நான் ஏன் கிளாஸ்ரூம் வாசலில் நிற்கனும் கிளாஸுக்குள்ள உட்கார்ந்து தான் பாடம் படிப்பேன் என்றாள் வெரோனிகா.
என்ன ரோனி குழப்புற என்ற ஊர்மிளாவிடம் எனக்கு ஸ்பெஷல் டியூசன் என்னோட சந்துரு மாமா எடுப்பாங்களே என்றாள் வெரோனிகா.
அது யாருடி சந்துரு மாமா உன் அம்மாவோட தம்பி யாரும் இங்கே இந்த ஊரில் இருக்கிறார்களா என்ற மலர்கொடியைப் பார்த்து ஐய்யோ அத்தை சந்துரு மாமானா என் வீட்டுக்காரர். உங்க மகன் என்றவளிடம் சாரி, சாரி ரோனி என்ற மலர்கொடி அவன் பெயர் உதயச்சந்திரனாச்சே நீ அதை சுருக்கிட்டியா பலே பலே என்றார்.
அதெல்லாம் அப்படித்தான் என்றவள் சிரித்திட சரி சரி எப்படியோ டியூசன்ல இருந்து தப்பிச்சுட்டோம்னு நினைக்காதே நீ மாட்டிருக்கிறது என் அண்ணா அதை மறந்து விடாதே என்றாள் ஊர்மிளா.
சரி சரி வெட்டியா பேசிட்டே இருக்காமல் வந்து சாப்பிடுங்கடி என்றார் மலர்கொடி. ரோனி போ போயி உன் சந்துரு மாமாவை சாப்பிட கூட்டிட்டு வா என்ற மலர்கொடியிடம் சரிங்க அத்தை என்று ஓடினாள் வெரோனிகா.
யாருடனோ அவன் பால்கணியின் நின்று போன் பேசிக் கொண்டு இருந்தான். என்னைத் தவிர எல்லோர் கிட்டையும் சிரிச்சு சிரிச்சு பேசுவாரு சிடுமூஞ்சி மாமா என்று நினைத்தவள் அவன் வரும் வரை அமைதியாக நின்றிருந்தாள்.
எப்போ வந்த என்றவனிடம் நீங்க யார் கூடவோ போனில் பேசிட்டு இருக்கும் பொழுதே வந்துட்டேன் என்றவள் சாப்பிட வாங்க என்றாள்.
நீ கிளம்பி ரெடியா இரு நாம வெளியில் போகிறோம் அங்கேயே சாப்பிட்டு வரலாம் என்றவனிடம் என்ன திடீர்னு என்றாள் வெரோனிகா.
ஏன் மேடம் காரணம் சொன்னால் தான் கிளம்புவிங்களோ என்றவனிடம் சரி என்றவள் கிளம்பினாள். அவனும் தயாராகி வந்திட எங்கே கிளம்பிட்டிங்க இரண்டு பேரும் இந்நேரத்திற்கு என்ற மலர்கொடியிடம் ஏய் சின்னஞ்சிறுசுங்க வெளியே கிளம்பும் போது எங்கேனு கேட்கிற என்ற கல்யாணிதேவி நீங்க போயிட்டு வாங்கப்பா என்று இருவரையும் அனுப்பி வைத்தார்.
எங்கே போறோம் என்றவளிடம் எங்கேனு தெரிஞ்சு மேடம் என்ன பண்ணப் போறிங்க என்றான் உதயச்சந்திரன். அவனை முறைத்து விட்டு சோகமாக அமர்ந்தவளிடம் ஒன்றும் இல்லை உன்னை நான் இதுவரை வெளியில் எங்கேயுமே கூட்டிட்டு போகலைனு அப்பத்தா அம்மாகிட்ட ஃபீல் பண்ணிட்டு இருந்தாங்க அதனால தான் என்றவன் சாப்பிடலாம் வா என்று ஒரு ஹோட்டலுக்கு அழைத்துச் சென்றான்.
சாப்பிடத் தான் வந்தோம்னா இது தண்ட செலவு தான். இதை விட அத்தை சமையல் நல்லாவே இருக்கும் என்றவள் அவன் ஆர்டர் செய்த உணவுகளை அமைதியாக சாப்பிட ஆரம்பித்தாள்.
உனக்கு என்னை பிடிக்குமா என்றவனிடம் பதிலே பேசாமல் அமைதியாக சாப்பிட்டாள். உன்கிட்ட தான் கேட்கிறேன் என்றவனிடம் எனக்கு என்ன சொல்லுறதுனு தெரியவில்லை என்ற வெரோனிகா அமைதியாக சாப்பிட்டாள்.
நமக்கு நடந்த கல்யாணம் சந்தர்ப்பம், சூழ்நிலையால நடந்தது என்றவனிடம் எல்லாம் அந்த வினோதா அக்காவை சொல்லனும். நான் பாட்டுக்கு நிம்மதியா எங்க ஊரு ஸ்கூலில் படிச்சுட்டு இருந்தேன்.
என்னோட சந்தோசமே அவளால போச்சு. உங்களுக்கு தெரியுமா மாமா நான் என் அம்மா மடியில் தான் தூங்குவேன். அம்மா மடியில் படுத்தால் தான் எனக்கு தூக்கமே வரும்.
இங்கே வந்ததில் இருந்து எனக்கு தூக்கமே வருவதில்லை. ரொம்ப கஷ்டப்பட்டு தான் தூங்க வேண்டியதா இருக்கு.
அங்கே ஸ்கூல் முடிஞ்சதும் வயல்காட்டுல சோளக்கதிரை பறிச்சு சுட்டு சாப்பிடுறது, வாய்க்காலில் நண்டு பிடிக்கிறதுனு எவ்வளவு சந்தோசமா என் ப்ரண்ட்ஸ் கூட விளையாடிட்டு இருப்பேன் தெரியுமா.
இங்கே வந்ததில் இருந்து ஏதோ ஜெயிலில் இருக்கிறது மாதிரி இருக்கு. எனக்கு சத்தியமா இங்கே இருக்கவே பிடிக்கவில்லை. பேசாமல் நாம எல்லோரும் எங்க ஊருக்கு போயிருவோமா அங்கேயே சந்தோசமா இருக்கலாம் என்றாள் வெரோனிகா.
உங்க ஊருக்கு வந்துட்டாள் இங்கே உள்ள வேலையை யாரு பார்க்கிறதாம் என்றவன் நான் என்ன கேட்கிறேன்னு உனக்கு புரியவே இல்லையா என்றான்.
இல்லை என்றவளிடம் சரி சாப்பிடு என்றவன் தானும் சாப்பிட்டு விட்டு அவளுடன் வீட்டிற்கு கிளம்பினான்.
மாமா என்றவளிடம் என்ன என்றான். எனக்கு உங்களை பிடிக்குமா இல்லையான்னு எனக்கே தெரியவில்லை. ஒரு சில நேரம் என்னை ரொம்ப திட்டுறிங்க ஒரு சில நேரம் நல்லா பேசுறிங்க அதனால எனக்கு உங்களை பிடிக்குமா இல்லையான்னு சொல்லவே தெரியலை என்றவளின் கன்னம் தட்டியவன் உனக்கு என்னைப் பிடிக்காமல் போனால் எனக்கு ரொம்ப சந்தோசம் என்றான்.
அவன் ஏன் அப்படி சொன்னான் என்று அவளுக்கு புரியவில்லை. புரியும் பொழுது அவளது மனநிலை எப்படி இருக்குமோ🤔🤔🤔🤔.
ரோனி என்ற ஊர்மிளாவிடம் என்னடி என்றாள் வெரோனிகா. நேற்று நீயும், அண்ணாவும் எங்கே போனிங்க என்றவளிடம் ஹோட்டலுக்கு சாப்பிடப் போனோம் என்றாள் வெரோனிகா.
சாப்பிடுறதுக்கா ச்சே நானும், அக்காவும் அண்ணனும், நீயும் சினிமாவுக்கு போனிங்களோனு நினைச்சோம் தெரியுமா என்றாள் ஊர்மிளா.
சினிமாவுக்கா என்று சிரித்தவளிடம் எதற்கு சிரிக்கிற என்றாள் ஊர்மிளா. தெரியவில்லை எனக்கு சிரிப்பு வந்துருச்சு. உனக்கு தெரியுமா எங்க அண்ணா ஸ்ரீஜா அண்ணியை ஒரு டைம் இப்படித் தான் வெளியில் கூட்டிட்டு போனாரு அப்போ அவங்க சினிமாவுக்கு போனாங்க அதனால தான் ஒருவேளை உன்னையைவும் சினிமாவுக்கு அழைச்சுட்டு போயிருப்பாரோனு கேட்டேன் என்றாள் ஊர்மிளா.
ஸ்ரீஜாவா அது யாரு என்று அவள் கேட்க நினைத்திட வகுப்பறைக்குள் நுழைந்தான் உதயச்சந்திரன். அவனைக் கண்டதும் அனைவரும் எழுந்து வணக்கம் சொல்லிவிட்டு அமர்ந்திட அவன் பாடம் நடத்த ஆரம்பித்தான்.
அனைவரும் பாடத்தைக் கவனித்திட வெரோனிகாவின் கவனம் ஸ்ரீஜா யார் என்பதிலே இருந்திட அவளைக் கவனித்தவன் வெரோனிகா என்றிட ஏதோ கனவில் இருந்து மீண்டவள் போலே எழுந்து நின்றாள்.
அவன் நடத்திய பாடத்தில் இருந்து கேள்வி கேட்டிட அவள் திருதிருவென முழித்தாள்.
என்ன ஆடு திருடினது போல முழிக்கிற என்றவனிடம் சார் அது என்றாள். ஸ்கூலில் பாடம் படிக்கும் பொழுது கவனம் பாடத்தில் இருக்கனும் என்றவன் மேடம் என்ன கனவு கண்டுட்டு இருந்திங்க என்றதும் மற்ற மாணவர்கள் சிரிக்க ஆரம்பித்தனர்.
அனைவரும் சிரிக்கவும் அவளுக்கு அவமானமாக இருந்தது. அவளது கண்கள் கலங்கிட என்ன அழுது டிராமா பண்ணுறியா உன்னை என்ன சொல்லிட்டேன் என்றவன் இடியட் கெட் அவுட் ஆப் மை கிளாஸ் என்றான்.
அவளது கண்கள் கண்ணீரைச் சிந்திட மௌனமாக வகுப்பை விட்டு வெளியேறினாள். வகுப்பின் வாசலில் நின்றவளை உன்னை கிளாஸ் விட்டு வெளியே போக சொன்னேன். புரியலையா கிரவுண்டுக்கு போ நெக்ஸ்ட் பீரியட் நீ கிளாஸ்க்கு வந்தால் போதும் என்றான். அவளும் வகுப்பறைநில் இருந்து வெளியேறி கிரவுண்டிற்கு சென்று விட்டாள்.
கல்பெஞ்ச் ஒன்றில் அமர்ந்தவள் பிறர் அறியாமல் தன் கண்ணீரைத் துடைத்தாள். சிடுமூஞ்சி , சிடுமூஞ்சி இவரு பெரிய இவரு இப்போ தான் கிளாஸ்ரூம் விட்டு போகச் சொல்லிகிட்டு என்று அவனை மனதிற்குள் கருவிக் கொண்டு அமர்ந்திருந்தாள்.
அவள் சென்ற பிறகு பாடத்தை நடத்த ஆரம்பித்தான் உதயச்சந்திரன். அவளை திட்டியது அவனுக்கும் வருத்தம் தான் ஆனால் எல்லாம் அவளது நன்மைக்காகத் தான் என்று நினைத்தவன் பாடத்தை நடத்த ஆரம்பித்தான்.
இப்போ எதற்குடா அந்தப் பொண்ணை இவ்வளவு திட்டினாரு. பசங்களை வெளியே விரட்டி விட்டுருக்காரு சரி முதல் தடவையா அந்தப் பொண்ணை விரட்டிருக்காரு என்றான் அர்ஜுன்.
மச்சி பொண்ணுங்க அந்த ஆளைத் தானே கவனிக்குறாங்க இந்தப் பொண்ணு மட்டும் அவரைக் கவனிக்கவில்லைனு கடுப்பு போல என்ற கிஷோரை முறைத்த அர்ஜுன் மூடிட்டு பாடத்தை கவனி அப்பறம் நம்மளையும் விரட்டப் போறாரு என்றான் அர்ஜுன்.
அது கூட நல்லது தானே நாமளும் ரோனிக்கு துணையா போகலாம் என்ற விஷாலை முறைத்தான் அர்ஜுன்.
வகுப்பு முடிந்ததற்கு அறிகுறியாக பெல் அடித்திட அவள் கிரவுண்டிலிருந்து வகுப்பறைக்கு வந்தாள்.
அவன் கிளம்பி இருக்க அவளிடத்திற்கு சென்று அமர்ந்தவள் ஊர்மிளாவிடம் கூட ஒரு வார்த்தை பேசவில்லை.
ரோனி ஏன் இப்படி இருக்க என்றதற்கு ஒன்றும் இல்லை விடு என்றவள் அன்று முழுவதுமே அமைதியாகவே இருந்தாள். சாப்பிடும் பொழுது கூட அமைதியாகவே இருந்தாள்.
அடுத்தடுத்த வகுப்புகளும் முடிந்து விட பிரகாஷிற்காக காத்திருந்தாள். அவள் முன் பைக்கை நிறுத்திய உதயச்சந்திரன் இன்னைக்கு பிரகாஷ் சீக்கிரமே கிளம்பிட்டான் என் கூட வா என்றிட அவளும் அமைதியாக அவனது பைக்கில் அமர்ந்தாள்.
வீட்டிற்கு வந்த பிறகும் அறைக்குள்ளே அடைந்து கிடந்தாள் வெரோனிகா. என்னாச்சு உனக்கு ஏன் உம்முனு இருக்க என்றவனிடம் பதிலே பேசாமல் அமர்ந்திருந்தாள். உன்கிட்ட தான் நான் கேட்கிறேன் என்றவனிடம் என்னை எங்க அம்மா வீட்டுக்கு அனுப்பி விடுங்க ப்ளீஸ் என்று அழ ஆரம்பித்தாள்.
என்ன திடீர்னு என்றவளிடம் உங்களுக்கு தான் என்னை பிடிக்கவே இல்லையே அப்பறம் எதற்கு நான் உங்க கூட இருக்கனும். நான் என்ன தப்பு பண்ணிட்டேன்னு என்னை அந்த பேச்சு பேசுறிங்க நான் முட்டாள் தான் எனக்கு அறிவு கிடையாது. நீங்க வீட்டில் அடிக்கடி சொல்லுவிங்களே உங்க அப்பத்தா என்னை உங்க தலையில் கட்டி வச்சி உங்களை மாரடிக்க வச்சுட்டாங்கனு அதனால தான் சொல்லுறேன்.
நான் எங்க வீட்டுக்கு போயிட்டால் நீங்க நிம்மதியா இருக்கலாமே என்றவளிடம் அப்போ உன்னோட படிப்பு என்றான் உதயச்சந்திரன்.
என்னைக்கு இந்த தாலியை என் கழுத்தில் கட்டுனிங்களோ அப்பவே என் படிப்பு முடிஞ்சுருச்சு. என்றவள் பால்கணியில் ஒரு மூலையில் அமர்ந்து கால்களுக்கு இடையே முகம் புதைத்து அழ ஆரம்பித்தாள்.
அவன் அவளை முறைத்து விட்டு அறையை விட்டு வெளியே சென்றான்.
என்ன உதய் ரோனி எங்கே ஏன் ரூமை விட்டு அவள் வரவே இல்லை என்றார் மலர்கொடி. ஒன்றும் இல்லை அவளுக்கு தலைவலி அதான் என்றவன் எங்கோ கிளம்பிச் சென்றான்.
டியூசன் விட்டு வந்த ஊர்மிளா அம்மா ரோனி எங்கே என்றாள். அவள் ரூம்ல இருக்கிறாள். தலைவலினு உன் அண்ணன் சொன்னான் என்ற சுசீலாவிடம் அவரே தலைவலியை உருவாக்கிட்டு அதை உங்க கிட்ட வேற சொல்லுறாராக்கும் என்ற ஊர்மிளா பாவம் அம்மா ரோனி அவளை அண்ணன் ரொம்ப திட்டிருச்சு என்ற ஊர்மிளா காலையில் நடந்தவற்றைக் கூறினாள்.
இவன் ஏன் அக்கா இப்படி இருக்கிறான். இதை நாம கேட்டால் அவள் என் பொண்டாட்டி அவளை திட்ட எனக்கு உரிமை இல்லையானு கேட்பான் என்ற சுசீலா நான் போயி அவளை அழைச்சுட்டு வரேன். அன்னைக்கு இப்படித்தான் அழுது அழுது காய்ச்சல் வர வச்சுட்டாள் என்று புலம்பிக் கொண்டே வெரோனிகாவை அழைக்க சென்றார் சுசீலா.
….தொடரும்….