விடாமல் துரத்துராளே 8

4.9
(14)

பாகம் 8

காரில் இருந்து இறங்கிய வெண்ணிலா கோவமாக செருப்பை கழற்றி வீசிவிட்டு வீட்டுக்குள் சென்று அங்கு இருந்த பொருட்களை எல்லாம் கீழே தள்ளி விட்டு ஷோபாவில் தலையை பிடித்து கொண்டு அமர்ந்தாள்…

அவள் பின்னேயே காரை பார்க் செய்து விட்டு வந்த திவேஷ் அவன் மனைவி கோவமாக உள்ளாள் என்பதும் எதனால் கோவமாக இருக்கிறாள் என்பதும் தெரியும்…

அதனால் அவளை சமாதானம் செய்யும் பொருட்டு அவள் அருகே சென்று அமர்ந்து அவள் கையை பிடிக்க,

வெண்ணிலா தட்டி விட்டு தள்ளி அமர்ந்தாள்… திவேஷும் அவள் பக்கம் மறுபடியும் நகர்ந்து அவள் கையை பிடிக்க,

“என் கையை விடு திவேஷ், நான் பயங்கர கோவத்தில் இருக்கேன்… ஏதாவது சொல்லி திட்டிற போறேன், கொஞ்சம் நேரம் தனியா விட்டுட்டு போ” என்று சத்தம் போட்டாள்…

“ஏய் எதுக்குடி இப்ப ஓவரா கத்துற?, இப்ப என்ன நடந்துச்சுருச்சு?”,

“என்ன சொன்ன? எவ்ளோ அசாலாட்ட சொல்ற? என்ன நடந்துச்சுனு, ஹாஸ்பிட்டல் எல்லார் முன்னாடியும் நீ செஞ்ச தப்புக்காக நானும் தானே தலை குனிஞ்சு நின்னேன்… கார்த்திக் உன்னை எப்படி திட்டுனார்… அப்ப எனக்கு எவ்ளோ அசிங்கமா இருந்துச்சு தெரியுமா?”

“அதுமட்டுமா கூட ஃவொர்க் பண்ற மத்த டாக்டர்ஸ் எல்லாம் வெண்ணிலா உன் ஹஸ்பண்ட் ஏன் இப்படி இருக்காரு சொல்லி சிரிக்காறாங்க…‌ உன்னால் எனக்கு எப்பவும் அசிங்கம் அவமானம் மட்டும் தான் திவேஷ் கிடைக்குது… ஏன் திவேஷ் நீ ஒரு டாக்டர் அந்த பொறுப்பு உனக்கு கொஞ்சம் கூட இல்லையா? செய்ற வேலையை கவனமா செய்ய மாட்டாயா? எப்ப பாரு தப்பு செஞ்சு மகேஸ்வரன் சார் கிட்ட, இல்ல கார்த்திக் கிட்ட திட்டு வாங்கிட்டே இருக்கே”,

“உன்னை மாதிரி ஒரு அன்பர்ஃபெக்ட் ஃபர்சனை நான் பார்த்தே இல்லை… உன்னை மேரேஜ் பண்ணிகிட்டது என் தப்பு தான் அப்பவே சூர்யா சொன்னான் நான் தான் அவன் பேச்சை என்று அந்த வாக்கியத்தை முழுதாய் முடிக்கும் முன் ஸ்… ஆ… என்ற முனகல் அவளிடம் வலி தாங்க முடியாததால் வந்தது…

இவ்வளவு நேரம் அவள் திட்டுவதை அமைதியாக கேட்டு கொண்டு இருந்த திவேஷ் அவள் சொன்ன உன்னை திருமணம் செய்து கொண்டதே தவறு என்ற வார்த்தையில் கண்மண் தெரியாத அளவு கோவம் எழ அவள் கூந்தலை பற்றி அமர்ந்து இருந்தவளை மேலே தூக்கி இருந்தான்…

“என்னடி சொன்ன என்னை கல்யாணம் பண்ணுனது தப்பா? அஞ்சு வருஷத்துக்கு முன்னாடி நீ அடிச்ச கூத்துக்கு எல்லாம் என்னை தவிர வேறு ஒருத்தனும் உன்னை சீண்டி இருக்க மாட்டான்டி, அப்புறம் என்ன சொன்ன நான் அன்பர்ஃபெக்ட்”,

“ம்ம்…. ஒத்துக்கிறேன்டி, நான் என் வேலையில் பர்ஃபெக்ட் இல்லை தான்… ஏதோ ஒன்னு இரண்டு தப்பு பண்ணி இருக்கலாம்… ஆனா என் பர்சனல் லைஃப்ல, நான் ரொம்ப பர்ஃபெக்ட்… சொல்ல போனா ராமன்டி நான்… உன் ஒருத்தியை தான் மனசார காதலிச்சேன் உன்னை தான் கல்யாணமும் பண்ணிக்கிட்டேன்… ஒரு வேளை உன்னை கல்யாணம் பண்ண முடியாத சூழ்நிலை வந்திருந்தாலும் வேற யாரையும் பண்ணி இருக்க மாட்டேன்”,

“ஆனா நீ”? என்று கேள்வியாக வெண்ணிலாவை பார்த்தான்…

அந்த பார்வையும் கேள்வியும் அவளை கூச செய்தது.. வெண்ணிலா அமைதியாக விழிகளை தரை தாழ்த்தினாள்… திவேஷ் பற்றி இருந்த கூந்தலை வேகமாக விட்டுட்டு வீட்டை விட்டு வெளியேற டொக் என்ற சத்தம் காதில் விழ, திரும்பி பார்த்தான்…

இவன் கூந்தலை விட்ட வேகத்தில் நிலைகொள்ள முடியாதவள் கீழே விழ அங்கிருந்த டீபாய் முனை நெற்றியில் பட்டு இரத்தம் வந்தது..

“வெண்ணிலா” என பதறியவன் வேகமாக அவள் அருகே ஓடி வந்து அவளை எழுந்து அமர செய்தவன், அச்சோ சாரிமா சாரிமா தெரியாம பண்ணிட்டேன்… என்ன வேணா நீ அடிச்சுக்கோ என அவள் கையை எடுத்து அவன் கன்னத்தில் நெஞ்சில் என மாறி மாறி அடிக்க செய்தவன்

“நீ நீ அப்புடி பேசினதால் தானே எனக்கு கோவம் வந்துட்டு, அதனால் தான் சாரி சாரி வெண்ணிலா.. சாரி வெண்ணிலா, கோவிச்சுக்காத, என்னை திருப்பி எவ்ளோ வேணா அடிச்சுக்கோ, ஆனா என்ன விட்டு மட்டும் போய்டாத, போய்ட மாட்டால்ல, சொல்லு வெண்ணிலா போய்ட மாட்ட தானே, ப்ளீஸ் ப்ளீஸ் போயிடாத வெண்ணிலா நீ இல்லன்னா, போய்ட மாட்ட தானே, என அதையே திரும்ப திரும்ப கேட்டு கொண்டு இருந்தான் காயத்திற்கு மருந்திட வேண்டும் என்பதையும் மறந்து,

அவள் மாட்டேன் என தலை அசைக்கும் வரை அதையே கேட்டு கொண்டு இருந்தவனுக்குஅதன் பின்பு தான் காயம் நினைவு வர, அச்சோ என் தலையில் அடித்து கொண்டவன் முதலுதவி பெட்டியை எடுக்க சென்றான்..

வெண்ணிலா அப்படியே சுவரை ஒட்டி அமர்ந்து கால்களை இறுக கட்டி கொண்டு அதில் தலை சாய்த்து சத்தம் இல்லாமல் அழ ஆரம்பித்தாள்… தாலி கழுத்தில் ஏறும் வரை ‘வெண்ணிலா எனக்கு அது எல்லாம் எந்த பிரச்சினையும் இல்ல, நான் பெருசா எடுத்துக்கக மாட்டேன்..‌ இது எல்லார் லைஃப்லையும் நடக்கறது தான் என்று கூறியவன் தான்..

ஆனால் திருமணம் முடிந்த பின்பு

அவன் இப்புடி ஏதாவது தவறு செய்து அதை சுட்டி காட்டினாளோ, இல்லை சாதாரணமான கணவன் மனைவி சண்டையின் போது வெண்ணிலா ஏதாவது ஒரு வார்த்தையை வாய் தவறி இப்போது போல் விட்டு விட்டாள் போதும், உடனே திவேஷ் நீ ரொம்ப ஒழுங்கா என்று தூக்கி கொண்டு வந்து விடுகிறான் அவளின் கடந்த காலத்தை,

அதனாலே பெரும்பாலும் திவேஷ் தவறு செய்தால் கூட வெண்ணிலா கண்டும் காணாததுமாக இருந்து கொள்வாள்… என்றாவது இன்று போல் நடந்து விடுகிறது.. அப்போதே அவளின் அண்ணன் சூர்யா அவ்வளவு கூறினான், அவன் வேண்டாம் நிலாம்மா என் பேச்சை கேளு என்று,

கேட்டாளா இல்லையே, அவசரமாக எதிலிருந்தோ தப்பிப்பதற்காக எரிகிறதில் தலை விட்ட கதை தான் அவள் நிலை..

கோவை சரவணம்பட்டி ஃபுரோசோன் மால்,

இந்த ட்ரெஸ் உனக்கு ஓகே வா நல்லா இருக்கா ஹெங்கரில் மாட்டி இருந்த டீசர்ட்டை எடுத்து தியா மீது வைத்தபடி கேட்டார் யமுனா…

ஹான் நல்லா இருக்கு நல்லா இருக்கு சீக்கிரம் மம்மி எவ்ளோ நேரம் தான் ஷாப்பிங் பண்ணுவீங்க என சலித்த தியாவை முறைத்து பார்த்தார் யமுனா..

பின்னே முறைக்காமல் என்ன செய்வார் மால் போகலாம் ம்யி ஷாப்பிங் போகலாம் மம்மி ப்ளீஸ் மம்மி ப்ளீஸ் மம்மி என நச்சரிக்க அதை பொறுக்க முடியாமல் அழைத்து வந்தார்..

கிளம்பி இங்கு வரும் வரை குஷியாக தான் இருந்தாள்… ஆனால் இங்கு வந்ததிலிருந்து என்ன ஆனதோ தெரியவில்லை.. மம்மி சீக்கிரம் சீக்கிரம், இல்லைன்னா நீங்க பொறுமையா ஷாப்பிங் பண்ணிட்டு வாங்க நான் பர்ஸ்ட் கிளம்புறேன் என்கிறாள்.. அதற்கும் வந்து பத்து நிமிடம் கூட ஆகவில்லை.. அவளுக்கு தான் ஆடைகள் பார்த்து கொண்டு இருக்கின்றார்…

யமுனா முறைக்கவும் இல்ல முக்கியமான அசைமெண்ட் சப்மிட் பண்ணா நாளைக்கு தான் லாஸ்ட் டேட்.. ஹரிணியும் நானும் சேர்ந்து ரெடி பண்ணலாம் ப்ளான்ல இருந்தோம்.. நான் மற்நதே போயிட்டேன்.. அவ இப்ப தான் மெசேஜ் பண்ணுனா அதான்

பொய் அப்பட்டமான பொய் சொன்னாள்.. தேவாவிற்காக சொன்னாள்..

பின்னே வேறு என்ன செய்ய அன்று மருத்துவமனையில் தேவாவை பார்த்தது அதன் பின்பு மாத கணக்கு ஆகின்றது இன்னும் தியா கண்ணில் அவன் சிக்கவில்லை…

அன்று தேவா காரில் வேகமாக சென்று விட, ச்சே என தரையில் காலத்தை உதறியவள் இந்த ஹாஸ்பிடல் தான் வேலை பார்க்குறாங்க போல என நினைத்து கொண்டு,

உள்ளே சென்று ரிஷப்சனில் தேவாவை பற்றி விசாரிக்க, அவர் இந்த ஹ்ஸ்பிடலில் வொர்க் பண்ணலை மேம்.. சர்ஜரிக்கா மட்டும் வந்து இருப்பாங்க போல

டாக்டர் தேவேந்திரன் கார்டியாலாஜி அதை தவிர வேற எந்த தகவலும் அவரை பற்றி இல்லை மேம் என்றார் ரிஷப்சனிலிருந்த பெண்…

 சரியான மர்ம தேசமா இருக்கும் போல தேவாவை மனதிற்குள் திட்டி கொண்டாள்,

அதன் பின்பு இதோ மூன்று மாதமாகிறது அவனை பார்க்க முடியவில்லை…

கல்லூரி செல்லும் போது வெளியே எங்காவது போகும் போது சாலையில் எங்காவது தேவா தென்படுகின்றானா என கண்களை அலைய பாய் விட்டு அவனை தேடியவாறே தான் இந்த மூன்று மாதமும் இருந்தாள்…

உனக்கு பைத்தியமாடி பிடிச்சு இருக்கு ஏன் இப்புடி பண்ற ஹரிணி திட்ட,

ஹய்யோ ஹனிமா உனக்கு புரியலை அதை நான் எப்புடி சொல்ல இப்ப உன் கையில் ஒரு மர்ம நாவல் கிடைக்குது… அதோட முதலும் தெரியாம முடிவும் தெரியாம இடையில் படிச்சா எப்புடி இருக்கும்.. என்ன நடந்தது ஏன் எப்புடின்னு உன் மண்டைக்குள்ள அந்த நாவல்லே ஓடிட்டு இருக்கும்ல என்க்கும் இப்ப அப்புடி தான் இருக்கு என்று சொல்ல,

இது எல்லாம் திருந்தாத கேஸ் என தலையில் அடித்து கொள்வாள் ஹரிணி…

அப்புடி மூன்று மாதங்களாக கண்ணில் சிக்காமல் போக்கு காட்டி கொண்டு இருந்தவன், இன்று மால்க்கு காரில் வரும் போது அம்மா பக்கத்தில் இருக்கும் போது அல்லவா காட்சி தருகின்றான்..

மால் ரோட்டிற்கு பக்கத்து ரோட்டில் அமைந்து இருக்கும் ஆண்களுக்கான ஆடை ஷோ ரூம் ஒன்றின் உள்ளே தேவா செல்ல காரில் வேடிக்கை பார்த்து கொண்டே வந்தவள் பார்த்து விட்டாள்…

அய்யோ போறாரே போறாரே கைக்கு எட்டுனது வாய்க்கு எட்டாம் போயிடுச்சு என மனதிற்குள் அலற மட்டும் தான் முடிந்தது… யமுனா முன்பு வேற என்ன செய்ய முடியும்..‌.

இருந்தும் பக்கத்து ரோடு தானே போய் பார் இன்று விட்டால் இன்னும் எத்தனை மாதம் கழித்து தரிசனம் கிடைக்குமோ என்ற ஆசை உந்த அது தான் யமுனாவை இப்புடி நச்சரிக்கின்றாள்…

அசைன்மெண்ட் என்றது வேலை செய்ய சரி வா போகலாம் என யமுனாவும் கிளம்ப

நீங்க பர்ச்சேஸ் பண்ணுங்க நான் ஆட்டோவில் போய்க்கிறேன்..

நீ இல்லாம நான் மட்டும் என்ன பார்க்கிறது என சலித்த யமுனா உடன் வர,

நீங்க கார்ல் வீட்டுக்கு போய்டுங்க மம்மி… நான் ஆட்டோவில் போய்க்கிறேன்.. வரும் போது ஹரிணி அப்பா ட்ராப் பண்ணிட்டுவாங்க… நீங்க ஹரிணூ வீட்ஞுக்கு என்னை விட வந்துட்டு அப்புறம் நம்ம வீட்டுக்கு போனா லேட் ஆகிடும்… வீட்டுத் வேற உங்களுக்கு நிறைய வேலை இருக்கு சொன்னீங்களே என்றாள் அவசரமாக

நான் உன்னை ட்ராப் பண்றேன் என யமுனா சொல்லி விடுவாரோ என பயந்து,

சரி என யமுனா தலை அசைத்தார்…

உஃப் என பெருமூச்சு விட்டு வெரி குட் தியா என தனக்கு தானே சொல்லி கொண்டு

ஹரிணிக்கு அவசர மெசேஜ் இப்போது யமுனாவிடம் சொன்ன பொய்களை மெயின்டெய்ன் பண்ணனுமே அதற்காக டைப் செய்தபடி நான்கடி தான் எடுத்து வைத்து இருப்பாள்..

மம்மி என சத்தமாக அழைக்க முன் சொன்னது கொண்டு இருந்த யமுனா திரும்பி பார்த்தார்…

ஆ…. அது வந்து இப்ப தான் ஹரிணி மெசேஜ் பண்ணுனா நிறைய பேர் இன்னும் அசைமெண்ட் முடிக்கலயாம்.. அதனால் டூ டேஸ் எக்ஸ்டென்ட் பண்ணி இருக்காங்களாம்..

அதனால் நாளைக்கு அசைமெண்ட் வொர்க் பார்த்துக்கலாம் சொல்றா.. அவளும் பக்கத்து வீட்டு பாட்டியோஞ பர்த் டே பங்ஷனுக்கு போறாளாம்….

நாமாளும் ஷாப்பிங் முடிச்சிட்டு போகலாமே,

தியா யமுனா கோவமாக பல்லை கடிக்க

மம்மி நீங்க இந்த ஷாப்பில் பாருங்க.. தெர்ட் ப்ளோர்ல நியூ ஷாப் ஓபன் பண்ணி இருக்காங்களாம் அங்க கேஷீவல் வெர் நல்லா இருக்காம்.. நான் போய் பார்க்கிறேன் என்றவள் தியா தியா என யமுனா அழைக்க அழைக்க நிற்கவே இல்லை ஓடி விட்டாள்..

கும்பிட போன தெய்வம் குறுக்க வந்தது என்பது போல் யாரை பார்க்க வேண்டி இத்தனை கலாட்டா சொய்தாளோ அவனே மாலுக்குள்.. 

இந்த முறை தவற விட அவள் தயாரில்லை.. அதான் ஓடி விட்டாள்.. மூன்றாம் தளத்தில் நிற்கும் அவனை நோக்கி,

அங்கு…

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.9 / 5. Vote count: 14

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!