விதியின் முடிச்சு…(10)

4.6
(9)

பயமா இருக்கு ஊர்மி கட்டாயம் டியூசன் போகனுமா என்ற வெரோனிகாவிடம் ஆமாம் ரோனி டியூசன் போனால் மட்டும் தான் உன் டவுட் எல்லாம் கிளியராகி பாடம் புரியும் என்ற ஊர்மிளா சாப்பிட ஆரம்பித்தாள்.

 

அமைதியாக சாப்பிட ஆரம்பித்த வெரோனிகா ஏதோ யோசனையிலே இருந்தாள். என்ன யோசனை என்ற நிகிலாவிடம் ஒன்றும் இல்லை என்றாள் வெரோனிகா.

 

நிகிலா சென்ற பிறகு என்ன யோசிச்சுட்டே இருக்கிற ரோனி என்றாள் ஊர்மிளா. இல்லை ஸ்கூலுக்கே அர்ச்சனா அக்கா, பிரகாஷ் மாமா கூட தான் வந்துட்டு போகனும். இப்போ டியூசன் வேறையா நான் யார் கூட டியூசனுக்கு போவேன். சைக்கிள் கேட்டாலும் உங்க அண்ணா வாங்கித் தர மாட்டேன்னு சொல்லிட்டாங்க என்று கவலையாக சொன்னாள் வெரோனிகா.

 

பேசாமல் அப்பா, பெரியப்பா ஃப்ரீயா இருக்காங்களானு கேட்கலாமா என்ற ஊர்மிளாவிடம் அச்சோ மாமாவையும், சின்ன மாமாவையும் கூட்டிட்டு போகவா உனக்கு ரொம்ப சேட்டைடி என்ற வெரோனிகா சிரித்து விட ஃப்ரீயா விடு ரோனி பார்த்துக் கொள்ளலாம் என்றாள் ஊர்மிளா.

 

என்ன அண்ணா ஏன் டல்லா இருக்கிங்க சாப்பிடுங்க என்ற பிரகாஷிடம் டல் எல்லாம் ஒன்றும் இல்லை என்றான் உதயச்சந்திரன். என்ன உதய் நேற்று ரோனி சமையல் சாப்பிட்டு இன்னைக்கு எங்க சமையல் சாப்பிட பிடிக்கவில்லையா என்ற சுசீலாவிடம் ஏன் சித்தி நீங்க வேற என்றவன் அமைதியாக சாப்பிட்டான்.

 

 

என்ன வினித்ரா மேடம் க்ளாஸ் போகாமல் லேபிலே இருக்கிங்க என்ற உதயச்சந்திரனிடம் இல்லை சார் லேப்ல தான் கிளாஸ் எடுக்கனும் என்றாள் வினித்ரா. எந்த கிளாஸ் என்றவனிடம் 12g  தேர்ட் குரூப் என்றிட பர்ஸ்ட் க்ரூப் 12c க்கும் இந்த ஹவர் கம்யூட்டர்சயின்ஸ் தானே என்றான்.

 

அவங்களுக்கு லேப் ஹவர் சார். இவங்களுக்கு க்ளாஸ் தான் என்றவள் இதோ வந்துட்டாங்க என்று தன் வகுப்பை நடத்த ஆரம்பித்தாள்.

 

12c மாணவர்களும் வந்து விட அவர்களை லேபிற்குள் அனுப்பி வைத்த உதயச்சந்திரன் ப்ரோகிராமிங் கிளாஸ் ஸ்டார்ட் செய்ய ஆரம்பித்தான்.

 

என்னடி உன் அண்ணன் கிளாஸ் எடுக்கிறாரு என்ற ரோனியிடம் அவர்தான்டி நம்ம கிளாஸ் டீச்சர் என்றாள் ஊர்மிளா. உங்க அண்ணன் வாத்தியாரா என்றவளிடம் ஆமாம் என்று தலையை ஆட்டினாள் ஊர்மிளா.

 

இந்த மனுசன் சும்மாவே பிரம்பு இல்லாமலே மிரட்டுவாரு. இப்போ வாத்தியார் வேறையா பிரம்பாலே வெளுத்துருவாரோ என்று புலம்பிக் கொண்டே அமர்ந்திருந்தாள் வெரோனிகா.

 

என்ன அங்கே பேச்சு என்ற உதயச்சந்திரன் ஊர்மிளா, வெரோனிகா இருவரையும் எழுப்பிட எழுந்தவள் ஒன்றும் இல்லை என்றாள். சரி ப்ரொஜக்டரை மட்டும் கவனிக்கனும் அன்வாண்டட் டாக்ஸ் இருக்க கூடாது என்றான். அவளும் தலையை ஆட்டி விட்டு பாடத்தை கவனித்தாள்.

 

அன்றைய நாள் எல்லா வகுப்புகளும் முடிந்து விட பாய் ரோனி என்று ஊர்மிளா கிளம்பினாள். வெரோனிகா பள்ளியின் வாயிலில் காத்துக் கொண்டு இருந்தாள்.

 

பிரகாஷ் இன்னும் வந்தபாடில்லை. ஓய் ரோனி என்ன தனியா நிற்கிற என்ற கிஷோரிடம் பதில் பேசாமல் நின்றாள் வெரோனிகா. உன்னை தானே கேட்கிறான் பதில் சொன்னால் என்ன என்ற விஷாலிடம் எங்க மாமாவுக்காக வெயிட் பண்றேன் என்றவள் அவர்களை கண்டு கொள்ளாமல் நின்றாள்.

 

திமிரு பிடிச்சவ போல பங்கு நீ வேற ஆளை பார்த்துக்கோ என்று கிஷோர் அர்ஜுனிடம் கூறிட பொறுக்கி வாயை மூடு எதாச்சும் உளறிகிட்டு என்று நண்பனை இழுத்துச் சென்றான் அர்ஜுன்.

 

பிரகாஷ் ஒரு வழியாக வந்திட ரொம்ப நேரமா வெயிட் பண்ணிங்களோ என்றான். ஆமாம் மாமா என்றவளிடம் சாரி அண்ணி நான் மறந்துட்டேன் இப்போ தான் அம்மா போன் பண்ணினாங்க என்றவனிடம் ஸ்கூலில் அண்ணினு சொல்லாதிங்க மாமா என்றாள் வெரோனிகா.

 

யாரும் இல்லைங்கிறதால தான் சொன்னேன் அண்ணி என்றவன் பைக்கை வீட்டை நோக்கி செலுத்தினான்.

 

என்ன சார் உங்க தம்பி ஒரு பொண்ணை பைக்ல கூட்டிட்டு போகிறார் என்ற உமா டீச்சரிடம் எங்க வீட்டு பொண்ணு தான் மேடம் என்ற உதயச்சந்திரன் தனது பைக்கில் கிளம்பினான்.

 

யாரு மிஸ் அது இவங்க வீட்டுப் பொண்ணுனு சொல்லுறாரு என்ற உமாமிஸ்ஸிடம் அவங்க கசினாம் மேடம் என்ற வினித்ரா தன் ஸ்கூட்டரில் கிளம்பிச் சென்றாள்.

 

 

என்னடி வந்துட்டியா என்ற சுசீலாவிடம் ஹும் வந்துட்டேன் அத்தை என்றவள் ஊர்மிளா எங்கே என்றிட அவள் டியூசன் கிளம்பி போயிட்டாள் என்ற சுசீலா அவளிடம் இந்தா இந்த பூஸ்ட்டை குடி என்றார். தாங்க்ஸ் அத்தை என்றவள் தன்னறைக்கு சென்றாள்.

 

அவள் அறைக்குள் நுழைந்தவுடன் சென்று உடைமாற்றி விட்டு முகம் கழுவி வந்தாள். உதயச்சந்திரனும் வந்து விட்டான். ஸ்கூல் எப்படி இருந்துச்சு என்றவனிடம் ஹும் இருந்துச்சு என்றவள் என்னை எப்போ டியூசன் சேர்த்து விடப் போறிங்க என்றாள் வெரோனிகா.

 

டியூசனா அது எதற்கு என்றவனிடம் ஊர்மிளா டியூசன் போகிறாளே என்றாள் வெரோனிகா. அவள் டியூசன் போனால் நீயும் போகனுமா என்ன என்றவனிடம் கிளாஸ்ல டவுட் கிளியர் பண்ண மாட்டாங்களாமே டியூசன்ல தான் சொல்லிக் கொடுப்பாங்களாமே என்றாள் வெரோனிகா.

 

உனக்கு என்ன டவுட் என்றவனிடம் எல்லா சப்ஜெக்ட்டுமே டவுட் தான். நான் எதை சொல்ல என்றவள் எனக்கு சுத்தமா புரியவே இல்லை. மேத்ஸ் அவங்க பாட்டுக்கு ஏதோ தியரம் எழுதி போடுறாங்க அதை வச்சு நம்மளையே சம் சால்வ் பண்ண சொல்றாங்க. அந்த தியரம் எனக்கு சுத்தமா புரியவே இல்லை என்றாள் வெரோனிகா.

 

 

நாளைக்கு பிசிக்ஸ் டெஸ்ட் இருக்கு, கெமிஸ்ட்ரியும் டெஸ்ட் இருக்கு. தமிழ், இங்கிலிஷ் மட்டும் தான் எனக்கு புரியுது என்றாள் பாவமாக.

 

சரி போ போயி எனக்கு சித்திகிட்ட டீ வாங்கிட்டு வாயேன் கொஞ்சம் தலை வலிக்குது என்றான் உதயச்சந்திரன். சரி என்று அவள் கிட்சனுக்கு சென்றிட அங்கு யாரும் இல்லை. சரி நாமளே டீ போடலாம் என்று நினைத்து கணவன் அவனுக்கு இஞ்சி, ஏலக்காய் தட்டிப் போட்டு டீ போட்டவள் வெல்லம் போட்டு ஆத்தி கொண்டு வந்து கொடுத்தாள்.

 

டீ வாங்கிட்டு வர இவ்வளவு நேரமா என்றவனிடம் அத்தையைக் காணோம் அதனால நானே டீ போட்டேன் என்றாள். ஹும் டீ நல்ல வாசணையா இருக்கே என்றவனிடம் தலைவலினு சொன்னிங்களே அதான் இஞ்சி, ஏலக்காய் தட்டி டீ போட்டேன். சீனிக்கு பதிலா வெல்லம் போட்டேன் என்றாள்.

 

நல்லா இருக்கு என்றவன் உனக்கு டியூசன் எல்லாம் வேண்டாம். என்ன டவுட்டோ என்கிட்டையே கேளு நானே சொல்லித் தரேன் என்றான். எனக்கு கம்ப்யூட்டர்சயின்ஸ்ல டவுட் இல்லை பிசிக்ஸ், கெமிஸ்ட்ரி, மேத்ஸ் என்றவளிடம் மேடம் நாங்களும் இது எல்லாமே படிச்சுட்டு தான் காலேஜ்ல டிகிரி முடிச்சோம். என்ன டவுட் என்கிட்டையே கேளு என்றான்.

 

அவளும் தனது எல்லா சந்தேகங்களையும் கேட்டிட அவளுக்கு தெளிவாகவே சொல்லிக் கொடுத்தான். நான் சொல்லிக் கொடுத்த சப்ஜெக்ட்ல இருந்து தினமும் நீ டெஸ்ட் எழுதியே ஆகனும் என்ற  உதயச்சந்திரனிடம் சரிங்க என்றாள்.

 

அம்மா ரொம்ப டயர்டா இருக்குமா சாப்பிட என்ன இருக்கு என்று வந்தாள் ஊர்மிளா. சாப்பிட என் செல்ல மகளுக்கு என்ன வேண்டும் என்றார் மலர்கொடி. எது கிடைச்சாலும் சாப்பிடுவேன் பெரியம்மா என்றவளிடம் சரி முதலில் இந்த ஜூஸ் குடி. அரைமணி நேரத்தில் சமையல் முடிஞ்சுரும் என்ற மலர்கொடியிடம் ஜூஸை வாங்கி குடித்தாள் ஊர்மிளா.

 

என்ன ஊர்மி இப்போ தான் வந்தாயா என்ற அர்ச்சனா ரோனி எங்கே என்றாள். அவள் ரூம்ல இருக்கிறாள் ஏன் கேட்கிற என்றார் மலர்கொடி. இல்லைம்மா இன்னைக்கு பர்ஸ்ட் டே ஸ்கூல் எப்படி போச்சுனு கேட்கத் தான் என்ற அர்ச்சனா ஆமாம் ஊர்மி அவள் டியூசன் சேரவில்லையா என்றாள்.

 

அண்ணாகிட்டையும், பெரியப்பாகிட்டையும் கேட்கனும்னு சொன்னாள் அக்கா என்ற ஊர்மிளா சரி நான் போயி ஃப்ரஷ் ஆகிட்டு வரேன் என்ற ஊர்மிளா கிளம்பினாள்.

 

என்ன பார்க்கிற என்ற உதயச்சந்திரனிடம் இல்லை நீங்க ரொம்ப டேலண்ட்டோ எல்லா சப்ஜெக்டுமே சொல்லிக் கொடுக்கிறிங்க அப்பறம் ஏன் இந்த ஊர்மிளா டியூசன் போகிறாள். உங்க கிட்டையே படிக்கலாமே என்றாள் வெரோனிகா.

 

அவளுக்கு பப்ளிக் மார்க் எவ்வளவு முக்கியமோ அதே போல மிட் டெர்ம் டெஸ்ட், குவாட்டர்லி எக்ஸாம், ஹாஃப் இயர்லி எக்ஸாம் எல்லாத்திலும் டாப் மார்க் வாங்கனும்னு ஆசை அதனால டியூசன் போகிறாள் என்றான் உதயச்சந்திரன்.

 

 

புரியலையே என்றவளிடம் உங்க வேதா இருக்காரே அவருக்கு அவர்கிட்ட டியூசன் படிக்கிற ஸ்டூடண்ட்க்கு மட்டும் தான் ஃபுல் மார்க் போடுவாரு. எவ்வளவு தான் நீ எக்ஸாம் நல்லா எழுதி இருந்தாலும் அவர்கிட்ட மார்க் வாங்கனும்னா அவர் டியூசன்ல படிக்கனும். வேதா மட்டும் இல்லை பிசிக்ஸ் மூர்த்தி, மேத்ஸ் மாணிக்கம் எல்லோரும் கிட்டத்தட்ட ஒரே மாதிரி தான் என்றான் உதயச்சந்திரன்.

 

அது தப்பில்லையா என்றவளிடம் தப்பு தான் ஆனால் அவங்க ஸ்டூடண்ட் தான் எவ்ரி இயர் ஸ்டேட்ரேங்க் வாங்குறாங்க . மூன்று பேருமே எக்ஸ்பீரின்ஸ் டீச்சர்ஸ் அதனால மேனேஜ்மென்ட்ல ஒன்றும் சொல்ல முடியாது என்றவன் சரி நீ  பப்ளிக் எக்ஸாம் பற்றி மட்டும் யோசி மத்த எக்ஸாம் மார்க் முக்கியம் இல்லை என்றான் உதயச்சந்திரன்.

 

 

சரிங்க என்றவள் உங்களை பேசாமல் சந்துரு மாமானு கூப்பிடவா என்றாள் வெரோனிகா. ஹான் சந்துருவா என்றவனிடம் உதயச்சந்திரன் அதில் பாதி சந்திரன் அதோட சுருக்கம் சந்துரு என்றாள். அதைக் கேட்டவன் அழகாக கன்னக்குழி விழ சிரித்திட சந்துருமாமா நீங்க சிரிக்கும் போது ரொம்ப அழகா இருக்கிங்க என்றாள்.

 

 

ஏய் என்று அவன் அதட்டிட சாரி மாமா என்று ஓடிச் சென்றாள். அவன் சிரித்து விட்டு எழுந்து பால்கணிக்கு சென்றான்.

 

 

இந்தப் பொண்ணை என்ன சொல்லுறதுனே தெரியலை என்று நினைத்தவன் போன் ஒலித்திட அதை எடுத்து சந்தோசமாக யாரிடமோ பேசிக் கொண்டு இருந்தான்.

 

என்ன அண்ணி இப்படி ஓடி வரீங்க பார்த்து வாங்க என்ற பிரகாஷிடம் சாரி மாமா என்றவள் குதித்து குதித்து படிக்கட்டில் இறங்கினாள்.

 

அவளது குழந்தைத் தனத்தைக் கண்டு சிரித்து விட்டு பிரகாஷ் தன்னறைக்கு சென்றான்.

 

என்ன ஊர்மி டியூசன் எல்லாம் முடிஞ்சதா என்ற வெரோனிகாவிடம் அதெல்லாம் முடிஞ்சுருச்சு ரோனி என்ற ஊர்மிளா நீ எப்போ டியூசன் சேரப் போற என்றாள்.

 

நான் டியூசன் வரவில்லைப்பா என்றவளிடம் அப்போ நீ வேதாகிட்ட மாட்டிகிட்டு அந்த கிஷோர், விஷால் மாதிரி கிளாஸ்ரூம் வாசலில் தான் நிற்கனும் என்றாள் ஊர்மிளா.

 

 

….தொடரும்…

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.6 / 5. Vote count: 9

No votes so far! Be the first to rate this post.

2 thoughts on “விதியின் முடிச்சு…(10)”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!