விதியின் முடிச்சு..(101to 129)

5
(3)

அத்தியாயம் 101

 

என்ன தேவ் என்ன பிரச்சனை என்ற உதயச்சந்திரன் கண்டதோ கழுத்தில் புதுத் தாலியுடன் ஒரு பெண்ணும், அவளுடன் சரவணனும் நிற்பதைத் தான்.

 

என்ன சரவணா நீங்க இங்கே எப்படி என்ன இது யாரு இந்தப் பொண்ணு என்ற உதய்யிடம் இவள் கனிமொழி. தேன்மொழி அண்ணியோட தங்கச்சி என்றான் சரவணன்.

 

சரி நீங்க ஏன் கேரளா வந்திங்க என்ன பிரச்சனை என்றவனிடம் நடந்த விசயங்களை கூறினான் தேவச்சந்திரன்.

 

அண்ணா நான் ஒரு ஆபரேசன் விசயமா வந்தேன்னு சொல்லி இருந்தேனே அப்போ ஸ்ரீஜாவையும் இங்கே அவள் ப்ரண்ட் வீட்டுக்கு வந்து பார்த்தேன். பங்க்சன் முடிஞ்சதும் நாங்க பத்மநாபசாமி கோவிலுக்கு போனோம். அங்கே சரவணன் இந்த பொண்ணை கல்யாணம் பண்ணிட்டு மாலையும், கழுத்துமா நிற்கிறார்.

 

எனக்கு என்ன பண்ணுறதுன்னே தெரியலை அண்ணா அதான் உன்னை உடனே வரச் சொன்னேன் என்றான் தேவ்.

 

என்ன பண்ணிருக்கிங்க சரவணன் என்ற உதய்யிடம் வேற வழி தெரியவில்லை மச்சான். இவளோட அப்பா உயிரே போனாலும் பொண்ணை கொடுக்க முடியாதுன்னு சொல்லிட்டாரு. அவள் இல்லாமல் நானும், நான் இல்லாமல் அவளும் நிச்சயம் வாழ மாட்டோம். அதனால் தான் என்றான்.

 

உங்க தங்கச்சி பண்ணின அதே தப்பை தான் நீங்களும் பண்ணி இருக்கிங்க. வினோதா ஓடிப் போனப்ப நீங்களும், உங்க அண்ணனும் எவ்வளவு கோபம் பட்டிங்க அப்போ நீங்க அது போல செய்திருக்க கூடாது. 

 

உங்க தங்கச்சி ஓடிப் போனப்ப உங்களுக்கு ஏற்பட்ட அதே வலியும், வேதனையும் தானே இப்போ கனிமொழியோட அப்பா, அம்மாவுக்கும் ஏற்பட்டிருக்கும் என்ற உதய்யிடம் மச்சான் எல்லாம் எனக்கு புரியுது ஆனால் எங்க சூழ்நிலை அப்படி. சித்தப்பா போயி பேசின பிறகும் மாமா மனசு இறங்கவில்லை என்றவனை முறைத்த உதய் ஏன் நாங்கள் எல்லாம் உங்கள் உறவு இல்லையா. உங்களுக்காக நான் போயி பேச மாட்டேனா. வினோதா ஓடிப் போனாங்கனா சூழ்நிலை அப்படி அதனால தான் நானே அவங்களை அனுப்பி வைத்தேன்.

 

ஆனால் உங்களுக்கு அப்படி ஒன்றும் நெருக்கடியான சூழ்நிலை இல்லையே என்ற உதய்யிடம் அண்ணா தயவு செய்து புரிஞ்சுக்கோங்க. என்னால இவரு இல்லாமல் வாழ முடியாது. என் அம்மா என்னை கொன்னு போட்டாலும் போடுவேன். இவருக்கு கட்டி வைக்க மாட்டேன்னு சொல்லுறாங்க அதான் என்றாள் கனிமொழி.

 

உங்க அம்மா ஏன்மா தங்கச்சி அப்படி சொன்னாங்க கொஞ்சம் காரணத்தை தெளிவா சொல்லு என்ற உதய்யிடம் அக்காவோட உறவு இப்போ அவ்வளவு சரியா இல்லை. கல்யாணத்திற்கு பிறகு அக்கா எங்க வீட்டுக்கு வருவதும் இல்லை, அப்பா, அம்மா கிட்ட பேசுறதும் இல்லை. பேசினால் அத்தை அவளை ஒரு வழி ஆக்கிருவாங்க. என்னை இவருக்கு கட்டிக் கொடுத்தால் என்னோட நிலைமையும் அக்காவோட நிலைமை போல் ஆகிரும்னு பயந்து தான் என்று தயங்கியபடி கூறினாள் கனிமொழி.

 

அதில் என்ன தப்பு இருக்கு சொல்லுங்க உங்க அம்மா, அப்பா ஒரு பொண்ணை பிரிஞ்சு படுற வேதனை இன்னொரு பொண்ணையும் பிரிஞ்சு அனுபவிக்கனுமான்னு யோசிச்சுருக்காங்க. உங்க அத்தை, அக்கா இரண்டு பேரோட உறவு போல உங்களோட இருக்கிற அவங்க உறவும் மாறிடுமோங்கிற பயம் தான் அவங்க உங்க கல்யாணத்திற்கு சம்மதிக்காத காரணம்.

 

அதை புரிஞ்சுகிட்டு அவங்களுக்கு நீங்க புரிய வச்சுருக்கனும். நிச்சயமா என் சித்தப்பாவும், அண்ணனும் பண்ணின தப்பை நான் ஒருநாளும் செய்ய மாட்டேன்னு நீங்க புரிய வச்சுருக்கனும் சரவணன். தப்பு பண்ணிட்டிங்க என்ன அவசரம் அதற்குள்ள கல்யாணம் என்ற உதய் சரி நடந்தது  நடந்து போச்சு ஒழுங்கா உங்க வீட்டுக்கு இரண்டு பேரும் கிளம்பி வாங்க என்றான் உதய்.

 

இல்லை மச்சான் நாங்க அங்கே வரவில்லை என்ற சரவணனை முறைத்தவன் புரிஞ்சு தான் பேசுறிங்களா அங்கே சூழ்நிலை என்னனு தெரியுமா என்றான் கோபமாக.

 

என்ன சூழ்நிலையா இருந்தால் என்ன அண்ணா அங்கே போனால் நாங்கள் எப்படி சேர்ந்து வாழ முடியும். இரண்டு வீட்டு பக்கமும் எதிர்ப்பு பலமா இருக்கும் என்ற கனிமொழியிடம் தப்புமா ரொம்ப தப்பு நீங்க பேசுறது.

 

உங்க அப்பாவும், அம்மாவும் பொண்ணை காணோமேன்னு எவ்வளவு துடிச்சுருப்பாங்க உனக்கு அவங்க மேல கொஞ்சம் கூட பாசமே இல்லையா. உங்க வாழ்க்கைக்காக இத்தனை சுயநலமா இருக்கவே கூடாது என்றவன் உங்க வீட்டில் முதலில் என்ன நிலைமைன்னு தெரியுமா என்றவன் வெரோனிகாவிற்கு போன் செய்தான்.

 

ஹலோ, மாமா என்றவளிடம் நார்மலாக நலம் விசாரித்தவன் உங்க வீட்டிற்கு போன் பண்ணுனியா ரோனி என்றிட பேசினேன் மாமா. அங்கே பெரிய பிரச்சனையாகிருச்சாம் இந்த சரவணன் அண்ணன் , தேனு அண்ணியோட தங்கச்சி கனி அக்காவை கூட்டிட்டு ஓடிப் போயிருச்சாம். வீட்டில் ஒரே சண்டை பெரியம்மாவுக்கும், செல்வராணி அத்தைக்கும. பயங்கர சண்டையாம். தெய்வானை அத்தையை பெரியம்மா கீழே தள்ளி விட்டு மண்டை உடைஞ்சு, அப்பறம் அண்ணியையும்,அம்மாவையும் பேசக் கூடாத பேச்செல்லாம் பேசி கோபத்தில் பெரியப்பா பெரியம்மாவை பெல்ட்டால அடிச்சு, அப்பறம் அம்மாவும், அப்பாவும் வீட்டை விட்டு போயி தோப்பு வீட்டில் குடி இருக்காங்கலாம். எவ்வளவு பிரச்சனை என்று நடந்த அத்துனையையும் ஒன்று விடாமல் தன் அன்னை பூங்கொடி சொன்னதாக கூறினாள் வெரோனிகா.

 

சரி ரோனி நான் அப்பறம் பேசுறேன் என்றவன் போனை வைத்து விட்டு இப்போ என்ன சொல்லப் போறிங்க சரவணன். உங்க இரண்டு பேரோட அவசரம் இரண்டு குடும்பத்தோட நிம்மதி, சந்தோசம் எல்லாமே இல்லாமல் போச்சு.

 

ஏற்கனவே இரண்டு குடும்பத்திற்கும் உறவு சரி இல்லை. இப்ப தான் கொஞ்சம், கொஞ்சம் ஒட்டு , உறவு ஆரம்பிச்சது உங்க இரண்டு பேரோட முடிவால இனி காலத்திற்கும் சேர முடியாதபடி பண்ணிட்டிங்க.

 

போதாக்குறைக்கு உங்க குடும்பத்திற்குள்ளே வார்த்தைகள் தடிச்சு உங்க சித்தப்பா, சித்தி தனிக்குடித்தனம் போகிற நிலைமையை உருவாக்கிட்டிங்க இது தான் நீங்க கேரளாவுக்கு ஓடி வந்து கல்யாணம் பண்ணிக்கிட்டதால செய்த சாதனை என்றான் உதய்.

 

அண்ணா கோபம் படாதே என்ற தேவ்விடம் கோபம் படாமல் என்னடா பண்ண சொல்லுற இரண்டு பேருக்குமே கொஞ்சம் கூட பொறுப்பில்லை. மச்சான் தப்பா எடுத்துக்காதிங்க ரோனி உங்க தங்கச்சி தானே அவள் கிட்ட உள்ள நிதானம், பொறுப்பு , சகிப்புத்தன்மை இதெல்லாம் ஏன் உங்க கிட்ட இல்லாமல் போச்சு என்றான் உதய்.

 

மாமா இனி பேசி என்ன பண்ண முடியும் அடுத்து என்ன பண்ணலாம்னு சொல்லுங்க என்றாள் ஸ்ரீஜா. எனக்கு ஒன்றும் புரியவில்லை இவங்களை இப்படியே எங்கேயாவது போங்கனு அம்போன்னு விட்டுட்டு போக எனக்கு மனசு இல்லை. யோசிக்கலாம் என்ற உதய் சரவணனிடம் திரும்பி சரவணன் இனிமேலாவது கொஞ்சம் நிதானமா யோசிங்க என்று சொல்லி விட்டு அந்த அறையை விட்டு வெளியேறினான்.

 

அண்ணா நீங்களும் , அவங்களும் ரெஸ்ட் எடுங்க நாங்க வந்துடுறோம் என்றவள் தேவ்வை கண்ணைக் காட்டிட அவனும் அவளுடன் சென்றான்.

 

நாம தப்பு பண்ணிட்டோமா மச்சான் என்ற கனிமொழியிடம் இப்படி எல்லாம் நடக்கும்னு நமக்கு தெரியும் தானே கனி என்றான் சரவணன். ஆனால் அம்மா சண்டை போட்டு சித்தி, சித்தப்பாவை வீட்டை விட்டு போகும் அளவிற்கு செய்வாங்கனு நிச்சயம் நான் எதிர்பார்க்கவில்லை என்றான் சரவணன்.

 

இப்போ என்ன பண்ணலாம் மச்சான் என்ற கனிமொழியிடம் பார்ப்போம் கனி என்ற சரவணன் யோசனையுடன் அமர்ந்தான்.

 

என்ன பண்ணலாம் தேவ் என்ற உதய்யிடம் அண்ணா எனக்கு என்ன சொல்லுறதுன்னே தெரியலை என்றான் தேவ். ஆமாம் ஸ்ரீஜா ஏன் ரொம்ப டயர்டா இருக்கிற மாதிரி இருக்காங்க. எதுவும் பிரச்சனையா என்ற உதயச்சந்திரனிடம் அண்ணா உன்கிட்ட என்னால இதை மறைக்க முடியவில்லை ஸ்ரீஜாவுக்கு ப்ரஸ்ட் கேன்சர் என்றான் தேவ்.

 

என்னடா சொல்லுற என்ற உதய்யிடம் அனைத்தையும் சொல்லி முடித்தவன் இப்போ இதை வீட்டில் சொன்னால் அர்ச்சனாவோட கல்யாணத்தில் எல்லோரும் சந்தோசமா இருப்பாங்களான்னு அவள் கேட்கிறாள் என்றான் தேவ்.

 

ஏய் ஸ்ரீஜா அர்ச்சனாவோட சந்தோசம் முக்கியம் தான் அதற்காக உன்னோட பிரச்சனையை நீ வீட்டில் மறைக்கனுமா. என்ன தான்டா நினைச்சுட்டு இருக்கிங்க நீங்க என்றவன் கோபமாக அமர்ந்திட நான் தான் மாமா இந்த யோசனையை சொன்னேன் என்றவளை முறைத்தான் உதய்.

 

உனக்கு அறிவு இருக்கா, இல்லையா ஸ்ரீஜா. எல்லா விசயத்திலுமே தப்பா தான் முடிவு எடுப்பியா. உனக்கு இப்படி ஒரு பிரச்சனை இருக்குனு அவன் கிட்டையும் சொல்லாமல், வீட்டில் யாருக்கிட்டையும் சொல்லாமல் இத்தனை தூரம் உன் ப்ரண்டை துணைக்கு அழைச்சுட்டு வந்துருக்கியே வந்த இடத்தில் விபரீதமா எதுவும் நடந்திருச்சு யாரால என்ன பண்ண முடியும் சொல்லு.

 

நீ ஒன்றும் அநாதை இல்லை.  உனக்குனு ஒரு குடும்பம் இருக்கு. அம்மா, அப்பா, புருசன், தங்கச்சி, மாமனார், மாமியார்னு இத்தனை பேரு இருந்தும் நீ யாரும் இல்லாதவங்க போல உன் ப்ரண்ட் கூட ட்ரீட்மென்ட்க்கு வந்திருக்க.

 

எங்களை விடு நிலாவை பற்றி யோசிச்சியா சொல்லு. உன்னை காணாமல் குழந்தை எத்தனை தூரம் ஏங்கிப் போயிருக்காள்னு தெரியுமா. அப்பா, அம்மா இரண்டு பேரும் இல்லாமல் குழந்தை தவிச்ச தவிப்பு இருக்கே அதை எல்லாம் யோசிக்காமல் கிளம்பி வந்துட்டிங்க. நம்ம ஊர்லையே ட்ரீட்மென்ட் கொடுத்திருந்தால் எங்களுக்கு தெரிஞ்சுரும்னு உங்க இஸ்டத்திற்கு இங்கே வந்தாச்சு என்றான் கோபமாக.

 

மாமா என்றவள் ஏதோ சொல்ல வர பேசாதே ஸ்ரீஜா என்ன உன் பிரச்சனை. உன்னை எல்லோரும் ஒதுக்கிருவாங்கனா ஏன் தான் இப்படி ஆளாளுக்கு ஒரு முடிவை எடுத்துட்டு எல்லோருடைய நிம்மதியையும் கெடுக்கிறிங்களோ.

 

இதே ட்ரீட்மென்ட்டை நீ ஊரிலே எடுத்திருந்தால் மொத்த குடும்பமும் உனக்கு துணையா இருந்திருப்போம். நிலாவும் அவளோட அம்மாவை பிரிஞ்சு இருக்கோம்ங்கிற ஏக்கம் இல்லாமல் இருந்திருப்பாள் என்றான் உதய்.

 

அண்ணா விடு இனி பேசி என்ன ஆகப் போகுது என்ற தேவ்விடம் எதுவும் தப்பா ஆகாது. டாக்டர்கிட்ட பேசி அடுத்தகட்ட ட்ரீட்மென்ட் எல்லாம் சென்னையிலே பார்த்துக்கிறது மாதிரி பேசி என்ன ப்ரொசீஜர்னு பாரு என்றவன் சரவணன் பிரச்சனைக்கும் ஒரு முடிவு எடுத்தாகனும் என்று விட்டு சக்திவேலிற்கு போன் செய்தான்.

 

சொல்லுங்க மாப்பிள்ளை என்ற சக்திவேலுவிடம் சரவணன், கனிமொழி திருமணம் பற்றி கூறியவன் ஊரில் உள்ள நிலவரத்தை அறிந்து கொண்டு அவர்களை அழைத்துச் செல்ல முடிவு செய்தான்.

 

        அத்தியாயம் 102

 

என்ன சொல்லுறிங்க மாப்பிள்ளை என்ற சக்திவேலுவிடம் நடந்த விசயங்களை கூறினான் உதய். தேவ் பார்க்கும் பொழுதே அவங்க கல்யாணம் பண்ணிக்கிடனாங்களாம் மச்சான் இப்போ என்ன பண்ணலாம். எனக்கு புரியவில்லை வீட்டிற்கு அழைத்து வந்தால் பிரச்சனை எதுவும் பெரிசாகுமா என்றான் உதய்.

 

நான் மாமாகிட்டையும், அப்பாகிட்டையும் பேசி புரிய வைக்க முயற்சி பண்ணுறேன் மாப்பிள்ளை நீங்க ஒரு இரண்டு நாள் அவங்களை வேற எங்கேயும் போய் விடாமல் பார்த்துக் கொள்ள முடியுமா என்றான் சக்திவேல். சரிங்க மச்சான் நான் பார்த்துக்கிறேன் சத்தியம் மச்சான் வினோதா விசயத்தில் நான் பண்ணின எதையுமே இவங்க விசயத்தில் பண்ணவில்லை என்றான் உதய்.

 

எனக்கு புரியுது மாப்பிள்ளை உங்க மேல என்ன தப்பு இருக்கு  நான் வீட்டில் பேசிட்டு சொல்கிறேன் என்றான் சக்திவேல்.

 

என்ன சொன்னாரு அண்ணா என்ற தேவ்விடம் ஒரு இரண்டு நாள் அவங்களை பார்த்துக்க சொன்னாரு. அவங்களை நம்ம கூட ஊருக்கு அழைச்சுட்டு போய்ருவோம். அப்பறம் ஸ்ரீஜா இனி உன்னோட ட்ரீட்மென்ட் சென்னையில் தான் நடக்கனும் சொல்லிட்டேன் . நிலாவை பற்றி கொஞ்சமாச்சும் இரண்டு பேரும் யோசிங்க அவள் குழந்தை தாய், தகப்பனோட அருகாமை தான் இப்போதைக்கு அவளுக்கு தேவை. அதை புரிஞ்சு நடந்துக்கோங்க என்றவன் வீட்டில் எத்தனை பிரச்சனை தான். இந்த ஊர்மிளா வேற இனிமேல் கான்பூர் போக மாட்டேன்னு பிடிவாதமா வீட்டிற்கு வந்து உட்கார்ந்திருக்கிறாள்.

 

அப்பா, சித்தப்பா இரண்டு பேரும் குழம்பி போயி இருக்காங்க என்றான் உதய். என்னாச்சுன்னா ஏன் ஊர்மிளா வந்தாள் என்ற தேவ்விடம் தெரியலைடா ஏதோ சைக்கலாஜிக்கலா அபெக்ட் ஆகி இருக்கிறாள். இன்னைக்கு ஈவ்னிங் பிருந்தா கிட்ட அப்பாயின்மென்ட் வாங்கி இருக்கேன்.

 

பிரகாஷும், ரோனியும் அழைச்சுட்டு போறதா சொன்னாங்க என்ற உதய் சரி வாங்க ரொம்ப பசிக்குது அவங்களையும் கூப்பிடுங்க சாப்பிட்டு வரலாம் என்றான். சரியென்று சரவணன், கனிமொழி இருவரையும் அழைத்துக் கொண்டு ஐவரும் சாப்பிடச் சென்றனர்.

 

என்னங்க போனில் யாரு என்ற தேன்மொழியிடம் உதய் மாப்பிள்ளை தான் தேனு. அவரோட தம்பியும், தம்பி சம்சாரமும் கேரளா போயிருந்தாங்களாம். அங்கே பத்மநாபசாமி கோவிலுக்கு போயிருந்தாங்கலாம். அந்த கோவிலில் வச்சு சரவணனும், கனிமொழியும் கல்யாணம் பண்ணிக்கிட்டதை பார்த்துட்டு மாப்பிள்ளைக்கு தகவல் சொன்னாங்களாம். அவரும் உடனே கிளம்பி போயிருக்கிறார். என்று உதய்யிடம் பேசிய விசயங்களை சொல்லி முடித்தான் சக்திவேல்.

 

இப்போ என்னங்க பண்ணுறது என்ற தேன்மொழியிடம் அப்பா, மாமா இரண்டு பேர்கிட்டையுமே சொல்லுவோம். முடிவு அவங்க கையில் என்றான் சக்திவேல்.

 

சொல்லி என்றவளிடம் தேனு அவங்க கிட்ட சொல்லுறதை தவிர வேறு வழி இல்லை. என்னைக்கா இருந்தாலும் சொல்லத் தான் வேண்டும். இப்போதைக்கு இரண்டு நாள் அவங்களை பார்த்துக்க சொல்லி மாப்பிள்ளைகிட்ட சொல்லி இருக்கேன். இங்கே என்ன நிலவரம்னு பார்த்துக்கிட்டு தான் அவங்களை அழைச்சுட்டு வர முடியும் என்றான் சக்திவேல்.

 

என்ன பூங்கொடி ஏன் ஒரு மாதிரியா இருக்க என்ற கதிரேசனிடம் எனக்கு மனசே ஆற மாட்டேங்குதுங்க என்னைப் போயி உங்க அண்ணி ஏன் இப்படி ஒரு வார்த்தை சொன்னாங்க. என் பொண்ணு வீட்டில் தங்கினது ஒரு குற்றமா. உங்க கூட தானேங்க அங்கேயும் தங்கினேன். எப்படிங்க இப்படி ஒரு வார்த்தையை அவங்களால சொல்ல முடிஞ்சது. 

 

எனக்கு பிறந்த நம்ம பொண்ணு மேல சத்தியம் நான் கனவுல கூட உங்களுக்கு துரோகம் நினைச்சதில்லை என்ற பூங்கொடியிடம் பூங்கொடி நீ என்ன பைத்தியமா ஏன்டி அந்தப் பொம்பளை நாக்கில் நரம்பில்லாமல் உன்னை தப்பா பேசிருச்சு. அதற்காக நீ ஏன்டி இப்படி கண்டதை எல்லாம் யோசிக்கிறாய். இதோ பாரு எனக்கு தெரியும் என் பொண்டாட்டி எப்படிப் பட்டவள்னு அது ஒரு சாக்கடை. அந்த சாக்கடை சொல்லுச்சுனு இவளும் இப்போ தான் சத்தியம் பண்ணிட்டு இருக்கிறாள். எனக்கு என் பொண்டாட்டி மேல எந்த சூழ்நிலையிலும் நம்பிக்கை குறைஞ்சதில்லை. குறையவும் குறையாது அதனால கண்டதையும் யோசிச்சு உன் மூளையை குழப்பிக்காதே . 

 

நீ நல்லா இருந்தால் தான் நான் நல்லா இருக்க முடியும். நாம நல்லா இருந்தால் தான் நம்ம பிள்ளை நல்லா இருக்கும். நமக்குனு இருக்கிறது நம்ம ரோனி மட்டும் தான். ரோனிக்கு இன்னும் செய்ய வேண்டிய கடமை நமக்கு நிறைய இருக்கு. அடுத்தவங்க உன்னை காயப் படுத்த சொன்ன வார்த்தைகளை யோசிச்சு, அதற்கு அர்த்தம் கண்டுபிடிச்சு உன்னை நீயே சிதைச்சுட்டு இருக்காமல் துடைச்சுப் போட்டுட்டு எந்திரி. நீ நம்ம பேரன் , பேத்தியை கொஞ்சாமல் சாக கூடாது . உதய் மாப்பிள்ளை நம்ம மகன் அதனால நீ கண்டதையும் யோசிக்காதே. அண்ணிக்கு ஏற்கனவே பொறாமை நம்ம மகளுக்கு நல்ல வாழ்க்கை அமைஞ்சதில் அதனால தான் சந்தர்ப்பம் கிடைச்சதும் உன்னைக் காயப்படுத்திட்டாங்க என்றார் கதிரேசன்.

 

கண்டிப்பா என் பேரன் , பேத்தியை கொஞ்சாமல் சாக மாட்டேன்ங்க  என்ற  பூங்கொடி ரோனிக்கு போன் பண்ணுங்க என்றார். என்ன விசயம் பூங்கொடி என்றவரிடம் மருமகன் வெளியூர் போயிருக்கிறதா  சொன்னாள். அதான் போன் எதுவும் பண்ணினாங்களான்னு கேட்போம் என்றவரிடம் அது அப்படி தான் நம்ம வாழ்க்கையை பார்த்துட்டு கடந்து போகனும் என்ற கதிரேசன் மகளுக்கு போன் செய்தார்.

 

என்ன மாமா சொல்லுறிங்க ஸ்ரீஜா அக்காவுக்கு இப்படி ஒரு பிரச்சனையா கடவுளுக்கு இரக்கமே இல்லை என்றவளிடம் ரோனி நாங்க வரும் வரை இந்த விசயம் என்று ஏதோ சொல்ல வந்தவனிடம் வீட்டில் யார்கிட்டேயும் சொல்ல மாட்டேன் மாமா என்றாள் வெரோனிகா. அக்கா கிட்ட சொல்லுங்க நிலாக்குட்டியை நான் பத்திரமா பாத்துப்பேன்.

 

அவங்களை நீங்களும், தேவ் மாமாவும் பத்திரமா பார்த்துக்கோங்க என்றாள் வெரோனிகா. சரி ரோனி நான் பார்த்துக்கிறேன் அப்பறம் உங்க அண்ணன் சரவணனும், அவரோட மனைவி கனிமொழியும் எங்க கூட தான் இருக்காங்க என்றான் உதய். என்ன மாமா சொல்லுறிங்க கனி சரவணன் அண்ணனோட மனைவியா அப்போ கல்யாணமே பண்ணிட்டாங்களா என்ற வெரோனிகாவிடம் நடந்த நிகழ்வுகளை கூறினான் உதய். இதை நீ அத்தைகிட்டையும், மாமாகிட்டையும் சொல்லி பெரிய மாமாகிட்ட பேச சொல்லு. உன் அண்ணன் சக்திவேல் கிட்ட நான் ஏற்கனவே சொல்லிட்டேன் என்றான் உதயச்சந்திரன்.

 

சரிங்க மாமா நீங்க எல்லோரும் பத்திரமா இருங்க சாயங்காலம் பிரகாஷ் மாமா கூட ஊர்மியை ஹாஸ்பிடல் அழைச்சுட்டு போயிட்டு வரேன் என்றவள் போனை வைத்தாள்.

 

மீண்டும் அவளது மொபைல் ஒலிக்கவும் எடுத்துப் பார்ரத்தவள் சந்தோசமாக அதை அட்டன் செய்து பேச ஆரம்பித்தாள். சொல்லுங்கப்பா என்றவளிடம் எப்படி இருக்க ரோனிம்மா என்ற கதிரேசன் பேச ஆரம்பிக்க கணவன் சொன்ன விசயங்களை தன் தந்தையிடம் கூறினாள் வெரோனிகா.

 

அப்பா இந்த விசயத்தை பெரியப்பாகிட்ட சொல்லிருங்க. தேவ் மாமா பார்க்கும் பொழுதே அவங்க இரண்டு பேரும் கல்யாணம் பண்ணிகிட்டாங்களாம் என்ற வெரோனிகாவிடம் அவன் அந்தப் பொண்ணை இழுத்துட்டு ஓடினதே கல்யாணம் பண்ணிக்கத் தானே ரோனிம்மா இதில் ஆச்சர்யப்பட என்ன இருக்கு என்றவர் சரிம்மா நீ மாப்பிள்ளையை பத்திரமா இருக்க சொல்லு நான் உன் பெரியப்பாகிட்ட பேசிட்டு தகவல் சொல்கிறேன் என்றார் கதிரேசன்.

 

என்னங்க சொன்னா என்ற பூங்கொடியிடம் சரவணன், கனிமொழி இரண்டு பேரும் கேரளாவில் இருக்காங்களாம். கல்யாணம் முடிஞ்சுருச்சாம் என்ற கதிரேசன் மகள் கூறியதை மனைவியிடம் சொன்னார். 

 

ஐயோ, நம்ம மாப்பிள்ளை ஏன் அங்கே போனாரு சும்மாவே வினோதாவை பிரபுவுக்கு கல்யாணம் பண்ணி வச்சுட்டாருன்னு உங்க அண்ணி அவர் மேல வெறுப்பா இருக்காங்க இப்போ சரவணன், கனிமொழி இரண்டு பேரும் அவர் கூட இங்கே வந்தால் சொல்லவே வேண்டாம் அவர் தான் இவங்களை ஓட வச்சாருன்னு உங்க அண்ணி கதை கட்டி விட்டுரும் என்ற பூங்கொடியிடம் விடு பூங்கொடி நம்ம மாப்பிள்ளை மேல எந்த தப்பும் இல்லைன்னு நமக்கும், அந்த சாமிக்கும் தெரியும். என் அண்ணன் என்னை நம்புவாரு அண்ணியை பற்றி இனி யோசிக்காதே. அவங்க என்ன கதை வேண்டுமானாலும் கட்டட்டும் என்றார் கதிரேசன்.

 

என்ன சொல்லுற சக்தி என்ற கணேசனிடம் ஆமாம் அப்பா மாப்பிள்ளை போன் பண்ணி என்கிட்ட விசயத்தை சொன்னாரு என்றவன் இப்போ என்ன பண்ணலாம் அப்பா என்று தன் தந்தையை பார்த்தான். உன் மாமனார்கிட்ட பேசணும் சக்தி என்ற கணேசனை சொக்கலிங்கத்திடம் அழைத்துச் சென்றான் சக்திவேல்.

 

சொக்கு கவலைப் படாதே நம்ம பிள்ளை பற்றி தகவல் தெரிஞ்சுரும் என்று தம்பியை ஆறுதல் படுத்திக் கொண்டிருந்தார் கந்தசாமி. மாமா என்று வந்த சக்திவேலை வாங்க மாப்பிள்ளை என்று வரவேற்ற கந்தசாமி அவனுடன் வந்த கணேசனையும் வரவேற்றார்.

 

சம்மந்தி என்னை மன்னிச்சுருங்க என் வீட்டுக்காரி பண்ணினது பெரிய தப்பு என்று கந்தசாமியிடம் மன்னிப்பு கேட்ட கணேசனிடம் அட விடுங்க மச்சான் அவங்க குணம் தெரிஞ்சது தானே என்றார் கந்தசாமி.

 

சொக்கலிங்கத்திடம் திரும்பிய கணேசன் என் சின்ன மகன் பண்ணின காரியத்தால நீங்கள் எவஙளவு அசிங்கப் பட்டு இருக்கிங்கனு எனக்கு நல்லாவே புரியுது சம்மந்தி அந்தப் பய கனிமொழியை கல்யாணமே பண்ணிகிட்டானாம் என்று உதய் சொன்னதாக சக்திவேல் சொன்ன விசயங்களை கூறி முடித்தார் கணேசன்.

 

என்ன பண்ண சொல்லுறிங்க சம்மந்தி இல்லை நான் என்ன பண்ணட்டும். நானும், அவளோட அம்மாவும் வேண்டாம்னு தானே ஓடிப்போனாள். நல்லபடியா வாழட்டும். என்னோட இளைய மகள் செத்துட்டாள்னு நினைச்சுக்கிறேன் என்றார் சொக்கலிங்கம். என்ன பேசுறிங்க சம்மந்தி என்ற கணேசனிடம் வேற என்ன பேச சொல்லுறிங்க மச்சான். பெத்த அப்பனை மதிக்காமல் ஓடிப்போனவளை வேற என்ன சொல்ல உங்க மருமகளை நீங்க ஏத்துக்கோங்க எனக்கு கவலை இல்லை. ஆனால் என்னோட மகள் கனிமொழி செத்துப் போயிட்டாள் அவ்வளவு தான் என்ற சொக்கலிங்கம் எழுந்து கொள்ள மாமா கொஞ்சம் யோசிச்சு பாருங்க மாமா என்றான் சக்திவேல்.

 

இல்லை மாப்பிள்ளை எனக்கு ஒரே பொண்ணு தான் அது தேன்மொழி தான் விட்டுருங்க இனிமேல் கனிமொழியை பற்றி பேச எதுவும் இல்லை என்ற சொக்கலிங்கம் மனைவி செல்வராணியை பார்த்தார்.

 

நம்ம பொண்ணு செத்துட்டாள் விடுங்க வேற வேலையை பார்க்கலாம் என்ற செல்வராணி கணவருக்கு ஆறுதல் கூறினார்.

 

என்ன தேனு இது என்ற சக்தியிடம் எனக்கு ஒன்றும் புரியவில்லை இவங்களே இப்படி சொல்லிட்டாங்க. உங்க அம்மா என்ன சொல்லப் போறாங்களோ என்றாள் தேன்மொழி.

 

என்ன சொல்லுறிங்க டாக்டர்  ஊர்மிளாவுக்கு பயப்படுற மாதிரி எதுவும் இல்லையே என்ற வெரோனிகாவிடம் மருத்துவர் பிருந்தா சொன்ன விசயமோ

 

       அத்தியாயம் 103

 

ரோனி அவசியம் போகனுமா எனக்கு பைத்தியம் எல்லாம் ஒன்றும் இல்லை என்ற ஊர்மிளாவை முறைத்தவள் லூசாடி நீ உன்னை யாரு இப்போ பைத்தியம்னு சொன்னது. நான் கூட சைக்கார்டிஸ்ட் கிட்ட கவுன்சிலிங் போயிருக்கேன். அப்போ நான் என்ன பைத்தியமா. ஊர்மி உனக்கு புரியுதா இல்லையா நீ என்னோட பழைய ஊர்மி இல்லை. அத்தையும், மாமாவும் உன்னை நினைச்சு நிறைய கவலைப் படுறாங்க அவங்களுக்காக டாக்டர் கிட்ட போகலாம். டாக்டர் பிருந்தா நம்ம சந்துரு மாமா, தேவ் மாமா இரண்டு பேருக்குமே ப்ரண்ட் அப்போ அவங்க நமக்கும் ப்ரண்ட் தானே நம்ம ப்ரண்ட்டை பார்க்க போறோம் அவ்வளவு தானே கிளம்பு ஊர்மி என்றாள் வெரோனிகா.

 

என்ன சொல்லுறா ரோனி என்ற சுசீலாவிடம் நான் பார்த்துக்கிறேன் அத்தை என்றவள் பிரகாஷ் மாமா போகலாமா என்றிட சரிங்க அண்ணி என்ற பிரகாஷ் ஊர்மிளா, வெரோனிகா இருவரையும் அழைத்துச் சென்றான்.

 

என்ன அண்ணி இத்தனை டென்சனா இருக்கிங்க என்ற பிரகாஷிடம் இல்லை மாமா எனக்கு பயமா இருக்கு. நேற்று ராத்திரி அவள் கப்போர்டுக்குள்ள ஒழிஞ்சுக் கிட்டு அழ ஆரம்பிச்சுட்டாள் . சஹானா என்னை விட்டுரு, சஹானா என்னை விட்டுருன்னு அந்த நேரம் உங்க எல்லோரையும் எழுப்பி தொல்லை பண்ண வேண்டாம்னு அவளை சமாளிச்சு தூங்க வச்சுட்டேன் என்றாள் வெரோனிகா.

 

அண்ணி என்ன சொல்லுறிங்க யாரு அந்த சஹானா என்ற பிரகாஷிடம் தெரியலை மாமா பார்ப்போம் டாக்டர் என்ன சொல்லுறாங்கன்னு என்றாள் வெரோனிகா.

 

என்னாச்சு டாக்டர் என்ற ஊர்மிளாவிடம் கொஞ்சம் சீரியஸ் தான். அவளோட ரூம் மெட் சஹானா இறந்து போயிட்டாள் போல. அதில் இவள் கொஞ்சம் அதிகமாவே பாதிக்கப் பட்டிருக்கிறாள். பேய்னு சொல்லி பயந்திருக்காள் என்ற பிருந்தா க்யூர் பண்ணிரலாம் கவலைப் படாதே வெரோனிகா. ஒரு இரண்டு கவுன்சுலிங் போதும் சரியாகிருவாள்.

 

நீங்களும் கொஞ்சம் சப்போர்ட் பண்ணுங்க அவள் கியூர் ஆகிருவாள் என்ற பிருந்தா கொஞ்ச நாளைக்கு அவளை தனியா விடாதிங்க என்றாள். அப்பறம் வெரோனிகா அவளை தனியா விட வேண்டாம். அவள் இன்னும் எதையோ மறைக்கிறாள் அவள் கிட்ட நீ பேசிப்பாரு என்றவள் சில மாத்திரை , மருந்துகளை எழுதி கொடுத்தாள்.

 

அவள் நல்லா தூங்கனும், தூங்கி எழுந்தாளே எல்லாம் சரியாகிரும் என்ற பிருந்தா கூறிட ஊர்மிளாவை அழைத்துக் கொண்டு வீட்டிற்கு கிளம்பினர்.

 

என்னாச்சு ஊர்மி சஹானா எப்படி இறந்து போனாள் என்ற வெரோனிகாவிடம் அவள் தற்கொலை பண்ணிகிட்டாள் ரோனி. என் கண்ணு முன்னாடி தான் கத்தியை வச்சு கையை கட் பண்ணிட்டாள். ஆனால் ஹாஸ்டலில் சாகவில்லை. ஹாஸ்பிடல் கொண்டு போனாங்க. அங்கே என்ன நடந்துச்சுனு தெரியலை அவள் செத்துட்டதா சொன்னாங்க ஆனால் தினமும் என்னொட ரூம்ல அவளை நான் பார்த்தேன். அவள் என்னை பார்த்து நீயும் என் கூட வந்திரு ஊர்மினு டார்ச்சர் பண்ணுகிறாள் எனக்கு பயமா இருக்கு ரோனி. என்னை கொல்ல பார்க்கிறாள். நான் திரும்ப கான்பூர் போக மாட்டேன் என்று பயந்து நடுங்கினாள் ஊர்மிளா. அவளுக்கு தூக்க மாத்திரை கொடுத்து உறங்க வைத்த வெரோனிகா நிலாவை தட்டிக் கொடுத்தாள்.

 

பெயம்மா அம்மா என்ற குழந்தையிடம் அம்மா நாளைக்கு வந்துருவாங்க நிலாக் குட்டி என்று அவளுக்கு கதை சொல்லி உறங்க வைத்தாள் வெரோனிகா. என்ன ரோனி தூங்கிட்டாளா என்று வந்த இந்திரஜா உதயநிலாவை வாங்கிக் கொண்டாள்.

 

ஊர்மிளா ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கவும் பொழுது போகாமல் இருந்த வெரோனிகா எதையோ யோசித்துக் கொண்டிருக்க அவளது மொபைல் போன் ஒலித்தது. எடுத்துப் பார்த்தவள் முகத்தில் புன்னகை அரும்பிட சொல்லுங்க மாமா என்றாள்.

 

சாப்பிட்டியா ரோனி என்றவனிடம் இல்லை என் சந்துரு மாமா ஊட்டி விட்டால் தான் அவரோட ரோனி சாப்பிடுவாள் என்றாள். ஆமாம்டி நீ குட்டிப்பாப்பா பாரு உனக்கு நான் ஊட்டி விட என்றவனிடம் குட்டிப்பாப்பா இல்லை ரோனிப்பாப்பா சந்துரு மாமாவோட ரோனிப்பாப்பா என்றாள் வெரோனிகா. ஆமாம் , ஆமாம் என்னோட ரோனிப்பாப்பா தான் என்றவன் ஊர்மிளா என்ன பண்ணுகிறாள் என்றிட தூங்கிட்டு இருக்கிறாள் மாமா என்றாள்.

 

நீ தூங்கவில்லையா ரோனி என்றவனிடம் இல்லை மாமா ஒரு வாரம் காலேஜ் லீவு போட்டேனே அதான் ஷாலினி நோட்ஸ் வாட்ஸ் அப்ல அனுப்பி இருக்கிறாள். அதெல்லாம் எழுதனும் நாளைக்கு வந்துருவிங்க தானே என்றாள். நாளைக்கு வீட்டுக்கு தேவ், ஸ்ரீஜா இரண்டு பேரும் வந்துருவாங்க. நான் ஊருக்கு போயி உன் அண்ணன், அண்ணியை வீட்டில் பேசி விட்டுட்டு சமாதானம் பண்ணிட்டு தான் வர முடியும் என்றான் உதய்.

 

சரிங்க மாமா பத்திரமா வந்து சேருங்கள் என்றவள் போனை வைத்திட மீண்டும் அவளது போன் ஒலித்தது.  அர்ஜுனின் பெயர் திரையில் தெரிய புன்னகைத்த வெரோனிகா சொல்லுங்க சார் இப்போ தான் நாங்க கண்ணுக்கு தெரியுறோமா என்றாள்.

 

ஹே ரோனி ஸாரிப்பா கொஞ்சம் பிஸி என்றவனிடம் ஆமாம் ஸார் தான் படிப்பாளி ஆச்சே அப்போ பிஸிதான் போங்க என்றவள் ஆண்ட்டி கிட்ட கூட சரியா பேசுறதில்லை போல அவ்வளவு பிஸியா என்றாள். ஆமாம் ரோனி உனக்கு தெரியாதா ஊர்மிளா கூட ரொம்ப பிஸிதானே என்றான் அர்ஜுன். ஊர்மிளா போன் பண்ணுறாளா என்றவனிடம் அவள் நேரிலே வந்து விட்டாள் அர்ஜுன் என்றவள் ஊர்மிளா வந்த செய்தியை சொல்லிட என்ன சொல்லுற ரோனி ஏன் வந்தாள் என்றான் அர்ஜுன்.

 

அவளோட ரூம்மெட் சூசைட் பண்ணிகிட்டாளாம். அதில் இவள் பயங்கரமா பாதிக்கப் பட்டிருக்கிறாள். அவள் கூட கிட்டத்தட்ட இரண்டு மாதம் ஒரே அறையில் தங்கி இருந்திருக்கிறாள் . அதனால கொஞ்சம் சைக்கலாஜிக்கலா அபெக்ட் ஆகிட்டாள் என்ற வெரோனிகாவிடம் அச்சோ சரி அவளை பத்திரமா பார்த்துக் கொள் ரோனி என்றான் அர்ஜுன்.

 

என்ன சார் என் நாத்தனாரை எனக்கு பார்த்துக் கொள்ள தெரியாதா புதுசா நீங்க சொல்லுறிங்க என்றவளிடம் உன்னோட நாத்தனார் தான் ஆனால் என்னோட ப்ரண்ட் ஆச்சே என்றான் அர்ஜுன் . வெறும் ப்ரண்ட் தானா என்றவளிடம் கேர்ள் ப்ரண்ட் என்றவன் அவள் கிட்ட சொல்லிராதே ரோனி உனக்கு மட்டும் தான் சொல்லுறேன் எனக்கும் ஊர்மி மேல ஒரு பீலிங்க்ஸ் இருக்கு.

 

அவள் கூடவே இருந்தப்போ தெரியலை, புரியவும் இல்லை இப்போ பிடிச்சுருக்கு. நீ என்னோட பெஸ்ட் ப்ரண்ட் அதனால தான் இதை உன்கிட்ட முதலில் சொல்கிறேன் . என்னோட படிப்பு முடிஞ்சதும் தான் அவள் கிட்ட சொல்லுவேன் என்றவனிடம் ஊர்மி ரொம்ப லக்கி அர்ஜுன் என்றாள் வெரோனிகா.

 

ஏன் ரோனி அப்படி சொல்லுற என்ற அர்ஜுனிடம் பின்ன உன்னோட படிப்பு முடிஞ்ச பிறகு தான் அவள் கிட்ட காதலையே சொல்லுவேன் சொல்லுற பாரேன் நிச்சயமா இது பெரிய விசயம் தான் அர்ஜுன். அப்பறம் என்னோட பெஸ்ட் ப்ரண்ட் எவ்வளவு ஜெம் அவன் என் நாத்தனாருக்கு லைஃப் பார்ட்னரா வந்தால் அவள் ரொம்ப லக்கி தான் என்றவள் வேறு விசயங்களை பேசி விட்டு போனை வைத்தாள். 

 

அர்ஜுன் போனை வைத்ததும் மீண்டும் தன் கணவனுக்கு போன் செய்து அர்ஜுனிடம் பேசிய விசயங்களை கூறி விட்டு ஷாலினி அனுப்பிய நோட்ஸை எழுத ஆரம்பித்தாள்.

 

என்ன கனி யோசனை என்ற சரவணனிடம் நாம இப்போ வீட்டுக்கு போவது சரியா வருமா என்றாள் கனிமொழி. இப்போ போகாமல் வேற எப்போ போறது சொல்லு என்ற சரவணன் மச்சான் தான் சொல்கிறாரே போகலாம் பயப்படாதே என்று மனைவிக்கு ஆறுதல் கூறினான் சரவணன்.

 

என்ன ஸ்ரீஜா ரொம்ப டயர்டா இருக்கா என்றவனது தோளில் சாய்ந்து கொண்டவள் இல்லை தேவ் என்றாள். உன் கூட ரொம்ப நாள் வாழனும்னு ஆசையா இருக்குடா என்றவளிடம் நூறு வருசம் வாழலாம். உன்னோட ட்ரீட்மென்ட் எல்லாம் சரியா நடந்து உனக்கு க்யூர் ஆகட்டும் என்றவன் காரை இயக்கிட கணவனது தோளில் சாய்ந்தபடி பயணித்தாள் ஸ்ரீஜா.

 

எங்களால் இவங்களை ஏத்துக்க முடியாது மாப்பிள்ளை என்ற கணேசனிடம் மாமா அவரு பண்ணினது தப்பு தான் பெரியவங்க நீங்கள் மன்னிக்க கூடாதா என்று சமாதானம் பேசினான் உதயச்சந்திரன். மாப்பிள்ளை நீங்க என் மகளோட கணவர். அந்த மரியாதை எப்பவும் என் மனசுல இருக்கிறது. ஆனால் இவனை என்னால ஏத்துக்கவே முடியாது. ஏற்கனவே என் பொண்ணு என்னை அசிங்கப் படுத்தினாள். இப்போ இவன் இதற்கு மேல அசிங்கப் பட என் மனசுல தெம்பில்லை. எனக்கு இருக்கிறது ஒரே மகன் தான். இவனுக்கு பாத்தியப்பட்ட சொத்தை பிரிச்சு கொடுத்துடுறேன் இவனும், இவன் சம்சாரமும் நல்லா வாழ்ந்துட்டு போகட்டும் என்ற கணேசன் வீட்டில் ஒரு பகுதியில் அவர்கள் குடியிருக்க சம்மதம் தெரிவித்தார்.

 

சொக்கலிங்கமோ தன் மகள் செத்தே விட்டாள் என்று சொல்லி விட்டு சென்று விட்டார். உதய் எவ்வளவோ இரண்டு பக்கமும் பேசிப் பார்த்தான். யாரும் சமாதானம் அடைவது போல் தெரியவில்லை. வேறு வழி இன்றி சரவணன், கனிமொழியை அந்த வீட்டின் ஒரு பகுதியில் வாழ சொல்லி விட்டு கிளம்பினான்.

 

என்னடா இது ஒரு வாரமா இரண்டு பேரும் எங்கே போனிங்க கொஞ்சம் கூட நீங்க பெத்த பிள்ளை மேல அக்கறையே இல்லையா என்ற மலர்கொடியிடம் அத்தை ப்ளீஸ் அவங்களை திட்டாதிங்க. தனித்தனியா போனவங்க ஒன்றாக வந்திருக்காங்க அதனால சந்தோசம் தான் நீங்க படணும் என்ற வெரோனிகா இரண்டு பேரும் கொஞ்சம் வெளியே வாங்க என்று தேவ், ஸ்ரீஜா இருவரையும் அழைத்தாள்.

 

ஏன் அண்ணி என்றவனிடம் சொல்லுறதை செய்ங்க மாமா என்றவள் இந்திரஜாவிடம் இருந்த உதயநிலாவை வாங்கி ஸ்ரீஜாவின் கையில் கொடுத்தாள்.

 

மூவருக்கும் ஆரத்தி எடுத்து வீட்டிற்குள் அழைத்து வந்தாள் வெரோனிகா. ஏன் அண்ணி இதெல்லாம் என்ற தேவ்விடம் எல்லாம் அப்படித்தான் என்றவள் கடவுளே ஸ்ரீஜா அக்காவுக்கு சீக்கிரம் குணமாகி அவங்க தேவ் மாமா கூட சந்தோசமா வாழனும் என்று நினைத்தாள் வெரோனிகா.

 

குழந்தை நிலா தன் அம்மாவை கட்டிக் கொண்டு பிரியாமல் இருப்பதைக் கண்டு கண் கலங்கினாள் ஸ்ரீஜா. ஸாரி நிலாம்மா என்று தன் அன்பு மகளை கொஞ்சியவளது கண்கள் கண்ணீரை சிந்திட எதற்குடி அழுதுட்டு இருக்கிறாய். இப்போ தான் குழந்தை மேல ரொம்ப அக்கறை இருக்குனு காட்டிக்கிறியா 

ஒரு வாரமா உன் பிள்ளை எப்படி ஏங்கிப் போச்சு தெரியுமாடி என்ற வசுந்தரா மகளை வசை பாட ஆரம்பித்தார்.

 

        அத்தியாயம் 104

 

ரோனி உன் பிள்ளைகாக காலேஜ் கூட போகாமல் பொழுதுக்கும் பெத்த உன்னை விட பாசமா பார்த்துக்கிட்டாள் ஆனால் நீ அவளை படுத்தி எடுப்ப என்று வசை பாட ஆரம்பிக்க ஐயோ, பெரியம்மா ஏன் இப்படி வந்ததும் வராததுமா அவங்களை திட்டிட்டு இருக்கிங்க. நிலாக்குட்டி எனக்கும் பொண்ணு தானே என் பொண்ணை பார்த்துக்க காலேஜ் லீவு என்ன என் படிப்பையே கூட விடுவதற்கு நான் தயார் தான் என்றவள் சிரித்து விட்டு நிலாக்குட்டி நீங்க பெரியம்மாகிட்ட வாங்க உங்களுக்கு மம்மு ஊட்டி விடுகிறேன் என்று குழந்தையை வாங்கிக் கொண்டாள்.

 

நான் பார்த்துக்கிறேன் வெரோனிகா என்ற ஸ்ரீஜாவிடம் எனக்கு எந்த சிரமமும் இல்லை நீங்க இப்போ தான் வீட்டுக்கு வந்திங்க. டிராவல் பண்ணினது டயர்டா இருக்கும். உங்க கண்ணிலே தெரியுது அசதி அதனால முதலில் குளிச்சுட்டு சாப்பிட வாங்க என்றவள் குழந்தையை தூக்கிச் சென்றாள்.

 

என்ன ஸ்ரீஜா என்ற தேவ்விடம் நான் இவளை இதுவரை புரிஞ்சுக்கவே இல்லை. ஏன் புரிஞ்சுக்க முயற்சி கூட பண்ணினதில்லை. இப்படிப்பட்ட ஒருத்தியை நான் எவ்வளவு காயப் படுத்தி இருக்கேன் . சத்தியமா சொல்கிறேன் இவளை காயப் படுத்தின அளவுக்கு என் தங்கச்சி இந்துவை காயப் படுத்தி இருந்தேன்னு வை இப்போ நான் இருக்கிற நிலைமையை பார்த்து அவள் உனக்கான தண்டனைடி இதுன்னு சொல்லுவாள். ஆனால் இவளைப் பாரேன் எனக்கு உடம்பு சரியில்லைங்கிறதை புரிஞ்சுகிட்டு என் குழந்தையை அவளோட குழந்தை போல பார்த்துக்கிறாள். இவளோட காலில் விழுந்து மன்னிப்பு கேட்டாலும் நான் பண்ணி தப்புக்கு பிராயச்சத்தம் ஆகாது என்று கண் கலங்கினாள் ஸ்ரீஜா.

 

அண்ணி ரொம்ப வித்தியாசமான கேரக்டர் ஸ்ரீஜா. உறவுகளுக்கு ரொம்ப முக்கியத்துவம் கொடுக்கிற ஒரு கேரக்டர். அவங்களை பொறுத்த வரை எல்லோரும் எப்பவுமே நல்லா இருக்கனும் அது மட்டும் தான் அவங்க எண்ணம் என்றவன் உதய் அண்ணா நிஜமாவே கொடுத்து வச்சவன் தான் என்றான் தேவ்.

 

என்ன தேவ் அப்போ நீ கொடுத்து வைக்க வில்லையா என்ற ஸ்ரீஜாவிடம் அம்மா தாயே உன் கூட சண்டை போடுற நிலைமையில் நான் இல்லை பசிக்குது வா குளிச்சுட்டு போயி சாப்பிடலாம் என்றவன் குளியலறைக்குள் புகுந்து கொண்டான்.

 

என்ன ஊர்மி ஏதோ யோசனையா இருக்க என்ற வெரோனிகாவிடம் ஒன்றும் இல்லை ரோனி என்றவள் மீண்டும் சோகமாக அமர்ந்து கொண்டாள்.

 

என்னாச்சு ஊர்மி ஏன் இப்படி டல்லா இருக்க என்ற வெரோனிகாவிடம் ரோனி பேசாமல் நானும் உன் கூடவே காலேஜ் வரட்டுமா என்றாள் ஊர்மிளா.

 

ஏய் நீ ஐஐடி ஸ்டூடண்ட் டி மாமா உன்னோட காலேஜ்ல போயி பேசி உனக்கு வேற காலேஜ் டிரான்ஸ்பர் வாங்க ஏற்பாடு பண்ணிட்டு இருக்காங்க நீ என்னடான்னா என் கூட படிக்க வரேன்னு சொல்லுற. நீ டாப்பர் ஊர்மி என்றவளிடம் இல்லை ரோனி என்னால் திரும்ப அங்கே போக முடியாது என்றாள் உறுதியாக. அட பரவாயில்லை ஊர்மி அப்போ நீ இஞ்சினியரிங்கே ட்ரை பண்ணலாமே என்றவளிடம் எனக்கு இஞ்சினியரிங்கே வேண்டாம் ரோனி என்னால ப்ரசர் தாங்க முடியலை. 

 

போதும் போதும் சஹானா ஏன் தெரியுமா தற்கொலை பண்ணிட்டாள் அவளோட மாடல் டெஸ்ட் மார்க் ரொம்ப பூவரா இருந்துச்சுனு அவள் வீட்டில் சொன்னப்ப அவளோட பேரண்ட்ஸ் ரொம்ப திட்டிட்டாங்கனு தான் தற்கொலை பண்ணிகிட்டாள். என்னோட மார்க் கூட ரொம்ப பூவர் தான் ரோனி என்னால அங்கே சமாளிக்க முடியலை. என்னை விட்டுருங்க என்றதும் சரி ஊர்மி பெரிய மாமா இரண்டு பேரும் வீட்டுக்கு வரட்டும். சந்துரு மாமாவும் ஊரில் இருந்து வரட்டும் எல்லோர்கிட்டையும் பேசி ஒரு முடிவுக்கு வரலாம் என்றவள் நீயும் சாப்பிட வா என்று அவளை அழைத்துச் சென்றாள்.

 

என்ன சுசி ஏன் கவலையா இருக்க நம்ம ஊர்மிக்கு ஒன்றுமே இல்லை. அவள் நல்லா தான் இருக்கிறாள் என்ற மலர்கொடியிடம் அக்கா பொம்பளைப் பிள்ளைக்கா அதனால தான் பயப்பட வேண்டியதா இருக்கு. அவள் பேய் , பிசாசுன்னு சொல்லுறதை பார்க்கும் பொழுது மனசு கிடந்து அடிச்சுக்கிறது. நாம பேசாமல் ஒரு மாந்திரிகம் பண்ணுறவங்களை  போயி பார்க்கலாமா என்றார் சுசீலா.

 

சுசீ நீ என்ன பேசுற நம்ம பிள்ளைக்கு பேயோட்டனும்னு சொல்லுறியா உதய் கிட்ட சொன்னால் பயங்கரமா திட்டி விட்டிருவான் என்றார் மலர்கொடி. அத்தை சின்ன அத்தை ஒரு அம்மாவா ரொம்பவே ஊர்மி பற்றி கவலைப் படுறாங்க. மாமாவும் திட்டாமல், அத்தையோட மனத் திருப்திக்காக நான் ஒரு ஐடியா சொல்லட்டுமா என்றாள் வெரோனிகா.

 

என்ன ஐடியா ரோனி என்ற மலர்கொடியிடம் என்னை நீங்க அதிகப்பிரசங்கினு சொல்லமாட்டேன்னு சொல்லுங்க அப்பறம் சொல்கிறேன் என்றவளது காதை திருகிய மலர்கொடி ஏன்டி நீ அதை மறக்கவே மாட்டியா. நீ எப்பவுமே அதிகப்பிரசங்கி தான் இப்போ உன் ஐடியாவை சொல்லு என்றார்.

 

இல்லை அத்தை அடுத்த வாரம் எங்க ஊரில் கோவில் திருவிழான்னு அம்மா சொன்னாங்க. திருவிழாவில் அருள் வந்து சாமி ஆடுவாங்களே அவங்க கிட்ட திருநீறு பூச சொல்லி ஊர்மிளாவை அழைச்சுட்டு போவோம். அவங்க கிட்ட பயந்திருக்கிறாள்னு சொன்னால் முகத்தில் தண்ணீர் அடிச்சு மந்திரிச்சு விடுவாங்க அப்படி பண்ணினால் சின்ன அத்தைக்கு மனசு திருப்தி ஆகும். கோவிலில் பெரியவங்க கிட்ட தானே ஆசிர்வாதம் வாங்குகிறாள் அதனால சந்துரு மாமாவும் எதுவும் சொல்ல மாட்டாரு என்ன சொல்லுறிங்க என்றாள் வெரோனிகா.

 

என் மருமகள் கூட புத்திசாலி ஆகிட்டாளே என்ற மலர்கொடியிடம் அது நம்ம உதய் கூட சேர்ந்து சேர்ந்து இவளுக்கும் மூளை கொஞ்சம் வேலை செய்ய ஆரம்பிச்சுருச்சு அக்கா என்றார் சுசீலா. அத்தை என்று சிணுங்கியவளிடம் அப்பாடா எத்தனை நாளாச்சு நாம மூன்று பேரும் இப்படி பேசி முதலில் நமக்கு சுத்திப் போடனும் அக்கா என்றார் சுசீலா.

 

ஏன்டி ஊருக்கு போகலாம்னு சொல்லுறியே அங்கே ஏற்கனவே பிரச்சனையா இருக்கே என்ற சுசீலாவிடம் அதற்கு என்னத்தை பண்ண முடியும். எல்லாம் சீக்கிரமே சரியாகிரும் என்றவள் சரி எனக்கு நிறைய எழுத்து வேலை இருக்கு நான் போகிறேன். நிலாக் குட்டியை அவங்க அம்மாகிட்ட மட்டும் கொடுத்திருங்க என்ற வெரோனிகா தன்னறைக்கு சென்று விட்டாள்.

 

நிலா கொஞ்சம் வெயிட் போட்டுட்டாள் இல்ல தேவ் என்ற ஸ்ரீஜாவிடம் எல்லாம் அவங்க பெரியம்மா கவனிப்பு என்ற தேவ்விடம் அப்படி எல்லாம் ஒன்றும் இல்லை அக்கா இப்போ வீக்கா இருக்காங்க அதனால பாப்பா வெயிட் போட்டது போல அவங்களுக்கு தெரியுது என்ற வெரோனிகா உங்க இரண்டு பேரையும் சாப்பிட வரச் சொல்லி எத்தனை நேரம் ஆகுது இன்னும் வராமல் இருக்கிங்க என்றாள்.

 

அண்ணி பசி இல்லை என்ற தேவ்வை முறைத்தவள் நீங்கலாம் ஒரு டாக்டரா மாமா. வேளை வேளைக்கு சரியா சாப்பிடனும்னு நீங்க உங்க பேசன்ட்ஸ்க்கு சொன்னால் மட்டும் போதாது நீங்களும் அதை கடைபிடிக்கனும் என்றவள் அப்பறம் நீங்க மருந்து, மாத்திரை சாப்பிட வேண்டாமா என்றவள் திட்ட ஆரம்பிக்க அண்ணி போதும் நாங்க சாப்பிட வருகிறோம் என்ற தேவ் நிலாவை தூக்கிக் கொண்டு கிளம்ப ரோனி ஒரு நிமிசம் என்றாள் ஸ்ரீஜா.

 

என்ன என்றவளிடம் என்னை மன்னிச்சுரு ரோனி என்று அவளது காலில் விழுந்து விட்டாள் ஸ்ரீஜா. ஐயோ, அக்கா என்ன பண்ணுறிங்க என்று பதறியவள் ஸ்ரீஜாவைத் தூக்கி விட்டாள். தப்பில்லை ரோனி உனக்கு நான் பண்ணின பாவத்திற்கு உன் காலில் விழறதில் தப்பே இல்லை என்று அழுதவளிடம் அக்கா நீங்க பேசினதை நினைச்சு ஆரம்பத்தில் ரொம்ப வருந்தினேன் தான் நான் மறுக்கவில்லை. ஆனால் அது உங்க மனசுல இருந்த எண்ணமா கூட இருக்கலாமே தவிர என் மனசுலையும், பிரகாஷ் மாமா மனசுலையும் எந்த விகல்பமும் இல்லை. அது என் சந்துரு மாமாவுக்கும் தெரியும். என் சந்துரு மாமா என்னை சந்தேகப் பட்டால் மட்டும் தான் எனக்கு வலிக்கும். மற்ற யாரோட பேச்சும் என்னை காயப் படுத்தாது அதனால நீங்க அந்த விசயத்தை மறந்துருங்க. நானும் மறந்துட்டேன் என்றவள் சரி வாங்க சாப்பிட என்று அவளை அழைத்துச் சென்றாள்.

 

என்ன தேனு நீ இங்கே இருக்க என்ற சக்தியிடம் இல்லை உங்க அம்மா சாப்பிட வரவில்லை அதான் என்றாள் தேன்மொழி. அவங்களுக்கு பசித்தால் வந்து சாப்பிட போறாங்க அப்பா சாப்பிட்டாரா என்றான் சக்திவேல்.

 

மாமா இப்போ தான் சாப்பிட்டு போனாரு. என்னங்க உங்க தம்பியும், கனியும் கூட சாப்பிடவில்லை என்றாள் தேன்மொழி. நாம ஒன்றும் பண்ண முடியாது தேனு அப்பா அவங்களை தனியா இருக்க சொல்லிட்டாரு விடு அவங்க வாழ்க்கையை அவங்க பார்த்துப்பாங்க என்றான்.

 

சரிங்க மாமா நான் கிளம்புகிறேன் என்ற உதய்யிடம் என்ன மாப்பிள்ளை வந்தவுடனே கிளம்புகிறேன்னு சொன்னால் என்ன அர்த்தம் என்ற  கதிரேசனிடம் மாமா ரோனி கூட இரண்டு வாரம் கழிச்சு நடக்கப் போற திருவிழாவிற்கு கட்டாயம் வருகிறேன். எனக்கும் வேலை இருக்கு என்றவன் விடைபெற்று கிளம்பிட அவனிடம் மகளுக்கு பலகாரம்,  வீட்டில் விளைந்த காய்கறிகள் அது இதென்று பூங்கொடி ஒரு மூட்டையே கொடுத்து விட்டார்.

 

நல்லவேளை அவன் காரில் வந்திருப்பதால் அத்தனையையும் கார் சுமந்து கொண்டது.

 

வீட்டிற்கு இரவு தான் வந்து சேர்ந்தான் உதய். அவனறையில் மனைவி அவள் இல்லாது போய் விட சோகமாக படுத்து உறங்கி விட்டான்.

 

அதிகாலை கண் விழித்த வெரோனிகா உறங்கும் ஊர்மிளாவை பார்த்து விட்டு எழுந்து தன்னறைக்கு சென்றாள். அங்கே அவளது கணவன் இருப்பதைக் கண்டவள் மகிழ்ச்சியாக அவனருகில் சென்று அவனை அணைத்தபடி படுத்துக் கொள்ள உறக்கத்தில் அவளை இறுக்கமாக அணைத்துக் கொண்டான் உதய்.

 

தன் மீது அவளது பொன்னுடல் அழுத்த கண் விழித்தவன் ரோனி என்றிட எப்போ வந்திங்க மாமா என்றாள். நீ எங்கேடி போன என்றவனிடம் ஊர்மிளா கூட தூங்கினேன் என்றவள் ஐ மிஸ் யூ மாமா என்று அவனது மார்போடு ஒன்றிப் போனாள். ஐ மிஸ் யூ சோ மச் ரோனி என்றவன் அவளை இறுக்கமாக அணைத்தபடி அவளது நெற்றியில் முத்தமிட்டான்.

 

மாமா ப்ளீஸ் இனிமேல் என்னை விட்டு எங்கேயும் போகாதிங்க எனக்கு உங்க நெஞ்சில் தலை வைத்து படுத்தால் தான் தூக்கமே வருது என்றாள் வெரோனிகா. சரி பாப்பா கொஞ்ச நேரம் அப்படியே நிம்மதியா தூங்கு என்றவன் அவளது உச்சியில் முத்தமிட அவனை அணைத்தபடி அவளும் உறங்கினாள்.

 

              அத்தியாயம் 105

 

சரிடி ஒரு வாரம் மட்டம் போட்டுட்டியே இப்போ திரும்பவும் காலேஜ் போகனுமே என்றவனிடம் ஐயோ அது வேற இருக்கா சரி மாமா நீங்க ரெஸ்ட் எடுங்க நான் போயி குளிக்கிறேன். காலேஜ் போகனுமே என்றவள் எழ நினைக்க ஏன்டி என்னைப் பிரிஞ்சு மூன்று நாட்கள் இருந்திருக்க அந்த ஏக்கம் கொஞ்சமும் இல்லாமல் என்னை விட்டுட்டு காலேஜ் போக துடிக்கிற என்றான் உதய். ஐயோ மாமா என்ன இது எப்பவும் படிப்பு, படிப்புனு ஓடச் சொல்லிட்டே இருப்பிங்க இன்னைக்கு என்ன உங்களுக்குள்ள ஒரு லவ்வர் பாய் எட்டி பார்க்கிறான் என்றவளது கன்னத்தில் முத்தமிட்டான் உதய்.

 

மாமா என்றவள் சிணுங்கிட மீண்டும் மற்றொரு கன்னத்தில் முத்தமிட்டான். அச்சோ சந்துரு மாமா என்ன இது என்றவளிடம் என்ன என்றான் உதய். ரொம்ப , ரொம்ப ஓவரா தான் பண்ணுறிங்க என்றவளது உதட்டில் கை வைத்தவன் பேசாதே ரோனி உன்னை ரொம்ப மிஸ் பண்ணினேன்டி என்றான்.

 

நீங்க மட்டும் இல்லை நானும் தான் ரொம்ப, ரொம்ப மிஸ் பண்ணினேன் என்னோட சந்துரு மாமாவை என்றவள் அவனது கன்னத்தில் முத்தமிட்டு அவனை அணைத்துக் கொள்ள அப்போ இன்னைக்கும் காலேஜ்க்கு மட்டம் போடு என்றான்.

 

மாமா அது மட்டும் முடியாது ஆல்ரெடி ஒரு வாரம் லீவு போட்டு நிறைய போர்சன் முடிஞ்சுருச்சு எல்லாம் நீங்க தான் நைட் சொல்லி கொடுக்கனும் என்றாள் வெரோனிகா.

 

பாருடா என் பொண்டாட்டி படிப்பாளி ஆகிட்டாள் போல முன்னெல்லாம் காலேஜ் போக மூக்கால அழுதாள். இப்போ லீவு போடச் சொன்னதுக்கு மூக்கால் அழுகிறாள். நல்ல முன்னேற்றம் ரோனி கலக்குற என்றவன் சரி சரி நானே உன்னை காலேஜ்ல ட்ராப் பண்ணிடுறேன் என்றவன் ஒரு அரைமணி நேரம் என் கூட இப்படியே இரு என்றவன் அவளை அணைத்துக் கொண்டான்.

 

அவளும் கோழிக்குஞ்சாய் அவனது அணைப்பில் சிறைபட்டு அவனது மார்பில் முகம் புதைத்து கண் மூடி உறங்க ஆரம்பித்தாள்.

 

என்ன கனி ஏன் சோகமா இருக்க என்ற சரவணனிடம் என்ன மச்சான் நீ உனக்கு காரணம் தெரியாதா ஒரே வீட்டில் இரண்டு உலை இது சரியா வருமா. பேசாமல் நாம தனியா போயிரலாமா என்றாள்.

 

எதற்கு தனியா போகனும் சொல்லு சித்தப்பாவுக்கு கல்யாணம் ஆன புதுசுல என் அம்மாவுக்கும், சித்திக்கும் அடிக்கடி சண்டை வருதுன்னு அப்பத்தா இரண்டு பேரையும் தனித் தனி சமையல் செய்யச் சொல்லி தான் வச்சாங்க. ரோனிக்குட்டி பிறந்த பிறகு தான் திரும்ப ஒரே சமையல். அது போல நமக்கும் ஒரு குட்டி கனியோ, குட்டி சரவணனோ பிறந்தால் எல்லாம் சரியாகிரும் கவலையை விடு கனி என்றவன் மனைவி அவளின் நெற்றியில் முத்தமிட்டான்.

 

போ மச்சான் என்று வெட்கம் கொண்டவளிடம் அடியே நாம இப்படி தனியா இருக்கிறதனால தான் நினைச்ச நேரம் என் பொண்டாட்டியை கொஞ்ச முடியுது. அங்கே என் அண்ணிலாம் பாவம் என்றிட ஆமாம் ஆமாம் அண்ணி பாவமாம்ல போங்க நீங்களே இப்படினா உங்க அண்ணன் எப்படி இருப்பாரோ அதெல்லாம் அண்ணன், தம்பி எல்லோரும் கழுவுற மீனுல நழுவுற மீனாத் தான் இருப்பிங்க என்று சிரித்தாள் கனிமொழி.

 

சரி கனி என்ன சமையல் என்றான் சரவணன். தோட்டத்தில் போயி காய் பறிச்சுட்டு வந்துடுறேன். வீட்டில் அரிசி, பருப்பு, மிளகாய், மல்லி எல்லாமே இருக்கு இன்னைக்கு சோறு தான். நாளைக்கு வேணும்னா இட்லி, தோசைக்கு ஆட்டுக்கல்லில் மாவு அரைச்சுக்கிறேன் என்றவளிடம் ஏன்டி கஷ்டமா இருக்கா மிக்சி, கிரைண்டர் எல்லாம் வாங்கிட்டு வரேனடி என்றிட அட போ மச்சான் அதெல்லாம் ஆரோக்கியமே கிடையாது. 

 

எங்க வீட்டில் உன் மாமனாரு எல்லாம் தான் வாங்கி போட்டிருக்காரு ஆனாலும் நான் என் அம்மாவை அதெல்லாம் யூஸ் பண்ணவே விட மாட்டேன். எல்லாம் கனிமொழியோட கையால அரைச்சு தான் என்றவள் சரி , சரி நீ போயி வெரசா குளிச்சிட்டு வா நான் உனக்கு காபி போட்டுத் தரேன் என்றவள் பாத்திரத்தை எடுத்துக் கொண்டு கிளம்பினாள் பசு மாட்டில் பால் கறப்பதற்கு.

 

வசந்தி அங்கு ஒரு பசுமாட்டின் மடுவில் பால் கறந்து கொண்டிருக்க கனிமொழி மற்றொரு பசுமாட்டின் மடுவில் பால் கறந்தாள். குடி கெடுத்தவள், என் குடும்பத்தை சின்னா பின்னமாக்கிட்டு நடுமனைக்கு வந்துட்டாள். இவள் கறந்தால் அந்த பாலும் விசமா மாறிடும் என்று மருமகளை ஜாடை பேசிக் கொண்டே பால் கறக்க பாரு செண்பகம் யாரெல்லாம் குடும்பத்தை சின்னா பின்னம்மா நான் ஆக்கிட்டேன்னு பேசுறதா.

 

மனுசனா பிறந்தால் ஒரு நியாயம் , தர்மம் வேண்டாமா என்று பதிலுக்கு பசுவிடம் பேசுவது போல் பேசி விட்டு மாட்டின் மடுவில் தனக்கும், தன் கணவனுக்கும் தேவையான அளவு பாலை கறந்த கனிமொழி கன்றுக் குட்டியை அவிழ்த்து விட அது தன் தாயின் மடுவில் ஆசை தீ்ர போதுமான அளவு பாலைக் குடித்தது.

 

எல்லாம் கொழுப்பு கொழுப்பெடுத்த சிறுக்கி என் மகனை வளைச்சுப் போட்ட திமிரும், திண்ணக்கமும் அவளை பேச வைக்கிறது என்று திட்டிக் கொண்டே வீட்டிற்குள் வந்த வசந்தி அடுப்பங்கறையில் இருந்த தேன்மொழியிடம் பாலைக் கொடுத்தார்.

 

இந்த கனிமொழி காலையிலே அவளோட வேலையை காட்டிட்டால் போல என்று நினைத்த தேன்மொழி தன் மாமியாரின் புலம்பலைக் கேட்டு் சிரித்து விட்டு பாலை காய்ச்ச ஆரம்பித்தாள்.

 

இந்தா மச்சான் டீ என்றவளிடம் டீயை வாங்கிக் கொண்டவன் சரி கனி நான் தோட்டத்திற்கு போகிறேன் என்ற சரவனன் தோட்டத்திற்கு சென்று வயலை உழுவதற்கான வேலையை கவனிக்க ஆரம்பித்தான்.

 

என்னங்க என்ற தேன்மொழியிடம் என்ன தேனு என்றான் சக்திவேல். இல்லை நீங்களாவது சின்னவர் கிட்ட பேசலாம்ல என்றிட அப்பா பேசாத பொழுது நான் பேசலாமா அது தப்பு தேனு விடு அவனும், கனியும் நல்லா தான் இருப்பாங்க. 

 

நீ வேண்டும் என்றால் கனி கிட்ட பேசு என்றான். ஆத்தாடி வேற வினையே வேண்டாம். காலையில் பால் கறக்க போன அத்தை அவளை எதுவும் சொல்லிருப்பாங்க போல. பதிலுக்கு அவளும் என்னம்மோ சொல்லிருப்பாள்னு நினைகிறேன் . அத்தை அவளை வசை பாடிகிட்டே இருந்தாங்க என்றாள் தேன்மொழி.

 

என் அம்மாவுக்கு சரியான மருமகள் கனிமொழி தான் போல என்று சிரித்தவனிடம் ஏங்க சத்தமா சிரிக்காதிங்க உங்க அம்மா ஒட்டுக் கேட்டுட்டு இருக்கும் என்றவளிடம் ஏன்டி எங்க அம்மா என்ன கழுதையா ஒட்டு கேட்டுட்டு இருக்க என்று சிரித்தான் சக்திவேல். நான் எதுவும் சொல்லவில்லைப்பா நீங்களா அப்படி நினைத்தால் அதற்கு நான் எப்படி பொறுப்பாக முடியும் என்ற தேன்மொழி சிரித்து விட்டாள்.

 

அப்பத்தா என்ற உதயச்சந்திரனிடம் என்னப்பா உதய் என்றார் கல்யாணிதேவி. அப்பா , சித்தப்பா, அத்தை , மாமா எல்லோரையும் வரச் சொல்லுங்க என்றான் உதய். ஏன் உதய் என்ன விசயம் என்ற கல்யாணிதேவியிடம் சொல்கிறேன் என்றவன் எல்லோரும் வரவும் ஸ்ரீஜாவின் ப்ரஸ்ட்கேன்சர் பற்றி அனைவரிடமும் சொல்லி விட்டான்.

 

வசுந்தரா மகளின் நிலைமையை நினைத்து கண்ணீர் வடிக்க அவருக்கு ஆறுதலாக மலர்கொடி, சுசீலா இருவரும் ஸ்ரீஜாவிற்கு ஒன்றும் ஆகாது என்று தைரியம் சொல்ல ஆரம்பித்தனர். ஸ்ரீஜாவோட ட்ரீட்மென்ட் இனி இங்கேயே தொடரணும்னு தான் நான் இந்த விசயத்தை வீட்டில் சொன்னேன்.

 

அத்தை தயவு செய்து அழாதிங்க அவளுக்கு ஒன்றும் இல்லை. ஸ்ரீஜாவுக்கு இப்போ தேவை நல்ல மருத்துவம் மட்டும் இல்லை நாம எல்லாரும் அவள் கூடவே இருக்கிறோம்ங்கிற தெம்பும், நாம அவள் மேல காட்டுற அன்பும் தான். அது தான் அவளை பிழைக்க வைக்கும் என்றான் உதய்.

 

என்னக்கா இது ஒன்று மாற்றி ஒன்றா நம்ம குடும்பத்திற்கு ஒரே சோதனையா இருக்கே என்ற சுசீலாவிடம் எல்லாம் சரியாகிரும் சுசி என்ன பண்ணுறது எல்லாம் நாம வாங்கி வந்த வரம் என்றார் மலர்கொடி.

 

எல்லாம் சரியாகிரும் மலரு நம்ம குடும்பத்தோட குலதெய்வம் கோவிலுக்கு ஒரு முறை போயிட்டு வந்தால் எல்லாம் சரியாகிரும் என்றார் கல்யாணிதேவி. சரிங்க அத்தை உங்க மகன் கிட்ட சொல்லி அதற்கான ஏற்பாட்டை செய்ய சொல்லுங்க என்றார் மலர்கொடி.

 

என்ன ஷாலி ஏன் டல்லா இருக்க என்ற வெரோனிகாவிடம் இவங்க யாரு என்றாள் ஷாலினி. இவள் என்னோட நாத்தனார் ஊர்மிளா என்ற வெரோனிகா இனி இவளும் நம்ம காலேஜ் தான் என்றாள். என்ன கோர்ஸ் என்ற ஷாலினியிடம் பி.எஸ்.சி மேத்ஸ் என்றாள் வெரோனிகா. ஏய் இவங்க ஐஐடியில் படிச்சாங்கனு சொன்னியே என்ற ஷாலினியிடம் சில பர்சனல் ரீசன் ஷாலி அவளால அங்கே கன்டினியூவ் பண்ண முடியலை அதை விடு நீ  ஏன் இத்தனை டல்லா இருக்க என்றாள் வெரோனிகா.

 

நமக்கு புதுசா ஒரு இங்கிலிஷ் லெக்சரர் வந்திருக்காரு சரியான முசுடு ரோனி நேற்று ஏதோ நான் திவ்யாகிட்ட அவர் கிளாஸ் எடுக்கும் பொழுது பேசிட்டேன்னு என்னை கிளாஸ் ரூம் விட்டு வெளியே விரட்டிட்டாரு என்றாள் ஷாலினி முகத்தை சோகமாக வைத்துக் கொண்டு.

 

அச்சச்சோ அப்பறம் என்ற வெரோனிகாவிடம் ஏன்டி நான் என்ன கதையா சொல்லிட்டு இருக்கேன் உனக்கென்னம்மா நல்லா அடிக்கடி லீவைப் போட்டுட்டு உன் சந்துரு மாமா கூட ஊரைச் சுத்த ஆரம்பிச்சுருவ நான் அப்படியா எனக்கொரு பாய் ப்ரண்ட் கிட்டவில்லையே என்று புலம்பினாள் ஷாலினி.

 

சீனியர் சந்தோஷ் ஓகேவா ஷாலி என்ற வெரோனிகாவிடம் என் மனசில் உன்னோட சந்துரு மாமா தான் ஓகேன்னு தோன்றுகிறது என்றாள் ஷாலினி. அடிக் கழுதை உனக்கு என் சந்துரு மாமா வேண்டுமா கொன்னுபுடுவேன் கொன்னு என்றாள் வெரோனிகா.

 

பாரு ஊர்மிளா உன் அண்ணியை அந்த முருகனுக்கு இரண்டு தாரம் வள்ளி, தெய்வானைன்னு இருக்கும் பொழுது உங்க அண்ணா சந்துருக்கு ரோனி, ஷாலினின்னு இரண்டு இருக்க கூடாதா என்னோட பீலிங்ஸை புரிஞ்சுக்க மாட்டேங்கிறிங்களே ரோனி அக்கா என்றாள் ஷாலினி. உன்னை என்று அவளது தலையில் கொட்டு வைத்த வெரோனிகா இரு, இரு உன்னை என் சந்துரு மாமாகிட்ட சொல்லித் தரேன் என்று சொல்லி விட்டு ஊர்மிளாவை அவளது வகுப்பறைக்கு அனுப்பி விட்டு ஷாலினியுடன் தனது வகுப்பறைக்கு சென்றாள்.

 

ஆமாம் அந்த புது ப்ரபஷர் ஆளு எப்படி நல்லா இருந்தால் நீ ட்ரை பண்ணு ஷாலி என்ற வெரோனிகாவிடம் பார்க்க ஆளு நல்லா இருந்தால் போதுமா சரியான முசுடு என்றவள் அதோ வந்துருச்சு பாரு என்றதும் அந்த புது ப்ரபசர் வகுப்பறைக்குள் நுழைந்தான்.

 

அவனைக் கண்ட வெரோனிகா அதிர்ந்து எழுந்து விட்டாள்.

 

அதிர்ச்சியாகும் அளவுக்கு யாரா இருக்கும்

 

       அத்தியாயம் 106

 

என்ன ரோனி ஏன் டல்லா இருக்க என்ற ஊர்மிளாவிடம் ஒன்றும் இல்லை ஊர்மி என்றவள் உனக்கு காலேஜ் பிடிச்சுருக்கா என்றிட பிடிச்சுருக்கு நம்ம க்ளாஸ்மெட் கார்த்திகா கூட இங்கே தான் படிக்கிறாள் போல என்றிட நானும் இங்கே தான் மச்சி படிக்கிறேன் என்று வந்தாள் நிகிலா. ஏய் நிகி என்ற ஊர்மியிடம் ஆமாம் நிகி தான். ஏன்டி நீ ஐஐடியில் ஜாயின்ட் பண்ணினதில் நாங்க எவ்வளவு சந்தோசம் பட்டோம் இப்படி பாதியிலே படிப்புக்கு முழுக்கு போட்டுட்டு வந்துட்டியே என்ற நிகிலாவிடம் நிகி அதை பற்றி பேச வேண்டாம்னு சொன்னேன்ல என்றாள் வெரோனிகா.

 

சரி, சரி என்ற நிகிலா ஆமாம் நீ ஏன் டல்லா இருக்க என்றிட ஒன்றும் இல்லை நிகி என்றவள் ஊர்மி தேவ் மாமா வந்துட்டாங்க வா என்றவள் தோழிகள் ஷாலினி, நிகிலா இருவருக்கும் பாய் சொல்லி விட்டு சென்றாள் வெரோனிகா.

 

அண்ணி என்னாச்சு உங்க முகம் ஏதோ டல்லடிக்குது என்ற தேவ்விடம் நானும் அதைத் தான் அண்ணா கேட்கிறேன் அண்ணி தான் சொல்ல மாட்டேங்கிறாங்க என்றாள் ஊர்மிளா.

 

என்னது அண்ணியா என்ற வெரோனிகாவிடம் அண்ணி இல்லை பன்னி என்றாள் ஊர்மிளா. அவளது தலையில் கொட்டினாள் வெரோனிகா. அவர்கள் சண்டை போட்டு விளையாடுவதைக் கண்ட தேவ் சிரித்தபடி வண்டியை ஓட்டினான்.

 

என்னப்பா சொல்லுறிங்க என்ற உதய்யிடம் ஆமாம் அண்ணா அந்த காலேஜ்ஜோட ஷேர்ஸ் சேல்ஸ்க்கு வருது ஐம்பது பர்சன்டேஜ் ஷேர் நாம வாங்கிட்டோம் அப்படினா நமக்கு இன்னும் ஒரு இன்கம் தானே என்றான் பிரகாஷ். சித்தப்பா நீங்க என்ன சொல்லுறிங்க என்ற உதய்யிடம் அந்த ஓனர் பர்சனலா ஏதோ பைனான்சியல் ப்ராப்லம்ல இருக்காரு அதனால தான் ஷேர்ஸ் விக்கிற முடிவுல இருக்காரு. காலேஜ் நல்ல ப்ராபிட் வரும் பிசினஸ்தான் ஆனால் அவருக்கு இன்னும் நிறைய பிசினஸ் இருக்கு. பொண்ணு இப்போ பாரின்ல படிச்சுட்டு இருக்கா அதனால அவளுக்கு காலேஜ் மேனேஜ்மென்ட்ல இன்ட்ரஸ்ட் இல்லை போல அதனால தான் இந்த ஷேர் சேல்ஸ். ஆனால் ஒரே ஆளுக்கு அவரோட ஷேர்ஸ் விக்கிற ஐடியா இல்லை.  எப்பவுமே அவரோட கை தான் ஓங்கி இருக்கனும்னு நினைக்கிறார் என்று சிரித்தார் இளமாறன். அது பரவாயில்லை இளமாறா நமக்கு நம்ம ஸ்கூல் ஒன்றே போதும். ஆனாலும் இதில் பிரகாஷ் ஆசை இருக்கு அதனால அந்த காலேஜ் ஷேர்ஸ் நாம வாங்கலாம் என்ன சொல்லுற உதய் என்றார் நெடுமாறன். எனக்கு ஓகே தான் அப்பா. பிரகாஷ் பெயரிர் ஷேர்ஸ் வாங்கிருங்க என்றான் உதய். இல்லை உதய் பிரகாஷ் பெயரில் இருபத்தைந்து பர்சன்டேஜ், அப்பறம் உன்னோட பெயரில் இருபத்திஐந்து பர்சன்ட்டேஜ் அப்போ தான் சரியா வரும் என்ன அண்ணா என்றார் இளமாறன். எனக்கு ஓகேப்பா என்றான் பிரகாஷ். உதய் ஏதோ சொல்ல வர அண்ணா அப்பா சொல்லுறது தான் கரைக்ட் என்றவன் அதற்கான ஏற்பாட்டை கவனிக்க ஆரம்பித்தான்.

 

என்ன ரோனி ஏன் டல்லா இருக்க என்ற உதயச்சந்திரனிடம் டல்லாவா நானா நான் ஏன் மாமா டல்லா இருக்கப் போறேன். மேக்கப் போடவில்லை அதனால முகம் கொஞ்சம் டல்லடிக்குது என்றவளை முறைத்தவன் உன்னால என் கிட்ட பொய் சொல்ல முடியாது அதனால உண்மையை சொல்லுடி என்றான் உதய்.

 

மாமா அந்த  என்று அவள் சொல்ல வரும் முன் அவனது மொபைல் போன் ஒலித்திட அதை அட்டன் செய்து விட்டு அவன் சென்று விட்டான். அவளும் சுசீலா அழைக்கவும. சென்று விட்டாள்.

 

என்ன ஸ்ரீஜா ஏன் டல்லா இருக்க என்ற தேவ்விடம் தனது கையில் இருந்த முடியை காட்டினாள் ஸ்ரீஜா. பாரு தேவ் எவ்வளவு முடி கத்தை கத்தையா கொட்டுது என்றவளிடம் உனக்கு இது தெரியாதா உன்னோட ட்ரீட்மென்ட்டோட எபக்ட் என்றவன் இரண்டு வாரம் போகட்டும் அர்ச்சனா கல்யாணம் முடிஞ்சதும் நாம இரண்டு பேருமே மொட்டை போட்டுக்கலாம் என்றான்.

 

நான் மொட்டை போடுறது சரி நீ ஏன்டா என்றவளிடம் என்  பொண்டாட்டிக்காக உயிரையே கொடுப்பேன்டி இப்போ தலை முடி தானே கொடுத்தால் என்ன என்றவன் அவளை அணைத்துக் கொள்ள ஐ லவ் யூ தேவ் என்றாள் ஸ்ரீஜா.

 

ஐ லவ் யூ சோ மச் ஸ்ரீஜா என்றவன் முடி கொட்டினால் என்ன திரும்ப வளர்ந்துரும் அதனால கவலைப் படாதே என்றான். சரிடா அப்போ இப்பவே ஹேர் ரிமூவ் பண்ணிடுறேன் என்றவளிடம் இரண்டு வாரம் தானே ஸ்ரீஜா இப்படிங்கிறதுக்குள்ள ஓடிரும் என்றவன் அவளது நெற்றியில் முத்தமிட்டான்.

 

என்ன ரோனி இப்போ எல்லாம் ரொம்ப டல்லாவே இருக்க உனக்கு என்ன பிரச்சனை என்ற ஊர்மிளாவிடம் ஏதோ சொல்ல வாயெடுத்த ஷாலினியை கண்களால் அமைதி படுத்திய வெரோனிகா எனக்கு என்ன ஊர்மி நான் ரொம்ப நல்லா இருக்கேன் என்றவள் வகுப்பறைக்கு ஷாலினியுடன் கிளம்பினாள்.

 

நீ ஏன் ரோனி இப்படி இருக்க ஏன் அவள் கிட்ட சொல்ல வேண்டாம்னு சொன்ன கிட்டத்தட்ட இரண்டு வாரமா இந்தப் பிரச்சனையை யார்கிட்டேயும் சொல்லாமல் என்றவள் ஆமாம் உன் சந்துரு மாமாகிட்ட சொன்னியா என்றாள் ஷாலினி. இல்லை ஷாலி அவரு இரண்டு வாரமா ரொம்ப பிஸி நான் தூங்கின பிறகு தான் வீட்டுக்கே வராரு என்ற வெரோனிகா இன்னும் நான்கு நாட்களில் அர்ச்சனா அண்ணி கல்யாணம். அது முடிஞ்ச பிறகு இந்த பிரச்சனையை பற்றி வீட்டில் சொல்லிக்கிறேன் என்றாள் வெரோனிகா.

 

எதையுமே ஆரம்பத்திலே வெட்டி வீசுறது தான் எல்லாத்துக்குமே நல்லது ரோனி என்ற ஷாலினி சரி வா கிளாஸ்க்கு போகலாம் என்று அவளை அழைத்துக் கொண்டு சென்றாள். ஓய் என்ற சந்தோஷின் அருகில் வந்தவள் குட்மோர்னிங் சீனியர் என்றாள். அவன் உன் கிட்ட ரொம்ப ரூடா பிகேவ் பண்ணுறானாமே என்றிட அவள் ஷாலினியை பார்க்க நான் சொல்லவில்லை ரோனி என்றாள் ஷாலினி.

 

இந்தப் பொண்ணு சொல்லவில்லை இந்த காலேஜ்ல என்ன நடந்தாலும் எனக்கு தெரிஞ்சுரும்  நான் காலேஜ் ஸ்டூண்டன்டஸ் யூனியன் சேர்மன் அதுவும் குறிப்பா உனக்கு என்ன நடந்தாலும் தெரிஞ்சுரும் என்றவன் அவனை உனக்கு  முன்னமே தெரியுமா என்றான் சந்தோஷ். இல்லை தெரியாது என்றவளிடம் சரி நீ கிளம்பு ரொம்ப டார்ச்சர் பண்ணினால் பிரின்சிபல் கிட்ட கம்ப்ளையண்ட் பண்ணலாம் என்றிட அதெல்லாம் வேண்டாம் சீனியர் தேவை இல்லாத பிரச்சனை என்றாள் வெரோனிகா.

 

எது தேவை இல்லாத பிரச்சனை என்றவன் பற்களைக் கடித்துக் கொண்டான். சரி நீ கிளம்பு என்றவன் அவளை அனுப்பி விட்டு நண்பன் துவேஷிடம் அந்த பிரச்சனையை பற்றி பேசிக் கொண்டிருந்தான்.

 

ஊர்மிளா மிகவும் சந்தோசமாக இருந்தாள். அவள் மனதில் இருந்த குழப்பங்கள் பிருந்தாவின் கவுன்சிலிங் மூலம் குணமாகி விட்டது. ஆனால் அவளது சந்தோசத்திற்கான காரணம் வேறு அதை வெரோனிகா அறிந்தால் என்ன நடக்குமோ தெரியவில்லை.

 

என்ன ரோனி இப்போ எல்லாம் உன் முகமே சரியில்லை என்றவனிடம் ஒன்றும் இல்லை மாமா என்றாள் வெரோனிகா. எனக்கு தெரியும் ரோனி இப்போ எல்லாம் நான் உன் கூட அதிகம் டைம் ஸ்பென்ட் பண்ணுறதே இல்லை அதனால தானே என்றவனைப் பார்த்து சிரித்தாள்.

 

அர்ச்சனா கல்யாணம் முடிஞ்சதும் ஒரு வாரம் முழுக்க , முழுக்க என் ரோனிப் பாப்பா கூட தான் இருப்பேன் என்றான் உதய்.

 

உனக்கு புடவை எல்லாம் பிடிச்சுருக்கு தானே என்றவனிடம் என் சந்துரு மாமா செலக்சன் எனக்கு பிடிக்காமல் போகுமா என்ன என்றாள் வெரோனிகா. 

 

சரி ரோனி கிளம்பு இன்னைக்கு ரிசப்சன் இருக்கு அதற்கான டிரஸ் எல்லாம் எடுத்து வச்சுட்ட தானே என்றிட எல்லாமே எடுத்து வைத்து விட்டேன் மாமா என்றாள் வெரோனிகா.

 

என்ன கௌதம் இன்னுமா ரெடி ஆகிட்டு இருக்கிங்க என்ற லாவண்யாவிடம் லாவண்யா விக்கி என்றான் கௌதம். அவன் வராமல் இருக்கிறது தான் நல்லது என்றாள் லாவண்யா. என் மகன் வராமல் நான் எங்கேயும் வர மாட்டேன் என்ற சகுந்தலாவை முறைத்த லாவண்யா கல்யாணம் என் அண்ணனுக்கு மட்டும் இல்லை உங்களை வளர்த்து நீங்க ஆசைப் பட்ட மாப்பிள்ளைக்கு கல்யாணம் பண்ணி வச்சு இன்னைக்கு வரை உங்க நல்லதுக்காக பாடு படுற உங்க அண்ணன் மகன் கல்யாணம்.  மனிதனா பிறந்தால் நன்றினு ஒன்று இருக்கனும் அதெல்லாம் உங்க கிட்ட எதிர்பார்க்கிறது என்னோட தப்பு தான் என்ற லாவண்யா தன் குழந்தை ரோஷினியை கிளப்பிக் கொண்டிருந்தாள்.

 

லாவண்யா என்ன பேசுற அவங்க உன்னோட மாமியார் கொஞ்சமாவது மரியாதையா பேசு என்ற கௌதமிடம் மரியாதை கொடுக்கிற மாதிரி அவங்களை நடந்துக்க சொல்லுங்க என்றவளிடம் என்னடி நான் தப்பா நடந்துகிட்டேன் என்றார் சகுந்தலா.

 

அவங்க அவங்க மனசாட்சியை கேட்டுப் பாருங்க என்ற லாவண்யா மாமா நீங்கள் வருவீங்க தானே என்று கேட்டிட நான் நிச்சயம் வருவேன் லாவண்யா என்ற சந்திரமோகனை முறைத்தார் சகுந்தலா.

 

அண்ணி நானும் கட்டாயம் வருவேன் என்ற சௌமியா லக்கேஜுடன் வர அப்போ வாங்க கிளம்பலாம் என்ற லாவண்யா கணவனை பார்த்திட அவன் காரில் சென்று அமர்ந்தான்.

 

அம்மா நீங்க ஏன் போகாமல் இருக்கிங்க என்ற விக்னேஷிடம் நான் எப்படி விக்கி போவேன். நீ இல்லாமல் என்றார் சகுந்தலா.

 

நான் வரமாட்டேன்னு உங்களுக்கு யாரு சொன்னது நிச்சயம் நான் வருவேன் கிளம்புங்க என்றான் விக்னேஷ். இல்லைடா மாமா உன்னை வரச் சொல்லி கூப்பிடவில்லையே, உன் அண்ணிகாரியும் நீ வர வேண்டாம்னு தானே நினைக்கிறாள் என்றார் சகுந்தலா.

 

அம்மா மாமா என்னை தனியா வெற்றிலை,பாக்கு வச்சு அழைக்கனுமா என்னம்மா பேசுறிங்க நீங்க கிளம்புங்க என்ற விக்னேஷ் தன் அன்னையுடன் கிளம்பினான்.

 

என்னப்பா இன்னும் கிளம்பவில்லையா என்ற தனலட்சுமியிடம் கிளம்பிட்டேன்மா என்றான் விவேக். சரி சரி சீக்கிரம் என்றவர் பரபரப்புடன் சொந்ந பந்தங்களை வரவேற்றபடி இருக்க அத்தை கொஞ்சம் பொறுமையா எல்லோரையும் கவனிங்க என்றவளை வாஞ்சையுடன் பார்த்த தனலட்சுமி உன் அத்தானுக்கு கல்யாணம்டி செல்லம் அத்தைக்கு இரண்டு காலும், இரண்டு கையும் போதவில்லை என்ற தனலட்சுமி பரபரப்பாக சுற்றிட அவரை புன்னகையுடன் பார்த்தவள் விவேக்கின் அறைக்குள் நுழைந்தாள்.

 

ஹாய் அத்தான் என்றவளை புன்னகையுடன் பார்த்தவன் எப்போ வந்த என்றிட இப்போ தான் வந்தேன் என்றாள். சரி சரி நேரம் ஆச்சு என்றவனிடம் என்ன அத்தான் பறக்கிறிங்க நாளைக்கு தானே கல்யாணம் என் கழுத்தில் தாலி கட்ட அத்தனை அவசரமா என்றவளை பார்த்து அதிர்ந்தவன் லூசா நீ நான் அர்ச்சனாவை கல்யாணம் பண்ணிக்கப் போகிறேன் என்றான்.

 

அப்படினு யார் சொன்னது நாளைக்கு நீங்க என்னை தான் கல்யாணம் பண்ணிப்பிங்க பார்க்கலாமா என்ன சவாலா என்றாள்.

 

         அத்தியாயம் 107

 

இலக்கியா விளையாடாதே என்ற விவேக்கை பார்த்து சிரித்தவள் என்ன அத்தான் ஒரு நிமிசத்தில் பதறிட்டிங்க போல சத்தியமா விளையாடத் தான் செய்தேன். ஏன் அத்தான் நான் உங்க கூட விளையாட கூடாதா என்ன என்றாள் இலக்கியா. நீ எந்த விசயத்தில் வேண்டுமானாலும் விளையாடு இலக்கியா ஆனால் அர்ச்சனா விசயத்தில் தயவு செய்து விளையாடாதே.  இந்ந கல்யாணம் நடக்காதுன்னு தெரிஞ்சப்போ தன்னோட உயிரையே விடத் துணிஞ்சவ என்னோட அர்ச்சனா அவள் மட்டும் இல்லை அவள் இல்லைன்னா சத்தியமா என்னாலையும் வாழ முடியாது என்றான் விவேக்.

 

ஸாரி அத்தான் என்று கன்னக்குழி தெரிய சிரித்தவள் தன் அத்தையுடன் வாயடிக்க சென்று விட்டாள்.

 

என்ன லாவண்யா எப்படி இருக்க என்றவளிடம் நல்லா இருக்கேன் இலா என்றவள் அவளுடன் சந்தோசமாக பேசிக் கொண்டே மண்டபத்திற்கு கிளம்ப ஆரம்பித்தாள்.

 

மண்டபத்தில் சொந்த பந்தங்கள் நிறைந்திருந்தனர். என்ன ரோனி என்னை எல்லாம் கண்டுக்கவே மாட்டேங்கிற என்ற கனிமொழியிடம் உன்னைத் தானே உன்னை எல்லாம் கண்டுக்க கூடாது கல்லை விட்டு அடிக்கனும். எனக்கு கூட சொல்லாமல் என் அண்ணனை கட்டிக்கிட்டவள் தானே நீ என்றாள் வெரோனிகா.

 

மன்னிச்சுருங்க நாத்தனாரே என்ற கனிமொழியிடம் நல்லா நடிக்கிற கனி என்ற வெரோனிகா சரி , சரி என்ன இருந்தாலும் என் அண்ணன் பொண்டாட்டியா போயிட்ட அதனால மன்னிச்சுடுறேன் என்றவளைப் பார்த்து சிரித்த கனிமொழி ஆமாம் என்ன உன் முகமே ரொம்ப கலையா இருக்கு என்றாள்.

 

கவலையா இருக்கா அப்படி எல்லாம் இல்லையே நான் சந்தோசமா தானே இருக்கேன் கனி என்ற வெரோனிகாவிடம் மக்கு ரோனி நான் கலையா இருக்கனு சொல்லுறேன் நீ கவலைன்னு புரிஞ்சுகிட்டு பதில் சொல்லுற என்று தலையில் அடித்தாள் கனிமொழி.

 

கலையாவா எனக்கு அப்படி ஒன்றும் தெரியலை என்ற வெரோனிகாவிடம் நாள் ஏதும் தள்ளி போயிருக்கா என்றாள் கனிமொழி. அவள் யோசிக்க ஆரம்பிக்க ஆமாம் இரண்டு வாரம்  தள்ளி போயிருக்கு என்ற வெரோனிகாவைக் கட்டிக் கொண்ட கனிமொழி என்னடி நாத்தனாரே சீக்கிரம் என் அக்கா பையன் கதிருக்கு பொண்ணை பெத்துருவ போல என்றாள் .

 

ஏய் ச்சீ சும்மா இருடி அதெல்லாம் இருக்காது என்று அவளது வாய் சொன்னாலும் மனம் ஏங்கத் தான் செய்தது.

 

என்னடி அண்ணியும், நாத்தனாரும் என்ன பேசிட்டு இருக்கிங்க என்று வந்த பூங்கொடியிடம் நீங்க அம்மாச்சி ஆகப் போறிங்க அத்தை அதை தான் பேசிட்டு இருக்கிறோம் என்றாள் கனிமொழி. அம்மாச்சியா அப்பத்தாவாடி மக்கு உனக்கு பிள்ளை பிறந்தால் நான் அப்பத்தாடி என்று கனிமொழியின் தலையில் செல்லமாக குட்டு வைத்தார் பூங்கொடி.

 

ஐயோ மாமியாரே கர்ப்பம் நான் இல்லை உங்க செல்ல மகள் என்ற கனிமொழி சிரித்திட ரோனி என்ன சொல்கிறாள் அவள். நீ கர்ப்பமா இருக்கியா என்று சந்தோசமாக மகளின் கன்னத்தில் கை வைத்த பூங்கொடியிடம் ஐய்யோ அம்மா அவள் சொல்கிறாள்னு நீங்களும் கேட்கிறிங்க பாருங்க. இரண்டு வாரம் தள்ளி போயிருக்கு அவ்வளவு தான். எனக்கு தெரிஞ்சு அண்ணி தான் ஊண்டாகிருப்பாளோன்னு தோன்றுகிறது என்றாள் வெரோனிகா.

 

அடியேய் எனக்கு கல்யாணம் முடிஞ்சே ஒரு மாதம் முடியவில்லைடி என்று சிரித்த கனியிடம் யாரு கண்டால் உங்களுக்கு இப்போ தான் கல்யாணம் நடந்திச்சுனு கந்தர்வ கல்யாணம் எதுவும் முன்னமே நடந்திருந்தால் என்று சிரித்த வெரோனிகாவின் காதை திருகிய கனிமொழி வாயாடிக் கழுதை என்றாள். 

 

அண்ணி அண்ணி ப்ளீஸ் என்னை விட்டுரு என்ற வெரோனிகாவிடம் என்னடி புதுசா அண்ணின்னு சொல்லுற கனினு தானே கூப்பிடுவ என்றாள் கனிமொழி. உன்னையெல்லாம் மதிச்சு அண்ணினு சொன்னேன் பாரு என்னை சொல்லனும் என்று தலையில் அடித்தாள் வெரோனிகா.

 

என்னாச்சு ரோனி ஏன் தலையில் அடிக்கிற என்று வந்த சரவணனிடம் ஏன் அண்ணா உங்க பொண்டாட்டி எனக்கு என்ன வேண்டும் என்றாள் வெரோனிகா. உன்னோட அண்ணி என்றான் சரவணன். அதை இந்த பன்னிகிட்ட சொல்லு இவளை நான் அண்ணினு சொன்னதுக்கு ஏன்டி என்னை அண்ணினு சொல்லுறனு கேட்கிறாள் என்றாள் வெரோனிகா.

 

சரவணா இவளுக சண்டைக்குள்ள எல்லாம் நீ தலையிடாதே தம்பி நீ போயி மாப்பிள்ளை கூட கூடமாட எதுனாலும் உதவி செய்யுப்பா என்றார் பூங்கொடி. அது சரிதான் சித்தி என்றவன் சென்று விட்டான்.

 

வாங்க சரவணா என்ற தேவ்விடம் பேசிக் கொண்டிருந்தவன் திருமண ஏற்பாடில் கூட மாட எல்லா வேலைகளையும் பார்த்துக் கொண்டிருந்தான்.

 

என்ன அண்ணி நீங்க ஏன் கனிகிட்ட பேச மாட்டேங்கிறிங்க என்ற வெரோனிகாவிடம் உன் அண்ணி தான் அவங்க புருசன் சொல்லை தட்டாத மனைவி ஆச்சே ரோனி. பெரிய மச்சான் என் கூட பேசக் கூடாதுன்னு சொல்லி இருப்பாரு அதனால தேனும் என் கிட்ட பேச மாட்டேங்குது என்றாள் கனிமொழி.

 

என் புருசனை பற்றி பேசுன வாயைக் கிழிச்சுருவேன். அவரு ஒன்றும் உன் கூட பேசக்கூடாதுனு சொல்லவில்லைடி அம்மா தான் பேசக் கூடாதுன்னு சொன்னுச்சு என்ற தேன்மொழி ரோனி நீ இவள் கூட இரு நான் அத்தை கூட இருக்கேன் என்று எழுந்து சென்று விட்டாள் தேன்மொழி.

 

பார்த்தியா ரோனி என்ற கனியிடம் விடு கனி என்றவள் சரி வா பொண்ணுங்க  ரெடியாகிட்டாங்களான்னு பார்த்துட்டு வரலாம் என்று அர்ச்சனாவின் அறைக்கு சென்றனர்.

 

என்ன அண்ணி, அக்கா  ரெடியா அங்கே விவேக் அண்ணா , பிரகாஷ் மாமா இரண்டு பேரும் ரெடியாகிட்டாங்க  போல என்று வந்தாள் வெரோனிகா. கனிமொழி அங்கு இருந்த ஸ்ரீஜாவிடம் பேசிக் கொண்டு இருந்தாள்.

 

ஏய் கனி நீயும் வா நாம மெகந்தி வச்சுக்கலாம் என்றாள் வெரோனிகா. ஏய் என்னடி அவங்களை அண்ணினு கூப்பிடாமல் கனின்னு கூப்பிடுற என்றாள் அர்ச்சனா. அவள் என்னை விட என்ன ஒரு நான்கரை வயசுக்கு மூத்தவள் அவ்வளவு தான். சின்ன வயசுல இருந்து பெயர் சொல்லியே கூப்பிட்டு பழகிட்டேன். அண்ணியா இருந்தாலும் கனி எப்பவுமே என்னோட பெஸ்ட் ப்ரண்ட் தான் என்று சிரித்தாள் வெரோனிகா.

 

ஐயோ அக்கா நீங்கள் வேற இவள் என்னை கனின்னு கூப்பிட்டால் தான் எல்லோரும் என்னை சின்னப் பொண்ணுனே நினைப்பாங்க. இவள் பாட்டிற்கு அண்ணினு கூப்பிட்டால் நான் ஏதோ கிழவி மாதிரி எல்லோரும் என்னை பார்ப்பாங்க என்ற கனிமொழி சிரித்திட அனைவரும் சிரித்தனர்.

 

ரோனி உன் அண்ணி உன்னை விட பெரிய ஆளா இருப்பாங்க போலையே என்று சிரித்தாள் இந்திரஜா. அவள் என்னை விட பல மடங்கு வாயாடி அக்கா என்ற வெரோனிகா சந்தோசமாக பேசிக் கொண்டிருந்தாள்.

 

என்ன லாவண்யா உன் கொளுந்தனுக்கு செம்ம அடி போல என்ற இலக்கியாவிடம் அடி வாங்கினால் மட்டும் திருந்திருவானா அவன் விடு இலா அவன், அவனோட அம்மா எல்லாம் அப்படித்தான் என்ற லாவண்யா நீ சௌமியா கூட பேசிட்டு இரு என்று சென்று விட்டாள்.

 

என்னடி ரொம்ப ஓவரா பேசுற அப்படி என்ன என் அண்ணன்  மேல உனக்கு கடுப்பு என்ற சௌமியாவிடம் அவனை பார்த்தாலே பிடிக்கவில்லை என்ற இலக்கியா ஒரு புழுவை பார்ப்பது போல விக்னேஷை பார்த்து விட்டு சென்று விட அவன் தான் கடுப்பாகினான்.

 

என்னடா பிரச்சனை உனக்கும் , அவளுக்கும் என்ற சௌமியாவிடம் அதை தெரிஞ்சுகிட்டு நீ என்ன பண்ணப் போற போயி வேலையை பாரு என்ற விக்னேஷ் கோபமாக சென்று விட்டான்.

 

வேகமாக நடந்து வந்தவன் எதிரில் வந்தவளை கவனியாது மோதிட ஸாரிங்க என்றாள் வெரோனிகா. அவளை முறைத்தவன் ஏன்டி அறிவு இல்லை உனக்கு கண்ணை என்ன பிடரிலையா வச்சுருக்க முண்டம் என்றிட அடி செருப்பால பொறுக்கி யாருடா முண்டம் என்றாள் கோபமாக. உன்னைத் தன்டி சொன்னேன் என்றவன் ஏதோ சொல்ல வர அங்கு வந்த கௌதம் விக்கி என்று தம்பியை கடிந்து கொண்டவன் ஸாரிம்மா அவன் ஏதோ கோபத்தில் என்றிட நீங்க ஏன் ஸாரி கேட்கிறிங்க இந்த மாதிரி ஜென்மங்கள் எப்பவுமே திருந்தாது என்று சொல்லி விட்டு சென்று விட்டாள் வெரோனிகா.

 

என்னடா உன் பிரச்சனை ஏன் அந்தப் பொண்ணுகிட்ட வம்பு வளர்க்கிற என்ற கௌதமிடம் அவளை தேடிப் போயி வம்பு இழுத்தேனா என்றவன் தெரியாமல் தானே இடிச்சேன் என்ற விக்னேஷ் சென்று விட்டான் . அவளைத் தேடிப் போயி வம்பு இழுப்பேன் அவளை நிம்மதியா இருக்கவே விட மாட்டேன் எத்தனை அடி தெரியுமா அவளால . அவளால் தான் என் வேலை போச்சு இப்போ நான் வேலைக்கு சேர்ந்ததே அவளை பழிவாங்க தான். நான் அடிக்கப் போற அடியை அந்த வெரோனிகா அவளோட வாழ்க்கையில் மறக்க மாட்டாள் என்று நினைத்தான் விக்னேஷ்.

 

என்ன ரோனி ஏன் கடு கடுன்னு வர என்ற உதய்யிடம் எல்லாம் அந்த பொறுக்கி விக்னேஷ்னால் தான் மாமா என்றவள் நடந்த நிகழ்வை கூறிட விடு ரோனி அவன் எல்லாம் ஒரு ஆளுன்னு அவனே ஒரு செத்த பாம்பு என்ற உதய் நீ என்ன இன்னைக்கு ரொம்ப அழகா இருக்க என்றான்.

 

இதை தான் அந்த கனியும் சொன்னாள் கூடவே ஒரு காரணத்தையும் என்றவள் மாமா அது என்று சொல்ல வர உதய் என்று அழைத்தபடி வந்தார் மலர்கொடி.

 

என்னங்கம்மா என்ற உதய்யிடம் மலர்கொடி ஏதோ ஒரு வேலையை சொல்ல ரோனி நீ அம்மா கூட இரு வரேன் என்றவன் சென்று விட்டான்.

 

ஏன்டி நீ ஏன் இங்கே நிற்கிற அர்ச்சனா, இந்திரஜா  கூட மேடையில் நிற்காமல் என்ற மலர்கொடியிடம் நான் அங்கே நின்றால் நம்ம சொந்தக்காரங்களை யாரு வரவேற்கிறது அத்தை. என் நாத்தனாருக்கும், கொளுந்தனாருக்கும் ஒரே மேடையில் கல்யாணம் அப்போ அண்ணி நான் தானே சொந்ந பந்தங்களை கவனிக்கனும் என்றவள் உங்க மகனுக்கு மட்டும் தான் வேலை சொல்லுவிங்களா எனக்கும் சொல்லுங்க என்றாள்.

 

உனக்கு தானே வா உனக்கு பெரிய வேலையா கொடுக்கிறேன் என்ற மலர்கொடி மருமகளை பந்தி நடக்கும் இடத்திற்கு அழைத்து வந்து முதலில் சாப்பிடு என்றார். அத்தை என்றவளிடம் நீ காலையில் இருந்து எல்லா வேலையும் இழுத்துப் போட்டு செஞ்சியே சாப்பிட்டியாடி ஒழுங்கா சாப்பிடு வேலை எல்லாம் அப்பறம் பார்க்கலாம் என்ற மலர்கொடி அவளை சாப்பிட வைத்தார்.

 

        அத்தியாயம் 108

 

சொந்த பந்தங்கள் நிறைந்திருக்க எந்த பிரச்சனையும் இன்றி அர்ச்சனா, விவேக் திருமணமும்; பிரகாஷ், இந்திரஜா திருமணமும் நல்லபடியாக முடிந்தது. திருமணசடங்குகள் எல்லாம் முடிந்து ஜோடிகள் இரண்டும் அவரவர் வீட்டிற்கு சென்றனர்.

 

என்ன அர்சசு இப்பவும் பேச மாட்டியா என்ற விவேக்கிடம் என்ன பேசனும் என்றாள் கோபமாக. நமக்கு கல்யாணம் முடிஞ்சுருச்சு அர்ச்சு நான் உன்னோட புருசன் என்றவனை ஆற்றாமையுடன் பார்த்தவள் உங்களை எப்பவோ என் புருசனா நான் நினைச்சதால தான் விவேக் உங்களை விட்டு பிரியக் கூடாதுன்னு அவ்வளவு மெனக்கெட்டேன். ஆனால் நீங்க ரொம்ப ஈஷியா என்னை தூக்கி எறிஞ்சுட்டிங்க அப்படித் தானே என்றாள் அர்ச்சனா.

 

அர்ச்சு என்னை புரிஞ்சுக்கோ நான் மட்டும் என்ன உன்னை பிரியனும்னு நினைச்சா அப்படி சொன்னேன். உனக்கு என்னோட அன்பையும், காதலையும் சொல்லி புரிய வைக்கனும்னு இல்லை உனக்கே புரியும் உன் கோபம் குறையும் வரை உனக்காக எப்பவுமே காத்திருப்பேன் என்றவன் திரும்பிட அவனது கையைப் பிடித்து இழுத்தவள் அவனை அணைத்துக் கொண்டாள்.

 

அர்ச்சு என்றவனிடம் என்னால முடியலை விவேக் உன் மேல கோபமா இருக்கனும்னு மூளை சொல்லுது ஆனால் பாலாய் போன மனசு கேட்கவே மாட்டேங்குது என்றவளது முகத்தை நிமிர்த்தியவன் அவளது நெற்றியில் முத்தமிட்டு ஐ லவ் யூ அர்ச்சனா என்று அவளை தன்னுடன் சேர்த்து அணைத்துக் கொண்டான். விளக்கும் அணைந்து விட்டது.

 

என்ன மாம்ஸ் அப்படி பார்க்கிற என்ற இந்திரஜாவிடம் அடியே நான் நார்மலா தான்டி பார்க்குறேன் என்றான் பிரகாஷ். அட ஏன்யா நீ ஒரு புதுப் பொண்டாட்டியை குறு குறுனு எல்லாம் பார்க்க மாட்டியா சரியான டியூப்லைட் என்றவளை முறைத்தவன் அவளது தலையில் கொட்டு வைத்திட ஐயோ மாமா மன்னிச்சுருய்யா என்றிட போடி என்றவன் முகத்தை திருப்பிக் கொண்டான்.

 

என்ன மாமா நீ இதுக்கெல்லாம் முகத்தை திருப்பிட்டு இருக்க என்றவள் அவன் முன்னே வர பால் டம்ளரை காலி செய்து கொண்டிருந்தான் பிரகாஷ். அடப் பாவி நீ என்னய்யா சத்தமே இல்லாமல் பால் மொத்தத்தையும் குடிச்சுட்ட என்றாள் இந்திரஜா.

 

பசிடி நான் நைட்டு டிபன் சாப்பிடவே இல்லை என்றவனை முறைத்தவள் பாலை மட்டும் ஏன் குடிச்ச இதோ பழம், ஸ்வீட்டுனு இருக்கே அத்தனையும் முழுங்கு சரியான மக்கு பிளாஸ்த்ரி உன்னை போயி கட்டிகிட்டேன் பாரு. யோவ் நீ சன்னிலியோன் கூட கனவுல டூயட் பாடுவேன்னு சொன்னியே எந்த பாட்டுக்கு என்றாள் இந்திரஜா.

 

கண்கள் இரண்டால் உன் கண்கள் இரண்டால் என்னை கட்டி இழுத்தாய் இழுத்தாய் 

 

என்று பிரகாஷ் பாடிட அவனை தலையணையை எடுத்து சாத்து சாத்தென்று சாத்த ஆரம்பித்தாள். அடியே ஏன்டி என்னை இப்படி அடிக்கிற என்னோட க்ரஸ் கூட எனக்கு பிடிச்ச பாட்டை டூயட் பாடுவேன் அது ஒரு தப்பா என்றான் பிரகாஷ்.

 

ஏன்டா நீ 90 ‘ s kid னு நான் ஏற்றுக் கொள்கிறேன். ஆனாலும் நீ என்னம்மோ பச்சப்பிள்ளை மாதிரி நடிக்கிறதை தான்டா தாங்க முடியலை என்று அவனை மீண்டும் அடிக்க வர்அவளது கையை பிடித்தவன் பட்டென்று அவளது கன்னத்தில் முத்தமிட்டான்.

 

மாமா 90’s kid  தான் ஆனாலும் ரொமான்ஸும் வரும்டி என்று மனைவி அவளை தன்னோடு அணைத்துக் கொண்டான் பிரகாஷ்.

 

என்ன ரோனி சொல்லுற என்ற உதய்யிடம் ஆமாம் மாமா அந்த விக்னேஷ் என்னோட காலேஜ்ல தான் ப்ரபசரா ஜாயின் பண்ணிருக்கான். அவன் டார்ச்சர் தாங்க முடியலை தினம் , தினம் எதாவது நொண்டி சாக்கு வச்சு என்னை திட்டிட்டே இருக்கான். எல்லோரு முன்னாடியும் இன்சல்ட் பண்ணுறது, க்ளாஸ் விட்டு விரட்டி விடுறது என்னால முடியலை மாமா.

 

அவன் பண்ணுற இம்சையில் பைத்தியம் ஆகிருவேன் போல என்றவளிடம் ரோனி அவன் மேல ப்ரின்சிபல் கிட்ட கம்ப்ளையண்ட் பண்ணியா என்றான் உதய். பண்ணிட்டேன் ஆனால் அங்கே நான் க்ளாஸ்ல கவனம் இல்லாமல் ஆட்டியூட் காட்டுறேன்னு ப்ளேட்டை மாத்திட்டான். எனக்கு தான் திட்டு விழுந்துச்சு. வர வர காலேஜ் போகவே பிடிக்கவில்லை மாமா என்றவளின் கையை தன் கைக்குள் வைத்தவன் ரோனிமா சூரியனை பார்த்து நாய் குரைத்தால் நாய்க்கு தான் வாய் வலிக்கும். அவன் என்ன பண்ணனுமோ பண்ணிட்டு போறான். அவனை ஒரு பொருட்டாவே நீ மதிக்காதே.

 

உனக்கு பாடம் அவன் தான் நடத்தனுமா அவன் வகுப்பில் வெளியே விரட்டினால் சந்தோசமா கேண்டீன் போயி சூடா பப்ஸ் சாப்பிடு, டீ குடி. அந்த கிளாஸை இப்படி என்ஜோய் பண்ணு. உன்னோட பாடத்தில் என்ன சந்தேகமோ உனக்கு உன் மாமா சொல்லி கொடுக்கிறேன்.

 

அவனை ஏன் நாமளே அவனுக்காக ரியாக்ட் பண்ணி பெரிய ஆளா ஆக்கனும் என்ற உதய் அவளது நெற்றியில் முட்டிட சரிங்க மாமா என்றவள் மாமா அப்பறம் ஒரு முக்கியமான விசயம் என்றவள் அவனது கையில் ஒரு பொருளை திணித்தாள்.

 

என்ன ரோனி இது என்றவன் அதை பார்த்திட அது ஒரு ப்ரகனன்சி கிட் அதில் இரண்டு கோடுகள் காட்டிட அதைக் கண்டவன் முகமோ சந்தோசத்தில் திளைக்க மனைவி அவளிடம் கண்களால் நிஜமாவா என்று கேட்டிட ஆமாம் மாமா என்றவள் அவனது மார்பில் சாய்ந்து கொண்டாள்.

 

ரோனி வீட்டில் யாருக்கும் என்றவனிடம் இன்னும் சொல்லவில்லை மாமா என்றாள் வெரோனிகா. அப்போ வா என்றவன் மனைவியை தூக்கிக் கொண்டு அப்பத்தா, அம்மா என்று கத்திக் கொண்டே ஓடி வந்தான்.

 

என்ன உதய் ஏன்டா இப்படி கத்திட்டு இருக்க என்ற சுசீலாவிடம் சித்தி நீங்க அப்பத்தா ஆகப் போறிங்க என்றவன் ரோனி கர்ப்பமா இருக்கிறாள் என்றதும் சசீலா ரோனி நிஜமா என்று மருமகளின் நெற்றியில் முத்தமிட்டவர் அவள் வாயில் ஸ்வீட்டை ஊட்டி விட்டார்.

 

அக்கா , அத்தை என்று அவர் அழைத்திட என்ன சுசி என்று வந்தனர் மலர்கொடி, கல்யாணிதேவி இருவரும்.

 

சுசீலா விசயத்தை சொல்ல மொத்த குடும்பமும் சந்தோசமாக கொண்டாடினர். சும்மாவே அவளை தாங்குவர் இப்பொழுது சொல்லவா வேண்டும். ஆனால் இவர்களின் சந்தோசம் நிலைக்குமா என்று கடவுளுக்கு தான் வெளிச்சம்.

 

என்ன லாவண்யா யாரு போனில் என்ற கௌதமிடம் அண்ணி போன் பண்ணினாங்க. அவங்க அண்ணி வெரோனிகா கர்ப்பமா இருக்காங்களாம் அதான் அம்மா, அப்பா அந்தப் பொண்ணை பார்க்க போறாங்களாம் நீயும் வருகிறாயா லாவண்யான்னு கேட்டாங்க என்றாள் லாவண்யா.

 

ஓஓ அந்த பிசாசு மாசமா இருக்காளா இருக்கட்டும், இருக்கட்டும் என்று கொடூரமாக சிரித்த விக்னேஷ் அவளோட வாழ்க்கையில் ஒரு சந்தோசம் நல்ல படியா நடந்து விட இந்த விக்னேஷ் விடவே மாட்டான். உனக்கு வேற வழியில் ஆப்பு வைக்க நான் திட்டம் போட்டேன் இப்போ நீயே உனக்கான ஆப்பை நான் எப்படி வைக்கனும்னு முடிவு பண்ணிட்ட வெரோனிகா என்று புன்னகைத்தான் விக்னேஷ்.

 

என்ன ரோனி அப்போ இனிமேல் எங்களை எல்லாம் கண்டுக்க மாட்ட என்ற இந்திரஜாவிடம் உங்களை நான் ஏன் கண்டுக்கனும் அதான் பிரகாஷ் மாமா இருக்காரே என்று சிரித்தாள் வெரோனிகா.

 

ஆமாம் , ஆமாம் உன் மாமா என்னை கண்டுக்கிட்டு தான் மறுவேலை பார்க்கப் போகிறாரு  என்றவள் அது எப்போ பாரு பள்ளிக்கூடம், காலேஜ்னு வேலை, வேலைன்னு சுத்திட்டு இருக்கு என்றாள் இந்திரஜா.

 

என்ன  டாக்டர் ரோனிக்கும், குழந்தைக்கும் என்ற உதய்யிடம் எந்த பிரச்சனையும் இல்லை. ஒரு மூன்று மாதம் வரை ரொம்ப கவனமா இருக்கனும். வெரோனிகா நல்ல ஆரோக்கியமான சாப்பாடு எடுத்துக்கனும். உனக்கு நிறைய பசிக்கும் அதனால நிறைய பழச்சாறு எடுத்துக்கோ என்ற மருத்துவர் கூறிட சரிங்க டாக்டர் என்று வெட்கம் கொண்டவள் தன் கணவனை பார்த்திட அவனும் சிரித்தான்.

 

ஆமாம் ரோனி காலேஜ் போகும் பொழுது தாலி தெரியக்கூடாதுன்னு சுடிதாரில் மறைச்சு வச்சுப்பியே இப்போ உன் வயிறு வீங்கிட்டே போயி உன்னை கர்ப்பவதின்னு காட்டி கொடுத்திருமே அப்போ என்ன பண்ணுவ என்றான் உதய்.

 

மாமா நான் ஸ்கூல் போகும் பொழுது தான் தாலியை மறைச்சேன் இப்போ இல்லை என்றவள் அட்லீஸ்ட் நான் பிள்ளைத்தாச்சினு தெரிந்தாலாவது அந்த சீனியர் சந்தோஷ் நான் ஆண்ட்டினு புரிஞ்சுகிட்டு வேற பொண்ணை சைட் அடிப்பான் இல்லையா என்று சிரித்தாள்.

 

அடி கிராதகி உங்களுக்காகவும், நம்ம பிள்ளைக்காகவும் நான் கர்ப்பமா இருக்கிறது தெரியட்டுமே மாமான்னு சொல்லுவன்னு எதிர் பார்த்தால் இவள் ஆண்டினு எவனோ ஒருத்தனுக்கு தெரியனுமாம் என்ற உதய் அவளது கொமட்டில் இடித்திட அவளும் சந்தோசமாக சிரித்தாள்.

 

மாமா ஒரு விசயம் சொல்லனும் ஊர்மிளா என்கிட்ட ஒரு விசயம் சொன்னாள் என்ற வெரொனிகா ஊர்மிளா சொன்ன விசயத்தை கூறினாள்.

 

என்ன சொல்லுற ஊர்மி என்ற வெரோனிகாவிடம் அர்ஜுன் சொன்னது தான் சரி ரோனி எனக்கு அவன் மேல வந்தது இன்பாச்சுவேசன் தான் காதல் இல்லை என்றாள் ஊர்மிளா. ஏய் நிஜமாகத் தான் சொல்கிறாயா என்ற வெரோனிகாவிடம் நிஜம் தான் இதில் பொய் சொல்ல என்ன இருக்கு. ஆரம்பத்தில் அவன் சொன்ன விசயம் எனக்கு உரைக்கவே இல்லை இப்போ புரியுது.

 

அவனும் நானும் சின்ன வயசுல இருந்து ப்ரண்ட்ஸ். கிளாஸ்மெட்ஸ். அதனால எனக்கு அவன் மேல ஒரு ஈர்ப்பு இருந்திருக்கு. அதை நான் காதல்னு தப்பா நினைச்சுட்டு இருக்கேன் என்றாள் ஊர்மிளா. வெரோனிகா ஏதோ சொல்ல வர அதற்குள் ஊர்மிளாவின் மொபைல் போன் ஒலித்திட அவள் அந்த இடத்தை விட்டு சென்று விட்டாள்.

 

நடந்த விசயத்தை உதய்யிடம் கூறிய வெரோனிகா எனக்கு என்னம்மோ ஊர்மி வேற ஏதோ பிரச்சனையை இழுத்துட்டு வரப் போகிறாள்னு தோன்றுகிறது மாமா என்றாள்.

 

எப்படி சொல்லுற ரோனி என்றவனிடம் அர்ச்சனா அண்ணி கல்யாண வீட்டில் நான் ஒரு விசயம் கவனிச்சேன் என்று எதையோ அவள் கூறிட என்ன சொல்லுற ரோனி என்றவனிடம்  ஆமாம் மாமா எனக்கு ரொம்ப பயமா இருக்கு.

 

ஊர்மிளா இப்போ தான் அந்த சஹானா இறந்த அதிர்ச்சியோட பாதிப்பில் இருந்து மீண்டு வந்திருக்கிறாள்.

 

திரும்பவும் அவள் சறுக்கிருவாளோன்னு பயமா இருக்கு நிகிலாவும் என்கிட்ட இதைப் பற்றி சொல்லி இருக்கிறாள் என்ற வெரோனிகாவிடம் நீ எதையும் யோசிக்காதே ரோனி எல்லாம் நான் பார்த்துக்கிறேன் என்ற உதய் சாலையில் கவனம் செலுத்த எங்கிருந்தோ வந்த ஒரு பெண் காரின் ஊடே பாய அவளை மோதி விடக் கூடாது என்று நினைத்த உதய் வண்டியை திருப்ப அங்கிருந்த மரத்தின் மீது மோதினான்.

 

       அத்தியாயம் 109

 

மாமா என்று அவள் கத்திட வண்டியை திருப்பினான். திருப்பிய வேகத்தில் அங்கிருந்த ஒரு பட்டுப்போன பாதி வெட்டப்பட்ட நிலையில் இருந்த மரத்தின் தூரில் லேசாக மோதி கார் நின்றது. ரோனி என்றவனிடம் எனக்கு ஒன்றும் இல்லை மாமா அந்தப் பொண்ணுக்கு என்னனு பார்க்கலாம் வாங்க என்றவள் மெல்ல சீட்பெல்ட்டை கழற்றி விட்டு இறங்கினாள்.

 

இறங்கிய வெரோனிகா, உதய் இருவரும் அந்த பெண் கிடக்கும் இடத்தை நோக்கி சென்றனர். மயங்கி கிடந்த அந்த பெண்ணை திருப்பிட அது பெண்ணே இல்லை ஓர் ஆண்.

 

உதய், ரோனி இருவரையும் தள்ளியவன் விசில் அடிக்க இன்னும் நான்கு பேர் வந்து விட்டனர்.

 

வெரோனிகா அதிர்ந்து விட்டவள் மாமா என்றிட ரோனி நீ காருக்கு போயி பத்திரமா உட்காரு என்றிட மாமா என்றவள் தயங்கினாள். சொல்றேன்ல ரோனி போ என்றவனின் தலையில் ஒருவன் கட்டையால் அடித்திட மாமா என்று கத்தியவள் கணவனின் அருகே வர அவளது தலையில் ஓங்கி கட்டையால் அடித்தான் ஒருவன்.

 

அவனை விடுங்கடா அவள் தான் நம்ம டார்கெட்  அவள் கழுத்தில் தான் நகை இருக்கு என்ற ஒருவன் அவளை நெருங்கிட ரோனி ஏன் வந்த போ போயி வண்டியில் உட்காரு என்று கத்தினான் உதய். மாமா ,மாமா என்றவள் அந்த இடத்தை விட்டு நகராமல் பித்து பிடித்தது போல் நிற்க அவளது முன் தலையில் மீண்டும் ஓங்கி அடித்தான் ஒருவன்.

 

ரோனி என்ற உதய் கத்திக் கொண்டு தன்னைப் பிடித்திருந்த ஒருவனை தள்ளி விட்டு மற்றொருவனை ஒரே அடி தான். அவன் அடித்த அடி வர்ம அடி எதிராளி சுருண்டு விட்டான்.

 

இந்தப் பக்கம் அவனை பிடிக்க வந்தவனை அவன் அடித்து முடிப்பதற்குள் அவனது மனைவியின் அடி வயிற்றில் ஓங்கி கட்டையால் ஒருவன் அடித்திட மாமா என்றவள் வயிற்றைப் பிடித்துக் கொண்டு கீழே விழ ரோனி என்று கத்தியவன் வெறி பிடித்தவன் போல மற்ற இருவரையும் அடி வெளுத்து விட்டான்.

 

அவனது அரக்கத் தனத்தை தாங்க முடியாமல் அடி வாங்கிய ஐவரும் திசைக்கு ஒருவராக சுருண்டு கிடந்தனர். அதிலும் ஒருவன் எழுந்து வந்து  கூர்மையான கத்தியால் அவளது அடி வயிற்றில் ஓங்கி குத்திட அவ்வளவு தான் வெரோனிகா கீழே விழ உதய் பதறி ரோனி என்று ஓடிட அவளது கழுத்தில் இருந்த நகையை அப்படியே கொத்தாக பறித்து விட்டு அந்த கத்தியால் குத்தியவன் ஓடியே விட்டான்.

 

மாமா என்ற படி அவள் மயங்கி சரிய அவளை தாங்கிப் பிடித்தவன் ரோனி என்று கத்தியவன் மனைவியை தூக்கிச் சென்று காரில் படுக்க வைத்து விட்டு வண்டியை கஷ்டப் பட்டு திருப்பி மருத்துவமனைக்கு விட்டான்.

 

மாமா நம்ம பாப்பா என்றவள் திக்கித் திணறி கூறிட பாப்பாக்கு ஒன்றும் ஆகாது ரோனி உனக்கும் ஒன்றும் இல்லைடி என்றவன் தலையில் வழியும் இரத்தத்தையும் பொருட் படுத்தாது காரை வேகமாக இயக்கினான்.

 

அவளுக்கும் தலையில் பலமான அடி அதனால் இரத்தம் வழிந்து கொண்டிருந்தது. அப்படியே மயங்கி சரிந்தாள்.

 

மருத்துவமனைக்கு வந்தவன் மயக்கம் வர அதை பொருட்படுத்தாது மனைவி அவளை தூக்கிக் கொண்டு மருத்துவமனைக்குள் ஓடினான். அந்த நேரம் வெளியே வந்த தேவ் அண்ணா என்று பதறியவன் அண்ணிக்கு என்னாச்சு என்று ஓடி வர அவன் கையில் மயங்கிப் போன வெரோனிகாவை கொடுத்து விட்டு அப்படியே மயங்கி சரிந்தான் உதயச்சந்திரன்.

 

அண்ணா என்று பதறிய தேவ் செவிலியரை அழைத்து ஸ்ட்ரக்சரை எடுத்து வரச் சொல்லி இருவரையும் அவசர சிகிச்சை பிரிவிற்கு தூக்கிச் சென்றான்.

 

உதய்க்கும் தலையில் நல்ல அடி, வெரோனிகாவிற்கு கத்திக் குத்து வேறு அவளது நிலை தான் கவலைக்கிடமாக இருந்தது.

 

என்ன சொல்லுற மச்சான் என்ற கனிமொழியிடம் ஆமாடி இனிமேல் நீ போலீஸ்காரன் பொண்டாட்டி உன் மச்சான் ஐபிஎஸ் பாஸ் பண்ணி இன்டர்வியூ போயிருந்தேன்ல எனக்கு போஸ்டிங் போட்டாச்சு. சென்னையில் நாளைக்கே ஜாயின் பண்ண போறேன் என்றவன் சந்தோசமாக மனைவியை தூக்கி சுற்றினான்.

 

எல்லாம் நம்ம மருமகன் வரப் போற நேரம் தான் நல்லதே நடக்குது என்றாள் கனிமொழி. மருமகனா என்ன சொல்லுற கனி என்ற சரவணனிடம் நம்ம ரோனி கர்ப்பமா இருக்கிறாள் என்றாள் கனிமொழி. இப்போ குழந்தைக்கு என்ன அவசரம் முதலில் ரோனி டிகிரி முடிக்கட்டுமே என்றவனது வாயில் கை வைத்தவள் லூசு மச்சான் குழந்தையை போயி ஏன்யா வேண்டாம்னு சொல்லுற உன் தங்கச்சிக்கு குழந்தைனா எவ்வளவு ஆசைன்னு உனக்கு தெரியாதா என்றிட ஸாரிடி என்றான் சரவணன்.

 

சரி நீ ஊருக்கு எப்போ கிளம்புற என்ற கனிமொழியிடம் இப்பவே கிளம்ப வேண்டியது தான் என்ற சரவணன் தன் துணிமணிகளை எடுத்து வைத்தான்.

 

அப்பா, அம்மாகிட்டயும்; சித்தப்பா, சித்திகிட்டையும் ; மாமா , அத்தைகிட்டையும் சொல்லிட்டு கிளம்புறேன் என்ற சரவணன் தன் தந்தையை காண வந்தான்.

 

என்ன சொல்லுற கதிரேசா நம்ம பிள்ளைக்கு என்ன ஆச்சு என்று பதறினார் கணேசன். என்னனு தெரியலை அண்ணே வழிப்பறி பண்ண வந்த திருட்டு பயலுக நம்ம பிள்ளைவுட்டு நகையை பறிச்சுட்டு வயித்துல கத்தியை வச்சு குத்திட்டானுகளாம் என்று அழுதார் கதிரேசன்.

 

என்ன சொல்லுறிங்க தம்பி எம்புள்ளை மாசமா இருந்தாளே என்று கதறினார் வசந்தி. ஆமாம் அண்ணி என் பிள்ளைக்கு என்ன ஆச்சோன்னு தெரியலை என்றதும் என்ன சொல்லுறிங்க சித்தப்பா என்று வந்த சரவணனிடம் அனைத்தையும் சொன்ன கதிரேசன் நானும், உன் சித்தியும் ஊருக்கு கிளம்புறோம் சரவணா என்றிட நாங்களும் வரோம் தம்பி என்ற வசந்தி பூங்கொடியை கட்டிக் கொண்டு அழுதிட  தம்பி தேனும், சக்தியும் இருக்கட்டும் நம்ம நான்கு பேரும் போகலாம் என்ற கணேசன் சரவணா உன் பொண்டாட்டியை தேனு கூட வந்து இருக்க சொல்லிட்டு வண்டியை எடு எம்பிள்ளைக்கு என்ன ஆச்சோ என்று கூறினார்.

 

பூங்கொடி நம்ம பிள்ளைக்கு ஒன்றும் ஆகாதுடி நீ அழாதே அந்த ஐய்யனாரும், கருப்பணும் நம்ம பிள்ளைக்கு காவலா இருப்பாங்க என்று பூங்கொடிக்கு ஆறுதல் சொல்லிக் கொண்டிருந்தார் வசந்தி.

 

என்னடா பண்ணி தொலைஞ்ச என்ற கௌதமிடம் என்ன அண்ணா நான் என்ன பண்ணினேன் என்றான் விக்னேஷ். அந்த வெரோனிகாவிற்கு என்று நடந்த விசயங்களை கூறிய கௌதம் விக்கி நீ எதுவும் என்றிட அண்ணா என்ன பேசுறிங்க அவளை எனக்கு பிடிக்காது தான் அவளை பழிவாங்க துடிக்கிறேன் தான் ஆனால் அதற்காக அவளை கொலை பண்ணுற அளவுக்கு நான் மோசமானவன் இல்லை. அவளை மட்டும்னா கூட பரவாயில்லை இப்போ அவள் கர்ப்பமா வேற இருக்கிறாள் அவளை எப்படி அண்ணா என்ற விக்னேஷ் அம்மா மேல சத்தியமா நான் எதுவும் பண்ணவில்லை என்றான்.

 

விக்கி சத்தியமா தானடா சொல்லுற என்ற கௌதமிடம் அண்ணா சத்தியம் அண்ணா நான் எந்த தப்பும் பண்ணவில்லை. காலேஜ்ல அவளை டார்ச்சர் பண்ணுறேன் இல்லைன்னு சொல்லவில்லை ஆனால் கொலை பண்ணுற அளவுக்கு எல்லாம் நான் எதுவும் பண்ணவில்லை அண்ணா என்று சூடம் ஏற்றாத குறையாக சத்தியம் செய்தான் விக்னேஷ்.

 

என்ன அத்தை இது நம்ம குடும்பத்து மேல அந்த கடவுளுக்கு என்ன தான் கோபமோ இப்போ தான் அர்ச்சனா, அடுத்து ஸ்ரீஜா. இப்போ திரும்பவும் ரோனி. அந்தப் பொண்ணு கல்யாணம் பண்ணி வந்த இந்த ஒன்றரை வருசத்தில் எத்தனை சோதனையை தான் தாங்குவாள் என் மருமகள் பிழைச்சுப்பாள் தானே அத்தை என்று அழுத மலர்கொடியிடம் அவளுக்கு ஒன்றும் ஆகாது மலரு என்று மருமகளுக்கு ஆறுதல் சொன்னார் கல்யாணிதேவி.

 

கண் விழித்த உதய் தன் தம்பியிடம் தேவ் ரோனி என்றிட அண்ணிக்கு ட்ரீட்மென்ட் போயிட்டு இருக்கு அண்ணா என்றான் தேவ். எனக்கு அவளை பார்க்கனும் என்று கத்தியவனிடம் அண்ணா ப்ளீஸ் பொறுமையா இரு அண்ணிக்கு ஒன்றும் இல்லை என்ற தேவ்விடம் இல்லை தேவ் என் ரோனியை கத்தியில் குத்திட்டு அவளோட செயினை வேற அறுத்துட்டு போனானுங்க அவளுக்கு கழுத்தில் எதுவும் காயம் பட்டிருக்கா சொல்லுடா என்றான் உதய்.

 

அண்ணா நீ பொறுமையா இரு பாரு உன்னோட பிபி ரெய்ஸ் ஆகிட்டே போகுது என்ற தேவ் நர்ஸ் அந்த இன்சக்சனை கொடுங்க என்றவன் தன் அண்ணனின் கையில் அந்த ஊசியை போட்டு விட அவன் மெல்ல ரோனி ரோனி என்றபடி மயங்கினான்.

 

என்ன தேவ் உதய் என்ற மலர்கொடியிடம் கண்ணு முழிச்சவரு அண்ணியை கேட்டு ஒரே ஆர்ப்பாட்டம். அவரோட பிபி வேற ரெய்ஸ் ஆகிட்டு இருந்துச்சு அதான் இன்சக்சன் போட்டு தூங்க வச்சுருக்கேன் அண்ணிக்கு தான் ரொம்ப சீரியஸ் என்ற தேவ் அம்மா அண்ணியோட குழந்தை என்ற தேவ்விடம் அவள் நல்லா இருந்தால் போதும்டா எனக்கு பேரக் குழந்தையை விட என் மருமகள் தான் முக்கியம்.

 

இந்த குழந்தை போனால் என்ன அவளுக்கு வயசு இருக்கு அவள் உயிரோட வந்தாளே போதும் என்ற மலர்கொடி என் மருமகளை இப்படி ஆக்கினவங்க யாரு என்னனு தெரிஞ்சதா என்றிட அவனுங்க ஏதோ வழிப்பறி கும்பல் பெரியம்மா. 

 

அண்ணியோட நகைகளுக்காக தான் அண்ணியை கத்தியால குத்திட்டு நகையை பறிச்சுட்டு போயிருக்கானுங்க. அதில் ஒருத்தன் தப்பிச்சுட்டான் மற்ற நான்குபேரும் அண்ணன் அடிச்ச அடியில் சுருண்டு தான் கிடந்திருக்கானுங்க அவனுங்களை போலீஸ் பிடிச்சுட்டாங்க என்றான் பிரகாஷ்.

 

அவள் எப்பவும் தாலிசெயின் தவிர எதையும் போட மாட்டேங்கிறாளேன்னு வம்பு பண்ணி பாவி நான் தான் அவளை நகை போட சொன்னேன் ஐயோ நானே என் ரோனிக்கு எமனா மாறிட்டேனே என்று அழுதார் மலர்கொடி.

 

அக்கா நம்ம ரோனிக்கு ஒன்றும் ஆகாது அவள் நல்லபடியா பிழைத்து வந்திருவாள் நீங்க கவலைப் படாதிங்க என்ற சுசீலா தன் அக்காவைக் கட்டிக் கொண்டு அழ ஆரம்பித்தார்.

 

அத்தை என்ன பண்ணுறிங்க நீங்க பெரிய அத்தைக்கு சமாதானம் சொல்லுவிங்கனு பார்த்தால் நீங்களே அழுதுட்டு இருக்கிங்க என்ற இந்திரஜாவிடம் என்னால முடியலை இந்து என் பொண்ணு ஊர்மியை விட அதிகமான பாசம் என் ரோனி மேல வச்சுருக்கேன். அவளுக்கு எதாவதுன்னா சத்தியமா என்னால வாழவே முடியாதுடி என்று அழுதார் சுசீலா.

 

மொத்த குடும்பமும் கண்ணீரும், கவலையுமாக மருத்துவமனை வளாகத்தில் அழுது தவித்தனர். வெரோனிகா கண் விழிப்பாளா , இல்லையா

 

       அத்தியாயம் 110

 

இன்னும் அவள் கண்ணு முழிக்கவில்லையா தேவ் என்ற உதய்யிடம் அண்ணா அண்ணிக்கு கத்திக் குத்து ரொம்ப ஆழமா அதுவும் அடி வயிற்றில் பட்டிருக்கு. தலையிலும் சரியான அடி அண்ணிக்கு ஒன்றும் ஆகாது கண் விழிச்சுருவாங்க என்று தன் தமயனுக்கு ஆறுதல் கூறினான் தேவச்சந்திரன்.

 

உதய் அழாதப்பா மருமகளுக்கு ஒன்றும் ஆகாது என்று நெடுமாறனும், இளமாறனும் மகனுக்கு ஆறுதல் சொன்ன பொழுதிலும் அவர்களுக்கும் கண்ணீர் தான் வந்தது.

 

பூங்கொடியோ மகள் இன்னும் கண் விழிக்கவில்லை என்ற செய்தியில் நொறுங்கிப் போய் இருக்க வசந்தி தான் அதிகமாக அழுதார். சரவணன் பிரகாஷிடம் ஏற்கனவே வேலையில் சேரப் போகும் செய்தியை கூறி இருந்ததால் பிரகாஷ் அவனிடம் மச்சான் நீங்க கிளம்புங்க அண்ணிக்கு எதுவும் ஆகாது. நாங்க இத்தனை பேர் இருக்கோமே என்றிட அவனும் மனசே இல்லாமல் மருத்துவமனையில் இருந்து கிளம்பினான்.

 

விக்கி என்ற சகுந்தலாவிடம் என்னங்கம்மா என்றான் விக்னேஷ். அந்தப் பொண்ணு வெரோனிகா என்றிட அம்மா உங்க மேல சத்தியமா சொல்கிறேன்மா அவளுக்கு நடந்த இன்சிடென்ட்க்கும் எனக்கும் எந்த சம்மந்தமும் இல்லை. ஆரம்பத்தில் அவளை எதாவது பண்ணனும்னு நான் நினைச்சது உண்மை தான் ஆனால் நீங்க என் கிட்ட வந்து பேசினிங்க பாருங்க அப்பவே நான் மனசு மாறிட்டேன்.

 

அவளை எனக்கு இப்பவும் பிடிக்காது தான் ஆனால் அதற்காக அவளை கொலை பண்ணுற அளவுக்கு எல்லாம் நான் போக மாட்டேன்மா. என்னை நம்புங்க நீங்க தானம்மா சொன்னிங்க ஒரு கர்ப்பவதியோட சாபம் நம்ம தலைமுறையையே அழிச்சுரும்னு அப்பறமும் நான் ஏன் அவளை எதுவும் பண்ண போறேன். சத்தியம் அம்மா நான் எந்த தப்பும் பண்ணவில்லை என்றான் விக்னேஷ். என் விக்கியை நான் நம்புறேன்பா என்ற சகுந்தலா சென்று விட்டார்.

 

ஒரு வழியாக வெரோனிகா கண் விழித்து விட்டாள். அவளருகில் சென்ற உதயச்சந்திரனிடம் மாமா உங்களுக்கு ஒன்றும் இல்லையே என்றிட எனக்கு ஒன்றும் இல்லை ரோனி பார்க்கிற தானே என்றவனது கண்கள் கலங்கிட மாமா எனக்கு என்ன ஆச்சு, நம்ம குழந்தை என்றவளை கட்டிக் கொண்டவன் அழ ஆரம்பிக்க அவளுக்கு புரிந்து விட்டது. அவனது உயிர் அவளுக்குள் உருவாகிய உயிர் மொட்டாகவே கருவிலே சிதைந்து விட்டது அந்த துக்கம் தாளாமல் தான் அவன் அழுகிறான் என்பதை உணர்ந்தவள் தன் வலியை மனதிற்குள் புதைத்துக் கொண்டு மாமா ஏன் அழறிங்க இந்த குழந்தை இல்லைனா என்ன மாமா நமக்கு இன்னொரு குழந்தை பிறக்காமலா போகும் அழாதிங்க மாமா என்றவளது கண்கள் கலங்கிட அவளை பிரிந்தவன் அவளது கண்ணீரைத் துடைத்தான்.

 

இந்த கான்பிடென்ட் தான் அண்ணி வேண்டும். உங்களுக்கு எதுவும் இல்லை என்ற தேவ்விடம் தலையசைத்தாள் வெரோனிகா.

 

சரி ரோனி நீ ரெஸ்ட் எடு நாங்கள் எல்லாம் வெளியே இருக்கிறோம் என்ற மலர்கொடி மற்றவர்களுடன் வெளியே செல்ல பூங்கொடி மட்டும் மகளின் அருகில் இருந்தார்.

 

எல்லோரும் போயிட்டாங்களா அம்மா என்றவளிடம் போயிட்டாங்க ரோனி என்றார் பூங்கொடி. அம்மா என் பிள்ளை போச்சேம்மா என்று தன் அன்னையை கட்டிக் கொண்டு அழ ஆரம்பித்தாள் வெரோனிகா.

 

ரோனி அழாதடி என்ற பூங்கொடியிடம் எப்படிம்மா அழாமல் இருப்பேன் என்னோட உயிர்மா இல்லாமல் போனது என்றவளிடம் நீ தானடி சொன்ன இந்த குழந்தை இல்லைன்னா இன்னொன்னுனு என்ற பூங்கொடியிடம் அது மாமாவுக்காக சொன்னேன் அம்மா.

 

அவரு ஏற்கனவே உடைஞ்சு அழும் பொழுது நானும் அழுதால் அவரால தாங்கிக்க முடியுமாம்மா. அவனுங்க என் வயிற்றில் அடிச்சப்பவே எனக்கு தெரியும் அம்மா, போதாக்குறைக்கு கத்திக்குத்து  வேற நான் ஏன்மா பிழைச்சேன். என் பிள்ளையை பாதுகாக்க முடியாத படுபாவி நான் எதற்கு இருக்கனும். ஏன்மா ஏன் அந்த திருடனுங்களுக்கு தேவை நகை தானே அதை பறிச்சுட்டு போயிருக்கலாமே என்னோட குழந்தை என்ன பாவம் பண்ணிச்சு அதை கொல்ல எப்படிம்மா அவனுங்களுக்கு மனசு வந்துச்சு இன்னும் சரியா வளராத என் பிள்ளை அவனுங்களுக்கு என்ன துரோகம் பண்ணுச்சு என்று அழுதவளிடம் அம்மு அழாதடி நீ அழக் கூடாது. ஆபரேசன் பண்ணி இருக்கிற உடம்பு என்ற பூங்கொடியிடம் செத்துருவேனாம்மா செத்துப் போறேன் அம்மா என்றாள் வெரோனிகா.

 

என்னடி ஈஸியா சொல்லிட்ட நீ என்னோட ஒரே பிள்ளைடி உன் பிள்ளை செத்துருச்சுனு நீ செத்துப் போறேன்னு சொல்லுறியே நீ இல்லாத உலகத்தில் அம்மா மட்டும் எப்படி அம்மு வாழ்வேன். உன் அப்பா,  மாப்பிள்ளை எல்லோருக்குமே நீ மட்டும் தானடி உலகம். நீ செத்துப் போனால் உன்னோட சந்துரு மாமா மட்டும் இல்லை, உன் அப்பா, அம்மாவும் சேர்ந்தே செத்துப் போயிருவோம் அதை மறந்துராதே என்ற பூங்கொடி அழுதிட அம்மா அழாதிங்கம்மா என்று அவரை அணைத்துக் கொண்டாள் வெரோனிகா.

 

அண்ணா ஏன் இப்படி அழற அண்ணிகிட்ட உள்ள கான்பிடென்ட் உனக்கு இல்லையா என்ற தேவச்சந்திரனை ஆற்றாமையுடன் பார்த்த உதய் நான் என் குழந்தை போனதுக்காக அழவில்லை தேவ். இந்தக் குழந்தை இல்லைனா என்ன ஏன் எனக்கு குழந்தையே இல்லைனா கூட என்ன எனக்கு எப்பவுமே என் ரோனி தான் குழந்தையே.

 

அவள் அழுதால் நான் உடைஞ்சுருவேன்னு துக்கத்தை எனக்கு முன்னே காட்டக் கூடாதுன்னு அப்படி பேசினாள். எனக்கு தெரியாதா அவளைப் பற்றி அந்த குழந்தை உருவாகும் முன்னமே அவள் குழந்தைக்கு பெயர் வைத்தவள். தனக்கு குழந்தை பிறந்தால் எப்படி எல்லாம் வளர்க்கனும்னு கற்பனை பண்ணி வச்சுருந்தவள் அவ்வளவு சீக்கிரம் அவள் இந்த பாதிப்பில் இருந்து வெளியே வர மாட்டாள்.

 

என் முன்னாடி அழக் கூடாதுன்னு அவள் அவளோட அம்மாகிட்ட அழுவாள். இந்த சங்கடத்தில் இருந்து நான் மீண்டுருவேன் அவளால முடியுமான்னு தெரியலை என்றவனது தோளில் கை வைத்த தம்பியர் இருவரையும் அணைத்துக் கொண்டு அழ ஆரம்பித்தான் உதய்.

 

அண்ணா அழாதே அண்ணா நம்ம அண்ணி சீக்கிரமே இந்த பாதிப்பில் இருந்து வெளியே வந்துருவாங்க என்று கூறினான் பிரகாஷ்.

 

இரண்டு மாதம் கடந்து விட்டது. வெரோனிகா என்ன தான் மற்றவர் முன்னிலையில் கவலை இல்லாத மாதிரி காட்டிக் கொண்டாலும் தனிமையில் அவள் படும் வேதனை அவளை தவிர யார் அறிவார். அவன் அறிவான் ஆனாலும் அவளை தேற்றும் வழி தெரியாமல் தவித்தான். அந்த மருந்தாக உதயநிலாவை எப்பொழுதும் வெரோனிகாவிடமே விட்டு விட்டாள் ஸ்ரீஜா.

 

என்னடி இப்போ எல்லாம் நீ் நிலாவை கவனிக்கிறதே இல்லை போல என்ற தேவ்விடம் அவளுக்கு தான் அவளோட பெரியம்மா இருக்கிறாளே அப்பறம் என்ன என்ற ஸ்ரீஜா. அது மட்டும் இல்லை தேவ் நான் மொட்டை போட்டு இருக்கவும் அவள் என்கிட்ட ஒட்டவே மாட்டேங்கிறாள் என்றாள் ஸ்ரீஜா.

 

பொய் சொல்லாதடி அண்ணியோட மனசுக்கு இப்போதைக்கு ஆறுதலா நிலா இருப்பாள்னு தானே அங்கே குழந்தையை விடுற என்றவன் தாங்க்ஸ் ஸ்ரீஜா என்றான்.

 

எதற்கு தாங்க்‌ஸ் சொல்லுற அவள் என்னோட தங்கச்சி அவளோட கஸ்டத்தை என்னால தூக்கி சுமக்க முடியாது ஆனால் அந்த கஷ்டத்தை குறைக்கிற மருந்து என் கையில் இருக்கு அதை அவளுக்கு கொடுக்கிறதில் என்ன தப்பு என்றாள் ஸ்ரீஜா.

 

அண்ணியை நீ புரிஞ்சுகிட்டு இத்தனை தூரம் அவங்களுக்காக யோசிக்கிற பாரு நிஜமாவே எனக்கு ரொம்ப சந்தோசமா இருக்கு ஸ்ரீஜா என்றவனது மார்பில் சாய்ந்து கொண்டவள் உன்னோட சந்தோசம் எப்பவுமே நிலைத்து இருக்கும் தேவ் என்றாள் ஸ்ரீஜா.

 

என்ன இந்து ஏன் ஒரு மாதிரி இருக்க என்ற பிரகாஷிடம் இல்லை இன்னைக்கு நீ ப்ரீயா என்றாள் இந்திரஜா. எதற்கு பொண்டாட்டி என்றவனிடம் என்னை ஷாப்பிங் கூட்டிட்டு போ பிரகாஷ் என்றாள் இந்திரஜா.

 

எதற்குடி என்றவனிடம் என்ன மறந்துட்டியா நாளைக்கு தேவ் மாமா, ஸ்ரீஜா அக்காவுடைய அனிவர்சரி என்றிட அட ஆமாம் வீட்டு பிரச்சனையில் இதை எல்லாம் மறந்தே போயிட்டோம் என்றான் பிரகாஷ். சரி இந்து போகலாம் என்றவன் நீ சோகமா இருக்கிற காரணம் என்ன என்றான். நம்ம வீட்டோட நிலைமை தான் காரணம். முன்னே எல்லாம் ரோனி எப்பவும் எல்லோர்கிட்டையும் வாயடிச்சுட்டே இருப்பாள் இப்போ அவள் ரொம்ப மூடி ஆகிட்டாள்.

 

அதான் என்றவளிடம் சரி, சரி கவலைப் படாதே இந்து எல்லாம் சரியாகிரும் என்ற பிரகாஷ் மனைவியின் கன்னம் தட்டி விட்டு வேலைக்கு கிளம்பினான்.

 

என்ன ரோனி இன்னும் கிளம்பாமல் இருக்க என்ற உதய்யிடம் மாமா இன்னைக்கு காலேஜ் லீவு என்றவளிடம் அட ஆமாம் மறந்தே போயிட்டேன் என்றான். ஆனாலும் கிளம்பிட்டேன் நாம ஒரு இடத்திற்கு போகிறோம் என்றாள்.

 

எந்த இடத்திற்கு என்ற உதய்யிடம் நாளைக்கு தேவ் மாமாவோட திருமண நாள் அதற்காக கிப்ட் வாங்க வேண்டாமா என்றவளிடம் சரி ரோனி போகலாம் என்றான் உதய்.

 

என்ன மாமா அந்த நாள் நீங்க மறக்க நினைக்கிற நாளா என்ற வெரோனிகாவிடம் இல்லை ரோனி அப்படி எல்லாம் எதுவும் இல்லை என்ற உதய் என் வாழ்க்கையில் என் ரோனி இருக்கிறதால மறக்க நினைக்கிற நாள் என்று எதுவுமே இல்லை என்றான். அவனது மார்பில் சாய்ந்தவள் என்னை உங்களுக்கு அவ்வளவு பிடிக்குமா மாமா என்றவளிடம் உன்னை பிடிச்ச அளவுக்கு இந்த உலகத்தில் எனக்கு யாரையுமே பிடிச்சதில்லை ரோனி என்றான் உதய்.

 

ஆமாம் நிலாக்குட்டி எங்கே என்ற உதய்யிடம் வசுந்தரா பெரியம்மா அவளை ஷாப்பிங் கூட்டிட்டு போயிருக்காங்க என்ற வெரோனிகா மாமா அர்ச்சனா அண்ணிக்கும், பிரகாஷ் மாமாவுக்கும் அண்ணனா உங்களோட கல்யாணப் பரிசு என்ன.

 

என்னோட பிரச்சனையில் அவங்களும் ஹனிமூன் போகாமல் இருக்காங்க அதனால அவங்களுக்கு ஹனிமூன் போக நாம ஏன் ஏற்பாடு பண்ணக் கூடாது என்றாள் வெரோனிகா.

 

பண்ணலாமே அவங்களுக்கு மட்டும் இல்லை உன் அண்ணா சரவணாவுக்கும் சேர்த்து ஹனிமூன் போக ஏற்பாடு பண்ணலாம் என்ற உதய்யிடம் அண்ணாவுக்கு லீவு கிடைக்கனுமே என்றாள் வெரோனிகா. அதெல்லாம் போட வச்சுருவோம் நீ கனிமொழிக்கு போன் பண்ணு நாம அவங்க வீட்டுக்கு போயிட்டு வரலாம் என்றான் உதய்.

 

சரிங்க மாமா என்றவள் கனிமொழிக்கு போன் செய்து தாங்கள் வரும் செய்தியை கூறினாள்.

 

கனிமொழியும், சரவணனும் இப்போ சென்னைக்கு குடி பெயர்ந்து விட்டனர். சரவணன் பதவிக்கு வந்தவுடன் கிடைத்த முதல் கேஸே அவன் தங்கையை தாக்கிய திருடர்கள் பற்றிய கேஸ்தான். வெரோனிகாவை கத்தியால் குத்தியவனையும் பிடித்தவன் அடித்து நொறுக்கினான். அவர்கள் வழிப்பறி கும்பல்தான் என ஊர்ஜிதமான பொழுதிலும் சரவணனுக்கு அதில் முழு நம்பிக்கை வரவே இல்லை.

 

       அத்தியாயம் 111

 

என்ன ரோனி எப்படி இருக்க என்ற கனிமொழியிடம் பார்க்கிற தானே நல்லா ஜம்முனு இருக்கேன் என்றாள் வெரோனிகா. அண்ணாவுக்கு டீயா, காபியா என்ற கனிமொழியிடம் மாமா டீ, காபி ரெண்டுமே குடிப்பாங்க உனக்கு எது ஈஷியா வருதோ அதை செய் என்றவள் அப்பறம் அண்ணி நாள் எதுவும் தள்ளி போயிருக்கா என்றாள் வெரோனிகா.

 

இல்லைடி என்ற கனிமொழியின் கண்கள் லேசாக கலங்கிட என்ன கனி நீ உனக்கு கல்யாணம் முடிஞ்சு மூன்று மாதம் தான் ஆகிறது நான் ஒரு பைத்தியம் விளையாட்டுக்கு தான் கேட்டேன் மன்னிச்சுரு அண்ணி என்றாள் வெரோனிகா.

 

இதில் மன்னிப்பு கேட்க என்னடி இருக்கு லூசு எனக்கு அது இல்லை பிரச்சனை இப்போதைக்கு குழந்தை வேண்டாம்னு நினைக்கிறோம் என்றவளிடம் நீங்க என்ன பைத்தியமா என்றாள் வெரோனிகா. இல்லைடி நாத்தனாரே உனக்கே தெரியும் எங்க கல்யாணத்தை இரண்டு வீட்டிலும் இன்னும் ஏற்றுக்கொள்ளவில்லை. இப்போ பிள்ளை வேற பெத்துக்கிட்டால் என்னால அதை சரியா வளர்க்க முடியுமா சொல்லு என்ற கனிமொழியிட்ட் நீ நிஜமாவே பைத்தியம் தான் கனி. லூசு பிள்ளை பிறந்தால் தானே உங்களை மாமா, அத்தை, பெரியப்பா, பெரியம்மா எல்லோரும் ஏத்துக்குவாங்க அது புரியாமல் என்று திட்டியவள் உங்க இரண்டு பேரையும் இப்படியே விட முடியாது என்றவள் நான் மாமாகிட்ட சொல்லிட்டேன். உங்களுக்கு ஹனிமூன் டிக்கெட் போட சொல்லி அண்ணனை ஒரு வாரம் லீவை போட சொல்லி நீயும், அவரும் ஹனிமூன் கொண்டாட போறிங்க அவ்வளவு தான் என்றாள் வெரோனிகா.

 

என்னடி இது நீ என்னம்மோ பெரிய மனுசி போல ஆர்டர் போடுற என்ற கனிமொழியிடம் அண்ணியாரே நான் உங்களை விட சின்னப் பிள்ளை தான் ஆனாலும் உங்க நாத்தனாரு அதனால நான் சொல்லுறதை நீங்க செய்து தான் ஆகனும் என்றாள் வெரோனிகா.

 

என்னடி என் தங்கச்சி சொல்லுறதை செய்ய மாட்டேன்னு சொன்னியா என்ன ரோனி அவள் செய்ய மாட்டேன்னு சொன்னாள் என்று வந்த சரவணனிடம் யோவ் மச்சான் உன் தங்கச்சி சொன்னதை செய்ய நீ முதலில் சம்மதிக்கனும் பார்த்துக்கோ என்றாள் கனிமொழி.

 

அடி போடி என் தங்கச்சி என்ன சொன்னாலும் நானும், என் அண்ணனும. தட்டமாட்டோம் என்ற சரவணன் ரோனிமா அண்ணா என்ன செய்யனும் சொல்லுடா செய்கிறேன் என்றான். என் அண்ணன்னா அண்ணன் தான் என்றவள் ஒன்றும் இல்லை அண்ணா நீங்களும், அண்ணியும் ஹனிமூன் போயிட்டு வாங்க என்று வெரோனிகா கூறிட அதிர்ந்து போன சரவணன் பாவமாக மனைவியை பார்த்திட மவனே இதற்கு தான் யோசிச்சு வாக்கு கொடுன்னு சொன்னேன் என்றவாறு அவனைப் பார்த்து தலையை ஆட்டினாள் கனிமொழி.

 

அடப் பாவத்த ரோனி என்னம்மா இது அண்ணனுக்கு லீவு இல்லைடா என்றவனிடம் அதெல்லாம் எனக்கு தெரியாது ப்ரதர் நீங்களும் , அண்ணியும் நான் சொன்னதை செய்தே ஆகனும் என்று அவர்களை வற்புறுத்தியவள் மாமா நீங்க சொல்லுங்க என்று தன் கணவனையும் துணைக்கு சேர்த்துக் கொள்ள உதயச்சந்திரனும் தன் மைத்துணனிடம் பேசி அவர்களை ஹனிமூனுக்கு அனுப்பி வைக்க சம்மதிக்க வைத்தான்.

 

இதோ பாரு கனி நீ என்ன பண்ணுவியோ, ஏது பண்ணுவியோ எனக்கு தெரியாது இன்னும் பத்து மாதத்தில் எனக்கு மருமகனை பெத்துக் கொடு நானும் சீக்கிரமே அவனுக்கு ஒரு ஜோடியா பெண்ணை பெத்து கொடுத்துடுறேன் என்ற வெரோனிகா அடிவயிற்றில் சுளீரென ஒரு வலி வர துடித்துப் போனாள்.

 

என்னாச்சு ரோனி என்று பதறிய உதய்யிடம் மாமா அடி வயிறு வலிக்குது மாமா என்றவள் அழ ஆரம்பிக்க சரி வா ஹாஸ்பிடல் போகலாம் என்ற உதய் சரவணன் , கனி இருவரிடமும் சொல்லி விட்டு அவளை அழைத்துச் சென்றான்.

 

என்ன மச்சான் ஏன் ஒரு மாதிரி ஆகிட்ட என்ற கனியிடம் என் தங்கச்சி யாருக்கு என்னடி பாவம் பண்ணுச்சு. சித்தப்பா, சித்தி கூட யாருக்கும் எந்த துரோகமும் நினைச்சதில்லையேடி என்ற சரவணன் அது மனசுல எத்தனை ஆசை இருக்கு குழந்தை பெத்துக்கனும்னு ஆனால் அந்த பொல்லாத கடவுளுக்கு என்ன கோபமோ என் தங்கச்சியோட கருப்பையை சிதைச்சுட்டாரே என்று அழுதான்.

 

என்ன மச்சான் சொல்லுற என்ற கனிமொழியிடம் கத்திக் குத்து ரொம்ப ஆழமா பட்டிருக்கு கனி வெரோனிகாவை காப்பாற்றியதே பெரிசுன்னு அந்த டாக்டர் சொன்னாங்க. அதோட இனிமேல் என் தங்கச்சிக்கு ஒரு குழந்தையை சுமக்கிற யோகமே இல்லைன்னு வேற சொல்லிட்டாங்க என்றான் சரவணன்.

 

என்ன சொல்லுற மச்சான் இந்த விசயம் என்ற கனிமொழியிடம் மாப்பிள்ளைக்கும், அவங்க குடும்பத்தில் உள்ள எல்லோருக்குமே தெரியும். ஆனால் ரோனிக்கு தெரியாது. அதைக் கேட்டதும் ரோனியோட மாமியார் என்ன சொன்னாங்கனு தெரியுமா எனக்கு என் மருமகளே போதும் அவளால வரும் வாரிசை விட அவள் தான் முக்கியம்னு சொன்னாங்க தெரியுமா என் தங்கச்சிக்கு குழந்தையை பறிச்ச கடவுள் அவளுக்கு அவளை குழந்தையா பாத்துக்கிற நல்ல குடும்பத்தை கொடுத்திருக்கிறாரு என்றான்.

 

இப்போ எவ்வளவோ ட்ரீட்மென்ட் வந்திருச்சு மச்சான் நம்ம ரோனியோட பிரச்சனை தீர்ந்துரும் என்றிட தீர்ந்தால் சந்தோசம் கனி என்றான் சரவணன்.

 

என்னாச்சு டாக்டர் என்ற உதயச்சந்திரனிடம் நான் தான் சொன்னேனே மிஸ்டர்.உதய் உங்க மனைவிக்கு இந்த மாதிரி பிரச்சனைகள் அடிக்கடி வரத் தான் செய்யும்னு. அவங்க கர்பப்பை ரொம்ப வீக்கா இருக்கு அது மட்டும் இல்லாமல் இப்போ தான் அவளோட காயங்கள் கொஞ்சம், கொஞ்சமா ஆறிட்டு இருக்கு ஒன்னும் பயப்பட வேண்டியது இல்லை கொஞ்சம் பத்திரமா பார்த்துக்கோங்க என்றார் மருத்துவர்.

 

அவரிடம் விடைபெற்று மனைவியை அழைத்துச் சென்றவனிடம் எனக்கு என்ன பிரச்சனை மாமா அந்த டாக்டர் அப்படி என்ன ரகசியம் உங்க கிட்ட பேசினாங்க என்றாள் வெரோனிகா.

 

பிரச்சனையா உனக்கா உனக்கு பிரச்சனைன்னு யாரு சொன்னது ரோனி  அந்த டாக்டர் பக்கத்துல நின்ற நர்ஸ் என்னை குறு குறுனு பார்த்துச்சு நானும் பார்த்தேன் சிரிச்சுச்சு அதான் பேசி அப்படியே போன் நம்பர் வாங்கி கடலை போடலாம்னு டாக்டரை பார்க்க போற சாக்குல உள்ளே போனேன் என்றான் உதய்.

 

ஓஓஓ அப்படியா அப்போ சாருக்கு நாங்க பழசாகிட்டோம் அப்படித் தானே என்றவளிடம் ச்சீச்சீ நீ அட்டப் பழசு ரோனி என்று நக்கலடித்தவனது காதை திருகியவள் உங்களை என்று அவனது தலையில் கொட்டப் போக அவளது கையைப் பிடித்தவன் யாரும் பார்க்காத வண்ணம் அவளது கன்னத்தில் முத்தமிட்டு ஓடி விட அவள் தான் வெட்கத்தில் கன்னம் சிவந்தாள்.

 

தனியே வந்தவனது கண்கள் கலங்கியது. 

அன்று மருத்துவர் சொன்ன விசயங்கள் ஞாபகத்திற்கு வர அவனது மனம் வேதனையில் மூழ்கியது.

 

மிஸ்டர்.உதயச்சந்திரன் உங்க மனைவிக்கு இனிமேல் குழந்தை பிறக்க வாய்ப்பே இல்லை. அவங்களோட கர்ப்பப்பை ரொம்ப வீக்கா இருக்கு. கத்திக் குத்து வேற ரொம்ப ஆழம். இனி அவங்களோட கர்ப்ப்பைக்கு ஒரு குழந்தையை சுமக்கிற வாய்ப்பு இல்லை. அந்தப் பொண்ணை பத்திரமா பார்த்துக்கோங்க என்று மருத்துவர் அன்று சொன்ன வார்த்தைகள் ஞாபகத்திற்கு வர உதய்யின் மனம் இறுகியது.

 

அவனருகில் வெரோனிகா வரவும் கண்களைத் துடைத்து விட்டு  காரில் அமர்ந்தான். என்ன ரோனி உன்னால ஓடி வர முடியலையா என்றவனிடம் பேசாதிங்க மாமா என்றவள் முகத்தை திருப்பிக் கொண்டாள்.

 

என்னாச்சு ரோனி அப்படி என்ன என் மேல கோபம் என்றவனிடம் ஏன் உங்களுக்கு தெரியாதா சும்மா எப்போ பாரு கன்னத்தில் முத்தம் கொடுத்துட்டு ஓடிப் போறிங்க என்றவள் முகத்தை திருப்பிக் கொள்ள நான் என் பொண்டாட்டிக்கு தானே முத்தம் கொடுத்தேன். ஏன் ரோனி மாமா உனக்கு முத்தம் கொடுக்கிறது தப்பா என்றவனை முறைத்தாள் வெரோனிகா.

 

லூசு மாமா நீங்க எனக்கு முத்தம் கொடுக்கிறதை தப்புனு யார் சொன்னது ஆனால் நாம எங்கே இருக்கோம்னே மறந்துட்டு விளையாடுறிங்க பாருங்க அதை தான் சொல்கிறேன். ஹாஸ்பிடலில் வச்சு ரொம்ப தப்பு என்றவளை பார்த்து சிரித்தவன் என்ன ரோனி இது ஹாஸ்பிடலோ, வீடோ நீ என் பொண்டாட்டி உனக்கு முத்தம் கொடுக்க நான் யாரோட பர்மிசன் வாங்கனும். யாரும் பக்கத்தில் இல்லாத நேரம் தானே மாமா முத்தம் கொடுத்தேன் என்றவனை மீண்டும் முறைத்தவள் மாமா அங்கே சிசிடிவி கேமரா இருந்துச்சு. ஐயோ நம்ம முத்தக் காட்சியை எத்தனை பேரு பார்த்தாங்களோ என்று தலையில் அடித்துக் கொண்டாள் வெரோனிகா.

 

அவனோ சிரித்து விட்டு சரி ரோனி ஸாரி இனிமேல் மாமா ரொமான்ஸை வீட்டில் மட்டும் வச்சுக்கிறேன் என்று அவளைப் பார்த்து சிரித்தான். போங்க மாமா என்று அவளும் வெட்கத்துடன் அவனது தோளில் சாய்ந்தாள்.

 

என்ன விக்கி என்ன யோசனை என்ற பெண்ணவளிடம் ஒன்றும் இல்லை என்றான் விக்னேஷ். அவனது மார்பில் தலை வைத்தவளது தலைமுடியை கோதி விட்டவன் நம்ம கல்யாணம் நடக்குமா பாப்பு என்றான். ஏன் விக்கி அப்படி கேட்கிறிங்க எங்க வீட்டில் காதல் திருமணத்திற்கு எந்த தடையும் சொல்ல மாட்டாங்க என்றவனிடம் நான் ஜெயிலுக்கு போனவன் பாப்பு என்றான் விக்னேஷ்.

 

ஷட் அப் விக்கி அகைய்ன் அதையே சொல்லாதிங்க அது ஒரு விபத்து அவ்வளவு தான். நான் உங்களோட கடந்த காலத்தை பற்றி யோசிக்கவே இல்லை. என்னோட காதல் என் நிகழ்கால விக்னேஷ் பற்றி தான் என்ற பெண்ணவளது நெற்றியில் முத்தமிட்டான் விக்னேஷ். ஐ லவ் யூ பாப்பு என்றவனிடம் ஐ லவ் யூ டூ விக்கி என்றவள் அது என்ன நெற்றியில் மட்டும் முத்தம் என்றாள்.

 

பாப்பு இது பீச் அது மட்டும் இல்லாமல் நமக்கு இன்னமும் கல்யாணம் நடக்கவில்லை. சரியா என்றவனைப் பார்த்து சிரித்தவள் சரி விக்கி என்று அவனது கன்னத்தில் முத்தமிட்டு எழுந்து கடல் அலைகளில் கால் நனைக்க ஓடிச் சென்றாள்.

 

செல்லும் அவளையே கோபம் கொப்பளிக்கும் விழிகளுடன் பார்த்தவன் கடந்து சென்று விட்டான்.

 

என்ன மச்சி எப்போ வந்த என்ற விஷாலிடம் காலையில் தான்டா வந்தேன். ரோனி எப்படி இருக்கிறாள் என்றான் அர்ஜுன். ரோனிக்கு நடந்த விபத்து பற்றி கூறிய விஷால் பாவம்டா அவள் என்றிட சரி கிஷோர் எங்கே நாம போயி ரோனியை பார்த்துட்டு வரலாமா என்ற அர்ஜுனிடம் சரி அர்ஜுன் என்ற விஷால் கிளம்பிட ஏதோ ஒரு யோசணையுடனே அங்கு வந்து சேர்ந்தான் கிஷோர்.

 

     அத்தியாயம் 112

 

என்னடா யோசனை என்ற அர்ஜுனிடம் ஒன்றும் இல்லை அர்ஜுன் என்றான் கிஷோர். என்னடா ஒன்றும் இல்லை என்ற விஷாலை விட்டு விட்டு அர்ஜுன் புறம் திரும்பிய கிஷோர்  அர்ஜுன் நீ ஊர்மிளாவை லவ் பண்ணுறியா என்றான். ஏன் இந்த கேள்வி கிஷோர் என்ற அர்ஜுனிடம் ஊர்மிளா வேற ஒருத்தனை லவ் பண்ணுகிறாள் என்று கடற்கரையில் விக்னேஷுடன் பேசிக் கொண்டிருந்த ஊர்மிளாவைக் கண்ட விசயத்தை கூறினான் கிஷோர்.

 

அதைக் கேட்ட அர்ஜுன் புன்னகையுடன் சரிடா அதனால என்ன விடு நாம இப்போ ரோனியை பார்க்க போகிறோம் என்றான். ஏன்டா உனக்கு கோபமே வரவில்லையா என்ற கிஷோரைப் பார்த்தவன் இதில் கோபம் பட என்ன இருக்கு. அன்னைக்கு ஊர்மிக்கு நான் பெஸ்ட்னு தோன்றி இருக்கலாம். அவளை நான் ரிஜக்ட் பண்ணினேன். அதனால அவளோட மனசு மாறி இருக்கலாம். அதில் தப்பு எதுவும் இல்லையே விடு கிஷோர் இதெல்லாம் ஒரு விசயமா என்ன என்றான் அர்ஜுன்.

 

உன்னை என்னால புரிஞ்சுக்க முடியலை அர்ஜுன். நீ ஊர்மிளாவை விரும்ப ஆரம்பிச்சுட்டனு எங்க இரண்டு பேருக்குமே தெரியும் அர்ஜுன் என்ற விஷாலிடம் மச்சி நாம விரும்புன பொண்ணு நம்மை விட்டு போனால் தாடி வளர்க்க நான் தேவதாசும் கிடையாது, அவளையே அழிக்கிற அளவுக்கு மோசமானவனும் கிடையாது. என்னோட அம்மா எனக்காக வாழ்கிறாங்க. அவங்களுக்காக நான் வாழனும். என் அம்மா பட்ட கஷ்டம் எல்லாத்திற்கும் பலனா நான் நல்லா படிச்சு முன்னேறனும் அதனால ஊர்மிளா வேற ஒருத்தனை விரும்புவதை நான் பெரிய விசயமா எடுத்துக்கவில்லை என்றான் அர்ஜுன்.

 

என்ன சொல்லுற ரோனி என்ற உதய்யிடம் மாமா நான் அன்னைக்கு சொன்னனே ஊர்மிளாவோட போக்கு சரியில்லைன்னு எனக்கு ரொம்ப பயமா இருக்கு மாமா. அந்த விக்னேஷை நம்ம ஊர்மி லவ் பண்ணுறாளோன்னு என்றாள் வெரோனிகா.

 

என்ன சொல்லுற ரோனி நீ அவள் அர்ஜுனை லவ் பண்ணுறேன்னு சொன்னாள் இப்போ விக்னேஷ் எனக்கு புரியலை என்ற உதய்யிடம் எனக்கும் ஒன்றும் புரியலை மாமா என்றாள் வெரோனிகா.

 

இது பற்றி ஊர்மிளாகிட்ட பேசணும் என்றான் உதய்.  நீங்க பேச வேண்டாம் மாமா நானே பேசுகிறேன் என்றாள் வெரோனிகா. அவள் உன்னை ஹர்ட் பண்ணுற மாதிரி எதுனாலும் பேசிருவாள் ரோனி என்ற உதய்யிடம் பரவாயில்லை மாமா நான் பார்த்துக்கிறேன் என்றாள் வெரோனிகா.

 

என்ன யோசனை ரியா என்ற சாந்தமூர்த்தியிடம் நத்திங் டாடி என்றவள் கோபமாக தன்னறைக்கு சென்றாள். அங்கு இருந்த கண்ணாடியில் தன் உருவத்தை பார்த்து காரி உமிழ்ந்தாள். என்னடி உனக்கு வெட்கமா இல்லை உன்னை தூக்கிப் போட்டவனோட வாழ்க்கையை கருவறுக்கனும்னு நினைச்சு நீ என்ன எல்லாம் பண்ணின ஆனால் அத்தனையும் பாலாய் போச்சு. அவனோட சந்தோசம் கொஞ்சமும் குறையவே இல்லை என்றவள் அந்த ஆளுயர நிலைக் கண்ணாடியின் மீது அங்கு இருந்த இரும்பு சிலையை தூக்கி எறிய கண்ணாடி சுக்கு சுக்காக உடைந்து நொறுங்கியது.

 

ரியா நீ என்ன பைத்தியமா என்ற தோழி வாசவியை பார்த்தவள் ஆமாம் பைத்தியம் தான் அவன் மேல பைத்தியம் தான் அதனால தான் அவனோட கருவை சுமந்த அவளை கொலை பண்ண நினைச்சு வழிப்பறி பண்ணுற திருடர்களை ஏற்பாடு பண்ணினேன். ஆனால் அவளை அவனுங்க கொல்லாமல் விட்டுட்டானுங்களே என்று கத்திய ரியாவிடம் அவள் உயிர் மட்டும் தான் பிழைத்திருக்கிறாள் ரியா என்றாள் தோழி வாசவி.

 

என்ன சொல்லுற வாசவி என்ற ரியாவிடம் அவளால இனி இந்த ஜென்மத்தில் ஒரு குழந்தையை சுமந்து பெத்துக்கவே முடியாது என்றாள் வாசவி.

அவளோட மெடிக்கல் ரிப்போர்ட் என்று ஒரு மெடிக்கல் ரிப்போர்ட்டை ரியாவிடம் நீட்டினாள் வாசவி.

 

அதைப் பிரித்து பார்த்தவள் சந்தோசமாக தன் தோழியை அணைத்தாள். தாங்க்ஸ் வாசவி அந்த சந்திரன் இனி செத்த பாம்பு. என்னை தூக்கி எறிஞ்சுட்டு போன அவனோட சந்தோசம் பொசுங்கி போயிருச்சு. இவள் இனி உயிரோட இருந்தாலும் செத்த பிணம் தான். அது ஒரு கூட்டுக்குடும்பம் அவங்களுக்கு இந்த உண்மை தெரிய வாய்ப்பிருக்காது அதனால அந்த வீட்டிற்குள் அணுகுண்டா இந்த மெடிக்கல் ரிப்போர்ட்டை வெடிக்க வைக்கிறோம். அந்த வெரோனிகாவை க்ளியர் பண்ணிட்டு அந்த சந்திரனை அப்பறம் கவனிச்சிக்கிறேன். என்னை தூக்கி எறிஞ்சவனோட வாழ்க்கை அவனுக்கு நான் பிச்சை போட்டதா மாறனும் என்று சுவற்றில் ஓங்கி குத்தினாள் ரியா.

 

அர்ஜுன், விஷால், கிஷோர் வாங்க வாங்க இப்போ தான் என் வீட்டுக்கு வழி தெரிஞ்சதா உங்களுக்கு என்றாள் வெரோனிகா. இல்லை ரோனி என்று இழுத்த விஷாலிடம் நீயும் , இவனும் என் கிட்ட பேசாதிங்கடா. அவன் தான் டெல்லில படிக்கிறான். நீங்க லோக்கல் தானடா ஏன் என்னை பார்க்க வரவில்லை கேட்டால் இவனுங்க தான் என்னோட பெஸ்ட் ப்ரண்ட்டாம் என்ற வெரோனிகாவிடம் கோச்சுக்காதே ரோனி சத்தியமா பிஸி என்றனர் விஷால், கிஷோர் இருவரும்.

 

ஏய் ஊர்மி பாரேன் யாரு வந்திருக்காங்கனு என்ற வெரோனிகாவிடம் யாரு ரோனி என்று வந்த ஊர்மிளா அர்ஜுனை பார்த்ததும் மௌனமாகினாள்.

 

என்ன ஊர்மி எங்களை இங்கே எதிர்பார்க்கவில்லையா நீ என்றான் கிஷோர். இல்லை என்று அவள் ஏதோ சொல்ல வர என்னப்பா இப்போ தான் வந்திங்களா ஜூஸ் எடுத்துக்கோங்க என்று வந்தார் சுசீலா.

 

தாங்க்ஸ் ஆண்ட்டி என்று அவரிடம் ஜூஸை வாங்கி குடித்தவர்கள் ரோனி உனக்கு எப்படி இருக்கு என்று வெரோனிகாவிடம் நலம் விசாரித்தனர். ஊர்மிளா ஒதுங்கிச் சென்று விட வெரோனிகா தன் நண்பர்கள் மூவருடனும் வாயடித்துக் கொண்டிருந்தாள்.

 

எங்கே உதய் சார் என்ற விஷாலிடம் அதோ வராரு பாரு என்ற கிஷோர் வெரோனிகாவின் பக்கம் திரும்பி ஏன் ரோனி சார் மொட்டை போட்டிருக்கிறாரு என்றான்.

 

அவனைப் பார்த்து சிரித்தவள் அவரு சந்துரு மாமா இல்லை தேவ் மாமா என்றாள் வெரோனிகா. ஓஓ ஆமாம்ல இவங்க ட்வின்ஸ் ஆச்சே அதை நான் சுத்தமா மறந்துட்டேன் என்றான் கிஷோர்.

 

சரி ரீசன்டா பிரகாஷ் சாரோட கல்யாணம் நடந்துச்சுல அவருக்கு கிப்ட் கொடுக்கனுமே என்ற அர்ஜுனிடம் அச்சோ அர்ஜுன் பிரகாஷ் மாமா ஹனிமூன் போயிருக்காங்க என்றவள் இதோ கல்யாண ஆல்பம் இதை பாருங்க என்றாள்.

 

அந்த ஆல்பத்தில் விக்னேஷின் போட்டோவை பார்த்த கிஷோர் இது யாரு ரோனி என்றிட இது விவேக் அண்ணாவோட கசின் கிஷோர் என்றாள் வெரோனிகா.  அர்ஜுனிடம் இவனோட தான் ஊர்மிளாவைப் பார்த்தேன் என்றான் கிஷோர்.

 

என்னடா ரகசியம் பேசுறிங்க என்ற வெரோனிகாவிடம் ஒன்றும் இல்லை ரோனி என்ற அர்ஜுன் விஷாலுடன் எழுந்து செல்ல, ஸாரி ரோனி என்னால உன் கிட்ட மறைக்க முடியவில்லை என்ற கிஷோர் கடற்கரையில் பார்த்த விசயங்களை கூறினான்.

 

அர்ஜுன் பாவம் ரோனி அவள் கிட்ட காதலை சொல்ல வந்தான் ஆனால் என்ற கிஷோர் சரி விடு என்றிட எனக்கும் தெரியும் கிஷோர் அவள் கிட்ட இதைப் பற்றி எப்படி பேசுறதுன்னு தான் யோசிச்சுட்டு இருக்கேன் என்றாள் வெரோனிகா.

 

அந்த விக்னேஷ் நல்லவன் கிடையாது கிஷோர் அவன் ரொம்ப தப்பானவன் அவனைப் போயி எப்படி இவள் லவ் என்ற வெரோனிகா சரி கிஷோர் ரொம்ப தாங்க்ஸ் இந்த விசயத்தை நான் பார்த்துக்கிறேன் என்றாள் வெரோனிகா.

 

ஊர்மிளா என்று வந்த வெரோனிகாவிடம் என்ன ரோனி என்றாள் ஊர்மிளா. உன்கிட்ட கொஞ்சம் பேசனும் என்ற வெரோனிகாவிடம்  சொல்லு ரோனி என்றாள் ஊர்மிளா.

 

உனக்கும் , அந்த இங்கிலிஷ் ப்ரபசர் விக்னேஷ்க்கும் என்ன சம்மந்தம் என்றாள் வெரோனிகா. நானே உன் கிட்ட சொல்லனும்னு இருந்தேன் ரோனி விக்கி ரொம்ப நல்ல மாதிரி அவரை எனக்கு ரொம்ப பிடிச்சுருக்கு என்றாள் ஊர்மிளா.

 

விக்கி ரொம்ப நல்ல மாதிரியா யாருடி உனக்கு சொன்னாங்க என்றாள் வெரோனிகா கோபமாக. யாரு சொல்லனும் ரோனி அவர் கூட இரண்டு மாதமா பழகுகிறேன் எனக்கு தெரியாதா என்ன என்றாள் ஊர்மிளா.

 

உனக்கு தெரியாது ஊர்மி அவன் என்று சொல்ல வந்த வெரோனிகாவை தடுத்தவள் என்ன ரோனி உன்னை தள்ளி விட்டு ஜெயிலுக்கு போன கதையை சொல்ல போறியா அது எனக்கு தெரியும். என்னோட விக்கி அதை என் கிட்ட மறைக்காமல் சொல்லிட்டாரு என்றாள் ஊர்மிளா.

 

இதோ பாரு ரோனி எங்க இரண்டு பேருக்குள்ள எந்த ஒழிவு , மறைவும் இல்லை. அர்ஜுனை நான் விரும்பின விசயம் கூட விக்கிக்கு தெரியும். எவ்வளவு ஜெம் தெரியுமா அவரு நீங்கள் தான் அவரை தப்பா புரிஞ்சுகிட்டு ஜெயிலில் சரி அதை விடு எனக்கு அவரை ரொம்ப பிடிச்சுருக்கு ஐ லவ் விக்கி என்றாள் ஊர்மிளா.

 

ஊர்மி அவன் நல்லவன் இல்லை. உன் கிட்ட நல்லவன் வேசம் போடுகிறான். அர்ஜுன் மாதிரி ஒருத்தனை விட்டுட்டு இந்த விக்கி பின்னாடி போனால் உன் வாழ்க்கை நரகமாகிரும் ஊர்மி என்ற வெரோனிகாவிடம் ஷட் அப் ரோனி.

 

நீ என்ன பைத்தியமா அர்ஜுன் தான் என்னை லவ்வரா பார்க்க முடியாதுன்னு சொல்லிட்டானே அப்பறம் என்ன. அவனுக்கு என் மேல இன்ட்ரஸ்ட் இல்லைங்கிறது அவன் ஓபனாகவே சொன்ன பிறகும் அவனையே நினைச்சுட்டு பைத்தியக்காரியாட்டம் சுத்த என் மனசு ஒப்பவில்லை.

 

எனக்கு விக்கியை தான் பிடிச்சுருக்கு. ஐ லவ் ஹிம் என்ற ஊர்மிளாவிடம் அவன் ஒரு பொறுக்கிடி. உன்னை சீரழிச்சு ஏமாத்திருவான் ஊர்மி என்று வெரோனிகா கூறிட அவளது கன்னத்தில் பளாரென அறைந்தாள் ஊர்மிளா.

 

என்ன ரோனி இது உனக்கு அவ்வளவு திமிரா எவ்வளவு தைரியம் இருந்தால் என் விக்கியை பொறுக்கினு சொல்லுவ இன்னொரு முறை அவரை பற்றி தப்பா பேசின நான் மனுஷியாவே இருக்க மாட்டேன் என்ற ஊர்மிளா கோபமாக சென்று விட்டாள்.

 

வெரோனிகாவின் கண்கள் கண்ணீரை சிந்திட அவளது தோளில் ஒரு கை விழ திரும்பியவள் கண்களை துடைக்க போக அவளது கண்ணீரைத் துடைத்து விட்டாள் ஸ்ரீஜா.

 

என்ன நடக்குது ரோனி அவள் ஏன் உன்னை அடிச்சுட்டு போகிறாள் யாரு விக்கி என்ற ஸ்ரீஜாவிடம் ஊர்மிளாவிடம் பேசியவற்றை கூறினாள் வெரோனிகா. அவனையா லவ் பண்ணுறாள் என்ற ஸ்ரீஜாவிடம் ஆமாம் என்று தலையாட்டினாள் வெரோனிகா.

 

உதய் மாமாகிட்ட சொன்னியா என்ற ஸ்ரீஜாவிடம் இல்லை சொல்ல வேண்டாம் அவருக்கு ஊர்மிளா என்னை அடிச்ச விசயம் தெரிந்தால் கோபம் பட்டு அவளை எதுவும் சொல்லிருவாரு என்றவள் கிளம்ப எத்தனிக்க அப்போ ஊர்மிளா விசயத்தை என்ன பண்ண யோசனை என்றாள் ஸ்ரீஜா.

 

     அத்தியாயம் 113

 

எனக்கு ஒன்றும் புரியலக்கா இவள் விசயத்தை வீட்டில் சொல்லிடுவோமா என்ற வெரோனிகாவிடம் நல்ல முடிவு என்றாள் ஸ்ரீஜா. ஆனால் வீம்புக்கு அவள் எதுவும் தப்பான முடிவு எடுத்துட்டால் என்ற வெரோனிகாவிடம் என்ன ஓடிப் போயி அவனை கல்யாணம் பண்ணிக்க முயற்சி பண்ணுவாளா அப்படி பண்ணினால் அந்த விக்னேஷ் திரும்ப கம்பி தான் எண்ணுவான். ஊர்மிளாவுக்கு பதினெட்டு வயசு ஆக இரண்டு மாதம் இருக்கு அதனால தைரியமா அவளோட விசயத்தை நாம வீட்டில் சொல்லலாம் என்றாள் ஸ்ரீஜா.

 

சரிக்கா என்றவள் சந்துரு மாமாகிட்ட அவள் என்னை அடிச்சதை சொல்ல வேண்டாம் என்றிட அது எப்படி சொல்லாமல் இருக்க முடியும் ரோனி. நீ இந்த வீட்டோட மருமகள் நான் உன்னை அடிச்சதே பெரிய தப்புனு இப்போ வரை பீல் பண்ணிட்டு இருக்கிறேன். அவள் உன்னை விட ஆறு மாதம் இளையவள் அது மட்டும் இல்லை நீ அவளோட அண்ணி. இந்த வீட்டோட மூத்த மருமகள் உன்னை கை நீட்ட அவள் யாரு. வாழவந்த இடத்தில் யாரு வேண்டுமானாலும் நம்ம மேல கை வைக்கலாமா உதய் மாமாகிட்ட மட்டும் இல்லை சுசீலா அத்தைகிட்டையும் சொல்லுவேன் என்ற ஸ்ரீஜா கோபமாக படிக்கட்டில் இறங்கி கீழே வந்தாள்.

 

அக்கா வேண்டாம் என்ற வெரோனிகாவை சட்டை செய்யாமல் கீழே வந்தவள் ஊர்மிளா என்று கத்திட என்ன அண்ணி என்று வந்தாள் ஊர்மிளா. அவளது கன்னத்தில் பளாரென அறைந்தாள் ஸ்ரீஜா.

 

அண்ணி என்று கன்னத்தை பிடித்தவளை முறைத்தபடி ஸ்ரீஜா நின்றிருக்க ஏய் ஏன்டி என் பொண்ணை அடிச்ச என்று வந்தார் மலர்கொடி. உங்க பொண்ணை அடிச்சதும் கோபம் வருதா இவள் என்ன பண்ணினால் தெரியுமா என்றாள் ஸ்ரீஜா கோபம் சற்றும் குறையாதவளாய்.

 

என்ன பண்ணினேன் அண்ணி ,எதற்கு என்னை அடிக்கிறிங்க. என்னை அடிக்க நீங்கள் யாரு முதலில் என்ற ஊர்மிளாவை முறைத்தவள் அதையே தான்டி நானும் கேட்கிறேன் வெரோனிகாவை அடிக்க நீ யாரு என்றாள் ஸ்ரீஜா.

 

என்ன சொல்லுற ஸ்ரீஜா ரோனியை இவள் அடிச்சாளா என்ற சுசீலாவிடம் ஆமாம் அத்தை என்ற ஸ்ரீஜா உங்க மகள் என்று சொல்ல வர அண்ணி நான் ரோனியை என்று இழுத்தாள் ஊர்மிளா.

 

அவளது கன்னத்தில் பளார், பளாரென அறைந்த சுசீலா என்னடி நினைச்சுட்டு இருக்க ரோனி என்ன கிள்ளுக்கீரையா ஆளாளுக்கு அவளை அடிக்க அவள் உன்னோட அண்ணி. அதோட உன்னை விட ஆறு மாதம் மூத்தவள் . எவ்வளவு தைரியம் இருந்தால் நீ அவளை அடிப்ப என்ற சுசீலாவிடம் அம்மா அவள் என்ன பண்ணினாள்னு கேட்டுட்டு என்னை அடிங்க என்ற ஊர்மிளாவிடம் அவள் என்ன வேண்டுமானாலும் பண்ணி இருக்கட்டும். அவள் உன் அண்ணி, உன் அண்ணனோட மனைவி என்ற சுசீலாவிடம் பிரகாஷ் அண்ணனோட மனைவி இந்திரஜா அண்ணி தானே. இவளா அவருக்கு பொண்டாட்டி என்று ஊர்மிளா கூறிட ஊர்மி வாயை மூடு என்றாள் வெரோனிகா.

 

என்னடி சொன்ன நாயே என்று அவளை மீண்டும் அறைந்த சுசீலாவிடம் என்னம்மா தப்பா சொல்லிட்டேன். இவள் யாரு என்னை கேள்வி கேட்க , என்னோட பர்சனல் விசயங்களில் அவள் ஏன் மூக்கை நுழைக்கிறாள். அதனால தான் அடிச்சேன். இனி என்னோட பர்சனல் விசயத்தில் இவள் தலையிட்டால் அப்பறம் நான் எதால அடிப்பேன்னு எனக்கே தெரியாது என்று ஊர்மிளா கூறிட ஊர்மி என்ற மலர்கொடி அவளது கன்னத்தில் அடிக்க வர அவரது கையை பிடித்தாள் ஊர்மிளா.

 

என்னை அடிக்க நீங்க யாரு முதலில் உங்க மருமகள் அடிக்கிறாங்க, இப்போ நீங்க என்ன நினைச்சுட்டு இருக்கிங்க. என் அம்மா, அப்பா, அண்ணன் தவிர வேற யாருக்கும் என் மேல கை வைக்கிற உரிமை இல்லை என்ற ஊர்மிளாவின் கன்னத்தில் பளார்,பளாரென அறைந்த சுசீலா என்னடி சொன்ன நாயே அவங்க யாருன்னா. அவங்க என் அக்காடி என்றவரிடம் உங்க அக்கான்னா உங்களோட நிப்பாட்டிக்க சொல்லுங்க என் கிட்ட வர வேண்டாம்.

 

உனக்கு சந்தோசம் தானே ரோனி என் வாழ்க்கையில் எப்போ எல்லாம் நான் சந்தோசமா இருக்கேனோ அப்போ எல்லாம் நீ அந்த சந்தோசத்தை எப்படியாவது கெடுத்து விட்டுருவ இல்லை என்றாள் ஊர்மிளா.

 

வாயை மூடு ஊர்மிளா என்ன பேசிட்டு இருக்க நீ. அவள் உன்னோட அண்ணி என்ற ஸ்ரீஜாவிடம் அதற்கான பதில் என்று அவள் கூற வர ஓஓ அப்போ உங்க பிரகாஷ் அண்ணன் மட்டும் தான் உங்க அண்ணன் அப்படித் தானே உனக்கு எல்லாம் நன்றினா என்னனே தெரியாதாடி.

 

வந்தியே அரை பைத்தியமா கான்பூர்ல இருந்து பேய் வருது, பிசாசு வருதுன்னு அப்போ எல்லாம் உன்னை ராத்திரி, பகலா  பக்கத்திலே இருந்து பார்த்துக்கிட்டது உன் பிரகாஷ் அண்ணனும், இந்திரஜா அண்ணியுமாடி இதோ நிற்கிறாளே இந்த பைத்தியக்காரி வெரோனிகா அவளும், அவள் புருசனும் தான். அதெல்லாம் மறந்துருச்சு. நீ லவ் பண்ணுறவன் ஒரு பொறுக்கின்னு உண்மையை அவள் சொன்னாள்னு அண்ணிங்கிற மரியாதை கொஞ்சமும் இல்லாமல் அவளை கை நீட்டி அடிப்ப என்று பற்களைக் கடித்த ஸ்ரீஜாவிற்கு மயக்கம் வருவது போல் இருக்க அக்கா ப்ளீஸ் நீங்க அமைதியா இருங்க ஏன் டென்சன் ஆகி உங்க உடம்பை கெடுத்துக்கிறிங்க என்றாள் வெரோனிகா.

 

எனக்கு ஒன்றும் இல்லை வெரோனிகா என்ற ஸ்ரீஜா ஏதோ சொல்ல வர என்ன சொல்லுற ஸ்ரீஜா இவள் லவ் பண்ணுறாளா என்றார் கல்யாணிதேவி. ஆமாம் அம்மாச்சி இவள் லவ் தான் பண்ணுகிறாள் அதுவும் யாரை தெரியுமா நம்ம அர்ச்சனாவோட வாழ்க்கையை கெடுக்க நினைச்சு ,அது முடியாமல் போனதும் வெரோனிகாவை தள்ளி விட்டு கொலை பண்ண பார்த்தானே அந்த அயோக்கியன் விக்னேஷ். அவனைத் தான் உங்க பேத்தி காதலிக்கிறாள் என்றாள் ஸ்ரீஜா.

 

என்னடி இதெல்லாம் அவனை எங்கேடி பார்த்து பழகின நீ என்ற சுசீலாவிடம் அவர் என் இங்கிலிஷ் லெக்சரர் என்றாள் ஊர்மிளா. என்னடி இவ்வளவு அலட்சியமா பதில் சொல்லுற அவன் என்று ஏதோ சொல்ல வந்த சுசீலாவை இடை மறைத்தவள் அம்மா சும்மா ரோனியை தள்ளி விட்டான். அர்ச்சனா வாழ்க்கையை கெடுக்க பார்த்தான்னு முடிஞ்சு போன கதையை மட்டுமே பேசாதிங்க விக்கி ரொம்ப நல்லவரு அவருக்கு ஏதோ கெட்ட நேரம் சில தப்புகளை பண்ணி இருக்காரு இப்போ திருந்திட்டாரு என்றிட அவளது கன்னத்தில் பளாரென அறைந்தார் இளமாறன்.

 

என்ன நினைச்சுட்டு இருக்க உன் மனசுல நானும் வந்ததில் இருந்து கவனிச்சுட்டு இருக்கிறேன். முதலில் வெரோனிகாவை அடிச்சுருக்க அதுவே பெரிய தப்பு. அப்பறம் உன் பெரியம்மா கையை பிடிக்கிற நீ என்ன அவ்வளவு பெரிய ஆளா. அவங்க யாரு உன் அம்மாவோட அக்கா, என்னோட அண்ணி என் அம்மா மாதிரி , என்ன சொன்ன பிரகாஷ் மட்டும் தான் உன் அண்ணனா நீ சொன்ன வார்த்தையை மட்டும் பிரகாஷ் கேட்டிருந்தால் உன்னை அடிச்சே கொன்னுருப்பான்.

 

என்ன காதல் இந்த வயசுல உனக்கு உன் அம்மாவை மட்டும் இல்லை வீட்டில் உள்ள எல்லோரையும் அசிங்கப் படுத்திட்டு இருக்க இப்படி ஒரு மகள் எனக்கு இருக்கிறாள் என்பதே பெரிய சாபம் உன்னை எல்லாம் அடிக்க கூடாது. என் கையாலையே கொன்னு போடனும் என்ற இளமாறன் அவளது கழுத்தை நெறிக்க மாமா என்ன பண்ணுறிங்க அவளை விடுங்க என்று வெரோனிகா, ஸ்ரீஜா இருவரும் தடுத்திட இல்லைம்மா இவள் பேசின பேச்சுக்கு அவளை கொல்லனும் என்றார் இளமாறன்.

 

மாமா விடுங்க ப்ளீஸ் என்று ஸ்ரீஜா, வெரோனிகா இருவரும் அவரைப் பிடித்து இழுத்திட ஊர்மிளா கழுத்தைப் பிடித்துக் கொண்டு இரும ஆரம்பித்தாள். 

 

என்னப்பா இதெல்லாம் இப்படி எல்லாம் நம்ம வீட்டில் நடக்கனுமா என்று புலம்பிய கல்யாணிதேவியிடம் இவளை மாதிரி ஒரு மருமகளை வீட்டிற்கு அழைச்சுட்டு வந்திங்கனா இப்படித் தான் நடக்கும் அப்பத்தா என்ற ஊர்மிளா இவளோட எண்ணம் போல தான் கடவுளும் இவளுக்கு தண்டனை கொடுத்திருக்கிறார் என்ற ஊர்மிளா ஏதோ சொல்ல வர அவளது கன்னத்தில் ஓங்கி அறைந்த சுசீலா என்னடி பேசிட்டு இருக்க இன்னொரு முறை அவளைப் பற்றி எதுனாலும் பேசின உன்னை கொன்னுருவேன் என்று மகளை அடித்தார்.

 

அத்தை என்ன சொல்கிறாள் அவள் என்ற வெரோனிகாவிடம் ஒன்றும் இல்லை ரோனி என்ற ஸ்ரீஜா அவளை இழுக்க அக்கா விடுங்க என்றவள் சொல்லு ஊர்மி கடவுள் எனக்கு என்ன தண்டனை கொடுத்திருக்கிறாரு சொல்லு என்றாள் வெரோனிகா.

 

என்ன தண்டனையா உன் வயிற்றில் இனிமேல் குழந்தையே பிறக்காது, உன் குழந்தை மட்டும் சிதையலை ரோனி உன் கர்ப்பப்பையும் தான் என்று சொல்ல வர அவளை அடி அடியென அடித்து வெளுத்தார் சுசீலா. எவளோ ஒருத்திக்காக என்னை அடிங்க அடிச்சி கொல்லுங்க இதற்கு தானே இவள் ஆசைப் பட்டாள். அவளோட ஆசை நிறைவேறிருச்சு என்ற ஊர்மிளா கத்திட சுசீ அவளை விடு அடிக்காதே என்ற மலர்கொடி வெரோனிகாவை தாங்கிட அத்தை அவள் என்ன சொல்லுறாள். இனி என்னால் குழந்தை என்றவளிடம் அவள் பொய் சொல்கிறாள் ரோனி என்றார் மலர்கொடி.

 

அத்தை உண்மையை சொல்லுங்க அத்தை என்று அவள் அழுதிட என் ரோனிக்கு எந்த குறையும் இல்லைடி அவள் பொய் சொல்கிறாள். நீ அழக் கூடாது ரோனி என்று அவளை அணைத்துக் கொண்ட மலர்கொடி ஸ்ரீஜா அவளை கூட்டிட்டு போ என்றார்.

 

அத்தை என்றவளிடம் சொல்றதை செய்டி என்ற மலர்கொடி வெரோனிகாவை ஸ்ரீஜாவுடன் அனுப்பி வைத்தார்.

 

என்ன ஊர்மிளா உன் பிரச்சனை உன்னோட விசயத்தில் வெரோனிகா தலையிடக் கூடாது அவ்வளவு தானே இனிமேல் தலையிட மாட்டாள். ஏன் இனிமேல் நீ இருக்கிற திசைப் பக்கம் கூட அவள் திரும்ப மாட்டாள் போதுமா.

 

அப்பறம் நான் உனக்கு யாரோ தானே என் மருமகளை தப்பா பேச உனக்கு எந்த உரிமையும் இல்லை. இன்னொரு முறை என் ரோனியை பற்றி நீ பேசின அப்படினா உன் அம்மா, அப்பாவுக்காக கூட பார்க்க மாட்டேன் உன்னை கொன்னு புதைச்சுருவேன் என்றார் மலர்கொடி.

 

ஊர்மிளா கோபமாக தன்னறைக்கு சென்று அடைந்து கொண்டாள்.

 

அக்கா அவள் சொன்னது என்ற வெரோனிகாவிடம் வெரோனிகா நீ என்ன பைத்தியமா அவள் உன்னை எப்படியாவது நோகடிக்கனும்னு தான் அப்படி சொன்னாள். அவளோட பேச்சுக்கு ஏன் நீ இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிற என்று அவளை சமாதானம் செய்தாள் ஸ்ரீஜா.

 

             அத்தியாயம் 114

 

ஸ்ரீஜா எவ்வளவு முயன்றும் சமாதானம் ஆகாமல் அழுது கொண்டிருந்தாள் வெரோனிகா. ஸ்ரீஜா நீங்க போங்க நான் பார்த்துக் கொள்கிறேன் என்று வந்த உதயச்சந்திரன் ஸ்ரீஜாவை அனுப்பி விட்டு மனைவியின் அருகில் வந்தான்.

 

ரோனி என்றவனது சட்டையைப் பிடித்தவள் மாமா ஊர்மிளா சொன்னது உண்மையா என்றிட என்ன சொன்னாள் ஊர்மிளா. மாமா என்னோட கர்ப்பப்பை என்றவளால் அடுத்த வார்த்தை சொல்ல முடியாமல் அழுது தவித்திட ஊர்மிளா என்ன டாக்டரா என்றான் உதய்.

 

மாமா என்றவளிடம் ரோனி நீ தானே சொல்லிருக்க குழந்தை கடவுள் கொடுக்கிற வரம்னு அப்பறம் என்ன. இல்லை நான் தெரியாமல் தான் கேட்கிறேன் இப்போ உன் வயசு என்னடி என்றிட பதினெட்டு மாமா என்றாள் வெரோனிகா. பதினெட்டு வயசுல தான் எல்லோரும் குழந்தை பெத்துக்கிறாங்களா. உனக்கு வயசு இருக்கு ரோனி இப்போ தான் உனக்கு கத்திக்குத்து விழுந்து குணமாகிருக்க அதனால கொஞ்சம் நாள் ஆகும் குழந்தை ஜனிக்க. அதற்குள்ளே நீயா ஊர்மிளா சொன்னதை அரை குறையா புரிஞ்சுகிட்டு இப்படி தேம்பி, தேம்பி அழுதாள் என்ன அர்த்தம்.

 

ரோனி நீயே குழந்தை தான் உனக்கு அதற்குள்ள குழந்தை வேண்டுமா சொல்லு கொஞ்ச நாள் போகட்டுமே இப்போ என்ன கெட்டுப் போச்சு என்றவன் இப்படி எப்போ பாரு அழுதுக்கிட்டே இருக்கிற வெரோனிகாவை உன்னோட சந்துரு மாமாவுக்கு சுத்தமா பிடிக்காது. எப்பவுமே அழகா குழந்தை மாதிரி ரோனி சிரிக்கனும்.

 

இல்லை இப்பவே ஒரு குழந்தை உன்னை அம்மான்னு கூப்பிடனும்னா சொல்லு நம்ம உதயநிலாகிட்ட சொல்லி உன்னையையும் அம்மான்னு சொல்ல சொல்லுவோம் என்ன சொல்லுற என்றான் உதய். இல்லை மாமா நிலா என்னை பெரியம்மானே கூப்பிடட்டும் என்றவளிடம் நீ இப்படி அழுதுக்கிட்டே இருந்தால் நான் எப்படி ரோனி நிம்மதியா இருப்பேன்.

 

நான் தான் சொன்னேனே ஊர்மிளாகிட்ட நான் பேசுறேன்னு. நீ தான் கேட்க மாட்டேனுட்ட இப்போ ஒரு விசயம் சொல்கிறேன் இதையாவது கேளு என்றான். என்ன மாமா என்றவளிடம் இனிமேல் ஊர்மிளா எக்கேடு கெட்டாலும் நீ கண்டுக்கவே கூடாது. மாமா அது எப்படி என்றவளிடம் அவளுக்கு தான் நீ அண்ணி கிடையாதே அப்பறம் என்ன நான் சொல்லுறதை நீ கேளு ரோனி. நெருப்பை பார்த்து பறந்து போற விட்டில் பூச்சி வெளிச்சம்னு நினைச்சு நெருப்பில் விழுந்து சகருகி சாம்பலாகும். அது போல தான் ஊர்மிளா மாதிரி ஆளுங்க பட்டால் தான் திருந்துவாங்க என்றான் உதய்.

 

அப்படி விட முடியாது மாமா அவள் உங்க தங்கச்சி என்றவனிடம் அவளே சொல்லிட்டாலே ரோனி பிரகாஷ் மட்டும் தான் அவளோட அண்ணன்னு அப்பறம் நாம யாரு சொல்லு. இந்தப் பேச்சை இதோட விட்டுரு என்ற உதய் நீ கண்டதையும் போட்டு குழப்பிக்காதே. நமக்கு குழந்தை கட்டாயம் பிறக்கும். என் ரோனி போல ஒரு குட்டிப்பாப்பா ஆமாம் ஏதோ பெயர் வச்சியே நம்ம பொண்ணுக்கு என்றவனிடம் தயனிகா  என்றாள் வெரோனிகா.

 

ஹான் தயனிகா நம்ம பாப்பா கட்டாயம் இந்த மண்ணை பார்ப்பாள். அதனால நீ சும்மா, சும்மா அழக்கூடாது. என்னோட ரோனி எப்பவுமே தைரியமா இருக்கனும். ஸ்ட்ராங்க் உமன் என்றவன் அவளது நெற்றியில் முத்தமிட்டான்.

 

மாமா நிஜமாவே எனக்கு எந்த குறையும் இல்லையே என்றவளிடம் என் மேல சத்திம் ரோனி என்று அவனது தலையில் கை வைக்க மாமா நான் நம்புகிறேன் நீங்க சத்தியம் எல்லாம் பண்ண வேண்டாம் என்றவள் அவனது மார்பில் சாய்ந்து கொண்டாள்.

 

என்னங்க இவள் இப்படி பேசிட்டு இருக்கிறாள் என்ற சுசீலாவிடம் செல்லம் ஓவரா கொடுத்து , கொடுத்து அவளை நாம தான் கெடுத்து வச்சுருக்கோம் சுசீலா. அண்ணியோட கையை பிடிக்கிறாள், வெரோனிகாவை அடிச்சுருக்கா , அம்மாவை, உன்னையை , என்னையைன்னு எல்லோரையும் எதிர்த்து எதிர்த்து பேசிட்டு இருக்கிறாள் அவளை பேசாமல் விசம் வச்சு கொன்னுடு சுசீலா. வாயைத் திறந்தாலே விசமா கக்குறாள் என்றார் இளமாறன். என்னங்க பேசாமல் நாம இந்த வீட்டை விட்டு போயிரலாமா என்றார் சுசீலா.

 

என்ன பேசுற சுசீ இத்தனை வருசமா ஒன்றாக ஒரே வீட்டில் இருந்துட்டு இப்போ எப்படி அம்மா மனசு என்று இழுத்தவரிடம் நாம இங்கேயே இருந்து அவள் எல்லோர் மனசையும் காயப்படுத்துறதுக்கு நாம கிளம்புறது தான் எல்லோருக்கும் நிம்மதி என்றார் சுசீலா.

 

ஒரு நிமிசத்தில் ரோனியை அவள் என்ன சொல்லிட்டால் பாருங்க. அந்தப் பொண்ணுக்கு கடவுள் கொடுக்கிற கஷ்டம் எல்லாம் போதாதா இந்த உண்மை தெரிஞ்சு அவள் என்னால முடியலங்க. நம்ம பொண்ணு சக்கரைக்கட்டியாவே இருந்தாலும் அவள் நம்மளை பேசினால் தாங்கிக் கொள்ளலாம். வீட்டுக்கு வாழ வந்த மருமகளை நோகடிக்க இவள் யாரு என்ற சுசீலாவின் கண்கள் கலங்கிட சரி சுசி நான் அம்மாகிட்டையும், அண்ணன்கிட்டையும் பேசிட்டு நாம சீக்கிரமே கிளம்பிருவோம் என்ற இளமாறன் கண்களை மூடி கண்ணீரை கட்டுப் படுத்தினார்.

 

என்ன பண்ணிட்ட ஊர்மி நீ என்ற விக்னேஷிடம் நான் என்ன தப்பு பண்ணினேன் விக்கி அந்த ரோனி உங்களை பொறுக்கினு சொல்லுவாள் அவளை கொஞ்சனுமா என்ன என்றிட முட்டாள் மாதிரி பண்ணிட்டியே ஊர்மி என்றான் விக்னேஷ். என்ன விக்கி நீங்க என்றவளிடம் ஆமாம் ஊர்மிளா வெரோனிகா உன்னோட அண்ணி. எனக்காக அவங்களை நீ அடிச்சது பெரிய தப்பு. ஏற்கனவே உங்க வீட்டில் எனக்கு பேட் இம்ப்ரசன் இருக்கு இப்போ நீ போட்ட சண்டையால சுத்தமா நம்ம கல்யாணத்திற்கு சம்மதிக்கவே மாட்டாங்க. நீ யோசிக்க மாட்டியா உனக்கு ஏன் ஊர்மி புரியவே மாட்டேங்குது என்றவன் சரிம்மா இதுவரை நடந்தது போதும். கொஞ்ச நாளைக்கு பொறுமையா இரு என்ற விக்னேஷ் போனை வைத்தான்.

 

எதற்கு மாமா இப்போ வெளியில் அழைச்சுட்டு வந்திருக்கிங்க என்ற வெரோனிகாவிடம் உன்னை அழுமூஞ்சியா பார்க்க என் மனசுக்கு பிடிக்கவில்லை என்றவனை முறைத்திட என் பொண்டாட்டி எப்பவும் சந்தோசமா இருக்கனும் என்றவன் அவளுடன் சினிமாவிற்கு சென்றான்.

 

இந்த ஊர்மிளாவை சரியான முட்டாள் என்று சுவற்றில் குத்தினான் விக்னேஷ். என்ன விக்கி என்ன கோபமா இருக்க போல என்ற சௌமியாவிடம் இல்லையே நான் ஏன் கோபம் பட போறேன் என்று சாதாரணமாக முகத்தை மாற்றிக் கொண்டு வெளியே சென்றான்.

 

என்ன சொல்லுற ஸ்ரீஜா ஊர்மி இவ்வளவு பேசினாளா என்ற தேவச்சந்திரனிடம் ஆமாம் தேவ் பாவம் ரோனி அவளோட மனசு உடைஞ்சுருச்சு. நல்லவேளை உதய் மாமா அவளை ஏதேதோ பேசி சமாதானம் பண்ணிட்டாரு எவ்வளவு பேச்சு பேசுது இந்த ஊர்மிளா.  இந்நப் பொண்ணை போயி சின்னப் பொண்ணுனு சொல்லிட்டு இருக்கிறோம். அவள் ஒரு விசப் பூண்டு சத்தியமா சொல்கிறேன் இவள் இதே குணத்தோட இருந்தால் நாளைக்கு அழியப் போறது இவளோட வாழ்க்கை தான் என்றாள் ஸ்ரீஜா.

 

விடு ஸ்ரீஜா நாம எதுனாலும் பேசப் போயி அது சித்தி, சித்தப்பா காதில் விழுந்தால் பெரிய சங்கடம் என்றான் தேவ். நாம இப்படி யோசிக்கிறோம் ஆனால் ஊர்மிளா அவள் ஏன் இப்படி என்ற ஸ்ரீஜாவிடம் உன்னைப் போல தான் இருக்கிறாள் என்றார் வசுந்தரா. ஆமாம்டி நீ இப்படித் தானே எல்லோரையும் எடுத்தெறிஞ்சு பேசின உன்னை தான் அவளும் பாலோவ் பண்ணுகிறாள் என்ற வசுந்தரா நீ இந்த உலகத்தை புரிஞ்சுகிட்டது போல அவளும் புரிஞ்சுப்பாள்.

 

நீ எதுனாலும் பேசி அண்ணன், அண்ணி காதில் விழுந்தால் ரொம்ப சங்கடம் தேவ் சொல்வது தான் சரி. உதய் இருக்கான் ரோனியை பார்த்துக் கொள்ள அதனால நீ கவலைப் படாதே. உன்னோட ட்ரீட்மென்ட்டை மட்டும் நீ பார்த்துக்கோ என்றிட சரிம்மா என்ற ஸ்ரீஜா அமைதியாக அமர்ந்தாள்.

 

என்ன பண்ணிட்டு இருக்க பூங்கொடி என்ற கதிரேசனிடம் நம்ம பொண்ணுக்காக வேண்டி விரதம் இருக்கேங்க. அவள் நல்லா இருக்கனும், அவளுக்கு கர்ப்பப்பையில் இருக்கிற பிரச்சனை சீக்கிரம் சரியாகனுமே என்றிட  முடியவே முடியாதுன்னு டாக்டர் சொல்லிட்டாரே பூங்கொடி என்றார் கதிரேசன். டாக்டர் என்ன கடவுளா அவர் சொன்னால் அப்படியே நடக்க என்ற பூங்கொடி என் மகளுக்காக நான் விரதம் இருந்து,  மண்சோறு தின்று, மடிப்பிச்சை எடுத்து அந்த அம்மனுக்கு பொங்கல் வைத்து படையல் போடுவேன். அந்த அம்மன் என் மகளோட கர்ப்பபையை நிச்சயம் திறந்து வைப்பாள் என்ற பூங்கொடி கோவிலில் காப்பு கட்டி விரதம் மேற்கொண்டார்.

 

நானும் உன் கூட விரதம் இருக்கேன் பூங்கொடி என்று வந்த வசந்தியிடம் நீங்கள் ஏன் அக்கா என்றார் பூங்கொடி. வெரோனிகா எனக்கும் மகள் தானே என் மகளோட பிரச்சனை சரியாகனும்னு அம்மா நானும் வேண்டிக்கலாம் என்றிட அவரை அணைத்துக் கொண்டார் பூங்கொடி.

 

இந்தப் படம் நல்லாவே இல்லை மாமா என்றவளிடம் என்னடி இது முழு படத்தையும் பார்த்துட்டு நல்லா இல்லைன்னு சொல்லுற சரி வேற எங்கே போகலாம் என்று யோசித்தவன் ஒரு லாங்க் டிரைவ் போகலாமா ரோனி என்றான்.

 

இல்லை மாமா வேண்டாம் எனக்கு பயமா இருக்கு என்றவளது மனதை உணர்ந்தவன் அவளது கையை அழுத்திப் பிடித்தான். ஒருமுறை நடந்த தப்பு திரும்ப நடக்காது ரோனி என்றிட சரிங்க மாமா என்றாள்.

 

கடற்கரை மணலில் அமர்ந்தவன் அவளிடம் ஐஸ்கிரீமை நீட்டிட தாங்க்ஸ் மாமா என்றவள் ஐஸ்கிரீமை உண்டாள். இந்த அலை ரொம்ப அழகா இருக்கு தானே மாமா என்ற வெரோனிகாவிடம் என் ரோனி அளவுக்கு அழகு இல்லை என்றான் உதய்.

 

மாமா என்றவளிடம் சத்தியம் ரோனி என்றவன் சிரித்திட அவனது தோளில் சாய்ந்து கொண்டாள்.

 

தேவ் தனது மருத்துவமனையில் தனது அறையில் அமர்ந்திருக்க சார் அவுட்பேசன்ட் என்று நர்ஸ் ஒருவர் வந்து சொல்லிட வரச் சொல்லுங்க என்றான் தேவ்.

 

உள்ளே வந்தவள் தனது கூலிங்கிளாஸை கழற்றிட அவளைக் கண்டவன் இவளா என்று நினைத்தபடி உட்காருங்க என்ன பிரச்சனை என்றான்.

 

எப்படி இருக்கிங்க மிஸ்டர் சந்திரன் என்ற ரியாவிடம் எனக்கென்ன மேடம் ரொம்ப, ரொம்ப நல்லா இருக்கேன் என்றவன் உங்களுக்கு என்ன பிரச்சனை என்றான். என்ன பிரச்சனையா என்றவளிடம் நான் டாக்டர் என்னை பார்க்க வந்துருக்கிங்க அதான் உடம்பில் என்ன பிரச்சனைன்னு கேட்டேன் என்றான் தேவ்.

 

எனக்கு உடம்பில் எந்த பிரச்சனையும் இல்லை மிஸ்டர்.சந்திரன் என்றவளிடம் தேவச்சந்திரன் என்றான் தேவ். அவனை முறைத்தவள் இந்த ரியா எப்பவுமே எனக்கு பிடிச்ச மாதிரி தான் கூப்பிடுவேன் என்று விட்டு தனது கூலிங்கிளாஸை கண்களில் மாற்றினாள்.

 

             அத்தியாயம் 115

 

உங்களுக்கு பிடிச்ச மாதிரி கூப்பிட நான் ஒன்றும் உங்க வீட்டு நாய்க்குட்டி இல்லை மிஸ்.ரியாசாந்தமூர்த்தி என்றவனை முறைத்தவள் லுக் மிஸ்டர்.சந்திரன் உங்க பெயர் எதுவா இருந்தாலும் எனக்கு கவலை இல்லை. இந்த ரியாவை பொறுத்தவரை நீங்க சந்திரன் தான் என்று கூறினாள் ரியா.

 

அவளை முறைத்தவன் என்ன விசயமா வந்திங்க மிஸ்.ரியா என்றிட சும்மா உங்க கிட்ட நலம் விசாரிச்சுட்டு போகத் தான் என்ற ரியா உங்க வொய்ப் எப்படி இருக்காங்க என்றாள்.

 

என் மேரேஜ்க்கு உங்களை நான் இன்வைட் பண்ணவே இல்லையே மிஸ்.ரியா ஆனாலும் என் மனைவி மேல அக்கறை எல்லாம் வச்சு விசாரிக்கிறிங்க பாருங்க நீங்க கிரேட் தான் என்றவன் அவளுக்கென்ன அவள் நல்லா மகாராணி போல இருக்கிறாள் என்றான் தேவ்.

 

மகாராணி என்று நக்கலாக சொன்னவள் மகாராணிக்கு இளவரசியோ, இளவரசனோ இல்லையா என்றிட ஏன் இல்லை குட்டி இளவரசி இருக்கிறாள் மிஸ்.ரியா உதயநிலாதேவச்சந்திரன் என்றிட வாட் என்று அதிர்ந்தாள் ரியா.

 

என் பொண்ணோட நேம் உதயநிலா என்றவன் தனது பர்ஸில் இருந்த குடும்ப போட்டோவை காண்பிக்க அதில் தேவ், ஸ்ரீஜா,  நிலா மூவரும் ஒன்றாக இருந்தனர்.

 

அந்த போட்டோவைப் பார்த்து அதிர்ந்தவள் இதுவா உங்க வொய்ப் என்றிட ஆமாம் இவங்க தான் என்னோட மனைவி ஸ்ரீஜா என்றதும் அதிர்ந்து போனாள் ரியா.

 

அப்போ அந்த வெரோனிகா என்று யோசித்தவள் கோபமாக எழுந்து கொள்ள அந்த அறைக்கதவை திறந்து கொண்டு வெரோனிகா வந்தாள். தேவ் மாமா என்று வந்தவளை வாங்க அண்ணி என்றான் தேவச்சந்திரன். அவளுடன் உதயச்சந்திரனும் வர குழம்பிப் போன ரியா எதுவும் பேசாமல் அவர்களை கவனிக்க ஆரம்பித்தாள்.

 

ஐயோ, ஸாரி மாமா பேசன்ட் இருக்காங்களா என்றவள் கிளம்ப எத்தனிக்க அண்ணி நீங்கள் இருங்கள் ஒன்றும் பிரச்சனை இல்லை. இவங்க பேசன்ட் இல்லை என்னோட காலேஜ்மெட் மிஸ்.ரியாசாந்தமூர்த்தி என்றிட ஓஓ ஓகே என்ற வெரோனிகா ரியாவை பார்த்து புன்னகைத்திட அவள் மௌனமாக இருந்தாள்.

 

என்ன விசயம் அண்ணி என்றவனிடம் இல்லை மாமா சும்மா இந்தப் பக்கம் வந்தோம் உங்களுக்கு டியூட்டி முடியும் நேரம் ஆச்சே அதான் உங்களை பார்த்துட்டு எங்க கூட அழைச்சுட்டு போகலாம்னு என்றாள் வெரோனிகா. உன்னோட கார் ப்ரேக்டவுன்னு சொன்னியே தேவ் அதான் வந்தோம் என்றான் உதய்.

 

மிஸ்.ரியா நாம இன்னொரு நாள் பார்க்கலாமா என்றவன்அவளை வெளியே போக சொல்ல கோபம் கொப்பளிக்கும் முகத்துடன் பார்க்கிங் வந்தவள் தன் காரை எடுத்து வேக வேகமாக வீட்டிற்கு வந்தாள்.

 

அவளுக்கு அவமானம் தாங்க முடியவில்லை யாரை கதற விட வேண்டும். தன் காலில் விழ வைக்க வேண்டும் என்று நினைத்து கிரிமினல் வேலை எல்லாம் பார்த்தாளோ அவனோ மனைவி, குழந்தை என்று சந்தோசமாக இருக்கிறான்.

 

அதை நினைக்க , நினைக்க ஆத்திரம் பொங்க வீட்டிற்குள் நுழைந்தவள் தன் தோழி வாசவியின் கன்னத்தில் பளார் பளாரென அறைந்தாள்.

 

ரியா நீ என்ன பைத்தியமா ஏன்டி என்னை அடிக்கிற என்றாள் வாசவி.  யூ ப்ளடி நீ என்னடி இன்பர்மேசன் கலைக்ட் பண்ணின அந்த வெரோனிகா சந்திரனோட அண்ணியாம் என்ற ரியா அவளது கன்னத்தில் மீண்டும் அறைந்திட வாட் என்றாள் வாசவி.

 

என்னடி வாத்து, கோழின்னுட்டு இடியட் என்ற ரியா மருத்துவமனையில் கண்ட விசயத்தை கூறிட ஏய் ஒன் செகன்ட் அவனுக்கு அவனைப் போலவே ஒரு ட்வின் ப்ரதர் இருக்கிற விசயத்தை நீ ஏன் என்கிட்ட சொல்லவில்லை என்றாள் வாசவி. முட்டாள் எனக்கே தெரியாதுடி காலேஜ்ல அவன் கூட ஒன் இயர் தானே நான் சேர்ந்து படிச்சேன் அப்பறம் யுஎஸ் போயிட்டேன் என்றவளிடம் ரியா காம்டவுன். உனக்கே தெரியாதப்போ எனக்கு எப்படி தெரியும் அந்த தேவச்சந்திரன்னு நினைச்சு அவனோட அண்ணன் உதயச்சந்திரனை நாம போலோவ் பண்ணிருக்கோம் சரி விடு இந்த பிரச்சனையை இத்தோட விடு.

 

இனி நம்ம டார்கெட் அந்த வெரோனிகா கிடையாது தேவச்சந்திரனோட வொய்ப் ஸ்ரீஜா என்றாள் வாசவி. நோ நோ நம்ம டார்கெட் ஸ்ரீஜா இல்லை உதயநிலா. அவனோட குழந்தையை பகடையா வச்சு தான் அவனை வளைக்கனும் என்று கொடூரமாக சிரித்தாள் ரியா.

 

மாமா அந்த ரியா ஏன் என்னை அப்படி பார்த்தாங்க என்ற வெரோனிகாவிடம் மாறு கண்ணா இருக்கும் அண்ணி என்று சிரித்தான் தேவ். டேய் ஏன்டா இப்படி சொல்லுற என்ற உதய்யிடம் அது ஒரு டம்மி பீஸ் அண்ணா. 

 

செம்ம சீன் போடும். அப்பா பெரிய பணக்காரர். ஒன் இயர் எங்க காலேஜ்ல படிச்சுச்சு. அப்பறம் யுஎஸ் போயிருச்சு. தான் தான் உலகத்திலே பெரிய அழகின்னு நினைப்பு. ஒன் இயரும் என்னை லவ் பண்ணுறேன்னு காமெடி பண்ணிட்டு சுத்துனுச்சு என்று சிரித்தான் தேவச்சந்திரன்.

 

என்ன மாமா அப்போ அவங்க உங்க எக்ஸா இருங்க இருங்க ஸ்ரீஜா அக்காகிட்ட சொல்லித் தரேன் என்றாள் வெரோனிகா. எதேய் எக்ஸா ஏன் அண்ணி நீங்க வேற இதைக் கண்டாலே எனக்கு பிடிக்காது என்றவன் சிரித்திட ஏன்டா அந்த பொண்ணுக்கு என்ன குறைச்சல் என்றான் உதய். எல்லாமே குறை தான் அண்ணா. ஒரு பொண்ணு பார்க்க நல்லா இருந்தால் போதுமா கேரக்டர் நல்லா இருக்கனும்.

 

நாம வசதியா இருக்கோம்கிறதுக்காக மத்தவங்க எல்லாம் நம்ம கால் செருப்புக்கு சமம்னு நினைக்கிறது எந்த வகையில் நியாயம் சொல்லுங்க என்ற தேவ் அடக் கொடுமை இவளைப் பற்றி எல்லாம் பேசி நம்ம நேரத்தை வீணாக்கிட்டு என்றான் தேவ்.

 

என்ன சொல்லிட்டு இருக்க இளமாறா என்ற கல்யாணிதேவியிடம் வேற வழி தெரியலைம்மா. பொண்ணுங்கிற பேர்ல ஒரு பேயை பெத்து வச்சுருக்கேன். அது வார்த்தையால விசத்தை கக்கி எல்லோர் மனசையும் கொன்னுட்டு இருக்கேம்மா அதனால் தான் என்ற இளமாறன் கண்ணீர் சிந்திட மகனது கண்ணீரைத் துடைத்து விட்டார் கல்யாணிதேவி.

 

ஊர்மிளா மாறிடுவாள் இளமாறா என்ற கல்யாணிதேவியிடம் நம்பிக்கை இல்லைம்மா எனக்கு என் அண்ணன், அண்ணி, அண்ணன் பசங்க எல்லோருமே வேணும் ஆனால் ஊர்மிளா இந்த உறவுகளை சிதைத்து விடுவாள் அதனால தான் சொல்கிறேன் என்றார் இளமாறன்.

 

என்ன பேசுறிங்க நீங்க ஊர்மிளா காதல் மயக்கத்தில் பேசுகிறாள். அவள் அந்த விக்னேஷ் தப்பானவன்னு புரிஞ்சுக்குவாள். அதுவரை நாம அவளை பொறுமையா தான் ட்ரீட் பண்ணனும் என்றார் மலர்கொடி. இல்லை அண்ணி அவள் எல்லாத்துக்குமே ரோனியை பிளேம் பண்ணிட்டு இருக்கிறாள் என்றிட அவள் ரோனியை தப்பா புரிஞ்சுகிட்டு பேசுகிறாள். எல்லாம் சரியாகிரும் நீங்க கவலையை விடுங்க என்ற மலர்கொடி இந்த வீட்டை விட்டு போக இனிமேல் நினைக்காதிங்க என்றார். சரிங்க அண்ணி என்ற இளமாறனும் சென்று விட்டார்.

 

என்ன யோசணை பிரகாஷ் என்ற இந்திரஜாவிடம் அம்மா போன் பண்ணினாங்க ஊர்மிளா அண்ணிகிட்ட என்ற நடந்த விசயங்களை கூறினான் பிரகாஷ். என்ன மாமா இது அவள் ஏன் இப்படி பிகேவ் பண்ணுகிறாள் என்ற இந்திரஜாவிடம் எனக்கும் ஒன்றும் புரியலை நாம தான் கிளம்பிட்டோமே அங்கே போயி அவளை பேசிக்கிறேன் என்றான்.

 

என்ன மச்சான் யோசணை என்ற கனிமொழியிடம் நம்ம ரோனிக்கு நடந்த விபத்து திருட்டு கும்பல்னால நடந்ததுன்னு என்னால நம்ப முடியலைன்னு சொன்னேன்ல அதை விசாரிக்க ஆரம்பித்தேன் அதில் ஒரு க்ளூ கிடைச்சுருக்கு கண்டிப்பா என் தங்கச்சியை கொலை பண்ண பார்த்தவங்க யாரா இருந்தாலும் அவங்களை சும்மா விடமாட்டேன் என்றான் சரவணன்.

 

என்ன யோசணை மேடம் என்ற விவேக்கிடம் இந்து சொன்னாள் வீட்டில் பிரச்சனையாம் என்ற அர்ச்சனா ஊர்மிளா வீட்டில் நடத்திய கூத்தை சொல்லிட என்ன சொல்லுற விக்னேஷ் ஊர்மிளாவை லவ் பண்ணுறானா என்ற விவேக் நான் கௌதம் கிட்ட பேசுறேன் என்றான்.

 

என்ன ஊர்மி ஏன் டல்லா இருக்கே என்ற விக்னேஷிடம் வீட்டில் யாருமே என்கிட்ட பேசுறதே இல்லை விக்கி. இரண்டு நாளா எல்லோரும் முகத்தை தூக்கி வச்சுட்டு இருக்காங்க. ஆனால் பிரச்சனைக்கு காரணமே ரோனி தான் அவளை தாங்குறாங்க அது தான் கோபம் , கோபமா வருது என்றாள் ஊர்மிளா. ஊர்மிளா தப்பா நினைக்காதே உனக்கு உன் அண்ணி வெரோனிகாவை பிடிக்காதா என்றான்.

 

ரொம்ப , ரொம்ப பிடிக்கும். அவள் தான் என்னோட பெஸ்ட் ப்ரண்ட் ஆனால் எனக்குனு பர்சனல் இருக்கு. அதில் அவள் தலையிடுவது சுத்தமா பிடிக்கவில்லை. அதுவும் உங்க விசயத்தில் அவள் தலையிடுறது எனக்கு சுத்தமா பிடிக்கவே இல்லை. ஏற்கனவே அர்ஜுன் விசயம் சொல்லி இருக்கேனே அதிலும் எனக்கும், அவளுக்கும் முட்டிக்கிச்சு.

 

என்னோட எல்லா லவ்வும் அவளால தான் சிக்கலா இருக்கு என்ற ஊர்மிளாவின் கையை பிடித்தவன் நீ இனிமேல் அவங்க மேல கோபம் படாதே என்றான். விக்கி அது என்றவளது வாயில் விரலை வைத்தவன் சொல்லுறதை கேளு ஊர்மி என்றான் விக்னேஷ். அவனது மார்பில் சாய்ந்து கொண்டவள் ஐ லவ் யூ விக்கி என்றிட ஐ லவ் யூ டூ ஊர்மிளா என்றிட அந்த நேரம் மழை சோவென்று பெய்ய இருவரும் நன்றாக நனைந்து விட்டனர்.

 

இது என்ன இப்படி மழை பெய்து என் டிரஸ் எல்லாம் நனைஞ்சுருச்சே என்றவளிடம் குளிர் வேற என்றவனை அவள் நெருங்கி நின்றாள்.

 

ஊர்மி மழை விடுறது போல தெரியலை பக்கத்தில் தான் என்னோட வீடு இன்னைக்கு அம்மா, அப்பா இரண்டு பேரும் சௌமியா கூட ஏதோ பரிகாரம் பண்ண திருமணஞ்சேரி போயிருக்காங்க. அண்ணா, அண்ணி மாமா வீட்டுக்கு போயிட்டாங்க. மழை விடும் வரை எங்க வீட்டில் இருக்கலாமா. அப்பறம் உன்னை வீட்டில் விட்டுடுறேன் என்றிட சரியென்று அவனுடன் சென்றாள் ஊர்மிளா.

 

உங்க வீடு எனக்கு ரொம்ப பிடிச்சுருக்கு விக்கி என்றவளிடம் நம்ம வீடு ஊர்மி என்றாள் ஊர்மிளா. ரொம்ப குளிருதா இரு என்றவன் தன் தங்கையின் அறைக்கு சென்று அவளுக்கு ஒரு உடையை எடுத்து வந்து கொடுத்தான்.

 

இது சௌமியாவோட டிரஸ் இதை மாத்திக்கோ என்றவன் அவனது அறைக்கு சென்றான். உடை மாற்றிக் கொண்டிருந்தவள் விக்கி என்று கத்திட என்னாச்சு ஊர்மி என்று வந்தவனை ஓடி வந்து அணைத்தவள் பாச்சா என்று கண்களை மூடிக் கொண்டாள்.

 

கரப்பான்பூச்சிக்கு எல்லாம் பயப்படுவியா லூசு என்றவன் அவளை விலக்க முயல அவளோ மெல்ல விலகிட அவன் பூச்சியை அடித்து வெளியில் போட்டு விட்டு வர அப்பொழுது தான் அவளை கவனித்தான்.

 

அவளை அந்த கோலத்தில் பார்த்திட அவனது எண்ணங்கள் தறிகெட்டு ஓடிட எவ்வளவு முயன்றும் மனதை அடக்க முடியாமல் அவளை நெருங்கி அவள் இதழில் தன் இதழைப் பதித்தான் விக்னேஷ்.

 

      அத்தியாயம் 116

 

என்ன அத்தை ஏன் இங்கே நிற்கிறிங்க என்ற வெரோனிகாவிடம் இந்த ஊர்மிளாவை காணோம் ரோனி பிரகாஷ் வந்ததில் இருந்து அவளை கேட்டுட்டு இருந்தான் அவள் இல்லாமல் இருக்கவும் தேடி போயிருக்கான் என்றார் சுசீலா. என்ன சொல்லுறிங்க அத்தை எங்கே போனாள் அவள் என்றிட தெரியலை ரோனி என்றவர் ஏதோ சொல்ல வர ரோனி என்று உதய் அழைத்தான்.

 

அவளை பிரகாஷ் அழைச்சுட்டு வந்துருவான் நீ உதய் கிட்ட போயி என்னனு கேளு என்றார் சுசீலா. சரிங்க அத்தை என்றவள் தன்னறைக்கு செல்ல என்னடி சித்திகிட்ட என்ன பேசிட்டு இருந்த என்றான் உதய். ஊர்மிளாவை வீட்டில் காணோம்னு சொல்லுறாங்க மாமா என்றவளிடம் எங்கே போகப் போறாள் இங்கே தான் எங்கேயாவது இருப்பாள் என்ற உதய் மழை பெய்றது நல்ல கிளைமேட்டா இருக்குல ரோனி என்றான்.

 

மாமா நான் என்ன சொல்லிட்டு இருக்கேன் நீங்க என்னடான்னா மழை நல்லா இருக்குனு பேச்சை மாத்திட்டு இருக்கிங்க என்றாள். நீ சொன்ன விசயம் எனக்கு தேவை இல்லாததுன்னு அர்த்தம் என்றவன் அவளை தன்னுடன் இழுத்து பால்கனி ஊஞ்சலில் அமர்ந்தான்.

 

மாமா என்ன தேவை இல்லாதது ஊர்மிளா உங்க தங்கச்சி என்றவளிடம் இந்த கிளைமேட்டுக்கு சூடா பஜ்ஜி சாப்பிட்டால் செமையா இருக்கும்லடி என்றான். மாமா என்ன வெறுப்பேத்துறிங்களா என்றவளிடம் சூடான பஜ்ஜி அதுவும் காரமான மிளகாய் பஜ்ஜி சாப்பிட்டு அது கூடவே என் ரோனி போட்டுத் தரும் இஞ்சி டீ குடிச்சுட்டே மழையை ரசித்தால் எவ்வளவு சூப்பரா இருக்கும் என்றான் உதய்.

 

மாமா ஏன் என்னை வெறுப்பேத்துறிங்க உங்க தங்கச்சியை காணோம் என்றவளிடம் எனக்கு அண்ணன் பிரகாஷ் மட்டும் தான்னு நானா சொன்னேன் என்றான் உதய். மாமா அவள் ஏதோ என் மேல உள்ள கோபத்தில் சொன்னதை நீங்கள் என்றிட அவள் வயசென்ன ரோனி அம்மாவோட கையை பிடிக்கிறாள். அப்பத்தாவை எதிர்த்து பேசுகிறாள். உன்னை கை நீட்டி அடிக்கிறாள். என்னால மன்னிக்க முடியாது ரோனி. பிரகாஷ் என் தம்பி . சித்தி, சித்தப்பா எனக்கு இன்னொரு அப்பா, அம்மா ஆனால் ஊர்மிளாவை என்னால மன்னிக்கவே முடியாது.

 

அவளுக்கு எல்லாம் தெரியும், அவளை அவளே பார்த்துப்பாள் அதனால நீ அவளைப் பற்றி கவலைப் படாதே என்ற உதயச்சந்திரன் அவளை தன் மடியில் அமரச் செய்தான்.

 

ரோனி இந்த உலகத்தில் எனக்கு உன்னை விட யாரும் முக்கியம் இல்லை. உன்னை குத்திக் கிழிக்கிற யாரும் எனக்கு தேவையும் இல்லை. எனக்கு ஒரு சத்தியம் பண்ணிக் கொடு என்ற உதய்யிடம் என்ன சத்தியம் மாமா என்றாள் வெரோனிகா.

 

இனிமேல் நீ எப்பவுமே  ஊர்மிளா விசயத்தில் தலையிடவே கூடாது. அவளுக்கு நல்லது நடந்தால் சித்தப்பா, சித்திக்காக அந்த விசேசத்தில் கலந்துக்கிறோம் அவ்வளவு தான். மற்றபடி ஊர்மிளா பற்றி எப்பவுமே நீ கவலைப் படவும் கூடாது, நினைக்கவும் கூடாது என்றவனிடம் மாமா அவள் என்னோட நாத்தனார் என்றாள் வெரோனிகா.

 

நான் உன்னோட புருசன் ரோனி என் பேச்சுக்கு நீ மரியாதை கொடுக்கிறது நிஜம்னா என் மேல சத்தியம் இனி நீ ஊர்மிளாவோட எந்த விசயத்திலும் தலையிடக் கூடாது என்றான் உதயச்சந்திரன்.

 

சரிங்க மாமா என்றவள் முகத்தை சோகமாக வைத்திருக்க என்னாச்சு ஏன் முகத்தை தூக்கி வச்சுருக்க என்றான் உதய். உங்க மேல சத்தியம்னு சொன்னால் என்றவளிடம் என் மேல சத்தியம்னு சொன்னால் தானே நீ அடங்குவ என்றவன் சரி உன்னோட செமஸ்டர் லீவுக்கு எங்கேயாவது வெளியூர் போயிட்டு வருவோமா என்றான் உதய்.

 

செகன்ட் ஹனிமூனா மாமா என்றவளிடம் இது நல்ல ஐடியாவா இருக்கே பர்ஸ்ட் ஹனிமூன்ல தான் சும்மா ஷாப்பிங் பண்ணியே பொழுதை போக்கினோம். இந்த முறை ஜாலியா ஊரை சுத்திட்டு என் ரோனி கூட ரொமான்ஸ் பண்ண வேண்டியது தான் என்று அவளது கன்னத்தில் முத்தமிட்டான் உதய்.

 

மாமா என்றவளிடம் என்னடி வீட்டில் வச்சு தானே கொடுத்தேன் என்றிட போங்க மாமா அதற்கு இல்லை என்றவளிடம் அப்பறம் என்ன என்றான். கன்னத்தில் மட்டும் தானான்னு என்றவளிடம் அடிப்பாவி அப்போ ரோனி பயங்கர ரொமன்டிக் மூடுல இருக்கிங்களா என்றிட போங்க மாமா என்று அவனது மார்பில் முகத்தை புதைத்துக் கொண்டாள்.

 

என்ன பிரகாஷ் எங்கே அவள் என்ற சுசீலாவிடம் தெரியலைம்மா அவள் எங்கே போகிறாள் , வருகிறாள்னு கூட நீங்க கவனிக்க மாட்டிங்களா என்றான் பிரகாஷ். இல்லைடா என்றவர் ஏதோ சொல்ல வர சரி புரியுது நம்மளை மீறி எங்கே போயிருவாள்னு யோசிச்சுருப்பிங்க என்ற பிரகாஷ் திரும்பிட ஊர்மிளா வந்து கொண்டிருந்தாள்.

 

ஏய் எங்கே போன நீ என்ற பிரகாஷிடம் ப்ரண்ட் வீட்டிற்கு என்றாள் ஊர்மிளா. எந்த ப்ரண்ட் வீட்டிற்கு போன என்றவனிடம் கார்த்திகா வீட்டிற்கு என்றாள் ஊர்மிளா. கார்த்திகா போன் நம்பர் சொல்லு என்ற பிரகாஷிடம் பிரகாஷ் விடு என்ற சுசீலா உள்ளே போடி என்றார்.

 

ஏன்மா என்ற பிரகாஷிடம் அவள் அந்த விக்கி கூட ஊரை சுத்திட்டு தான் வந்துருக்கா பொய் சொல்கிறாள் விடு இனி அவள் வீட்டை விட்டு போகாதபடி பார்த்துக்கலாம் என்றார் சுசீலா.

 

அம்மா அவளை என்றவனிடம் அவள் இப்போ காதல் மயக்கத்தில் இருக்கிறாள் பிரகாஷ் நீயும், நானும் என்ன புத்தி சொன்னாலும் அவளோட மண்டையில் ஏறாது என்ற சுசீலா அவளை என்ன பண்ணனும்னு நான் பார்த்துக்கிறேன் என்றார்.

 

என்ன பிரகாஷ் மாமா ஏதோ யோசனையா இருக்கிங்க என்ற வெரோனிகாவிடம் ஸாரி அண்ணி என்றான் பிரகாஷ். எதற்கு ஸாரி நீங்க ஹனிமூன் போயிட்டு வரும் பொழுது எனக்கு கிப்ட் எதுவும் வாங்கிட்டு வரவில்லைனா என்றாள் வெரோனிகா.

 

இல்லை அண்ணி ஊர்மிளா உங்களை அடிச்சு , ஹர்ட் பண்ணுற மாதிரி பேசிட்டாளே அதான் என்றான் பிரகாஷ். அவள் பேசினதுக்கு நீங்க ஏன் ஸாரி கேட்கனும் பிரகாஷ் மாமா என்றவள் சிரித்து விட்டு அவள் மேல எனக்கு கோபம் எல்லாம் இல்லை நிறைய வருத்தம் இருக்கு அதற்காக நீங்க என் கிட்ட மன்னிப்பு கேட்க வேண்டிய அவசியமே இல்லை. நீங்க என்னை திட்டுனிங்க அப்படினா மன்னிப்பு கேட்கனும் மற்றபடி அடுத்தவங்க வயிற்றுக்கு நீங்க சாப்பிட முடியாது என்று சிரித்தாள் வெரோனிகா.

 

என்ன விக்கி இதெல்லாம் விவேக் என்னவோ சொல்கிறான் என்ற கௌதமிடம் என்ன சொன்னான் என்றான் விக்னேஷ். நீயும் , அர்ச்சனாவோட தங்கச்சி ஊர்மிளாவும் லவ் பண்ணுறிங்களாமே என்றான் கௌதம். என்ன நான் லவ் பண்ணுறேனா அதுவும் அந்த ஊர்மிளாவை நல்ல காமெடி என்று சிரித்தான் விக்னேஷ். என்ன சொல்லுற விக்கி அப்போ அந்தப் பொண்ணு ஏன் உன்னை லவ் பண்ணுறதா வீட்டில் சொல்லி இருக்கு என்றான் கௌதம்.

 

அந்தப் பொண்ணு சொன்னுச்சுனா அதற்கு நான் என்ன பண்ண முடியும். எனக்கு அந்தப் பொண்ணு மேல எல்லாம் லவ்வும் கிடையாது, ஜவ்வும் கிடையாது என்று சிரித்த விக்னேஷ் உன் மச்சான்கிட்ட சொல்லு தேவை இல்லாமல் என் மேல பழி போடுற வேலை எல்லாம் வேண்டாம்னு என்று சொல்லி விட்டு கிளம்பினான்.

 

தனன்றைக்குள் அடைந்து கொண்டவளின் மனமோ வேதனையில் துடித்தது. என்ன காரியம் பண்ணிட்ட ஊர்மி. நீ பண்ணின காரியம் வெளியில் தெரிந்தால் என்று யோசித்தவளுக்கு பயம் தொண்டையை கவ்வியது.

 

அவள் எவ்வளவோ முயன்றும் ஏனோ விக்னேஷின் எண்ணிற்கு போன் போகவே இல்லை. விக்கி போனுக்கு என்னாச்சு ஏன் போன் எடுக்க மாட்டேங்கிறான் என்று யோசித்தவள் அமைதியாக படுத்துக் கொண்டாள்.

 

என்ன ரியா பலமான யோசனை என்ற வாசவியிடம் அந்த சந்தீப் மாட்டிக்கிட்டான் என்றாள் ரியா. அவன் எப்படி மாட்டினான் என்ற வாசவியிடம் அந்த வெரோனிகாவோட அண்ணன் அசிஸ்டன்ட் கமிஷ்னராமே அவன் தான் அவனை வாட்ச் பண்ண ஆள் போட்டிருந்திருக்கான். எப்படியோ நூலைப் பிடிச்சு அந்த போலீஸ்காரன் நம்மளை நெருங்கிட்டான் என்ற ரியா ஆனால் இந்த ரியா அவனை விட புத்திசாலின்னு பாவம் அந்த போலீஸ்காரனுக்கு தெரியலை என்று பேயைப் போல சிரித்தாள் ரியா.

 

என்ன பண்ணுன என்ற வாசவியிடம் அந்த சந்தீப் லாக்கப்லையே செத்துட்டான் என்றவள் இந்த ரியாவை பிடிக்கனும்னா அவன் அப்பனுக்கும் அப்பன் தான் பிறந்து வரணும் என்று சிரித்தவள் நான் சொல்லுற ஆளுக்கு ஐந்து லட்சம் பணத்தை கொடுத்திரு அப்பறம் அந்த நிலா பாப்பாவை கிட்னாப் பண்ண சொன்னேனே அதையாவது நல்ல ஆளா பார்த்து செய். இந்த சந்தீப் மாதிரி உதாவகரையை பிடிக்காமல் என்ற ரியா தன் காரை எடுத்துக் கொண்டு கிளம்பினாள்.

 

என்ன சொல்றிங்க செழியன் அந்த சந்தீப் செத்துட்டானா என்ற சரவணனிடம் ஆமாம் சார் செத்துட்டான் என்று சிரித்த செழியன் எலி வளைக்குள்ள வந்துருச்சு சார் என்று சிரித்த செழியன் உங்க தங்கச்சிக்கு நடந்த அட்டாக் மர்டர் அட்டம்ட் தான்.

 

திருட வருவது போல செட் பண்ணி அந்தப் பொண்ணை மர்டர் பண்ணுறது தான் பிளான் என்ற செழியன் சந்தீப் கொடுத்த வாக்குமூலத்தை காட்டிட அந்த வீடியோவை கவனித்து பார்த்த சரவணன் அந்த ரியாவை அரஸ்ட்  பண்ண இந்த எவிடன்ஸ் போதுமா செழியன் என்றான் . இன்னும் இருக்கு சார் சந்தீப்பை கொலை பண்ண என்கிட்ட பிசினஸ் பேசினாள். அந்த வீடியோவும் இருக்கு என்ற செழியன் கூறிட அவளை சும்மா விடக்கூடாது என்றான் சரவணன்.

 

விக்கி என்ற சௌமியாவிடம் என்ன என்றான் விக்னேஷ். என்னோட பிங்க் சுடிதாரை நீ பார்த்தியா என்றிட ஆமாம் நான் தான் உன் சுடிதாரை போட்டுட்டு சுத்துறேன் என்றான் விக்னேஷ். நீ போட்டுட்டு சுத்துனாய்னு சொன்னேனாடா நீ பார்த்தியானு தானே கேட்டேன் என்றவளை முறைத்தவன் நீ ஊரில் இல்லாத வேளையில் ஒரு பொண்ணை அழைச்சுட்டு வந்து அவள் கிட்ட உன் சுடிதாரை தூக்கி கொடுத்தேன் பாரு பே இப்போ தான் சுடிதாரை பார்த்தியான்னு கேட்டுட்டு என்ற விக்னேஷ் கோபமாக தன்னறைக்குள் நுழைந்தான்.

 

இப்போ என்ன கேட்டுட்டேன்னு இவன் இப்படி ரியாக்ட் பண்ணுறான். அரை மென்டல் என்று நினைத்த சௌமியா வீடு சுத்தம் செய்து கொண்டிருந்தாள்.

 

விக்னேஷின் அறையை சுத்தம் செய்தவளது கண்ணில் அது பட்டது. என்ன அது என்று எடுத்து பார்த்தவள் அதிர்ந்து போனாள்.

 

         அத்தியாயம் 117

 

விக்கி என்று கத்திய சௌமியாவிடம் என்ன சௌமியா ஏன் இப்படி பேய் மாதிரி கத்திட்டு இருக்க என்றிட இது என்னடா என்று ஒரு கொலுசை எடுத்துக் காட்டினாள் சௌமியா.

 

கொலுசு யாரோடது என்று அவளிடமே அவன் கேட்டிட என்னடா உன் ரூம்ல கிடக்கு யாரோடதுன்னு என்கிட்ட கேட்கிற என்றாள் சௌமியா. நான் தானே கொலுசு போட்டுட்டு சுத்துறேன் ஒன்று உன்னோடதா இருக்கனும் இல்லையா அண்ணியோடதா இருக்கனும். சும்மா லூசு மாதிரி கேள்வி கேட்டு குடைச்சல் பண்ணாதே அவன் அவன் இருக்கிற கடுப்புல என்ற விக்னேஷ் அதைக் கொடு அண்ணிகிட்ட கேட்டுட்டு வரேன் என்றவன் அவள் கையில் இருந்த கொலுசை பறித்துக் கொண்டு சென்று விட்டான்.

 

அந்த ஊர்மி பிசாசு கொலுசு தொலைஞ்சது கூட தெரியாமல் போயிருச்சு போல என்று தலையில் அடித்துக் கொண்டவன் எல்லாம் என் நேரம் என்று புலம்பி விட்டு சென்றுவிட்டான்.

 

விக்கி தன்னறையில் அமைதியாக யோசிக்க ஆரம்பித்தான். நாம பண்ணினது சரி தானா என்று நினைத்தவனின் மனமோ ரணமாக வலித்தது. தப்புனு தெரியும் ஆனால் என்று நினைத்தவன் தன்னைத் தானே சமாதானம் செயது கொண்டான்.

 

என்ன யோசனை அம்மா என்ற பிரகாஷிடம் இவள் என்னனு தெரியலை இரண்டு நாளா ரூமை விட்டு வெளியே வரவே இல்லை. நேற்று வெளியே போகும் பொழுது ஒரு டிரஸ் போட்டுட்டு போனாள் . வரும் பொழுது வேற டிரஸ் போட்டிருந்தாள் என்னனு கேட்டாள் மழையில் நனைஞ்சுட்டேன் அதனால கார்த்திகா டிரஸ் போட்டுட்டு வந்தேன்னு சொல்கிறாள். எனக்கு ஒன்றும் சரியா படலை பிரகாஷ். இவள் ஏதோ பெரிய தப்பு பண்ணி இருக்கிறாள் என்ற சுசீலாவிடம் அம்மா அவள் நம்ம வீட்டுப் பொண்ணும்மா , நம்ம இரத்தம் தப்பெல்லாம் பண்ணி இருக்க மாட்டாள் என்றிட எனக்கு நம்பிக்கையே இல்லைப்பா என்றார் சுசீலா.

 

அன்னையின் பேச்சைக் கேட்டவள் தன்னறைக்குள் சென்று கதவை சாத்திக் கொண்டு அழ ஆரம்பித்தாள். ச்சே அம்மா என் மேல இப்படி நம்பிக்கையே இல்லாமல் பேசுறாங்களே என்று நினைத்தவளுக்கு அன்று நடந்த சம்பவம் ஞாபகத்திற்கு வந்தது.

 

விக்னேஷ் அவளை நெருங்கி அவளது இதழில் தன் இதழைப் பதித்தான். அவனது இதழ் முத்தம் ஆரம்பத்தில் இனித்தாலும் போக போக அதன் தீவிரம் அதிகமாக அவளுக்கு எங்கிருந்து தான் அத்தனை வேகம் வந்த்தோ அவனைப் பிடித்து தள்ளி விட்டு பளார் , பளாரென அறைந்து விட்டாள். என்ன பண்ணுற விக்கி இதுக்கு தான் என்னை உன் வீட்டுக்கு அழைச்சுட்டு வந்தியா என்றிட ஊர்மி என்று அவன் ஏதோ சொல்ல வர இந்த உடம்பு தான் உனக்கு வேணும்னா நீ நேரடியாவே கேட்டிருக்கலாமே விக்கி என்றதும் சுருக்கென்று அவனுக்கு கோபம் வர என்னடி சொன்ன என்று அவளது கன்னத்தில் அறைந்தவன் உன் உடம்பு மேல ஆசைப்பட்டு இங்கே கூட்டிட்டு வந்தேன்னு நினைக்கிறியா ச்சீ என்னை எவ்வளவு சீப்பா நினைச்சுட்ட போடி நீ பெரிய இது உன்னைப் போயி லவ் பண்ணி என்றவன் அவள் முகத்தில் அங்கு கிடந்த உடையை விட்டெறிந்து விட்டு அறையை விட்டு கிளம்பினான்.

 

அவள் உடை மாற்றி வந்தவள் விக்கி என்று ஏதோ சொல்ல வர நான் உன் உடம்பு மேல ஆசைப்பட்டு உனக்கு முத்தம் கொடுக்கவில்லை. உன்னை அந்த மாதிரி பார்த்ததும் என்னை அறியாமல் நடந்த தப்பு அதற்கு மன்னிப்பு கேட்டுக்கிறேன். இன்னைக்கு நடந்தது  மட்டும் இல்லை இதுவரை நாம பழகினதையும் கெட்ட கனவா நினைச்சு நீ மறக்கிறது தான் நம்ம இரண்டு பேருக்குமே நல்லது.

 

உன்னை சத்தியமா தப்பான எண்ணத்தோட என் வீட்டிற்கு அழைச்சுட்டு வரவில்லை. ஆரம்பத்தில் உன் கூட பழகினது உன் குடும்பத்தை பழி வாங்க நினைச்சு தான் ஆனால் என்னை அறியாமலே உன்னை உண்மையா நேசிக்க ஆரம்பிச்சேன். ஏதோ ஒரு வேகத்தில் நான் பண்ணின தப்புக்கு என்னை ஒரு பொம்பளை பொறுக்கி ரேஞ்ச்ல நீ நினைச்சுட்டில ஊர்மி இனி எப்பவுமே இந்த விக்னேஷ் உன் முன்னே வர மாட்டேன். உன் முகத்திலும் விழிக்க மாட்டேன் குட்பை என்று சொல்லி விட்டு அவளை இறக்கி விட்டு சென்றான்.

 

அவன் சொன்ன படியே அவளை அன்றிலிருந்து பார்க்கவில்லை, பேசவில்லை அவளது எண்ணை கூட ப்ளாக் செய்து விட்டான்.

 

அதன் பிறகு எத்தனையோ முறை அவனுக்கு அவள் போன் செய்தும் அவனை தொடர்பு கொள்ள முடியவில்லை.

 

அதை நினைத்த ஊர்மிளா தன் அன்னையே தன்னை நம்பாமல் சந்தேகம் கொண்டிருப்பதை நினைத்து அழுதாள்.

 

என்ன சொல்லுற வாசவி என்று அதிர்ந்த சாந்தமூர்த்தியிடம் ஆமாம் அப்பா நம்ம ரியா என்று அவளும் அழுதிட சாந்தமூர்த்தியோ நெஞ்சைப் பிடித்துக் கொண்டு விழுந்தார்.

 

என்ன செழியன் இப்படி ஆகிருச்சு என்ற சரவணனிடம் அதான் சார் எனக்கும் ஒன்றும் புரியலை என்றான் செழியன். இவளை அரஸ்ட் பண்ணி உள்ளே தள்ளனும்னு நாம நினைச்சு வந்தால் இப்படி செத்துக் கிடக்கிறாளே என்று கடுப்புடன் சொன்ன சரவணன் பார்மாலிட்டிஸ் எல்லாம் பாருங்க. இவளோட வீட்டிற்கு இன்பார்ம் பண்ணிருங்க என்று சரவணன் சென்று விட செழியன் ரியாவின் இறந்த உடலை அமரர் ஊர்தியில் எற்றினான் மருத்துவமனைக்கு கொண்டு செல்வதற்காக.

 

என் பொண்ணை கொலை பண்ணின அந்த பொறுக்கிங்க யாரு வாசவி என்ற சாந்தமூர்த்தியிடம் யாரா உங்க பொண்ணு என் தங்கச்சியை கொலை பண்ண ஏற்பாடு பண்ணினவங்க தான் சார் என்றான் சரவணன். என்ன சொல்லுறிங்க ஏசிபி என் சாந்தமூர்த்தியிடம் ஏய் அல்லக்கை நீ எதுவும் சொல்லவில்லையா இல்லை மிஸ்டர் சாந்தமூர்த்தி தெரிஞ்சும் தெரியாத மாதிரி நடிக்கிறாரா என்றிட அப்பாவுக்கு தெரியாது சார் என்றாள் வாசவி.

 

என்ன பேசிட்டு இருக்கிங்க வாசவி தெளிவா சொல்லு என்ற சாந்தமூர்த்தியிடம் வாசவி சொல்ல ஆரம்பித்தாள்.

 

அப்பா ரியா காலேஜ் பர்ஸ்ட் இயர் படிக்கும் பொழுது அவளோட சீனியர் தேவச்சந்திரனை லவ் பண்ணினாள். அதை அவன் கிட்ட சொன்ன பொழுது அவன் அவளை ரிஜக்ட் பண்ணிட்டான்.

 

அவன் மேல பயங்கர கோபமா அவள் இருந்த சமயத்தில் தான் நீங்கள் அவளை வெளிநாட்டிற்கு படிக்க அனுப்பி வச்சிங்க. 

 

படிப்பு முடிஞ்சு அவள் திரும்ப வந்த பொழுது அந்த தேவச்சந்திரன் ஒரு பொண்ணு கூட காரில் அதுவும் நம்ம காலேஜ் வாசலில் சிரிச்சுக்கிட்டே போனதை பார்த்துட்டு அந்த பொண்ணோட விவரத்தை விசாரிச்சு பார்த்தாள். அவனோட டிவின் ப்ரதரும் அவனைப் போலவே இருப்பான்னு தெரியாத ரியா அந்தப் பொண்ணு தேவச்சந்திரனோட மனைவினு நினைச்சு அவளை பாலோவ் பண்ணினாள்.

 

அவளும் தன் ஹஸ்பண்ட் நேம் சந்துருனு சொல்லி அவ ப்ரண்ட் கிட்ட பேசிட்டு இருந்ததை தப்பா புரிஞ்சுகிட்டு அவளை கொலை பண்ண ஆள் செட் பண்ணினாள். அதுவும் ராபெரி போல செட் பண்ணி அவளை கொலை பண்ண திட்டம் போட்டு ஆனால் அந்தப் பொண்ணு பிழைச்சுட்டாள் என்றாள் வாசவி.

 

அப்பறம் அந்த கூட்டத்து தலைவன் சந்தீப் எப்படுயோ போலீஸ்ல மாட்டி ரியா தான் அந்த மர்டர் அட்டம்ட் பண்ண சொன்னதுன்னு சொல்லப் போறான்னு பயந்து அவனை ஸ்டேசன்லையே வச்சு கொலை பண்ணிட்டதா சொன்னாள். அந்த சந்தீப்போட ஆட்கள் தான் நம்ம ரியாவை ராபெரி பண்ண வந்தது போலவே கொலை பண்ணிட்டாங்க என்று அழுதாள் வாசவி.

 

ஏய் நிறுத்து அந்த சந்தீப்போட ஆட்கள் தான் ரியாவை கொலை பண்ணினாங்கனு உனக்கு எப்படி தெரியும் என்ற சரவணனிடம் அவங்க தான் எனக்கு போன் பண்ணி சொன்னாங்க. எங்க அண்ணாவை கொலை பண்ண ஆள் அனுப்பினவள் நடு ரோட்டில் பிணமா செத்துக் கிடக்கிறாள் வந்து பொறுக்கி அள்ளிட்டு போன்னு என்று அழுதாள் வாசவி.

 

ஐயோ, கடவுளே தாயில்லாத பொண்ணுனு செல்லம் கொடுத்து வளர்த்தேனே இப்படி தறுதலையா வளர்ந்திருக்காளே. கடைசியில் இப்படி பிணமா போயிட்டியே ரியா என்று தலையில் அடித்துக் கொண்டு அழுதார் சாந்தமூர்த்தி.

 

என்ன சொல்லுற மச்சான் நீ சொல்லுறது எல்லாம் நிசம் தானா என்ற கனிமொழியிடம் ஆமாம் கனி நம்ம ரோனிக்கு வைக்காத வலையில் அவள் சிக்கி பாவம் என் தங்கச்சி என்று கண்ணீர் வடித்தான் சரவணன். அதான் நம்ம ரோனிக்கு கெடுதல் நினைச்சவளை அந்த கடவுள் கொன்னுட்டாரே அப்பறம் என்ன மச்சான் விடு எல்லாம் சரியாகிரும்.

 

உன் தங்கச்சி யாரையும் கெடுக்க நினைக்கிறவள் இல்லை. அவளுக்கு எல்லாமே நல்லதா தான் நடக்கும் என்றாள் கனிமொழி. 

 

என்ன மாமா ஏதோ யோசனையா இருக்கிங்க என்ற உதயச்சந்திரனிடம் ஒன்றும் இல்லை ரோனி என்றான் உதய்.  என்னம்மோ யோசிச்சிங்க நான் கேட்டதும் ஒன்றும் இல்லைன்னு சொல்லுறிங்க என்றவளிடம் விவேக் மாப்பிள்ளை போன் பண்ணினாரு.

 

அந்த விக்னேஷ்கிட்ட ஊர்மிளாவை காதலிக்கிறியான்னு கேட்டதுக்கு அப்படி எதுவுமே இல்லைன்னு சொல்லிட்டானாம். அந்தப் பொண்ணு மனசுல இருக்கிற எண்ணத்திற்கு எல்லாம் நான் விளக்கம் கொடுக்க முடியாதுன்னு கோபமா சண்டை போட்டுட்டானாம் என்றான் உதய்.

 

சரி மாமா சாப்பிடலாமா எனக்கு பசிக்குது என்றவளிடம் என்ன ரோனி திருந்திட்டியா என்றான் உதய். ஊர்மிளாவோட எந்த விசயத்திலும் தலையிட மாட்டேன்னு நான் என் சந்துரு மாமாகிட்ட சத்தியம் பண்ணிருக்கேன். அதுவும் என் சந்துரு மாமா மேல அதனால உங்க தங்கச்சி பற்றி என்ன கவலைப் படணுமோ அதை தனியாவே பட்டுக்கோங்க என்றாள் வெரோனிகா.

 

அவளது நெற்றியில் முத்தமிட்டவன் குட் இனிமேல் நீ உன்னோட படிப்புல மட்டும் கவனம் செலுத்து மற்ற பிரச்சனை எல்லாம் நான் பார்த்துக் கொள்கிறேன் என்றான் உதய்.

 

அடுத்தடுத்து வந்த நாட்கள் அமைதியாக கழிந்தது. ஊர்மிளா எவ்வளவு முயன்றும் ஏனோ விக்னேஷிடம் அவள் பேசவே முடியவில்லை. அவன் அவளை நெருங்க விடவே இல்லை. அவளும் தினமும் இரவில் தனிமையில் அவனை நினைத்து அழ ஆரம்பித்தாள்.

 

அன்று ஊர்மிளாவின் பிறந்தநாள். பதினெட்டாவது பிறந்தநாள். இந்திரஜா காலையில் எழுந்தவள் ஊர்மிளாவின் அறைக்கதவை தட்டிட கதவைத் திறந்தாள் ஊர்மிளா. ஹாப்பி பர்த்டே ஊர்மி என்றிட தாங்க்ஸ் அண்ணி என்றாள் ஊர்மிளா.

 

அம்மா என்ற ஊர்மிளாவிடம் என்னம்மா என்றார் சுசீலா. இன்னைக்கு என்ன நாள் என்ற ஊர்மிளாவிடம் வியாழக்கிழமை என்று சுசீலா கூறிட கோபமாக சென்று விட்டாள் ஊர்மிளா.

 

     அத்தியாயம் 118

 

என்ன அத்தை நீங்க இன்னைக்கு அவளோட பர்த்டே என்ற இந்திரஜாவிடம் தெரியும் தெரிஞ்சு தான் அவளை அவாய்ட் பண்ணினேன் என்ற சுசீலா தன் வேலையை கவனித்தார். அத்தை என்று ஏதோ கூற வந்த இந்திரஜாவிடம் எவ்வளவு சந்தோசமா இருந்த வீடுடி இது இன்னைக்கு ஒருத்தர் முகத்தை ஒருத்தர் பார்த்து பேசி சிரிக்க கூட முடியாத அளவுக்கு உன் நாத்தனார் பேசி வச்சுருக்கா. அக்காவை கையை பிடிச்சு நினைச்சாலே எரிச்சலா இருக்கு. இதை ஒன்று நான் கருவிலே சிதைச்சுருக்கனும், இல்லையா இது பிறந்த அன்னைக்கே கள்ளிப்பாலை ஊத்தி கொன்னுருக்கனும் என்று கோபமாக திட்டி விட்டு சென்று விட்டார் சுசீலா.

 

என்ன இந்து ஏன் டல்லா இருக்க என்ற பிரகாஷிடம் தன் மாமியாரிடம் பேசிய உரையாடலைக் கூறியவள் அத்தை ஏன் பிரகாஷ் அவள் மேல இத்தனை கோபமா இருக்காங்க. ரோனி கூட ஊர்மிளாவை இந்நேரம் மன்னிச்சுருப்பாள் என்றாள் இந்திரஜா. அது அண்ணியோட பெருந்தன்மை இந்து ஆனால் ஊர்மிளா பண்ணினது, பேசினது எல்லாமே ரொம்ப தப்பு. நாம கூட்டுக் குடும்பமா இருக்கும் பொழுது பிரகாஷ் மட்டும் தான் என் கூடப் பிறந்தவன். அவன் மட்டும் தான் அண்ணன்னு சொல்லி இருக்கிறாளே அது எவ்வளவு பெரிய தப்பு. இதுவரை பெரியம்மாவோ, அம்மாவோ , அர்ச்சனாவோ நான் வேற , உதய் அண்ணா, தேவ் அண்ணா வேறனு பிரிச்சு பார்த்திருக்காங்களா ஏன் ரோனி அண்ணி தேவ் அண்ணனை விட என் கூட தான் அட்டாச். இப்படி நாம ஒரே குடும்பமா இருக்கும் பொழுது குடும்பத்தை உடைக்கிற மாதிரி பேசுறது எவ்வளவு பெரிய தப்பு. செய்த தப்பை அவள் இதுவரை உணரவும் இல்லை அது தான் அம்மாவோட கோபத்திற்கு காரணம் என்றான் பிரகாஷ்.

 

புரியுது பிரகாஷ் ஆனாலும் அவளோட பர்த்டே அதுவுமா அத்தை அவளை அவாய்ட் பண்ணது மட்டும் இல்லாமல் இவ்வளவு கோபமா பேசிருக்க கூடாது என்றவள் நீ வந்து அவள் கிட்ட பேசேன் என்றாள். அவள் கிட்ட எதற்கு பேசனும் இந்து என்றவனிடம் நீ அவளோட அண்ணா என்றாள் இந்திரஜா. நான் மட்டும் அண்ணன் இல்லை உதய் அண்ணா, தேவ் அணணாகூட தான்அவளோட அண்ணன். அவங்க இரண்டு பேரோட மனைவியையும் இவள் காயப் படுத்தி இருக்கிறாள். அவள் செய்த தப்பை எப்போ உணர்ந்து ரோனி அண்ணி, ஸ்ரீஜா அண்ணி இரண்டு பேருகிட்டையும் மன்னிப்பு கேட்கிறாளோ அப்போ தான் அவள் கிட்ட நான் சந்தோசமா பேசுவேன் என்ற பிரகாஷ் எனக்கு வேலை இருக்கு என்று சொல்லி விட்டு கிளம்பினான்.

 

என்ன ரோனி என்ன பண்ணிட்டு இருக்க என்றாள் இந்திரஜா. பொழுது போகவில்லை இந்து அக்கா அதான் எம்ப்ராய்டிங் பண்ணிட்டு இருக்கேன் என்ற வெரோனிகா இந்திரஜாவை பார்த்து சிரித்தாள். இன்னைக்கு என்ன நாள்னு ஞாபகம் இல்லையா ரோனி என்ற இந்திரஜாவிடம் என்ன நாள் அக்கா என்றாள் வெரோனிகா.

 

நம்ம ஊர்மியோட பர்த்டே என்ற இந்திரஜாவிடம் ஓஓ அட ஆமாம்ல மறந்துட்டேன் என்றவள் சரிக்கா அதனால் என்ன என்றாள் வெரோனிகா. நீ அவளுக்கு விஷ் பண்ணவே இல்லை என்றவளிடம் அக்கா என் சார்பா ஈவ்னிங் சந்துரு மாமா விஷ் பண்ணிருவாங்க என்றவள் தன் வேலையை கவனித்திட அவள் உன்னை அடிச்சது பெரிய தப்பு தான் ரோனி அதற்காக அவளை வெறுத்திட்டியா. ஸ்ரீஜா கூட தான் உன்னை அடிச்சுருக்கிறாள் அவளை கூட நீ ஏத்துக்கிட்ட என்ற இந்திரஜாவை பார்த்து சிரித்தவள் அக்கா நான் யாரையும் வெறுக்கவில்லை என்றாள் வெரோனிகா.

 

அப்பறம் ஏன் என்றவளிடம் ஊர்மிளாவோட எந்த விசயத்திலும் தலையிட மாட்டேன்னு சந்துரு மாமாகிட்ட ப்ராமிஸ் பண்ணி கொடுத்திருக்கேன் அதனால ப்ளீஸ் நீங்க என்கிட்ட எதைப் பற்றி வேண்டுமானாலும் பேசுங்க ஊர்மிளா பற்றி எதுவும் பேச வேண்டாம் என்றாள் வெரோனிகா.

 

அர்ச்சனா விசயத்தில் கூட தான் உன்னை தலையிட வேண்டாம்னு உன் சந்துரு மாமா சொன்னாரு ஆனாலும் நீ அன்னைக்கு அந்த விக்னேஷ் உன்னை தள்ளி விட்ட பொழுதும் அர்ச்சனாவும் , விவேக்கும் சேர எல்லா விசயமும் செய்தாயே ரோனி ஏன் அவள் உன்னோட நாத்தனாருன்னா என்றாள் இந்திரஜா.

 

நான் என்னைக்குமே சுசி அத்தை வேற, மலர் அத்தை வேறன்னு நினைத்ததில்லை. அதே போல தான் தேவ் மாமா வேற, பிரகாஷ் மாமா வேறன்னு நினைத்ததில்லை. அர்ச்சனா அண்ணி வேற, ஊர்மிளா வேறன்னும் ஒரு நாளும் நினைத்ததில்லை. அர்ச்சனா அண்ணி விசயத்தில் அர்ச்சனா அண்ணிக்கு என்னோட சப்போர்ட் தேவைப் பட்டது அதனால அவங்க கூட நிற்க வேண்டியது என்னோட கடமை. ஊர்மிளா விசயத்தில் நான் தான் தப்புனு அவள் நம்புகிறாள். அதனால நான் ஒதுங்கி நிற்கிறேன். நீங்க சம்பந்தமே இல்லாத இரண்டு விசயத்தை முடிச்சு போடாதிங்க அக்கா ப்ளீஸ் என்றாள் வெரோனிகா.

 

என்னைக்காவது நான் ஊர்மிளா வேற , அர்ச்சனா அண்ணி வேறன்னு பாகுபாடு பார்த்திருந்தேன்னு உங்களுக்கு நிஜமாவே தோன்றி இருந்தால் சொல்லுங்க. நான் எப்படிப் பட்டவள்னு உங்களுக்கு நல்லாவே தெரியும் இருந்தாலும் பரவாயில்லை. என் இந்து அக்கா தானே சொன்னிங்க என்றவள் எழுந்து சென்று விட இந்திரஜாவிற்குத் தான் ஒரு மாதிரி ஆகிவிட்டது.

 

ரோனி நான் உன்னை என்ற இந்திரஜாவிடம் எப்படியாவது என்னை அவள் கூட சகஜமா பேச வைக்க ட்ரை பண்ணுறிங்க.  அக்கா நான் மனுஷி எத்தனை முறை தான் நானும் காயத்தை பொறுத்து பொறுத்து போக முடியும். எனக்கும் மானம், ரோசம் எல்லாமே இருக்கு. சுயமரியாதை எல்லோருக்குமே ரொம்ப முக்கியம் தானே அதனால தயவுசெய்து இனிமேல் ஊர்மிளா பற்றி எதுவும் என்கிட்ட பேசாதிங்க என்றாள் வெரோனிகா. ஸாரி ரோனி என்ற இந்திரஜா தன்னறைக்கு சென்று விட்டாள்.

 

என்னடி உன் பிரச்சனை என்ற ஸ்ரீஜாவிடம் எனக்கு என்ன பிரச்சனை என்றாள் இந்திரஜா. அப்பறம் ஏன் உன் நாத்தனாருக்காக எல்லோர்கிட்டையும் கெஞ்சிட்டு இருக்க என்ற ஸ்ரீஜா இப்படித்தான் அந்த ரோனி அவளுக்கு நிறைய சப்போர்ட் பண்ணிட்டு இருந்தால் அவளையே அடிச்சு அசிங்கப் படுத்தினதோட இல்லாமல் என்ன பேச்சு அவளுக்கு குழந்தை அபார்ட் ஆனது கடவுள் கொடுத்த தண்டனையாம் இவள் சொல்கிறாள். அந்தப் பொண்ணு எவ்வளவு வேதனைப் பட்டிருக்கும் அவள் கூட அவ்வளவு அட்டாச் ஆகாத எனக்கே வலிச்சதுடி நீ அவளை தங்கச்சி, தங்கச்சினு சொல்லிட்டு சுத்துவ உனக்கு வலிக்கவில்லையா என்றாள்.

 

அக்கா ஊர்மிளா பேசினது மன்னிக்க முடியாத தப்பு நான் மறுக்கவில்லை ஆனால் என்று இழுத்த இந்திரஜாவிடம் அப்பறம் என்னடீ ஆனால் சும்மா உன் நாத்தனாருக்கு சப்போர்ட் பண்ணுறேன்னு சொல்லி ரோனி மனசை காயப் படுத்தாதே என்ற ஸ்ரீஜா அவள் பாவம்டி என்று விட்டு சென்றாள்.

 

என்ன ரோனி எதற்காக ஸ்கூலுக்கு வந்திருக்க என்ற உதய்யிடம் உங்களை பார்க்க தான் மாமா வரக்கூடாதா என்றாள் வெரோனிகா. நான் எப்போடி நீ வர வேண்டாம்னு சொன்னேன் என்றவன் ஆமாம் நீ எப்படி வந்த என்றான். ஆட்டோல தான் மாமா என்ற வெரோனிகா மாமா கோபம் பட மாட்டிங்கனா ஒரு விசயம் சொல்லட்டா என்றவளை புன்னகையுடன் பார்த்தவன் என்ன விசயம் சொல்லு என்றான்.

 

இன்னைக்கு ஊர்மிளாவோட பர்த்டே நான் விஷ் ஏதும் பண்ணவில்லை முறைக்காதிங்க நான் சத்தியம் பண்ணி கொடுத்திருக்கேன். அவள் கிட்ட பேசவே மாட்டேன் என்றவள் அத்தை அவளை காலையிலே இன்சல்ட் பண்ணிட்டாங்களாம். இந்து அக்கா சொன்னாங்க அவள் தப்பே பண்ணி இருந்தாலும் உங்க தங்கச்சி தானே நீங்கள் ஒரு விஷ் பண்ணலாம்ல என்றவளிடம் சரி ரோனி நான் கண்டிப்பா விஷ் பண்ணுறேன். 

 

இதை சொல்ல தான் நேரில் வந்தியா போன்லையே சொல்லிருக்கலாமே என்றவனிடம் எனக்கு உங்க கூட வெளியே போகனும்னு ஆசை அதான் நேரில் வந்தேன் என்றவளை முறைத்தவன் எனக்கு க்ளாஸ் இருக்குடி என்றான்.

 

பொண்டாட்டி மேல லவ் இருந்தால் எவ்வளவு பிஸியா இருந்தாலும் அவளுக்காக டைம் ஃப்ரீ பண்ணிக்குவாங்களாம் என்று முகத்தை அப்பாவியாக வைத்துக் கொண்டு அவள் கூறிட ஏன்டி இப்போ நான் லீவு போட்டுட்டு வந்தால் தான் உன்னை லவ் பண்ணுறேன்னு அர்த்தமா என்றான் உதயச்சந்திரன்.

 

அப்படித்தான்னு வச்சுக்கோங்களேன் என்றவளைப் பார்த்து சிரித்தவன் உன்னை என்று அவளது காதை திருகினான் உதய். டேய் சந்துரு காது வலிக்குதுடா என்றிட அவளது காதை விட்டவன் என்னடி சொன்ன டேய் சந்துருவா உன்னை என்று அவளை பிடிக்க வர லவ் யூ மாமா என்று கண்ணடித்தவள் ஓடிச் சென்றாள்.

 

கிறுக்கச்சி, கிறுக்கச்சி என்னை கிறுக்குப் பயலா மாத்திருவாள் கிறுக்கச்சி என்று தானாக புலம்பியவன் பள்ளியில் விடுப்பு  சொல்லி விட்டு மனைவியுடன் கிளம்பினான்.

 

எங்கேடி போகலாம் என்றவனிடம் ஷாப்பிங் மாமா ஊர்மிளாவுக்கு டிரஸ், கேக் எல்லாம் வாங்கனுமே என்றிட அவளை முறைத்தவன் சரி வந்து சேரு என்று அவள் சொன்னதெல்லாம் வாங்கி விட்டு அவளுடன் கிளம்பிட மாமா நான் ஆட்டோவில் போகிறேன். நீங்க இதெல்லாம் வாங்கிட்டு வந்தது போல அவள் கிட்ட கொடுங்க என்றாள் வெரோனிகா.

 

அவளை முறைத்தவனிடம் மாமா நான் என் சந்துரு மாமா பேச்சுக்கு கட்டுப்பட்டு நடக்கிறேன் என்றவளைப் பார்த்து சிரித்தவன் நீ கிறுக்கச்சி தான்டி என்று சொல்லி விட்டு அவளை ஆட்டோவில் வீட்டிற்கு அனுப்பி வைத்தான்.

 

வீட்டிற்கு வந்த உதய் ஊர்மிளாவின் அறைக்கு செல்ல அங்கு மெத்தையில் அழுது கொண்டு அமர்ந்திருந்தாள் ஊர்மிளா. ஊர்மிளா என்ற உதய்யின் சத்தத்தில் நிமிர்ந்தவள் கண்களை துடைத்துக் கொண்டு வாங்க அண்ணா என்றாள்.

 

என்ன ஊர்மி இங்கே என்ன பண்ணிட்டு இருக்க ஏன் அழுதுருக்க என்றிட ஒன்றும் இல்லை அண்ணா என்றாள். என்ன ஒன்றும் இல்லை. இன்னைக்கு உன்னோட பிறந்தநாள் இப்படி அழுதுட்டு இருக்கலாமா என்றவன் ஹாப்பி பர்த்டே ஊர்மிளா என்றிட தாங்க்ஸ் அண்ணா என்றவள் அவனைக் கட்டிக்கொள்ள அண்ணா உன் பர்த்டேக்காக டிரஸ் எடுத்துட்டு வந்திருக்கேன் போ போயி டிரஸ் சேஞ்ச் பண்ணிட்டு கீழே வா என்றிட எதற்கு அண்ணா என்றாள் ஊர்மிளா.

 

கேக் கட் பண்ண வேண்டாமா ஓடு ஓடு என்று அவளை விரட்டியவன் கீழே சென்று கேக் வெட்ட ஏற்பாடு செய்ய ஆரம்பித்தான்.

 

என்ன பண்ணிட்டு இருக்க உதய் என்ற சுசீலாவிடம் ஊர்மியோட பர்த்டே சித்தி செலிபரேட் பண்ண வேண்டாமா என்றவன் இந்து கொஞ்சம் வந்து எனக்கு ஹெல்ப் பண்ணு ப்ளீஸ் என்றிட இந்திரஜா அவனுக்கு உதவி செய்தாள்.

 

       அத்தியாயம் 119

 

என்னடா யோசணை என்ற சகுந்தலாவிடம் அம்மா நான் ஒரு பெரிய தப்பு பண்ணிட்டேன். எனக்கு மனசு உறுத்தலாவே இருக்கு என்று அழுதான் விக்னேஷ். அப்படி என்னப்பா தப்பு பண்ணின என்ற சகுந்தலாவிடம் நான் ஊர்மிளான்னு ஒரு பொண்ணை லவ் பண்ணினேன் . சத்தியமா அவளை உண்மையா தான் லவ் பண்ணினேன். பண்ணிட்டு இருக்கிறேன் என்றான்.

 

லவ் பண்ணுறது ஒன்றும் தப்பில்லையே நம்ம சௌமியா கூட அவள் கூட வேலை பார்க்கிற பையனை லவ் பண்ணுறதா சொன்னாளே அதற்கு அப்பா சம்மதம் சொல்லி நாளைக்கு பொண்ணு பார்க்க அவங்க வராங்களே என்றார் சகுந்தலா.

 

சரி அந்த ஊர்மிளா யாருன்னு சொல்லு அம்மா போயி பேசி முடிச்சுடுறேன். உனக்கும் , சௌமியாவுக்கும் ஒரே மேடையிலே கல்யாணத்தை முடிச்சுரலாம் என்ன சொல்லுற என்ற சகுந்தலாவிடம் அந்த ஊர்மிளா வேற யாரும் இல்லை நம்ம விவேக் வொய்ப் அர்ச்சனாவோட சிஸ்டர் என்றான் விக்னேஷ்.

 

என்னடா சொல்லுற அவள் உனக்கு தங்கச்சி முறை வருமே என்ற சகுந்தலாவை முறைத்தவன் என்னம்மா நீ லூசு மாதிரி பேசுற கூடப் பிறந்தால் மட்டும் தான் தங்கச்சி, உனக்கு தங்கச்சி இருந்து அவங்களுக்கு பொண்ணு இருந்தால் தங்கச்சி, இல்லை அப்பாவோட அண்ணன் , தம்பிகளுக்கு பொண்ணு இருந்தால் அது தங்கச்சி சும்மா ஊர்மிளாவை என்னோட தங்கச்சினு சொல்லாதிங்க இரிட்டேட்டிங்கா இருக்கு என்றான் விக்னேஷ்.

 

மன்னிச்சுருடா நீ சொல்லுறதும் நியாயம் தான் அவள் வேற கிளை தானே அப்பறம் என்ன உங்க அப்பாகிட்ட பேசிப் பார்க்கிறேன் என்றார் சகுந்தலா.

 

இல்லைம்மா வேண்டாம் அப்பா சம்மதிக்கமாட்டாரு அப்பாவே மனசு மாறி சம்மதிச்சாலும் ஊர்மிளா வீட்டில் யாருமே என்னை ஏத்துக்க மாட்டாங்க. அந்த வீட்டோட உயிரே அந்த வெரோனிகா தான். அவளையே கொலை பண்ண பார்த்தேன்னு அந்த மொத்த குடும்பமும் என் மேல கொலை வெறியில் இருக்காங்க என்றான் விக்னேஷ்.

 

விக்கி அவங்க இன்னும்மா அதை எல்லாம் மறக்காமல் ஞாபகத்தில் வச்சுருக்காங்க என்ற சகுந்தலாவைப் பார்த்து கசந்த புன்னகை புரிந்தவன் நான் பண்ணின ஒரு விசயத்தை நம்ம சௌமியாவுக்கு யாராச்சும் பண்ணி இருந்தால் நீ மன்னிப்பியாம்மா என்றான் விக்னேஷ்.

 

அண்ணி இதுவரை என் கிட்ட முகம் கொடுத்து கூட பேச மாட்டேங்கிறாங்க அந்த அளவுக்கு நான் வேண்டாத ஒருத்தனா போயிட்டேன்னா என்ன காரணம் நான் பண்ணின தப்பு.

 

ஆனால் ஊர்மிளா என்னை மன்னிச்சு ஏத்துக்கிட்டாள். நீ ஏதோ கோபத்தில் தப்பு பண்ணிட்ட விக்கி நீ பண்ணின தப்பை உணர்ந்து திருந்தி மனசார ரோனிகிட்ட மன்னிப்பு கேளு அவள் கட்டாயம் உன்னை மன்னிச்சுருவாள்னு சொன்னாள். என் மேல உயிரையே வச்சுருந்தாள். ஒவ்வொரு நாளும் அவள் காட்டுற அன்புல சத்தியமா சொல்கிறேன்மா விக்னேஷ் ஒரு புது மனுசனா பிறந்தேன். அந்த அளவுக்கு ஊர்மிளா என்னை உண்மையா நேசித்தாள் என்று அழுதவன் ஆனால் என்றவன் அன்று வீட்டில் நடந்த நிகழ்வை கூறினான்.

 

அவள் பண்ணினதில் என்ன தப்பு இருக்கு விக்கி. அவள் ஒரு பொண்ணு தனிமையான சூழ்நிலையில் நீ அவளுக்கு முத்தம் கொடுத்ததும் அடுத்து எதுனாலும் விபரீதம் நடந்துருமோன்னு பயத்தில் உன்னை அடிச்சு அப்படி பேசிட்டாள். உடனே உனக்கு ரோசம் வந்துருச்சு.

 

விக்கி நீ சில நேரத்தில் கெட்டவனா நடந்திருக்க நான் மறுக்கவில்லை. ஆனால் என் மகன் பொண்ணுங்க விசயத்தில் நிச்சயம் தப்பானவன் இல்லைன்னு அம்மா நம்பினேன் . அந்த நம்பிக்கை உடையவே இல்லை என்றார் சகுந்தலா.

 

அந்தப் பொண்ணு ஊர்மிளாகிட்ட பேசு விக்கி. அவள் பண்ணினது தப்பே இல்லை. அவள் கோபத்தில் கூட உன்கிட்ட  அப்படி சொல்லிருக்கலாம். அவள் ஒரு பொண்ணு ஐந்து நிமிச சந்தோசத்திற்காக வாழ்க்கையை தொலைக்க முடியுமா அதான் எல்லாம் கல்யாணத்திற்கு பிறகுன்னு அவள் யோசிச்சுருக்கலாம். அதனால ஒரு வேகத்தில் உன்னை தள்ளி விட்டு கோபத்தில் ஏதோ பேசிட்டாள். குற்றம் பார்ப்பின் சுற்றம் இல்லை விக்கி அதனால என் மருமகள் கிட்ட பேசு. மன்னிப்பு கேளு பொண்டாட்டி கிட்ட இறங்கி போற ஆம்பளை ஒன்றும் குறைஞ்சு போயிர மாட்டான். உன் அப்பாவை பார்க்கிற தானே நான் எவ்வளவு பிடிவாதமா இருந்தாலும் எனக்காக பல சூழ்நிலைகளில் விட்டுக்கொடுத்து வாழ்ந்துட்டு இருக்காரு.

 

உன் அண்ணனை எடுத்துக்கோ உன் அண்ணி எவ்வளவு கோபம் பட்டாலும் அவளை அனுசரிச்சு விட்டுக்கொடுத்து வாழ்க்கை நடத்துகிறான் பாரு அது போல தான். நீ ஊர்மிளாகிட்ட பேசு அவளை பிரிஞ்சு நீயும் சந்தோசமா இல்லைன்னு புரிய வை என்றார் சகுந்தலா.

 

சரிங்கம்மா என்றவன் ரொம்ப தாங்க்ஸ் அம்மா என்றிட விக்கி நான் உன்னோட அம்மா. என்கிட்ட தாங்க்ஸ் சொல்லுவியா போடா போயி என் மருமகளை சமாதானம் படுத்து என்று சிரித்து விட்டு சென்று விட்டார்.

 

உடை மாற்றிக் கொண்டிருந்தவளது மொபைல் போன் ஒலித்திட அதில் தெரிந்த எண்ணைக் கண்டவள் சந்தோசமாக அதை அட்டன் செய்தாள்.

 

விக்கி என்று அவள் அழைத்தவுடனே அவளது குரல் உடைந்து அழ ஆரம்பித்தாள். ஊர்மிளா ஏன் அழற என்றவனது குரலும் உடைந்திட அவளது அழுகை மட்டுப்படும் வரை காத்திருந்தான். அழுகை விசும்பலுடன் முடிய ஏன்டி அழுத என்றான். போடா பொறுக்கி எதுக்குடா இத்தனை நாள் இல்லாமல் இப்போ போன் பண்ணின என்றவளிடம் மன்னிச்சுரு ஊர்மி அன்னைக்கு ஏதோ கோபத்தில் என்றவன்  தப்பு தான் ஊர்மி அன்னைக்கு நான் நடந்துக்கிட்ட எல்லாமே தப்பு  தான் என்றிட என் மேல தான் தப்பு விக்கி. நான் தான் உன்னை தப்பா பேசிட்டேன் என்று அவளும் அழுதிட ஹாப்பி பர்த்டே ஊர்மி என்றான். லவ் யூ சோமச் விக்கி என்றவளிடம் ஐ லவ் யூ டூ ஊர்மிளா. ஐ மிஸ் யூ என்றவன் உன்னை பார்க்கனும் போல இருக்குடி என்றிட எப்படி விக்கி வீட்டில் இப்போ ரொம்ப கெடுபிடி. அம்மா எங்கேயுமே என்னை போக விடுறதில்லை என்றாள் ஊர்மிளா.

 

சரி ஒன்று பண்ணலாம் நான் எப்படியாவது இந்து அண்ணிகிட்ட பேசி கோவிலுக்கு வரப் பார்க்கிறேன் என்றவள் உன்னை ரொம்ப மிஸ் பண்ணுறேன் விக்கி என்றாள். நானும் தான் ஊர்மி என்றவன் சரிம்மா நீ கோவிலுக்கு கிளம்பிட்டு போன் பண்ணு என்ற விக்னேஷ் போனை வைத்தான்.

 

என்னடா இதெல்லாம் என்ற மலர்கொடியிடம் அவள் தப்பு பண்ணி இருந்தாலும் என்னோட தங்கச்சி தானம்மா என்ற உதய்யிடம் அவள் பண்ணின தப்பை இதுவரை உணரவே இல்லையே உதய் என்றார் மலர்கொடி.

 

அம்மா எனக்கும் அவள் மேல நிறைய கோபம் இருக்கு இன்னைக்கு அவளோட பர்த்டே. எல்லா வருசமும் சந்தோசமா கொண்டாடிட்டு இந்த வருசம் மட்டும் ஒதுக்கி வச்சது போல இருக்க கூடாதுன்னு ரோனி தான் சொன்னாள். அவள் தான் டிரஸ், கேக் எல்லாம் வாங்க சொல்லி என் கூடவே வந்து வாங்கினாள் என்ற உதய் என் பொண்டாட்டி கேட்டு எதையுமே என்னால மறுக்க முடியாதும்மா என்றான். சரிப்பா என்ற மலர்கொடி ரோனி எங்கே என்றிட அவள் ரூம்ல தான் இருக்கிறாள் என்றான் உதய்.

 

என்னடி பண்ணிட்டு இருக்க என்ற மலர்கொடியிடம் ம்ம்ம் பார்த்தால் தெரியலையா பக்கோடா சாப்பிட்டுட்டு இருக்கேன் என்றாள் வெரோனிகா. என் மகன் வாங்கி கொடுத்தது தானடி எனக்கு கொடுக்காமல் தனியா திங்கிற என்ற மலர்கொடியை பார்த்து முகத்தை வெட்டியவள் உங்களுக்கும் தான் மாமா வாங்கி தராங்க நீங்க என்ன ஆச்சிக்கு கொடுத்துட்டா திங்கிறிங்க என்றவள் சரி சரி உங்களை பார்க்க வச்சுட்டு தின்னா எனக்கு தான் வயிறு வலிக்கும் என்றவள் பக்கோடாவை நீட்டிட வாயாடிக் கழுதை உன்னை என்றவர் அவளை தன் தோளோடு அணைத்தபடி அமர்ந்தார்.

 

சாப்பிடுங்க அத்தை என்றவளிடம் ஏன்டி இதெல்லாம் பண்ணுற. அவள் உன்னை அடிச்சு, அசிங்கப் படுத்தி இருக்கிறாள் என்ற மலர்கொடியிடம் இது என் குடும்பம் அத்தை. இங்கே உள்ளவங்க எல்லோரும் என்னோட உறவு. அவள் தப்பு பண்ணிட்டாங்கிறதுக்காக அவளை ஒதுக்க முடியுமா. ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டம் தானே அவள் அந்த விக்னேஷ் மேல உள்ள ஆசையால கோபத்தில் வார்த்தைகளை கொட்டிட்டாள். அதற்காக அவளை விட்டு நான் விலகி இருக்கலாம். அவளை இந்த வீட்டை விட்டு விலக்கி வைக்க முடியாது.

 

தப்பு பண்ணுறது மனித இயல்பு தானே மன்னிக்கிறது தானே மனிதனோட குணம் என்ற வெரோனிகாவை அணைத்துக் கொண்டவள் உன் அம்மா உன்னை ரொம்ப வளர்த்திருக்காங்க வெரோனிகா இத்தனை வயசுல எனக்கு இல்லாத பக்குவம் உனக்கு இந்த வயசுலையே இருக்கேடி. நீ ஏன்டி என் வயிற்றில் பிறக்காமல் போயிட்ட என்ற மலர்கொடியிடம் உங்க வயிற்றில் பிறந்திருந்தால் உங்களை விட்டு பிரிஞ்சு போயிருப்பேனே அர்ச்சனா அண்ணி போல என்றவள் உங்க மருமகளா வந்ததால இப்போ வாழ்க்கை முழுக்க உங்க கூடவே இருப்பேன் என்று சிரித்தாள் வெரோனிகா.

 

என் செல்லம்டி நீ அத்தை உன்னை பலமுறை காயப் படுத்தி இருக்கேன் அதற்கு எல்லாம் என்னை மன்னிச்சுருடி என்றவரிடம் அத்தை அதெல்லாம் நான் மறந்து ரொம்ப நாள் ஆச்சு என்றவள் சிரித்திட அவளது நெற்றியில் முத்தமிட்டார் மலர்கொடி.

 

என்னடி மாமியாரும், மருமகளும் கொஞ்சிட்டு இருக்கிங்க என்ற கல்யாணிதேவியிடம் என் மாமியார் என்னை கொஞ்சுறாங்க உங்களுக்கு என்ன பிரச்சனை அதான் உங்களுக்கும் ஒன்றுக்கு, இரண்டு மருமகள் இருக்காங்களே போயி கொஞ்சிக்கோங்க யாரு வேண்டாம்னு சொன்னாங்க என்றாள் வெரோனிகா.

 

அடி வாயாடிக் கழுதை நீ எவடி எனக்கு பர்மிசன் கொடுக்க என் மருமகளுகளை நான் கொஞ்சுவேன் , கெஞ்சுவேன் அதை எல்லாம் நீ சொல்ல வேண்டாம் என்றவரிடம் அப்போ நீங்களும் என்னையும், என் மாமியாரையும் கேள்வி கேட்க கூடாது சொல்லிட்டேன் என்று சிரித்தவளது காதை திருகிய கல்யாணிதேவி வாப்பட்டி சிறுக்கி உன்னை எப்படித் தான்  என் பேரன் சமாளிக்கிறானோ என்றார்.

 

அந்தக் காலத்தில் எங்க தாத்தா உங்களையே சமாளிச்சுட்டாரு உங்க பேரன் என்னை சமாளிக்கிறதா பெரிய விசயம் என்று சிரித்தாள் வெரோனிகா. என் கண்ணே பட்டுரும்டி அளவா சிரிடி என்றவர் அவளுக்கு நெற்றி வழித்து சொடுக்கிட்டார்.

 

மலர் இவளுக்கு முதலில் சுத்திப் போடு என்றவர் கீழே வரவில்லையா இரண்டு பேரும் என்றிட வரோம் அத்தை நீங்க போங்க என்றார் மலர்கொடி.

 

கல்யாணிதேவி சென்று விட ஏன்டி இந்த ரூம்ல அந்த டீவி ஏன் எப்போ பாரு தூங்குது. அதை ஆன் பண்ணு எதுனாலும் படம் பார்க்கலாம் என்றார் மலர்கொடி. அப்போ கீழே போகவில்லையா நீங்க என்றவளிடம் மனசுல சந்தோசத்தோட ஒருத்தரை வாழ்த்தனும் ரோனி என்னால இப்போ இருக்கிற மனநிலைமையில் அவளை வாழ்த்த முடியாது அதனால நாம போக வேண்டாம் என்ற மலர்கொடி அமைதியாக அமர்ந்து விட டீவியை ஆன் செய்தாள் வெரோனிகா..

 

        அத்தியாயம் 120

 

நீங்கள் போகவில்லைனா சுசீலா அத்தை எதுவும் நினைச்சுக்க மாட்டாங்களா என்ற வெரோனிகாவிடம் அவள் என் தங்கச்சி என்னைப் பற்றி அவளுக்கு நல்லாவே தெரியும். அவள் எதுவும் நினைக்க மாட்டாள் நீ அந்த பக்கோடாவை கொடு என்றார் மலர்கொடி.

 

வந்ததில் இருந்து இந்த பக்கோடா மேல தான் கண்ணு என்று முகத்தை வெட்டியவள் அவரை இடித்துக் கொண்டு அமர்ந்தாள். ஏன்டி இம்புட்டு இடம் இருக்கு இப்படி ஒட்டி உரசிட்டு தான் வந்து உட்காருவியா என்ற மலர்கொடியிடம் என் மாமியாரை நான் இடிச்சுட்டு தான் உட்காருவேன். ஏன் என் மாமியார் மடியில் கூட உட்காருவேன் உங்களுக்கு என்ன பிரச்சனை என்று சிரித்தாள் வெரோனிகா.

 

என்ன மாமா அத்தையும், ரோனியும் வரவில்லை என்ற இந்திரஜாவிடம் இந்து எல்லோரும் எல்லா விசயத்தையும் மறக்கனும்னு அவசியம் இல்லை. நீ உன் நாத்தனாருங்கிற பாசத்தில் எல்லாம் பண்ணுற வெரோனிகா அதை பண்ணனும்னு அவசியம் இல்லையே என்றார் சுசீலா. அத்தை என்ன பேசுறிங்க என்ற இந்திரஜாவிடம் உன் நாத்தனார் தான்மா சொன்னாள் இந்திரஜா அண்ணி மட்டும் தான் என் பிரகாஷ் அண்ணனோட மனைவி. அப்போ அவங்க மட்டும் தான் என்னோட அண்ணினு என்றவர் ரோனி என்ன மானம், ரோசம் இல்லாதவள்னு நினைக்கிறியா. ஒருத்தி சிரிச்சுட்டே கடந்து போகிறாள் என்பதற்காக அவளை இளிச்சவாயின்னு தப்பா நினைச்சுறக் கூடாது. உறவுகள் வேண்டும்னு அவள் அமைதியா போனாள். நீ உறவே இல்லைன்னு சொன்ன பிறகு அவள் என்ன பண்ணுவாள் சொல்லு அதனால நீ வெரோனிகாவை வரவில்லைன்னு எதுவும் நினைக்காதே என்றார் சுசீலா.

 

அவளை நீங்களாவது புரிஞ்சுகிட்டிங்களே சித்தி என்றவனிடம் புன்னகையை பதிலாக அளித்தார் சுசீலா.

 

ஊர்மிளா வரவும் கேக் வெட்டப் பட்டது. எல்லோருமே ஒப்புக்கு தான் சிரிக்கிறார்கள் என்று தெரிந்தாலும் ஊர்மிளா அதை காட்டிக் கொள்ளவில்லை. அம்மா நான் அண்ணி கூட கோவிலுக்கு போகட்டுமா என்றாள் ஊர்மிளா.

 

என்ன திடீர்னு நீ இதுவரை கோவிலுக்கெல்லாம் போயி நான் பார்த்ததே இல்லையே என்ற சுசீலாவிடம் இன்னைக்கு என்னோட பர்த்டே என்று இழுத்தவளிடம் சரி போயிட்டு வா என்றார் சுசீலா.

 

அப்பாடா எங்கே போக வேண்டாம்னு சொல்லிருவாங்களோன்னு பயந்துட்டே இருந்தேன் என்று நினைத்தவள் விக்னேஷிற்கு மெசேஜ் அனுப்பி விட்டு கோவிலுக்கு கிளம்பினாள்.

 

என்ன அண்ணி சொல்றிங்க என்ற ஊர்மிளாவிடம் என்னடி பண்ண சொல்லுற திடீர்னு இப்படி ஆகிருச்சு என்னால வர முடியாது ஊர்மிளா என்றாள் இந்திரஜா. அண்ணி என்ன இப்படி சொல்லிட்டிங்க என்றவள் அம்மா என்னை தனியா அனுப்ப மாட்டாங்களே என்று நினைத்துக் கொண்டு அமைதியாக சென்று விட்டாள்.

 

இந்திரஜா வயிற்று வலியால் தன்னறையில் படுத்து விட சுசீலாவோ சமையல் கட்டில் வேலையாக இருந்தார். ஊர்மிளா தனியாகவே கிளம்பி கோவிலுக்கு சென்று விட்டாள்.

 

என்ன மாமியாரும் , மருமகளும் சந்தோசமா டீவி பார்த்துட்டு இருக்கிங்க என்று வந்த உதயச்சந்திரனிடம் என்னடா பிரச்சனை ஆளாளுக்கு வந்து மாமியாரும், மருமகளும் என்ன பண்ணுறிங்க, டீவி பாக்குறிங்களானு கேட்டுட்டு இப்போ தான் நாங்க இரண்டு பேரும் சேர்ந்து இருந்தால் உடனே மூக்கு வேர்த்திருமா என்றார் மலர்கொடி.

 

என்ன டீவி பார்க்கிறிங்களான்னு தானே மம்மி கேட்டேன் அதற்கு ஏன் இத்தனை கோபம் நானும் உங்க கூட ஜாயின் பண்ணிக்க தான் கேட்டேன் என்று உதய் பம்மியதும் சிரித்து விட்டார் மலர்கொடி. அத்தை மாமா பயந்துட்டாரு  என்ற வெரோனிகாவிடம் நான் ஒன்றும் பயப்படவில்லையே என்றான் உதய். சந்தோசமாக மூன்று பேரும் பேசிக் கொண்டிருந்தனர்.

 

ஊர்மிளா என்ற விக்னேஷைக் கண்டவள்  வேகமாக வந்து அவனது சட்டையைப் பிடித்து அவனது தோளில் சாய்ந்து அழ ஆரம்பித்தாள். விக்னேஷும் அழுதவன் என்னை மன்னிச்சுரு ஊர்மி என்றிட இல்லை விக்னேஷ் நான் தான் தப்பா பேசிட்டேன் என்றவளிடம் இல்லைம்மா நான் அப்படி பண்ணினதும் தானே நீ அப்படி பேசின என்று அவளிடம் மன்னிப்பு கேட்டான். சரி அதை விடு என்றவன் அவளது நெற்றியில் குங்குமத்தை வைத்து விட்டு ஹாப்பி பர்த்டே ஊர்மிளா என்றிட அவனை புன்னகையுடன் பார்த்தாள்.

 

ஊர்மி நான் சொல்றதை கொஞ்சம் பொறுமையா கேளு நீ இனிமேல் வெரோனிகா கூட சண்டை போடாதே என்றான் விக்னேஷ். அவள் என்கிட்ட பேசினால் தானே சண்டை போட இன்னைக்கு என்னோட பர்த்டே அதற்கு விஷ் பண்ண கூட அவளும், பெரியம்மாவும் வரவில்லை என்றாள் ஊர்மிளா. எப்படி வருவாங்க ஊர்மி நீ பேசியது தப்பு தானே என்ற விக்னேஷ் என் அம்மாகிட்ட நம்ம விசயமா பேசினேன் என்றான்.

 

என்ன சொன்னாங்க என்றவளிடம் உங்க வீட்டில் வந்து பேசுறேன்னு சொன்னாங்க நான் தான் உன்னோட படிப்பு முடியட்டும் அப்பறம் பேசிக்கலாம்னு சொல்லிருக்கேன் என்றிட புன்னகைத்தவள் சரி விக்கி நான் வீட்டில் யாருக்கும் தெரியாமல் தான் கோவிலுக்கு வந்தேன். அதனால் கிளம்பட்டுமா என்றவளிடம் பத்திரமா போயிட்டு வா ஊர்மி என்றவன் அவளை அனுப்பி வைத்தான்.

 

என்ன யோசனை என்ற பிரகாஷிடம் இல்லை பெரிய அத்தை, ரோனி இரண்டு பேரும் தான் வரவில்லை சரி் நீ அவளோட அண்ணன் தானே நீ ஏன் வரவில்லை என்றாள் இந்திரஜா. அண்ணனா இருந்தால் அவள் பண்ணின தப்பை எல்லாம் மன்னிக்கனுமா என்ன. அண்ணி வரவில்லை தான் ஆனால் அவள் போட்டிருந்த டிரஸ், வெட்டின கேக் எல்லாம் அண்ணி வாங்கி கொடுத்தது தான். அண்ணி சொல்லாமலா உதய் அண்ணா இதெல்லாம் செய்தாரு என்ற பிரகாஷ் நீ ஏன் இந்து இத்தனை சுயநலமா மாறிட்ட.

 

அன்னைக்கு அர்ச்சனா அவளோட நாத்தனார் குடும்பத்தில் பிரச்சனை வரக்கூடாதுன்னு விக்னேஷ் மேல கொடுத்த கம்ப்ளையண்ட்டை ரோனி அண்ணிகிட்ட சொல்லி வாபஸ் வாங்க சொல்லனும்னு சொன்னப்ப நீ எவ்வளவு கோபம் பட்ட. ரோனி அண்ணிக்காக அவ்வளவு யோசிச்சு பேசுன நீ இன்னைக்கு ஊர்மிளா அவங்களை பேசக் கூடாத அத்தனையும் பேசிருக்கானு தெரிஞ்சும் ஊர்மிளாவுக்கு சப்போர்ட்டா நிற்கிற அதை தான் என்னால புரிஞ்சுக்க முடியலை இந்து என்றான் பிரகாஷ்.

 

ஊர்மிளா மேல எனக்கு கோபம் இல்லைன்னு உனக்கு யார் சொன்னாங்க பிரகாஷ். அவளை அடிச்சு கொல்லனும்ங்கிற அளவுக்கு கோபம் இருக்கு ஆனால் நாம எல்லோரும் கோபத்தை மட்டுமே அவள் கிட்ட காட்டினோம்னா அவள் அந்த விக்கி கூட ஓடிப் போறதே பெட்டர்னு யோசிச்சா என்ன பண்ணுவ சொல்லு.

 

அவளை நாம ஒதுக்கினா நம்ம கிட்ட கிடைக்க வேண்டிய பாசத்தை வெளியில் தேட ஆரம்பிச்சுருவாள். அது அவளுக்கு மட்டும் இல்லை நம்ம யாருக்குமே நல்லது இல்லை. இப்போதைக்கு அவளை அவள் வழியில் போயி தான் சரி பண்ணனும். இப்போ கூட அவள் கோவிலுக்கு எதற்கு போகணும்னு சொன்னால் தெரியுமா அந்த விக்கியை பார்க்க அவன் கூட போனில் பேசினதை நான் கேட்டுட்டேன்.

 

எனக்கு வயிற்று வலி, பீரியட்ஸ்னு பொய் சொல்லி அவளை கோவிலுக்கு போக விடாமல் பண்ணி இருக்கேன். என்ன ஊர்மிளா அந்த விக்னேஷை பார்க்க கோவிலுக்கு கிளம்பினாளா அப்போ அவளுக்கு எவ்வளவு திமிரு என்ற பிரகாஷ் தன் தங்கையின் அறைக்கு சென்று பார்க்க அவள் அங்கு இல்லை.

 

அவள் எங்கே இந்து என்ற பிரகாஷிடம் வீட்டில் தான் இருந்தாள். நான் தான் கோவிலுக்கு போகவில்லையே என்றவளை விடுத்து வெளியில் வந்து பார்க்க ஆட்டோவில் இருந்து இறங்கி வந்து கொண்டிருந்தாள் ஊர்மிளா. இது தான் நீ அவளை தடுத்த லட்சணமா என்று இந்திரஜாவிடம் சீறிவிட்டு எங்கே போன நீ என்றான் தங்கையிடம்.

 

கோவிலுக்கு அண்ணா என்றவளது கன்னத்தில் பளாரென அறைந்தவன் உன் அண்ணி கூட தானே போகிறதா அம்மாகிட்ட பர்மிசன் வாங்கின யார்கிட்டையும் சொல்லாமல் தனியா ஏன் நீ போன என்றான் பிரகாஷ்.

 

இல்லைண்ணா அண்ணிக்கு வயிற்றுவலி என்று இழுத்தவளிடம் அண்ணி வரவில்லைனா உன்னை தனியா போக சொன்னாங்களா யார்கிட்டையும் சொல்லாமல் என்றவன் மீண்டும் அவளை அடிக்க கை ஓங்கிட மாமா என்ன பண்ணுறிங்க என்றாள் வெரோனிகா. இல்லை அண்ணி இவள் என்றவனிடம் பொம்பளைப் பிள்ளையை கை நீட்டி அடிக்கிறது என்ன பழக்கம் என்றவளிடம் இல்லை அண்ணி என்றவன் ஓங்கிய கையை இறக்கினான்.

 

மாமா அவரு என்ற வெரோனிகாவிடம் நீ உள்ளே போ நான் பார்த்துக்கிறேன் என்றவன் பிரகாஷிடம் வந்து என்ன விசயம் பிரகாஷ் ஏன் அவளை அடிக்கிற என்றான்.

 

அண்ணா அவள் என்ற பிரகாஷ் நடந்தவற்றை கூறிட சரி விடு இன்னைக்கு அவளோட பர்த்டே என்றவன் இந்து அவளை உள்ளே அழைச்சுட்டுப் போ என்றான். அண்ணா அவளை என்றவனிடம் விடு பிரகாஷ் என்ற உதய் இந்திரஜாவை பார்த்திட அவள் ஊர்மிளாவை அழைத்துச் சென்றாள்.

 

அறைக்குள் நுழைந்த இந்திரஜா ஊர்மிளாவிடம் எங்கே போன நீ என்றிட அண்ணி கோவிலுக்கு தான் போனேன் அண்ணி என்றாள். விக்னேஷை கோவிலுக்கு வரச் சொல்லி இருக்க அப்படித் தானே என்றிட அண்ணி என்று இழுத்தவளது கன்னத்தில் அறைந்தவள் என்னடி நினைச்சுட்டு இருக்க உன் மனசுல உனக்கு வயசு என்ன இப்பவே காதல் என்று பற்களைக் கடித்தாள் இந்திரஜா.

 

ஏன் அண்ணி ரோனிக்கும் என்னோட வயசு தானே அவளுக்கு கல்யாணமே முடிஞ்சுருச்சு என்றவளின் கன்னத்தில் மீண்டும் அறைந்தவள் நீயும், ரோனியும் ஒன்றாடி நானும் பார்த்துட்டே இருக்கேன் அவள் என்ன உனக்கு கிள்ளுக்கீரையா எப்போ பாரு ரோனி கூட போட்டி போட்டுகிட்டு என்றவள் அன்னைக்கு என்ன சொன்ன அவளுக்கு கடவுள் தண்டனை கொடுத்துட்டாருன்னு தானே  எல்லோருக்கும் நல்லது நினைக்கிற அவளுக்கே இப்படி ஒரு தண்டனை கிடைச்சுருக்குனா வார்த்தையாலே அவளையே வதைக்கிற உனக்கு எப்படிப்பட்ட தண்டனை கிடைக்குமோ என்றாள் இந்திரஜா.

 

அண்ணி என்றவளிடம் அப்படி கூப்பிடாதே ஊர்மிளா என்றவள் கோபமாக சென்று விட்டாள்.

 

என்ன மாமா கோவிச்சுட்டிங்களா என்ற வெரோனிகாவிடம் எதற்கு ரோனி என்றான் உதய். பிரகாஷ் மாமா அவளை அடிச்சதும் நான் தடுத்ததுக்கு என்ன இருந்தாலும் அவள் பொம்பளைப் பிள்ளை கை நீட்டி அடிக்கிறது என்று இழுத்தவளிடம் நான் உன்னை எதுவுமே சொல்லவில்லையே ரோனி என்றான் உதய்.

 

ரோனி நீ பிரகாஷை தானே கண்டிச்ச அதற்கெல்லாம் உன் மாமா கோபம் பட மாட்டேன் என்றவன் ஏன்டி நீயும் பொம்பளைப் பிள்ளை தானே உன்னை நான் எத்தனையோ முறை அடிச்சுருக்கேன் அப்போ எல்லாம் அது தப்புனு நீ கோவிச்சுக்கவே இல்லை என்றான் உதய்.

 

மாமா நான் உங்க மனைவி என்றவள் என்னை நீங்க கோபத்தில் அடிச்சதே இல்லை. என்னை மத்தவங்க எதுனாலும் சொல்லும் பொழுது அவங்களை அடிக்க முடியாத குற்றத்திற்கு என்னை அடிச்சுட்டு அப்பறம் என் கிட்ட மன்னிப்பு கேட்பிங்க என்று சிரித்தாள் வெரோனிகா.

 

         அத்தியாயம் 121

 

ஏன்டி உனக்கு என் மேல கோபமே வராதா என்ற உதய்யிடம் ஏன் மாமா நான் உங்க மேல கோபம் படணுமா என்ன என்றாள் வெரோனிகா. கோபம் பட்டால் நல்லா இருக்கும். எப்போ பாரு ஒட்டிக்கிட்டே இருக்கோம் வாழ்க்கையே போர் அடிக்குது. அடிதடி சண்டை இதெல்லாம் நம்ம இரண்டு பேருக்குள்ள நடந்தால்  நம்ம வாழ்க்கையும் கொஞ்சம் சுவாரஸ்யமா போகும்ல என்றான் உதய்.

 

அப்போ அடிக்கட்டுமா என்றவள் கையை ஓங்கிட அடிக் கழுதை புருசனை அடிக்கவே கையை ஓங்குற உன்னை என்றவன் அவளை விரட்டிட மாமா உங்களால என்னை பிடிக்கவே முடியாது என்று ஓடினாள் வெரோனிகா. என்னால உன்னை பிடிக்க முடியாதா இருடி வரேன் என்று அவளை விரட்டிச் சென்றான் உதய்.

 

மாமா என்றபடி வயிற்றைப் பிடித்து அமர்ந்து விட்டாள் வெரோனிகா. ரோனி என்னாச்சுமா என்று பதறியவன் அவளருகில் வர வயிறு வலிக்குது மாமா என்றாள். மாத்திரை எல்லாம் ஒழுங்கா சாப்பிடுறியா ரோனி என்றவன் வயிற்றுவலிக்கான மாத்திரையை எடுத்து நீட்டிட ஸாரி மாமா என்றாள்.

 

உனக்கு ஏன்மா புரியவே மாட்டேங்குது ஒழுங்கா மாத்திரை மருந்து சாப்பிடுடி என்ற உதய்யிடம் சரிங்க மாமா என்றவள் அவன் நீட்டிய மாத்திரையை சாப்பிட்டு விட்டு படுத்துக் கொண்டாள். அவளது தலை கோதியவனது கண்கள் கலங்கிட அவளறியாமல் கண்களை துடைத்துக் கொண்டான் உதய்.

 

ஸ்ரீஜா தனது முகத்தை கண்ணாடியில் பார்த்துக் கொண்டிருந்தாள். புற்றுநோயின் கடுமையான சிகிச்சை முறையினால் தலைமுடி இல்லாமல் போனது அவள் மனதை வாட்டியது. என்னடி கண்ணாடியை பார்த்தபடி இருக்க என்று வந்த தேவ் அவளை பின்னிருந்து அணைத்துக் கொண்டான்.

 

என்னோட முடி இல்லாமல் ரொம்ப அசிங்கமா இருக்கேனா தேவ் என்றவளின் தோள்பட்டையில் முகம் புதைத்தபடி அவனும் கண்ணாடியை பார்த்தான். ரொம்ப, ரொம்ப அழகா இருக்க ஸ்ரீஜா என்றவன் அவளது கன்னத்தில் முத்தமிட்டான்.

 

பொய் சொல்லாதடா பாரு என் முடி இல்லாமல் இப்போ எல்லாம் நிலா கூட என்னை நெருங்க மாட்டேங்கிறாள் என்ற ஸ்ரீஜாவின் கண்கள் கலங்கிட அவளது கண்ணீரைத் துடைத்த தேவ் என்ன ஸ்ரீஜா இது. நீ தானே குழந்தையை கொஞ்ச நாள் அண்ணியே பார்த்துக்கட்டும்னு சொன்ன அப்பறம் என்னடி நீ அழக்கூடாது ஸ்ரீஜா.

 

உன்னோட ஹெல்த் கண்டிசன் இப்போ எவ்வளவு இம்ப்ரூவ் ஆகிருக்கு கூடிய சீக்கிரம் உன்னோட ஹெல்த் இஸ்யூஸ் எல்லாமே க்யூர் ஆகிரும். முடியும் வளர்ந்துரும் அப்பறம் என்ன. முடி இருந்தால் என்ன்முடி இல்லைனா என்ன தேவ் காதலிச்சது, காதலிக்கிறது எல்லாமே என்னோட ஸ்ரீஜாவை தான் அவளோட அழகான முகத்தையோ, நீளமான முடியையோ இல்லை. அதனால சும்மா , சும்மா கவலைப் படக்கூடாது. நீ எப்பவுமே சிரிச்சுட்டே இருக்கனும் என்றவன் அவளது நெற்றியில் முத்தமிட அவள் கண்களை மூடிக் கொண்டாள்.

 

ஆமாம் நாளைக்கு எங்கேயாச்சும் வெளியே போகலாமா ஸ்ரீஜா நீ, நான், நிலா மூன்று பேரும் என்ற தேவ்விடம் போகலாம் தேவ் என்றாள் ஸ்ரீஜா. எங்கே போகலாம் என்றவன் ஏதோ ஞாபகம் வந்து விட ரோனி அண்ணியோட ஊருக்கு போகலாமா அங்கே கதிரேசன் மாமா நம்மளை வரச் சொல்லி அடிக்கடி சொன்னாரு நாம தான் போகவே இல்லை என்றான் தேவ்.

 

இல்லைடா நாம மட்டும் எப்படி தனியா அங்கே போறது ரோனி கூட வந்தால் நல்லா இருக்கும் என்று இழுத்த ஸ்ரீஜாவிடம் அண்ணிக்கு தான் இன்னும் இரண்டு நாளில் செமஸ்டர் லீவு வரப் போகுதே அப்பறம் என்ன.

 

உனக்கும் அந்த கிராமத்து சூழ்நிலை கொஞ்சம் மன நிம்மதியை கொடுக்கலாமே ஸ்ரீஜா என்றவனிடம் சரி அப்போ நீ உதய் மாமாகிட்ட சொல்லு ரோனியோட ஊருக்கு போகலாம்னு என்றாள் ஸ்ரீஜா.

 

நீ ஏன்இப்போ எல்லாம் அண்ணனை தயா மாமான்னு கூப்பிடுவதில்லை ஸ்ரீஜா என்றவனிடம் அந்த உரிமை வெரோனிகாவுக்கு மட்டும் தான் சொந்தம் நான் வேணும்னா என்னோட தேவ் மாமாவை எதுனாலும் செல்லப் பெயர் வச்சு கூப்பிடுறேன் என்று சிரித்தாள் ஸ்ரீஜா.

 

என் வெல்லக்கட்டி, செல்லக்குட்டி அப்படி எதுவும் நீ சொல்ல மாட்டியான்னு தான்டி மாமன் ஏங்கிட்டு இருக்கிறேன் என்ற தேவ்விடம் ஏங்கு ஏங்கு நல்லா ஏங்கு என்றவள் சிரித்திட சிரிடி , நல்லா சிரி என்றவன் தானும் சிரித்தான்.

 

என்ன ஊர்மி ஏன் டல்லா இருக்க என்ற விக்னேஷிடம் இன்னும் இரண்டு நாளில் எக்ஸாம் முடிய போகுதே விக்கி அப்பறம் உங்களை பார்க்க முடியாதே என்றாள் ஊர்மிளா. தினமும் பார்த்தால் தான் காதலா ஊர்மி உன் மனசுல நானும், என் மனசுல நீயும் இருக்கிறோம் அது போதாதா.  செமஸ்டர் லீவில் எல்லாம் நாம மீட் பண்ண வேண்டாம் ஊர்மி. நீ உங்க வீட்டில் எல்லோர்கிட்டையும் சகஜமா இருக்கப் பாரு. அவங்களை விட்டு விலக நினைக்காதே. உனக்கு என்னை விட அவங்க தான் முக்கியமா தோன்றனும் என்ற விக்னேஷிடம் உன்னை போயி கெட்டவன்னு சொல்றாங்களே விக்கி என்றாள் ஊர்மிளா.

 

கெட்டவனா தான் இருந்தேன் ஊர்மி என் வாழ்க்கையில் நீ வரும் முன்னே என்றவன் நீ எப்பவுமே என்னோட தேவதை ஊர்மி என்றான் விக்னேஷ். சரி விக்கி நேரம் ஆச்சு நான் கிளம்புறேன் என்ற ஊர்மிளா கிளம்பினாள்.

 

நீ எப்படி போவ ஊர்மி என்ற விக்னேஷிடம் அண்ணா வருவாரு என்றவள் கேண்டீனை விட்டு எழுந்து சென்றாள்.

 

வெரோனிகா அங்கு வந்தவள் அவர்களை  பார்த்து விட்டு கண்டுக்காமல் சென்று ஷாலினியுடன் அமர்ந்தாள்.

 

என்ன சாப்பிடுற ரோனி என்ற ஷாலினியிடம் டீ போதும் ஷாலி என்றாள். ஊர்மிளா சென்ற பிறகு எழுந்து வந்த விக்னேஷ் வெரோனிகா என்றிட அவனை நிமிர்ந்து பார்த்தாள்.

 

உங்க கிட்ட கொஞ்சம் பேசணும் பேசலாமா என்றான் விக்னேஷ். சொல்லுங்க சார் என்றவளிடம் நான் உங்க லெக்சரரா பேச வரவில்லை என்றான் விக்னேஷ்.

 

வேற என்னவா பேச வந்திங்க மிஸ்டர்.விக்னேஷ். நமக்குள்ள ப்ரபோசர், ஸ்டூடண்ட் இந்த தொடர்பு மட்டும் தான் இருக்குனு நான் நினைக்கிறேன்.

 

அதை தான்டி பேச எதுவுமே கிடையாது என்றவள் ஷாலி நான் கிளம்புகிறேன் என்று எழுந்து கொள்ள ப்ளீஸ் வெரோனிகா உங்க கிட்ட பேசணும் என்றவன் கெஞ்சிட அமைதியாக நின்றாள் வெரோனிகா.

 

முதலில் என்னை மன்னிச்சுருங்க என்றவனிடம் எதற்கு என்றாள் வெரோனிகா. எல்லாத்துக்குமே தான் உங்களை கீழே தள்ளி விட்டதில் இருந்து எல்லாத்துக்குமே என்றவன் அவள் முகத்தை பார்த்தான்.

 

வெரோனிகா அமைதியாக அவனை பார்த்தவள் அவ்வளவு தானா நான் கிளம்பலாமா என்றிட இல்லை நான் இன்னும் பேசவே ஆரம்பிக்கவில்லை என்றான் விக்னேஷ். பேசுங்க மிஸ்டர்.விக்னேஷ் எனக்கு நேரம் ஆச்சு என்றவளிடம் உங்களுக்கே தெரியும் நானும், ஊர்மிளாவும் என்று அவன் ஏதோ கூற வர தயவுசெய்து ஊர்மிளா பற்றி எதுனாலும் பேசணும்னா என் கிட்ட பேச வேண்டாம். ஊர்மிளா பற்றி எந்த விசயமும் நான் தெரிந்து கொள்ளவும் வேண்டாம். நீங்க வேற விசயம் பேசுறதுனா பேசுங்க இல்லை ஊர்மிளா பற்றி தான் பேசனும் என்றால் இன்னும் கொஞ்ச நேரத்தில் ஊர்மிளாவோட அண்ணன் வருவாங்க அவங்க கிட்ட பேசுங்க. இல்லையா ஊர்மிளாவோட அண்ணி எங்க வீட்டில் இருப்பாங்க அவங்க கிட்ட பேசிக்கோங்க. தயவு செய்து என்கிட்ட பேச வேண்டாம் என்ற வெரோனிகா சென்று விட்டாள்.

 

என்னாச்சு இவளுக்கு ஊர்மிளா மேல இத்தனை வெறுப்பு வர என்ன காரணம் என்று நினைத்தவன் சென்று விட்டான்.

 

என்ன ரோனி வந்ததில் இருந்து அமைதியா இருக்க என்ற உதய்யிடம் விக்னேஷ் பேசியதை சொல்லலாமா, வேண்டாமா என்று யோசித்தவள் சரி எதற்கு இதை சொல்லிகிட்டு என்று விட்டு விட்டாள்.

 

ஏய் என்னடி யோசணை என்றவனிடம் ஒன்றும் இல்லை மாமா என்றவள் எனக்கு ஏன் அடிக்கடி வயிறு வலிக்குது என்றிட உதய் மௌனமாகினான். என்ன மாமா சைலண்ட்டா இருக்கிங்க என்ற வெரோனிகாவிடம் உனக்கு கத்திக்குத்து பட்டுச்சுடி அதோட பெயின் இருக்க தானே செய்யும் என்றவன் ஆமாம் செமஸ்டர் லீவுக்கு என்ன ப்ளான் என்றான்.

 

அம்மா வீட்டுக்கு போயிட்டு வரட்டுமா மாமா என்ற வெரோனிகாவிடம் தாராளமா போயிட்டு வா ரோனி இதில் என்ன தயக்கமா கேட்கிற என்றான் உதய்.

 

இல்லை மாமா ஊரில் என் சித்தி பொண்ணுக்கு சடங்கு வச்சுருக்காங்க அங்கே போகனும் அதான் உங்க கிட்ட பர்மிசன் கேட்கிறேன் என்றவளைப் பார்த்து சிரித்தவன் பங்க்சன்னா நானும் வரணுமா என்றான் உதய்.

 

அப்போ வர வேண்டாமா என்றவள் உங்களுக்கு ஸ்கூல் இருக்குமே என்றாள் கவலையாக. லீவு போட்டுருவேன் என்றவன் உன்னை விட்டுட்டு என்னால இருக்க முடியாதுடி என்றிட சரிங்க மாமா அப்போ ஊருக்கு எப்போ போகலாம் என்றாள் வெரோனிகா.

 

இன்னும் இரண்டு நாள் போகட்டும் போகலாம் என்றவன் ஏதோ சொல்ல வர அவனது மொபைல் போன் ஒலித்தது. அவன் சென்று விட வெரோனிகா யோசனையுடன் அமர்ந்தாள்.

 

        அத்தியாயம் 122

 

யார் போன் பண்ணினாங்க இவரு ஓடிட்டாரு என்றபடி யோசனையில் அமர்ந்தவளின் மடியில் வந்து அமர்ந்தாள் உதயநிலா. நிலாக்குட்டி என்றவளது கன்னத்தில் முத்தமிட்ட பாப்பா பெயம்மா சொக்கி கொடு என்றிட சொக்கி வேண்டுமா என் செல்லத்துக்கு என்றவள் சொக்கி சாப்பிட்டா பல் எல்லாம் சொத்தையா போயிரும் என்றாள்.

 

பெயம்மா சொக்கி குடு என்று குழந்தை அடம் பிடித்திட சரி , சரி ஒரே ஒரு சொக்கி தான் கொடுப்பேன் என்ற வெரோனிகா குழந்தையிடம் சாக்லேட்டை நீட்டினாள். அதை வாங்கிக் கொண்ட உதயநிலா ஓடியே விட அவள் சிரித்து விட்டு திரும்பிட இந்திரஜா நின்றிருந்தாள்.

 

இந்து அக்கா என்ன அங்கேயே நிற்கிறிங்க உள்ளே வாங்க என்றாள் வெரோனிகா.  அவளருகில் வந்த இந்திரஜா ஸாரி ரோனி என்றிட எதற்கு என்றாள்.

 

எல்லாத்துக்கும் தான் அன்னைக்கு ஊர்மி பர்த்டே அன்னைக்கு உன்னை ஹர்ட் பண்ணுற மாதிரி பேசினதுக்கு என்றதும் சிரித்து விட்டாள் வெரோனிகா. அக்கா அதெல்லாம் நான் பெரிசா எடுத்துக்கவே இல்லை விடுங்க என்றவள் சரி எதாவது குட்நியூஸ் உண்டா என்று கண்ணடித்தாள் வெரோனிகா.

 

குட்நியூஸ் இருந்தால் உன்கிட்ட மட்டும் தான் முதலில் சொல்லுவேன் என்ற இந்திரஜா சரி நாம இரண்டு பேரும் ஷாப்பிங் போகலாமா என்றாள். இருங்க நான் மாமாகிட்ட கேட்டுக்கிறேன் என்றவள் போனை எடுக்க ஏன் நீ என் கூட வந்தால் மாமா வேண்டாம்னா சொல்லப் போறாரு என்றாள் இந்திரஜா.

 

இன்பார்ம் பண்ணுறது நல்லது தானே என்ற வெரோனிகா உதயச்சந்திரனுக்கு போன் செய்ய அது பிஸி என்றிருக்க அவனுக்கு ஒரு மேசேஜை போட்டு விட்டு இந்திரஜாவுடன் கிளம்பினாள்.

 

என்ன மேடம் என்ன பிரச்சனை என்ற உதய்யிடம் ஒன்றும் இல்லை சார் என்றாள் வினித்ரா. அப்போ ஏன் மேடம் உங்க கவனம் க்ளாஸ்ல இல்லை. பசங்க சத்தம் வெளியில் கேட்கிறது ஸ்டாப் யாரும் இல்லையோன்னு வந்து பார்த்தால் நீங்க உள்ளே இருக்கிங்க என்னாச்சு என்றான் உதய்.

 

ஒன்றும் இல்லை சார் என்றவளிடம் மேடம் நான் எப்பவுமே உங்களுக்கு ஒரு நல்ல நண்பனா இருப்பேன் என்ன பிரச்சனைனு சொல்லுங்க என்றான் உதய்.

 

இங்கே வேண்டாம் சார் எங்கேயாவது வெளியில் போயி பேசலாம் என்ற வினித்ராவிடம் கோவிலுக்கு போகலாம் மேடம் என்றவன் நீங்க பர்மிசன் போட்டு முன்னே போங்க நான் வரேன் என்றான் உதய்.

 

என்னக்கா ஷாப்பிங் போகலாம்னு சொல்லிட்டு கோவிலுக்கு கூட்டிட்டு வந்திருக்கிங்க என்ற வெரோனிகாவிடம் சாமி கும்பிடனும்னு தோனுச்சு என்ற இந்திரஜா அம்மனுக்கு நெய் தீபம் ஏற்றி வைத்து வேண்டிக் கொண்டிருந்தாள்.

 

ரோனி இங்கே இரு என்ற இந்திரஜா தலையில் தண்ணீர் ஊற்றிக் கொண்டு அங்கப் பிரதக்சனம் செய்ய ஆரம்பித்தாள். அக்கா என்ன இது என்ற வெரோனிகாவிடம் ஒன்பது சுத்து சுத்தனும் ரோனி என்று கூறியவள் உருண்டு கொடுக்க ஆரம்பிக்க வெரோனிகாவும் அவளுக்கு உதவ ஆரம்பித்தாள்.

 

ரோனி எங்கே இன்னைக்கு அவளுக்கு லீவு தானே என்ற மலர்கொடியிடம் இந்து கூட கோவிலுக்கு போயிருக்காள் அக்கா என்றார் சுசீலா. கோவிலுக்கா என்ன திடீர்னு என்ற மலர்கொடியிடம் நம்ம ரோனிக்கு உள்ள பிரச்சனை சீக்கிரம் சரியாகனும்னு வேண்டி அங்கப்பிரதக்சனம் பண்ண போறதா இந்து சொன்னாள் அக்கா என்றார் சுசீலா.

 

அது குணமாக வாய்ப்பே இல்லைன்னு தான் டாக்டர் சொல்லிட்டாரே சுசீ அப்பறம் ஏன் என்ற மலர்கொடி கண்கள் கலங்கினார். டாக்டர் ஒன்றும் கடவுள் இல்லையேக்கா அவர் சொல்லுறதெல்லாம் அப்படியே நடக்க என்ற சுசீலா நம்ம ரோனியோட பிரச்சனை சீக்கிரம் தீர்ந்துரும் என்று தன் அக்காவிற்கு நம்பிக்கை ஊட்டினார்.

 

என்ன அக்கா இது இத்தனை பலமான வேண்டுதல் எதற்காக என்ற வெரோனிகாவிடம் வேண்டுதல் வெளியே சொன்னால் பழிக்காது ரோனி என்ற இந்திரஜாவை முறைத்தவள் போங்க என்றவள் ஞாபகம் வந்திருச்சு ஸ்ரீஜா அக்காவுக்காக தானே என்றாள் வெரோனிகா. அவளைப் பார்த்து புன்னகைத்துவிட்டு  தொட்டில் வாங்கி மரத்தில் கட்டினாள் இந்திரஜா. ஓஓ குட்நியூஸ்க்காக தான் வேண்டுதலா சூப்பரு என்றவளிடம் குட்நியூஸ்க்காக தான் ஆனால் எனக்கில்லை என் ஓரகத்தி உனக்காக என்றாள் இந்திரஜா. அக்கா எனக்காக ஏன் இதெல்லாம்  என்றவளிடம் என்ன அக்கா என் செல்லத் தங்கச்சிக்காக இது கூட செய்ய மாட்டேனா என்று சிரித்தாள் இந்திரஜா. அவளைக் கட்டிக் கொண்ட வெரோனிகாவின் தலையை கோதி விட்டவள் சரி , சரி போகலாம் வா என்று அவளுடன் கிளம்பினாள்.

 

ரோனி மாமா வந்துருக்காங்க பாரு என்று இந்திரஜா காட்டிய திசையில் உதய் வர அவன் பின்னால் வினித்ரா வந்தாள். இந்தப் பொண்ணு யாரு என்ற இந்திரஜாவிடம் வினித்ரா மேடம் மாமா கூட வேலை பார்க்கிறவங்க என்ற வெரோனிகா அவங்க ஏதோ பேச வந்திருக்காங்க நாம ஏன் டிஸ்டர்ப் பண்ணனும் நாம வீட்டுக்கு போகலாம் இந்து அக்கா என்றாள்.

 

ஏன்டி அவரு உன் புருசன்டி வேற பொண்ணு கூட கோவிலுக்கு வந்திருக்காரு நீ என்னடான்னா அதை ஒரு விசயமாவே எடுத்துக்கவில்லை என்ற இந்திரஜாவை பார்த்து சிரித்தவள் அக்கா இதில் என்ன இருக்கு. அவங்க இரண்டு பேரும் ஒன்றாக வேலை பார்க்கிறவங்க , ப்ரண்ட்ஸ் அப்போ வெளியில் மீட் பண்ணுற சூழ்நிலை வரத் தான் செய்யும். அது மட்டும் இல்லாமல் எனக்கு என் சந்துரு மாமா மேல நிறைய நம்பிக்கை இருக்கு என்றவள் இந்திரஜாவுடன் வீட்டுக்கு கிளம்பினாள்.

 

என்ன அக்கா என்கிட்ட ஏதோ போசனும்னு சொன்னிங்க என்ற வெரோனிகாவிடம் இல்லை ரோனி தேவ் கொஞ்ச நாள் உங்க ஊரில் போயி தங்கலாம்னு சொன்னான். உங்க வீட்டுக்கு நீ இல்லாமல் எப்படி போறதுன்னு ஒரு யோசனை அதான் என்று இழுத்தாள் ஸ்ரீஜா. அவ்வளவு தானா நானும் ஊருக்கு போகனும்னு மாமாகிட்ட கேட்டேன். அவருக்கு ஸ்கூல் இருக்கேனு யோசிச்சேன் நல்லவேளை நீங்களும், தேவ் மாமாவும் வருவதுனா நம்மளே போகலாம் என்றாள் வெரோனிகா.

 

அக்கா அங்கே என் சித்தி பொண்ணுக்கு சடங்கு வைக்கிறாங்க நீங்க பங்க்சனுக்கு வருவிங்க தானே என்ற வெரோனிகாவிடம் இப்படியேவா என்ற ஸ்ரீஜா தன் தலையை காட்டினாள்.

 

முடி மட்டும் தான் அழகா என்ற வெரோனிகா நீங்க இப்பவே எவ்வளவு அழகா இருக்கிங்க தெரியுமா என்றவள் ஏதோ சொல்ல வர நீயும், தேவ்வும் ஒன்று என்று சிரித்தாள் ஸ்ரீஜா.

 

என்னடி இரண்டு பேரும் கொஞ்சிட்டு இருக்கிங்க என்று வந்த மலர்கொடியிடம் நீங்களும், உங்க தங்கச்சியும் மட்டும் கொஞ்சிட்டு இருக்கிங்க நாங்க என்னைக்காவது கேட்டிருக்கோமா என்ற வெரோனிகாவின் காதை திருகினார் மலர்கொடி. ஆஆ அத்தை வலிக்குது என்ற வெரோனிகாவிடம் வலுக்கட்டும்டி வாயாடி என்றவர் அவளை விட்டார். எப்போ பாரு வாயி, வாயி நான் உன் மாமியார்டி அந்த பயம் கொஞ்சமாவது இருக்கா என்ற மலர்கொடியிடம் மாமியார் இன்னொரு தாயானால் பெண்ணுக்கு இல்லறம் நிம்மதி என்று பாட்டுப் பாடினாள் வெரோனிகா. அவளைப் பார்த்து சிரித்து விட்ட மலர்கொடி இப்படியே எதுனாலும் பண்ணிட்டே இருடி என்று சொல்லி விட்டு சென்று விட வெரோனிகா தன்னறைக்கு சென்றாள்.

 

அறை வாசலில் நிழலாட திரும்பினாள் வெரோனிகா. ரோனி என்ற ஊர்மிளாவை கண்டு கொள்ளாமல் துணிகளை மடித்து கப்போர்டில் அடுக்கிக் கொண்டிருந்தாள் வெரோனிகா.

 

உன்னை தான் கூப்பிட்டேன் என்ற ஊர்மிளாவிடம் நீங்க யாரு என்னை கூப்பிட என்றாள் வெரோனிகா. ரோனி ஐயம் ஸாரி என்ற ஊர்மிளாவிடம்  உங்க கிட்ட பேச எனக்கு எதுவும் இல்லை என்று விட்டு தன் வேலையில் கவனமாக இருந்தாள் வெரோனிகா.

 

ரொம்ப பண்ணாதே ரோனி இப்போ தான் என்றவள் அவளது கையைத் தொட தன் கையை உதறிக் கொண்டவள் அவளை பார்த்த பார்வையில் அமைதியானாள் ஊர்மிளா. என்ன ரோனி என் மேல கோபம் போகவில்லையா வேண்டும் என்றால் என்னை நீ அடிச்சுக்கோ என்றவளை முறைத்தவள் பளார், பளாரென இரண்டு அறை கொடுத்தாள்.

 

ரோனி என்ற ஊர்மிளா கன்னத்தில் கை வைத்திட எனக்கு யார்கிட்டையும் கடன் வச்சுக்கிறது பிடிக்காது அதான் பாக்கி குறையாமல் கொடுத்துட்டேன் என்றவள் உனக்கு அவ்வளவு தான் மரியாதை.

 

நான் ஒன்றும் நீ வளர்க்கிற நாய்க்குட்டி கிடையாது நீ அடிச்சாலும் உன் பின்னாலையே வருவதற்கு. உனக்கு வேண்டும் என்றால் அண்ணி, வேண்டாம்னா யாரோ ஒருத்தி அப்படித் தானே.

 

வெரோனிகா ஒன்றும் மானம், ரோசம் இல்லாமல் உன்னை சகிச்சுட்டு போகவில்லை. பெத்த பொண்ணை போல பாசமா என்னை பார்த்துக்கிறாங்களே உன்னோட அம்மா, என்னோட அத்தை அவங்களுக்காக மட்டும் தான் நீ என்ன பண்ணினாலும் பொறுமையா போனேன்.

 

நீ அந்த விக்கியை லவ் பண்ணு, அவன் கூட ஊரைச் சுத்து, குட்டிச் சுவரா போ அதெல்லாம் எனக்கு தேவையே கிடையாது. எப்போ உனக்கு பிரகாஷ் மாமா மட்டும் தான் அண்ணன்னும், இந்திரஜா அக்கா மட்டும் அண்ணினும் சொன்னியோ அப்பவே நமக்குள்ள எதுவுமே இல்லை. 

 

உனக்கு எவ்வளவு திமிரு இருந்தால் மலர் அத்தை கையை பிடிப்ப பண்ணுற எல்லாம் பண்ணிட்டு என்கிட்ட பேச மாட்டியா ரோனின்னா என்ன அர்த்தம் என்ற வெரோனிகா உன் மேல கொலை வெறியில் இருக்கேன். மரியாதையா போயிரு இனிமேல் எப்பவுமே என் முன்னே வந்துராதே என்றாள்.

 

ரோனி நான் பேசினது எல்லாமே தப்பு தான் விக்கியை நீ பொறுக்கினு சொன்னதும் என்றவளிடம் இதோ பாரு உன்கிட்ட திரும்ப , திரும்ப சொல்ல மாட்டேன். நீ சோறு தான் திங்கிற அப்படினா என் ரூமை விட்டு வெளியே போ இல்லை வேற எதையோ திங்கிற அப்படினா நில்லு என்றாள் வெரோனிகா. 

 

என்னை இவ்வளவு தூரம் நீ அசிங்கப் படுத்த வேண்டியது இல்லை என்ற ஊர்மிளா அறையை விட்டு சென்றிட வெரோனிகா கோபமாக ஊஞ்சலில் சென்று அமர்ந்தாள்.

 

வந்துட்டா பெரிய இவளாட்டம் ஸாரி ரோனி, பூரி ரோனினுட்டு என்று பொரிந்து தள்ளியவள் கோபமாக அமர்ந்திருக்க அவளது போன் ஒலித்தது. அதை கூட கண்டு கொள்ளாமல் கோபமாக இருந்தாள் வெரோனிகா.

 

ஏதோ யோசனையுடன் வீட்டிற்கு வந்ந உதய் தன்னறைக்கு சென்றான். துணிமணிகள் பாதி மடித்தும், மடிக்காமலும் கிடந்தது. கப்போர்டும் திறந்து கிடக்க எங்கே போனாள் இவள் என்று பால்கணிக்கு வர ஊஞ்சலில் அமர்ந்து கொண்டிருந்தாள் வெரோனிகா. அவளது அருகில் வந்தவன் ரோனி என்றிட அவள் அவனை பார்க்கவே இல்லை. ரோனி உன்னைத் தான் என்று உலுக்கியவன் என்னாச்சு உனக்கு என்றிட அவ்வளவு தான் பொரிந்து தள்ளி விட்டாள் அப்பளமாக….

 

   அத்தியாயம் 123

 

என்ன ரோனி இது ஏன் இப்படி இருக்க கொஞ்சம் கூட பொறுப்பே இல்லாமல் என்ற உதயச்சந்திரனை முறைத்தவள் என்ன பொறுப்பு இல்லாமல் இருக்கேன் இல்லை என்னை பார்த்தால் எப்படி தெரியுது பொறுப்பே இல்லாமல் சுத்துற ஊதாரி மாதிரி தெரியுதா என்று ஆரம்பித்தவள் பட படவென ஏதேதோ பேச ஏய் என்னடி உன் பிரச்சனை.

 

இப்போ என்ன கேட்டுட்டேன்னு இப்படி கத்துற என்றிட என்னது கத்துறேனா நானா ஆமாம் நான் பைத்தியம் அதனால தான் கத்துறேன் என்று மேலும், மேலும் பொரிந்து தள்ளினாள் வெரோனிகா.

 

என்ன கேட்டுட்டேன்னு இப்படி பொரியிற ரோனி டிரஸ் எல்லாம் பாதி மடிச்சும், மடிக்காமலும் போட்டுருக்க. கப்போர்ட் வேற திறந்து கிடக்கு நம்ம ரூம்க்கு பாப்பா வருவாள். கப்போர்டுக்குள்ள எதுவும் ஒழிஞ்சுகிட்டாள்னா நமக்கு தெரியாமல் போயிருமே கொஞ்சம் பொறுப்பா இருன்னு தானே சொல்ல வந்தேன். நான் என்ன சொல்ல வரேன்னு புரிஞ்சுக்காமல் இப்படி கோபமா பேசிட்டு இருக்க என்றான் உதய்.

 

ஏன் டிரஸ் நீங்க மடிச்சு வைக்க மாட்டிங்களா , இல்லை பிள்ளை உள்ளே இருக்கிறது தெரியாமல் நான் கதவை சாத்திருவேனா நான் என்ன அந்த அளவுக்கு முட்டாளா என்றவள் மீண்டும் பொரிந்து தள்ள அம்மா தாயே நீ புத்திசாலி தான். நான் தான் முட்டாள் உன் கிட்ட வந்து வாயைக் கொடுத்தேன் பாரு நான் தான் முட்டாள்.

 

என்னோட துணிமணிகளை இனி நானே மடிச்சு எடுத்து வைக்கிறேன். உன்னை எந்த வேலையும் செய்ய சொல்லவில்லை என்றவன் சென்று துணிகளை மடித்து வைக்க ஆரம்பித்தான்.

 

எல்லாம் என் தப்பு தான் பொண்டாட்டி கிட்ட எதையும் மறைக்க கூடாதுன்னு அந்த வினித்ராகிட்ட பேசின விசயங்களை இவள் கிட்ட சொல்லலாம்னு வந்தேன் பாரு என்னை செருப்பால அடிக்கனும் என்று நினைத்தவன் கோபமாக சென்று விட்டான்.

 

அவன் சென்ற பிறகும் கோபமும், ஆத்திரமும் குறையாமல் இருந்தவள் எழுந்து வந்து பார்த்திட துணிகள் எல்லாம் மடித்து கப்போர்டில் எடுத்து வைத்திருந்தான் அவளது கணவன்.

 

என்ன உதய் இப்போ தான் வந்த அதற்குள்ள கிளம்பிட்ட என்ற மலர்கொடியிடம் வேலை இருக்கும்மா என்றவன் கிளம்பிச் சென்றான்.

 

ச்சே என்ன பண்ணிட்ட ரோனி நீ மாமா கிட்ட இப்படியா நடந்துக்குவ. அந்த பைத்தியம் ஊர்மிளா மேல இருந்த மொத்த கோபத்தையும் மாமா மேல காட்டி ஐயோ இனி இவரை நான் எப்படி சமாதானம் செய்யப் போறேனோ என்று புலம்பினாள் வெரோனிகா.

 

அத்தை சந்துரு மாமா எங்கே என்று வந்தவளிடம் அவன் ஏதோ வேலை இருக்குனு சொல்லி கிளம்பிட்டானே ரோனி என்ற மலர்கொடி மருமகளின் முகத்தை பார்த்திட அவள் கவலையாக தன்னறைக்குள் சென்றாள்.

 

ரோனி என்ற மலர்கொடியிடம் என்னங்க அத்தை என்றாள். என்னடி உன் பிரச்சனை ஏன் அவன் வந்ததும், வராததுமா கிளம்பிட்டு போயிட்டான். நீ வருத்தமா இருக்க என்னாச்சும்மா என்றிட அவரது தோளில் சாய்ந்து அழ ஆரம்பித்தாள்.

 

ரோனி என்னாச்சுடி ஏன் அழற என்ற மலர்கொடியிடம் அத்தை ஊர்மிளா என்று ஊர்மிளா வந்து பேச ஆரம்பித்தது தொடங்கி உதய் உடனான சண்டை வரை அத்தனையும் கூறியவள் என்னை மன்னிச்சுருங்க அத்தை என்றிட அவளைப் பார்த்து புன்னகைத்தவர் நான் ஏன்டி உன்னை மன்னிக்கனும் என்றார்.

 

உங்க மாமா அடிக்கடி சொல்லுவாரு நம்ம ரோனி அப்படியே உன்னை போல தான்னு அது எதற்கு ஒத்து போகுதோ இல்லையோ இந்த விசயத்தில் ஒத்து போகுது என்று சிரித்தார் மலர்கொடி.

 

அவரை கேள்வியாக அவள் பார்த்திட நானும் உன்னைப் போல தான் யார்மேல கோபம் இருந்தாலும் அந்த கோபத்தை உன் மாமாகிட்ட தான் காட்டுவேன் எங்க கல்யாணம் ஆன புதிதில் என்று சிரித்தவர் அப்போ உன் மாமா என்கிட்ட மாட்டிகிட்டு முழிச்சாரு இப்போ என் மகன் உன்கிட்ட மாட்டிட்டு முழிக்கிறான் என்றார்.

 

அத்தை என்றவளிடம் சத்தியம்டி என்ற மலர்கொடி உதய் உன்னை நிச்சயம் புரிஞ்சுப்பான். அவன் வந்தவுடன் நீ என்ன நடந்துச்சுனு பொறுமையா சொல்லு அவன் உன்னை புரிஞ்சுக்காமல் எங்கே போக போறான் சொல்லு என்றவர் அவளது கண்களை துடைத்து விட்டார்.

 

என்னோட ரோனி எப்பவுமே சிரிச்சுகிட்டே சந்தோசமா இருக்கனும் சரியா என்றிட அத்தை இன்னைக்கு இந்து அக்கா எனக்காக கோவிலில் அங்கப்பிரதக்சனம் எல்லாம் பண்ணினாங்க எனக்கு ஒரு மாதிரி கஸ்டமா போச்சு என்றாள்.

 

எனக்கு தெரியும் ரோனி என்றவர் ஆமாம் எக்ஸாம் முடிய போகுதே லீவுக்கு ஊருக்கு போறியா என்ற மலர்கொடியிடம் ஆமாம் அத்தை இந்த முறை என் கூட தேவ் மாமா, ஸ்ரீஜா அக்கா, நிலாக்குட்டி மூன்று பேரும் வராங்க என்றாள் வெரோனிகா.

 

பாருடா அப்போ உன் கொழுந்தன், ஓரகத்தியை எல்லாம் உங்க ஊருக்கு கூப்பிட்டு போறிங்க என்னை கூப்பிடவில்லை என்று செல்லமாக கோபித்துக் கொண்டார் மலர்கொடி. ஐயோ அத்தை அப்படி இல்லை நீங்கள் இங்கே இருந்தால் தானே பெரியமாமாவுக்கு நல்லது. நீங்கள் இல்லாமல் மாமா கஷ்டப் படக் கூடாதே என்றவளை பார்த்து சிரித்தவர் வாயாடி நல்லா வருவடி நீ என்று விட்டு சரி , சரி நீ எக்ஸாம்க்கு உட்கார்ந்து படி என்ற மலர்கொடி தன்னறைக்கு சென்று விட்டார்.

 

என்ன அண்ணா ஏன் டல்லா இருக்கிங்க என்ற பிரகாஷிடம் ஒன்றும் இல்லை என்றான் உதய். அண்ணா நீங்க வினித்ரா மேடத்தோட கோவிலுக்கு போனிங்களா என்றான் பிரகாஷ். உனக்கு எப்படி என்ற உதய்யிடம் இந்து சொன்னாள் என்று கோவிலில் இந்திரஜா, வெரோனிகா இருவரும் உதய், வினித்ரா இருவரையும் பார்த்த விசயத்தை கூறினான் பிரகாஷ்.

 

ஓஓ அப்போ ரோனி அதனால தான் கோபமா இருக்கிறாளா என்று நினைத்தவன் இதில் கோபம் பட என்ன இருக்கு என்ன ஏதுன்னு என்கிட்ட நேரடியாவே கேட்டிருக்கலாமே நான் என்ன சொல்லாமலா போகப் போறேன் என்று நினைத்தவன் சரி எதுவா இருந்தாலும் வீட்டில் போயி பேசிக்கலாம் என்று நினைத்தவன் தன் வேலையை கவனிக்க ஆரம்பித்தான்.

 

மீண்டும் மீண்டும் மொபைல் போன் ஒலித்திட அதை அட்டன் செய்தவள் ஹலோ என்றிட ரோனிமா எப்படி இருக்கடா என்ற குரலில் புன்னகைத்தவள் சித்தி என்றாள். சித்தி ஞாபகம் இப்போவாச்சும் என் பொண்ணுக்கு வந்துச்சே என்றார் ஜெயக்கொடி.

 

நீங்க தான் என் கல்யாணத்திற்கு கூட வரவில்லை என்று பொய்க்கோபம் கொண்டவளிடம் ரோனிமா உன்னோட கல்யாணமே திடீர் கல்யாணம் தானே என்று சிரித்த ஜெயக்கொடியிடம் சரி, சரி சித்தப்பா எப்படி இருக்காங்க. அனாமிகா எப்படி இருக்கிறாள் என்றிட எனக்கென்ன ரோனி நான் ரொம்ப நல்லா இருக்கேன் என்ற குரலில் ஏய் வாலு சித்திகிட்ட இருந்து போனை பறிச்சுட்டியா என்று சிரித்தாள் வெரோனிகா.

 

பின்னே என்றவள் லீவுக்கு நாங்கள் ஊருக்கு வரோம் ரோனி நீயும் வந்துரு நாம ஜாலியா இருக்கலாம் என்றாள் அனாமிகா. சரிடி என்றவள் சித்திகிட்ட போனை கொடு என்றிட  அனாமிகாவும் தன் அன்னையிடம் போனை கொடுத்து விட்டு கிளம்பினாள்.

 

சொல்லுங்க சித்தி என்ன விசயம் என்ற வெரோனிகாவிடம் ஏன்டி அம்மா உன் கிட்ட சொன்னேன்னு சொன்னுச்சு நீ  என்னம்மோ தெரியாத மாதிரி கேட்கிற எல்லாம் நம்ம அனுவோட சடங்குக்கு பத்திரிக்கை வைக்க உங்க வீட்டுக்கு நானும், சித்தப்பாவும், அனாமிகாவும் நாளைக்கு வரோம். நாளைக்கு மாப்பிள்ளை வீட்டில் இருப்பாரு தானே என்றிட இருப்பாரு சித்தி நீங்க சித்தப்பாவோட வந்திருங்க என்றாள் வெரோனிகா. சரி ரோனி என்ற ஜெயக்கொடி போனை வைத்தார்.

 

என்ன ரோனி யாரு போன்ல என்ற சுசீலாவிடம் என்னோட சித்தி பேசுனாங்க அத்தை என்றவள் நாளைக்கு நம்ம வீட்டுக்கு வராங்க என்றாள்.

 

என்ன விசயம் என்ற சுசீலாவிடம் சித்தி பொண்ணுக்கு சடங்கு அதான் என்ற வெரோனிகாவிடம் சரிமா நீ போயி படி என்று விட்டு சுசீலா தன் வேலையை கவனித்தார்.

 

என்ன ஊர்மி இந்த நேரம் போன் பண்ணிருக்க என்ற விக்னேஷிடம் ஏன் விக்கி என்கிட்ட பேச மாட்டிங்களா இந்த நேரத்தில் என்றாள் ஊர்மிளா. ஏய் ஊர்மி அப்படி இல்லைப்பா என்றிட இல்லை விக்கி மனசே சரியில்லை அதான் உன்கிட்ட பேசலாம்னு போன் பண்ணினேன் என்றாள் ஊர்மிளா.

 

என்னாச்சு ஊர்மி என்றவனிடம் வெரோனிகாவிடம் பேசியதை கூறினாள் ஊர்மிளா. ஊர்மி வெரோனிகா பேசியதில் தப்பு என்ன சொல்லு நீ அவங்களை அந்த அளவுக்கு காயப் படுத்தி இருக்கிறாய். அதனால தான் அவங்க கோபம் பட்டிருக்காங்க அதனால் நீ எதையும் போட்டு யோசிச்சு மனசை குழப்பிக்காதே என்றவன் அவளிடம் வேறு விசயங்களை பேசினான்.

 

என்ன மாமா நீங்க மட்டும் சாப்பிட உட்கார்ந்திருக்கிங்க ரோனி எங்கே என்ற இந்திரஜாவிடம் அவள் இன்னும் சாப்பிடவில்லையா என்றான் உதய். இல்லைப்பா அவள் படிச்சுட்டு இருக்கிறாள் என்று சுசீலா கூறிட சரிங்க சித்தி எனக்கு பசிக்குது நான் சாப்பிட்டுட்டு  போயி அவளை வரச் சொல்கிறேன் என்ற உதயச்சந்திரன் சாப்பிட ஆரம்பித்தான். 

 

என்னடி இவன் இப்படி சொல்கிறான். கொலைப் பசியில் வந்தாலும் அவள் இல்லாமல் சாப்பிட மாட்டானே என்ற சுசீலாவிடம் தெரியலை அத்தை நான் போயி அவளை கூப்பிட்டு வரேன் என்று சென்று விட்டாள் இந்திரஜா.

 

ரோனி என்றவளிடம் சொல்லுங்க அக்கா என்றாள் வெரோனிகா. சாப்பிட வா என்ற இந்துவிடம் மாமா வரட்டும் அக்கா என்றாள்.

 

மாமா அப்பவே வந்துட்டாரு. சாப்பிட்டுட்டு இருக்காரு நீ வா என்றவளிடம் மாமா சாப்பிட்டுட்டு இருக்காரா என்று திரும்பவும் கேட்டாள். ஆமாம் ரோனி என்ற இந்துவிடம் சரிங்க அக்கா என்றவள் அமைதியாக அவளுடன் வந்தாள்.

 

சாப்பிட்டு முடிக்கும் வரை எதிரில் இருந்தவளை அவன் கண்டு கொள்ளவே இல்லை. அவள் அவன் முகத்தையே பார்த்திருந்தாள். சாப்பிட்டு முடித்தவன் அவளிடம் ஒரு வார்த்தை கூட பேசாமல் அறைக்கு சென்று விட அவளது கண்கள் கலங்கி விட்டது.

 

பெயருக்கு சாப்பிட்டவள் எழுந்து தன்னறைக்கு சென்று பார்க்க அவன் லேப்டாப்பில் ஏதோ மும்முறமாக வேலை பார்த்து கொண்டிருக்க அவனை பார்த்தபடியே அமர்ந்திருந்தாள்.

 

அவன் கவனித்தாலும் கண்டு கொள்ளாமல் வேலையை  பார்த்திட மாமா என்றாள் வெரோனிகா. அவன் அவளை கண்டு கொள்ளாமல் இருக்க அவனருகில் வந்தவள் மாமா என்றிட லேப்டாப்பை மூடி விட்டு சென்று படுத்து விட்டான் உதய்.

 

      அத்தியாயம் 124

 

மாமா என்றவளது குரலை காதில் வாங்காமல் அவன் படுத்துக் கொள்ள உங்க கிட்ட தான் பேசுறேன் என்றாள் வெரோனிகா. இப்போ உனக்கு என்ன வேண்டும். நான் எதுனாலும் சொல்லுவேன் அதை வச்சு சண்டை போடுவ எதுக்குமா தூங்கும் போது நிம்மதியா தூங்கனும் என்றான் உதய்.

 

அப்போ என் கிட்ட பேசினால் உங்க நிம்மதி போயிரும் அப்படித் தானே என்ற வெரோனிகாவிடம் இதோ பாரு ரோனி நான் அப்படி எதுவுமே சொல்லவில்லை நீ தேவையில்லாமல் கண்ட கற்பனையையும் வளர்த்துகிட்டு என்னை பழிகிடா ஆக்காதே படுத்து தூங்கு என்றவன் படுத்துக் கொள்ள அவள் எழுந்து அறையை விட்டு வெளியேறினாள்.

 

நிம்மதி இல்லாமல் போகுதோ என் கிட்ட பேசினால் நிம்மதியா தூங்குங்க என்று நினைத்தவள் அழுது கொண்டிருக்க இவளுக்கு என்ன தான் வேண்டுமோ என்று கடுப்பானவன் எழுந்து வெளியே சென்று அவளை தேடினான்.

 

அவள் மொட்டை மாடியில் நின்றிருக்க என்ன இங்கே வந்து நிற்கிற ரோனி என்றான் உதய். நான் எங்கே நின்றால் உங்களுக்கென்ன நீங்க தான் நிம்மதியா தூங்கனும்னு சொன்னிங்களே போங்க போயி தூங்குங்க என்றவள் கண்களை துடைத்துக் கொண்டாள்.

 

என்னடி உன் பிரச்சனை படுத்துக் கிடந்தவனை மாமா, மாமானு தொல்லை பண்ணிட்டு தூக்கத்தையும் கெடுத்து விட்ட இப்போ மொட்டை மாடியில் நின்னுகிட்டு போயி தூங்குனு சொல்லுற உனக்கு என்னடி பிரச்சனை நானும் மனுசன் தான் ரோனி ரோபோ இல்லை.

 

நீ சண்டை போட்டாலும், சமாதானம் பண்ணினாலும் சிரிச்சுட்டே இருக்க என்றவன் மதியம் நான் என்னடி கேட்டேன். துணியை ஒன்று நீ் மடிச்சு வச்சுருக்கனும், இல்லையா கப்போர்டை அடைச்சு வச்சுருக்கனும் இரண்டுமே அறைகுறையா போட்டு வச்சுருந்தால் உன்னை நான் ஏன்னு கேட்க மாட்டேனா. அதுக்கு அந்த கத்து கத்துற. வெளியில் தான் ஆயிரத்தெட்டு டென்சன் அதை சமாளிக்கவே நாக்கு தள்ளுது இந்த லட்சணத்தில் வீட்டிலும் போராட்டமா இருந்தால் விளங்கிரும் என்றான் உதய்.

 

நான் அப்படி கத்துறவளா மாமா திடீர்னு அப்படி கத்தினால் என்ன காரணம்னு யோசிக்க மாட்டிங்களா நமக்கு சண்டைனு மொத்த வீட்டிற்கும் தெரியனுமா. என்ன சண்டை வந்தாலும் என்னை விட்டுட்டு நீங்க தனியா சாப்பிட்டு இருக்கிங்களா இன்னைக்கு என்ன புதுப்பழக்கம் என்றவளை கூர்மையாக பார்த்தான் உதய்.

 

என்ன பண்ண சொல்லுற மறுபடியும் வந்து நான் சாப்பிட கூப்பிட போயி அதற்கும் நீ சாமியாடிட்டனா அதான் பயத்துல மேல வரவில்லை என்றவன் இப்போ என்ன உன் பிரச்சனை உன்னை விட்டுட்டு சாப்பிட்டது தப்பு தான்மா பேசாமல் உன் காலில் விழட்டுமா என்றான் கோபமாக.

 

என்ன மாமா இப்படி எல்லாம் பேசுறிங்க என்றவளிடம் வேற எப்படி பேச சொல்லுற ரோனி நீ சின்னப் பொண்ணு, சின்னப் பொண்ணுனு ஒவ்வொரு விசயத்திலும் பொறுமையா விட்டுக் கொடுத்து தானே போகிறேன். என்னை நல்லா புரிஞ்சுகிட்டவள் நீ ஒருத்தி தான்னு நினைச்சுட்டு இருக்கேன். ஆனால் நீ என்னை புரிஞ்சுக்கவே மாட்டேங்கிற சத்தியமா சரியான பசிடி அதனால தான் வந்த்தும் சாப்பிட உட்கார்ந்துட்டேன்.

 

மதியம் சாப்பிட தான் வீட்டுக்கு வந்தேன் நீ பேசின பேச்சில் சாப்பிட பிடிக்காமல் போயிட்டேன். இப்பவும் நீ என்ன மனநிலையில் இருக்கனு தெரியலை. நான் வந்து பேச போக அது வேற பக்கம் போயி பிரச்சனை ஆகிருமோன்னு தான் சாப்பிட உட்கார்ந்தேன். அது உனக்கு தப்பா படுது. சரிம்மா இனிமேல் நீ இல்லாமல் எப்பவும் சாப்பிட மாட்டேன் போதுமா வா வந்து படுத்து தூங்கு என்றான் உதய்.

 

மாமா ஏன் இப்படி பேசுறிங்க இப்போ கூட மதியம் ஏன் அப்படி இருந்தேன்னு நீங்கள் கேட்கவே இல்லை என்றவளிடம் எனக்கு தான் தெரியுமே நீ ஏன் அப்படி இருந்தனு அதை உன் வாயால வேற கேட்கனுமா போ ரோனி மனசே வெறுத்துப் போச்சு என்றவன் கோபமாக திரும்பிக் கொண்டான்.

 

வினித்ரா கிட்ட பேசினதை மறைச்சேன்னு தானே இத்தனை டிராமா ஏன் ரோனி அதை நீ என்கிட்ட நேரடியாவே கேட்டிருக்கலாமே. என்னை நீ அப்போ சந்தேகப் படுறியா என்றவனை நிமிர்ந்து பார்த்தவள் என்ன மாமா உளறிட்டு இருக்கிங்க நீங்க வினித்ரா மேடம் கிட்ட பேசுனதை நான் ஏன் சந்தேகப் பட போறேன். அவங்க உங்க ப்ரண்ட் அவங்க கூட நீங்க பேசுறதை தப்பா நினைக்கிற அளவுக்கு நான் அவ்வளவு மலிவான குணம் படைச்சவள் இல்லை ச்சே என்னை ஏன் இவ்வளவு கேவலமா நினைச்சிங்க மாமா.

 

என் சந்துரு மாமாவை பற்றி எனக்கு தெரியாதா அவரு எப்பவும் என்னை தவிர இன்னொரு பெண்ணை தப்பான கண்ணோட்டத்தில் பார்க்கவே மாட்டாருன்னு ஆணித்தரமா நம்புறவள் நான் என்னைப் போயி இப்படி நினைச்சுட்டிங்களே என்றவள் மதியம் ஊர்மிளா என்கிட்ட பேசினாள் என்று நடந்த விசயங்களை கூறினாள் வெரோனிகா.

 

அவள் மேல இருந்த கோபத்தை யார்கிட்ட காட்டுறதுன்னு தெரியாமல் தான் உங்க கிட்ட காட்டிட்டேன். நீங்க போன அப்பறம் தான் ஐயோ, தப்பு பண்ணிட்டோமேன்னு நினைச்சு வருத்தப் பட்டேன். நீங்கள் வந்ததும் மன்னிப்பு கேட்கனும்னு நினைச்சுட்டு நான் இருந்தால் நீங்க வினித்ரா கிட்ட பேசுனதை பார்த்துட்டு தப்பா நினைச்சுட்டேனு போங்க மாமா இனிமேல் என்கிட்ட பேசாதிங்க என்றவள் கண்களை துடைத்து விட்டு நகர்ந்திட அவளது கையை பிடித்தான் உதய்.

 

ரோனி ஸாரி என்றவனை கசந்த பார்வை பார்த்தவள் உங்களுக்கு என் மேல அவ்வளவு தான் நம்பிக்கை இல்ல மாமா இந்து அக்கா என்கிட்ட உங்களை வினித்ரா கூட காட்டிட்டு ஏன்டி உன் புருசன் இன்னொரு பொண்ணு கூட வராரு நீ அதை ஒரு பொருட்டாவே மதிக்காமல் கிளம்புறியேனு கேட்டாங்க அப்போ நான் என்ன சொன்னேன்னு தெரியுமா மாமா என் சந்துரு மாமா மேல எனக்கு நிறைய நம்பிக்கை இருக்கு. அவங்க அவரோட ப்ரண்ட் அவங்க கூட கோவிலுக்கு வருவதில்  என்ன தப்புனு கேட்டேன் என்னை போயி உங்களை சந்தேகம் பட்டுட்டேனு நினைச்சுட்டிங்களே மாமா போங்க என்றவள் அவனது கையை உதறி விட்டு சென்றாள்.

 

ரோனி ஸாரிடி என்றவனிடம் பதிலே பேசாமல் அவள் அறைக்கு சென்று விட்டாள். அவன் அறைக்கு செல்லவில்லை. மொட்டை மாடியில் மௌனமாக நின்றிருந்தான்.

 

நானும் அவசரப் பட்டுட்டேன். நீயும் மதியம் அப்படி பேசினதும் எனக்கு மனசுக்கு ரொம்ப கஷ்டமாகிருச்சு ரோனி என்னை மன்னிச்சுரு என்று நினைத்தவன் தன்னறைக்கு செல்ல அவள் உறங்கிக் கொண்டிருந்தாள். அவளது முக வீக்கமே அவள் அழுதிருப்பதை காட்டிட அமைதியாக அவளருகில் வந்தவன் அவளை அணைத்தபடி படுத்துக் கொள்ள அவனைப் பிரிந்து திரும்பி படுத்தாள் வெரோனிகா.

 

ரோனி ஏன் இப்படி பண்ணுற என்றவனை கண்டு கொள்ளாமல் அவள் திரும்பிக் கொள்ள அவனும் சரியென்று திரும்பி படுத்து விட்டான்.

 

ரோனி செம்ம கிரேட் தெரியுமா பிரகாஷ் என்ற இந்திரஜாவிடம் என் இந்து கூட தான் கிரேட் என்றவன் மனைவியின் கால்களை பிடித்து விட என்ன பண்ணுற பிரகாஷ் என்றாள் இந்திரஜா.

 

நீ இன்னைக்கு அண்ணிக்காக வேண்டுதல் பண்ணினனு அம்மா சொன்னாங்க என்றவன் அவளது கால்களை பிடித்து விட அவள் என் தங்கச்சி தானே பிரகாஷ் அவளுக்காக இது கூட பண்ணக் கூடாதா என்று சிரித்தாள் இந்திரஜா.

 

ஆமாம் அண்ணி கிரேட்னு ஏதோ சொல்ல வந்தியே என்ற பிரகாஷிடம் நான் சொன்னேன்ல கோவிலில் மாமா கூட அந்த பொண்ணை பார்த்தோம்னு என்ற இந்திரஜா அவள் இடத்தில் நான் இருந்திருந்தால் கட்டாயம் உன்னை சந்தேகப் பட்டு சண்டை போட்டிருப்பேன் ஆனால் அவள் அதை எவ்வளவு கேஷுவலா எடுத்துக்கிட்டா தெரியுமா. வயசுல தான் சின்னப் பொண்ணு மெச்சுரிட்டி சத்தியமா வேற லெவல் பிரகாஷ் என்றாள்.

 

கத்துக்கோ இந்து என் அண்ணிகிட்ட இருந்து இன்னும் நிறைய கத்துக்கோ. நீ என்னடானா நான் சன்னிலியோன் வீடியோ பார்த்தாளே என்னை செருப்பால அடிக்க வர என்றவனது காதை திருகினாள் இந்திரஜா. ஏன்டா கோன வாயி கொத்தவரங்கா உனக்கு எம்புட்டு கொழுப்பு இருந்தால் நீ சன்னிலியோன் வீடியோ பார்க்கிறதையும், உதய் மாமா ப்ரண்ட் கூட வெளியில் போறதையும் கம்பேர் பண்ணுவ என்றிட ஆத்தா மகமாயி என்னை மன்னிச்சுரும்மா என்று அவன் தலைக்கு மேல் கையை தூக்கி கும்பிட கலகலவென சிரித்தாள் இந்திரஜா.

 

அப்பாடி சமாதானம் ஆகிட்டாள் என்றவன் அவளது கன்னத்தில் முத்தமிட பொறுக்கி பொறுக்கி முத்தம் கொடுத்தே என்னை கரைக்ட் பண்ணிருவான் என்று அவனது மார்பில் சாய்ந்து கொண்டாள். அவளை அணைத்தவன் அவளுடன் இன்பமாக இரவினை கழித்தான்.

 

என்ன அர்ச்சு  ஏன் டல்லா இருக்க என்ற விவேக்கிடம் டல்லாவா அப்படிலாம் ஒன்றும் இல்லையே என்றாள் அர்ச்சனா. பொய் சொல்லாதே என் அர்ச்சு பற்றி எனக்கு தெரியாதா என்ற  விவேக்கிடம் ஊர்மிளா பிரச்சனை தான் வீட்டில் பெருசா இருக்குதாம். அவள் விக்னேஷ் கூட பழகிட்டு தான் இருக்கிறாள் என்றாள் அர்ச்சனா.

 

அந்த பொறுக்கி நான் அந்தப் பொண்ணை லவ் பண்ணவே இல்லைன்னு சொல்லிட்டு சுத்துறான் என்ற விவேக்கிடம் திரும்ப ஒருமுறை நாமளே விக்னேஷ்கிட்ட பேசி பார்க்கலாமா என்றாள் அர்ச்சனா.

 

அவன் முகத்தில் அவசியம் விழிக்கனுமா அர்ச்சு என்ற விவேக்கிடம் ஊர்மிளா என்னோட தங்கச்சி விவேக். அவளோட வாழ்க்கையில் விக்னேஷால எந்த பிரச்சனையும் வரக் கூடாதுன்னு நினைக்கிறேன் என்றாள் அர்ச்சனா.

 

சரி அர்ச்சு உனக்காக நாம நாளைக்கே அவனை பார்த்து பேசலாம் என்ற விவேக் மனைவியின் நெற்றியில் முத்தமிட கதவு தட்டப் பட்டது. எந்த கரடினு தெரியலையே என்று கதவைத் திறந்த விவேக் அறை வாசலில் அவனது அம்மா தனலட்சுமி நிற்கவும் அய்யோ மம்மி நீ தானா அந்த கரடி என்று மனதிற்குள் நினைத்தான்.

 

என்னடா இரண்டு பேரும் இன்னும் சாப்பிடாமல் இருக்கிங்க என்ற தனலட்சுமியிடம் இதோ வரோம் அத்தை என்ற அர்ச்சனா அவருடன் செல்ல விவேக் பாவமாக தன் அம்மாவுடன் செல்லும் மனைவியை பார்த்தான்.

 

அவளோ கணவனை பார்த்து சிரித்து விட்டு சென்று விட அவனும் சென்றான்.

 

வினித்ரா ஏதோ யோசனையுடன் அமர்ந்திருக்க என்னாச்சு வினி ஏன் டல்லா இருக்க என்று வந்தாள் பவித்ரா. என்னோட பிரச்சனை உனக்கு தெரியாதா பவி என்றவளிடம் எல்லாமே சரியாகிரும் வினி நீ ஏன் இதை எல்லாம் யோசிக்கிற என்ற பவித்ரா தன் தோழியை அணைத்துக் கொண்டாள்.

 

        அத்தியாயம் 125

 

காலையில் கண் விழித்தவள் தன் கணவனை பார்த்திட அவன் நன்றாக உறங்கிக் கொண்டிருந்தான். அவள் மெல்ல எழுந்திட அவளது கையை பிடித்தவன் ஸாரி ரோனி என்றிட அவளோ கையை உதறி விட்டு எழுந்து குளியலறைக்குள் சென்று விட்டாள்.

 

அவனுக்கு தான் மனம் கணத்தது. சரியென்று எழுந்தவன் பால்கணியில் நின்றிருக்க அவள் குளியலறையை விட்டு வெளியே வந்தாள். பிறகு உதய் சென்று குளித்து விட்டு அவளருகில் வந்தான்.

 

ரோனி சாப்பிட வா என்றவனிடம் பதிலே பேசாமல் அவள் இருந்திட உன்னை தான் கூப்பிடுறேன் அப்பறம் உன்னை விட்டுட்டு தனியா சாப்பிட்டேன்னு வேற நீ சண்டை போடுவ என்றவன் சிரித்திட நான் இனிமேல் உங்க கூட சேர்ந்து சாப்பிட மாட்டேன். ஏன் என்னை விட்டுட்டு சாப்பிட்டிங்கனும் கேட்க மாட்டேன். நேற்று மட்டும் தனியா சாப்பிட முடிஞ்சது தானே அதுவே இனியும் தொடரட்டும் என்றவள் எழுந்து கொள்ள என்னடி உன் பிரச்சனை.

 

நான் தான் ஸாரி சொல்லிட்டேன்ல அப்பறம் என்ன உன் காலில் விழனுமா சொல்லு விழறேன். என் பொண்டாட்டி காலை பிடிக்கிறதில் எனக்கு ஒன்றும் அசிங்கம் இல்லை என்றவனிடம் யாரும் என் காலை பிடிச்சு எனக்கு பாவத்தை சேர்க்க வேண்டாம். எனக்கு கோபம் படக் கூட உரிமை கிடையாது நான் தான் அடிமை ஆச்சே நீங்க திட்டினால் வாங்கிக்கனும், கொஞ்சினால் கூடிக்கனும் எனக்குனு உணர்ச்சிகளே இருக்க கூடாது அப்படித் தானே என்றாள் கோபமாக. அவளிடம் மீண்டும், மீண்டும் பேசி சண்டையை வளர்க்க விரும்பாதவன் சரி ஸாரி உன்னை இனிமேல் நான் கூப்பிட மாட்டேன். எனக்கு பசிக்குது நீ பரிமாறி நான் சாப்பிடனும்னு ஒரு ஆசையில் கூப்பிட்டுட்டேன் அது உனக்கு உன்னை அடிமையா நடத்துற மாதிரி தோன்றி இருந்தால் என்னை மன்னிச்சுருமா என்றவன் அறையை விட்டு வெளியேறினான்.

 

என்ன உதய் ரோனி எங்கே என்ற மலர்கொடியிடம் அவள் ரூம்ல தான் அம்மா இருக்கிறாள் என்றவன் கிளம்பிச் செல்ல என்னப்பா சாப்பிடாமல் போற என்றார் மலர்கொடி. பசி இல்லைம்மா நான் பார்த்துக் கொள்கிறேன் என்றவன் சென்று விட்டான்.

 

ஒரே ஒரு வேளை அவளை விட்டுட்டு சாப்பிட்டது அத்தனை பெரிய தப்பா அதற்கு போயி அடிமை மாதிரி நடத்துறேன்னு சொல்லிட்டாளே. அந்த அளவுக்கு நான் தூரமா போயிட்டேனா ரோனி. இல்லை நான் அவ்வளவு கொடுமைக்காரனா என்று நினைத்தவன் மனம் போன போக்கில் வண்டியை ஓட்டிக் கொண்டிருந்தான்.

 

நான் வரமாட்டேன்னு சொன்னால் இது தான் சமயம்னு விட்டுட்டு போயிட்டாரு இது தான் அவரோட லவ் என்னை சமாதானம் பண்ணனும்னு கூட தோனலை சரி இனிமேல் தனியாவே சாப்பிடட்டும் நான் எப்பவுமே பரிமாற போறதில்லை என்று முகத்தை தூக்கி வைத்துக் கொண்டிருந்தவளது கண்கள் கண்ணீரை சிந்தியது.

 

ரோனி சாப்பிட வராமல் என்ன பண்ணுற என்ற இந்திரஜாவின் சத்தம் கேட்டதும் வரேன் இந்துக்கா என்றவள் கண்களை துடைத்து விட்டு கீழே வந்தாள். 

 

அப்படி என்னடி உன் புருசனுக்கு அவசர வேலை சாப்பிடாமல் கூட கிளம்பிட்டான் என்ற மலர்கொடி  மருமகளுக்கு உணவினை பரிமாற என்ன அத்தை சொல்றிங்க மாமா சாப்பிடலையா என்றாள் வெரோனிகா. ஆமாம் ரோனி என்றவர் நீ சாப்பிடு என்றிட பெயருக்கு இரண்டு இட்லியை சாப்பிட்டவள் தன்னறைக்கு சென்று கணவனுக்கு போன் செய்தாள். அவன் தான் எடுத்தபாடில்லை.

 

என்னடி சொல்லுற என்ற பவித்ராவிடம் உதய் சார் ஹெல்ப் பண்றேன்னு சொல்லிருக்காருடி என்றாள் வினித்ரா. நீ இன்னும் அவனை மறக்கவில்லையா உனக்கு ஒரு பிரச்சனைனா நீ ஏன் அவன் கிட்ட சொல்லுற என்றவளிடம் நானா சொல்லவில்லை பவி என்றவள் உதய்யிடம் பேசியதை கூறினாள்.

 

என்ன பிரச்சனை மேடம் என்றவனிடம் என்னோட காலேஜ் மெட் ஒருத்தன் இரண்டு நாளைக்கு முன்னே போன் பண்ணி இருந்தான் சார். என்னை லவ் பண்ணுறேன்னு காலேஜ் டைம்ல சுத்தினான். அப்போ அவனை அடிச்சுட்டேன் அதை மனசுலையே வச்சுட்டு பழி வாங்க டைம் பார்த்துட்டு இருந்திருக்கான். 

 

போன வாரம் ப்ரண்ட் ஒருத்தி கல்யாணத்திற்கு கோயம்புத்தூர் போனப்ப அவனும் வந்திருந்தான். அந்த கல்யாணத்திற்கு போன எல்லோரும் ஒரு ஹோட்டல்ல ஸ்டே பண்ணி இருந்தோம். அந்த பொறுக்கி கூல்ட்ரிங்க்ஸ்ல எதையோ கலந்து கொடுத்து என்னை தப்பு தப்பா போட்டோ எடுத்து வச்சுருந்திருக்கான் . எனக்கும் அது அப்போ தெரியலை . இரண்டு நாளைக்கு முன்னே அவன் எடுத்து வச்ச போட்டோ எல்லாம் எனக்கு அனுப்பி நெட்ல விட்ருவேன்னு மிரட்டுறான் என்று அழுதாள் வினித்ரா.

 

அவன் மேல போலீஸ் கம்ப்ளையண்ட் கொடுத்திருக்கலாமே மேடம் என்ற உதய்யிடம் என்னோட அப்பா, அம்மா ரொம்பவே மானம், மரியாதைன்னு வாழ்றவங்க சார். என்னை இங்கே தனியா தங்கி வேலை பார்க்கிறதையே தப்புன்னு சொல்றவங்க என்னோட பிடிவாதத்தால இங்கே தங்கி இருக்கேன். போலீஸ் ஸ்டேசன், கோர்ட் இந்த இரண்டு இடத்திற்கும் சாகும் மட்டும் போகவே கூடாதுன்னு நினைக்கிறவங்க சார்.

 

இந்த விசயம் தெரிந்தால் என்னை கொன்னுட்டு அவங்களும் செத்துருவாங்க  என்று அழுதாள் வினித்ரா.

 

மேடம் ப்ளீஸ் அழாதிங்க அவனோட டிமாண்ட் என்ன பணமா என்ற உதய்யிடம் பணம் இல்லை சார் நான் அவன் கூட ஒரு நாள் ஸ்டே பண்ணனுமாம் என்றவள் அழுதிட ப்ளீஸ் அழாதிங்க இந்த பிரச்சனையை விடுங்க நான் பார்த்துக்கிறேன் என்றான் உதய்.

 

இது தான் நடந்துச்சு என்ற வினித்ராவிடம் சரி வினி அதான் அந்த உதய் பார்த்துக்கிறேன்னு சொல்லிருக்காரே அப்பறம் என்ன கவலையை விடு என்று தோழிக்கு ஆறுதல் கூறினாள் பவித்ரா.

 

இல்லைடி அந்த பரத் என்ற வினித்ராவிடம் வினி அவனை உதய் பார்த்துக்கிறேன்னு சொன்னதா சொல்லுறியே அப்பறம் என்ன. உதய் எதுவும் பண்ணவில்லைனா நாம வேற எதுனாலும் பண்ணலாம் என்று பவித்ரா கூறிய நேரம் வினித்ராவின் போன் இசைத்தது.

 

உதய் சார் தான்டி என்ற வினித்ரா போனை அட்டன் செய்திட மேடம் நீங்க எதுவும் கவலைப் படாதிங்க அந்த பரத் இப்போ கம்பி எண்ணிட்டு இருக்கிறான். உங்களோட எல்லா போட்டோஸ்மே டெலிட் பண்ணியாச்சு. நீங்க இனிமேல் எந்த டென்சனும் இல்லாமல் அமைதியா உங்க வேலையை பார்க்கலாம் என்றான் உதயச்சந்திரன்.

 

சார் எப்படி இது என்ற வினித்ராவிடம் என் வொய்ப்போட அண்ணன் அசிஸ்டன்ட் கமிஷ்னர் அவர்கிட்ட ஹெல்ப் கேட்டேன். அவர் மூலமா தான் இந்த பிரச்சனை முடிஞ்சது. அந்த பரத் மேல வேற ஒரு கேஸ் போட்டு தான் அரஸ்ட் பண்ணிருக்காங்க. உங்க பெயர் எப்பவுமே வெளியே வராது. இனிமேல் கொஞ்சம் ஜாக்கிரதையா இருங்க என்றவனிடம் ரொம்ப நன்றி சார் என்றாள் வினித்ரா. பரவாயில்லை மேடம் என்றவன் போனை வைத்தான்.  

 

என்னாச்சு வினி என்ற பவித்ராவிடம் உதய் கூறியதை சொன்னாள் வினித்ரா. ரோனியோட அண்ணன் போலீஸா போலீஸ் வீட்டிலே சைல்டு மேரேஜ் பண்ணி வச்சுருக்காங்க பாரேன் என்ற பவித்ராவிடம் அது அவங்க பர்சனல் பவி என்ற வினித்ரா எழுந்து கொள்ள வினி உனக்கு உதய் மேல இப்பவும் என்று தயங்கினாள் பவித்ரா.

 

அது என்னோட முதல் காதல் எப்பவுமே அடி மனசுல இருக்க தான் செய்யும் அதற்காக அவங்க வாழ்க்கைக்குள்ள நான் போக மாட்டேன். போகனும்னு நினைக்க கூட மாட்டேன். அப்பா , அம்மா எனக்காக ஒரு மாப்பிள்ளை பார்த்திருக்கேனு சொன்னாங்க அடுத்த வாரம் ஊருக்கு போகனும் என்ற வினித்ரா சென்று விட்டாள்.

 

என்ன மச்சான் இன்னும் இங்கேயே இருக்கிங்க வீட்டுக்கு போகவில்லையா என்ற சரவணனிடம் கிளம்பிட்டேன் மச்சான் என்ற உதயச்சந்திரன் கிளம்பினான். வீட்டுக்கு போகவும் விருப்பம் இல்லை ஆனால் அவளை பார்க்காமலும் இருக்க முடியாதே சண்டை வந்தால் நல்லா இருக்கும்னு விளையாட்டுக்கு சொன்னேன். என்ன நேரத்தில் சொன்னேனோ சண்டை மட்டும் தான் வருது.

 

அவள் மேல தப்பே இல்லாத மாதிரி எல்லா தப்பையும் என் மேல திருப்பி விட்டுட்டாள் என்ன பண்ண என்று நொந்து கொண்னவன் வீட்டிற்கு வந்தான்.

 

காலையிலே சரியான பசி அவள் மேல உள்ள கோபத்தில் சாப்பிடாமல் வந்தேன். இப்போ வரை சாப்பிடவில்லை என்ன பண்ணுவாளோன்னு தெரியலையே வர வர அவளை என்னால புரிஞ்சுக்கவே முடியவில்லை என்று நினைத்தபடி வீட்டிற்குள் நுழைந்தான் உதய்.

 

என்னடா இது ஏன் நீ போன் எடுக்கவே இல்லை உனக்காக எவ்வளவு நேரம் அவள் காத்திருந்தாள் தெரியுமா என்ற மலர்கொடியிடம் ஏன்மா என்ன விசயம் என்றான் உதய்.

 

ரோனியோட சித்தி, சித்தப்பா வந்திருந்தாங்க பெங்களூர்ல  இருந்து உன்னை பார்க்கனும்னு என்ற மலர்கொடி உன்னை பார்த்துட்டு அவங்க பொண்ணுக்கு சடங்காம் அதற்கு பத்திரிக்கை வைக்க என்றவர் பாவம் ரோனி உன்னோட மொபைலுக்கு போன் பண்ணிட்டே இருந்தாள்.

 

நீ ஏன் எடுக்கவில்லை என்ற மலர்கொடியிடம் போன் சைலன்ட்ல இருந்துச்சும்மா என்றவன் ரோனி எங்கே என்றான். அவங்க கூட ஷாப்பிங் போயிருக்கிறாள் என்ற மலர்கொடி வாடா சாப்பிட என்றதும் அமைதியாக அமர்ந்து சாப்பிட்டான் உதய்.

 

இவள் போன் பண்ணி நான் எடுக்காததுக்கு வேற சண்டை போடுவாளோ இந்த மாரியாத்தா சாமியாட போகுது என்று நினைத்தவன் சாப்பிட்டு விட்டு தன்னறைக்கு சென்றான்.

 

என்ன ரோனி டல்லா இருக்க என்ற அனாமிகாவிடம் ஒன்றும் இல்லை அனு என்றாள் வெரோனிகா. மாமா போன் எடுக்கலைனா என்றவளிடம் அவரு எதாவது வேலையா இருந்திருப்பாருடி என்ற பொழுது சரியாக உதய்யிடம் இருந்து போன் வந்தது.

 

சந்துரு மாமாவா அது யாரு ரோனி என்ற அனாமிகா அட்டன் செய்திட ரோனி ஸாரிமா போன் சைலன்ட்ல இருந்துச்சு என்ற உதயச்சந்திரன் மனைவிக்கு இச் இச்சென்னு இச்சு கொடுத்திட அய்யோ மாம்ஸ் நான் உங்க பொண்டாட்டி ரோனி இல்லை மச்சினிச்சி அனு என்றதும் உதய் அதிர்ந்து போனான்.

 

போன் எடுத்தது யாருனு கூட தெரியாமல் இப்படியா பச் பச்சுனு இச்சு வைப்பிங்க என்று அனாமிகா கூறிட வெரோனிகாவின் முகம் கோபமாக மாற ஆரம்பித்தது.

 

என்ன இச்சு வச்சாரா என்றவளிடம் பாரு ரோனி இந்த மாம்ஸை என்று அனாமிகா சிரித்திட போனை வாங்கிய வெரோனிகா சொல்லுங்க என்றாள். ரோனி அது வந்து என்றவனிடம் இப்போ எங்கே இருக்கிங்க என்றாள். வீட்டில் தான் என்றவனிடம் சரி மாமா எங்கேயும் போயிராதிங்க இன்னும் அரை மணி நேரத்தில் வீட்டுக்கு வந்துருவோம் என்றவள் போனை வைத்தாள்.

 

  அத்தியாயம் 126

 

உதய் என்ற மலர்கொடியின் சத்தத்தில் கீழே வந்தான் உதய். மாமா இவங்க என்னோட சித்தி, சித்தப்பா என்று அறிமுகம் செய்து வைத்தாள் வெரோனிகா. ஜெயக்கொடியும், அவரது கணவன் ஜெயக்குமாரும் உதய் உடன் பேசிக் கொண்டிருந்தனர். அப்பறம் இவள் என் தங்கச்சி என்று அனாமிகாவையும் அறிமுகம் செய்து வைத்தாள் வெரோனிகா.

 

மாம்ஸ் நான் எப்படி உங்க பொண்டாட்டியை விட அழகா இருக்கேனா அதான் போன்லையே என்று சிரித்தவளிடம் பாவி பயபுள்ளை இது என்ன காலத்திற்கு இப்படி என்னை கோர்த்து விடுதுன்னு தெரியலையே நம்ம வீட்டு மகமாயி முகம் வேற அப்போ அப்போ கோவத்தில் சிவக்குதே என்று எச்சில் விழுங்கினான் உதய்.

 

ஏய் வாயாடி சும்மா இருடி என்ற ஜெயக்கொடி மாப்பிள்ளை நீங்க எல்லோரும் குடும்பத்தோட விசேசத்திற்கு வந்திரனும். உங்க கல்யாணத்திற்கு வரவில்லைன்னு தப்பா எடுத்துக்காதிங்க வசந்தி அக்கா கூட உறவு அத்தனை சுமுகமா இல்லை. அதனால தான் வினோதா கல்யாணம்னு நாங்களும் வரவில்லை என்ற ஜெயக்கொடியிடம் பரவாயில்லை அத்தை என்றான் உதய்.

 

சரிங்க மாப்பிள்ளை நாங்க கிளம்புறோம் சரவணன் வீட்டுக்கு போயிட்டு அப்படியே ஊருக்கு போகிறோம் என்றவர் எல்லோரிடமும் விடை பெற்று கிளம்பிட உதய் அவர்களை அனுப்பி விட்டு உள்ளே வந்தான்.

 

அம்மா ரோனி எங்கே என்றவனிடம் உங்க ரூம்க்கு போயிட்டா டா என்றார் மலர்கொடி. அறைக்குள் சென்றவன் ரோனி என்றிட அவனை முறைத்து விட்டு அமைதியாக அமர்ந்து கொண்டாள். என்னாச்சு ரோனி நான் நீ தான்னு நினைச்சு தான் முத்தம் கொடுத்தேன் என்றிட அவள் எதுவும் பேசவில்லை.

 

என்னடி உன் பிரச்சனை நான் தான் ஸாரி சொல்லிட்டேன்ல ஏன் நீ ரொம்ப பண்ணுற. சின்ன விசயத்தை இப்போ எல்லாம் பெரிய இஸ்யூ ஆக்குற நீ இப்படிலாம் இல்லையே ரோனி என்றவனிடம் நான் மாறிட்டேன். எப்பவும் ஒரே மாதிரி இருக்க முடியாதே என்றவள் முகத்தை தூக்கி வைத்துக் கொள்ள அவள் முன் மண்டியிட்டவன் என்னம்மா உன் பிரச்சனை என் மேல உனக்கு ஏன் இத்தனை கோபம் என்றான்.

 

நான் யாரு உங்க மேல கோபம் பட என்றவளிடம் ரோனி நீ ஏன் இப்படி குழந்தை மாதிரி பிகேவ் பண்ணிட்டு இருக்க அப்படி என்னடி தப்பு பண்ணினேன். உன்னை விட்டு சாப்பிட்டேன். என்னை சந்தேகப் படுறியான்னு கேட்டேன் அவ்வளவு தானே ரோனி சத்தியமா எனக்கு பசிச்சுருச்சு ரோனி. பசி வந்து சாப்பிட்டது கூட குத்தமா. 

 

நீ மட்டும் ஊர்மிளா மேல உள்ள கோபத்தை என் மேல காட்டவில்லையா. அதற்காக நான் கோவிச்சுட்டு இருக்கட்டுமா என்றவன் நீ இப்படியே பண்ணிட்டு இருந்தினா ஒரு நாள் நான் உன்கிட்ட நிரந்தரமா பேசாமல் போயிருவேன் என்றிட அவள் அப்பொழுதும் மௌனமாகவே இருந்தாள்.

 

என்ன ரோனி உனக்கு என் கிட்ட பேச பிடிக்கவில்லையா சரி இனிமேல் நீ என் கிட்ட பேச வேண்டாம். அது தான் உனக்கு சந்தோசம்னா நான் ஒன்றும் பண்ண முடியாது என்றவன் எழுந்து செல்ல ஸாரி மாமா என்றாள் வெரோனிகா.

 

ஒன்றும் வேண்டாம் என்றவனின் கையை பிடித்தவள் தன்னருகில் அமர வைத்தாள். என்ன உன் பிரச்சனை என்றவனிடம் தெரியலை மாமா ஆனால் நீங்க இனிமேல் பேசவே மாட்டேன்னு சொன்னதும் என்னால தாங்கிக்கவே முடியலை. உங்களை நான் ரொம்ப கஸ்டப்படுத்திட்டேனா என்றவளின் கையை தன் கைக்குள் வைத்தவன் இல்லைடா அப்படிலாம் ஒன்றும் இல்லை என்றவன் வினித்ராவின் பிரச்சனையை கூறினான்.

 

அதை கேட்டவள் இப்போ அவங்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லையே மாமா என்றிட எதுவும் இல்லை ரோனி. அப்பறம் அவங்களை பொண்ணு பார்க்க மாப்பிள்ளை வீட்டில் இருந்து அடுத்த வாரம் வராங்களாம் என்றவன் சரி நாம எப்போ ஊருக்கு போகலாம் என்றான்.

 

நீங்களும் வரிங்களா என்ற வெரோனிகாவிடம் பின்னே என் மச்சினியோட சடங்குக்கு நான் வராமலா என்று கண்ணடித்தவனை முறைத்தவள் ஆமாம் அது எப்படி போனில் யாரு பேசுறாங்கனு கூட தெரியாமல் இச்சு வைப்பிங்க என்றாள்.

 

அது ஏதோ அந்நிய நாட்டு சதி ரோனி என்றவனை முறைத்தவள் யோவ் லூசு மாமா நீ பெரிய இவரு இவருக்கு அந்நியநாட்டு சதி வைக்க உன்னை என்று அவனை விரட்டிட அந்த அறைக்குள்ளே இருவரும் ஓடிப் பிடித்து விளையாடினர். ஒரு வழியாக அவனை பிடித்தவளை தன்னோடு அணைத்தவன் ராட்சசி என்னை இன்னைக்கு முழுக்க தவிக்க விட்டுட்டியேடி என்றிட ஸாரி மாமா என்றாள்.

 

மாமா உங்களுக்கு ஒரு விசயம் தெரியுமா நம்ம இந்து அக்கா எனக்காக கோவிலில் அங்கப் பிரதக்சனம் எல்லாம் செய்தாங்க என்றிட தெரியும் ரோனி என்றான்.

 

அப்பறம் நம்ம கூட ஊருக்கு ஸ்ரீஜா அக்கா, தேவ் மாமா, நிலாக்குட்டி எல்லோரும் வராங்களே என்றிட அப்போ ஜாலியா இருக்கும் என்று சிரித்தான் உதய்.

 

சரி , சரி உனக்கு எக்ஸாம் இருக்குல ஒழுங்கா படி வா என்று மனைவியை அவன் அழைத்திட இந்த வாத்தியாரை கல்யாணம் பண்ணினாலும், பண்ணினேன் எப்போ பாரு பிரம்பை எடுத்து கைல வச்சுகிட்டு படி, படினு மிரட்டிட்டே இருக்காரு என்றவளை பார்த்து சிரித்தவன் வாயாடி படிடி என்றிட சரி, சரி படிக்கிறோம் என்று புத்தகத்தை எடுத்துக் கொண்டு அமர்ந்தாள்.

 

என்ன சொல்றடா நீ அன்னைக்கு ஊர்மிளாவை காதலிக்கவே இல்லைன்னு சொன்ன இப்போ லவ் பண்ணுறேன்னு சொல்லுற என்ன தான் உன் கணக்கு என்ற விவேக்கிடம் இதோ பாரு விவேக் அன்னைக்கு ஊர்மிளாவை காதலிக்கவில்லைன்னு சொன்னதும் உண்மை தான். இன்னைக்கு அவளை காதலிக்கிறேன்னு சொல்றதும் உண்மை தான் இப்போ என்ன பண்ண சொல்லுற என்றான் விக்னேஷ்.

 

என்னடா கொழுப்பா என்ற விவேக்கிடம் அதெல்லாம் இல்லை எனக்கு அவளை பிடிச்சுருக்கு அவளை தான் கல்யாணம் பண்ணிக்குவேன் என்றான் விக்னேஷ்.

 

ஆமாம்டா அவங்க அண்ணியை தள்ளி விட்டு கொலை பண்ண பார்ப்ப உனக்கு பொண்ணு கொடுப்பாங்களா என்ற விவேக்கிடம் விவேக் ப்ளீஸ் நான் அவளை உண்மையா நேசிக்கிறேன். அவள் இல்லைன்னா நான் செத்துருவேன் என்றவனிடம் செத்து தொலைடா என்றான் கௌதம்.

 

அண்ணா என்ன பேசுறிங்க என்ற அர்ச்சனா இதோ பாருங்க விக்னேஷ் உங்க காதல்னால எங்க வீட்டில் யாருக்குமே நிம்மதி இல்லை. கொஞ்சம் புரிஞ்சுக்கோங்க என்றாள். இதோ பாருங்க நான் ஊர்மிளாவை சந்தோசமா பார்த்துப்பேன் என்றான்.

 

புரியாமல் பேசாதிங்க விக்னேஷ் என்று அர்ச்சனா ஏதோ சொல்ல வர விடு அர்ச்சனா இவன் கிட்ட பேசி எந்த பிரயோஜனமும் இல்லை நான் மாமாகிட்ட பேசிக்கிறேன் என்ற விவேக் மனைவியை அழைத்துக் கொண்டு சென்று விட்டான்.

 

டேய் நீ என்ன தான் நினைச்சுட்டு இருக்க உன் மனசுல நீ தானடா அப்போ கேட்டப்ப அந்த பொண்ணை விரும்பவில்லைனு சொன்ன இப்போ எப்படிடா என்ற கௌதமிடம் அப்போ இருந்த சூழ்நிலை வேற இப்போ இருக்கிற சூழ்நிலை வேற அதனால நீ எதையும் யோசிக்காமல் இரு என்று தன் அண்ணனிடம் கூறி விட்டு சென்று விட்டான் விக்னேஷ்.

 

வா அர்ச்சனா கல்யாணம் முடிஞ்ச இத்தனை நாளில் உனக்கு இப்போ தான் அம்மா வீட்டுக்கு வரணும்னு தோனுச்சா என்ற சுசீலாவிடம் இல்லை சித்தி நேரமே இல்லை என்ற அர்ச்சனா எங்கே வீட்டில் யாரையும் காணோம் என்றாள்.

 

ஏன்டி திங்கள் கிழமை அதுவுமா வீட்டில் யாருடி இருப்பாங்க ரோனி காலேஜ் போயிட்டாள். அப்பா, சித்தப்பா, உதய், பிரகாஷ் ஸ்கூலுக்கு போயிட்டாங்க. தேவ் ஹாஸ்பிடல் போயிட்டான் என்றிட ஊர்மிளா என்றாள் அர்ச்சனா.

 

அதுவும் காலேஜ் போயிருக்கு என்ற சுசீலாவிடம் என்ன சித்தி இத்தனை சலிப்பா சொல்லுறிங்க என்ற அர்ச்சனாவிடம் வேற என்னடி பண்ணட்டும். அவளை பார்த்தாலே பத்திட்டு வருது. எத்தனை சந்தோசமா இருந்த வீடு இப்போ சந்தோசம்னா என்னனு கேட்கிற படி ஆகிருச்சு என்று வருந்தினார் சுசிலா. விடுங்க சித்தி எல்லாம் சரியாகிரும் என்ற அர்ச்சனா விக்னேஷிடம் பேசியது பற்றி கூறினாள்.

 

இப்போ என்ன பண்ணலாம் சித்தி என்றவளிடம் எனக்கு ஒன்றும் புரியலை என்றவர் மௌனமாகிட பேசாமல் நரேனை வரச் சொல்லட்டுமா சுசீ என்றார் வசுந்தரா. நரேனை வரச் சொல்லி என்ன பண்ண அண்ணி என்ற சுசீலாவிடம் ஊர்மிளாவுக்கும், நரேனுக்கும் கல்யாணம் பண்ணி வச்சுரலாம். அப்பறம் விக்னேஷை அவனே சமாளிச்சுப்பான் என்றார் வசுந்தரா.

 

அத்தை நரேன் என்ற அர்ச்சனாவிடம் என் அண்ணன் பொண்ணு தப்பான ஒருத்தன் கிட்ட மாட்டி சீரழியாமல் இருக்கனும்னா நம்ம வீட்டுப் பையனுக்கு தான் அவளை கல்யாணம் பண்ணி வைக்கனும். நான் சொன்னால் நரேன் கேட்பான் என்ற வசுந்தரா தன் மகனுக்கு போன் செய்ய ஆரம்பித்தார்.

 

என்னடி உன் அத்தை இப்படி சொல்றாங்க என்ற சுசீலாவிடம் சித்தி பேசாமல் ஊர்மிளாவை விக்னேஷ்க்கே கல்யாணம் பண்ணி வச்சுட்டா என்ன என்றாள் அர்ச்சனா. என்ன விளையாடுறியா அர்ச்சு அவனால தான் நீயும், மாப்பிள்ளையும் சாக கிடந்திங்க. நம்ம ரோனியை கீழே தள்ளி விட்டு கொலை பண்ண பார்த்த கொலைகாரன் அவன். அவனை போயி நம்ம ஊர்மிளாவுக்கு கல்யாணம் பண்ணி வைக்கிறதா என் உயிரே போனாலும் அது மட்டும் நடக்காது என்றார் சுசீலா.

 

ஸாரி சித்தி நான் கேட்டது தப்பா இருந்தால் மன்னிச்சுக்கோங்க என்றாள் அர்ச்சனா. பரவாயில்லம்மா ஏன்டி தனியா வந்திருக்க மாப்பிள்ளை வரவில்லையா என்றிட சாயங்காலம் வருவாரு சித்தி என்றாள் அர்ச்சனா.

 

வா அர்ரச்சனா என்ற ஸ்ரீஜாவிடம் அண்ணி எப்படி இருக்கிங்க என்றாள். இப்போ பரவாயில்லை அர்ச்சனா என்ற ஸ்ரீஜா அவளிடம் பேசிக் கொண்டு இருந்தாள்.

 

என்ன ரோனி சொல்லுற நீ ஊருக்கு போறியா என்ற ஷாலினியிடம் ஆமாம் ஷாலினி அம்மா , அப்பாவை பார்க்க வேண்டாமா ரொம்ப நாள் ஆச்சு என்றாள் வெரோனிகா.  அப்போ ட்ரிப்க்கு நீ வரமாட்டியா என்றாள் நிகிலா. என்ன ட்ரிப் நிகி என்ற வெரோனிகாவிடம் நம்ம காலேஜ்ல இந்த செமஸ்டர் லீவுக்கு கொடைக்கானல் டூர் போக ஏற்பாடு நடக்குது அதான் நீ வரவில்லையான்னு கேட்டேன். தமிழ் டிபார்ட்மென்ட்டும், மேத்ஸ் டிபார்ட்மென்டும் என்றாள் நிகிலா.

 

சந்துரு மாமா இல்லாமல் கொடைக்கானலா சான்ஸே இல்லை என்ற வெரோனிகாவைப் பார்த்து நிகிலா,  ஷாலினி இருவரும் சிரித்து விட்டு உன்னை டூருக்கு தான் கூப்பிட்டாங்க ஹனிமூன் கொண்டாட இல்லை என்றனர்.

 

     அத்தியாயம் 127

 

என்ன சொல்றிங்க விக்னேஷ் அர்ச்சனா அக்கா ஏன் உங்க கிட்ட வந்து பேசுகிறாள். இவள் மட்டும் லவ் பண்ணி கல்யாணம் பண்ணிக்கலாம் நான் மட்டும் எனக்கு எரிச்சலா இருக்கு என்ற ஊர்மிளா அவன் தோளில் சாய்ந்து அழுதாள். அழாதே ஊர்மி லவ் பண்ணினால் வீட்டில் பிரச்சனை வரத் தான் செய்யும். எல்லாத்தையும் சமாளிச்சு நம்ம காதலையும் ஜெயிக்க வைக்கனும் என்றவனின் தோளில் சாய்ந்தவள் என்னை விட்டுற மாட்டிங்களே விக்னேஷ் என்றாள்.

 

என் உயிரை கூட விடுவேன் உன்னை விட மாட்டேன் ஊர்மிளா என்றவனின் வாயில் விரலை வைத்தவள் அது என்னோட உயிராச்சே விட விடமாட்டேன் என்றாள்.

 

என்னங்க பேசுறிங்க அவன் இதுக்கு சம்மதிக்க மாட்டான் என்ற சகுந்தலாவை முறைத்த சந்திரமோகன் அவனுக்கு இப்படி ஒத்து ஊதிட்டே நீ இருக்கிறதால தான் அவன் உருப்படவே மாட்டேங்கிறான். பொறுக்கி அந்த பொறுக்கியை பிள்ளையா பெத்த பாவத்திற்கு இன்னும் என்னன்ன கொடுமை எல்லாம் நான் அனுபவிக்கனுமோ என்றார் சந்திரமோகன்.

 

என்னங்க பேசுறிங்க அவனுக்கு பிடிச்ச பொண்ணை பேசி முடிங்கனு சொன்னால் வேற ஒரு பொண்ணை பார்க்க போகலாம்னு சொல்லிட்டு இருக்கிங்க. அந்த ஊர்மிளா வீட்டுக்கு நாளைக்கு போகலாம். போயி பேசி பார்ப்போம் நம்ம பையன் தப்பு பண்ணி இருக்கிறான் தான் அதற்காக அவன் மாறவே மாட்டானா. திருந்திட்டான் நம்ம விக்கி இப்போ பழைய மாதிரி இல்லை. ரொம்ப நல்லவனா மாறிட்டான் புரிஞ்சுக்கோங்க என்றார் சகுந்தலா.

 

நீ வேணும்னா அவனை நம்பு நான் நம்பவே மாட்டேன். உன்னோட மகன் என்ன திட்டத்தோட அந்தப் பொண்ணை காதலிக்கிறேன்னு சொல்கிறான்னு தெரிஞ்சுட்டு அப்பறம் பேசு. இல்லை அவனோட நீயும் கூட்டுக் களவாணியா என்ற சந்திரமோகனிடம் என்னங்க சத்தியமா நம்ம விக்கி மாறிட்டான் அவனை நம்புங்க எனக்காக அந்த ஊர்மிளா வீட்டில் பேசலாம் ப்ளீஸ்ங்க என்று கெஞ்சினார் சகுந்தலா. 

 

என்னடி நீ புரியாமல் பேசுற அடுத்த வாரம் நாம அவனுக்கு பொண்ணு பார்க்க போகவில்லை. அந்த பொண்ணு தான் இவனுக்குனு பேசி முடிக்க போகிறோம். நான் முடிவு பண்ணின பொண்ணோட தான் உன் மகனுக்கு கல்யாணம் அதை நீ இல்லை, உன் மகன் இல்லை அந்த கடவுளே நினைச்சாலும் மாத்த முடியாது என்ற சந்திரமோகன் கோபமாக சென்று விட்டார்.

 

என்னம்மா சொல்லுறிங்க என்ற விக்னேஷிடம் உன் அப்பா ஏன் தான் இந்த விசயத்தில் இவ்வளவு பிடிவாதம் பிடிக்கிறாரோ தெரியலை விக்கி என்று வருந்தினார் சகுந்தலா.

 

அம்மா எனக்காக ஊர்மிளா வீட்டில் நீங்க போயி பேசி பார்க்கிறிங்களா என்ற விக்னேஷிடம் அப்பா என்ன சொல்லுவாரோன்னு பயமா இருக்கு விக்கி. அம்மா அப்பா தயங்க காரணம் என்ன ஊர்மிளா வீட்டில் எதுவும் பிரச்சனை பண்ணுவாங்கனு தானே நாம போயி பேசி சம்மதம் வாங்கிட்டோம்னா அப்பறம் அப்பாவை சமாளிச்சுறலாமேமா ப்ளீஸ் மா என்று விக்னேஷ் கெஞ்சிட சரி விக்கி நாளைக்கே போகலாம் என்றார் சகுந்தலா.

 

என்னம்மா சொல்லுறிங்க நரேனை வரச் சொல்ல போறிங்களா ஏன் உங்களுக்கு இந்த வேண்டாத வேலை என்ற ஸ்ரீஜாவிடம் வாயை மூடு ஊர்மிளா என் அண்ணன் பொண்ணு அவளை அந்த பொறுக்கி விக்னேஷ்க்கு தாரை வார்த்து கொடுக்க சொல்லுறியா அவன் நல்லவனா இருந்தால் பரவாயில்லை நம்ம அர்ச்சனா வாழ்க்கையை கெடுக்க எத்தனை கேவலமான ஒரு வேலையை பார்த்து வச்சுருந்தான். நம்ம ஊர்மிளா சின்னப் பொண்ணு இந்த வயசுல கண்ணுல கண்டதை எல்லாம் மனசு ஆசைப்படும் அதனால தடுமாறிட்டா அவளை நாம தான் சரி பண்ணனும். நரேன் தான் நம்ம ஊர்மிக்கும் பொருத்தமான மாப்பிள்ளையும் கூட என்றார் வசுந்தரா.

 

அம்மா நீங்க சொல்லுறதெல்லாம் சரி தான் நரேன் எப்படி சம்மதிப்பான். அவன் என் கல்யாணத்தில் நடந்த பிரச்சனையால தானே இந்த ஊருக்கே வர மாட்டேன்னு கனடாவிலே இருக்கிறான். இந்துவோட கல்யாணத்திற்கு கூட அண்ணனா சபையில் நிற்க அவன் வரவில்லை. அப்படி இருக்கும் பொழுது என்று இழுத்த ஸ்ரீஜாவிடம் அவன் என் புள்ளைடி அவனை எப்படி வர வைக்கனும்னு எனக்கு நல்லாவே தெரியும். நீ உன் வேலையை மட்டும் பாரு என்ற வசுந்தரா சென்று விட இந்த அம்மாவோட போக்கு எதுவும் சரிப்பட்டு வரவில்லை என்றாள் ஸ்ரீஜா.

 

என்னக்கா புலம்பிட்டு இருக்கிங்க என்று வந்த வெரோனிகாவிடம் எக்ஸாம் எல்லாம் ஓவரா என்றாள் ஸ்ரீஜா. முடிஞ்சுருச்சு நாம எப்போ ஊருக்கு போகலாம் என்ற வெரோனிகாவிடம் நாளைக்கே நான் ரெடிமா. உன் மாமா இரண்டு பேரும் சொல்லுற முடிவு தான் என்ற ஸ்ரீஜா நெஞ்சைப் பிடித்திட அக்கா என்னாச்சு என்று பதறினாள் வெரோனிகா.

 

செஸ்ட் பெயினா தானே இருக்கும் வெரோனிகா என்றவள் புன்னகைத்திட சீக்கிரமே சரியாகிரும் அக்கா என்றவளது கன்னத்தில் கை வைத்தாள் ஸ்ரீஜா.

 

உனக்கு என் மேல கோபமே இல்லையா என்ற ஸ்ரீஜாவிடம் என்னைப் பொறுத்தவரை எல்லாமே மறப்போம் , மன்னிப்போம் அவ்வளவு தான். ஒருத்தவங்க நம்மளை காயப்படுத்துறாங்கனா நம்ம காயப்பட்டதை மட்டும் தான் நாம யோசிக்கிறோம். காயப் படுத்துனவங்களுக்கும் ஒரு சூழ்நிலை இருக்குமே அதை நாம யோசிக்கிறதே இல்லை. என்னை நீங்க காயப் படுத்துனதுக்கு பின்னால நீங்க அனுபவிச்ச ஏமாற்றம், வலி இரண்டும் இருந்திருக்கு. 

 

உங்களோட வலியை நான் புரிஞ்சுகிட்டதால எனக்கு உங்க மேல கோபமே வரவில்லை என்று சிரித்தாள் வெரோனிகா. நீ எல்லாம் நிஜமாவே மியூசியத்தில் வைக்க வேண்டிய பீஸ் தான் என்று சிரித்தாள் ஸ்ரீஜா.

 

ஊர்மிளா மேல கோபமா இருக்கியா என்றவளிடம் நிச்சயமா இல்லை அவளோட விசயத்தில் தலையிட மாட்டேன்னு சந்துரு மாமாகிட்ட சத்தியம் பண்ணி கொடுத்திருக்கேன் அதனால தான் அவளை விட்டு ஒதுங்கி இருக்கேன்.  மத்தபடி அவள் மேல எந்த கோபமும் எனக்கு இல்லை .

 

அது மட்டும் இல்லைக்கா நாம ஒரே குடும்பம். ஒரு நேரம் இல்லைனாலும் ஒரு நேரம் ஒருத்தருக்கு ஒருத்தர் பக்க பலமா இருக்கனும். அதனால நான் யார் மேலையும் கோபம் பட மாட்டேன். கோபம் வரும் அதை மொத்தமா சந்துரு மாமாகிட்ட காட்டிருவேன் என்று சிரித்தாள் வெரோனிகா.

 

ஆக மொத்தம் என் அண்ணன் தான் உனக்கு பலிகிடா அப்படித் தானே என்ற அர்ச்சனாவைக் கண்டவள் அண்ணி எப்போ வந்திங்க என்று அவளை அணைத்துக் கொண்டாள். நான் வந்தது இருக்கட்டும் என் அண்ணனை ரொம்ப கொடுமை படுத்துற நீ என்றாள் அர்ச்சனா.

 

நான் கொடுமை படுத்திட்டு தானே மிச்சம் என்று சிரித்தவளின் காதை திருகிய அர்ச்சனா ஏன்டி அண்ணினு மரியாதை கொடுக்கலாம்னு பார்த்தால் என் அண்ணனையே கொடுமை படுத்துற நீ என்று அர்ச்சனா சிரித்து விட ஸ்ரீஜாவும் சிரித்தாள்.

 

அண்ணா எப்போ வருவாரு ரோனி என்ற அர்ச்சனாவிடம் எனக்கு என்ன தெரியும் நான் என்ன ஸ்கூலோட பிரின்சிபலா என்று சிரித்தவளிடம் வாயாடி வாயடி என்று அவளது மூக்கைப் பிடித்து ஆட்டினாள்.

 

ஏன்டி ஏன் இப்படி என் மருமகள் மூக்கை பிடிச்சு ஆட்டுற அவள் சளியை சிந்திர போகிறாள் என்று மலர்கொடி கூறிட ஐயே ச்சீ என்று அர்ச்சனா கையை எடுத்து விட்டாள். அவளைப் பார்த்து சிரித்தனர் மலர்கொடி, வெரோனிகா, ஸ்ரீஜா மூவரும்.

 

என்னம்மா உங்க மருமகள்களோட சேர்ந்துகிட்டு என்னை கலாய்க்கிறிங்க என்று சிணுங்கிட சரி வா நாம இரண்டு பேரும் சேர்ந்து இவளுகளை கலாய்ப்போம் என்றார் மலர்கொடி.

 

வர வர எல்லோரும் இந்த ரோனி கூட சேர்ந்து ரொம்ப கெட்டுப் போயிட்டிங்க. அவளை போலவே எல்லோரும் வாலாகிட்டிங்க என்றிட வாலா நானா நான் உங்க அண்ணி நாத்தனாரே என்றாள் வெரோனிகா. நீ வாலு தான்டி என்று சிரித்த அர்ச்சனா ஊர்மிளாவை கண்டதும் ஏய் ஊர்மி இங்கே வாடி என்றிட ஊர்மிளாவும் வந்தாள்.

 

ரோனி நீ வா நாம வடகம் காயப் போட்டோமே அதை எடுத்துட்டு வரலாம் என்று மலர்கொடி அழைத்திட சரிங்க அத்தை என்ற வெரோனிகா கிளம்பிட ஸ்ரீஜா உனக்கு ஜூஸ் எடுத்து வச்சுருக்கேன் போ போயி குடிச்சுட்டு ரெஸ்ட் எடு என்று இளைய மருமகளையும் அனுப்பி வைத்தார் மலர்கொடி.

 

என்னடி இது நீ வந்ததும் அம்மா ஏன் அண்ணிகளை அனுப்பிட்டாங்க என்ற அர்ச்சனாவிடம் அவங்க மூன்று பேரும் என்கிட்ட பேச மாட்டாங்க அக்கா என்றாள் ஊர்மிளா சோகமாக.

 

       அத்தியாயம் 128

 

பேச மாட்டாங்கனா அவங்க பேசுறது மாதிரியா நீ நடந்துகிட்ட ரோனி உன்னோட ப்ரண்ட் தான். அவளுக்கும், உனக்கும் கிட்டத்தட்ட ஒரே வயசு தான் இருந்தாலும் அவள் நம்மளோட அண்ணன் மனைவி அந்த மரியாதையை கொடுக்க வேண்டாமா.

 

இதோ பாரு ஊர்மி விக்கியை நீ லவ் பண்ணுறதைப் பற்றி நான் எதுவும் பேசப் போறது இல்லை. அதைப் பற்றி பேசினதால தான் வீட்டில் எல்லோரும் அசிங்கப் பட்டு இருக்காங்க.

 

உன் மனசுல உதய் அண்ணா, தேவ் அண்ணா, பிரகாஷ் அண்ணா மூன்று பேருக்கும் வித்தியாசம் இருக்கலாம். ஆனால் நான் கூடப் பிறந்த அண்ணன், சித்தப்பா மகன் அப்படி எந்த பிரிவினையும் என் மூன்று அண்ணன்கள் கிட்டையும் பார்த்தது கிடையாது. 

 

உனக்கு எப்படிடி இந்த மாதிரி ஒரு புத்தி வந்துச்சு. உனக்கு ஒரு பிரச்சனைனு வந்தப்போ ரோனி தானே உன்னை கண்ணுக்குள்ள வச்சு பார்த்துக்கிட்டா நீயும் ரோனி, ரோனின்னு அவள் கிட்ட தானே ஒட்டிட்டு இருந்த.

 

நம்ம குடும்பத்தை விட உனக்கு விக்னேஷ் அவ்வளவு முக்கியமா ஊர்மிளா என்ற அர்ச்சனாவைப் பார்த்து சிரித்தவள் நீ ஏன் அக்கா விவேக் மாமா கூட உன்னோட கல்யாணம் நின்று போனப்ப சூசைட் அட்டம்ட் பண்ணின நம்ம குடும்பத்தை விடவா உனக்கு அவரு பெரிசு என்றாள் ஊர்மிளா.

 

ஊர்மிளா நீ பேசுறது ரொம்ப சில்லியா இருக்கு என்னோட சூழ்நிலை வேற. விவேக்கை அப்பா, அம்மா, சித்தி, சித்தப்பானு எல்லோருக்குமே ரொம்ப பிடிச்சுருந்தது. அந்த விக்னேஷ் பண்ணின கேவலமான ஒரு காரியத்தால தான் எங்க கல்யாணம் நின்று போனது. 

 

உன்னோட விசயத்தில் விக்னேஷை யாருக்குமே பிடிக்கவில்லை அதனால என்னோட காதல் விவகாரத்தையும், உன்னோட காதல் விவகாரத்தையும் கம்பேர் பண்ணாதே. விக்னேஷ் முன்னே மாதிரி இல்லைக்கா என்ற ஊர்மிளாவிடம் அது எனக்கும் புரியுது நான் மறுக்கவில்லை ஊர்மிளா ஆனால் உன்னோட நடவடிக்கை தான் வீட்டில் பிரச்சனையை கொண்டு வருது.

 

முதலில் ஒரு விசயம் சொல்லு வெரோனிகாவை கை நீட்டி எதற்கு அடிச்ச என்ற அர்ச்சனாவிடம் விக்கியை பொறுக்கினு சொன்னாள் என்றாள் ஊர்மிளா. விக்கி யாரு உனக்கு என்ற அர்ச்சனாவிடம் என்னோட லவ்வர் என்றாள். அப்போ வெரோனிகா என்றிட என் அண்ணி என்றாள்.

 

ரோனியை உனக்கு எத்தனை நாளா தெரியும் என்ற அர்ச்சனாவிடம் ஒன்றரை வருசமா என்றாள். அப்போ விக்கியை என்ற அர்ச்சனாவிடம்  நான்கரை  மாதமா தெரியும் என்றாள் ஊர்மிளா.

 

நான்கரை மாதமா பழகின விக்னேஷ்க்காக ஒன்றரை வருசமா நம்ம கூடவே வாழ்ந்துட்டு வர நம்மளோட நல்லது, கெட்டது அத்தனைக்கு அம்மாவுக்கு அடுத்தபடியா துணையா இருக்கிற அண்ணியை கை நீட்டி அடிச்சுருக்க அது தப்பில்லையா. அது கூட மன்னிச்சுரலாம் ஆனால் அதற்கு பிறகு நீ சொன்ன பாரு ஒரு வார்த்தை.

 

ஒரு குழந்தையை சுமந்துட்டு அது இல்லாமல் போற வலி என்னனு உனக்கு தெரியுமா ஊர்மி. அவளைப் போயி கடவுள் உனக்கு சரியான தண்டனை கொடுத்திருக்காருன்னு சொல்லிருக்க. நீ சொன்ன வார்த்தை அவளை எந்த அளவுக்கு காயப் படுத்தி இருக்கும்னு கொஞ்சமாவது யோசிச்சியா என்ற அர்ச்சனாவிடம் அக்கா அது கோவத்தில் என்று தயங்கினாள் ஊர்மிளா.

 

கோபம் இதே போல தான் அம்மாவும் கோபத்தில் என் பொண்ணு விசயத்தில் தலையிடாதேன்னு அன்னைக்கு அவளை காயப் படுத்தினாங்க அது கூட அவளை காயப் படுத்தனும்னு இல்லை எங்கே அவளோட பேச்சில் அவங்க மனசு மாறிடுமோங்கிற பயம் தான். அதற்காக அம்மா அவள் கிட்ட எத்தனை முறை மன்னிப்பு கேட்டாங்கனு உனக்கு தெரியுமா என்ற அர்ச்சனா சரி விடு உனக்கு ஒரே ஒரு அட்வைஸ் மட்டும் சொல்லிக்கிறேன் நீ விக்னேஷை லவ் பண்ணுற சரி ஆனால் விக்னேஷ் வீட்டிலும் சரி, நம்ம வீட்டிலும் சரி உங்க காதலை அக்சப்ட் பண்ணிக்க மாட்டாங்க. அவங்க அக்சப்ட் பண்ணனும்னா முதலில் நீ ஒழுங்கா படி படிப்பு முடியும் வரை உனக்காக அவர் காத்துட்டு இருக்க மாட்டாரா.

 

அவருக்காக நீ வீட்டில் உள்ளவங்களை காயப் படுத்திட்டே இருந்த அப்படினா விக்னேஷ் மேல நம்ம வீட்டில் நல்ல எண்ணம் உருவாகவே செய்யாது. புரிஞ்சு நடந்துக்கோ என்ற அர்ச்சனா சென்று விட ஊர்மிளா தன்னறைக்கு சென்றாள்.

 

என்ன நாத்தனாரே உங்க தொங்கச்சிக்கு அட்வைஸ் எல்லாம் பலமா இருந்துச்சு என்ற வெரோனிகாவிடம் அதுவா அண்ணியாரே நீங்கள் தான் இந்ந வீட்டோட மூத்த மருமகள். நீங்கள் மனசு வச்சா தான் நாளைக்கு எங்க அண்ணன் எங்களுக்கு சொந்தம்னு அவளுக்கு புரிய வச்சேன் என்றாள் அர்ச்சனா.

 

உன் தொங்கச்சிக்கு புரிஞ்சுட்டாலும் என்ற இந்திரஜாவிடம் ஏன் இந்து அப்படி சொல்லுற என்றாள் அர்ச்சனா. அவளுக்கு புரியவே புரியாது அர்ச்சு விடு என்றவள் அப்பறம்  உன் வாழ்க்கை எப்படி போகுது. வாழ்க்கையில் ரொமான்ஸ் கொஞ்சம் தூக்கல் போல கன்னம் எல்லாம் மினுமினுக்குது என்றாள் இந்திரஜா.

 

அடியே மக்கு அண்ணி கன்னம் மினுமினுக்க ஏன்டி ரொமான்ஸ் பண்ணனும் ஒயின் குடிச்சால் போதாதா. அதுவும் இல்லாமல் இப்போ தான் புதுசு, புதுசா மேக்கப் கிட் எல்லாம் விற்கிறாங்களே என்றாள் அர்ச்சனா.

 

அடப் பாவத்த அப்போ உன் வாழ்க்கையில் ரொமான்ஸ் சிறிதும் இல்லையோ ஐயகோ என்ன கொடுமை என்று நடித்து கொட்டிய இந்திரஜாவின் தலையில் கொட்டு வைத்தவள் அவளுடன் சந்தோசமாக வேறு விசயங்களை பேச ஆரம்பித்தாள் அர்ச்சனா.

 

என்ன பண்ணிட்டு இருக்க ரோனி என்ற சுசீலாவிடம் பசிக்குது அத்தை அதான் பஜ்ஜி சுட்டுட்டு இருக்கேன் என்ற வெரோனிகா தன் மாமியாரிடம் ஒரு தட்டை நீட்டினாள்.

 

என்னடி நமக்கு மட்டும் தானா என்ற சுசீலாவிடம் எல்லோருக்குமே தான் இதோ இந்த பாத்திரத்தில் இருக்கு பாருங்க என்றவள் அவருடன் பேசிக் கொண்டிருக்க அங்கு ஊர்மிளா வந்தாள்.

 

அத்தை நீங்க சாப்பிடுங்க தூணி காயப் போட்டேன் போயி எடுத்துட்டு வரேன்என்று கிளம்பி விட்டாள் வெரோனிகா. என்னம்மா இவள் ஏன் இப்படி பண்ணுகிறாள் என்ற ஊர்மிளாவை முறைத்து விட்டு சுசீலாவும் சென்று விட்டார்.

 

என்னம்மா சரியா பேசிருவிங்க தானே என்ற விக்கியிடம் அதெல்லாம் பேசிருவேன் விக்கி நீ கவலையே படாதே இன்னைக்கு எப்படியும் அந்த ஊர்மிளாவோட அப்பா , அம்மாகிட்ட பேசி சம்மதம் வாங்கிடுறேன் என்றார் சகுந்தலா.

 

வீட்டின் அழைப்பு மணி ஒலித்திட கதவைத் திறந்த சுசீலா எதிரில் நின்றிருந்த விக்கி, சகுந்தலா இருவரையும் பார்த்தவர் முதலில் அதிர்ந்தாலும் வாங்க என்று வீட்டிற்குள் அழைத்தார்.

 

வணக்கம்ங்க உங்க கிட்டையும், உங்க கணவர்கிட்டையும் பேசணும் என்று சகுந்தலா கூறிட என்ன பேசணும் என்றார் சுசீலா.

 

உங்க வீட்டில் எல்லோரையும் கூப்பிடுங்களேன் என்றிட சுசீலாவும் அனைவரையும் அழைத்தார். சொல்லுங்க என்ன விசயம் என்ற இளமாறனிடம் நான் சுத்தி வளைச்சு பேச விரும்பவில்லை. நான் வந்த விசயம் நம்ம பசங்க விக்னேஷ், ஊர்மிளா இரண்டு பேரும் ஒருத்தரை ஒருத்தர் விரும்புறாங்க அவங்களுக்கு கல்யாணம் பண்ணி வைக்கனும்னு ஆசைப் படுகிறேன் உங்க விருப்பம் என்று மௌனமாகினார் சகுந்தலா.

 

வீடு தேடி வந்த உங்களை காயப் படுத்துறது எங்களுடைய நோக்கம் இல்லை. நீங்களும் ஒரு பொண்ணை பெத்தவங்க. உங்க ஒரு பொண்ணு வாழ்க்கையை அழிக்க கேவலமான ஒரு வேலையை பார்த்ததோட மட்டும் இல்லாமல் மருமகளை கீழே தள்ளி விட்டு கொலை பண்ண பார்த்த ஒருத்தனுக்கு உங்க மகளை கட்டி வைப்பிங்களா சொல்லுங்க என்றார் இளமாறன்.

 

இல்லைங்க என் மகன் பண்ணின தப்புக்கு அவன் மனம் வருந்தி திருந்திட்டான் என்ற சகுந்தலாவிடம் அம்மா அவரு உங்க மகன். அவரு தப்பானவனா இருந்தாலும் நீங்க பெத்தவங்க உங்களுக்கு உங்க பிள்ளை சக்கரக்கட்டி தான். அதற்காக உங்க மகனைப் போல ஒருத்தருக்கு என் மகளை தெரிஞ்சே நான் கல்யாணம் பண்ணி கொடுக்க முடியாது.

 

நீங்கள் என் சம்மந்தியோட தங்கச்சி அந்த மரியாதைக்காக தான் உங்க பையனை நேரில் பார்த்த பிறகும் கூட நான் பொறுமையா பேசிட்டு இருக்கிறேன். ஒத்தைப் பொண்ணு அவளோட மனசுல நஞ்சை விதைச்சு அது வார்த்தையால இந்த குடும்பத்தையே நோகடிக்குது .

 

உங்களை கையெடுத்து கும்பிடுறேன் என் மகளை விட்டுருங்க எங்க குடும்பத்திற்கும், உங்க குடும்பத்திற்கும் ஒத்து வராது. இந்த சம்பந்தம் சரிப்பட்டு வராது என்று இளமாறன் தெளிவாக பேசி விட்டார்.

 

இலலைங்க என்று சகுந்தலா ஏதோ சொல்ல வர இளமாறன் முகத்தில் அடித்தாற் போல எழுந்து அறைக்குள் சென்று விட்டார். சகுந்தலாவிற்கு அது பயங்கர அவமானமாக போய்விட்டது.

 

விக்கி வா போகலாம் என்ற சகுந்தலாவிடம் அம்மா என்று அவன் ஏதோ சொல்ல வர சகுந்தலா பார்த்த பார்வையில் மௌனமானவன் அவருடன் சென்று விட்டார்.

 

என்னப்பா பண்ணுறிங்க நீங்க என்ன பிரச்சனை உங்களுக்கு எனக்கு விக்கியை பிடிச்சுருக்கு என்ற ஊர்மிளாவை முறைத்த இளமாறன் நான் உன்னோட அப்பா என்கிட்ட குரலை உசத்தி பேசுற வேலை வச்சுக்காதே. உன் அண்ணன்கள் உதய், தேவ், பிரகாஷ் கூட என் முன்னாலையும், அண்ணன் முன்னாலையும் குரலை உசத்தி பேசினதில்லை பொம்பளைப் பிள்ளைன்னு செல்லம் கொடுத்து வளர்த்ததுக்கு நல்லா பாடம் புகட்டுற நீ என்றார் கோபமாக.

 

அப்பா என்று ஏதோ சொல்ல வந்தவளது கன்னத்தில் பளாரென அறைந்த இளமாறன் உனக்கு எப்போ யார்கூட கல்யாணம் பண்ணி வைக்கனும்னு எனக்கு தெரியும் கிளம்பு என்றவர் சுசீலா என்று கத்திட என்னங்க என்று பயந்தபடி வந்தார் சுசீலா.

 

மனைவியின் கன்னத்தில் ஓங்கி அறைந்தவர் என்னைக்கு அவன் கூட பழகுறாள்னு தெரிஞ்சதோ அன்னைக்கே இவள் கையில் உள்ள போனை பறிச்சு , காலை உடைச்சு வீட்டில் போடாமல் விட்ட பார்த்தியா அதுக்கு தான் இந்த அறை. இனி இவள் வீட்டை விட்டு வெளியே எங்கேயும் போக கூடாது . பிரகாஷ் என்றிட அப்பா என்று வந்தவனிடம் இனிமேல் இவளை காலேஜ்க்கு அழைச்சுட்டு போயி , திரும்ப வீட்டிற்கு அழைச்சுட்டு வர வேண்டியது உன்னோட பொறுப்பு என்றார். சரிங்கப்பா என்றவன் அமைதியாக சென்று விட இந்த வீட்டில் அர்ச்சனா அக்காவுக்கு ஒரு நியாயம் எனக்கு ஒரு நியாயம் அப்படித் தானே என்றாள் ஊர்மிளா.

 

ஆமாம் அப்படித்தான் இப்போ என்ன உனக்கு என்ற இளமாறன் பார்த்த பார்வையில் ஒடுங்கிப் போனாள் ஊர்மிளா. அவளது மொபைல் போன் பறிக்கப்பட்டு சுக்குச்சுக்காக நொறுக்கப் பட்டது.

 

       அத்தியாயம் 129

 

அம்மா என்ற விக்னேஷிடம் உனக்கு அந்த ஊர்மிளா வேண்டாம் விக்கி என்றார் சகுந்தலா. அம்மா அவள் இல்லைன்னா நான் செத்துருவேன் என்றான் விக்னேஷ். விக்கி பைத்தியம் மாதிரி பேசாதே அவள் இல்லைன்னா செத்துருவியாடா அப்போ அம்மா மேல கொஞ்சமும் உனக்கு மரியாதை இல்லை.

 

அந்த ஆளுக்கு எவ்வளவு திமிர் இருந்தால் நான் பேசிட்டு இருக்கும் பொழுது எந்திரிச்சு போயிருப்பான். பொண்ணை பெத்த அவனுக்கே அத்தனை திமிர் இருந்தால் நான் பையனை பெத்தவள்டா என் மகனுக்கு என்ன கை நொடமா, கால் நொடமா நீ ஆம்பளை சிங்கம். அந்த ஊர்மிளா என்ன பெரிய ரதியா அவளை விட அழகு, குணம்னு எல்லாம் நிறைஞ்ச ஒரு பொண்ணை உனக்கு கல்யாணம் பண்ணி வைக்க வேண்டியது என்னோட பொறுப்பு என்றார் சகுந்தலா.

 

அம்மா அது என்ற விக்கியிடம் நான் சொன்னது தான் இதுக்கு மேல ஆர்கியூ பண்ணாதே என்று விட்டு வீட்டிற்குள் செல்ல நடு ஹாலில் கோபமாக சந்திரமோகன் அமர்ந்திருந்தார்.

 

சகுந்தலாவின் அண்ணன் தனசேகரனும் அங்கு இருக்க சகுந்தலா தன் அண்ணனிடம் தனக்கு நேர்ந்த அவமானத்தை சொல்லி முறையிட நினைத்து அண்ணா என்று அருகில் வந்தார்.

 

என்ன பண்ணிட்டு இருக்க சகுந்தலா என்று தனசேகரன் கத்த ஆரம்பித்தார். அண்ணா என்றவரிடம் வாயை மூடு உன்னை யாரு சம்பந்தி வீட்டிற்கு போயி பொண்ணு கேட்க சொன்னது. நீயும், உன் மகனும் யாரோட பேச்சையும் கேட்கவே மாட்டிங்களா மாப்பிள்ளை தான் தெளிவா சொன்னாரு தானே அடுத்த வாரம் விக்கிக்கு பொண்ணு பார்த்து நிச்சயம் பண்ணப் போறோம்னு அப்பறம் எதற்கு இப்படி போயி பொண்ணு கேட்டு நீங்க அசிங்கப் பட்டது மட்டும் இல்லாமல் எங்களையும் அசிங்கப் படுத்துறிங்க என்று கோபமாக திட்டிய தனசேகரனிடம் அண்ணா நம்ம விக்கி ஆசைப் பட்டுட்டான் என்று இழுத்தார் சகுந்தலா.

 

விக்கி ஆசைப்பட்டால் போதுமா என்ன பேசுற சகுந்தலா நம்ம பையன் மேல ஒரு பெரிய கரும்புள்ளி விழுந்திருக்கு. அவங்க கண்ணுக்கு அது மட்டும் தான் பெரிதாக தெரியும். உனக்கு ஏன் புரிய மாட்டேங்குது என்றவர் இதுக்கு மேல அந்த ஊர்மிளா பொண்ணு கூட உன் மகனும் சுத்தக் கூடாது. அவனுக்கு ஏந்துக்கிட்டு நீயும் பேசக் கூடாது அவ்வளவு தான் என்னால சொல்ல முடியும் என்ற தனசேகரன் தன் தங்கையின் கணவரைப் பார்த்து என்னை மன்னிச்சுருங்க மாப்பிள்ளை இவங்க பண்ணின காரியத்தால உங்களுக்கு தான் தலைகுனிவு என்று வருந்தினார்.

 

இப்படி ஒரு மகனை பெத்ததுக்கு இன்னும் என்னவெல்லாம் அனுபவிக்கனுமோ தெரியலை மச்சான் என்ற சந்திரமோகன் இவங்க இரண்டு பேர்கிட்டையும் தெளிவா சொல்லிடுங்க மச்சான் நான் உயிரோட இருக்கனும்னா ஒழுங்கா நான் பார்த்து வச்சுருக்கிற பொண்ணை பார்க்க வரச் சொல்லுங்க. இல்லையா எனக்கு கொள்ளி போட்டுட்டு எப்படி வேணும்னாலும் திரிய சொல்லுங்க என்று விட்டு வீட்டிற்குள் சென்று விட்டார்.

 

என்ன ரோனி யோசனை என்ற உதய்யிடம் மாமா ஒரு விசயம் கேட்கட்டுமா என்றாள் வெரோனிகா. என்னடி இது பர்மிசன் எல்லாம் கேட்கிற என்ன கேட்கனுமோ கேளு என்றான் உதய். மாமா ஊர்மிளா விசயமா பேசணும் அதனால தான் பர்மிசன் கேட்கிறேன் என்றவளது கன்னத்தில் கை வைத்தவன் அவள் விசயத்தில் உன்னை தலையிட வேண்டாம்னு சொன்னது அவள் உன்னை காயப் படுத்துறதை பார்க்க முடியாமல் தான் . அதற்காக நமக்குள்ள கூட அவளைப் பற்றி பேசக் கூடாதுன்னு ஒன்றும் இல்லையே என்ற உதய்யின் மார்பில் சாய்ந்து கொண்டவள் அவனிடம் கேட்க ஆரம்பித்தாள்.

 

அந்த விக்னேஷ் இப்போ முன்னே மாதிரி இல்லை ரொம்பவே மாறிட்டான். அவனை நம்ம ஊர்மிளாவும் மறக்க மாட்டாள்னு தோனுது ஏன் மாமா பேசமால் அவங்களுக்கு கல்யாணம் பண்ணி வைக்கிறேன்னு சொல்லிட்டால் என்ன என்றவளை தன்னிடம் இருந்து பிரித்தவன் விக்னேஷ் நல்லவனாவே இருந்தாலும் ஊர்மிளா வீட்டில் நடந்துகிட்ட விதம் தான் அவன் மேல எல்லோருக்கும் வெறுப்பு அதிகமாக காரணம் ரோனி.

 

அர்ச்சனாவும் தான் லவ் பண்ணினாள். அதை அவள் வீட்டில் சொன்னப்ப யாரும் பிரச்சனை பண்ணினாங்களா என்ன சொல்லுற விதம்னு ஒன்று இருக்கு. ஊர்மிளா விக்னேஷ் மேல உள்ள கண்மூடித்தனமான காதலால தன் கூட இருக்கிற எல்லோரையும் பகைச்சுக்கிட்டு முட்டாள்தனமா நடந்துக்கிறாள்.

 

அப்பா, அம்மா என்னதான் பிள்ளைகள் மேல உயிரா இருந்தாலும் அவங்களுக்குள்ளேயும் ஒரு ஈகோ இருக்கும். அதை பிள்ளைங்க டச் பண்ணாமல் இருக்கனும். ஊர்மிளாவோட அதிகப் படியான பேச்சு சித்தப்பா, சித்தியை ரொம்பவே காயப் படுத்திருச்சு அதனால தான் அவங்களுக்கு விக்கி மேல வெறுப்பு அதிகமாகிருச்சு. ஊர்மிளா கொஞ்ச நாளைக்கு எந்த பிரச்சனையும் பண்ணாமல் இருந்தாளே போதும் எல்லாம் சரியாகிரும் என்றவன் சரி நேரம் ஆச்சு தூங்கலாமா என்றான்.

 

தூங்குங்க மாமா என்றவளை தன்னருகில் இழுத்தவன் என்னடி தூங்குங்கனு சொல்லிட்டு நீ எங்கே போற நீ இல்லாமல் எப்படி தூங்குவேன் என்று அப்பாவியாக முகத்தை வைத்துக் கொண்டிருந்தவனின் மூக்கைப் பிடித்து ஆட்டியவள் நீங்க இருக்கிங்களே என்று அவனது தோளில் சாய்ந்து கொள்ள அவளது நெற்றியில் முத்தமிட்டான்.

 

அதை கண் மூடி ரசித்தவளிடம் ரோனி நாளைக்கு ஊருக்கு போற நானும் வரணுமா என்றிட நீங்கள் வந்தால் ரொம்ப சந்தோசம் படுவேன் மாமா. ஆனாலும் உங்களுக்கு வேலை இருக்கு தானே அதனால பரவாயில்லை என்றவளின் முகத்தை நிமிர்த்தியவன் என்ன மேடம் சோகம் வேறையா என் ரோனியை மட்டும் தனியா அனுப்புவேனா என்ன. நானும் உன் கூட தான் வருவேன் என்றவன் அவளது கண்களில் முத்தமிட  ஐ லவ் யூ மாமா என்றவள் அவனை தன்னோடு அணைத்துக் கொண்டாள்.

 

மனைவி அவளின் நெற்றி தொடங்கி பாதம் வரை முத்தமிட்டவன் அவளை வெட்கத்தில் சிவக்க வைத்தான். அவளது கை விரலைப் பிடித்தவன்  ஐ லவ் யூ டூ ரோனி என்று அவளை அணைத்துக் கொண்டு மெத்தையில் விழுந்தான். கணவனின் மனம் உணர்ந்தவள் அவனோடு ஒன்றினாள்.

 

தன்னறையில் அழுது அழுது தவித்தாள் ஊர்மிளா. இங்கு உள்ளவர்களுக்கு தன் மனதை எப்படி புரிய வைப்பாள் அவனிடம் பேச முடியாமல் செய்ய செல்போன் பறிக்கப்பட்டதும் அறைக்குள்ளே முடங்கிப் போனாள்.

 

என்னங்க என்ற சுசீலாவிடம் மன்னிச்சுரு சுசீ என்றார் இளமாறன். ஏன் என்றவரின் கன்னத்தில் கை வைத்தவர் அப்போ இருந்த கோபத்தில் என்ன பண்ணுறேன்னு தெரியாமல் அடிச்சுட்டேன் என்றிட எனக்கு உங்களை தெரியாதா விடுங்க  சரி சாப்பிட வாங்க என்றார். பசிக்கலை சுசி என்றவரை வற்புறுத்தி சாப்பிட வைத்தார் சுசீலா.

 

என்ன மாமா இன்னும் ரெடியாகாமல் இருக்கிங்க என்ற வெரோனிகாவிடம் எங்கே ரோனி என்றதும் என்னது எங்கேயா இன்னைக்கு எங்க வீட்டிற்கு போகனும்னு சொன்னேன்ல என்றதும் அட ஆமாம் ரோனி மறந்தே போயிட்டேன் என்றவனை அவள் முறைத்திட ஒரு பத்து நிமிசம் செல்லம் என்றவன் அவளது கன்னத்தில் முத்தமிட்டு ஓடி விட்டான்.

 

இவருக்கு இதே வேலை தான் என்றவள் வாசலில் நின்ற உதயநிலாவைத் தூக்கிக் கொண்டு ஸ்ரீஜாவின் அறைக்கு வந்தாள்.

 

என்னக்கா நீங்களும் ரெடியாகாமல் இருக்கிங்க என்ற வெரோனிகாவிடம் அண்ணி அவளுக்கு உடம்பு சரியில்லை நீங்களும், அண்ணாவும் முன்னே போங்க நாங்க பின்னாடி வருகிறோம் என்றான் தேவ். என்னாச்சு மாமா அக்காவுக்கு க்யூர் பண்ணிரலாம்னு தானே சொன்னிங்க என்று பதறியவளிடம் ரோனி எனக்கு ஒன்றும் இல்லை. நீ பதறாதே கொஞ்சம் வீக்கா இருக்கேன் அவ்வளவு தான் என்றவள் நீயும்,  உதய் மாமாவும் முன்னே போங்க என்றாள் ஸ்ரீஜா. இல்லைக்கா உங்களுக்கு உடம்பு சரியாகட்டும் அப்பறம் சேர்ந்தே போகலாம் என்றாள் வெரோனிகா.

 

என்ன ரோனி நீ ரெடியா என்ற உதய்யிடம் இல்லை மாமா நாம இன்னொரு நாள் போகலாம். ஸ்ரீஜா அக்காவுக்கு உடம்பு சரியில்லை அவங்க இல்லாமல் நாம மட்டும் எப்படி போறது அதனால அப்பறம் போயிக்கலாம் என்றவளிடம் உங்க சித்தி பொண்ணோட பங்க்சன் இருக்கே ரோனி என்றான் உதய்.

 

அதற்கு இன்னும் ஒரு வாரம் இருக்கே மாமா அப்போ கூட நாம ஊருக்கு போயிக்கலாம். இப்போ என்ன என்றவள் சரி நீங்க ஸ்கூலுக்கு போங்க என்றதும் இல்லைடி இன்னைக்கு நான் லீவு சொல்லிட்டேன். பேசாமல் நாம ஒரு லாங்க் டிரைவ் போகலாமா என்ற உதய்யிடம் ஓஓ போகலாமே என்றாள் வெரோனிகா.

 

லாங்க் டிரைவ் போன இடத்தில்…

 

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 5 / 5. Vote count: 3

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!