மறுநாள் காலை பாலகிருஷ்ணன் யமுனா வேதாசலம் வீட்டுக்கு வந்து ராகவ் இனியாவை மறுவீட்டு சம்பிரதாயத்திற்கு அழைத்து செல்ல வந்தனர்.. அவர்களுடன் தியா தன் வீட்டுக்கு சென்று விட்டாள்… அங்கு இரண்டு நாள் தங்கிய ராகவ் இனியா இருவரும் அதன் பின்பு தங்கள் இல்லத்திற்கு திரும்பி விட்டனர்…
இரண்டு மாதங்கள் ஓடி விட்டது… தியா எப்போதும் போல் கல்லூரி சென்று வந்து கொண்டு இருந்தாள்… ஆனால் இந்த இரண்டு மாதத்தில் தேவா பற்றி எண்ணம் எழாமல் இல்லை… தேவாவை ஏன் வீட்டில் உள்ளவர்கள் இவ்வாறு வெறுக்கிறார்கள்… என்ன காரணமாக இருக்கும்… அவன் இந்த வீட்டில் தங்குவதில்லை என்றால், வேறு எங்கு இருப்பான்… என்ன செய்து கொண்டு இருப்பான்… ஏன் அவனுக்கு திருமணம் நடக்கவில்லை என்று அவனை பற்றி விடை தெரியா நிறைய கேள்விகள் மனதில் எழுந்தது…
அதற்கு அவளுக்கு விடை தெரிய வேண்டும்… ஆனால் யாரிடம் கேட்பது, அவன் வீட்டில் உள்ள யாரிடமும் கேட்க முடியாது… கேட்டாலும் அவர்கள் யாரும் பதில் சொல்ல போவது கிடையாது… இனியா விடம் கேட்டால் முதலில் தெரியாது என்றவள், பின்பு நீ ஏன் இந்த விஷயத்தூல் இவ்வளவு இன்டரஸ்ட் காட்டுற என சந்தேகமாக கேட்க, சும்மா தான் போடி என சமாளித்து விட்டு அவளிடம் கேட்பதையும் நிறுத்தி இருந்தாள்…
அப்படியே விட்டு விட்டு அடுத்த வேலை பார்க்க முடியவில்லை… அதனால் தேவாவை அடுத்த முறை பார்க்கும் போது அவனிடமே நேரடியாக கேட்க வேண்டும் என்று நினைத்து கொண்டாள்… ஆனால் அவனை தான் பார்க்க முடியவில்லை... ச்சே என அதில் கொஞ்சம் கடுப்பு தான்…
இன்று தியா பின்னே அமர்ந்து வர அவள் தோழி ஹரிணி ஸ்கூட்டி ஓட்டி கொண்டு இருக்க இருவரும் பேசி கொண்டு வந்தனர்…
அதில் பயந்த ஹரிணி அவசரமாக ப்ரெக் போட்டு வண்டியை நிறத்தியவள் “என்னடா? ஏன் சத்தம் போட்ட? என்று தியா வை கேட்க,
தியா ஹரிணி கேட்ட கேள்விக்கு பதில் சொல்லாமல் வண்டியை விட்டு வேகமாக இறங்கியவள் சாலையை கடந்து ஓடினாள்… ஹரிணியும் ஏதோ பிரச்சனை என்று எண்ணி அவள் பின்னே ஓட,
சாலையை கடந்து சென்ற தியாவோ மறுபுறம் நிறுத்தப்பட்டு இருந்த ப்ளாக் லேண்ட் ரோவர் காரை சுத்தி சுத்தி வந்து பார்த்தவள் “ச்சே” என்றபடி எரிச்சலுடன் அந்த காரை எட்டி உதைத்து விட்டு திரும்ப, அங்கு இடுப்பில் கை வைத்து தியாவை முறைத்து கொண்டு நின்றாள் ஹரிணி…
அவளை பார்த்து “ஈஈஈஈஈஈ” என்று இளித்து, “சாரி ஹனிமா ஒரு வேளை பாவா கார் இருக்குமோன்னு நினைச்சு பார்க்க வந்தேன்… ஆனா பாரு இது அவரோட காரே இல்லை” என்று சோகமாக முகத்தை வைத்து கொண்டு சொன்னவளை இன்னும் முறைத்தாள் ஹரிணி…
தேவாவுடைய கார் கருப்பு நிற லேண்ட் ரோவர்… அன்று அவன் வீட்டில் இருந்து செல்லும் போது தியா பார்த்தாள்… அதனால் இந்த இரு மாதங்களில் அந்த மாடல் கார் எங்கு நின்றாலும் தியா இப்படி தான் போய் ஓடி போய் பார்க்கின்றாள்… அதான் ஹரிணி அவளை முறைத்து கொண்டு நிற்கின்றாள்…
“சரி சரி வாடா ஹனி கோவபடாத லேட்டாகுது” என்று அவளின் கைப்பிடித்து ஸ்கூட்டி இருக்கும் பக்கம் இழுத்து சென்றாள் தியா…
ஹரிணி தியாவின் உயிர் தோழி… இந்த இரண்டு மாதங்களில் ஹரிணி காதில் இரத்தம் வராத குறையாக தேவா புராணமே பாடி இருக்கிறாள் தியா… ஹரிணியும் நீ ஏன் இந்த விஷயத்தில் இவ்வளவு ஆர்வம் காட்டுகிறாய்… அவருக்கு கல்யாணம் ஆன என்ன? ஆகாமல் இருந்தால் என்ன? அதை பற்றி தெரிந்து கொள்ள நீ ஏன் இவ்வளவு மெனக்கெடற என்று தியாவிடம் கேட்டு விட்டாள்… ஆனால் அதற்கு தியா பதில் அளித்தது இல்லை…
ஏதோ ஒரு உள்ளுணர்வு அவனை பற்றி அறிய சொல்கிறது… அது ஏன் என்று அவளுக்கே தெரியவில்லையே, அவளுக்கே அதற்கான சரியான காரணம் தெரியாத போது ஹரிணியிடம் என்ன பதில் சொல்வாள்… ஆனாலும் திரும்ப திரும்ப ஹரிணி கேட்க, தியா அதற்கு அவர் என்னோட க்ரஷ் என்று கூறி விட்டாள்…
இப்போது தியா ஸ்கூட்டி ஓட்டி வர பின்னாடி ஹரிணி அமர்ந்து வந்தாள்…
“தியாமா”….
“சொல்லுடா ஹனிமா”…
“நான் ஒன்னு கேட்பேன் நீ உண்மையான பதில் தான் சொல்லனும்”…
“கேளுடா கேளு என் மம்மிக்கிட்ட கூட பொய் சொல்வேன் உன்கிட்ட என்னைக்காவது சொல்லி இருக்கன்னா என்றவளை இதுவே எவ்வளவு பெரிய பொய் என்ற ரீதியில் வண்டியின் மிரர் வழியாக தூ என சைகை செய்த ஹரிணி,
“நீ பண்றதை எல்லாம் பார்க்கும் போது, தேவா சார் உனக்கு வெறும் க்ரஷ் மட்டும் தான்ங்கிற மாதிரி இல்லையே, வண்டி வேற ரூட்ல போற மாறி இருக்கு, பார்த்து டா ஆக்ஸிடென்ட் ஆகிட போகுது”…
அதை கேட்டு சிரித்த தியா “நான் கரெக்ட்டானா ரூட்ல தான் போறேன் ஹனிமா, நீ எதை எதையாவது சொல்லி டைவர்ட் பண்ணாமா இருந்தா அதுவே போதும் நா ரொம்ப ஃஷேப்பா போய் சேருவேன்”…
“என்னடா இது இந்த நாட்டில் ஒரு க்ரஷை பார்க்கனும்னு ஆசை படறதும், அவரை பத்தின டீடைல்ஸ் தெரிஞ்சுக்க நினைக்கிறதும் பெரிய தப்பா, அதற்கு போய் ஏதோ கொலை குத்தம் பண்ணுன மாதிரி இப்படி குறுக்கு விசாரணை பண்ணுறீங்களேடா இது எல்லாம் நியாயமா?”
“இது நியாயாம இல்ல அநியாயமான்னு நாமா அப்புறம் பேசிக்கலாம், நீ ப்ர்ஸ்ட் வண்டியை ஸ்டாப் பண்ணு, நம்ம ஹாஸ்பிடல் தாண்டி போயிட்டு இருக்கோம்” என்று ஹரிணி கூறியதும் தியா வண்டியை அந்த மருத்துவமனை வளாகத்தின் பார்க்கிங் ஏரியாவில் நிறுத்த இருவரும் கீழே இறங்கினர்…
அந்த மருத்துவமனை முன்பு சிலர் கூட்டமாக நின்று கொண்டு இருந்தனர்… அவர்களை கடந்து தியா ஹரிணி இருவரும் உள்ளே சென்றனர்…
“ஹனி தாரிகா கிட்ட கேளுடா, அவங்க அப்பாவுக்கு ஆப்ரேஷன் நடக்கிறது எந்த ஃப்ளோர்னு”,
“கேட்டுட்டேன்டா த்ர்ட் ஃப்ளோர்னு சொன்னா வா போலாம்” என்றாள் ஹரிணி…
தாரிகா இவர்களின் வகுப்பு தோழி இன்று அவள் தந்தைக்கு இருதயம் சம்பந்தப்பட்ட அறுவை சிகிச்சை நடைபெறுகிறது… தாரிகா தியாவிற்கு போன் செய்து “டாடியை நினைச்சா எனக்கு ரொம்ப பயமா இருக்குடா, ஆப்ரேஷன் நடந்துட்டு இருக்கு… அம்மா ரொம்ப அழுறாங்கடா” என்று அவள் அழுது கொண்டே சொல்ல,
தியாவும் ஹரிணியும் அவளுக்கு ஆறுதலாக இருக்க இங்கு அவளை காண வந்துள்ளனர்… மூன்றாம் தளம் இவர்கள் இருவரும் வந்தனர்… அந்த தளம் முழுவதும் வெள்ளை வேஷ்டி சட்டை அணிந்த கட்சி ஆட்கள் பத்து பதினைந்து பேர் இருந்தனர்…
தாரிகா தந்தை ஆளும் கட்சியின் அமைச்சர்… ஒரு வாரத்திற்கு முன்பு உடல்நிலை சரியில்லை என மருத்துவமனையில் அனுமதிக்க்ப்பட்வர்க்கு… இதய கோளாறு என்பதால் இன்று அறுவை சிகிச்சை நடைப்பெறுகிறது… அதனால் அவரின் கட்சி உறுப்பினர்கள் கூட்டம் தான் அந்த மருத்துவமனை முழுவதும்,
அறுவை சிகிச்சை நடைபெறும் அறையின் முன்பு தாரிகா, அவளின் அன்னை, தம்பி மூவரும் நின்று அழுது கொண்டு இருந்தனர்… கட்சி ஆட்களை கடந்து தியா ஹரிணி இருவரும் தாரிகா அருகில் சென்றனர்…
இவர்களை பார்த்ததும் தாரிகா வந்து அணைத்து கொண்டாள்… டாடிக்கு எதுவும் ஆகாதுடா என அவளுக்கும் அம்மா நீங்களும் ஏன் கவலை படுறீங்க அப்பாவுக்கு ஒன்னும் இல்லை என்று அவள் அம்மாவிடமும் ஆறுதல் கூறி விட்டு அவர்கள் அருகிலே நின்றனர…
சிறிது நேரத்தில் அறுவை சிகிச்சை முடிந்தது… அந்த அறுவை சிகிச்சை அறையில் இருந்து முதலில் மருத்துவர் வெளியே வந்தனர்… அந்த மருத்துவரை நோக்கி தாரிகா அன்னை, தாரிகா, கட்சி ஆட்கள் ஓடி ஆப்ரேஷன் நல்லபடியாக முடிந்ததா என்று விசாரித்தனர்…
இவர்கள் அனைவருக்கும் பின்னே ஹரிணி தியா இருவரும் நின்று இருந்தனர்…
டாக்டர் ஆப்ரேஷன் நல்ல படியாக முடிஞ்சுதா, அவர் எப்புடி இருக்கார் தாரிகா அன்னை கெட்டதா டாக்டர் எதையும் சொல்லி விட கூடாது என்ற வேண்டுதலுடன் மருத்துவரிடம் கேட்க,
அந்த மருத்துவரோ தனது முகத்தில் இருந்த மாஸ்கை கழற்றி விட்டு அவர்களிடம் பேச ஆரம்பிக்கும் முன்
பாவா நீங்களா?
நீங்க டாக்டரா? ஏன் என்கிட்ட சொல்லவே இல்லை என மருத்துவ உடையில் இருந்த தேவாவை பார்த்து, இரண்டு மாதங்களாக தான் பார்க்க நினைத்த தேவாவை கண்டு விட்ட சந்தோஷ மிகுதியில் சுற்றி இருந்தவர்களை கருத்தில் கொள்ளாமல், இடம், பொருள், ஏவல் சூழ்நிலை எதுவும் புரியாமல் கண்களில் பிரகாசம் பொங்க உற்சாகமாக கத்த,
தாரிகா, அவள் அன்னை, கட்சி ஆட்கள் தேவா உட்பட அனைவரும் அவளை தான் திரும்பி விநோதமாக பார்த்தனர்..