எபிலாக்
இந்த சந்தோசமான விசயத்தை நம்ம வீட்டில் சொல்ல வேண்டாமா மாமா என்ற வெரோனிகாவிடம் வீட்டில் சொல்லி என்ன பண்ணப் போற என்றான் உதயச்சந்திரன்.
என்ன மாமா இப்படி சொல்லிட்டிங்க அவங்களும் சந்தோசம் படுவாங்க தானே என்றவனிடம் சந்தோசம் மட்டும் படமாட்டாங்க ரோனி நம்மளை திரும்ப அந்த வீட்டிற்கு கூப்பிடுவாங்க என் ரோனியை வெளியே போன்னு சொல்லி விரட்டி விட்ட அந்த வீட்டிற்கு திரும்ப போகனுமா சொல்லு என்றான் உதய்.
அப்படி இல்லை மாமா என்றவளது முகம் வாடிப் போய் விட என்னாச்சுடி ப்யூஸ் போன பல்பு மாதிரி ஆகிட்ட என்றான் உதய். இல்லை மாமா நம்ம கல்யாணம் முடிஞ்சு எட்டு வருசம் கழிச்சு நமக்கு ஒரு பாப்பா வரப் போகுது. இந்த சமயம் நம்ம பாப்பாவுக்கு வெறும் அம்மா , அப்பா மட்டும் போதுமா. தாத்தா, பாட்டி, சித்தி, சித்தப்பா, அத்தை , மாமான்னு எல்லா உறவுகளும் வேண்டுமே என்றாள் வெரோனிகா.
அதற்காக நீ பட்ட அவமானமும், காயமும் இல்லைன்னு ஆகிரும்மா ரோனி என்றவனிடம் மாமா அது நம்ம குடும்பம் யாரு என்னை பேசினாங்க நம்ம வீட்டாளுங்க தானே என்றவளிடம் அவன் ஏதோ சொல்ல வர ஏன் மாமா அப்போ நான் கர்ப்பமா இருக்கிற விசயத்தை நம்ம வீட்டில் சொல்லவே மாட்டிங்களா என்றாள் வெரோனிகா.
சொல்லாமல் எப்படி மறைக்கிறது ரோனி சொல்லுவோம் என்றவன் உனக்கு அப்போ நம்ம வீட்டாளுங்க மேல கோபம் இல்லையா என்றிட எனக்கு எப்பவுமே யாரு மேலையும் கோபம் இருந்ததில்லை மாமா. என்னை யாருமே நம்பவில்லையேங்கிற வருத்தம் தான் என்றவள் அவனது தோளில் சாய்ந்து கொண்டாள்.
உன்னோட எல்லா வருத்தமும் சீக்கிரமே போய்விடும் என்றவன் மண்டபத்தில் நம்மளை தேடப் போறாங்க வா என்று மனைவியை அழைத்துச் சென்றான்.
என்ன அனு ரோனியை காணவில்லை என்ற அர்ஜுனிடம் என்ன அர்ஜு என் அக்காவை தேடுறிங்க ஓஓ உங்களோட எக்ஸா என்று கண்ணடித்தாள் அனாமிகா. உன் பல்லை உடைக்கப் போறேன் பாரு ரோனி என்னோட பெஸ்ட் ப்ரண்ட் என்றவனைப் பார்த்து சிரித்தவள் அட மறந்துட்டேன் உன் எக்ஸ் ஊர்மிளா தானே என்றாள் அனாமிகா.
ஏம்மா நான் சொல்லுற மந்திரத்தை திருப்பி சொல்லாமல் மாப்பிள்ளைகிட்ட என்னம்மா வம்பு பண்ணிட்டு இருக்க என்று ஐயர் அவளைக் கடிந்து கொள்ள அதைக் கேட்டு அர்ஜுன் சிரிக்க ஆரம்பித்தான்.
அவனை முறைத்தவள் மெல்லமாக அவனது இடுப்பினைக் கிள்ளி விட துள்ளியவன் பிறர் பார்க்கும் முன் தன்னை சரி செய்து விட்டு அவளை முறைத்தான். அவளோ அவனிடம் பழிப்புக் காட்டிக் கொண்டிருக்க பாவம் ஐயர் தான் நொந்து போனார்.
ஐயோ ஐயர் வேற முறைக்கிறாரே என்று நினைத்தவள் மௌனமாகிட கெட்டிமேளம், கெட்டிமேளம் என்று கூறி கெட்டிமேளம் முழங்க அர்ஜுன் அனாமிகாவின் கழுத்தில் மூன்று முடிச்சிட்டான்.
எங்கே போனிங்க ரோனி என்ற பூங்கொடியிடம் அம்மா நீ இத்தனை நாளா எதற்காக கோவில் கோவிலா வேண்டிக்கிட்டியோ அந்த வேண்டுதலை கடவுள் நிறைவேற்றி விட்டார் என்றாள் வெரோனிகா.
என்ன வேண்டுதல் ரோனி என்ற பூங்கொடியை முறைத்தவள் பெத்த பொண்ணை இப்படி மறக்கிற அளவுக்கு உன் பேத்தி உன்னை வசப் படுத்திட்டாளா என்ற வெரோனிகா வினுஷா குட்டியை தூக்கிக் கொண்டு உன் பாட்டி அவங்களோட வேண்டுதலை மறந்தது போல நீயும் சித்தியை மறந்துருவியா தங்கம் என்றாள்.
குழந்தை திறு திறுவென முழித்திட அவளது கன்னத்தில் முத்தமிட்டவள் பூங்கொடி இன்னும் உனக்கு ஞாபகம் வரவில்லையா அப்போ சரி பத்து மாதம் கழிச்சு பிறக்கப் போற என் மகன் உன் முகத்தில் உச்சா அடிப்பான் அப்போ ஞாபகத்தில் வரும் என்ற வெரோனிகா கோபமாக செல்ல அவளது கையை எட்டிப் பிடித்தார் பூங்கொடி.
என்ன சொல்லுற ரோனி நிஜமாகத் தான் சொல்கிறாயா என்றிட பின்னே பொய் சொல்லுற விசயமா என்றவள் செல்ல பூங்கொடி மகளைக் கட்டிக் கொண்டு அழ ஆரம்பித்தார்.
அம்மா ஏன்மா அழறிங்க என்ற வெரோனிகாவிடம் ஆனந்தக் கண்ணீர்டி என் மகள் எட்டு வருசமா பட்ட கஸ்டத்திற்கு ஆண்டவன் கண்ணைத் திறந்து பார்த்து நல்ல வழி காட்டிட்டாருடி என்ற பூங்கொடி முதலில் வீட்டிற்கு போகலாம் வா என்று மகளின் கை பிடித்து இழுத்தார்.
அம்மா இன்னைக்கு உன் தங்கச்சி பொண்ணுக்கு கல்யாணம் நீ பாட்டிற்கு பாதியிலே வீட்டிற்கு போகலாம்னு சொல்லுற என்ற வெரோனிகாவிடம் அதெல்லாம் ஜெயக்கொடி சொன்னால் புரிஞ்சுக்குவாள் நீ வாடி என்றவர் மகளை இழுத்துக் கொண்டு வீட்டிற்கு சென்றார்.
மாப்பிள்ளை நீங்களும் வாங்க என்று உதயச்சந்திரனையும் அழைத்துக் கொண்டு வீட்டிற்கு வந்து சேர்ந்த பூங்கொடி மகள் , மருமகன் இருவருக்கும் திருஷ்டி சுற்றி வைத்தவர் மகளின் வாயில் இனிப்பை ஊட்டினார்.
என்னங்க நம்ம ரோனி மாசமா இருக்கிறாள் என்று தன் கணவனிடமும் கூறினார் பூங்கொடி. அம்மாடி நிசமாவாத்தா என்ற கதிரேசன் மகளை அணைத்துக் கொண்டு கண்ணீர் விட அப்பா இது அழ வேண்டிய நேரம் இல்லை. கொண்டாட வேண்டிய நேரம் என்ற மகளிடம் இல்லை ரோனி கொஞ்ச நாள் ஆகட்டும். இத்தனை வருசம் கழிச்சு உருவன குழந்தை ஒருத்தர் கண்ணு போல இன்னொருத்தர் கண்ணு இருக்காது அதனால கொஞ்சம் பொறுமையா இரு என்றார் பூங்கொடி.
மாப்பிள்ளை உங்க வீட்டில் சொல்லிட்டிங்களா என்ற பூங்கொடியிடம் இன்னும் சொல்லவில்லை அத்தை சொல்லனும் என்றான் உதயச்சந்திரன். என்ன மாப்பிள்ளை நீங்க இன்னும் சொல்லாமல் இருக்கிங்க இந்த விசயம் தெரிந்தால் அவங்க எவ்வளவு சந்தோசம் படுவாங்க என்ற பூங்கொடி அவனிடம் சொல்லச் சொல்லிட சரியென்று கூறினான்.
மாமா சொல்லுங்க மாமா ப்ளீஸ் என்று வெரோனிகாவும் கெஞ்சிட சரியென்று போன் செய்து மொத்தக் குடும்பத்தினரையும் மண்டபத்திலிருந்து தன் மாமனாரின் வீட்டிற்கு வரச் சொன்னான் உதயச்சந்திரன்.
என்ன அண்ணா எல்லோரையும் வரச் சொல்லி இருக்கிங்க என்ன விசயம் என்ற பிரகாஷிடம் ஸ்வீட் எடுத்துக்கோங்க மாமா என்றாள் வெரோனிகா. என்ன குட்நியூஸ் அண்ணி என்ற பிரகாஷிடம் குட்நியூஸ் தான் என்றவள் தன் கணவனின் பின்னால் ஒளிந்து கொள்ள ரோனி நிஜமாகத் தான் சொல்கிறாயா என்ற சுசீலாவீடம் தலையசைத்தாள் வெரோனிகா.
அக்கா நம்ம ரோனி மாசமா இருக்கிறாள் என்று சுசீலா கூறிட மருமகளது நெற்றியில் முத்தமிட்ட மலர்கொடி எனக்கு தெரியும் ரோனி அத்தை என் கனவுல வந்தாங்க நம்ம வீட்டிற்கு சீக்கிரம் வாரிசு வந்துரும்னு சொன்னாங்க என்று மலர்கொடி கூறிட அப்பத்தாவே அண்ணியோட வயிற்றில் பிள்ளையா பிறப்பாங்கம்மா என்று கூறினான் தேவச்சந்திரன்.
ஆமாம் தேவ் என்ற நெடுமாறன் என் அம்மாவை பெத்துக் கொடுக்கப் போற தேவதைம்மா நீ உன்னைப் போயி அன்னைக்கு வாய்க்கு வந்தபடி பேசி வீட்டை விட்டு விரட்டிட்டேன் என்னை மன்னிப்பியா வெரோனிகா என்றார். ஐயோ பெரியமாமா என்ன பேச்சு இது நீங்க போயி என்கிட்ட மன்னிப்பு கேட்டுட்டு என்ற வெரோனிகாவிடம் தப்பு பண்ணினால் யாரா இருந்தாலும் மன்னிப்பு கேட்டு தான் ஆகனும் வெரோனிகா அண்ணன் மட்டும் இல்லை நான், சுசீலா, பிரகாஷ் , இந்திரஜா எல்லோருமே உன் கிட்ட காலம் முழுக்க மன்னிப்பு கேட்டாலும் போதாதும்மா என்றார் இளமாறன்.
சின்ன மாமா நீங்களும் ஏன் என்றவளிடம் விடு ரோனி என்ற மலர்கொடி அத்தை உன் கூடவே வந்துடுறேன். பத்துமாசம் முடியுற வரை உன்னை பத்திரமா பார்த்துக்குவேன். அப்பறம் என் பேரக் குழந்தையை என் கைக்குள்ளேயே வச்சுக்குவேன் என்றார்.
அக்கா நீங்க மட்டும் எங்கே போறிங்க உதய்யும், ரோனியும் நம்ம வீட்டிற்கு நம்ம கூடவே வந்துரட்டும் நாம எல்லோரும் சேர்ந்து அவளை பார்த்துக்கலாம் என்றார் சுசீலா.
இல்லை சித்தி அங்கே நானும், ரோனியும் வர மாட்டோம் என்றான் உதய் முகத்தில் அடித்தாற் போல.
மாமா என்ன சொல்லுறிங்க நம்ம குடும்பம் அது தானே என்றவளிடம் நாம இதைப் பற்றி போதும், போதும்ங்கிற அளவுக்கு பேசியாச்சு ரோனி இனி பேச எதுவும் இல்லை என்ற உதய் அறைக்குள் அடைந்து கொண்டான். அவன் பின்னே சென்றாள் வெரோனிகா.
மாமா அன்னைக்கு நான் தான் சொன்னன் இனிமேல் அந்த வீட்டிற்கு நான் வரமாட்டேன்னு ஆனால் இன்னைக்கு நம்ம குழந்தைக்காக நாம அங்கே போகனும் என்றவளது தோளில் கை வைத்தவன் நம்ம குழந்தைக்காக நடந்த எல்லா அவமனத்தையும் மறந்துருவியா ரோனி. ஊர்மிளா உனக்கு பண்ணின துரோகத்தையும் என்றவனிடம் மௌனமாக இருந்தாள் வெரோனிகா.
உன்னால முடியாது தானே ரோனி அப்பறம் எப்படி ரோனி அந்த வீட்டிற்கு போக முடியும். நடந்த எல்லாமே மனசுக்குள்ள அரிச்சுட்டே இருக்கும். உன்னை வீட்டை விட்டு வெளியே போகச் சொன்ன வார்த்தைகள் இன்னும் என் மனசுல ஆறாத ரணமாகத் தான் இருக்கு அதனால திரும்ப அந்த வீட்டிற்கு போகனும்னு நினைக்காதே என்ற உதய் கிளம்பு நாம நம்ம வீட்டிற்குப் போகலாம் என்றிட அவளுக்கு வேறு வழி தெரியவில்லை. அவனுடன் கிளம்பினாள்.
என்ன ரோனி கோபமா இருக்கியா என்ற உதய்யிடம் பேசாதிங்க மாமா என்றவள் முகத்தை திருப்பிக் கொள்ள என்னடி உன் பிரச்சனை அதான் மொத்தக் குடும்பமும் இங்கே வந்து டேரா போட்டிருச்சே அப்பறம் என்ன என்றான் உதய்.
ஆமாம் நீங்க நம்ம வீட்டிற்கு வர மாட்டேன்னு சொல்லிட்டிங்க அவங்க தான் என்ன பண்ணுவாங்க அவங்களுக்கும் மருமகள் மாசமா இருக்கும் பொழுது தனியா இருக்க விடக் கூடாதுங்கிற எண்ணம் வராதா அதான் வந்துட்டாங்க என்றவளது நெற்றியில் முத்தமிட்டவன் உனக்கு நிஜமாவே அந்த வீட்டிற்கு போகனுமா ரோனி என்றான் உதய்.
ஏன் மாமா அப்படி கேட்கிறிங்க நம்ம கல்யாணம் முடிஞ்சு முதல் முதலா உங்கள் மனைவியா அந்த வீட்டில் தான் அடி எடுத்து வைத்தேன். நம்மளோட வாழ்க்கையை ஆரம்பிச்சது அந்த வீட்டில் தான். நம்ம முதல் குழந்தை உருவானதும் அந்த வீட்டில் தானே மாமா அது வெறும் வீடு இல்லை மாமா நம்மளோட அடையாளம். நம்மளோட எல்லா இன்பம், துன்பம் எல்லாம் பார்த்த வீடு.
அன்னைக்கு நடந்த ஒரு இன்சிடென்ட் மட்டும் நம்ம மனசுல பதிஞ்சு நல்லாவா இருக்கு என்றவள் இப்போ நான் ஆசைப் பட்ட எல்லாத்தையும் நீங்க செய்யனும் எனக்காக இல்லை இல்லை நம்ம பிள்ளைக்காக நாம நம்ம வீட்டிற்கு போகனும். பழையபடி கூட்டுக் குடும்பமா வாழனும். மாமா ஆறு வருசம் ஆச்சு எல்லா காயங்களும் ஆறிருச்சு ப்ளீஸ் என்று அவள் கெஞ்சிட எதுனாலும் சொல்லி என்னை உன் பேச்சை கேட்க வச்சுருவடி என்றவன் மனைவியின் ஆசைக்காக அந்த வீட்டிற்கு செல்ல சம்மதித்தான்.
அப்போ நீங்க அந்த வீட்டிற்கு திரும்ப போயிட்டிங்களா என்ற குழந்தை தயனிகா விடம் ஆமாம் அப்படியே உங்க அப்பா அழைச்சுட்டுப் போயிட்டு தான் மறுவேலை பார்த்தாரு என்றாள் வெரோனிகா தன் கணவனை முறைத்தபடி.
உன் அம்மாவுக்கு என்னைப் பற்றி நல்லாவே தெரியும் ஒரு முடிவு எடுத்தால் நான் மாறவே மாட்டேன்னு அவள் அதை புரிஞ்சுக்காமல் பண்ணினால் டாடி தான் என்ன பண்ணுவேன் தங்கம் நானும் சொல்லிப் பார்த்தேன் உன் அம்மா பிடிவாதக்காரி கேட்க மாட்டேனுட்டாள் அதான் வேற வழி இல்லாமல் அழைச்சுட்டு வந்துட்டேன் ஆனால் அவளும், நானும் மட்டும் தான் அந்த வீட்டிற்கு வந்தோம். மத்தவங்க எல்லோரையும் நம்மளோட இன்னொரு வீட்டில் தங்க வச்சுட்டேன் என்று சிரித்தான் உதயச்சந்திரன்.
ஏன் டாடி என்ற தயனிகாவிடம் என் ரோனியை மறந்தும் அந்த வீட்டை விட்டு யாரும் போகச் சொல்லக் கூடாது அதனால தான் அவளை போகச் சொன்ன யாரையும் அந்த வீட்டில் தங்க வேண்டாம்னு சொல்லிட்டேன் என்றான் உதய்.
சரி ,சரி அப்பாவும், பொண்ணும் கதை பேசினது போதும் தூங்குங்க நாளைக்கு சனிக்கிழமை காலையிலே நம்ம வீட்டிற்கு போகனும் என்றாள் வெரோனிகா. லூசு மம்மி இதானே நம்ம வீடு என்ற தயனிகாவிடம் இது உன் அப்பா வீடு. என் மாமனார், மாமியார், கொழுந்தனார், ஓரகத்திகள் இருக்கிற அந்த வீடு தான் என்னோட வீடு உன் அப்பாவுக்கு புரியும் படி சொல்லு தயனி என்றவளை அணைத்தவன் குழந்தை தூங்கிட்டாள் என்றான்.
உன்னோட சந்தோசத்தை விட உன்னோட மரியாதை எனக்கு ரொம்பவே முக்கியம் ரோனி என்றவனது நெற்றியில் முத்தமிட்டவள் ஐ லவ் யூ சந்துரு
மாமா என்றிட லவ் யூ டூ ரோனி என்றான் அவனது பிடியை இறுக்கியபடி…
.
….. முற்றும்….