தியா வீட்டுக்குள் ஓடி வந்தவள் கண்டது… தேவா வீட்டில் அனைவரும் சிரித்து பேசி கொண்டே சாப்பிடுவதை தான், அவளுக்கு அவர்களை பார்க்கும் போது கோவமாக வந்தது… குடும்பத்தில் உள்ள ஒருவனை தனியாக ஒதுக்கி விட்டு இவர்களால் எப்படி சிரித்து மகிழ்வாக இருக்க முடிகிறது என்று தோன்றியது… அங்கு இருக்கவே பிடிக்க வில்லை… தனது அக்காவிற்காக அந்த ஒரு நாளையும் கடினப்பட்டு அந்த வீட்டில் கழித்தாள்…
தனது வீட்டில் இருந்து கோவமாக கிளம்பிய தேவா… தனது கோவத்தை எல்லாம் காரின் மீது காட்டி வேகமாக ஓட்டி கொண்டு வந்தான்…
சிட்டியை விட்டு தாண்டி அதிக ஜன கூட்டம் இல்லாத ஏரியாவில் அமைந்திருந்த அந்த வீட்டின் கேட்டின் முன்பு காரை நிறுத்தியவன் கீழே இறங்கி கேட்டை திறந்து விட்டு, மறுபடியும் காரில் ஏறி காரை ஓட்டி வந்து உள்ளே நிறுத்தி விட்டு கீழே இறங்கினான்…
வீட்டுக்குள் போக கதவை திறக்க பேண்ட் பாக்கெட்டில் இருந்து சாவியை எடுத்து கதவருகே செல்ல, கதவு லாக் ஏற்கெனவே திறந்து இருந்தது… அதிர்ச்சி எல்லாம் இல்லை.. யாராக இருக்கும் என்பது அவன் அறிந்ததே, அதனால் கோவமாக உள்ள நுழைந்தான்…
அது ஒரு அழகான சிறிய வீடு… தேவாவுடையது அவன் தங்கி இருக்கும் வீடு… வீட்டுக்கு வெளியே கேட்டில் இருந்து வீட்டு முகப்பு வரை கார் வர கற்கள் பதிக்கப்பட்ட தரை, இருபுறமும் கார்டன் அமைக்கப்பட்டு இருந்தது… வீட்டுக்குள் கீழே பெரிய ஹால் வலது புறம் கிச்சன்… அதை ஒட்டிய டைனிங் ஹால்… இடது புறம் இரண்டு படுக்கை அறை, ஒரு பூஜை அறை அது எப்போதும் பூட்டப்பட்ட இருக்கும்…மேலே மாடியில் இரண்டு படுக்கை அறை அவ்வளவே,
குட்டியாக இருந்தாலும் அழகாக இருக்கும்…அங்கு அவன் ஒருவன் மட்டுமே தங்கி இருக்கிறான்… வேறு யாரும் கிடையாது… வேலைக்கு கூட ஒரு ஆள் கிடையாது… அவன் தனிமையை அது கெடுக்கும் என்பதால் யாரையும் பணிக்கு அமர்த்தவில்லை… அவன் தேவைகளை அவனே கவனித்து கொள்வான்…
வீட்டுக்குள் வந்த தேவா நேராக மாடியேறி ஒரு அறையை திறந்து பார்க்க மெத்தையில் அங்கு ஒரு உருவம் தலை முதல் கால் வரை இழுத்து போர்த்தி கொண்டு படுத்து இருந்தது… உள்ளே வந்தவன் தனது ஷீ வை கழற்றி விட்டு அந்த உருவத்தை எட்டி உதைத்தான்…
அதில் கீழே விழுந்த உருவமோ “அய்யோ அம்மா என்னை யாரோ பள்ளத்துல தூக்கி போட்டுட்டாங்க” என்று தூக்க கலக்கத்தில் கத்தியபடி கண்ணை திறந்து பார்க்க, அப்போது தான் கீழே விழுந்து கிடந்தது புரிய மெல்ல எழுந்து திரும்பி பார்த்தான்… தேவா அங்கு முறைத்து கொண்டு நிற்பது தெரிந்தது…
“எரும எரும நீ தானா? ஏன் இப்படி கழுதை மாதிரி எட்டி உதைச்ச? என்று தேவாவை திட்டினான் சூர்யா… சூர்யா தேவாவின் நண்பன்..
அவனை முறைத்த தேவா நீ ஏன் இங்க வந்த? என்று கேட்டான்…,
“என்ன கேட்ட தேவா? என்ன கேட்ட? யாரை பார்த்து இப்படி ஒரு கேள்வி கேட்ட? சூர்யாடா உன் சூர்யா, நீ கேட்டா என் உயிரை கூட கொடுப்பேன் இப்படி பட்ட உயிர் நண்பனை பார்த்து ஏன் வந்தேன்னு கேட்கிற” என்று தளபதி பட டயலாக்கை கொஞ்சம் மாற்றி கூறி வராத கண்ணீரை துடைத்து விட்டான்..
“ஏய்… இப்ப எதுக்கு நீ நைட்ல இங்க வந்தேன்னு கேட்டேன்…அதுக்கு பதில் சொல்லாமா படத்தோட டயலாக் பேசி கடுப்பாக்காத, சொல்லுடா ஷோபானா கூட சண்டை போட்டயா?”
“சண்டை வர கூடாதுன்னு தான் இங்க வந்தேன்டா, நேத்து ராகவ் மேரஜ்க்கு வர சொன்னா நான் போகலை, கண்டிப்பா உன் அண்ணி அதான் என் அக்கா மஞ்சு எதையாவது சொல்லி ஏத்தி விட்டுறுப்பா, அதை கேட்டுட்டு வந்து ஷோபா சாமி ஆடுவா அதான் வீட்டுக்கு போக வேண்டாம்னு இங்க வந்தேன்… ஆமா நீ நைட்டு எங்க போயிருந்த ஆளை காணோம்”…
“உன் ஃவொய்ப்க்கும் உனக்கும் சண்டை வரதே என்னால தான் அப்புறம் ஏண்டா இங்க வர, எத்தனை தடவ சொல்றது என் வீட்டுக்கு வராத, என் கூட சேரதன்னு எத்தனை தடவை சொல்றது, உன் புத்தியில் ஏறாதா கோவகமாக தேவா முறைத்து கொண்டு பேச,
“அதே தான் உனக்கும் எத்தனை தடவை சொல்றது உன்னை விட்டு விலக சொல்லி யார் சொன்னாலும், ஏன் நீயே சொன்னாலும் நான் கேட்க மாட்டேன்னு”…
“ஷோபா பத்தி உனக்கு தெரியாதா அவளுக்கு சொந்த புத்தி கிடையாதுன்னு… யார் என்ன சொன்னாலும் உடனே நம்பிருவா அதான் அவள் கிட்ட இருக்க பிரச்சனை… நான் அவளை பார்த்துக்கிறேன்டா, அவளுக்காக நான் உன்னை விட மாட்டேன்” என்றான் உறுதியாக,
தேவா வெளியே முறைத்து கொண்டாலும் உள்ளுக்குள் கர்வம் கொள்ள வைத்தது சூர்யா பேச்சு,
இந்த ஐந்து ஆண்டுகளில் தேவா தனது தந்தை உடன்பிறந்தவர்கள் சொந்த பந்தங்கள் அனைவரையும் விலகி இருக்கிறான்… அவர்களும் அவனை முழுதாக வெறுக்கிறார்கள்… அவன் அன்னை மீனாட்சி கூட தேவா மீது அன்பு இருந்தாலும் தனது கணவருக்காக அவனை ஒதுங்கி தான் இருக்கின்றார்…
ஆனால் சூர்யா அவன் மனைவி குடும்பத்தினர் அனைவரும் தேவாவுடன் பழகாதே என்றாலும், ஏன் அவனே விலகி நின்றாலும் சூர்யா விடுவதில்லை… துரியோதனனுக்கு கிடைத்த கர்ணன் போல தப்பே செய்தாலும் இறுதி வரை உனக்கு துணையாக இருப்பேன் என்கிறான்…
“நீ எங்க போன நைட்டு வீட்டுக்கு வரல”சூர்யா கேட்க
“உன்கிட்ட எதுக்கு சொல்லனும்” என தேவா திரும்ப கேட்க
“சொல்லனும் சொல்லி தான் ஆகனும் என்னனா நான் உன் நட்பு”
“நட்பு தான, பொண்டாட்டி இல்லையே,
“ஆச தான் என தேவா கன்னத்தை இடித்தவன், டூ லேட் உனக்கு முன்ன ஷோபா முந்திக் கிட்டா, நீ கொடுத்து வச்சது அவ்வளவு தான்” என சூர்யா கண்ணடிக்க,
“செருப்பு” என தேவா அடிக்க வர,
“நீ எவ்ளோ அடிச்சு லவ் டார்ச்சர் பண்ணினாலும் என்னால் ஷோபாவுக்கு துரோகம் பண்ண முடியாது” என்ற சூர்யாவை தேவா விரட்டி பிடித்து மொத்தி எடுத்தான்…
அதில் இவ்வளவு நேரம் தன் வீட்டிற்கு சென்று வந்ததில் இருந்த இறுக்கம் மறைந்து இருந்தது.. அது தானே நட்பின் நண்பர்களின் மகிமையும் கூட,
“டேய் விட்டுரா என தன் மீது இருந்த தேவாவை தள்ளி விட்ட சூர்யா சரி இப்ப சொல்லு எங்க போன என் கேட்டான்..
“மிஸ்டர் வேதாசலம் வீட்டுக்கு” …
அங்கயா எதுக்கு போன? காரணம் இல்லாமல் செல்ல மாட்டான் என்பதால் சூர்யா கேட்டான்…
“ராகவ் மேரேஜ்க்கு கிஃப்ட்டா ரேஸ்கோர்ஸ் வீட்டை கொடுக்கிறாங்களாமாடா எல்லாரும் சைன் பண்ணிட்டாங்க, நீயும் வந்து சைன் பண்ணி கொடுன்னு சொல்லி அம்மா ஒன் வீக்கா கால் பண்றாங்க டா, நேத்து மட்டும் ஒரு நூறு தடவை கால் பண்ணிட்டாங்க அதான் போனேன்… ஆனா இப்ப ஏண்டா போனேன்னு நினைக்கிற அளவுக்கு பயங்கர டென்ஷன், பார்க்க கூடாது ஆளுங்களை எல்லாம் பார்க்க வேண்டியதா போயிருச்சு” என்றான் கோவமாக,
“யாரு அந்த ஆளு மகேஸை பார்த்துயா?” சரியாக கேட்டான் அவனை தவிர தேவாவை இவ்வளவு கோவம் படுத்து விஷயம் வேறு எதுவும் இருக்காது என்பதால்,
“ஆமாடா” என்றவனுக்கு மகேஸ்வரன் தனக்கு செய்தது எல்லாம் நினைவு வந்து கோவம் தலைக்கு ஏற, அங்கு டேபிள் மேல் தன் கையை ஓங்கி அடித்தான்…
“டேய் லூசு நீ என்னடா பண்ற கை என்னாகிறது என கையை பிடித்து சூர்யாவிற்கு இந்த கேள்வியை கேட்காமல் இருந்திருக்கலாம் என இப்போது தோன்றியது…
அப்போது தேவா போன் இசைத்தது… சூர்யா தேவா இருவரும் மெத்தையின் மேல் இருந்த மொபைலை பார்க்க அதில் அமர் என்ற பேர் தெரிந்தது… தேவா மொபைலை அட்டன் செய்து தனியே சென்று பேசி விட்டு வந்து சூர்யாவிடம் “நீ கிளம்பு எனக்கு வேலை இருக்கு” என்றான்…
“என்ன வேலை போன்ல யாரு அந்த அமர் தானே, ஏதாவது பொண்ணை வர சொல்லி இருக்கியா?” என்று சூர்யா கேட்க,
தேவா ‘ஆம்’ என்பது போல் தலை அசைத்தான்…
சூர்யாவிற்கு புரிந்தது அவன் வீட்டிற்கே சென்றாலே அங்கு அவர்கள் அவனை நடத்தும் விதத்தில் அவன் மனம் வேதனைப்படும்… பற்றாக்குறையாக அந்த மகேஸை பார்த்து விட்டு வந்து இருக்கிறான்… அதனால் இப்போது அவன் மனநிலை எப்படி இருக்கும் என்று அவனுக்கு தெரிந்தது… இருந்தாலும் நண்பன் இப்படி கெட்டு போவது பிடிக்கவில்லை…
ஐந்து வருடங்களுக்கு முன்பு எவ்வளவு நல்லவனாக இருந்தவன்… எப்படி அழகாக தனது வாழ்க்கையை வாழ வேண்டும் என்று எவ்வளவு கனவு கண்டவன், அனைத்திலும் மண் அள்ளி போட்டு, இப்படி மது மாது இல்லாமல் வாழ முடியாது என்ற நிலைக்கு நம்பிய அனைவரும் தள்ளி விட்டனரே என்று நினைத்து வேதனைப்பட்டான் சூர்யா…
“ஏன் தேவா யார் யார் மேலேயோ இருக்க கோவத்தில் உன்னை நீயே கெடுத்துக்கிற, வேண்டாம் தேவா இது எல்லாம்… நீ பழைய தேவாவே இருடா”
சூர்யா கூறியதை கேட்டு பயங்கரமாக சிரித்த தேவா, “என்ன நட்பு சொன்ன பழைய தேவாவா இருக்கவா, ஏண்டா அந்த இளிச்ச வாயன் தேவாவ எல்லாரும் ஏறி மிதிச்சது பத்தாத, போதும்டா சாமி வாங்குன செருப்படி, இருப்பதைந்து வருஷமா உத்தமனா ராமனா வாழ்ந்ததுக்கு கிடைச்ச பரிசு தான் இந்த வாழ்க்கை… தப்பு பண்ணாமா பொறுக்கினு பேர் வாங்குகிறதுக்கு, தப்பு பண்ணிட்டே அந்த பேர் வாங்கிக்கலாம்… இப்ப என்ன என்னை பார்க்குறவன் பொறுக்கி குடிக்காரன் சொல்வாங்களா, சொல்லிட்டு போட்டும் எனக்கு இப்படி வாழ்றதில் எந்த வருத்தமும் கஷ்டமும் இல்லை..
சொல்ல போனா முன்ன இருந்ததை விட இது நல்லதா தான் இருக்கு…என்னை இங்க குடும்ப மானம் கெளரவம் அப்படி இரு இப்படி இருன்னு ரூல் பண்ண யாரும் கிடையாது… நான் ரொம்ப சந்தோஷமா என் வாழ்க்கையை என்ஜாய் பண்ணி வாழுறேன்… அது உனக்கு பிடிக்கலையா நட்பு.”..
“தேவா நீ சொல்றது எல்லாமே தற்காலிக சந்தோஷம் தான்டா, இது உன் ப்ராப்ளம் க்கு நிரந்தரமான சொல்யூஷன் கிடையாது… நீ ஒரு கல்யாணம் பண்ணிக்கோ அது தான் நல்லது” என்று சூர்யா கூறியவுடன்,
கல்யாணமா என்று மீண்டும் பயங்கரமாக சிரித்த தேவா மெத்தையில் சென்று அமர்ந்து சீக்ரெட் ஒன்றை எடுத்து பற்ற வைத்து கொண்டு புகையை வெளியிட்டவாறே, “நட்பு பொதுவா கல்யாணம் எதுக்கு பண்றாங்க” என்று திரும்பி சூர்யாவை கேள்வி கேட்க,
அடுத்து அவன் என்ன பதில் கூறுவான் என்று தெரிந்த சூர்யா தனது இருகையையும் கூப்பி தலைக்கு மேல் தூக்கி “அய்யா சாமி ஆளை விடுடா, தெரியாம சொல்லிட்டேன்டா கல்யாணம் பண்ணிக்க சொல்லி, உடனே உன் காபி கதையை தூக்கிட்டு வராத, நான் கிளம்புறேன்” என்று தேவா விடம் கூறி விட்டு வெளியே சென்றான்… செல்பவனை தேவா சின்ன சிரிப்புடன் பார்த்து இருந்தான்…
காரில் சென்று கொண்டு இருந்த சூர்யா தனது நண்பன் வாழ்க்கையில் ஏற்பட்ட பிரச்சனைகளை நினைத்து பார்த்தான்… கண்கள் கலங்கியது… தேவா வாழ்க்கை நன்றாக அமைய வேண்டும்… அவன் இப்போது வாழ்வும் இந்த வாழ்க்கை விட்டு வெளி வர வேண்டும்… இது எல்லாம் நடக்க அவனை உயிராய் நேசிக்கும் ஒரு உறவு வர வேண்டும்… அந்த உறவு அவன் வாழ்வில் வந்து அவனுக்கு துணையாக ஆறுதலாக அவன் பட்ட காயத்திற்கு மருந்தாக அமைந்து அவன் வாழ்வை மாற்ற வேண்டும்…
ஆனால் அப்படி எல்லாம் நடக்குமா?, அப்படி ஒரு பெண் வருவாளா? அப்படி வந்தாலும் தேவா அந்த பெண்ணை ஏற்று கொள்வானா? நிச்சயம் அவன் ஏற்று கொள்ள மாட்டான்… அவனின் பிடிவாதம் சூர்யா அறிந்ததே, கடவுளிடம் தேவாவின் வாழ்வை சீராக்கு என்று ஒரு வேண்டுதலை வைத்து கொண்டே காரை ஓட்டி கொண்டு தன் வீடு வந்து சேர்ந்தான்…