் பண்ணி இந்த நன்றிக்கடனை அடைக்கிறேன்.. இப்ப ரொம்ப தாங்க்ஸ்” என்றவள் தேவா பின்னே ஓட, ஹர்ஷா அவளை முறைத்தான்..
சூர்யாவும் சபரியும் தலையில் அடித்து கொண்டார்கள்..
“ஏய் தியா கிட்ட மட்டும் இல்ல ஹரிணிக்கிட்டயும் எந்த பிரச்சனையும் நீ பண்ண கூடாது. இனிமே ஏதாவது பண்ணுனா ஈவ் டீசிங் கேஸ்ல உள்ள போட்டுருவேன் ஜாக்கிரதை” என ஹர்ஷாவை விரல் நீட்டி எச்சரித்தான் சபரி..
இவன் யாரு? என்ன மிரட்ட, எவ்வளவு தைரியம் இருந்தா என்ன மிரட்டுவான்.. மாமா மட்டும் இல்லைன்னா இவனை உள்ளுக்குள் கொதித்தவன், ஓ.. அவகிட்ட பிரச்சினை பண்ண கூடாதாமே அப்புடி தான்டா பண்ணுவேன்.. நீ என்ன கிழிக்கிறேன்னு நானும் பார்க்கிறேன் என்றபடி சபரியை சென்ற வழியை வெறித்தான்..
தேவா திருமணமான செய்தியை பற்றி திவேஷிடம் பேசுவதற்கென வந்த ஜீவா தந்தை செந்திலும் அந்த அறையில் இவ்வளவு நேரம் நடந்த அனைத்தையும் பார்த்து கொண்டு இருந்தவர் இப்போது தேவா தியா பின்னே அவரும் சென்றார்…
அந்த அறையை விட்டு வெளியே வந்த தேவா மருத்துவமனை வாயிலை நோக்கி நடக்க ஆரம்பித்தான். அவர்கள் இருந்தது இரண்டாம் தளம். கீழே செல்வதற்கான லிஃப்ட் அந்த பெரிய வராண்டாவின் இறுதியில் இருந்தது… தேவா அந்த லிஃப்ட்டை நோக்கி நடந்தான். அவனின் அருகே எப்போதும் போல அவனின் நடைக்கு ஈடு கொடுக்க முடியாத தியா ஓட்டமும் நடையுமாக அவனுடன் நடந்தாள் தியா. வராண்டா ஆள் அரவம் இல்லாமல் அமைதியாக இருந்தது… இவர்கள் நடக்கும் சத்தம் மட்டுமே கேட்டது… இந்த வழி ஆரோக்கியம் மருத்துவமனை மருத்துவர்கள் மட்டுமே பயன்படுத்துவது..
“எனக்காகவா”?
“எது”?
“இந்த ஃபைட் சண்டை எல்லாம்”.
“இல்லையே. அவனுங்க மேல்ல எல்லாம் ஏற்கெனவே செம காண்டு.. இன்னைக்கு தான் சான்ஸ் கிடைச்சது அதான் நாலு காட்டு காட்டினேன்”..
“சும்மா பொய் சொல்லாதீங்க பாவா எனக்காக தான் எல்லாம் எனக்கு தெரியும்”..
” உண்மையாவே உனக்காகலாம் இல்லை. ஆமா உனக்காக நான் ஏன் ஃபைட் பண்ண போறேன்”…
“ஏன்னா நான் உங்க வொய்ஃப்”
அதை கேட்டு நடந்து கொண்டு இருந்த தேவா நின்று தியா பார்த்து கேலியாக சிரித்து வொய்ஃப் லவ்வர் இதை எல்லாம் நீயாவே சொல்லிட்டு இருக்க.. நான் இதை இரண்டையும் இன்னும் அக்சபட் பண்ணவே இல்லையே பாப்பா என்றவனை முறைத்தாள்,
“இப்ப அவங்க கிட்ட வார்த்தைக்கு வார்த்தை பொண்டாட்டி பொண்டாட்டின்னு சொன்னீங்களே அது எல்லாம் பொய்யா கோபால்”
இல்லை என தலை அசைத்தேன் “இந்த ஊருக்கும் உலகத்துக்கும் முன்னாடி நீ என் பொண்டாட்டி தானே அதான் சொன்னேன்”.. அவன் கூறியதை கேட்டு தியா முகம் மலர்ந்தது.. ஆனா என் மனசு அதை இன்னும் ஏத்துக்கவே இல்லையே பாப்பா என்றதும் முகம் சுருங்கியது..
“ஏன் ஏன் ஏன் ஏதுக்கல”?
“இதுக்கு பதில் நான் ஏற்கெனவே நிறைய தடவை சொல்லிட்டேன் பாப்பா”..
“பாப்பா வா? சும்மா சும்மா பாப்பா பாப்பா சொல்லாதீங்க… நான் என்ன குட்டி புள்ளையா பாப்பா சொல்றதுக்கு என்னையை பாப்பான்னு கூப்படாதீங்க பாவா”..
“ஏன் சொல்ல கூடாது? என் கண்ணுக்கு நீ குட்டி பாப்பாவா தான் தெரியுற”
“அதனால்ல தான் கூப்டாதீங்க சொல்றேன். நான் உங்க கண்ணுக்கு பொண்டாட்டியா தெரிஞ்சா போதும். பாப்பாவா ஒன்னும் தெரிய வேணாம். என் பேர் சொல்லி கூப்டுங்க. பாப்பான்னு கூப்டாதீங்க என்றாள் கோவமாக”…
முடியாது உன் இஷ்டத்திற்கு எல்லாம் க திரவியா வெள்ளையா பச்சையான்னு எல்லாம் கூப்பிட முடியாது.. பாப்பான்னு தான் கூப்பிடுவேன் என்றான் தேவா..
பேசி கொண்டே நடந்தவர்கள் லிஃப்ட் அருகே வந்து இருந்தார்கள்.. லிஃப்ட் பட்டனை தட்டி விட்டு திரும்பி தியாவை பார்த்தான். அவள் முகத்தை தூக்கி வைத்து இருந்தாள்… தேவாவிற்கு அவள் முகத்தை பார்க்கும் போது சிரிப்பு வந்தது.. மேலும் அவளிடம் வம்பு இழுக்க ஏதோ ஒன்று தூண்டியது. தாங்கள் இருக்கும் இடத்தை மறந்தான்..
அவளின் அருகே வந்தவன் முகத்திற்கு நேராக குனிந்து “பாப்பான்னு கூப்டா உனக்கு பிடிக்கலையா”? என் கேட்க
இல்லை என தலை அசைத்தாள்.
“அப்புடி கூப்ட்டா உனக்கு கோவம் கோவமா வருதா”? என கேட்க
ஆம் என தலை அசைத்தாள்..
“செமையா கடுப்பா ஒரு மாதிரி இரிடடேட்டிங்கா இருக்கா”?
“ஆம்” என்றாள்..
“அப்ப ஓகே சரி இனி நான் உன்னை”
“பாப்பான்னு கூப்பிட மாட்டிங்க தானே”
ம்ஹும் பாப்பான்னு மட்டும் தான் கூப்டுவேன் பாப்பா,. உன் பேரை விட பாப்பா, இந்த பாப்பாங்கிற பேர் உனக்கு நல்லா பொருத்தமா இருக்குல்ல பாப்பா” என்று வரிக்கு வரி பாப்பா போட்டு அவளை வெறுப்பேத்தினான்…
தியா கோவத்தில் பெரிய பெரிய மூச்சுகளை இழுத்து விட்டவள் “யோவ் உன்ன” என்றவள் தேவா சட்டையை இரு கைகளால் பற்றி தன் அருகே இழுத்தாள்.. இருவரின் முகமும் மிக நெருக்கமாக இருந்தது.. இருவரின் மூக்கும் மூக்கும் உரசி இருவரின் மூச்சு காற்றும் ஒன்றோடு ஒன்று சண்டையிடும் அளவு அவ்வளவு நெருக்கம்…
“அப்புடி கூப்டாதீங்க சொல்றேன்ல”,
அப்புடின்னு தான் கூப்பிடுவேன் பாப்பா, நீ பாவா பாவான்னு கூப்டும் போதும் எனக்கும் கூட அப்புடி தான் இருக்கும் கடுப்பா இருக்கு நீ கேட்டியா கேட்கலை இல்ல நானும் கேட்க மாட்டேன் பாப்பா”..
“யோவ் பாப்பா சொல்தா சொல்றேன்ல”
“அப்புடி தான் பாப்பா கூப்டுவேன் பாப்பா என்ன பண்ணுவ பாப்”…. அதற்கு மேல் தேவாவை பேச விடாமல் அவன் இதழில் தன் இதழை ஒற்றி இருந்தாள் தியா, இருக்கும் இடத்தை மறந்து,