அத்தியாயம் 130
லாங்க் டிரைவ்வா நிஜமாவா எங்கே போறோம் என்ற வெரோனிகாவிடம் சர்ப்ரைஸ் என்றவன் அவளை ரெடியாக சொல்லி விட்டு கீழே சென்றான்.
என்னாச்சு சித்தப்பா நீங்க இன்னும் அந்த பிரச்சனையிலிருந்து வெளியே வரவில்லையா என்ற உதய்யிடம் இல்லைப்பா என்றார் இளமாறன். இளமாறா அதான் நம்ம சம்பந்திகிட்ட சொல்லி விக்கியோட அப்பா மூலம் அவனை கண்டிச்சு வச்சுட்டோமே அப்பறம் என்னப்பா கவலைப் படாதே என்றார் நெடுமாறன்.
அவனை கண்டிச்சா போதுமா அண்ணா நம்ம வீட்டுப் பொண்ணு பண்ணுற பிரச்சனை தான் பெரிய பிரச்சனையா இருக்கும் போல என்றிட அப்பா நான் நம்ம மாப்பிளை கிட்ட விசாரிச்சுட்டேன். அந்த விக்னேஷ்க்கு இன்னும் இரண்டு நாளில் நிச்சயதார்த்தமாம் என்றான் பிரகாஷ்.
அப்பறம் என்ன பிரச்சனை முடிஞ்சது என்று நெடுமாறன் கூறிட அது எப்படி மாமா நான் இப்போ தானே வந்துருக்கேன் அதுக்குள்ள பிரச்சனை முடிஞ்சுருச்சா என்று வந்தவனைப் பார்த்து புன்னகைத்தனர் அனைவரும்.
வாடா மாப்பிள்ளை என்று நெடுமாறன் தன் மருமகனை அணைத்துக் கொள்ள அவரிடம் ஆசிர்வாதம் வாங்கி விட்டு நிமிர்ந்தவன் இளமாறனின் காலிலும் விழுந்து ஆசிர்வாதம் வாங்கினான்.
பேராண்டி வந்துட்டியாடா என்ற கல்யாணிதேவியை கட்டிக் கொண்டவன் கல்லு டார்லிங் எப்படி இருக்க என்றதும் எனக்கு என்னடா நான் நல்லா தான் இருக்கேன் நீ எப்படி இருக்க என்றார் கல்யாணிதேவி.
பார்க்கிற தானே டார்லிங் என்றவன் ஹாய் அத்தான்ஸ் என்று உதய், பிரகாஷ் இருவரிடமும் வந்து பேச வாடா நல்லவனே என் கல்யாணத்திற்கு கூட வராதவனே என்ற பிரகாஷிடம் வேலை அத்தான் அதான் என்றவன் சரி எங்கே என் உடன் பிறப்புகள் என்றிட இந்திரஜா வந்தவள் அவனது தலையில் நங்கென்று கொட்டினாள்.
படுபாவி பயலே நீயெல்லாம் ஒரு தம்பியாடா சொந்த அக்கா கல்யாணத்திற்கே வராமல் அங்கே எவளோட ஊர் சுத்திட்டு இருந்த என்றிட என் கல்லு டார்லிங் மாதிரி எந்த பொண்ணும் செட் ஆகலை இந்து என்றான் நரேன்.
நரேன் என்று வந்த வசுந்தராவைக் கட்டிக் கொண்டவன் இப்போ எப்படிம்மா இருக்க என்றிட போடா நாயே நான் ஹாஸ்பிடலில் உடம்பு சரியில்லாமல் இருந்தப்ப கூட உனக்கு வரத் தோணலைல என்றார் வசுந்தரா. அதான் இப்போ வந்துட்டேனேம்மா என்றவன் சுசீலா, மலர்கொடி இருவரிடமும் பேசிக் கொண்டிருந்தான்.
டேய் என்னடா இப்போ தான் ஊருக்கு வர வழி தெரிஞ்சதா என்ற ஸ்ரீஜாவிடம் ஆமாம் இப்போ என்ன ஆளாளுக்கு கேள்வி கேட்டுட்டே இருக்கிங்க நான் வந்த வழியே திரும்பி போகட்டுமா என்றான் நரேன்.
சரிடா தம்பி கிளம்பு என்ற ஸ்ரீஜாவை முறைத்தவன் அதை நீ சொல்லாதே என் குட்டி டார்லிங் சொல்லட்டும் என்று உதயநிலாவை தேடினான். எங்கே என்னோட குட்டி ஏஞ்சல் என்றிட வெரோனிகா கையில் உதயநிலாவை தூக்கிக் கொண்டு வந்தாள்.
உதயநிலாவை வாங்கிக் கொண்டவன் ஹாய் ரோனி என்றிட அவனை கேள்வியாக அவள் பார்த்திட என்னம்மா தங்கச்சி அப்படி பார்க்கிற என்றான் நரேன். ரோனி இவன் என்னோட தம்பி என்றாள் ஸ்ரீஜா. நரேன் அண்ணா என்ற வெரோனிகா அவனிடம் சந்தோசமாக பேச ஆரம்பித்தாள்.
அந்த சமயம் அங்கு வந்த ஊர்மிளாவைக் கண்டவன் ஓய் முறைப் பொண்ணே என்று அவள் முன் மண்டியிட அதிர்ந்து நிமிர்ந்தாள் ஊர்மிளா. என்ன ஊர்மி பயந்துட்டியா என்றவன் அவளைப் பார்த்து கண்ணடிக்க அவள் அவனை முறைத்திட வில் யூ மேரி மீ பேபி என்றான்.
அவனை கடந்து சென்றவளிடம் ஓய் என்னம்மா முறைப்பொண்ணு பதில் சொல்லாமல் போற என்றிட டேய் வந்தவுடனே அவளை வம்பு பண்ணாதே என்ற வசுந்தராவைப் பார்த்து சிரித்தவன் என்னாச்சு என் வருங்கால மனைவிக்கு என்றான் நரேன்.
ஏன்டா அவளை வம்பு பண்ணாமல் போ போயி குளிச்சுட்டு வா என்றிட சரிங்க மம்மி என்றவன் தன்னறைக்கு செல்ல உதய், ரோனி இருவரும் வெளியே கிளம்பினர்.
மாமா என்றவளிடம் ஏம்மா என்றான் உதய். அவனை முறைத்தவள் நாம லாங்க் டிரைவ் எல்லாம் போக வேண்டாம் என்றவளை முறைத்தவன் ஏன்டி திரும்ப பயப்படுறியா என்றவனது தோளில் சாய்ந்தவள் இல்லை மாமா நம்ம வீட்டுக்கு நரேன் அண்ணா வந்திருக்கிற இந்த டைம்ல நாம லாங்க் டிரைவ் போறது அவ்வளவு நல்லா இருக்காதே என்றாள் ரோனி.
நரேன் வந்ததுக்கும், நம்ம டிரைவ் போறதுக்கும் என்னடி சம்பந்தம் என்றவன் ரோனி இந்த டிரிப் உனக்காக இல்லை எனக்காக என்ற உதய் பேபிமா மாமா கார் ஓட்டனும் கொஞ்சம் கையை விடுறிங்களா என்றான். அவனை முறைத்து விட்டு முகத்தை திருப்பினாள் வெரோனிகா.
பார்த்துடி முகம் சுளுக்கிற போகுது என்றவனது கையில் நறுக்கென்று கிள்ளியவள் போடா லூசு மாமா என்றாள். எதே போடா லூசு மாமாவா வாயாடிக் கழுதை இருடி என்றவன் காரை நிறுத்தி விட்டு அவளது காதைப் பிடித்து திருகிட மாமா ப்ளீஸ் ரோனி பாவம் என்று கெஞ்சினாள் வெரோனிகா.
அந்த பயம் இருக்கனும் என்றவன் அங்கே பாரு என்றிட கடற்கரை தெரியவும் மாமா நாம பீச்சுக்கு தான் வந்தோமா என்றவள் அவனது கன்னத்தில் முத்தமிட்டு காரின் கதவினை திறந்து கடற்கரையை நோக்கி ஒடினாள்.
அவளைப் பார்த்து சிரித்தவன் கார் கதவினை சாத்தி விட்டு அவள் பின்னே செல்ல குழந்தையைப் போல அலையில் விளையாட ஆரம்பித்தாள். அவளை ரசித்தபடி அவன் நின்றிட அவனது கையை பிடித்தவள் மாமா நீங்களும் வாங்க அலையில் விளையாடலாம் என்றாள். இல்லை ரோனி நீ விளையாடு என்றிட அதெல்லாம் முடியது நீங்களும் வாங்க என்று அவனை இழுத்திட அவனும் அவளோடு சென்றான்.
அலைகள் அவள் பாதங்களை நெருங்க நெருங்க கணவனின் கை கோர்த்து பின்னே சென்று அலையை அலைக்கழித்தாள். அவளது கை கோர்த்த அவனும் மனைவியின் முகத்தில் தெரிந்த குழந்தை தனத்தை ரசித்தவன் ரோனி நீ சந்தோசமா இருக்கியா என்றான்.
அவனது கையை எடுத்து தன் மார்போடு அணைத்தவள் ரொம்ப ரொம்ப சந்தோசமா இருக்கேன் மாமா ஐ லவ் யூ என்றிட என் செல்லப் பொண்டாட்டி ஐ லவ் யூ டூ பேபி என்றான்.
என்ன மாமா பேபி பேபினு ஐஸ் வைக்கிறிங்க என்றவளிடம் பேபினா என்ன அர்த்தம்னு தெரியுமா ரோனி என்றான் உதய். குழந்தை தானே மாமா என்றவளிடம் அதான் இல்லை பே பேய், பி பிசாசு பேபினா பேய், பிசாசு என்று அவன் சிரித்திட டேய் லூசு மாமா உன்னை என்றவள் அவனை விரட்டிட அவனோ அவள் கையில் சிக்காமல் ஓடினான்.
மாமா நில்லுங்க மாமா என்றவள் அவனை விரட்டிட நான் தான் லூசு மாமா ஆச்சே நிற்க மாட்டேன் போடி என்றவன் ஓடினான். ஐயோ என் செல்ல சந்துரு மாமா நில்லுங்க ஸாரி என்றவள் காதை பிடித்திட அவனோ அவளைப் பார்த்து சிரித்தான்.
அவனை எட்டிப் பிடித்தவள் நான் உனக்கு பேயா , பிசாசா என்று அவனது தலையில் கொட்டு வைத்திட பட்டென்று அவளது இடுப்பை கிள்ளிட அவள் துள்ளி துடித்த நேரம் அவளது கன்னத்தில் முத்தமிட்டு அவன் ஓடிட அவளோ அதிர்ந்தவள் வெட்கத்தில் கன்னம் சிவந்து மாமா உங்களை என்று அவனைப் பிடித்து அவன் மார்பில் சாய்ந்து கொண்டாள்.
என்னடி அடிப்பனு பார்த்தேன் இப்படி சட்டை பட்டனை திருகிட்டு இருக்க என்றவனது சட்டையை இறுக்கியவள் ஏன் மாமா இப்படி பண்ணுற. இது பப்ளிக் ப்ளேஸ் என்றிட அவளது இடையில் கை வைத்தவன் நோ ரோனி இது உன் சந்துரு மாமாவோட ப்ரைவேட் ப்ளேஸ், பேவரிட் ப்ளேஸ் என்று கண்ணடித்தான்.
என்ன மாமா இன்னைக்கு ஓவர் லவ்வர் பாய்யா இருக்கிங்க என்றவள் அவனைப் பிரிந்து திரும்பிட அவளது கையை எட்டிப் பிடித்தவன் அவளை அப்படியே கைகளில் ஏந்திட மாமா என்ன பண்ணுறிங்க என்றாள் வெரோனிகா.
இங்கே யாருமே இல்லையேடி என்றவன் அவளை தூக்கிக் கொண்டு கடல் தண்ணீரில் பொத்தென்று போட அவள் மொத்தமாக நனைந்து விட்டாள். அடப் பாவி மாமா பாருங்க என் டிரஸ் நனைஞ்சுருச்சு உங்களை என்று அவனை இழுத்து தண்ணீரில் தள்ளினாள்.
அடிப்பாவி என்னையும் நனைச்சுட்டியா என்றவன் சிரித்திட நீங்க மட்டும் என்னை நனைச்சிங்க என்றாள். இருவரும் கை கோர்த்தபடி அலையில் ஒருவரை ஒருவர் தள்ளி விட்டு நனைந்தபடி விளையாடினர்.
அச்சோ மாமா டிரஸ் மொத்தமும் நனைஞ்சுருச்சே என்றவளிடம் ஆமாம் நனைஞ்சுருச்சு என்றவன் நாம இப்போ இங்கே தான் தங்கப் போறோமே என்று தூரத்தில் தெரிந்த ரெசார்ட்டை காட்டிட என்ன மாமா செகன்ட் ஹனிமூனா என்று சிரித்தாள்.
ஆமாம்டி இப்போ என்ன என்றவன் அவளுடன் அந்த ரெசார்ட்டில் புக் செய்த அறைக்குள் சென்றான். இந்தா போயி ப்ரஸ் ஆகிட்டு வேற டிரஸ் சேஞ்ச் பண்ணிட்டு வா ரோனி என்றிட அவனது சட்டையைப் பிடித்து இழுத்தவள் அவனது காதில் ரகசியம் சொல்லிட அவளை மெல்ல கைகளில் ஏந்தினான் உதய்.
அவளை குளியலறையில் இறக்கி விடடவன் என்ன மகாராணி இந்த சேவை போதும் தானே என்றிட அவனது சட்டையைப் பிடித்து இழுத்து பாத்டப்பிற்குள் தள்ளி விட்டவள் அவனுடன் தானும் தண்ணீரில் விழுந்தாள்.
என்ன விக்கி இன்னும் அந்த ஊர்மிளாவை தான் நினைச்சுட்டு சுத்துறியா இன்னும் இரண்டு நாளில் உனக்கு வேற பொண்ணோட நிச்சயதார்த்தம் என்றார் சகுந்தலா. அம்மா என்னால ஊர்மிளாவை என்றவனிடம் போதும் விக்கி போதும் என்ற சகுந்தலா உனக்கு உன் அம்மா மேல மரியாதை இருந்தால் போ போயி படு என்று விட்டு சென்றார் சகுந்தலா.
என்னம்மா வினி இப்படி சோகமா இருக்க இன்னும் இரண்டு நாளில் உனக்கு நிச்சயதார்த்தம் நினைப்பு இருக்கு தானே என்றார் சாவித்ரி. சோகமா எனக்கா ஏன் அம்மா நீங்க வேற எனக்கு டிராவல் பண்ணி வந்த அசதி என்றாள் வினித்ரா.
என்ன சாவித்ரி வந்ததும், வராததுமா பிள்ளையை வறுத்தெடுக்கிற என்று வந்தார் சாந்தமூர்த்தி. வறுத்தெடுக்க உங்க பொண்ணு என்ன வடகமா என்ற சாவித்ரி வினிமா சாப்பிட வாடி என்று இலையை போட தன் தந்தையின் அருகில் அமர்ந்தாள் வினித்ரா.
என்னம்மா உன்னோட வேலை எல்லாம் எப்படி போகுது என்ற சாந்தமூர்த்தியிடம் எல்லாம் நல்லா போகுதுப்பா என்றவள் தன் தந்தையிடம் பேசிக் கொண்டே சாப்பிட ஆரம்பித்தாள்.
அத்தியாயம் 131
என்ன ரோனி தூக்கம் போயிருச்சா என்றவனது தோளில் சாய்ந்தவள் எப்போ வீட்டுக்கு போறோம் மாமா என்றிட வீட்டுக்கா போகனுமா என்றவனை முறைத்தவள் இங்கே வந்து இரண்டு நாளாச்சு. ஏதோ கல்யாணம் ஆன புது ஜோடி போல ஹனிமூன் கொண்டாட மகாபலிபுரம் வந்துருக்கோம் என்று சிரித்தவளிடம் ஏன்டி புது ஜோடி தான் ஹனிமூன் கொண்டாடனுமா என்ன. என் ரோனி வீட்டில் இருந்தால் ஊர்மிளா பிரச்சனை, ஸ்ரீஜா பிரச்சனை, அர்ச்சனா பிரச்சனைன்னு வீட்டில் உள்ள எல்லோருடைய பிரச்சனையை மட்டும் தான் பார்க்கிறாள். அவளோட புருசன் நான் ஒருத்தன் இருக்கிறதையே மறந்து விட்டாள் அதனால தான் அவளை வீட்டை விட்டு இரண்டு நளைக்கு கடத்திட்டு வந்துட்டேன்.
இந்த இரண்டு நாளும் அவள் என் கூடவே இருந்தாள். என்னை மட்டும் ரசிச்சுக்கிட்டு என்றவனது கழுத்தை கட்டிக் கொண்டவள் ரொம்ப பொய் பேசுறிங்க மாமா. நான் எப்போ உங்களை கண்டுக்காமல் இருந்தேன் என்றவளிடம் ஏன் உனக்கு தெரியாதா.
பெட்ரூம்ல எப்போ பாரு ஊர்மிளா பிரச்சனையை தான் பேசுற என்றவனை முறைத்தவள் நான் உங்க தங்கச்சி பிரச்சனை பேசுறேன் நீங்க என்ன பண்ணுவிங்க எப்போ பாரு படி ரோனி, படி ரோனி இதை தானே பண்ணுவிங்க என்றவளைப் பார்த்து சிரித்தான்.
என் பொண்டாட்டி நல்லா படிச்சா எனக்கு தானே பெருமை என்றவனிடம் நல்லா இந்த வாத்தியாருக்கு வாக்கப்பட்டு வந்தேன் என்று வாயை சுளித்தாள். என்னடி ரொம்ப தான் சலிச்சுக்கிற என்றவனிடம் ஆமாம் சலிச்சுக்கிறேன் போங்க மாமா என்று சிரித்தாள் வெரோனிகா.
சரி, சரி எப்போ கிளம்பலாம் என்றவளிடம் அவசியம் போகனுமா ரோனி என்றான். அவனிடம் நாளைக்கு அனாமிகாவுக்கு சடங்கு அதற்கு கண்டிப்பா போகனும் என்றவளைப் பார்த்து சிரித்தவன் இந்த பங்க்சன்லாம் தேவை தானா ரோனி. அந்தப் பொண்ணு வயசுக்கு வந்ததை ஊருக்கே தெரியப் படுத்தனுமா என்ன என்றவனைப் பார்த்து சிரித்தவள் மாமா அவள் என்ன நேற்றா வயசுக்கு வந்தாள். அது ஆச்சு மூன்று, நான்கு வருசம் என்று சிரித்தாள் வெரோனிகா. அப்பறம் ஏன் பங்க்சன் இப்போ என்றவனிடம் எல்லாம் வருமானம் பார்க்க தான்.
முன்னே எல்லாம் ஒரு பொண்ணு வயசுக்கு வந்து சடங்கு பண்ணுறது அந்த வீட்டில் ஒரு பொண்ணு கல்யாணத்திற்கு ரெடியாகிருச்சு முறை மாமனுங்க பொண்ணு கேட்டு வரலாம்னு ஒரு வழக்கம் வச்சுருந்தாங்க. இப்போ எல்லாம் பொண்ணுங்க நல்லா படிச்சு வேலைக்கு போயி சொந்தக் காலில் நின்ற பிறகு தான் கல்யாணமே பண்ணுறாங்க அதனால இப்போ எல்லாம் இந்த சடங்கு எல்லாம் வருமானத்திற்காக தான் செய்றாங்க.
அனாமிகா என் சித்திக்கு ஒரே பொண்ணு. அவளுக்கு காதுகுத்து கூட சிம்பிளா செஞ்சுட்டாங்க. சித்தி பொதுவா எல்லார் வீட்டு விசேசத்திற்கும் சிறப்பீவே செய்முறை செய்யும். இப்போ அதை திருப்பி வசூல் பண்ண இந்த சடங்கு பங்க்சன் என்று சிரித்தாள் வெரோனிகா.
உனக்கு இந்த மாதிரி பங்க்சன் வச்சாங்களா ரோனி என்ற உதய்யிடம் இல்லை மாமா. நான் பெரிய பொண்ணா ஆன போது என் மாமா வீட்டு ஆளுங்களை சீர் செய்யக் கூட பெரியம்மா விட்டதில்லை. பிரச்சனை மேல பிரச்சனை நடந்துட்டே இருக்கும். ஏன் என் அப்பத்தா இறந்து போனப்ப கூட அப்பா, பெரியப்பாவுக்கு லேஞ்சு கட்ட கூட என் மாமாக்களை அனுமதிக்கவில்லை. சக்தி அண்ணன் கல்யாணத்தில் ஆரம்பிச்ச பிரச்சனை இப்போ தான் கொஞ்சம் சரியாகுச்சு அதுக்குள்ள கனியும், சரவணன் அண்ணனும் ஓடிப்போயி பூதாகரமா ஆச்சு என்றவள் மௌனமாகிட அப்போ உனக்கு இந்த சடங்கெல்லாம் நடக்கலைன்னு கவலை இல்லையா என்றான் உதய்.
பெரிசா நடக்கவில்லை ஆனால் சிம்பிளா எங்க வீட்டாளுங்க மட்டும் நடத்தினாங்க என் தேனு அண்ணி தான் எனக்கு மாப்பிள்ளையா நின்னாங்க என்று சிரித்தாள் வெரோனிகா.
சரி மாமா வீட்டுக்கு போகலாமா என்றவளிடம் சரி கிளம்பு போகலாம் என்றவனது கன்னத்தில் முத்தமிட்டவள் செல்லமாமா என்றிட அவன் சிரித்து விட்டு தானும் கிளம்பினான்.
மாமா உங்களுக்கு என் மேல கோபமே வராதா என்றவளிடம் ஏன் இப்படி ஒரு கேள்வி ரோனி என்றவன் அவளது சீட்பெல்ட்டை சரி செய்தான். இல்லை மாமா கேட்கனும்னு தோனுச்சு என்றவளை புன்னகையுடன் பார்த்தவள் என்னோட கோபத்தை உன்னால தாங்க முடியாது ரோனி அதனால உன் மேல நான் எப்பவுமே கோபம் பட மாட்டேன் என்றான் உதய்.
அப்படி என்ன மாமா உங்க கோபம் என்றவளை அமைதியாக பார்த்தவன் பெரிசா எதுவும் இல்லை ரோனி ஒருத்தர் மேல கோபமா இருந்தால் அவங்க கிட்ட பேசவே மாட்டேன். சுத்தமா ஒதுங்கிருவேன் அது தான் அவங்களுக்கு நான் கொடுக்கிற தண்டனை ஆனால் என் ரோனிகிட்ட பேசாமல் என்னால இருக்க முடியாதே. உனக்கு அந்த தண்டனை கொடுத்தால் வேதனை உனக்கு மட்டும் இல்லை எனக்கும் தான் என்றவன் சரி இந்த பேச்சு வேண்டாம் என்றிட அவனது தோளில் சாய்ந்து கொண்டாள் வெரோனிகா.
என்ன வினி சந்தோசம் தானே என்ற சாவித்ரியிடம் உங்க சந்தோசம் தான் என்னோட சந்தோசம் அம்மா என்றவள் கையில் வளையலை அணிய ஏனோ அவள் மனம் எங்கும் உதயச்சந்திரனே நிறைந்திருந்தான். அவனை நினைப்பது தவறு என்று புத்திக்கு புரிந்தாலும் பாலாய் போன மனமோ அவன் செய்த உதவியையும், அவன் மேல் ஒரு காலத்தில் அவள் வளர்த்திருந்த ஆசையையும் திரும்ப திரும்ப நினைத்தது.
தப்பு வினி உதய் வெரோனிவாவோட கணவர் என்று நினைத்தவளின் மனதில் பவித்ரா சொன்ன விசயம் வேறு ஞாபகத்திற்கு வர தன்னை தானே திட்டி விட்டு தயாராகினாள்.
என்னடி ஏன் உன் மகன் உம்முனு வரான் என்று சந்திரமோகன் சகுந்தலாவைக் கேட்டிட அவரோ நீங்கள் சும்மா வாங்களேன். அவன் ஒன்றும் ரோபோ கிடையாது என்று சகுந்தலா கூறிட உன்னால தான்டி அவன் உருப்படாமல் போகிறதே என்று சந்திரமோகன் கூறிட அப்பா ப்ளீஸ் கொஞ்சம் அமைதியா இருங்க என்று சௌமியா தந்தையை சமாதானம் செய்தாள்.
விக்னேஷோ இந்த நான்கு நாட்களாக ஊர்மிளாவின் எண்ணிற்கு பலமுறை போன் செய்தும் அவளது எண் சுவிட்ச் ஆப் என்று வருவதை நினைத்து குழம்பி போனான். அவனது மனம் ஊர்மிளாவை தவிர இன்னொரு பெண்ணை ஏற்க முடியாமல் தவித்திட இந்த அப்பா வேறு நிச்சயதார்த்தம் என்று உயிரை எடுக்கிறாரே பேசாமல் நாம செத்துப் போயிட்டால் என்ன என்று கூட யோசித்தான்.
ஏனோ அவன் அடி மனதில் ஒரு நம்பிக்கை அவனது ஊர்மிளா அவனுக்கு கிடைத்திருவாள் என்று. அந்த நம்பிக்கையினாலே அவனும் நடக்கும் எதையும் தடுக்காமல் இருந்தான்.
என்ன ஊர்மிளா நீ வரவில்லையா என்ற நரேனிடம் எங்கே என்றாள் ஊர்மிளா. வெரோனிகாவோட ஊருக்கு தான். அங்கே ஏதோ பங்க்சன்னு மொத்த வீடும் கிளம்புது என்றவனிடம் என்னை யாரும் கூப்பிடவில்லை என்றாள் ஊர்மிளா. என்ன உன்னை கூப்பிடவில்லையா என்று சிரித்தவன் ஆமாம் நீ பெரிய மனுசி உன்னை வெற்றிலை, பாக்கு வச்சு கூப்பிடனும் கிளம்பு, கிளம்பு என்றான் நரேன்.
உதய் அண்ணாவும், ரோனியும் ஊருக்கு போயிட்டாங்களா என்றவளிடம் இல்லை அவங்க இன்னும் ஊருக்கு போகவில்லை. போற வழியில் நம்ம கூட ஜாயின் பண்ணிப்பாங்க என்றவன் அவளை கிளம்பிட சொல்ல அவளும் கிளம்பினாள்.
நம்ம அம்மா இருக்கிற காரில் ஏறக்கூடாது. நரேன் அத்தான் கூட தான் போகனும். அப்போ தான் போகும் வழியில் எப்படியாவது அவர்கிட்ட போனை வாங்கி விக்கிட்ட பேசிரனும் என்று நினைத்தவள் வேகமாக கிளம்பினாள்.
என்னடி உன் வீட்டு விசேசத்திற்கு நீயே லேட்டா வருவியா என்ற பூங்கொடியிடம் அட ஏன் அக்கா நீ வேற எல்லாம் இந்த குட்டியால வந்துச்சு. பியூட்டி பார்லர், ஷாப்பிங்னு உயிரை எடுத்துட்டாள் என்ற ஜெயக்கொடி மகளை குறைப்பட்டுக் கொள்ள சரிடி சின்னப்பிள்ளை விடு என்ற பூங்கொடி சாப்பிடுங்க என்றார்.
இப்போ தான் அக்கா அண்ணன் வீட்டில் சாப்பிட்டோம் என்றிட சரி அப்போ மோராவது குடி என்று தங்கைக்கு மோர் எடுத்து வந்தார்.
என்னக்கா ரோனி போன் பண்ணினாளா என்ற ஜெயக்கொடியிடம் அவங்க குடும்பத்தோட வந்துட்டு இருக்கிறாள் என்ற பூங்கொடி ரொம்ப நல்ல குடும்பம் என்றார். ஆமாம் அக்கா நாம நம்ம பொண்ணுக்கு கட்டுச்சோறு கட்டிகிட்டு ஊர், ஊரா தேடினாலும் இப்படி ஒரு மாப்பிள்ளையும், குடும்பமும் கிடைக்க மாட்டாங்க என்றார் ஜெயக்கொடி. கண்ணு வைக்காதடி என்ற பூங்கொடி சிரித்திட ஜெயக்கொடியும் சிரித்து விட்டார்.
வினித்ரா சபைக்கு வர அங்கு மாப்பிள்ளையாக அமர்ந்திருந்த விக்னேஷின் முகத்திலும் சந்தோசம் இல்லை.
அத்தியாயம் 132
என்ன ஊர்மி ஏன் டல்லாவே இருக்க இன்னும் கிளம்பாமல் என்ற நரேனிடம் அத்தான் உங்க போனை கொஞ்சம் கொடுக்கிறிங்களா என்றாள் ஊர்மிளா. ஏன் உன்னோட போன் என்னாச்சு என்றவனிடம் அது உடைஞ்சுருச்சு என்றவளை கேள்வியாக பார்த்தவன் உன் காதல் விசயம் எல்லாம் எனக்கும் தெரியும் என்றான் நரேன்.
அப்படி என்ன ஊர்மிளா லவ் அவனை நம்ம வீட்டில் ஒருத்தருக்கும் பிடிக்கவில்லை என்ற நரேனிடம் அத்தான் அதெல்லாம் சொன்னால் உங்களுக்கு புரியாது. விக்கி இல்லைனா சத்தியமா நான் செத்துப் போயிருவேன். அதை இந்த வீட்டில் உள்ளவங்க தான் புரிஞ்சுக்கவே மாட்டேங்கிறாங்க நீங்களாவது புரிஞ்சுக்கோங்க என்றாள் ஊர்மிளா.
அவன் நல்லவனா இருந்திருந்தால் என்று ஏதோ சொல்ல வந்த நரேனிடம் நல்லவனா இருக்கிறதால தான் பெத்தவங்க சம்மதம் வாங்கி என்னை கல்யாணம் பண்ணிக்க ஆசைப் படுகிறார். ஏன் அவரு கூப்பிட்டால் நான் வீட்டை விட்டு வந்துருவேன்னு அவருக்கும் தெரியும் ஆனாலும் முறையா நடக்கனும்னு பொண்ணு கேட்டு வந்த அவரையும், அவரோட அம்மாவையும் அப்பா அசிங்கப் படுத்தி அனுப்பினார்.
என்னோட போனை பறிச்சு எனக்கும், விக்கிக்கும் சுத்தமா தொடர்பே இல்லாமல் பண்ணி என்னை உயிரோட சாகடிக்கிறாங்க என்று அழுதவளிடம் சரி அழாதே உனக்கு என்ன இப்போ அவன் கூட பேசனும் அவ்வளவு தானே பேசு என்று தனது மொபைல் போனை கொடுத்தான் நரேன்.
தாங்க்ஸ் அத்தான் என்ற ஊர்மிளா விக்னேஷின் எண்ணிற்கு போன் செய்தாள்.
என்ன வினித்ரா மாப்பிள்ளை உனக்கு பிடிச்சுருக்கா என்ற சாந்தமூர்த்தியிடம் உங்க விருப்பம் தான் அப்பா என்னோட விருப்பம் என்றாள் வினித்ரா. என் பொண்ணு எப்பவுமே என் பேச்சை மீற மாட்டாள் என்று பெருமை பட்டுக் கொண்ட சாந்தமூர்த்தி மனைவி சாவித்ரியுடன் சேர்ந்து சந்திரமோகன், சகுந்தலா தம்பதியுடன் நிச்சய தாம்பூலம் மாற்றிக் கொண்டனர்.
விக்னேஷ் ஏதோ யோசனையுடன் இருந்த நேரம் அவனது மொபைல் போன் ஒலித்திட அதை அட்டன் செய்தான். விக்கி என்ற குரலைக் கேட்டதும் ஊர்மி என்றவனது கண்கள் கலங்கிட எப்படி இருக்க ஊர்மி என்ற விக்கி உன் போனுக்கு என்னாச்சு ஊர்மி என்றான்.
என் போனை அம்மா பறிச்சு வச்சுட்டாங்க விக்கி. இது என் அத்தை பையனோட நம்பர் நீங்க போன் எதுவும் பண்ண வேண்டாம் நானே பண்ணுறேன் என்றவளிடம் எனக்கு என் அப்பா கட்டாயப் படுத்தி என்கேஜ்மென்ட் பண்ணிட்டாரு என்றிட என்ன சொல்லுற விக்கி அப்போ நம்ம காதல் என்று அழுதவளிடம் ஊர்மி ப்ளீஸ் அழாதே என் உயிரே போனாலும் நான் உன்னைத் தவிர இன்னொரு பொண்ணை கல்யாணம் பண்ணிக்க மாட்டேன் என்றான் விக்னேஷ்.
விக்கி உன்னை நான் நம்புறேன். நீ வேற பொண்ணை கல்யாணம் பண்ணிக்கிட்டால் சத்தியமா நான் செத்துருவேன் என்றவள் போனை வைத்திட விக்னேஷிற்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை.
ஒரு புறம் இந்த நிச்சியம் நடக்கவில்லைன்னா செத்துருவேன்னு மிரட்டுற அப்பா, மறு புறம் அவன் இல்லைன்னா செத்துருவேன்னு சொல்லுற காதலி அவனால் நிச்சயம் அப்பா பார்த்த பொண்ணை கல்யாணம் பண்ணிக்க முடியாது. அதனால் இப்போ எந்த பிரச்சனையும் பண்ண வேண்டாம் இந்த பொண்ணும் சென்னையில் தானே வேலை பார்க்கிறாள் அங்கே சென்று இவளிடம் பேசிக் கொள்ளலாம் என்று நினைத்து மௌனமாகினான் விக்னேஷ்.
என்ன ஊர்மிளா பேசிட்டியா இனி கிளம்பலாமா என்ற நரேனிடம் சரிங்க அத்தான் என்றவள் முகத்தில் வருத்தத்துடன் வர அதான் பேசிட்டியே அப்பறம் என்னம்மா என்றான் நரேன்.
உங்க கிட்ட சொல்வதற்கு என்ன அத்தான் விக்னேஷிற்கு கல்யாணம் நிச்சயமாகிருச்சாம் என்றவளது கண்கள் கலங்கி கண்ணீர் வழிந்தோடிட அவளது கண்ணீரைத் துடைத்தவன் அத்தை வராங்க என்றான்.
என்ன நரேன் இரண்டு பேரும் என்ன பண்ணிட்டு இருக்கிங்க இன்னும் வராமல் உதய், ரோனி கூட வீட்டிற்கே வந்துட்டாங்க என்ற சுசீலாவிடம் என்ன அத்தை இது நானும், என் வருங்கால மனைவியும் எங்க எதிர்காலத்தை பற்றி பேசிட்டு இருக்கிறோம் லேட்டாகிருச்சுனு பறக்கிறிங்க என்றான் நரேன்.
அவனது காதை திருகிய சுசீலா முதலில் உன் வருங்கால மனைவி படிச்சு முடிக்கட்டும் இரண்டு பேரும் வந்து சேருங்க என்று விட்டு சுசீலா சென்று விட ஸாரி ஊர்மிளா உன்னோட பர்மிசன் இல்லாமல் நான் உன்னை என் வருங்கால மனைவினு சொல்லிட்டேன் என்றான். இட்ஸ் ஓகே அத்தான் என்றவளிடம் அப்போ உனக்கு நான் ஓகே தானா. நாம இரண்டு பேரும் கல்யாணம் பண்ணிக்கிறதில் உனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை போல என்று கண்ணடித்திட அவனை முறைத்தவள் நான் என் விக்கியை தவிர வேற யாரையும் கல்யாணம் பண்ணிக்க மாட்டேன் என்று கோபமாக கத்தினாள் ஊர்மிளா.
யப்பா சாமி என்னம்மா கோவம் வருது உனக்கு அம்மா தாயே நான் உன்னை கிண்டல் தான் பண்ணினேன் வா கிளம்பலாம் என்ற நரேன் அவளுடன் உதய் , ரோனி இருந்த காரில் அமர்ந்தான்.
என்ன அத்தான் இரண்டு நாளா என் தங்கச்சியை கடத்திட்டு எங்கேயோ பறந்துட்டிங்க போல என்றான் நரேன். ஆமாம் அப்படியே கடத்திட்டாலும் உன் தொங்கச்சிக்கு நான் புருசன் ஆனால் என்னை விட அவளோட மாமியார் இரண்டு பேரு மேல தான் பாசம் அதிகம்.
என் அத்தை என்ன பண்ணாங்களோ, சின்ன அத்தை ஏது பண்ணாங்களோன்னு ஒரே புலம்பல் என்று சிரித்தான் உதய். மாமா என்று அவனது தோள்பட்டையில் குத்தியவளிடம் ஏய் ஸ்டியரிங் பிடிக்க விடுடி நீ பாட்டுக்கு அடிச்சுட்டு இருக்க என்றவன் சிரித்திட ஒழுங்கா ரோட்டை பார்த்து வண்டியை மட்டும் ஓட்டுங்க என்னை ஓட்டாதிங்க என்றாள் வெரோனிகா.
விக்கி என்னடா ஒரே யோசனையா இருக்க என்ற சௌமியாவிடம் சௌமி நீ என்னோட தங்கச்சி தானே எனக்காக நீயாவது அப்பா கிட்ட பேச மாட்டியா. உன்னோட காதலை ஏற்றுக் கொண்ட அப்பாவால ஏன் என்னோட காதலை ஏற்றுக் கொள்ள முடியவில்லை என்றான் விக்னேஷ்.
விக்கி முதலில் நீ கொஞ்சம் புரிஞ்சுக்கோ. அப்பா ஒன்றும் உன்னோட காதலை எதிர்க்கவில்லை அவரு உனக்காக பொண்ணு கேட்க வராத காரணம் ஊர்மிளா வீட்டில் அம்மாவுக்கு நடந்த மாதிரி ஒரு அவமானம் அவருக்கும் நடந்திருமோங்கிற பயம் தான். அதை புரிஞ்சுக்கோ.
அவங்க வீட்டில் சம்மதம் வந்திருந்தால் இந்நேரம் உனக்கும், ஊர்மிளாவிற்கும் தான் நிச்சயதார்த்தம் நடந்திருக்கும். அதை புரிஞ்சுக்கோ. தப்பு ஊர்மிளாகிட்ட தான் இருக்கு. அவள்அவசரம் படாமல் பொறுமையா உங்க விசயத்தை வீட்டில் பேசி இருந்தால் எந்த பிரச்சனையும் வந்திருக்காது.
உன்னால பாதிக்கப் பட்ட அந்த வெரோனிகா கூடக் குறைய பேசிட்டாள் சரி அதற்காக அவளை அடிச்சு அவங்க அண்ணிங்க, பெரியம்மானு எல்லோரையும் எடுத்தெறிஞ்சு பேசி உன் மேல ஒரு தப்பான அபிப்ராயத்தை உண்டு பண்ணிட்டாள். அதோட விளைவு தான் இப்போ உன்னோட காதல் கேள்விக்குறியா நிற்க காரணம்.
நீ முதலில் ஊர்மிளா வீட்டாளுங்களை சமாதானம் பண்ணி உங்க காதலுக்கு சம்மதிக்க வை. அப்பறம் அப்பா கிட்ட நானே உனக்காக பேசுகிறேன் என்ற சௌமியாவிடம் ரொம்ப தாங்க்ஸ் சௌமி என்றான் விக்னேஷ்.
விக்கி நீ என்னோட அண்ணன் உனக்காக இது கூட நான் செய்ய மாட்டேனா என்ன என்ற சௌமியா அப்பறம் முக்கியமான விசயம் இந்தப் பொண்ணு வினித்ரா கிட்ட நீ உன்னோட காதலைப் பற்றி பேசு. அவள் எந்த வகையிலும் உன்னால பாதிக்கப் பட்டு விடக் கூடாது என்றாள் சௌமியா.
சரி சௌமி நான் பார்த்துக்கிறேன் என்றவன் தன் தங்கையின் கைகளைப் பற்றி ரொம்ப ,ரொம்ப நன்றி என்றான். டேய் லூசு நீ என்னோட அண்ணன்டா எதற்கு நன்றிலாம் சொல்லிட்டு என்றவள் சரி வா சாப்பிட என்று அவனை அழைத்துச் சென்றாள்.
என்னம்மா பயணம் எல்லாம் எப்படி என்ற பூங்கொடியிடம் எங்களை பார்க்கிறிங்க தானே எப்படி வாடி, வதங்கி வந்திருக்கிறோம்னு என்ற வெரோனிகா முதலில் பசிக்குது சோற்றைப் போடுங்கம்மா என்றாள். ஏன்டி சோத்து மூட்டை எப்போ பாரு சோறு, சோறு, சோறு தானா என்ற தேன்மொழியைப் பார்த்து சோறு அதானே எல்லாம். என்ன அண்ணி இந்த வெரோனிகாவோட தாரக மந்திரமே சோறு தானே என்று சிரித்தாள் வெரோனிகா.
சரி, சரி வா வந்து கொட்டிக்கோ என்ற தேன்மொழி மற்ற அனைவரையும் வரவேற்று எல்லோரையும் நன்கு உபசரித்தாள். மகள் தன் குடும்பத்துடன் வந்திருப்பதால் பூங்கொடி, கதிரேசன் இருவரும் தோப்பு வீட்டிலிருந்து பெரிய வீட்டிற்கு வந்து சேர்ந்தனர்.
சரவணனும், கனிமொழியும் மட்டும் அந்த வீட்டின் பின் புறம் தங்களுக்கு கொடுத்த போர்சனில் தங்கி இருந்தனர்.
அத்தியாயம் 133
என்ன யோசனை ரோனி என்ற நரேனிடம் ஒன்றும் இல்லை அண்ணா என்றாள் வெரோனிகா. உன் கிட்ட நான் கொஞ்சம் பேசணும் பேசலாமா என்றவனிடம் பேசலாமே அண்ணா என்ற வெரோனிகா அவனை தோட்டத்திற்கு அழைத்துச் சென்றாள்.
இந்த இடம் ரொம்ப அழகா இருக்கு ரோனிமா பாரேன் எத்தனை பூ. இந்த மாதிரி வித விதமா பூக்கள் வாசனையை சுவாசிக்கும் பொழுது மனசு நிச்சயம் அமைதியாகும் என்ற நரேனிடம் புன்னகையை பதிலாக கொடுத்தாள் வெரோனிகா.
சொல்லுங்க அண்ணா ஏதோ பேசனும்னு சொன்னிங்க என்றவளிடம் ஆமாம் ரோனி என்றவன் ஊர்மிளாவை பற்றி தான் பேசனும் பேசலாமா என்றான். உங்க கிட்ட என்னால மறுக்க முடியாது பேசுங்கண்ணா என்றாள் வெரோனிகா.
ஊர்மிளாவோட நடவடிக்கை பற்றி என்ன நினைக்கிற என்றவனிடம் அந்த விக்னேஷ் விசயம் தவிர ஊர்மிளா ரொம்ப நல்ல பொண்ணு. விக்னேஷ் மேல அவள் அளவுக்கு அதிகமா அன்பு வச்சுருக்கிறாள். அவனை யாரும் எதுவும் தப்பா சொல்லிட்டால் போச்சு அவங்க யாரா இருந்தாலும் தூக்கி எறிஞ்சு பேச ஆரம்பிக்கிறாள். அது தான் அவளோட ப்ராப்லம். காதல் தப்பு இல்லை ஆனால் வெறித்தனமான ஒரு அன்பு நிச்சயம் நல்லதுனு எனக்கு தோன்றவில்லை.
அவளோட அன்புக்கு விக்னேஷ் தகுதியானவனான்னு எனக்கு தெரியலை என்றாள் வெரோனிகா. அவன் தப்பானவன்னு சொல்லுறியாம்மா என்ற நரேனிடம் இல்லை அப்படி இல்லை அவன் முன்னே மாதிரி இல்லை நிறையவே மாறி இருக்கிறான். அது நடிப்பா கூட இருக்கலாம்னு எனக்கு தோனுது என்றாள் வெரோனிகா. நடிப்பா இல்லாத பட்சத்தில் என்ற நரேனிடம் நடிப்பா இல்லைனா சந்தோசம் தான் அண்ணா.
ஆனால் ஊர்மிளாவோட வாழ்க்கையை நல்ல விதமா யார் கூட அமைத்துக் கொடுக்கனும்னு முடிவு எடுக்க வேண்டிய உரிமை சின்ன மாமா, சின்ன அத்தை ரெண்டு பேருக்கும் மட்டும் தான் இருக்கு. அதனால நான் எந்த கருத்தும் சொல்ல முடியாத சூழ்நிலையில் இருக்கிறேன் என்றாள் வெரோனிகா.
உன் கிட்ட ஒரு விசயம் சொல்லனும் என்ற நரேன் நேற்று சடங்கு வீட்டில் யாருக்கும் தெரியாமல் நடந்த நிகழ்வு ஒன்றை வெரோனிகாவிடம் கூறிட அதைக் கேட்டவள் என்ன அண்ணா சொல்லுறிங்க நிஜம்தானா என்றாள் வெரோனிகா.
ஆமாம் ரோனி இப்போ என்ன பண்ணுறது என்றவனிடம் இத்தனை பெரிய விசயத்தை எப்படி அண்ணா வீட்டில் சொல்ல முடியும். அத்தை, மாமா எல்லோரும் எப்படி தாங்குவாங்க என்றவள் அண்ணா நாம யோசிச்சு ஒரு முடிவு எடுக்கலாம் அண்ணா என்றாள். சரிம்மா என்ற நரேனும் சென்று விட்டான்.
என்ன ரோனி ஏன் ஒரு மாதிரி இருக்க என்ற உதய்யிடம் நல்லாதானே மாமா இருக்கிறேன் என்றாள் வெரோனிகா. சரி அப்போ ஏன் இன்னும் கிளம்பாமல் எதையோ யோசிச்சுட்டு இருக்க என்றவனிடம் எங்கே கிளம்ப என்றாள் வெரோனிகா.
நம்ம வீட்டுக்கு தான் ரோனி அம்மா, அப்பா, சித்தப்பா , சித்தி எல்லோரும் கிளம்பிட்டாங்க நீயும், நானும் தான் இன்னும் கிளம்பாமல் இருக்கிறோம் என்ற உதய்யிடம் ஐந்து நிமிசம் மாமா என்றவள் கடகடவென கிளம்ப ஆரம்பித்தாள்.
என்ன சொல்லுற வினி என்ற பவித்ராவிடம் அந்த மாப்பிள்ளை விக்னேஷ் என் கிட்ட என்னம்மோ பேசணுமாம் வெளியே மீட் பண்ணலாமான்னு கேட்கிறான் என்றாள் வினித்ரா.
நிச்சயதார்த்தம் முடிஞ்சுருச்சு தானே அப்பறம் என்ன தயக்கம் என்ற பவித்ராவிடம் தயக்கம் தான் எனக்கு அவனை கல்யாணம் பண்ணிக்க விருப்பமே இல்லை. அப்பாவோட பேச்சை மீற முடியலை என்ன பண்ணட்டும் என்ற வினித்ரா அழுது கொண்டிருக்க நான் ஏன்டி உதய்யை பார்த்தேன். அவனை ஏன் எனக்கு பிடிச்சது. அவன் இன்னொருத்தி புருசன்னு தெரிஞ்சும் ஏன் என்னால அவனை நினைக்காமல் இருக்க முடியலை. நான் பண்ணுறது தப்புனு என் புத்திக்கு உரைக்குது ஆனால் பாழாய் போன இந்த மனசு அவனை மறக்க முடியாமல் தவிக்குது என்று அழுதாள் வினித்ரா.
வினி ஒரு விசயம் உன் கிட்ட நான் சொல்லவா என்ற பவித்ராவிடம் என்ன பவி என்றாள் வினித்ரா. இப்போ கூட உதய் உனக்கு கிடைக்க நிறைய சான்ஸ் இருக்கு என்ற பவித்ராவை கேள்வியாக பார்த்தாள் வினித்ரா.
என்ன பார்க்கிற அந்த வெரோனிகா பொண்ணால ஒரு குழந்தையை சுமந்து பெத்துக்க முடியாது என்ற பவித்ராவை அதிர்ச்சியுடன் பார்த்த வினித்ரா என்னடி சொல்லுற என்றான்.
ஆமாம் அந்தப் பொண்ணுக்கு கொஞ்ச நாள் முன்னே ஒரு ஆக்சிடென்ட் நடந்துச்சு உனக்கு தெரியுமா என்ற பவித்ராவிடம் இல்லைடி எனக்கு தெரியாது என்றாள் வினித்ரா.
அவள் கர்ப்பமா இருந்தாள். அந்த டைம்ல ஒரு ராபெரி கும்பல் அவளோட நகையை பறிக்க அவள் வயிற்றில் ஆழமா கத்தியை வச்சு குத்திட்டானுங்க. அந்த கத்திக் குத்து கொஞ்சம் ஆழமா அடி வயிற்றில் இறங்கி அவளோட குழந்தை அபார்சன் ஆகிருச்சு. அதோட அவளோட கர்ப்பப்பை கொஞ்சம் பாதிச்சுருக்கு. அவளால இனி எப்பவுமே ஒரு குழந்தைக்கு தாயாக முடியாது என்றாள் பவித்ரா.
ச்சே கடவுளுக்கு கொஞ்சம் கூட கருணையே இல்லை பவி என்ற வினித்ராவைப் பார்த்த பவித்ரா அந்தக் கடவுள் உனக்காக கூட அந்த வெரோனிகாவுக்கு இப்படி ஒரு இழப்பை கொடுத்திருக்கலாமே என்றாள்.
முட்டாள் மாதிரி பேசாதே பவி என்ற வினித்ராவிடம் முட்டாள்தனம் இல்லை வினி எதார்த்தம். அந்தப் பொண்ணுக்கு இருக்கிற பிரச்சனை அவங்க வீட்டிற்கு தெரிந்தால் நிச்சயம் உதய்க்கு இன்னொரு கல்யாணம் பண்ணி வைக்கிறதைப் பற்றி பேச்சு வரும். எந்த அப்பா, அம்மாவும் தன் மகனுக்கு வாரிசு இல்லாமல் போறதை விரும்ப மாட்டாங்க அதனால உனக்குனு ஒரு வாய்ப்பு நிச்சயம் இருக்கும் என்றாள் பவித்ரா.
தப்பு பவித்ரா அந்தப் பொண்ணு வெரோனிகா நிஜமாவே ரொம்ப நல்ல பொண்ணு. அது மட்டும் இல்லை உதய் அந்தப் பொண்ணு மேல எவ்வளவு லவ் வச்சுருக்கிறார்னு உனக்கு தெரியாது. அவங்க அப்பா, அம்மா கட்டாயப் படுத்தினாலும் உதய் சம்மதிக்க மாட்டாரு என்ற வினித்ரா அது மட்டும் இல்லைடி இன்னொரு பொண்ணோட வாழ்க்கையை தட்டிப் பறிக்கிற அளவுக்கு வினித்ரா அத்தனை மலிவான பிறவி இல்லை என்றாள்.
நான் உன்னை மலிவான பிறவின்னு சொல்லவில்லை வினி இப்படி ஒரு வாய்ப்பு கிடைத்து உன்னோட காதல் உன் கை சேர்ந்தால் நல்லா இருக்கும்னு தான் சொன்னேன் என்றாள் பவித்ரா.
காதல் எப்படி கை கூடனுமோ அப்படித் தான் கை கூடனும் பவி. இன்னொருத்தரோட காதலை அழிச்சுட்டு தான் என்னோட காதல் கை சேரணுமா சொல்லு. உதய்யை மறக்க முடியலை தான் அதற்காக வெரோனிகாவோட வாழ்க்கையை அழிக்கிற அளவுக்கு நான் மோசமானவள் இல்லை. அந்தப் பொண்ணோட பிரச்சனை தீரணும்னு நான் மனசார வேண்டிக்குவேன் என்ற வினித்ரா கிளம்ப ஆரம்பித்தாள்.
என்ன விக்கி எங்கே கிளம்பிட்ட என்ற சௌமியாவிடம் வினித்ராவை பார்க்க தான் சௌமி என்ற விக்னேஷ் கிளம்ப எத்தனிக்க எதற்கு என்றார் சகுந்தலா. எதற்குனா என்ன அர்த்தம் அம்மா என்ற விக்னேஷை முறைத்த சகுந்தலா என்ன விக்கி வினித்ராகிட்ட போயி அந்த ஊர்மிளா பற்றி சொல்லி கல்யாணத்தை நிறுத்த போறியா என்றார்.
அம்மா நீங்கள் என்னை புரிஞ்சுக்கோங்க என்ற விக்னேஷிடம் என்னடா புரிஞ்சுக்கோனும் அந்த இளமாறன் நம்மளை அசிங்கப் படுத்திருக்கிறார். அவரோட பொண்ணை இந்த வீட்டிற்கு மருமகளா கூட்டிட்டு வரேன்னு சொல்லிட்டு இருக்கிறாய் என்று கோபமாக கத்தினார் சகுந்தலா.
அம்மா தயவு செய்து என்னை புரிஞ்சுக்கோங்க ஊர்மிளா இல்லைன்னா நான் செத்துருவேன் என்ற விக்னேஷின் கன்னத்தில் பளார், பளாரென அறைந்த சகுந்தலா என்னடா சொன்ன அவள் இல்லைன்னா நீ செத்துருவியா அப்போ உன்னைப் பெத்த என்னைப் பற்றி நீ யோசிக்கவே மாட்ட , எனக்கு நடந்த அவமானம் உன் கண்ணுக்கு தெரியலை அப்படித் தானே என்று பொரிய ஆரம்பித்து விட அம்மா புரிஞ்சுக்கோங்க ஊர்மிளா மட்டும் தான் நம்ம வீட்டுக்கு மருமகளா வர வேண்டும். அது தான் நியாயம் என்ற விக்னேஷிடம் என்னடா நியாயம். அவளை காதல் தானே பண்ணின ஏதோ கல்யாணம் பண்ணி குடும்பம் நடத்தின பொண்ணை நான் வெளியே விரட்டினது போல பேசுற என்று கத்தினார் சகுந்தலா.
அம்மா புரிஞ்சுக்கோங்க ஊர்மிளா வயிற்றில் என்னோட குழந்தை வளருது என்று கத்தினான் விக்னேஷ். அவன் சொன்னதைக் கேட்டு அதிர்ந்து நின்றார் சகுந்தலா.
அத்தியாயம் 134
என்னடா சொல்லுற என்ற விக்னேஷிடம் ஆமாம் அம்மா என் குழந்தை ஊர்மிளா வயிற்றில் வளருது என்று விக்னேஷ் கூறிட சகுந்தலா அப்படியே ஆடிப் போய் விட்டார்.
பொறுக்கி, பொறுக்கி என்னடா காரியம் பண்ணி வச்சுருக்க என்று மகனை அடி , அடியென வெளுத்தவர் என் வயிற்றில் போயி இப்படி ஒரு பொறுக்கி மகனா பிறந்திருக்கே என்று அழ ஆரம்பிக்க என்னாச்சு என்று வந்தனர் லாவண்யா, கௌதம் இருவரும்.
ஒன்றும் இல்லை என்று சகுந்தலா கண்களைத் துடைத்துக் கொண்டு எழப் போக என்ன ஒன்றும் இல்லை நீங்கள் விக்கியை அடிச்சதை பார்த்துட்டு தானே வந்தேன் என்றாள் லாவண்யா. என் மகனை நான் அடிக்கிறேன், கொல்லுறேன் உனக்கு என்னடி வந்துச்சு.
கௌதமை அடிக்க தான் எனக்கு உரிமை இல்லை உன்னோட புருசன். விக்கி என்னோட மகன் தானே அவனோட பொண்டாட்டி வரும் வரை அவனை நான் என்ன பண்ணினாலும் நீ கேள்வி கேட்க அவசியம் இல்லை என்றார் சகுந்தலா.
உங்க கிட்ட எல்லாம் பேச வந்தேன் பாரு என்னை செருப்பால அடிக்கனும் என்று சொல்லி விட்டு சென்றாள் லாவண்யா. என்னம்மா ஏன் அவள் கிட்ட இவ்வளவு கடுமையா நடந்துக்கிறிங்க என்ற கௌதமிடம் வாடா உன் பொண்டாட்டியை எதுனாலும் சொல்லிட்டா உடனே சப்போர்ட்டுக்கு வந்து நின்னுருவ என்று மகனையும் வசை பாட ஆரம்பிக்க தப்பு தான் அம்மா உங்க கிட்ட நான் கேள்வி கேட்டது தப்பு தான் என்று கௌதமும் சென்று விட்டான்.
அவர்கள் சென்றதை உறுதி படுத்தி விட்டு விக்னேஷின் அருகில் வந்த சகுந்தலா அவனை மேலும், மேலும் அடித்தவர் ஏற்கனவே உன் பெயரில் அந்த ஊர்மிளா குடும்பத்தில் நல்ல மரியாதை இருந்துச்சு இப்போ காரித் துப்புவாங்கடா என்ன பிள்ளை பெத்து வளர்த்துருக்கிங்கனு.
உன் அப்பாவுக்கு தெரிந்தால் தூக்கு போட்டு செத்துருவாருடா இன்னும் ஒரு மாசத்தில் உனக்கு கல்யாணம் பண்ண நிச்சயம் பண்ணிட்டு வந்திருக்கோம். நீ என்னடான்னா இப்படி ஒரு கேவலத்தை பண்ணிட்டு வந்திருக்க என்று புலம்பித் தள்ளினார் சகுந்தலா.
அம்மா அப்பா கிட்ட பேசுங்கம்மா என்ற சௌமியாவிடம் என்னடி பேச சொல்லுற அந்த ஊர்மிளா வீட்டில் காரித் துப்ப மாட்டாங்களா என்ற சகுந்தலா விக்னேஷை அடித்தார். அம்மா சும்மா அதையே சொல்லாதிங்க ஊர்மிளா ஒன்றும் உலகம் தெரியாத குழந்தை இல்லை. அவளோட விருப்பம் இல்லாமலா விக்கி அவள் கிட்ட இப்படி நடந்திருப்பான். அப்போ அவங்க பொண்ணும் தானே தப்பு. இதில் விக்கியை மட்டும் குறை சொல்வது எந்த வகையில் நியாயம் என்ற சௌமியாவிடம் அவள் குழந்தை இல்லை தான் ஆனால் பதினெட்டு வயசுப் பொண்ணு இவன் அப்படியா இந்த எருமைக்கு இருபத்தேழு வயசாச்சு. இவனை விட ரொம்ப சின்னப் பொண்ணு அவள் அது உன் கண்ணுக்கு தெரியலையா என்ற சகுந்தலா ஏன்டா ஏன் இப்படி எல்லோருடைய நிம்மதியையும் கெடுக்கிற என்று மகனை வசை பாட ஆரம்பித்தார்.
போ போயித் தொலை அந்தப் பொண்ணு வினித்ராகிட்ட போயி பேசு. அவளோட காலில் விழு மன்னிப்பு கேளு. அவளாகவே இந்த கல்யாணத்தை நிறுத்துறபடி எதுனாலும் பண்ணு.
உன்னைப் பெத்த பாவத்திற்கு அந்த ஊர்மிளா குடும்பத்திடம் உன் அம்மா நான் இன்னமும் அசிங்கப் பட்டாவது இந்த கல்யாணத்தை நடத்தி வைக்கிறேன் என்றார் சகுந்தலா.
என்ன சொல்லுற கனி நிஜமாவா என்ற சரவணனிடம் ஆமாம் மச்சான் என்ற கனிமொழி தான் கர்ப்பமாக இருக்கும் செய்தியை கணவனிடம் கூறிட எப்படிடி தெரியும் என்றான் சரவணன். ஊருக்கு போன இடத்தில் டெஸ்ட் பண்ணி பார்த்தேன் மச்சான் இரண்டு கோடு காட்டுனுச்சு அதான் ஹாஸ்பிடல் போகலாம்னு உன்னை சீக்கிரமே வர வச்சேன் என்ற கனிமொழியை தூக்கி சுத்த ஆரம்பித்தான் சரவணன்.
என்ன அண்ணா அண்ணியை இப்படி சுத்துற என்று வந்த வெரோனிகாவைக் கண்டதும் மனைவியை இறக்கி விட்டவன் ரோனிம்மா எப்படா வந்த என்றான் சரவணன். இப்போ தான் அண்ணா நீ அண்ணியை தூக்கி சுத்தும் போதே வந்துட்டோம் என்று சிரித்த தங்கையைப் பார்த்து அசடு வழிந்தவன் வாங்க மச்சான் என்று உதய்யை வரவேற்றான். அவனும் புன்னகையுடன் தலையசைத்தான்.
என்னன்னா அண்ணியை ஏன் தூக்கி சுத்துனாய்னு கேட்டேன் பதிலே சொல்லவில்லை என்ற வெரோனிகாவிடம் ரோனிம்மா நீ அத்தையாகப் போற என்றதும் நான் தான் ஆல்ரெடி அத்தை ஆகிட்டேனே நம்ம ரூபனுக்கு என்றவளின் தலையில் கொட்டிய உதய் மக்கு உன் அண்ணன் அப்பா ஆகப் போறாரு போல என்றான்.
அச்சோ ஸாரி மாமா என்றவள் கனிமொழியின் அருகில் சென்று என்ன கனி நிஜமா என்றவளைக் கட்டிக் கொண்டாள் கனிமொழி. ஐஐ ஜாலி, ஜாலி மாமா நான் சீக்கிரமே அத்தையாகப் போறேன் என்று குதித்தவள் தன் அண்ணி கனிமொழியின் நெற்றியில் முத்தமிட்டாள்.
அப்போ நான் சரியா தான் ஸ்வீட் வாங்கிட்டு வந்திருக்கிறேன் என்றவள் மாமா அந்த பாக்ஸை கொடுங்க என்று கணவனிடம் ஸ்வீட் பாக்ஸை வாங்கி அதில் இருந்து இனிப்பை எடுத்து தன் அண்ணிக்கு ஊட்டி விட்டாள் வெரோனிகா.
கனி நீ கவலையே படாதே என் மருமகன் பிறக்கிற நேரம் அத்தை, மாமா இரண்டு பேரும் மட்டும் இல்லை பெரியப்பா, பெரியம்மாவும் உங்களை ஏற்றுக் கொள்ளுவாங்க. நம்ம வீட்டில் தான் உனக்கு வளைகாப்பு நடக்கும். நான் தான் முதன் முதலில் உனக்கு வளையல் போடுவேன் என்றவள் சிரித்திட ஐயோ எனக்கு சந்தோசத்தில் கையும் ஓடவில்லை, காலும் ஓடவீல்லையே என்று துள்ளிக் குதித்தாள் வெரோனிகா.
ரோனி கொஞ்சம் பொறுமையா இரு என்ற உதய்யிடம் முடியலை மாமா நான் அவ்வளவு சந்தோசமா இருக்கிறேன் என்றவள் இருங்க நான் இப்பவே அம்மாகிட்ட சொல்லிட்டு வரேன் என்றவள் போனை எடுத்துக் கொண்டு தன் தாயிடம் பேச ஓடினாள்.
சரவணன், கனிமொழி இருவருக்கும் வாழ்த்து சொன்ன உதய் சிறு பிள்ளை போல் ஓடும் மனைவியை பார்த்து புன்னகைத்தான்.
என்னடி நீ குழந்தையா இப்படி குதிக்கிற என்ற உதய்யிடம் மாமா கனிக்கு குழந்தை வரப் போகுது. அதை நினைக்கும் பொழுதே என் உடம்பெல்லாம் புது இரத்தம் பாய்வது போல அவ்வளவு சந்தோசமா இருக்கு. அவள் குழந்தையை நான் தான் முதலில் தூக்குவேன் , கொஞ்சுவேன் என்று உற்சாகமாக கூறியவள் திடீரென மௌனமாகினாள்.
என்னாச்சு ரோனி திடீர்னு ஏன் மௌனமாகிட்ட என்ற உதயச்சந்திரனிடம் நம்ம குழந்தை கலையாமல் இருந்தால் இந்நேரம் எனக்கு ஐந்தாவது மாதம் நடந்திருக்கும்ல மாமா. நம்ம பாப்பாவுக்கு கை, கால் , முகம் எல்லாம் வந்திருக்கும் தானே என்றவள் அழ ஆரம்பிக்க ரோனி என்ன இது குழந்தை மாதிரி அழுதுட்டு இருக்க.
இப்போ என்ன நமக்கு திரும்ப குழந்தை பிறக்காதா என்ன நீ முதலில் டிகிரி முடி அப்பறம் மாமாவும், ரோனியும் குழந்தை பெத்துக்கலாம் என்றவன் மனைவியை அணைத்துக் கொண்டான். அவனது கண்கள் கலங்கினாலும் மனைஙி அவளின் முன் அழக் கூடாது என்று தன் கண்ணீரைக் கட்டுப் படுத்திக் கொண்டான்.
அவளோட அண்ணிக்கு குழந்தை பிறக்கப் போறதையே ஏதோ அவளுக்கே பிறக்கப் போறது போல கொண்டாடுற என் ரோனிக்கு ஏன் இத்தனை பெரிய தண்டனை. அவள் கிட்ட எப்படி சொல்லுவேன் இனி நமக்கு குழந்தை பிறக்க வாய்ப்பே இல்லைன்னு என்று கடவுளை நொந்து கொண்டான் உதயச்சந்திரன்.
என்ன சொல்லுற அர்ச்சு என்ற விவேக்கிடம் நம்ம குழந்தை விவேக் என்று கணவனின் கையை தன் வயிற்றில் வைத்தாள் அர்ச்சனா. அவளது வயிற்றில் முத்தமிட்டவன் நம்ம உயிர் என்று மனைவியை அணைத்துக் கொண்டான்.
தனலட்சுமி தன் மருமகளை திருஷ்டி கழித்து சுற்றி வைத்தவர் அவளை தாங்கு தாங்கென்று தாங்கினார். சும்மாவே அவளை தாங்குவார் இப்பொழுது சொல்லவா வேண்டும். அர்ச்சனா தனது அம்மா மலர்கொடியிடம் விசயத்தை சொல்ல அவ்வளவு தான் அங்கு வீடே சந்தோசத்தில் குதித்தது.
ஒரு பக்கம் சுசீலா மகளுக்கு பலகாரம் செய்ய ஆரம்பித்தார். வசுந்தரா தன் அண்ணன் மகளுக்கு ஊறுகாய் செய்ய ஆரம்பித்தார். அர்ச்சனாவிற்கு என்னவெல்லாம் பிடிக்குமோ அத்தனையும் செய்ய ஆரம்பித்தனர் மலர்கொடி, சுசீலா, வசுந்தரா மூவரும்.
என்ன அத்தை வீடே ஒரே குஷியா இருக்கு என்ன விசயம் என்ற வெரோனிகாவிடம் ரோனி நீ அத்தையாகப் போறடி என்ற சுசீலா மருமகளின் வாயில் இனிப்பை ஊட்டி விட்டு அர்ச்சனா கர்ப்பமாக இருக்கும் செய்தியை கூறிட வெரோனிகா சந்தோசமாக நிஜமாவா என்று குதித்தபடி திரும்பிட ஊர்மிளா வாயை பொத்திக் கொண்டு தன்னறைக்குள் ஓடினாள்.
அத்தியாயம் 135
என்னடி பண்ணிட்டு இருக்க என்ற வெரோனிகாவிடம் பார்த்தால் தெரியலையா உன்னால தான் எல்லாமே. இப்போ என் விக்கிக்கு கல்யாணமே நடக்கப் போகுது என்னோட சாவுக்கு நீ தான் காரணம் ரோனி என்ற ஊர்மிளா தன் கையில் தூக்கமாத்திரை பாட்டிலை வைத்திருந்தாள்.
நான் தான் அன்னைக்கே சொன்னேனே ரோனி நான் கர்ப்பமா இருக்கேன்னு என்னை நம்பாமல் வீட்டில் யாருக்கும் தெரியாமல் டாக்டர்கிட்ட கூட அழைச்சுட்டு போன அப்பவும் கன்பர்ம் தானே என்ற ஊர்மிளாவிடம் ஊர்மி நீ ஏன் புரிஞ்சுக்காமல் பேசிட்டு இருக்க என்னால என்ன பண்ண முடியும்.
நானே எதுவும் புரியாமல் உன்னோட விசயத்தை வெளியிலும் சொல்ல முடியாமல் தவிச்சுட்டு இருக்கேன். என்னை ஏன்டி நீ வேற படுத்துற ஆனால், ஊனால் செத்துருவேன் , செத்துருவேன்னு மிரட்டுற நீ செத்துட்டால் எல்லாம் சரியாகிருமா பண்ணக் கூடாத தப்பை எல்லாம் நீ பண்ணிட்டு இப்போ என்னை வதைக்கிற என்றாள் வெரோனிகா.
தெரியாமல் ஏதோ ஒரு வேகத்தில் என்ற ஊர்மிளாவின் கன்னத்தில் பளாரென அறைந்தவள் வினித்ரா மேடம் பாவம்டி அவங்க அப்பா, அம்மா இந்த கல்யாணத்தை நல்லபடியா நடத்தி கொடுங்கனு சந்துரு மாமா கிட்ட ஹெல்ப் கேட்டிருக்காங்க எனக்கு இப்போ என்ன பண்ணுறதுனே புரியலை என்றாள் வெரோனிகா.
ரோனி என்னோட நிலைமை உனக்கு புரியலையா என்று ஊர்மிளா ஏதேதோ கூறிட இப்போ என்னடி பண்ணனும் என்ற வெரோனிகாவிடம் நீ தான் எனக்கும், விக்கிக்கும் கல்யாணம் பண்ணி வைக்கனும் என்றாள் ஊர்மிளா.
என்னால முடியாது ஊர்மி என்ற வெரோனிகாவிடம் முடியாதுனா என்ன அர்த்தம் ரோனி நீ தானே என்னோட அண்ணி என்றவளிடம் வாயில் நல்லா அசிங்கமா வருதுடி வெண்ணெய் பண்ணுற தப்பை எல்லாம் பண்ணிட்டு அண்ணி, பன்னினு பொறுக்கி , பொறுக்கி அவனை பொறுக்கினு சொன்னதுக்கு என்னை அடிச்சியே இப்போ அவன் பண்ணி வச்சுருக்கிற இந்த வேலைக்கு பெயர் என்ன என்ற வெரோனிகாவை மௌனமாக பார்த்தாள் ஊர்மிளா.
ரோனி என்று அவள் ஏதோ கூற வர என்னால ஒன்றும் பண்ண முடியாது ஊர்மி. சந்துரு மாமா வேற போன் பண்ணிட்டே இருக்காரு ஸ்டேஜுக்கு போகனும்னு என்ற வெரோனிகா சென்று விட்டாள்.
எங்கேடி போன என்ற உதய்யிடம் ரெஸ்ட்ரூம் மாமா என்றவள் ஏதோ யோசனையுடனே இருந்திட வினித்ராவின் அருகில் விக்னேஷ் ஏதோ யோசனையுடனே நின்றிருந்தான். அவனது கண்கள் ஊர்மிளாவையே தேடிக் கொண்டு இருந்தது.
ஊர்மிளாவும் கண்ணீர் வழிய அவனை பார்த்தபடி ஓரத்தில் நின்றிருந்தாள். வினித்ரா தன் தாய், தந்தையின் சந்தோசத்திற்காக தானும் மனதை சமாதானம் செய்து கொண்டு மேடையில் விக்னேஷின் அருகில் நின்றிருந்தாள்.
சௌமியா தன் கணவனுடன் அமர்ந்திருக்க சகுந்தலா அவளை அழைத்தார். என்னம்மா என்றவளிடம் இந்தக் கல்யாணம் நிற்குமான்னு தெரியலைடி இந்த விக்னேஷ் பொறுக்கி என்னடான்னா மேடை வரை வந்துட்டான். பெண் பாவம் பொல்லாததுடி என்று புலம்ப ஆரம்பித்தார் சகுந்தலா.
என்னம்மா பண்ணுறது அன்னைக்கு அந்தப் பொண்ணை பார்க்கப் போனப்ப அவள் அவங்க அப்பா, அம்மா வந்துட்டாங்கனு இவனை பார்க்க வரவில்லை. அப்பறம் என்னோட கல்யாண வேலையில் அவனும் பிஸியா இருந்துட்டான் என்ற சௌமியா கடவுள் அவன் தலையில் என்ன எழுதிருக்கோ து படி நடக்கட்டும் என்றாள்.
என்ன ரோனி என் கிட்ட என்னவோ சொல்ல வர ஆனால் சொல்லாமல் திரும்பிடுற என்ன விசயம் என்ற உதயச்சந்திரனிடம் மாமா அது வந்து என்று இழுத்தவள் ஊர்மிளா என்று சொன்னதுமே திருந்த மாட்டியாடி அன்னைக்கே சொன்னேன்ல விக்கிக்கும், வினித்ராவுக்கும் தான் கல்யாணம் நடக்கனும். அதை விட்டுட்டு ஊர்மிளா பாவம் அது, இதுனுட்டு என்ன பாவம் அவள். அப்பறம் அவளோட விசயம் எதிலுமே நீ தலையிடக் கூடாதுன்னு சொல்லி இருக்கேன். மறந்திராதே ஜாக்கிரதை என்றவனை பாவமாக பார்த்தாள் வெரோனிகா.
நீங்கள் ஏன் மாமா வினித்ரா, விக்கி கல்யாணத்தில் இத்தனை ஆர்வமா இருக்கிங்க என்ற உதய்யிடம் எல்லாம் உன்னால தான்டி. அன்னைக்கு நீ என்ன பேசின வினித்ரா மேடம் என்னை விரும்புறேன்னு சொன்னாங்கனு சொன்னதுக்கு. ரோனி இப்பவும் சொல்கிறேன் அன்னைக்கு நீ பேசினது என் மேல வச்சுருக்கிற காதல்னால தான் ஆனால் என்னை நீ அப்படி சந்தேகப் படுற மாதிரி பேசினது பெரிய தப்பு என்றான் உதய். மாமா நிஜமா விளையாட்டுக்கு என்றவளிடம் எது ரோனி விளையாட்டு என்ற உதய் சரி அமைதியா தூங்கு என்று விட்டு படுத்துக் கொண்டான் உதய்.
மாமா நான் சொல்ல வரும் விசயத்தை புரிஞ்சுக்கோங்க நம்ம ஊர்மிளா கர்ப்பமா இருக்கிறாள் என்றாள் வெரோனிகா. என்ன சொல்லுற ரோனி என்றவனிடம் மாமா அர்ச்சனா அண்ணி கர்ப்பமா இருக்கேன்னு சொல்லி வீட்டுக்கு வந்தாங்களே அப்போ என்று நடந்த நிகழ்வுகளை கூற ஆரம்பித்தாள் வெரோனிகா.
என்ன சாப்பிட்ட என்ற வெரோனிகாவிடம் சாப்பிட்டது ஒத்துக்காமல் இல்லை ரோனி என்ற ஊர்மிளா அவளிடம் ப்ரகனன்சி கிட் ஒன்றை நீட்டிட அதில் இரண்டு கோடுகள் காட்டவும் பதறியவள் அவளை பளார், பளாரென அறைந்தாள்.
அவளை ஒரு மருத்துவரிடம் அழைத்துச் சென்றாள். அவரும் ஊர்மிளா கர்ப்பமாக இருப்பதை உறுதி செய்திட வெரோனிகாவிற்கு எதுவுமே செய்ய தோன்றவில்லை. அப்பா, அம்மாகிட்ட இந்த விசயத்தை சொன்னினா நான் செத்துருவேன் ரோனி என்று மிரட்ட ஆரம்பித்தாள் ஊர்மிளா.
அந்த நேரத்தில் தான் உதய் வினித்ராவின் திருமணம் பற்றி கூறியவன் வினித்ரா அவனை காதலிப்பதாக சொன்ன விசயத்தையும் கூறினான். ஏற்கனவே ஊர்மிளாவால் எக்கச்சக்க டென்சனில் இருந்த வெரோனிகா உதய் சொன்ன விசயத்தில் கடுப்பாகி அவனுடன் சண்டையிட ஆரம்பித்தாள்.
நீங்களும், அவங்களும் ப்ரண்ட்ஸ்னு தானே மாமா நான் நினைச்சேன் ஆனால் உங்களுக்குள்ள இப்படி லவ் ட்ராக் ஓடுதா என்று ஆரம்பித்தவள் ஏதேதோ பேச ஆரம்பிக்க ஒரு கட்டத்தில் அவளது வார்த்தை தடித்திட உதய் அவளது கன்னத்தில் ஓங்கி அறைந்து விட்டான்.
அதன் பிறகே தான் என்ன பேசினோம் என்பதை உணர்ந்தவள் ஸாரி மாமா என்றிட என் கிட்ட இனிமேல் பேசாதடி என்றவன் கோபமாக சென்று விட வெரோனிகா அமர்ந்து அழ ஆரம்பித்தாள்.
ஒரு வாரம் அவன் அவளிடம் முகம் கொடுத்து கூட பேசவில்லை. அவளும் எவ்வளவோ மன்னிப்பு கேட்டும் அவன் மனம் இறங்கவில்லை.
ஒரு வழியாக இன்று தான் பேசவே ஆரம்பித்தான் ஒரு வழியாக ஊர்மிளாவின் விசயத்தையும், அதை சொல்லாமல் மறைத்த காரணத்தையும் கூறினாள் வெரோனிகா.
மாமா நிஜமா அன்னைக்கு ஊர்மளா மேல இருந்த கோபத்தை எப்படி காட்டுறதுன்னு தெரியாமல் உங்க கிட்ட காட்டிட்டேன் என்னை மன்னிச்சுருங்க மாமா என்று கெஞ்சினாள் வெரோனிகா.
சரி ரோனி விடு இப்போ என்ன பண்ணுறது என்ற உதய்யிடம் வினித்ரா மேடம் கிட்ட பேசுங்க மாமா என்றவளிடம் என்ன பேச சொல்லுற ரோனி. விடிந்தால் கல்யாணம் இப்போ போயி அவங்க மனசை உடைக்க நான் விரும்பவில்லை என்றான் உதய்.
மாமா அப்போ ஊர்மிளாவோட நிலைமை என்ற வெரோனிகாவிடம் அவளோட கர்ப்பத்தை கலைச்சுறலாம் என்றான் உதய்.
மாமா என்ன சொல்லுறிங்க என்று அதிர்ந்தவளிடம் வேற என்ன பண்ணுறது ரோனி என்று அவன் ஏதோ சொல்ல வர நம்ம பிள்ளை கலைஞ்சு போனது விபத்து மாமா. ஆனால் தெரிஞ்சே ஊர்மியோட கர்ப்பத்தை கலைக்கிறது பாவம் மாமா . அந்த பாவத்தை நீங்கள் செய்ய வேண்டாம் மாமா. என்ன பாவம் செய்தோமோ நம்ம பிள்ளை இல்லாமல் போச்சு என்ற வெரோனிகாவிடம் பைத்தியக்காரி மாதிரி பேசாதே ரோனி.
ஊர்மிளாவை விக்கிக்கு கல்யாணம் பண்ணி வைக்கிற எண்ணத்தை மறந்திடு நான் திரும்பவும் சொல்கிறேன் வினித்ரா மேடம் விசயத்தில் உன்னை நான் மன்னிச்சுட்டேன். ஆனால் ஊர்மிளா, விக்கி தான் சேரனும்னு உன்னால இந்த கல்யாணத்தில் சிக்கல் வந்துச்சுனா நான் என்ன பண்ணுவேன்னு எனக்கே தெரியாது என்றான் உதய்.
பேசாமல் தூங்கு காலையில் கல்யாணம் என்றவன் படுத்துக்கொள்ள அவளும் மௌனமாக படுத்து உறங்க முயன்றாள்.
புரண்டு, புரண்டு படுத்தவளால் உறங்கவே முடியவில்லை. உறக்கம் வராமல் தவித்தவள் தன் கணவனை பார்த்திட அவளோ ஆழ்ந்த தூக்கத்தில் இருந்தான். பொழுது போக வில்லை என்று எழுந்தவள் எங்கோ சென்று விட்டாள்.
உறக்கத்தில் கைகளை தூலாவியவன் மனைவி இல்லாமல் போய் விட கண்விழித்தான். குளியலறையில் தேடிட அங்கும் அவள் இல்லை. எங்கே போயிருப்பாள் இவள் என்ற உதய் திரும்பிட கதவை திறந்து கொண்டு உள்ளே வந்தவள் விழித்திருக்கும் அவனைக் கண்டு அதிர்ந்து போனாள்
அத்தியாயம் 136
எங்கே போன ரோனி என்றவனிடம் தூக்கம் வரவில்லை மாமா அதான் கொஞ்ச நேரம் பால்கணியில் நின்னுட்டு இருந்தேன் என்றவள் நீங்க சொன்ன விசயம் தான் சரி மாமா. ஆனால் குழந்தையை மட்டும் கலைக்க வேண்டாம் மாமா என்றாள் வெரோனிகா.
குழந்தையை கலைக்காமல் என்றவனிடம் பேசாமல் நாம ஏன் அந்தக் குழந்தையை நம்ம குழந்தையா வளர்க்க கூடாது. ஊர்மிளாவை ஹாஸ்டலுக்கு அனுப்புறோம்னு சொல்லிட்டு இங்கேயே வேற வீடு பார்த்து வச்சுரலாம். நான் கர்ப்பமா இருக்கிறேன்னு வீட்டில் சொல்லிடலாம். நான் கர்ப்பம்னு எல்லோரும் நம்பட்டும். குழந்தை பிறந்ததும் அதை நம்ம குழந்தைன்னு சொல்லிட்டாள் யாருக்கும் ஊர்மிளா மேல சந்தேகம் வராதே என்ற வெரோனிகாவை முறைத்தவன் என் அறிவாளிப் பொண்டாட்டி நீ சொல்லுற லாஜிக் எல்லாம் கதைக்கு தான் செட்டாகும். ரியல் லைப்ல செட்டாவாது அந்தக் குழந்தை விசயத்தை அப்பறம் பார்க்கலாம் நீ தூங்கு.
ரோனி நான் ஒரு விசயம் சொன்னால் அதில் ஆயிரம் அர்த்தம் இருக்கும் அதை புரிஞ்சுக்கோ. உன் குட்டி மூளையில் கண்டதையும் யோசிச்சுட்டு இருக்காமல் ரிலாக்ஸா இரு என்றவன் மனைவியின் நெற்றியில் முத்தமிட்டு அவளை அணைத்தபடி உறங்கினான்.
காலையில் கண் விழித்த உதய் பார்த்திட குழந்தை போல உறங்கிக் கொண்டிருந்தாள் வெரோனிகா. அவளது நெற்றியில் முத்தமிட்டவன் எழுந்து அறையை விட்டு வெளியே வர வீடே பரபரப்பாக இருந்தது.
என்னாச்சும்மா ஏன் இப்படி ஆளாளுக்கு ஒரு திசையில் இருக்கிங்க என்ற உதய்யிடம் ரோனி எங்கேடா என்றார் மலர்கொடி. அவள் தூங்கிட்டு இருக்கிறாள் என்றவனிடம் என் பொண்ணை ஓடிப் போக வச்சுட்டு மகாராணி தூங்கிட்டு இருக்காங்களோ என்றார் சுசீலா.
என்ன சொல்லுறிங்க சித்தி என்ற உதய்யிடம் சுசீலா ஒரு கடிதத்தை காட்டினார். என்ன இது என்று வாங்கியவனிடம் ஊர்மிளா லெட்டர் எழுதி வச்சுட்டு அந்த விக்னேஷ் கூட ஓடிப் போயிட்டாள் இல்லை உன் பொண்டாட்டி தான் அனுப்பி வச்சுட்டாள் என்ற சுசீலா அழ ஆரம்பித்தார்.
அன்புள்ள அம்மா, அப்பாவிற்கு
என்னை மன்னிச்சுருங்க என்னால விக்கி இல்லாமல் வாழ முடியாது. அவரை இன்னொருத்திக்கு தானம் பண்ணிட்டு வாழ நினைத்தேன். அப்போ தான் ரோனி என் கிட்ட வந்து எனக்கு விக்கி கிடைக்க ஒரு யோசனை சொன்னாள். நான் கர்ப்பமா இருக்கிறேன்னு சொன்னால் நீங்களே எனக்கும், விக்கிக்கும் கல்யாணம் பண்ணி வைக்கிறேன்னு சொல்லுவிங்கனு சொன்னாள். என்னோட கேரக்டரை அசிங்கப் படுத்தி தான் எனக்கும் , விக்கிக்கும் கல்யாணம் நடக்கனும்னு இல்லையே அதனால அவள் கிட்ட அந்த யோசனையை நான் மறுத்துட்டேன். விக்கியை மறக்கலாம்னு ரொம்பவே நினைத்தேன் ஆனால் முடியவில்லை. அப்பொழுது தான் ரோனி எனக்கு சப்போர்ட் பண்ணி இந்த கல்யாணத்தை நிறுத்துறேன்னு சொன்னாள். நானும் அவள் பேச்சை நம்பி தான் அமைதியாவே இருந்தேன் ஆனால் எல்லாம் கை மீறிப் போச்சு என்னால எல்லோர் சம்மதமும் வாங்கி உன்னோட கல்யாணத்தை நடத்தி வைக்க முடியாது அதனால நீ விக்னேஷ் கூட போயிருன்னு சொன்னாள். எனக்கும் வேற வழி தெரியவில்லை. விக்னேஷை என்னால மறக்க முடியாது அதனால நான் அவர் கூட போகிறேன். தாங்க்ஸ் ரோனி உன்னால தான் என்னோட விக்கி எனக்கு கிடைக்கப் போறாரு. ஆனால் என்னை மன்னிச்சுரு உன்னோட யோசனையை நான் கேட்காததிற்கு.
இப்படிக்கு
ஊர்மிளா.
என்று முடிந்திருந்தது அந்தக் கடிதம். அம்மா எனக்கு சந்தேகமா இருக்கு ரோனி ஏன் ஊர்மிளாவை கர்ப்பமா இருக்கேனு சொல்லுனு சொல்லனும் என்ற உதய்யிடம் அதான் தெளிவா எழுதி இருக்கிறாளே அப்போ தான் விக்கியை கல்யாணம் பண்ணி வைப்பாங்கனு என்ற சுசீலா அவளுக்கு நான் என்னடா பாவம் பண்ணினேன். என் பொண்ணை விட அதிக அன்போட அவளை நடத்தினதால தான் இப்படி ஒரு காரியம் பண்ணினாளா என்ற சுசீலா அழ ஆரம்பித்தார்.
உதய் சென்று ஊர்மிளாவின் அறையை செக் பண்ணிட அங்கு இன்னொரு கடிதம் கிடைத்தது.
அன்புள்ள உதய் அண்ணாவுக்கு,
எனக்கு தெரியும் நீங்கள் அந்த கடிதத்தை நம்ப மாட்டிங்கனு ரோனி முன்னே மாதிரி இல்லை அண்ணா. அவளுக்குள்ள இப்படி ஒரு பழிவாங்குற குணம் இருக்கும்னு நானே எதிர்பார்க்கவில்லை. எனக்கு விக்கி கிடைக்கனும்னு அவள் என்னை அனுப்பி வைக்கவில்லை. இந்த கல்யாணம் நிற்கனும் வினித்ரா மேடம் அவமானம் படனும் அது தான் அவளோட எண்ணம். வினித்ரா மேடம் உங்களை காதலிக்கிறதா சொன்னாங்கனு நீங்க சொன்னதால உங்களுக்கும், அவளுக்கும் இடையே பயங்கர சண்டையாமே. அதனால அவங்களை எப்படியாவது பழி வாங்கனும்னு துடிச்சுட்டு இருந்தாள் ரோனி. அதற்கான சந்தர்ப்பமா தான் என்னை விக்கி கூட அனுப்பி வைக்க முயற்சி பண்ணுகிறாள். அண்ணா நானும் சுயநலவாதி தான் எனக்கு என்னோட காதல் கை கூடினால் சந்தோசம்னு ரோனியோட இந்த திட்டத்தில் இணைய வேண்டியதா போச்சு . என்னை மன்னிச்சுருங்க அண்ணா என்று முடிந்திருந்தது அந்தக் கடிதம்.
உதய்க்கு எதுவும் புரியவில்லை. உதய்க்கும், ரோனிக்கும் நடந்த சண்டை அவர்கள் இருவரைத் தவிர வேறு யாருக்குமே தெரியாது. எப்படி ஊர்மிளாவுக்கு தெரியும் என்று யோசித்தவன் தன்னறைக்கு சென்றிட உறக்கம் கலைந்து எழுந்த வெரோனிகா குட்மோர்னிங் மாமா என்றிட அவளது கன்னத்தில் பளார் பளாரென அறைந்தான் உதயச்சந்திரன்.
என்னடி பண்ணி வச்சுருக்க என்றவன் அவளது முகத்தில் கடிதத்தை விட்டெறிய அதை எடுத்து படித்தாள் வெரோனிகா. மாமா என்ன இது எனக்கு ஒன்றுமே புரியலை என்ற வெரோனிகாவிடம் என்னது உனக்கு ஒன்றுமே புரியலையா நமக்குள்ள சண்டை வந்த விசயம் எப்படி ஊர்மிக்கு தெரியும் என்றான் உதய்.
சத்தியமா நான் சொல்லவில்லை மாமா என்ற வெரோனிகாவின் கன்னத்தில் பளாரென அறைந்தவன் பொய் சொல்லாதடி பாவி அப்படி என்னடி பெரிய பொசசிவ் என்றவன் அன்னைக்கு கோபத்தில் தப்பா பேசிட்டனு நினைச்சேன் ஆனால் நீ எவ்வளவு கிரிமினலா திட்டம் போட்டிருக்க.
ராத்திரி கூட குழந்தையை வளர்க்கலாம் அது , இதுன்னு என்னன்னவோ கதை சொன்னியேடி எல்லாம் பொய்யா என்னை முட்டாளாக்க தான் அதை எல்லாம் சொன்னியா என்றவனிடம் மாமா என்னை நம்புங்க நான் அப்படி எல்லாம் என்று ஏதோ சொல்ல வந்தவளை முறைத்தவனது மொபைல் போன் ஒலித்திட அதை அட்டன் செய்தவன் சொல்லு அர்ச்சனா என்றிட அர்ச்சனா சொன்ன தகவலில் அதிர்ந்து போனவன் மனைவியை கோபமாக பார்த்து கொன்னுட்டியேடி பாவி இரண்டு உயிரை கொன்னுட்டியே என்றிட மாமா என்ன சொல்லுறிங்க என்றாள் வெரோனிகா.
விக்கி ஓடிப் போயி கல்யாணம் நின்று போன அவமானம் தாங்க முடியாமல் வினித்ராவோட அப்பா தூக்குல தொங்கிட்டாராம். அவர் இறந்து போனதை கண்ணால பார்த்த ஹார்ட் பேசன்ட்டான வினித்ராவோட அம்மாவுக்கு ஹார்ட் அட்டாக் வந்து செத்துட்டாங்களாம் என்ற உதய் கொன்னுட்டியே ரோனி இப்படி ஒரு வக்கிரமான ஒரு புத்தியை உன் கிட்ட சத்தியமா எதிர்பார்க்கவில்லைடி என்றவன் அவசர அவசரமாக மண்டபத்திற்கு சென்றான்.
மாமா நானும் வரேன் என்றவளை முறைத்தவன் சென்றிட அவளும் பின்னாலையே ஒரு ஆட்டோ பிடித்து சென்றாள். அங்கு இரண்டு உயிரற்ற சடலங்களையும் வைத்துக் கொண்டு வினித்ரா அழுது கொண்டிருந்தாள். பவித்ரா தன் தோழிக்கு ஆறுதலாக அவளை அணைத்திருக்க அங்கு வந்த உதய்யைப் பார்த்து அழ ஆரம்பித்தாள் வினித்ரா.
என்ன சார் இதெல்லாம் விக்னேஷ் , ஊர்மிளாவை காதலிச்சாரா ஏன் சார் நீங்கள் கூட என்கிட்ட சொல்லவில்லை என்றவளிடம் என்ன பதில் சொல்வதென்றே தெரியாமல் தவித்தவன் தன் மனைவியை கனல் பொங்கும் கண்ணோடு பார்த்தான்.
இந்தப் பாவி இன்னைக்கு தான் ஓடனுமாடி அந்தப் பொண்ணு வினித்ரா பாவம் அப்பா, அம்மா இரண்டு பேரையும் பறிகொடுத்துட்டு என்று புலம்பிய சகுந்தலாவிடம் அம்மா கொஞ்சம் அமைதியா இரு என்று தன் தாயை அடக்கினாள் சௌமியா.
சந்திரமோகன் அவமானம் தாங்காமல் அப்படியே அமர்ந்திருக்க வினித்ராவின் உறவினர்கள் அவரை மொய்த்து கொண்டிருக்க விவேக், கௌதம் இருவரும் அனைவரையும் ஒதுக்கி விட படாதபாடு பட்டனர்.
வெரோனிகா அப்படியே உறைந்து நிற்க அவளை முறைத்தபடி இழுத்துச் சென்றான் உதய்.
அவளை வீட்டில் விட்டவன் சென்று வினித்ராவின் அப்பா, அம்மாவின் இறுதி சடங்கில் நின்று அவளுக்கு உதவினான். வினித்ராவின் பெற்றோரின் உடல் அடக்கம் செய்யப் பட்டது. அழுது, அழுது கரைந்த வினித்ராவை பார்க்க பார்க்க தன் மனைவியின் மீது ஆத்திரம் தான் வந்தது.
வீட்டிலோ மொத்த குடும்பமும் எதிரியாக நின்றிட வெரோனிகா கண்ணீரில் கரைந்தாள். என்னடி இப்படி அழுதுட்டு இருக்க என்ற மலர்கொடியிடம் அத்தை சத்தியம் அத்தை. என் சந்துரு மாமா மேல சத்தியம் நான் எந்த தப்பும் பண்ணவில்லை என்ற வெரோனிகாவின் கண்ணீரைத் துடைத்த மலர்கொடி எனக்கு தெரியும் ரோனி. நீ எந்த தப்பும் பண்ணி இருக்க மாட்ட ஆனால் வசமா மாட்டி விட்டுட்டு ஓடிருக்காள் என்றார்.
இப்போ என்ன பண்ண அத்தை சந்துரு மாமா கூட எண்ணை நம்பவில்லையே என்ற வெரோனிகாவிடம் அவன் இப்போ கோபத்தில் இருக்கான்டி. ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு ரோனி எல்லாம் அடங்கட்டும் அவனே யோசிப்பான். ஊர்மிளா வேணும்னே உன்னை சிக்க வச்சுருக்கா அத்தை உனக்கு கீழே சப்போர்ட் பண்ணவில்லைன்னு நினைக்காதடி சுசீலா என் கூடப் பிறந்தவள். அவள் பிள்ளையை தொலைச்சுட்டு நிற்கிறாள் என்னால என்ன பண்ண முடியும் எனக்கு அவளும் வேண்டுமே என்றவரிடம் இல்லை அத்தை என்னை நீங்கள் நம்புறிங்கள் தானே அதுவே போதும் என்றவள் அழுது கொண்டே அவரது தோளில் சாய்ந்தாள்.
வினித்ராவை அப்படியே விட்டுச் செல்ல மனம் இல்லாமல் இருந்தவன் பவித்ராவிடம் சொல்லி விட்டு வீட்டிற்கு வந்தான்.
இங்கு விக்னேஷின் வீட்டிலும் போர்க்களம் தான். சந்திரமோகன் விக்னேஷின் போட்டோ, உடமைகள் எல்லாம் போட்டு உடைத்து வீட்டையே ரணகளம் படுத்திவிட்டார்.
வீட்டிற்கு வந்தவன் நேராக தன்னறைக்கு செல்ல மாமா என்று ஓடி வந்தவளை கை நீட்டி தடுத்தான் உதய். இனிமேல் என்னை அப்படி கூப்பிடாதே என்றவனிடம் மாமா என்ன சொல்லுறிங்க என்றவளைப் பார்த்து நீ பண்ணின காரியத்தால ஒரு உயிர் இல்லைடி இரண்டு உயிர் போச்சு.
அந்த அப்பா, அம்மா எத்தனை வலியோட செத்துருப்பாங்க அப்படி என்ன ரோனி உனக்கு வினித்ரா மேல வன்மம் . அப்படி விக்னேஷ் கூட ஊர்மிளாவை அனுப்பி வைக்கிறது தான் உன் எண்ணம்னா ஏன்டி இன்னைக்கு அனுப்பி வச்ச ஒரு வாரமோ, பத்து நாளுக்கோ முன்னமே அனுப்பி வச்சுருக்கலாமேடி என்றான் உதய்.
ஐய்யோ, மாமா சத்தியமா எனக்கு அந்த மாதிரி எண்ணம்மே இல்லை மாமா. இப்போ கூட நான் அவளை அனுப்பவில்லை என்றவளிடம் பொய் சொல்லாதே ரோனி என்று கத்தினான் உதய்.
அத்தியாயம் 137
நான் ஏன் மாமா பொய் சொல்லனும் என்ற வெரோனிகாவிடம் அதான் உன்னோட எண்ணம் நல்லாவே தெரியுதே என்றவன் நம்ம இரண்டு பேருக்கும் நடந்த சண்டை எப்படி ஊர்மிளாவுக்கு தெரிஞ்சது அதை சொல்லு என்றான் உதய். சத்தியமா நான் சொல்லவே இல்லை மாமா என்றவளிடம் அப்போ நைட் எங்கே போன என்றான் உதய்.
சத்தியமா தூக்கம் வரவில்லை மாமா அதான் கொஞ்ச நேரம் மொட்டை மாடியில் இருக்கலாம்னு போனேன். மாமா உங்க மேல சத்தியம் மாமா ஊர்மிளா ஓடிப் போனதுக்கும் , எனக்கும் எந்த சம்மந்தமும் இல்லை அவள் கர்ப்பமா இருந்தாள் மாமா. அந்த டாக்டர் கூட கன்பர்ம் பண்ணிட்டு சொன்னாங்க மாமா என்னை நீங்க நம்ப வேண்டாம் அந்த டாக்டர் நிவேதாவை நம்பலாமே என்றவள் என் கூட வாங்க மாமா என்று அவனை அழைத்துச் சென்றாள்.
அங்கு சென்ற வெரோனிகா டாக்டர் என்னை ஞாபகம் இருக்கிறதா என்ற வெரோனிகாவிடம் உங்களை எப்படிம்மா மறக்க முடியும் ஆமாம் உங்க சிஸ்டர்இன்லாவுக்கு கல்யாணம் முடிஞ்சுருச்சா. நான் கொடுத்த போலி ரிப்போர்ட் உபயோகமா இருந்துச்சா என்றிட என்ன சொல்லுறிங்க டாக்டர் என்றான் உதய்.
ஆமாம் இந்தப் பொண்ணு அவங்க நாத்தனாரை அழைச்சுட்டு வந்தாங்க. அவங்க நாத்தனாருக்கு புட் பாய்சன் அதனால வாமிட் பண்ணினாங்க. இவங்க தான் அவங்க ஒரு பையனை லவ் பண்ணுறதால அவங்க கர்ப்பமா இருக்கிற மாதிரி ஒரு போலி ரிப்போர்ட் ரெடி பண்ணி தரச் சொல்லி என் காலில் விழுந்து அழுதாங்க. அந்தப் பொண்ணை அவங்க லவ்வர் கூட சேர்த்து வைக்கனும்னு கெஞ்சவும் வேற வழி இல்லாமல் போலி ரிப்போர்ட் கொடுக்க வேண்டியதா போச்சு என்றார் மருத்துவர் நிவேதா.
டாக்டர் ஏன் பொய் சொல்லுறிங்க நீங்க ஊர்மிளாவை செக் பண்ணிட்டு அவள் கர்ப்பமா இருக்கிறாள்னு தானே என்கிட்ட சொன்னிங்க என்ற வெரோனிகாவிடம் என்னம்மா நீ இப்படி பொய் சொல்லுற எனக்கு என்ன அவசியம் கர்ப்பமே இல்லாத ஒரு பொண்ணை கர்ப்பம்னு சொல்ல இது தான் உனக்கு எல்லாம் பாவம் பட்டு இறக்கம் காட்டினேன் பாரு எல்லாம் என் புத்தியை செருப்பால அடிக்கனும் என்று அவளை திட்டி விட்டு விரட்டினார் மருத்துவர் நிவேதா.
என்ன வெரோனிகா இதெல்லாம் இந்த ஹாஸ்பிடல் வரும் பொழுது கூட என் ரோனி தப்பு பண்ணி இருக்க மாட்டாள்னு ஒரு சின்ன நம்பிக்கை இருந்துச்சு ஆனால் இப்போ உனக்கு இப்படி கூட கேவலமா நடந்துக்க தெரியுமா ரோனி என்றான் உதய் கோபமாக.
மாமா என்னை சுற்றி ஏதோ சதி வலை பிண்ணப் பட்டிருக்கு மாமா என்னை நம்புங்க என்ற வெரோனிகா எவ்வளவோ சொல்லியும் உதய் அவள் சொல்வதை காதில் வாங்காமல் கோபமாக அவளை இழுத்துக் கொண்டு வீட்டிற்கு சென்றான்.
என்ன பண்ணுற சுசீலா என்ற மலர்கொடியிடம் என்ன பண்ணுறேன்னா இனியும் என்னால இங்கே இருக்க முடியாதுக்கா என்றார் சுசீலா. இங்கே இருக்க முடியாதுன்னா என்னடி அர்த்தம் என்ற மலர்கொடியிடம் உங்க மருமகளோட முகத்தில் விழிச்சுகிட்டு என்னால முடியாதுக்கா என்னையும், என் புருசன், பிள்ளை , மருமகளை விட்டுருங்க நாங்கள் எங்கேயாவது போகிறோம் என்றார் சுசீலா.
நீங்க ஏன் போகனும் சுசி தப்பு பண்ணினது வெரோனிகா தானே அப்போ அந்தப் பொண்ணு தான் போகனும் என்றார் நெடுமாறன். என்னங்க என்ன பேசுறிங்க அவள் நம்ம வீட்டிற்கு வாழ வந்த பொண்ணு என்ற மலர்கொடியை முறைத்த நெடுமாறன் நம்ம குடும்பத்தோட நிம்மதியையே வேரோடு கருவறுக்க வந்த பொண்ணுனு சொல்லு அன்னைக்கு அந்த வினோதா பொண்ணு ஓடிப் போனப்பவே நாம அந்த ஊரில் இருந்து வந்திருக்கனும். சின்னப் பொண்ணுனு நம்பி இந்தப் பொண்ணை நம்ம உதய்க்கு கல்யாணம் பண்ணி அழைச்சுட்டு வந்தது எத்தனை பெரிய தப்புன்னு இப்போ தான் புரியுது.
இந்த சின்ன வயசுல எவ்வளவு பொய், பித்தலாட்டம் நம்ம ஊர்மிளா கர்ப்பமா இருக்கிறாள்னு டாக்டர் கிட்ட போலி ரிப்போர்ட் வாங்கி கொடுக்கிற அளவுக்கு கேவலமா நடந்திருக்கிறாள். நாளைக்கு வேற எதுக்காவது இன்னும் மோசமா எதுனாலும் பண்ண மாட்டாள்னு என்ன நிச்சயம் என்ற நெடுமாறன் தன் மகனிடம் திரும்பி உதய் இந்தப் பொண்ணு இனி நம்ம வீட்டில் இருக்க கூடாது என்றார்.
மாமா சத்தியமா நான் எந்த தப்பும் பண்ணவில்லை மாமா என்ற வெரோனிகாவிடம் இதோ பாரும்மா உன் கிட்ட பேச எனக்கு எதுவும் இல்லை என்ற நெடுமாறன் கோபமாக திரும்பிட ஆச்சி, பிரகாஷ் மாமா, இந்து அக்கா நீங்களாவது என்னை நம்ப மாட்டிங்களா என்ற வெரோனிகாவிடம் எப்படி அண்ணி நம்புறது எல்லா சாட்சியும் உங்களுக்கு எதிரா தானே இருக்கு.
உண்மையிலே உங்களுக்கு நம்ம ஊர்மியை அந்த விக்னேஷிற்கு கல்யாணம் பண்ணி கொடுக்கனும்னு எண்ணம் இருந்திருந்தால் அதை என் கிட்ட சொல்லி இருக்கலாமே அண்ணி. நான் என் அப்பா, அம்மாவை சம்மதிக்க வச்சுருப்பேனே இப்படி நம்ம குடும்பத்தையே அசிங்கப் படுத்திட்டு அவளை ஓடிப் போக வச்சுட்டிங்களே என்ற பிரகாஷ் இனி உங்க முகத்தை பார்க்கவே எனக்கு ஒரு மாதிரியா இருக்கு அண்ணி என்றான்.
நீயா ரோனி இந்த மாதிரி. உன்னோட கேவலமான எண்ணத்தால அங்கே இரண்டு உயிரே போயிருச்சு உன் கிட்ட இதை நான் எதிர்பார்க்கவில்லை என்றாள் இந்திரஜா. உலகம் தெரியாத பொண்ணுனு நினைச்சேன் ஆனால் நீ உலக மகா புத்திசாலின்னு நிரூபிச்சுட்ட என்ற இந்திரஜா அவளை அறுவறுப்புடன் பார்த்திட வெரோனிகா கூனி குறுகிப் போனாள்.
அவங்க அப்பா, அம்மாவை வரச் சொல்லி இந்தப் பொண்ணை அழைச்சுட்டு போகச் சொல்லு உதய் என்ற நெடுமாறனிடம் அது தப்பு அப்பா என்றான் உதய். அப்போ நாங்க குடும்பத்தோட வீட்டை விட்டு போகிறோம் என்றார் சுசீலா.
சித்தி நீங்கள் யாரும் எங்கேயும் போக வேண்டாம். வெரோனிகா இனி இந்த வீட்டில் இருக்க மாட்டாள். அதற்கு நான் பொறுப்பு என்றவன் உன்னோட, என்னோட திங்க்ஸ் எல்லாத்தையும் எடுத்து வை வெரோனிகா என்றான் உதய்.
மாமா நான் எந்த தப்பும் பண்ணவில்லை மாமா என்னை வீட்டை விட்டு அனுப்பிறாதிங்க மாமா அத்தை சத்தியமா சொல்கிறேன் அத்தை ஊர்மிளா ஓடிப் போனதுக்கும் , எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று சுசீலாவின் காலில் விழுந்து கதறினாள் வெரோனிகா.
எப்படி ரோனி உன்னை நம்ப சொல்லுற ஊர்மிளா சொன்னதை விடு அவள் பொய் சொல்கிறாள்னே வச்சுக்கலாம் ஆனால் அந்த டாக்டர் அவருக்கென்ன தலையெழுத்து என்ற சுசீலா இதோ பாரு உன்னை நான் இங்கே இருந்து போகச் சொல்லவில்லை. நான் தான் போகிறேன்னு சொன்னேன் என்ற சுசீலா அவளது கையை உதறி விட என் கூட வா என்று அவளை இழுத்தான் உதய்.
நீ எங்கே போற உதய் என்ற நெடுமாறனிடம் நானும், இவளும் இனி நம்ம அவுட் ஹவுஸில் தங்கிக்கிறோம் என்றான் உதய். அங்கே ஏன்டா என்ற மலர்கொடியிடம் எனக்கு வேற வழி தெரியவில்லை அம்மா அவளை ஒரேடியா அத்து விடுற அளவுக்கு உன் பிள்ளை கொடூரமானவன் இல்லை. ஆனாலும் அவள் ஒருத்தியால நம்ம குடும்பம் உடைய நான் விரும்பவில்லை என்ற உதய் என்னை மன்னிச்சுருங்க என்றான்.
மலர்கொடி மௌனமாகிட கண்ணீரோடு தன் கணவன் இழுத்த இழுப்பிற்கு இசைந்து அந்த வீட்டை விட்டு வெளியேறினாள் வெரோனிகா. பெயம்மா என்று அவளது காலைக் கட்டிக் கொண்ட உதயநிலாவை பிடித்து இழுத்தாள் இந்திரஜா . அந்த பெரிய வீட்டை கசந்த புன்னகையுடன் பார்த்தவள் அவுட் ஹவுஸிற்குள் வந்தாள்.
மாமா இப்போவாச்சும் நான் சொல்லுறதைக் கேளுங்க மாமா என்னைப் பற்றி உங்களுக்கு தெரியாதா நான் போயி அப்படி பண்ணுவேனா என்ற வெரோனிகாவை கோபமாக பார்த்தவன் அதான்டி வலிக்குது. என்னோட ரோனி உலகம் தெரியாத குழந்தை, அவளுக்கு இந்த குடும்பம் தவிர வேற எதுவுமே தெரியாதுன்னு முட்டாள் மாதிரி நம்பிட்டு இருந்திருக்கேன் ஆனால் நீ எவ்வளவு பெரிய கிரிமினல் மைண்ட் ரோனி உனக்கு என்றான் உதய்.
மாமா சத்தியமா என்றவளிடம் போதும்டி இனி சத்தியம் சத்தியம்னு பொய் சத்தியம் பண்ணி, பண்ணி என்னை சாவடிக்கனும்னு நினைக்கிறியா என்றதும் மாமா என்றவள் அப்படியே நிற்க இனி என்னை மாமான்னு கூப்பிடாதே வெரோனிகா அப்படி கூப்பிட்டு , கூப்பிட்டு என்னையும், என் குடும்பத்தையும் நீ ஏமாத்தினது போதும். இனிமேல் ஊருக்கு மட்டும் தான் நீயும், நானும் புருசன் , பொண்டாட்டி. இந்த வீட்டிற்குள்ள நீ யாரோ, நான் யாரோ தான். இனி உன் கிட்ட ஒரு வார்த்தை கூட எப்பவும் பேச மாட்டேன்.
இனி உன் முகத்தை கூட நான் பார்க்க விரும்பவில்லை என்ற உதய்யை ஆற்றாமையுடன் பார்த்தவள் அழுது தவித்திட அந்த இடத்தை விட்டு வெளியேறினான் உதய்.
அப்படி நான் என்ன ஊர்மி துரோகம் பண்ணினேன் உனக்கு நல்லது பண்ணனும்னு தானடி யோசிச்சேன் இப்படி என்னோட வாழ்க்கையையே அழிச்சுட்டியே என்று நினைத்து அழுது கொண்டிருந்தாள் வெரோனிகா.
அழுது, அழுது கரைந்தவள் அப்படியே உறங்கிப் போனாள். தனது வாழ்க்கையே இருண்டு போனதை நினைத்து , நினைத்து மருகினாள் வெரோனிகா. உறங்கும் பொழுது கூட அவளது கண்களில் கண்ணீர் இன்னும் நிற்கவில்லை.
இரண்டு நாட்கள் முழுதாக முடிந்து போன நிலையில் உதய் இன்னும் அவுட் ஹவுஸிற்கு வரவே இல்லை. அவளும் அவன் வருவான், வருவான் என்று எதிர் பார்த்தபடி இருக்க அவன் வந்தபாடில்லை.
இரண்டு நாள் பிரிவையே அவளால் தாங்க முடியவில்லை. அந்த வீட்டில் அத்தனை பேர் இருந்தும் மலர்கொடி தவிர யாரும் அவளை வந்து பார்க்கவில்லை.
இதே குடும்பம் தான் இரண்டு நாட்களுக்கு முன்பு வரை ரோனி, ரோனி என்று அவளை தலையில் தூக்கி வைத்து கொண்டாடியது. இன்றோ மண் சட்டியை தூக்கிப் போட்டு உடைப்பது போல அவளது உறவையும் உடைத்து விட்டனர்.
அவளது கணவன் அடிக்கடி சொன்ன வார்த்தை இன்று தான் அவளுக்கு புரிந்தது. எப்பவுமே ரொம்ப நல்லவளா இருக்காதே ரோனி இந்த உலகம் உன்னை சீக்கிரம் மறந்து விடும் என்று அவன் சொன்ன வார்த்தை தான் இன்று உண்மையாகிப் போனது. அவன் கூட அவளை மறந்து போனானோ.
அத்தியாயம் 137
என்ன அத்தை ஏன் ஒரு மாதிரியா இருக்கிங்க என்ற ஸ்ரீஜாவிடம் ரோனி தப்பு பண்ணி இருப்பாள்னு நினைக்கிறியா ஸ்ரீஜா என்றார் மலர்கொடி. தெரியலை அத்தை ஆனால் அவள் வினித்ராவை பழிவாங்க இதெல்லாம் பண்ணினாள்னு சொன்னால் என்னால் நம்ப முடியலை என்றாள் ஸ்ரீஜா.
ஏன் அத்தை வினித்ரா உதய் மாமாவை ஒன் சைடா தானே லவ் பண்ணினாங்க அப்படி பார்த்தால் நானும், உதய் மாமாவும் டபுள் சைடு லவ் இதுவரை அவள் என்னை பழிவாங்காமல் ஏன் இருக்கிறாள். மாமா கூட இதை யோசிக்கவில்லையா என்ன என்ற ஸ்ரீஜாவிடம் அவன் இப்போ கோபத்தில் இருக்கிறான். அதான் எதையும் யோசிக்க மாட்டேங்கிறான் விடு அவன் அவளை கட்டாயம் புரிஞ்சுப்பான் என்ற மலர்கொடி அவனது அறைக்கு சென்று பார்த்தார்.
அவன் அங்கு இல்லை எங்கே போனான் இவன். அவுட் ஹவுஸிற்கும் வரவில்லைன்னு அவள் சொன்னாள். காலையில் வந்தவன் குளிச்சுட்டு எங்கேயோ கிளம்பி போனான். ஆனால் எங்கேன்னு தான் தெரியவில்லை என்று யோசித்துக் கொண்டிருந்தார் மலர்கொடி.
பிரகாஷ் என்ற மலர்கொடியிடம் சொல்லுங்க பெரியம்மா என்றான் பிரகாஷ். உதய் எங்கே என்றவரிடம் அண்ணா ஸ்கூலில் தான் இருக்காரு என்றான் பிரகாஷ். சரி பிரகாஷ் என்ற மலர்கொடி மகனுக்கு போன் செய்தார்.
என்னடி என்ன பண்ணிட்டு இருக்க என்ற மலர்கொடியிடம் இன்னைக்கு காலேஜ் இருக்கு அத்தை அதான் கிளம்புறேன் என்றவளிடம் எப்படி போவ ரோனி என்றார் மலர். பஸ்ல போயிக்கிறேன் அத்தை என்றவள் அதான் உங்க பையன் சொல்லிட்டாரே போலி ரிப்போர்ட் வாங்க போகத் தெரிஞ்சவளுக்கு காலேஜ் போகத் தெரியாதான்னு என்ற வெரோனிகாவிடம் நீங்கள் அவர்கிட்ட பேசினதை கேட்டேன் அத்தை. அவர் தான் என் முகத்தைக் கூட பார்க்க விரும்பவில்லையே விடுங்க நானும் அவருக்கு தொல்லை கொடுக்க மாட்டேன் என்றாள் வெரோனிகா.
ரோனி என்ற மலரிடம் எனக்கு எந்த கஷ்டமும் இல்லை அத்தை என்ன தான் நான் இது தான் என் குடும்பம். இது தான் என்னோட வாழ்க்கைன்னு நினைச்சு மனசை தேத்திகிட்டாலும் வலிக்குது அத்தை. இன்னைக்கு என்னை வீட்டை விட்டு விரட்டின என்னோட குடும்பம் நாளைக்கு என் மேல தப்பே இல்லைன்னு தெரிந்தால் என்ன பண்ணும் பேசின எல்லா வார்த்தையும் அழிஞ்சு போயிருமா அத்தை என்று அழுதவள் இல்லை இனி நான் அழ மாட்டேன் என்று கண்களைத் துடைத்துக் கொண்டாள்.
என்னை நானே இனிமேல் பார்த்துக்கனும் என்றவள் சரிங்க அத்தை நான் காலேஜ் போயிட்டு வரேன் என்று கிளம்பிட மலர்கொடி எதுவும் சொல்ல முடியாமல் மௌனமாகினார்.
என்னடா நீ இப்படி பண்ணிட்ட என்ற மலர்கொடியிடம் என்னம்மா பண்ணிட்டேன் அவள் பண்ணின தப்பை மன்னிக்கிற அளவு நான் மகான் இல்லைம்மா. அந்தப் பொண்ணு வினித்ரா வாழ்க்கையை இழந்து, பெத்து , வளர்த்த அப்பா, அம்மாவை இழந்து அனாதையா நிற்கிறாள். அப்படி ஒரு நிலைமை உங்க மருமகளுக்கு வரவில்லை அதை நினைச்சு சந்தோசம் படுங்க என்றான் உதய்.
சரிப்பா நீ அவள் கூட பேச வேண்டாம், வாழ வேண்டாம் ஆனால் வீட்டிற்காவது வரலாமே. ஏன் ஸ்கூலில் படுத்து தூங்குற அவுட்ஹவுஸில் கூட இரண்டு பெட்ரூம் இருக்கு. உனக்கு நம்ம வீட்டில் தங்க பிடிக்கவில்லைனா அவுட்ஹவுஸில் இன்னொரு பெட்ரூம்ல தங்கு. அங்கே உன் பொண்டாட்டி கூட வாழ்ந்த நினைவு இருக்காது. அவளை நீ இருக்கிற அறைப் பக்கம் வர வேண்டாம்னு சொல்லிடுறேன் என்ற மலர்கொடியிடம் நீங்கள் ஏன்மா அவளை இந்த அளவுக்கு நம்புறிங்க என்றான் உதய்.
அவளும் என் பொண்ணு தானடா. ஒரு முறை அவளை ஒதுக்கி நான் பண்ணின தப்பே போதும். நீ ஒதுக்கலாம், சேர்த்துக்கலாம் அவள் உன்னோட மனைவி அதனால தப்பா தெரியாது. நான் அப்படி இல்லை மாமியார். என் வீட்டிற்கு வாழ வந்த அவளை நான் நல்லா வச்சுருந்தால் தான் இன்னொரு வீட்டிற்கு வாழப் போன என்னோட பொண்ணு நல்லபடியா வாழுவாள் என்றார் மலர்கொடி.
உதய் எதற்கும் இன்னொரு முறை நல்லா விசாரிச்சு பாருடா நம்ம ரோனி நிச்சயம் தப்பு பண்ணி இருப்பாள்னு எனக்கு தோன்றவில்லை என்ற மலர்கொடியிடம் அம்மா உங்களுக்கு ஒரு விசயம் சொல்லவா திரும்ப ,திரும்ப நான் இதை விசாரிச்சு அவள் மேல உள்ள தப்பு இன்னும் உறுதியானால் எனக்கு அவளை கொல்லுற அளவுக்கு கோபம் வரும். அதனால தான் நான் அமைதியா இருக்கேன். எனக்கு மட்டும் வலி இல்லையாம்மா அவளை உயிரா நேசிச்சவன்மா நான் நானே அவளை வெறுக்கிறேன்னா அவள் பண்ணின தப்பு அந்த மாதிரி.
கேவலம் அந்தப் பொண்ணு என்னை விரும்புச்சுங்கிற ஒரே காரணத்திற்காக இத்தனை பெரிய தண்டனையை இவள் அவளுக்கு கொடுக்கலாமா என்றவனிடம் நம்ம ரோனி அப்படிப் பட்ட பொண்ணு இல்லை உதய் என்றார் மலர்கொடி.
சரிங்கம்மா அவள் அப்படிப் பட்ட பொண்ணு இல்லைன்னே வச்சுக்குவோம். ஊர்மிளா கர்ப்பமா இருக்கிறாள் இல்லை இப்போ அது இல்லை என் பிரச்சனை.
வினித்ரா அப்பா, அம்மா இறந்து போனது கூட ஊர்மிளா பண்ணின சதியாவே இருக்கட்டும் அதை எல்லாம் விடுங்க.
நான் அவள் கிட்ட என்ன சொல்லி சத்தியம் வாங்கினேன். இனிமேல் ஊர்மிளாவோட விசயத்தில் தலையிடக் கூடாதுன்னு தானே சத்தியம் வாங்கினேன். அதை ஏன் அவள் மீறினாள். அதனால தானே இவ்வளவு பிரச்சனையும். என் பேச்சை மதிக்காமல் தப்பு பண்ணின ஒருத்தி கூட எனக்கு என்ன பேச்சு வேண்டி கிடக்கு.
இனிமேல் அவள் கிட்ட பேச எனக்கு பிடிக்கவில்லை விடுங்க அவளை ஒதுக்கவும் முடியாது என்னை நம்பி தான் அவளோட அப்பா, அம்மா எனக்கு அவளை கல்யாணம் பண்ணி வச்சுருக்காங்க. அதனால அவளை பாதுகாக்கிற பொறுப்பும், கடமையும் எனக்கு இருக்கு. நீங்க சொன்ன மாதிரி இனி நான் அவுட் ஹவுஸில் உள்ள இன்னொரு அறையில் தங்கிக்கிறேன் என்றான் உதய். சரிப்பா என்ற மலர்கொடி சென்று விட அவனும் பள்ளிக்கு சென்றான்.
என்ன யோசிச்சுட்டு இருக்க ரோனி என்ற நிகிலாவிடம் ஒன்றும் இல்லை நிகி என்ற வெரோனிகா எனக்கு ஒரு ஜாப் ஏற்பாடு பண்ணித் தர முடியுமா என்றாள். என்னடி நீ நிஜமா தான் கேட்கிறியா என்ற நிகிலாவிடம் சத்தியமா நிகி அவரு வீட்டிற்கே வருவதில்லை. அவர்கிட்ட நான் எப்படி காசு கேட்கிறது எனக்கும் செலவுகள் இருக்கே. பஸ் ஃப்ரீ தான் ஆனால் சாப்பாடு அதற்கு காசு வேண்டுமே என்ற தோழியை அணைத்த நிகிலா நம்ம ஊர்மி இப்படி நடந்துப்பான்னு நான் எதிர் பார்க்கவே இல்லை ரோனி என்றாள் .
எதிர்பாராததை எதிர் பாருங்கள் அதானே வாழ்க்கையே விடு நிகி அதை எல்லாம் யோசிக்கிற நிலைமையில் நான் இல்லை என்றாள் வெரோனிகா.
ரோனி உனக்கு டெய்லரிங் தெரியுமா என்ற நிகிலாவிடம் தெரியும் நிகி என்கிட்ட மெசின் கூட இருக்கு. என்னோட டிரஸ் மேக்சிமம் செல்ப் ஸ்டிச்சிங் தான் என்றாள் வெரோனிகா. அப்போ எங்க வீட்டு பக்கம் ஒரு டெய்லர் அக்கா இருக்காங்க அவங்களுக்கு ஒரு அசிஸ்டன்ட் வேணும்னு சொன்னாங்க என்றாள் நிகிலா. அப்படியா அவங்க கிட்ட என்னை சேர்த்து விடு நிகி என்ற வெரோனிகாவிடம் கண்டிப்பா ரோனி என்றாள் நிகிலா.
என்ன வினி இன்னும் இப்படியே இருந்தால் என்ன அர்த்தம் என்ற பவித்ராவிடம் வேற என்ன பண்ண என்றாள் வினித்ரா. எனக்குனு இருந்த என் அப்பா, அம்மா இப்போ இல்லைடி என்று அழுதவளிடம் முட்டாளா வினி நீ. தப்பா எடுத்துக்காதே உன்னோட அப்பா , அம்மா பயங்கர செல்பிஷ். தங்களோட மானம் போச்சுன்னு செத்தவங்க ஒரு நிமிசம் நாம செத்துப் போயிட்டால் நம்ம பொண்ணு அனாதையா நிற்கதியா நிற்பாளேன்னு கொஞ்சமாவது யோசிச்சாங்களா இப்போ தான் அம்மா, அப்பான்னு அழுதுட்டு இருக்கிறாள் என்ற பவித்ரா தோழியை சமாதானம் செய்தாள்.
நீ வேலைக்கு போ வினி அப்போ தான் உன் மைண்ட் சேஞ்ச் ஆகும் என்ற பவித்ராவிடம் எப்படி பவி அந்த ரோனியாலையும், ஊர்மியாலையும் தான் என் அப்பா, அம்மா செத்தாங்க. அவங்க ஸ்கூலில் நான் வேலைக்கு போகனுமா என்ற வினித்ரா நான் அங்கே போக மாட்டேன் என்றாள்.
அந்த ரோனியும், ஊர்மியும் அந்த ஸ்கூல் ஓனர் இல்லை. உதயச்சந்திரனோட பாட்டி கல்யாணிதேவி தான் அந்த ஸ்கூலோட ஓனர் அதை மறந்துவிடாதே. நீ அங்கே தான் வேலைக்கு போகனும் அப்போ தான் உன்னோட இழப்பு அந்த குடும்பத்திற்கு வேதனையை கொடுக்கும். நான் சொல்லுறதை இனியாவது கேளு உனக்கு கொஞ்சம் மைண்ட் சேஞ்ச் ஆகனும். அதனால நீ வேலைக்குப் போ என்றாள் பவித்ரா.
என்ன உதய் இங்கே உட்கார்ந்திருக்க என்ற கல்யாணிதேவியிடம் சும்மா தான் அப்பத்தா காத்து வாங்கலாம்னு என்றான் உதய். சரி ஊர்மிளா பற்றி எதாவது தகவல் கிடைச்சதா என்ற கல்யாணியிடம் இல்லை அப்பத்தா அவளை கண்டு பிடித்தால் தான் இங்கே பல மர்மங்களுக்கு விடை தெரியும் என்றவனிடம் அப்போ ரோனி என்றார்.
அவள் மேல தப்பு இல்லைன்னு சொல்ல முடியாது ஆனால் முழு தப்பும் அவளோடதா இருக்க வாய்ப்பு இல்லை ரோனி மேல எனக்கு பயங்கர கோபம் இருக்கு அவளை ஊர்மிளா விசயத்தில் தலையிடக் கூடாதுன்னு பலமுறை சொல்லியும் அவள் கேட்கவே இல்லை. அந்தக் கோபம் அவ்வளவு சீக்கிரத்தில் மாறாது அப்பத்தா. அவள் ஒதுங்கி இருந்திருந்தால் இத்தனை பெரிய பலி அவள் மேல் விழுந்திருக்காதே என்றவன் முதலில் ஊர்மிளா கிடைக்கட்டும் மற்றதை அப்பறம் பார்க்கலாம் என்றான்.
ஏன் நீ ரோனியை பஸ்ல போக அனுமதிச்ச என்ற கல்யாணியிடம் எல்லாம் காரணமாகத் தான் அப்பத்தா என்றவன் நீங்க பண்ணி வச்ச கல்யாணத்தை எந்த சூழ்நிலையிலும் உடைக்க மாட்டேன் என்னை நம்பலாம் என்றான் உதய்.
உன்னை நம்பாமல் நான் யாரை நம்ப போகிறேன் உதய் என்ற கல்யாணிதேவி சீக்கிரம் ஊர்மிளாவை கண்டுபிடிச்சுருப்பா என்றார்.
வாசல் கேட்டை திறந்து கொண்டு களைப்பாக வந்த வெரோனிகா தோட்டத்தில் தன் கணவனும், பாட்டியும் இருப்பதைக் கண்டும் காணாமல் அவுட் ஹவுஸிற்குள் சென்றாள்.
அவள் என்ன தான் சமைத்தாலும் அவன் சாப்பிடுவதில்லை அவளும் அவனை கட்டாயப் படுத்துவதும் இல்லை. ஏன் அவன் முன்னே மாமா , மாமா என்று போய் நிற்பதும் இல்லை. தனக்கான உணவாக பாலும், ப்ரட்டும் இருக்க அதை உண்டவள் சென்று படுத்து விட்டாள்.
அத்தியாயம் 139
நிகிலா சொன்ன டெய்லர் கடையில் வேலைக்கு சேர்ந்து விட்டாள் வெரோனிகா. ஆரம்பத்தில் சிரமமாக இருந்தாலும் போக போக எல்லாம் பழகியது அவளுக்கு.
என்னடி இன்னும் மாப்பிள்ளை உன் கிட்ட பேசுறது இல்லையா என்ற பூங்கொடியிடம் ஆமாம் இப்போ என்ன அதற்கு என்றாள் வெரோனிகா. பேசாமல் நீ நம்ம வீட்டிற்கு வந்துரு ரோனி என்ற பூங்கொடியிடம் நம்ம வீட்டிற்கு வரும் சூழ்நிலை இன்னும் வரவில்லைம்மா. ஒருவேளை அங்கே நான் வருவது என்றால் திரும்ப எப்பவுமே இந்த வீட்டிற்கு வரவே மாட்டேன்கிற சூழ்நிலையில் தான் வருவேன் அப்போ உங்களால என்னை ஏற்றுக் கொள்ள முடியுமா என்றாள் வெரோனிகா.
என்னடி இப்படி சொல்லிட்ட நீ என்னோட ஒரே பொண்ணு ரோனி உன்னை விட்டால் எனக்கு வேற பிள்ளையா, குட்டியா இப்போ கூட நீ வந்துரும்மா. அப்பாவும், நானும் வரோம். எங்க கூட வந்துருடி நீ ஏன்டி டெய்லர் கடைக்கு எல்லாம் வேலைக்கு போயிட்டு நம்ம கிட்ட எல்லா வசதியும் இருக்கும் பொழுது என் மகள் ஐந்துக்கும், பத்துக்கும் பட்டன் கட்டி பிழைக்கனுமா என்று வருந்திய பூங்கொடியிடம் அம்மா அது எல்லாம் அப்பாவும், பெரியப்பாவும் சம்பாதிச்சது. அதில் உட்கார்ந்து திங்க உன் மகள் அவ்வளவு சோம்பேறி இல்லை. இன்னைக்கு நான் சாப்பிடுற சாப்பாடு என்னோட உழைப்பு எனக்கு எவ்வளவு சந்தோசமா இருக்கு தெரியுமா என்றவள் இன்னைகே உன் மருமகன் என்னை விரட்டி விட்டாலும் என்னால இந்த உலகத்தில் வாழ முடியும்னு ஒரு நம்பிக்கை இருக்கு. அது அந்த பட்டன் கட்டுற வேலைன்னு கேவலமா சொன்னியே அந்த வேலையால கிடைச்ச தைரியம். பார்த்துக்கலாம் அம்மா என்றவளிடம் நீ வேலைக்கு போ நான் தப்பு சொல்லவில்லை ரோனி ஆனால் அந்த வீட்டில் நீ இருக்க வேண்டாம்.
உன்னை பார்க்க , வைக்க கூட ஆள் இல்லை பேசாமல் நம்ம சரவணன் வீட்டில் போயினாலும் இரு ரோனி என்ற பூங்கொடியிடம் இல்லைம்மா அது தப்பு. அண்ணனும், கனியும் என்னால சந்தோசம் இல்லாமல் வாழ வேண்டாம். கனி இப்போ மாசமா இருக்கு என்னை நினைச்சு அது கஷ்டப் பட வேண்டாம். நீங்களும் இங்கே வர வேண்டாம். ஒருவேளை அப்பாவோ, நீங்களோ இங்கே வந்து பிரச்சனை பெரிசாகிட்டால் எல்லோருக்கும் வருத்தம்.
ஏற்கனவே பொண்ணு ஓடிப் போன வருத்தத்தில் இருக்கிறவங்களை நம்ம எதுவும் காயப் படுத்த வேண்டாம் என்றவளிடம் உன்னைப் போயி சந்தேகம் பட்டு விரட்டிட்டாங்களேடி. அப்பா மட்டும் அன்னைக்கு அவசரப் படாமல் இருந்திருந்தால் இன்னைக்கு உன்னோட வாழ்க்கை இப்படி ஆகிருக்காதே ரோனி என்று கண்கலங்கினார் பூங்கொடி.
அம்மா அழாதம்மா எல்லாம் என் தலைவிதி என்றவள் சரி நான் அப்பறம் பேசுகிறேன் எனக்கு வேலை இருக்கு. இன்னைக்கு காலேஜ் லீவு அதனால முடிஞ்ச அளவுக்கு துணிகளை தைத்து விட்டால் வருமானமாவது வரும் என்று சொல்லி போனை வைத்து விட்டாள் வெரோனிகா.
என்ன சொல்லுற ஸ்ரீஜா ஊர்மிளா ஓடிப் போயிட்டாளா அதனால அண்ணியை வீட்டை விட்டு அனுப்பிட்டாங்களா என்ற தேவச்சந்திரனிடம் ஆமாம் தேவ் நீ இல்லாத இந்த ஐந்து மாதத்தில் என்னன்னவோ நடந்திருச்சு. அத்தை தான் வெளிநாட்டில் இருக்கிற உனக்கு இந்த விசயம் எல்லாம் தெரிந்து கஸ்டப் பட வேண்டாம்னு சொல்ல வேண்டாம்னு சொல்லிட்டாங்க . ரோனி இப்போ அவுட் ஹவுஸில் தான் இருக்கிறாள் என்றாள் ஸ்ரீஜா. அண்ணா என்ற தேவ்விடம் இந்த முறை அவர் கூட அவளுக்கு சப்போர்ட் கிடையாது. அவர் தான் அவளை முதலில் வெறுத்தது. பாவம்டா சின்னப் பொண்ணு அவள் எவ்வளவோ பேசிட்டாங்க எல்லோரும் என்ற ஸ்ரீஜா கண் கலங்கினாள்.
கோபமாக தன் தந்தையின் அறைக்கு சென்றான் தேவ். வா தேவ் எப்போ வந்த என்ற நெடுமாறனிடம் உங்க கிட்ட ஒரு விசயம் பேசனும் அப்பா என்றான் தேவ். என்னடா பேசனும் பேசு என்றவரிடம் ஸ்ரீஜா இந்த வீட்டில் பண்ணாத தப்புன்னு எதாச்சும் இருக்குதா என்ற தேவ்விடம் இல்லை என்றார் நெடுமாறன். அப்போ எல்லாம் நீங்கள் ஏன் அவளை வீட்டை விட்டு போகச் சொல்லவில்லை என்ற தேவ்விடம் பதில் சொல்ல முடியாமல் தவித்தார் நெடுமாறன். காரணம் அவள் உங்க தங்கச்சி பொண்ணு அப்படித் தானே அப்பா. என்ன இருந்தாலும் ஸ்ரீஜா உங்க இரத்தம் ரோனி அண்ணி வேற இரத்தம் அப்படித் தானே என்றான் தேவ். இல்லை தேவ் அது என்ற நெடுமாறனிடம் என்னப்பா உங்க குட்டு வெளிப்பட்டிருச்சுனு திணறுறிங்களா.
சித்தப்பா அவரு மட்டும் வெளியே போறேன்னு சொல்லவில்லை மகன், மருமகள்னு குடும்பமா தான் போறேன்னு சொன்னாரு ஆனால் நீங்க உங்க மருமகளை மட்டும் வீட்டை விட்டு போகச் சொல்லி இருக்கிங்க என்னப்பா உங்க நியாயம்.
அண்ணி உதவி பண்ணி வீட்டை விட்டு ஓடி இருந்தால் அண்ணியை போட்டுக் கொடுக்கிற மாதிரி ஒரு கடிதம் எழுதி வச்சுட்டு ஊர்மிளா ஓடிப் போவாளா சொல்லுங்க என்ற தேவ்விடம் இல்லை என்று ஏதோ சொல்ல வந்தவரிடம் உங்க கிட்ட பதில் இருக்காதுப்பா.
இந்த வீட்டில் யாருக்குமே யோசிக்கிற திறமை இல்லையா என்ன என்றான் தேவ் கோபமாக.
என்ன தேவ் அப்பா கிட்ட இப்படி பேசுற என்ற சுசீலாவிடம் என் அப்பாகிட்ட தானே சித்தி நான் பேசுறேன் என்றான் தேவ். தேவ் என்ன பேசுற அவங்க உன்னோட சித்தி என்ற நெடுமாறனிடம் சித்தி தான் அப்பா அம்மா இல்லை. என்னை மன்னிச்சுருங்க சித்தி இதே வார்த்தையை உங்க பொண்ணு பல முறை சொல்லிருக்கிறாள். எங்க குடும்பம் வேற, உங்க குடும்பம் வேறன்னு அப்போ அவளுக்கு ரோனி அண்ணி மேல எப்படி பாசம் இருக்கும் சொல்லுங்க என்றான் தேவ்.
ஊர்மிளா ஓடிப் போக கட்டாயம் அண்ணி உதவி பண்ணி இருக்க மாட்டாங்க அவளே ஓடிப் போயி அந்தப் பழி அண்ணி மேல விழனும் அதற்காக நிறைய வேலை பார்த்து வச்சுருக்கிறாள் அது என்னனு நான் வெளிக் கொண்டு வரேன் என்றவனிடம் தேவ் ஊர்மிளா எழுதி வச்சதால மட்டும் நாங்கள் நம்பவில்லை அந்த டாக்டர் ஏன்டா பொய் சொல்லனும் என்ற சுசீலாவிடம் கண்டு பிடிக்கிறேன் சித்தி. கண்டு பிடிக்கிறேன் என் அண்ணி தப்பானவங்க இல்லைன்னு நிரூபிக்கிறேன்.
அப்போ உங்க எல்லோருடைய முகத்தையும் எங்கே கொண்டு போய் வச்சுப்பிங்கனு பார்க்கிறேன் என்ற தேவ் கோபமாக சென்று விட்டான்.
எப்போடா வந்த என்ற உதய்யிடம் இப்போ தான் வந்தேன் அண்ணி எங்கே என்றான் தேவ். அவள் கிட்சன்ல இருப்பாள் என்றவனிடம் கிட்சன்ல இல்லை, அந்த ரூம்லையும் இல்லை என்றவனிடம் அப்போ எங்கேயாவது வெளியில் போயிருப்பாள் என்றான் உதய்.
அண்ணியை ஸ்கூல், காலேஜ்க்கு எல்லாம் நீ தானே அழைச்சுட்டு போவ இப்போ எப்படி போறாங்க என்ற தேவ்விடம் பஸ்ல போகிறாள் என்றான் உதய்.
அண்ணி மேல உண்மையிலே உனக்கு காதல் இருக்குதா அண்ணா என்ற தேவ்விடம் இப்போ எதற்கு இந்த கேள்வி என்றான் உதய். காரணமாகத் தான் சொல்லு என்ற தேவ்விடம் காதல் இல்லாமல் தான் அவள் இல்லாத வீட்டில் நானும் இருக்க விரும்பாமல் இங்கே இருக்கேனா என்றான் உதய்.
காதல்னா என்ன அண்ணா என்றவனிடம் நம்பிக்கை என்ற உதய் நாக்கை கடித்திட அண்ணி மேல காதல் இருக்குனு சொன்ன அப்போ அது பொய் தானே என்றான் தேவ்.
என்ன பேசுற தேவ் என்றவனிடம் நீ தான் அவங்களை நம்பவே இல்லையே அண்ணா அப்பறம் எங்கே காதல் இருக்கு. ஒருவேளை அண்ணியால இனி குழந்தை பெத்துக்க முடியாதுன்னு அவங்க மேல உள்ள ஈடுபாடு குறைஞ்சு போச்சா என்ற தேவ்வின் சட்டையைப் பிடித்தவன் சத்தமா பேசாதேடா அவள் காதில் விழப் போகுது என்ற உதய்யை பார்த்து கசந்த புன்னகை புரிந்தவன் அண்ணி வீட்டில் இல்லை அதனால தான் இதை பேசுறேன். பதில் சொல்லு என்ற தேவ்விடம் குழந்தை என்னடா பெரிய குழந்தை அது தான் எங்க வாழ்க்கையா என்ன அதை ஒரு விசயமாவே நான் நினைக்கவில்லை என்றான் உதய்.
அப்பறம் ஏன் அண்ணி மேல கோபம் அந்த வினித்ரா யாரு அவளுக்கு ஒரு பிரச்சனைனா நீ ஏன் துடிக்கனும். எனக்கே சந்தேகமா இருக்கு அவளுக்கும், உனக்கும் என்ற தேவ்வை முறைத்தவன் என்னை என்ன அவ்வளவு கேவலமான பொறுக்கினு நினைச்சியா என் வாழ்க்கையில் என் வெரோனிகா இடத்தை எந்தப் பெண்ணாலும் நிரப்பவே முடியாது ஆமாடா அவளை நான் நம்பவில்லை தான். நான் மட்டும் நம்பி என்ன பிரயோஜனம் இந்த குடும்பம் மொத்தமும் நம்பனும். என் பொண்டாட்டியை வீட்டை விட்டு போகச் சொன்னவங்க எல்லோரும் நான் உட்பட அவளோட காலில் விழுந்து மன்னிப்பு கேட்கனும் அதை நடத்தனும்னா கொஞ்ச நாளைக்கு அவளை நான் ஒதுக்கி தான் வைக்கனும்.
அந்த வினித்ராவோட அப்பா, அம்மா செத்துப் போனதால நானும் கொஞ்சம் எமோசனலாகி என்னன்னவோ பேசிட்டேன் அவளை. அவள் எவ்வளவோ சொல்லியும் நான் நம்பவில்லை. அப்பறம் யோசிக்க ஆரம்பித்தேன். ஊர்மிளாவோட அந்த கடிதம் அதை திரும்ப , திரும்ப படிச்சேன். அப்போ தான் எனக்கு ஒரு விசயம் தோனுச்சு என்னோட அறையில் எனக்கு இது கிடைச்சுச்சு என்று அந்தப் பொருளை கொடுத்தான் உதய்.
இது என்ற தேவ்விடம் ஊர்மிளா தன்னோட கிரிமினல் மூளையை எவ்வளவு தெளிவா யூஸ் பண்ணி இருக்கிறாள்னு புரிஞ்ச பிறகு ரோனியை பேசின பேச்சு எல்லாம் என்னை திருப்பி அடிச்சது. இந்த ஐந்து மாதத்தில் எவ்வளவோ மாறிடுச்சு. நான் தான் அவளை ஒதுக்கிருக்கேன்னு எல்லோரும் நினைக்கிறிங்க உண்மையிலே அவள் தான் என்னை ஒதுக்கிட்டாள்.
அது கூட இப்போ இருக்கிற நிலைமைக்கு சரிதான் என்றவன் ஊர்மிளாவும், விக்னேஷும் கிடைக்கட்டும் அப்பறம் எல்லாம் ஒரு முடிவுக்கு வந்துவிடும் என்றான் உதய்.
என்ன பண்ணி வச்சுருக்க ஊர்மி என்ற விக்னேஷிடம் பின்ன அந்த வீட்டில் நான் தான் ராணி மாதிரி எல்லோரையும் ஆட்டி வச்சேன். ஆனால் அந்த ரோனி வந்த பிறகு எல்லாமே மாறிடுச்சு. ஆரம்பத்தில் நான் கூட அவளோட மாய வலையில் சிக்கி அவள் மேல அன்பா இருந்தேன். ஆனால் அவளால தான் நான் அந்த வீட்டில் இருந்த சின்ன சின்ன சந்தோசத்தை கூட இழந்தேன் என்றாள் ஊர்மிளா.
அதற்காக நீ பண்ணி வச்சுருக்கிற காரியம் என்றவனிடம் எதுவும் தப்பில்லை விக்கி நீங்க எதையும் யோசிக்காதிங்க என்று அவனது தோளில் சாய்ந்தாள் ஊர்மிளா.
அத்தியாயம் 140
நாம இன்னைக்கே கிளம்பணுமா விக்கி என்ற ஊர்மிளாவிடம் அம்மாவுக்கு ரொம்ப உடம்பு முடியலையாம் ஊர்மி. பேப்பர்ல நியூஸ் போட்டு நம்மளை தேடுற அளவுக்கு ஆகிருச்சு நாம போகத் தான் வேண்டும் என்றான் விக்னேஷ். சரியென்று அவனுடன் கிளம்பியவள் தன் வயிற்றைப் பார்த்து மூன்று மாதக் கருவாக உருவாகி இருக்கும் தன் குழந்தையிடம் பேசினாள். குட்டிப் பாப்பா நாம இப்போ நம்ம பாட்டி வீட்டிற்கு போகப் போகிறோம் என்றவள் இந்நேரம் நான் வைத்த வெடியில் ரோனிங்கிற ஒருத்தி நம்ம வீட்டிலே இருக்க மாட்டாள். அவளோட சாப்டர் இனி நம்ம வாழ்க்கையிலே இல்லை என்ற ஊர்மிளாவிடம் வாயை மூடு ஊர்மி என்றான் விக்னேஷ்.
ஏன் விக்கி என்ற ஊர்மிளாவை முறைத்தவன் ஏற்கனவே நீ வெரோனிகாவிற்கு பண்ணின துரோகம் போதும் இதற்கு மேல அந்தப் பொண்ணை பற்றி தப்பா பேசாதே என்றவன் காரை இயக்கிட அவனுடன் பயணமாகினாள் ஊர்மிளா.
அந்த மலைப் பாதையில் அமைதியான சூழலில் காரில் பயணம் செய்து கொண்டிருந்தனர் ஊர்மிளா , விக்னேஷ் இருவரும். அன்று நடந்த நிகழ்வுகளை மெல்ல மனதில் அசை போட்டவாறு பயணித்தனர் இருவரும்.
வினித்ராவுடன் நிச்சயதார்த்தம் நடந்த அன்று ஊர்மிளா விக்னேஷிடம் போனில் பேசியவள் அவனுக்கு நடக்க இருக்கும் திருமணத்தை நிறுத்த வழியாக தான் கர்ப்பமாக இருப்பதாக அவனது அன்னை சகுந்தலாவிடம் சொல்லுமாறு கேட்டாள்.
அவனும் சரியென்று அப்படியே தன் அன்னை சகுந்தலாவிடம் கூறினான். வினித்ராவிடமும் கூற நினைத்தவனுக்கு அவளிடம் பேசுவதற்கான சரியான சந்தர்ப்பம் அமையவில்லை.
ஊருக்கு சென்ற இடத்தில் கனிமொழி சோதித்து வைத்த ப்ரகனன்சி கிட்டை எடுத்த ஊர்மிளா நரேனிடம் அதைக் காட்டி தான் கர்ப்பமாக இருப்பதாக கூறிட அவனும் அதைப் பற்றி வெரோனிகாவிடம் பேசினான்.
அதன் பிறகு ஊர்மிளாவை மருத்துவரிடம் அழைத்துச் செல்ல அந்த மருத்துவரிடம் கெஞ்சி கூத்தாடி போலி சர்டிபிகேட் கொடுக்க வைத்த ஊர்மிளா வெரோனிகாவைப் பற்றியும் தப்புத் தப்பாக கூறி இந்த ரிப்போர்ட்டினால் நாளை எதுவும் பிரச்சனை வந்தால் வெரோனிகாவை மாட்டி விடச் சொல்லி கேட்டாள். ஊர்மிளாவின் நடிப்புத் திறமையால் அந்த மருத்துவரும் அவள் சொன்ன எல்லா விசயத்திற்கும் தலையசைத்தார்.
உதய்யிடமும், வீட்டிலும் இந்த ரிப்போர்ட்டை காட்டி விட வெரோனிகா முயன்றால் செத்துவிடுவேன் என்று அவளை மிரட்டி சொல்ல விடாமல் தடுத்தாள்.
வெரோனிகா எங்கு உதய்யிடம் உண்மையை சொல்லி விடுவாளோ என்ற பயத்தில் அவளுக்கே தெரியாமல் அவர்களது அறையில் மைக் ஒன்றை செட் செய்தவள் தனது மொபைலில் அவர்கள் பேசுவது கேட்பது போல் செட் செய்து விட்டாள்.
அவர்கள் வினித்ரா விசயமாக சண்டையிட்டதை தனக்கு சாதகமாக எப்படி பயன்படுத்தலாம் என்று யோசித்தவள் விக்னேஷின் திருமணத்தன்று இரவோடு இரவாக கடிதம் எழுதி வைத்து விட்டு வீட்டை வீட்டு வெளியேறினாள்.
விக்னேஷ் நண்பன் ஒருவனின் உதவியோடு வால்ப்பாறையில் ஊர்மிளாவை திருமணம் செய்து கொண்டு ஒரு வாழ்க்கையை துவங்கினான். அவர்களது வாழ்க்கையின் ஆதாரமாக ஊர்மிளா இப்பொழுது கர்ப்பமாகவும் இருக்கிறாள்.
நடந்த நிகழ்வுகளை நினைத்தபடி வந்திருந்த விக்னேஷிற்கு ஏனோ குற்றவுணர்ச்சியாகவே இருந்தது. ஊர்மி உனக்குள்ள ஏன் அந்த வெரோனிகா மேல இத்தனை வன்மம் அவளோட வாழ்க்கையையே அழிச்சுட்டியே என்று யோசித்தபடியே வந்தவன் வளைவில் காரைத் திருப்பிட எதிரே வந்த அரசுப்பேருந்தில் மோதி வண்டி பள்ளத்தில் விழுந்தது.
என்னடி இது நீ ஏன் இன்னும் கிளம்பாமல் இருக்கிறாய் என்ற மலர்கொடியிடம் நான் எதற்கு அத்தை. நான் அங்கே வருவதில் யாருக்குமே சந்தோசம் இல்லை நல்லபடியா நீங்கள் விசேசத்தை நடத்துங்க என்றாள் வெரோனிகா. ஏன்டி என்ற மலரிடம் இல்லை அத்தை ஏற்கனவே எனக்கும், நம்ம வீட்டிற்கும் நல்ல உறவு இல்லை. இந்த நேரத்தில் இந்து அக்காவோட வளைகாப்புக்கு நான் வந்தால் சுசீலா அத்தை விரும்ப மாட்டாங்க. அப்பறம் விசேசத்திற்கு வந்த யாராவது எனக்கு குழந்தை இல்லைன்னு எதுனாலும் சொல்லிட்டாங்கனா அது எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கும் அத்தை. புரிஞ்சுக்கோங்க என்ற வெரோனிகாவிடம் என்ன பதில் சொல்வதென்று தெரியாமல் தவித்தார் மலர்கொடி.
எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு அத்தை டெய்லர் அக்கா வரச் சொல்லிருக்காங்க நான் கிளம்புகிறேன் என்றவள் வீட்டை விட்டு கிளம்பினாள்.
என்னம்மா என்ன சொன்னாள் என்ற உதய்யிடம் என்ன சொல்லனும்னு எதிர்பார்த்த நீ என்றார் மலர்கொடி. அம்மா என்ற உதய்யிடம் என்னடா அம்மா அன்னைக்கு உன் அம்மா நான் அவளை தப்பா பேசினப்போ நீ என்னடா பண்ணின அவளுக்கு துணையா அவள் கூட நின்ற ஆனால் ஊர்மிளா விசயத்தில் அவளை சந்தேகப் பட்டு அவள் மனசை உடைச்சுட்டியேடா.
இது நம்ம வீட்டு விசேசம் இங்கே யாரும் அவளை குழந்தை இல்லைன்னு சொல்ல மாட்டாங்க அவள் ஏன் இந்த பங்க்சனுக்கு வரவில்லை தெரியுமா என்ற மலர்கொடியிடம் தெரியும் அம்மா அந்த வீட்டிற்குள்ள அவள் திரும்ப வர மாட்டாள் அதனால தான் இப்படி எல்லாம் சாக்கு, போக்கு சொல்கிறாள் என்ற உதய் சரிம்மா நீங்க போங்க சித்தி எதுனாலும் நினைச்சுக்கப் போறாங்க என்றான்.
அவள் என்ன நினைத்தால் என்ன என் மருமகள் இனி அந்த வீட்டிற்குள்ள வர மாட்டாள் எல்லாம் உன்னால தான் உதய். உன்னால மட்டும் தான். கொஞ்சம் புத்தியோட நீ நடந்திருக்கலாம். அவள் கிட்ட உன்னை நான் நம்புகிறேன் ரோனின்னு ஒரு வார்த்தை சொல்லி இருந்தால் இன்னைக்கு அவள் யாரோ மாதிரி இந்த வீட்டில் இருந்திருப்பாளா போடா என்ற மலர்கொடி சென்று விட்டார்.
என்னம்மா என்ன யோசனை என்ற டெய்லர் கவிதாவிடம் ஒன்றும் இல்லை அக்கா என்றவள் கடகடவென தைக்க ஆரம்பித்தாள். இன்று அவளது பிறந்தநாள். போன வருடம் இதே நாள் அவளது கணவன் அவளை காதலிப்பதாக கூறினான். இன்றோ அதை நினைத்தவள் கசந்த புன்னகையுடன் வேலையை கவனிக்க ஆரம்பித்தாள்.
வேலையை முடித்து விட்டு அவளது மொபைலை பார்த்திட ஏகப் பட்ட மிஸ்டு கால் என்ன அம்மா இத்தனை முறை போன் பண்ணி இருக்காங்க என்று நினைத்த வெரோனிகா போன் செய்ய எங்கே இருக்க ரோனி என்றார் பூங்கொடி.
டெய்லர் ஷாப்ல இருக்கேன் என்றவளிடம் சரிடி நீ அங்கேயே இரு அண்ணன் வருவான் அவன் கூட வா என்ற பூங்கொடி போனை வைத்திட சரவணன் தன் பைக்கில் வந்து நின்றான்.
அண்ணா என்றவளிடம் வண்டியில் உட்காரு ரோனி என்றவன் கோபமாக இருக்க அண்ணனின் கோபத்திற்கான காரணம் அறிந்தவள் மௌனமாக அவனுடன் சென்றாள்.
வீட்டிற்கு வந்த வெரோனிகாவிடம் ஹாப்பி பர்த்டே ரோனி என்றாள் கனிமொழி. தாங்க்ஸ் கனி என்ற வெரோனிகா அம்மா என்றிட அத்தையும், மாமாவும் உள்ளே இருக்காங்க போடி என்றாள் கனிமொழி.
என்ன மச்சான் உன் தங்கச்சி மேல கோபமா இருக்கியா என்ற கனிமொழியிடம் ஆமாம் கோபமா தான் இருக்கேன். அவளுக்கு என்ன தலையெழுத்தாடி டெய்லர் கடையில் வேலை பார்க்கனும்னு புருசன் கூட சண்டைன்னா அவள் நேரா நம்ம வீட்டிற்கு கிளம்பி வந்திருக்கனும் அதை விட்டுட்டு என்றவன் ஒன்றுக்கு இரண்டு அண்ணன்கள் இருந்தும் என் தங்கச்சி இப்படி கஸ்டப் பட்டுட்டு இருக்கிறாள்.
என்னால தாங்கிக்க முடியவில்லை கனி. உதய் மச்சான் சட்டையைப் பிடிச்சு கேள்வி கேட்கனும்னு இருக்கு ஆனால் அதற்கும் தடை விதிச்சுட்டாள் என்னை என்ன பண்ண சொல்லுற என்ற சரவணனிடம் மச்சான் அந்த டாக்டரைப் பிடித்து விசாரித்தால் என்ன என்றாள் கனி.
அது கூட பண்ணிட்டேனே கனி மறந்துட்டியா நான் போலீஸ்காரனாச்சே அதனால என் தங்கச்சியை காப்பாத்த அந்த டாக்டரை மிரட்டிருக்கலாமேன்னு பிரகாஷோட அப்பா கேட்டாரு என்னை என்ன பண்ண சொல்லுற அந்த ஊர்மிளாவும், விக்னேஷும் வந்தால் தான் இந்த பிரச்சனைக்கு ஒரு முடிவு கிடைக்கும்.
அவங்களும் வந்திருவாங்க விக்னேஷோட அண்ணன் கௌதமை நம்ம விவேக் ப்ரதர் மூலமா பிடிச்சு அவங்க அம்மாவுக்கு உடம்பு சரியில்லைன்னு நியூஸ்ல போட சொல்லி இருக்கேன். அதைப் பார்த்துட்டு அந்த விக்னேஷ் கட்டாயம் வருவான் என்ற சரவணன் அவன் வரட்டும் இந்த சரவணன் யாருன்னு அப்பறம் காட்டுறேன் என்று பற்களைக் கடித்தான்.
கிடைப்பான் மச்சான் அந்த ஊர்மிளாவும் கிடைப்பாள். அவளை மட்டும் நான் நேரில் பார்த்தேன் அவளை அடி, அடின்னு அடிச்சு அவளோட சிண்டை அறுக்காமல் விடவே மாட்டேன் என்றாள் கனிமொழி.
என்னம்மா ஏன் அழறிங்க என்ற வெரோனிகாவிடம் போன வருசம் உன்னோட பிறந்தநாள் எத்தனை சந்தோசமா கொண்டாடினோம் ஆனால் இப்போ என்று கண் கலங்கினார் பூங்கொடி.
இப்போ என்னம்மா இப்பவும் சந்தோசமாவே கொண்டாடலாமே என்ற வெரோனிகா அதெல்லாம் இடையில் வந்த சொந்தம் தானம்மா அதான் இடையிலே போயிருச்சு. நீயும், அப்பாவும் அப்படி இல்லையேம்மா என்றவள் அப்பா என்றிட மகளைக் கட்டிக் கொண்டு அழுதார் கதிரேசன்.
ஏன் அப்பா அழறிங்க என்ற வெரோனிகாவிடம் உன்னோட வாழ்க்கையை அப்பாவே கெடுத்துட்டேனே அம்மு. உன் புருசன் நல்லவன்னு நம்பினேன் அவனே உன்னை ஒதுக்கிட்டு என்னால தாங்க முடியலம்மா. உன்னை வீட்டை விட்டு வெளியே போகச் சொன்ன அந்த பெரிய மனுசனைப் பார்த்து நான்கு கேள்வி நாக்கைப் பிடுங்கிற மாதிரி கேட்கனும் என்றார் கதிரேசன்.
அவங்களுக்கும், நமக்கும் வித்தியாசம் இருக்குப்பா நீங்க இந்த விசயத்தில் தலையிட வேண்டாம். எனக்காக ஒன்றே ஒன்று பண்ணுங்க ஒருவேளை நான் அந்த வீட்டை விட்டு நிரந்தரமா உங்க கிட்ட திரும்பி வந்தால் எனக்கு பக்க பலமா மட்டும் நில்லுங்க போதும் என்றவள் சரி இன்னைக்கு எனக்கு பிறந்தநாள் கேக் எங்கே என்றாள் வெரோனிகா.
உன் அண்ணன் கொண்டு வரான் பாரு என்ற பூங்கொடி காட்டிய திசையில் கேக்குடன் வந்தான் சரவணன். தன் அப்பா, அம்மாவுடன் பிறந்தநாளைக் கொண்டாடியவள் அம்மா இன்னைக்கு நான் இங்கேயே தங்கட்டுமா எனக்கு அங்கே போக விருப்பம் இல்லை என்றிட என்னடி கேள்வி இது நீ தாராளமா தங்கலாம். இது உன் அண்ணன் வீடு என்ற கனிமொழியைக் கட்டிக் கொண்டவள் தாங்க்ஸ் கனி என்று விட்டு தன் அன்னையின் மடியில் படுத்துக் கொண்டாள்.
பள்ளத்தில் விழுந்த காரில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தனர் ஊர்மிளா, விக்னேஷ் இருவரும். கணவன் அவனது இரத்தத்தை கண் முன் கண்டவளின் காதுக்குள் அன்று இந்திரஜா கூறிய வார்த்தை கேட்டது.
எந்தப் பாவமும் செய்யாத ரோனிக்கே இந்த கதின்னா அப்போ உன்னோட நிலைமையை யோசிச்சு பாரு என்று அன்று இந்திரஜா கூறிய வார்த்தை ஒன்றே ஊர்மிளாவின் செவிகளில் கேட்டது.
அத்தியாயம் 141
என்ன மலர் ரோனி இல்லாமல் எப்படி என்ற கல்யாணியிடம் அவளை வீட்டை விட்டு அனுப்பும் போது நீங்கள் இதை யோசிக்கவில்லையே அத்தை என்றார் மலர்கொடி. நானா மலர் அவளை வீட்டை விட்டு அனுப்பினேன் என்ற கல்யாணியிடம் நீங்க அனுப்பவில்லை அத்தை. ஆனால் நீங்கள் கூட தடுக்கவில்லையே. அன்றைக்கு மட்டும் நீங்கள் உதய் கிட்ட வீட்டை விட்டு போக கூடாதுன்னு ஒரு வார்த்தை சொல்லி இருந்தால் இன்னைக்கு என்னோட மருமகள் இப்படி கஸ்டப் படுவாளா. ஒரு சைக்கிளில் கூட தனியா அனுப்ப மாட்டான் இன்னைக்கு அவள் பஸ்ல போயிட்டு வருகிறாள். என்ன இருந்தாலும் அவள் வந்தவள் தானே ஒருவேளை உங்க இரத்தமா இருந்தால் மன்னிப்பு கிடைக்கும் போல என்ற மலர்கொடி தன்னறைக்கு சென்று விட்டார்.
கல்யாணிதேவியின் மனதில் வேதனை குடி கொண்டது. அன்றைக்கு நான் உதய்யை தடுத்திருந்தால் சுசீலா வீட்டை விட்டு போயிருப்பாள். மகன் குடும்பமா, வீட்டிற்கு வாழ வந்த பொண்ணானு யோசிக்கும் பொழுது நியாயத்தை விட பாசம் தான் பெரிதாகப் பட்டுச்சு. ச்சே எவ்வளவு பெரிய தப்பு பண்ணிட்டேன் இதற்கு மன்னிப்பே இல்லை என்று வருந்தினார் கல்யாணிதேவி.
என்ன மலர் உன் மூத்த மருமகள் இல்லையா , அவள் இல்லாமலே சின்ன மருமகளுக்கு வளைகாப்பு நடத்துறிங்க என்று உறவுக்காரப் பெண் ஒருத்தி கேட்டிட மலர்கொடி மௌனமாக சுசீலாவை குற்றம் சுமத்தும் பார்வையுடன் பார்த்தார்.
என்ன பேசுற சுனிதா அந்தப் பொண்ணுக்கு குழந்தை இல்லை அவள் வந்து வளையல் போடுவாளா அவளாவே ஒதுங்கி கிட்டாள் போல என்று பக்கத்தில் இருந்த இன்னொரு பெண் கூறிட சபை சிறிது நேரத்தில் அமைதியாகியது.
ரோனி எங்கம்மா இன்னைக்கு அவளுக்கு பர்த்டே. நானும் விஷ் பண்ண காலையில் இருந்து போன் பண்ணிட்டே இருக்கிறேன் அவள் எடுக்கவே இல்லை என்ற அர்ச்சனாவிடம் அவள் வேலைக்கு போயிட்டாள் அர்ச்சு. விடுடி அவளுக்கு வாழ்த்து சொல்கிறேன்கிற பெயரில் அவள் மனசை கஸ்டப் படுத்திராதே.
இந்த வீட்டில் உள்ள எல்லோருடைய பிறந்தநாளையும் அவளே எல்லா ஏற்பாடும் பண்ணி கொண்டாடினவள் ஆனால் இன்னைக்கு பாரு எல்லாம் நேரம் என்ன பண்ண என்ற மலர்கொடி அட்லீஸ்ட் நாம இரண்டு பேராவது அவளை நம்புறோமே அதுவே அவளுக்கு ஆறுதலா இருக்கும் என்றார் .
அம்மா நம்ம ரோனி இப்படி எல்லாம் பண்ணுவாளான்னு இந்த வீட்டில் ஒருத்தராவது யோசித்திருந்தால் ஏன் அண்ணா ஒருத்தராவது யோசித்திருந்தால் இப்படி ஒரு பிரச்சனையே இல்லையே. எல்லா விசயத்திலும் அவளுக்கு சப்போர்ட்டா இருக்கிற அண்ணா இந்த விசயத்தில் இப்படி பண்ணிட்டாரே அதான் உதய் அண்ணா மேல கோபம் கோபமா வருது.
ஊர்மிளாவும், விக்னேஷும் வந்தால் என்ன , வரவில்லைன்னா என்ன எத்தனை நாளைக்கு ரோனியை தண்டிச்சுட்டே இருக்கப் போறாரு. அவள் சின்னப் பொண்ணு அவளுக்கு சத்தியமா கிரிமினலா யோசிக்கிற புத்தியே கிடையாது என்ற அர்ச்சனாவிடம் அப்போ ஊர்மிளா கிரிமினலா யோசிச்சுருக்கிறாள்னு சொல்கிறாயா அர்ச்சனா என்றாள் இந்திரஜா.
ஆமாம் அதில் என்ன சந்தேகம் என்ற அர்ச்சனாவிடம் ஊர்மிளா உன்னோட தங்கச்சி அவளை நீ நம்பவில்லையா என்றாள் இந்திரஜா. இதோ பாரு இந்து ஊர்மிளா என் தங்கச்சினா ரோனி என்னோட அண்ணி. அதனால நான் உன்னை போல பாரபட்சமா பார்க்கிறவள் இல்லை. ரோனி இந்தக் குடும்பத்தின் மேல எவ்வளவு அக்கரை வச்சுருக்கிறாள்னு நம்ம எல்லோருக்குமே தெரியும். ஊர்மிளா பற்றியும் தெரியும். ஆனால் ஒரு பிரச்சனைன்னு வரும் பொழுது ஊர்மிளா இந்த வீட்டுப் பொண்ணு, ரோனி வேற வீட்டுப் பொண்ணு அந்த வித்தியாசம் தான் உங்களை எல்லாம் யோசிக்க விடாமல் ரோனியை குத்தம் சொல்ல வச்சுருக்கு.
அது தப்பில்லை காரணம் நாம எல்லோருமே ஏதோ ஒரு காரணத்தால சுயநலமா தான் யோசிப்போம். மகான் இல்லையே நாம என்றவள் ரோனி தப்பே பண்ணவில்லைனாலும் உன்னோட சப்போர்ட் ஊர்மிளாவுக்குத் தான் இருக்கும் ஏன்னா நீ அவளோட அண்ணியாச்சே என்ற அர்ச்சனா கசந்த புன்னகையுடன் சித்தி பேசினது கூட ஊர்மிளாவை பெத்த பாசம் ஆனால் நீ அவளை அப்படி பேசி இருக்க கூடாது இந்து.
நீங்கள் பேசின எல்லா பேச்சுக்குமான பதில் சீக்கிரமே உங்களுக்கு கிடைக்கும் ஆனால் கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் பண்ணினது போல தான் என்ற அர்ச்சனா சென்று விட்டாள்.
இன்னைக்கு என்னோட வளைகாப்பு உனக்கு மறந்துருச்சா என்ற இந்திரஜாவிடம் எனக்கு தான் தெரியுமே நான் ஏன் மறக்கப் போகிறேன் என்றாள் ஸ்ரீஜா. அப்பறம் ஏன் நீ வீட்டில் இருக்கவில்லை என்ற இந்திரஜாவிடம் ஹாஸ்பிடல் போயிருந்தேன் என்ற ஸ்ரீஜா தன் வேலையை கவனிக்க ரோனி வரவில்லைன்னு தானே நீயும் வரவில்லை என்றிட ஆமாம் அப்படித் தான் என்ற ஸ்ரீஜா எழுந்து சென்று விட்டாள்.
அக்கா என்று அவளை விரட்டிச் சென்ற இந்திரஜா என்னை விட உனக்கு அவள் முக்கியமா என்றிட ஆமாம் முக்கியம் தான். உனக்கு ஊர்மிளா ரொம்ப முக்கியம் காரணம் அவள் உன் புருசனோட தங்கச்சி அதே போல தான். எனக்கு வெரோனிகா ரொம்ப முக்கியம் காரணம் அவள் என் புருசனோட அண்ணி என்ற ஸ்ரீஜா உனக்கு நிலா கிட்ட எவ்வளவு உரிமை இருக்கோ அதே உரிமை ரோனிக்கும் இருக்கு. ஆனால் நீ அவள் கிட்ட போன குழந்தையை இழுத்துட்டு வந்த அன்னையில் இருந்து இன்னை வரை அவள் குழந்தையை தொடுறதே இல்லை. நீங்க என்ன நினைச்சுட்டு இருக்கிங்க ஊர்மிளா உலகமே தெரியாத பாப்பா அவளை வெரோனிகா விக்னேஷ் கூட ஓட வச்சுட்டாள்னா என்று சிரித்த ஸ்ரீஜா இதை புத்தி உள்ள எவனும் நம்ப மாட்டான். ஆனால் நீங்க எப்படித் தான் நம்புறிங்களோ என்ற ஸ்ரீஜா இதோ பாரு இந்து நீ என்னோட தங்கச்சி தான். நான் மறுக்கவில்லை ஆனால் ரோனியும் என்னோட தங்கச்சி அவளை நீங்க ஒதுக்கும் பட்சத்தில் நானும் ஒதுங்கி தான் போவேன் என்ற ஸ்ரீஜா சென்று விட்டாள்.
என்ன அண்ணி என் கிட்ட கூட பேச மாட்டிங்களா என்ற தேவ்விடம் அப்படி எல்லாம் இல்லை மாமா என்றாள் வெரோனிகா. உன் கிட்ட மட்டும் இல்லை தேவ் நிலா கிட்ட கூட மேடம் பேச மாட்டாங்க என்றாள் ஸ்ரீஜா. அப்படி எல்லாம் இல்லைக்கா என்ற வெரோனிகாவிடம் அப்படியா மேடம் நிலாவை நீங்க கொஞ்சி ஐந்து மாதம் ஆச்சு ஏன் அவள் இருக்கிற பக்கம் கூட வருவதில்லை என்றாள் ஸ்ரீஜா. ஸாரிக்கா என்ற வெரொனிகாவிடம் அதெல்லாம் விடுங்க அண்ணி இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் என்ற தேவ் ஒரு பார்சலைக் கொடுத்திட தாங்க்ஸ் மாமா என்றாள்.
அண்ணா கேக் எடுத்துக்கோங்க என்ற கனிமொழியிடம் தாங்க்ஸ்மா என்றவன் அதை எடுத்தான். கனியும், ஸ்ரீஜாவும் கிட்சனில் பூங்கொடியுடன் பேசிக் கொண்டிருக்க தேவ், சரவணன், கதிரேசன் இருவரிடமும் பேசிக் கொண்டு இருந்தான்.
சரவணனின் மொபைல் போன் ஒலித்திட அதை அட்டன் செய்து தனியே சென்று பேசிக் கொண்டிருந்தான்.
மாமா அண்ணனை வெறுத்துராதிங்க மாமா அவருக்கு அண்ணி மேல கோபம் எல்லாம் இல்லை. அவரு அன்னைக்கு இருந்த கோபத்தில் ஏதோ பேசிட்டாரே தவிர மற்றபடி என்ற தேவ்விடம் வேண்டாம் மாப்பிள்ளை அதை பேச வேண்டாம். என் மகள் தப்பே பண்ணி இருக்கட்டுமே அவளை நான்கு அடி அடிச்சுருந்தால் கூட மனசு ஆறிருக்கும். ஐந்தரை மாசமா ஒதுக்கி வச்சு, வீட்டை விட்டு அனுப்பி நாளைக்கு என் மகள் மேல தப்பே இல்லைன்னு ஆகிருச்சுனா பேசின வார்த்தை இல்லைன்னு ஆகிருமா சொல்லுங்க. விடுங்க மாப்பிள்ளை இதைப் பற்றி பேசவே கூடாதுன்னு என் மகள் சொல்லிருக்கு அதற்கு நான் மதிப்பு கொடுக்கனும் என்றார் கதிரேசன்.
மனைவி அவளது பிறந்தநாள் இன்று அதை அவனும் மறக்கவில்லை. அவள் செல்லாத இடத்திற்கு அவனும் செல்லக் கூடாது என்று வீட்டில் நடந்த இந்திரஜாவின் விசேசத்திற்கும் அவன் செல்லவில்லை.
விசேசத்திற்கு என்ன அந்த வீட்டிற்கே அவன் சென்று ஐந்து மாதங்கள் ஆகிறது. மனைவியின் மீது கோபம் இருந்தது உண்மை தான். அவள் சொல்லாமல் தங்களின் சண்டை எப்படி ஊர்மிளாவிற்கு தெரியும். அப்படி என்றால் நமக்கென்று பர்சனல் எதுவும் இல்லையா என்ற கோபம் தான் அதிகம். அது தான் மனைவியை சந்தேகம் கொள்ள முக்கிய காரணம். அந்த வீட்டை விட்டு வெளியேறிய ஒன்றரை மாதம் கழித்து அவன் அறைக்கு எதையோ தேடிச் சென்ற பொழுது அங்கு அந்த மைக் டிவைஸ் கிடைத்திட அப்பொழுது தான் உணர்ந்தான்.
தங்களுக்குள் நடந்த சண்டை எப்படி வெளியே சென்றிருக்கிறது என்று அன்றே மனைவி அவளிடம் மன்னிப்பு கேட்க வரும் பொழுது அவனைக் கண்டும், காணாததும் போல நடந்து கொள்ள ஆரம்பித்தாள். ஆரம்பத்தில் இவனது பாராமுகம் அவளை வாட்டியது. இப்பொழுது அவளது பாராமுகம் இவனை வதைக்கிறது.
அவன் வீட்டில் இருந்தாலும் சரி, இல்லையென்றாலும் சரி அவள் தன்னறையை விட்டு வருவதே இல்லை. எப்பொழுதும் அறைக்குள் அடைந்து கொண்டு தான் இருப்பாள். வீட்டில் பெரும்பாலும் சரியாக சமைப்பதில்லை. ஏன் அவள் சரியாக சாப்பிடுவதும் இல்லை. அவள் மட்டும் இல்லை அவனும் தான். ஏதோ பெயருக்கு எதுனாலும் சமைத்து உண்ணுவான். இப்படியே இந்த ஐந்து மாதங்களும் கடந்திட இன்று அவளது பிறந்தநாள் எப்படியாவது வாழ்த்து கூறிடலாம் என்று நினைத்து அவளுக்காக காத்திருந்தான்.
எங்கு வீட்டில் இருந்தால் அவன் வாழ்த்து கூறுகிறேன் என்று பேசி விடுவானோ என்ற பயத்தில் தான் அவளும் தன் அண்ணனின் வீட்டிலே தங்கி விட்டாள்.
மச்சான் உங்க தங்கச்சியும், அந்த விக்னேஷும் கிடைச்சுட்டாங்க என்ற சரவணனிடம் என்ன சொல்லுறிங்க மச்சான் என்றான் தேவ். ஆமாம் மச்சான் இப்போ வந்த போன் கால் அதைப் பற்றி தான் என்றவன் ஆனால் இரண்டு பேர் போன கார் ஆக்சிடென்ட் ஆகிருச்சாம். பிழைக்கிறது கொஞ்சம் கஸ்டம் தான் என்ற சரவணன் உங்க வீட்டுக்கு இன்பார்ம் பண்ணி எல்லோரையும் கிளம்ப சொல்லுங்க வால்ப்பாறை போகனும் என்றான்.
நான் விவேக் ப்ரதர் கிட்ட சொல்லி விக்னேஷ் வீட்டிற்கும் இன்பார்ம் பண்ண சொல்கிறேன் என்ற சரவணன் விவேக்கிற்கு போன் செய்தான்.
இரண்டு குடும்பமும் கோயம்புத்தூரில் உள்ள அந்த பெரிய மருத்துவமனையின் உள்ளே பிள்ளைகளின் உயிர் பிழைக்குமா, பிழைக்காதா என்ற தவிப்புடன் நின்றிருந்தது.
அத்தியாயம் 142
என்னடி நீ போகவில்லையா என்ற கனிமொழியிடம் ரோனி ஒன்றும் மகான் இல்லை கனி சாதாரண மனுஷி. உனக்கு ஒரு உண்மையை சொல்லட்டுமா எனக்கு இப்போ யார் மேலையும் பிடித்தமே இல்லை. எங்கேயாவது தூரமா போகனும் போல இருக்கு. குறிப்பா இனி என் வாழ்க்கையில் ஊர்மிளாங்கிற ஒருத்தியை சந்திக்கவே கூடாது. அப்பறம் திரும்ப அந்த வீட்டுக்குள்ள காலெடுத்து வைக்கிற சூழ்நிலை வரவே கூடாது அவ்வளவு தான் என்றாள் வெரோனிகா.
அப்போ உதய் அண்ணா கூட திரும்ப சேர மாட்டியா என்ற கனிமொழியிடம் அவர் தானே என்னை ஒதுக்கினாரு நானா ஏன் போயி சேரனும். யாரு கனி அந்த வினித்ரா அவளோட அப்பா, அம்மா செத்ததுக்கு நான் எப்படி பொறுப்பாக முடியும் சொல்லு. எவளாவது என் புருசனை காதலிப்பாள். அவளோட கல்யாணம் நின்று, குடும்பம் சிதைஞ்சு போனால் அதற்கு நான் தான் காரணமா என்ன. நான் பண்ணின முட்டாள்தனம் அந்த துரோகி ஊர்மிளாவை நம்பினது தான். என் வாழ்க்கையில் இனி யாரையுமே நம்பக் கூடாதுன்னு நல்ல செருப்படி கொடுத்துட்டு ஓடிப் போயிட்டாள் அதுவரை சந்தோசம்.
அந்த வீட்டில் என்னைக்காவது என் மாமியார் வேற, சின்ன மாமியார் வேறன்னு நான் பார்த்திருப்பேனா எல்லோரும் என் குடும்பம்னு தானே நினைச்சேன். ஆனால் ஒருத்தர் கூட எனக்காக நிற்கவில்லையே அடுத்தவங்களை விடு என் புருசனே எனக்காக நிற்கவில்லையே. போதும் எல்லாமே போதும் இந்த வாழ்க்கையே போதும்னு நான் முடிவெடுத்து ரொம்ப நாள் ஆச்சு கனி என்றவள் இப்போ எல்லாம் எனக்கு அழுகையே வருவதில்லை தெரியுமா. கண்ணீரும் வத்திருச்சு என்றாள்.
ரோனி என்ற கனிமொழியிடம் பயப்படாதே கனி நான் செத்துலாம் போக மாட்டேன் என்றவள் சரி நேரம் ஆச்சு கிளம்பலாம் என்று வீட்டிற்கு கிளம்பினாள்.
ஊர்மிளா, விக்னேஷ் இருவருமே உயிர் பிழைத்து விட்டனர். ஆனால் உயிர் பிழைத்தும் பிரயோஜனம் இல்லாத ஒரு நிலையை தண்டனையாக ஆண்டவன் கொடுத்து விட்டான்.
நடந்த விபத்தில் ஊர்மிளாவின் கரு கலைந்து போனதுடன் விக்னேஷிற்கு பயங்கரமான அடி அதனால் அவனால் இனி குடும்ப வாழ்க்கையில் ஈடு பட முடியாது என்று மருத்துவர் கூறிவிட்டார்.
அன்று விவேக்கிற்கு நடந்த விபத்தை வைத்து போலி சர்டிபிகேட் தயாரித்து அவனது காதலை அழிக்கப் பார்த்தான் ஆனால் இன்றோ விதி அவனுக்கு உண்மையாகவே தண்டனையை கொடுத்து விட்டது.
கர்மா இஸ் பூமராங் என்பது ஊர்மிளா, விக்னேஷ் வாழ்வில் உண்மையானது. உயிர் பிழைத்தும் பிரயோஜனம் இல்லாமல் போனதை எண்ணி , எண்ணி ஊர்மிளா அழ ஆரம்பித்தாள். அவளது நிலையைக் கண்ட குடும்பத்தினர் வருந்தினாலும் விக்னேஷ் கூறிய உண்மையைக் கேட்டதும் அவளை ச்சீ என்று வெறுத்து விட்டனர்.
அவர்கள் இருவரும் கண்விழித்த பிறகு தங்களின் குடும்பத்தினரைக் கண்டதும் அழுகை பொங்கிட அன்று தாங்கள் செய்த பாவம் தான் இன்று தங்களின் குழந்தையையும், தன்னையும் பழி வாங்கி விட்டது என்ற ஆற்றாமையில் ஊர்மிளா கனிமொழியின் ப்ரகனன்சி கிட்டை திருடி தனது என்று சொன்னது முதல், உதய்யின் அறையில் மைக் செட் பண்ணினது , மருத்துவரிடம் வெரோனிகாவை மாட்டி விட திட்டம் தீட்டியது, வீட்டை விட்டு ஓடி வந்தது என அனைத்தையும் ஒன்று விடாமல் சொல்லி அழுதான்.
அதைக் கேட்ட மொத்தக் குடும்பத்தினரும் அதிர்ச்சியில் உறைந்து நிற்க என் தங்கச்சி மேல எந்த தப்பும் இல்லைன்னு இப்போவாச்சும் நம்புறிங்களா மச்சான். அந்த வினித்ராவோட அப்பா, அம்மா செத்துப் போனதுக்கு என் தங்கச்சி துளி கூட காரணம் இல்லை. இதை அவள் சொன்னப்ப நீங்கள் யாரும் நம்பவில்லை இப்போ சம்பந்தப் பட்ட விக்னேஷே சொல்லிட்டான் என்றான் சரவணன்.
என்னங்க வீட்டிற்கு போகலாம் என்ற சுசீலாவிடம் சுசீ இப்போ எப்படி ஊர்மிளாவுக்கு இன்னும் குணமாகவில்லை என்றார் இளமாறன். அந்த சனியன் செத்தால் கூட நிம்மதி தான் நீங்கள் கிளம்புங்க நான் என் மருமகள் காலில் விழுந்து மன்னிப்பு கேட்கனும் என்றார் சுசீலா. மன்னிப்பா நீங்கள் கேட்டால் அண்ணி மன்னிச்சுருவாங்களா சித்தி என்றான் தேவ்.
அது எப்படி சித்தி வார்த்தைங்கிற கத்தியால ஒருத்தரை குத்திக் கிழிச்சு சாகடிச்சுட்டு என்னை மன்னிச்சுருன்னு உங்களால கேட்க முடியுது. இந்த ஐந்தரை மாசமா அண்ணி அனுபவிச்ச வலி, வேதனை எல்லாமே நீங்கள் கேட்கிற மன்னிப்பால சரியா போயிருமா என்ன என்றான் தேவ். அவன் கேட்ட கேள்வி சுசீலா, இளமாறன், நெடுமாறன், பிரகாஷை செருப்பால் அடித்தது போல் இருந்தது.
என்னடி இப்போ தான் வருகிறாய் நான்கு நாட்களா உன் அண்ணன் வீட்டிலே செட்டில் ஆகிட்டியா என்ற மலர்கொடியிடம் நீங்கள் என்ன வீட்டில் இருக்கிங்க என்றாள் வெரோனிகா. எனக்கு அங்கே போக பிடிக்கவில்லை ரோனி அது மட்டும் இல்லை ஸ்ரீஜா, இந்து இரண்டுபேரும் வீட்டில் இருக்காளுங்க அவளுகளுக்கு துணையா இருக்கனுமே. அந்த ஊர்மிளா கண்ணு முழிச்சாலும் எதுனாலும் டிராமா தான் பண்ணும் அதைப் போயி ஏன் பார்க்கனும் என்ற மலர்கொடி சரிடி சாப்பிட்டியா என்றார்.
சாப்பிட்டேன் அத்தை கனி சாப்பிடாமல் அனுப்புவாளா என்ன என்றவள் சரிங்க அத்தை நேரம் ஆச்சு நீங்கள் தூங்குங்க என்றாள். சரி ரோனி குட்நைட் என்ற மலர்கொடி சென்று விட்டார்.
ஒரு வாரம் மருத்துவமனையிலே கழிய விக்னேஷ், ஊர்மிளா இருவரையும் டிஸ்சார்ஜ் செய்து சகுந்தலா தன் வீட்டிற்கு அழைத்துச் சென்றார். ஏற்கனவே இழப்புகளை சந்தித்த மகனை மேலும் காயப் படுத்த விரும்பாத சந்திரமோகனும்
அவர்களை வீட்டிற்கு வர அனுமதித்தார்.
கல்லூரி முடிந்து வீட்டிற்கு வந்தவள் அங்கு இருந்தவர்களை கண்டும், காணாமல் தன்னறைக்கு செல்ல எத்தனிக்க ரோனி நில்லும்மா என்றார் சுசீலா. அமைதியாக அவள் நிற்க என்னை மன்னிச்சுரும்மா. ஊர்மிளா கணாமல் போன கோபத்தில் என்னன்னவோ பேசிட்டேன் என்று ஏதோ சொல்ல வந்தவரிடம் உங்களை மன்னிச்சுட்டேன் என்றாள் மேலும் பேச்சை வளர்க்க விரும்பாமல்.
ரோனி என்று அவர் மேலும் ஏதோ கூற வர அதான் உங்களை மன்னிச்சுட்டேன்னு சொல்லிட்டேனே அப்பறம் என்ன என்றவளிடம் உன்னோட கோபம் நியாயமானது தான் ரோனி நாங்கள் உன்னை எந்த அளவுக்கு காயப் படுத்திருக்கோம்னு என்று அவர் பேசிக் கொண்டிருக்கும் பொழுதே தன்னறைக்குள் நுழைந்து கொண்டாள்.
ஐந்து நிமிடம் கழித்து கையில் தனது பெட்டியுடன் வெளியே வந்தாள். ரோனி எங்கே கிளம்பிட்டடி என்ற மலர்கொடியிடம் என் அம்மா வீட்டிற்கு அத்தை என்றவள் உதய்யிடம் திரும்பி உங்க கிட்ட ஒரு பத்து நிமிசம் பேசனும் நான் பேசினால் பேசுவிங்களா என்றாள்.
அவன் ஆற்றாமையுடன் அவளைப் பார்த்திட நீங்கள் என் கிட்ட பேச வேண்டாம் நான் சொல்லுறதை காது கொடுத்து கேட்டால் போதும் என்றவள் பேச ஆரம்பித்தாள்.
என்னை இத்தனை நாளா நல்லபடியா பார்த்துக்கிட்டதுக்கு ரொம்ப நன்றி. ஆரம்பத்தில் நீங்க என் கிட்ட கோபமா , பேசாமல் இருந்ததிற்கு காரணம்
மிஸ் அன்டர்ஸ்டாண்டிங்னு தான் நான் நினைச்சேன்.
ஆனால் நம்ம ரூம்ல இல்லை உங்க ரூம்ல அந்த மைக் டிவைஸை எடுத்துட்டு வந்திங்களே அப்பவே நான் தப்பு பண்ணி இருக்க மாட்டேன்னு உங்களுக்கு புரிஞ்சுருக்கும் ஆனாலும் நீங்கள் என்னிடம் பேசுறதில்லை.
அப்போ தான் யோசிச்சேன். ஒருத்தர் கிட்ட சண்டை போட்டு மூன்று மாதத்திற்கு மேலும் பேசாமல் அதே கோபத்தோட இருந்தால் அந்த நபர் மேல நமக்கு சுத்தமா அன்பு, பாசம் எதுவுமே இல்லைன்னு தான் அர்த்தம். அப்போ உங்களுக்கு என் மேல் அன்பு, பாசம் எதுவும் இல்லை.
ஏன்னு யோசிக்கும் பொழுது தான் என்னோட மெடிக்கல் ரிப்போர்ட் என் கண்ணில் பட்டுச்சு. அதை எடுத்துட்டு போயி டாக்டர்கிட்ட விசாரிச்சேன் உண்மை தெரிஞ்சுகிட்டேன்.
இந்த உண்மை உங்க மொத்த குடும்பத்திற்குமே தெரியும் அது தெரிஞ்சும் என் மேல பாசத்தை காட்டின எல்லோருக்கும் ரொம்ப நன்றி.
ஒருவேளை நமக்குனு ஒரு குழந்தை இருந்திருந்தால் என்னை அந்த வீட்டை விட்டுப் போகச் சொன்னப்ப நீங்கள் எனக்காக பேசிருப்பிங்களோ என்னவோ. ஊர்மிளா விசயம் ஒரு சாக்கா வச்சு வம்சத்தை தழைக்க வைக்க முடியாத இவளை விரட்டிடலாம்னு கூட யோசிச்சு என்னை அனுப்பிருக்கலாம். உங்களுக்கு கூட அது சரின்னு என்று அவள் சொல்லும் பொழுதே அவளது கன்னத்தில் ஓங்கி அறைந்தான் உதய்.
என்னடி குழந்தை இல்லைன்னு உன்னை ஒதுக்கி வைக்கிறேன்னு சொல்ல வருகிறாயா. உன் புருசன் ஒன்றும் அவ்வளவு மலிவானவன் இல்லைடி. உன்னை நம்பவில்லை தான் வெரோனிகா. உன்னோட நம்பிக்கையை உடைச்சுட்டேன் தான். நான் மறுக்கவில்லை நானும் மனுசன் தானடி அந்த நேரத்தில் சூழ்நிலைகள் உனக்கு எதிரா இருந்துச்சு அதனால புத்தி மலுங்கி ஆத்திரத்தில் ஏதேதோ பேசிட்டேன் அதற்காக என்னை மன்னிச்சுருடி என்றவன் அவளது காலில் விழுந்து விட்டான்.
அத்தியாயம் 143
என்னை மன்னிச்சுரு ரோனி தப்பு பண்ணிட்டேன். ஊர்மிளாவைப் பற்றி தெரிஞ்சும் ஏதோ புத்தி கெட்டுப் போயி என்னன்னவோ பேசிட்டேன். உன் மேல கோபத்தினால பேசாமல் இல்லைடி. எப்படி உன் முகத்தில் முழிக்கிறதுன்னு தெரியாமல் தான் பேசாமல் இருந்தேன்.
சத்தியம் ரோனி நமக்கு குழந்தை இல்லைன்னு எல்லாம் உன்னை நான் ஒதுக்கி வைக்கவில்லைம்மா என்றவனிடம் வினித்ராவுக்காக ஒதுக்கி வச்சிங்க என்றவள் கசந்த புன்னகையை உதிர்த்து விட்டு காலை விட்டு எந்திரிங்க முதலில் என்றிட அவன் அவள் காலை விட்டு எழ அவனது சட்டையைப் பிடித்தாள் வெரோனிகா.
எவளோ ஒரு வினித்ராவோட கல்யாணம் நின்று போனதுக்கு நான் என்ன பண்ணினேன். அப்போ என்னை விட உங்களுக்கு அந்த வினித்ரா தானே முக்கியம். எவளோ ஒருத்திக்காக என்னை உங்களை கல்யாணம் பண்ணி இரண்டு வருசம் குடும்பம் நடத்தின பொண்டாட்டியை தூக்கி எறிஞ்சுட்டு இப்போ காலில் விழுந்தாள் சரியாகுமா.
நீங்க உடைச்சது உங்க மேல நான் வச்சுருந்த காதலை, நம்பிக்கையை எல்லாமே உடைச்சுட்டிங்க. இப்பவும் உங்களையும், வினித்ரா மேடத்தையும் சேர்த்து வைத்து நான் சந்தேகம் படவில்லை. அந்தப் பொண்ணோட இழப்பு அதிகம் தான். பெத்த அப்பா, அம்மாவை இழந்துட்டு அவங்க கஸ்டப் படுறாங்க நான் மறுக்கவில்லை. ஆனால் அதற்கு காரணம் நானா இருப்பேன்னு எப்படி உங்களால நம்ப முடிஞ்சது.
தப்பு தான் சந்துரு மாமா மேல சத்தியம் பண்ணிட்டு அதை மீறி ஊர்மிளாகிட்ட பேசினது தப்பு தான். ஆனால் நானா பேசவில்லை. நரேன் அண்ணா தான் அவள் கையில் ப்ரகனன்சி கிட் வச்சுருந்ததை சொன்னாரு. அவரு சொன்னதால் தான் எங்கே இவளால நம்ம குடும்ப மானம் போயிருமோன்னு பயந்து தான் பேசினேன். அது கூட ஹாஸ்பிடல் அழைச்சுட்டு போறதுக்காக தான்.
நரேன் அண்ணாவும் அவரு வேலையைப் பார்க்க அப்பா, அம்மாவை அழைச்சுட்டு கனடா போயிட்டாரு. எனக்காக பேச அந்த நேரத்தில் யாரும் இல்லை. நான் பண்ணினது ஒரே தப்பு. ஊர்மிளாங்கிற ஒருத்தியை நம்புனது மட்டும் தான். அதற்கான தண்டனையை நல்லாவே அனுபவிச்சுட்டேன்.
ரோனி, ரோனின்னு தூக்கி வச்சு கொண்டாடின எல்லோருமே என் கிட்ட உண்மையா இல்லைங்கிறதை உணர்த்தினதால ஊர்மிளாவுக்கு பெரிய நன்றிக்கடன் பட்டிருக்கேன் என்றவள் நான் கிளம்புறேன்.
போன வருசம் கல்யாண நாள் பரிசா நாம திரும்ப கல்யாணம் பண்ணிக்கலாமான்னு உங்க கிட்ட கேட்டேன். நீங்களும் என் விருப்பத்தை நிறைவேற்றி வச்சிங்க. அதே போல இன்னைக்கு இந்த இரண்டாவது திருமணநாள் அன்னைக்கு நாம விவாகரத்து பண்ணிக்கலாம்னு நான் கேட்கிறேன். இந்தப் பரிசையும் கொடுத்துருங்க என்றாள் தன் கணவனைப் பார்த்து.
அண்ணி ப்ளீஸ் பெரிய முடிவெல்லாம் எடுக்காதிங்க நாங்க பண்ணினது எல்லாம் தப்பு தான் என்ற பிரகாஷைப் பார்த்தவள் நீங்கள் ஸ்ரீஜா அக்கா நம்மளை சேர்த்து தப்பா பேசினப்போ ஒரு வார்த்தை சொன்னிங்க எனக்கு ஊர்மிளா எப்படியோ அப்படித் தான் ரோனி அண்ணினு. என்ன இருந்தாலும் ஊர்மிளா உங்க கூடப் பிறந்த தங்கச்சியாச்சே. என்னால அந்த இடத்திற்கு வர முடியாதுல பிரகாஷ் மாமா அதனால தான் என் முகத்தை பார்க்கவே அருவருப்பா இருக்குனு சொன்னிங்க என்றவள் கசந்த புன்னகையுடன் திரும்பிட பிரகாஷ் மௌனமாக தலை குனிந்தான்.
ரோனிம்மா நாங்கள் எல்லோரும் பண்ணினது மன்னிக்க முடியாத தப்பு தான் ஆனால் அதற்காக எங்களை எல்லாம் விட்டுட்டு போயிருவியா நீ இந்த வீட்டோட மூத்த மருமகள்டி என்ற கல்யாணிதேவியிடம் அதான் என் உறவே வேண்டாம்னு வீட்டை விட்டு விரட்டிட்டிங்களே ஆச்சி அப்பறம் என்ன மூத்த மருமகள் , இளைய மருமகள் என்றவள் உங்க எல்லோர்கிட்டையும் கையெடுத்து கும்பிட்டு கேட்கிறேன் என்னை போக விடுங்கள். இனி இந்த வெரோனிகா உங்க யாரோட வாழ்க்கையிலும் இல்லை. என்னால் என்னை பார்த்துக்க முடியும்.
இந்த ஐந்தரை மாதத்தில் என்னை என்னால் பார்த்துக்க முடியும்னு ஒரு தன்னம்பிக்கை, தைரியம் எல்லாமே வந்திருச்சு. இனி என் வாழ்க்கையில் யாருக்கும் இடம் இல்லை என்றவள் நான் கிளம்புகிறேன் என்று விட்டு வீட்டை விட்டு வெளியேறினாள்.
உதய் அவள் போறாள்டா கூப்பிடுடா என்ற மலர்கொடியிடம் போகட்டும்மா அவள் போகட்டும். நான் கூப்பிட்டாலும் அவள் நிற்க மாட்டாள் என்றவன் நான் பண்ணின தப்புக்கு இந்த தண்டனை தேவை தான் என்றான்.
பேருந்து நிறுத்தத்தில் நின்றிருந்தவளின் முன் காரை நிறுத்தினான் தேவ். அண்ணி காரில் உட்காருங்க என்ற தேவ்விடம் நான் பஸ்ல போயிப்பேன் தேவ் மாமா என்றாள் வெரோனிகா. பஸ் ஸ்டாண்ட் வரையாவது நான் கொண்டு வந்து விடுறேனே ப்ளீஸ் என்றிட அவளும் சென்று காரில் அமர்ந்தாள்.
அவளருகில் அவளது கணவனும் இருந்தான். என்ன தேவ் மாமா இது என்று இறங்கப் போனவளது கையைப் பிடித்து இழுத்து அமர வைத்த உதய் உன்னை என்னோட மாமானார் என்னை நம்பி தான் கல்யாணம் பண்ணி கொடுத்தாரு. ஒருவேளை உனக்கு என் கூட வாழ விருப்பம் இல்லாத பட்சத்தில் உன்னை பத்திரமா அவர்கிட்ட திருப்பி கொடுக்க வேண்டியது என்னோட கடமை அதனால அமைதியா வா என்றான்.
தேவ் நீ காரை ஸ்டார்ட் பண்ணு என்ற உதய்யை முறைத்தபடி அமர்ந்திருந்தாள் வெரோனிகா. ஐந்தரை மாசமா இந்த பொறுப்பு வெளக்கெண்ணெய் எல்லாம் எங்கே கிழிக்கப் போச்சுன்னு தெரியவில்லை என்று முனங்கியவளிடம் அது எங்கேயும் கிழிக்கப் போகவில்லை. மேடத்திற்கு தன்னம்பிக்கெ, தைரியம் வரணும்னு தான் ஒதுங்கி வேடிக்கை பார்த்துச்சுனு சொல்லு தேவ்.
இந்த அம்மாவை அவங்க சொந்தக் காலில் நிற்க வைக்கனும், யாரையும் டிபெண்ட் பண்ணி இவங்க வாழக் கூடாதுன்னு தான் வேலைக்கு ஆளே தேவை இல்லைன்னு சொன்ன கவிதா அக்காகிட்ட பேசி நானே சொந்த செலவுல துணி எடுத்துக் கொடுத்து இந்த மேடத்திற்கு வேலை கொடுக்க வச்சேன் என்றவனை அவள் முறைத்திட அவன் அணிந்திருந்த சட்டை அவள் தைத்த சட்டை தான். அதைக் கண்டவள் அவனை அடி , அடியென அடிக்க ஆரம்பித்தாள்.
எதற்கு இத்தனை டிராமா உங்களை என்ற வெரோனிகாவிடம் ஏன்டி காலில் விழுவேன் அப்போ பார்த்து தூக்குடினு சொன்னால் இப்போ தான் காலில் விழுந்து கிடக்கட்டும்னு பத்து நிமிசமா நின்னுட்டு இருக்க என்றான் உதய்.
நீங்க என்னை திட்டினிங்கள் தானே அப்போ என் காலில் விழத் தான் வேண்டும் என்று இருவரும் பேசிக் கொண்டிருக்க வண்டியை நிறுத்திய தேவ் புரியாமல் இவர்களைப் பார்த்திட என்னடா பார்க்கிற என்றான் உதய்.
இங்கே என்ன நடக்குது என்ற தேவ்விடம் என்ன நடக்குது ஆடு நடக்குது, கோழி நடக்குது, மாடு நடக்குது என்று சிரித்த வெரோனிகாவை அவன் முறைத்திட இந்த ஐந்தரை மாசமும் எங்களுக்குள்ள எந்த சண்டையும் கிடையாது தேவ் மாமா.
எல்லாமே டிராமா தான். வினித்ரா மேடத்தோட அப்பா , அம்மா இறந்தப்ப மாமா என்னை திட்டினது என்னவோ உண்மை தான். ஆனால் டாக்டர் சொன்னதைக் கேட்டப்போ தான் அவர் தெளிவாகினார்.
அந்த டாக்டர் சொல்லுறது போல ஊர்மிளா கர்ப்பமா இருக்கிறாள்னு சொல்றதால எனக்கென்ன யூஸ் இதை வீட்டில் சொல்லுவோம். அவங்க என்ன பண்ணுறாங்கனு பார்க்க தான் வீட்டில் சொன்னாரு. அப்போ வீட்டில் உள்ள யாருமே என்னை நம்பாமல் இஸ்டத்திற்கு பேச ஆரம்பிச்சதும் நாங்கள் இரண்டு பேருமே உடைஞ்சுட்டோம். அப்போ தான் வீட்டை விட்டு வெளியே வந்தோம்.
இதோ பாரு ரோனி கொஞ்ச நாள் நாம பிரிஞ்சு தான் இருக்கனும். ஊர்மிளா பெரிசா உன்னை சிக்க வச்சுருக்கா அது எதனால ஏன்னு தெரியலை. அவளும் , விக்கியும் எங்கே போனாங்கனும் தெரியலை. அவங்க கிடைக்கிற வரை நீயும், நானும் சண்டையாவே இருக்கனும் என்றவனிடம் மாமா ஏன் இதெல்லாம் என்றாள் வெரோனிகா.
உனக்கு ஒரு விசயம் தெரியுமா நம்ம லைப்ல இந்த கேம் ஊர்மிளாவால மட்டும் நடக்கவில்லை. ஊர்மிளா கிரிமினல் தான் ஆனால் அவளுக்கு யாரோ ஒருத்தர் மாஸ்டர் மைண்ட்டா இருந்து கெய்ட் பண்றாங்க அது யாருன்னு கண்டு பிடிக்கனும். அதுவரை நம்ம பிரிவு அவசியம் என்றான் உதய்.
உங்க அண்ணா இப்படி சொன்னதும் நாங்களும் பெர்பெக்ட்டா பிரிஞ்ச மாதிரி நடிச்சோம். இல்லை இல்லை வாழ்ந்தோம் மாமா என்றாள் வெரோனிகா.
சரி அந்த மாஸ்டர் மைண்ட் யாருன்னு கண்டு பிடிச்சிங்களா என்ற தேவ்விடம் ஓஓ கண்டு பிடிச்சுட்டோமே என்றான் உதய். யாருண்ணா என்றவனிடம் நரேன் என்றாள் வெரோனிகா.
நரேனா அவன் ஏன் என்ற தேவ்விடம் எல்லாம் உன்னால தான்டா நாயே என்று தம்பியின் தலையில் இரண்டு கொட்டு வைத்தவன் நீ தான நாயே அவன் அக்காவோட வாழ்க்கையை கெடுத்து அவளை கல்யாணம் பண்ணிகிட்ட. அவள் அக்கா வாழாத வாழ்க்கையை இவள் வாழ்கிறாளாம் அந்தப் பஞ்சப் பரதேசி இந்த வேலை பார்க்கத் தான் ஃபாரின்ல இருந்து வந்துச்சு. சரியா ஊர்மிளா ஓடுறதுக்கு இரண்டு நாள் முன்னே மாமா, அத்தையையும் பேக் பண்ணி ஊருக்கு போயிட்டான். என் கெஸ் கரைக்டா இருந்தால் நாளைக்கோ, இல்லை நாளை மறுநாளோ இந்தியா வருவான்.
அவனோட எண்ணம் வெரோனிகாவும், உதயச்சந்திரனும் பிரியனும் அது நடந்தால் நிச்சயம் வருவான். அதான் இன்னைக்கு இவளை வீட்டை விட்டு வெளியே போடின்னு சொன்னேன் என்றான் உதய்.
அந்தப் பொறுக்கி தான் இதைப் பண்ணினான்னு எப்படி அண்ணா கண்டு பிடிச்சிங்க என்ற தேவ்விடம் தேவ் மாமா என் அண்ணா ஐ.பி.எஸ் ஆபிசர் மறந்துட்டிங்களா. அந்த டாக்டர் அப்பவே சொல்லிட்டாங்க அது நரேன் அண்ணாவோட வேலை தான்னு என்றாள் வெரோனிகா .
இப்போ என்ன பண்ணப் போறிங்க என்ற தேவ்விடம் என்ன பண்ணலாம். நானும், என் பொண்ட்டடியும் ஜாலியா என் மாமனார் வீட்டில் கறி விருந்து சாப்பிடப் போறோம் என்றான் உதயச்சந்திரன்.
கறி விருந்தா உங்களுக்கா பழையசோறும், பச்சை மிளகாயும் தான். என் பிறந்தநாளைக்கு கூட நீங்க விஷ் பண்ணலைல என்றவளிடம் பேபிம்மா தத்ரூபமா நம்ம அப்பா, அம்மா கூட நம்புற அளவுக்கு இரண்டு பேரும் ஆக்ட் பண்ணிருக்கோம் அதை நினைச்சு சந்தோசப் படுவியா இப்போ தான் பிறந்தநாளுக்கு விஷ் பண்ணலையாம் விஷ் என்றவனது தலையில் கொட்டியவள் போடா மாமா என்றாள்.
சரிண்ணா அண்ணி நம்ம வீட்டிற்கு என்று இழுத்த தேவ்விடம் இனி எப்பவுமே அந்த வீட்டிற்கு என் பொண்டாட்டி வர மாட்டாள் தேவ். அவளை வேண்டாம்னு விரட்டின இடத்திற்கு நானும் போக மாட்டேன் என்று புன்னகைத்தான் உதய்.
அத்தியாயம் 144
அப்போ அவுட் ஹவுஸ் தானா என்றவளிடம் ஏன்டி நாம இந்த ஊரிலே இருக்கப் போறதில்லை இப்போ தான் அவுட்ஹவுஸ்ல இருக்காங்க என்றவனை அவள் முறைத்திட என்ன முறைப்பு என்றான் உதய். மக்கு மாமா இன்னும் இரண்டு வருசம் எனக்கு படிப்பு இருக்கு என்றவளது மூக்கைப் பிடித்து ஆட்டியவன் காலேஜ் டிரான்ஸ்பர்டி என் முட்டாள் பொண்டாட்டி என்றான் உதய்.
அப்போ எங்களை விட்டு போக இரண்டு பேரும் முடிவே பண்ணிட்டிங்க அப்படித் தானே என்ற தேவ்விடம் நிரந்தரமா இல்லை தேவ். விசேசம்னா எல்லோரும் ஒன்றாக இருக்கலாம் ஆனால் திரும்ப நம்ம வீட்டிற்கு வேண்டாம்.
ஒரே வீட்டில் ஒருத்தர் முகத்தை ஒருத்தர் பார்க்க சங்கடப் பட்டு அது எப்பவுமே உறுத்தலா தான் இருக்கும். அதனால நானும், என் ரோனியும் ஜாலியா வெளியூர்ல செட்டில் ஆகப் போகிறோம் என்றான் உதயச்சந்திரன்.
மாமா பசிக்குது என்றவளைப் பார்த்து தின்னிக்கொட்டு என்றான் அவளது கணவன். ஹலோ மிஸ்டர்.சந்துரு இப்போ நான் ஒன்றும் உங்களை சாப்பாடு வாங்கித் தரச் சொல்லவில்லை. எனக்கு பசிக்குது வண்டியை நிறுத்த சொல்லுங்கனு தான் சொன்னேன். இப்போ நான் ஒன்றும் பழைய வெரோனிகா இல்லை என்றவளிடம் அப்பறம் நீங்க என்ன பலாக்காய் விற்கிற வெரோனிகாவா அம்மணி என்றான் உதய்.
எதேய் பலாக்காயா மீ டெய்லர் மேன் பேசனிங் டெய்லர் என்றவளைப் பார்த்து மனசாட்சி இருக்காடி உனக்கு இந்தச் சட்டையைப் பாரு ஸ்டிச் பண்ணுறேன்னு நீ பண்ணி வச்சுருக்கிற கொடுமையை எல்லாம் என்னனு நான் சொல்ல என்றவனது தலையில் நங்கென்று கொட்டியவள் போடா லூசு மாமா என்றாள்.
என்னடீ காலில் விழ வைக்கிற, போடாங்கிற, லூசு மாமாங்கிற ஒரு ஐந்தரை மாதம் உன்னை கண்டுக்காமல் விட்டதால கொழுப்பு கூடிருச்சு இரு , இரு மவளே உன்னை என்றிட அடப்பாவி அண்ணா நான் காருக்குள்ள தான் இருக்கேன். உங்க ரொமான்ஸை கொஞ்சம் கண்ட்ரோல் பண்ணுங்க என்று தேவ் கூறிட வெரோனிகா கலகலவென சிரித்தாள்.
அதைக் கண்டு தேவ், உதய் இருவரும் சிரித்தனர். ஸாரி ரோனி உன்னோட இந்த சிரிப்பை காணாமல் போக வச்சுட்டேன் என்றான் உதய். அட விடுங்க மாமா நாம ப்ளான் பண்ணி தானே எல்லாம் பண்ணினோம் சரி தேவ் மாமா அங்கே ஒரு ரோட்டுக்கடை இருக்கு அங்கே நிறுத்துங்க என்றாள் வெரோனிகா.
ஏன்டி இங்கே வேற ஹோட்டலுக்கு போகலாமே என்ற உதய்யிடம் மாமா என்கிட்ட இருக்கிற காசுக்கு என்ன முடியுமோ அதான் வாங்க இரண்டு பேரும் என்று அவர்களையும் அழைக்க சரி, சரி முன்னே போ என்றான் உதய்.
இறங்கி அவள் சென்று மூவருக்கும் மீன் சாப்பாடு ஆர்டர் செய்து கொண்டிருந்தாள். அண்ணா அண்ணிக்கு எப்படி மெடிக்கல் ரிப்போர்ட் என்ற தேவ்விடம் அவளுக்கு முன்னமே தெரிஞ்சுருக்கு. அதை என் கிட்ட கேட்க ரொம்ப தயங்கி தயங்கி மறைச்சுட்டு இருந்தாள்.
அப்போ தான் கனிமொழி கர்ப்பமா இருக்கிற விசயம் தெரிஞ்சப்போ நம்ம குழந்தையும் இருந்திருந்தால் நல்லா இருக்குமேன்னு அவள் அழுதாள். அப்போ நமக்கும் குழந்தை பிறக்கும் ரோனின்னு சொன்னப்ப தான் எப்படி மாமா பிறக்கும். என்னோட ரிப்போர்ட் தான் இனிமேல் அதற்கு வாய்ப்பே இல்லைன்னு சொல்லிருச்சேன்னு சொல்லி அழ ஆரம்பிக்கவும் எனக்கு என்ன பண்ணுறதுனே தெரியலை அப்பறம் அவளாவே சமாதானம் ஆகிட்டாள்.
என்ன ஒரு இரண்டு முறை என்னை விவாகரத்து பண்ணிட்டு வேற கல்யாணம் பண்ணிக்கோங்க மாமான்னு சொல்லிட்டு இருந்தாள். இதே பிரச்சனை எனக்கு இருந்தால் நீ வேற கல்யாணம் பண்ணிருப்பியா ரோனின்னு கேட்டேன் அதற்கு பிறகு இதைப் பற்றி பேசுறதில்லை என்றவன் சரி வா அவள் வெயிட் பண்ணுகிறாள் என்று தன் தம்பியுடன் சாப்பிட சென்றான்.
என்ன பண்ணி வச்சுருக்கிங்கடா இரண்டு பேரும் என் கிட்டையே பொய் சொல்லிருக்க அப்படித் தானே விக்கி என்ற சகுந்தலாவிடம் அம்மா அது என்று அவன் தயங்கிட பேசாதடா பேசாதே. இவளை நம்பி ஓடிப் போனதோட விளைவை பார்த்தியா என்று வருத்தப் பட்டவர் ஊர்மிளாவைப் பார்த்து நீயெல்லாம் ஒரு பொண்ணாடி .
ஓடிப் போற நாயிங்க இரண்டு பேரும் கல்யாணத்தன்னைக்கு விடியற் காலையில் தான் ஓடித் தொலைவிங்களா. இரண்டு உயிரைக் கொண்ட பாவம், அப்பாவியான அந்த வெரோனிகாவோட வாழ்க்கையை கெடுத்த வயித்தெறிச்சல் எல்லாம் சேர்த்து தான் உன் வயித்துப் பிள்ளையை முழுங்கி உனக்கு காலம் முழுக்க தண்டனை கிடைச்சுருச்சு என்றார் சகுந்தலா.
அவர் சொல்லும் உண்மை அவளை சுட்டு விட அழுது கரைந்தாள் ஊர்மிளா. எத்தனை ஆசையாக திருமணம் செய்து, எத்தனை சந்தோசமாக வாழ்ந்து, அந்த வாழ்க்கையின் ஆதாரமாக கர்ப்பமாகி இன்று அந்தக் கருவும் சிதைந்து, இனி குழந்தையே பிறக்காமல் போகிறதே என்பதை நினைக்க , நினைக்க வலி அதிகமானது அவளுக்கு.
செய்த பாவத்தின் நிழல் விரட்டுவதை அவளால் தாங்கவே முடியவில்லை. என்ன செய்தால் அந்த வெரோனிகா தன் மீது அன்பு வைத்தது தவிர அவள் வேறொன்றும் செய்ய வில்லையே. அவளை வார்த்தையால் பலமுறை வதைத்த பிறகும் தனக்கு நல்லது தானே நினைத்திருந்தாள். அவளை நான் ஏன் இத்தனை தூரம் பழிவாங்கினேன். அவளை பழிவாங்கிய பிறகாவது என்னால் என் குடும்பத்தில் பழையபடி ராணியாக வாழ முடிந்ததா உண்மை தெரிந்த பிறகு நான் மருத்துவமனையில் இருந்த பொழுதே அம்மா என்னை வெறுத்துச் சென்றாரே. இனிமேல் யார் எனக்காக இருக்கிறார் என்று அழுதாள் ஊர்மிளா.
என்ன சொல்லுற பவி என்ற வினித்ராவிடம் ஆமாம் வினி எங்க டாக்டர் பிருந்தாவும், அந்த உதய்யோட தம்பி தேவ்வும் ப்ரண்ட்ஸ் ஆச்சே. அதனால பிருந்தா டாக்டருக்கு அவங்க வீட்டில் என்ன நடந்தாலும் தெரிஞ்சுரும். அது மட்டும் இல்லை அந்த ஊர்மிளா எங்க டாக்டரோட பேசன்ட் வேற. அவங்க மூலமா தான் தெரிஞ்சுகிட்டேன் அந்த விக்னேஷ், ஊர்மிளா இரண்டு பேரும் வந்துட்டாங்களாம் என்றாள் பவித்ரா.
அந்தப் பொறுக்கி வந்துட்டானா அவனைப் பார்த்து நான்கு கேள்வி நறுக்குனு கேட்கனும் என் கூட கிளம்பு என்றாள் வினித்ரா. வினி அவசியம் போகனுமா என்ற பவித்ராவிடம் கட்டாயம் போகத் தான் வேண்டும் என்றாள் வினித்ரா.
ரோஷினி ஒழுங்கா சாப்பிடு என்று மகளுக்கு உணவு ஊட்டிக் கொண்டிருந்தாள் லாவண்யா. அந்த நேரம் அங்கு வந்த ஊர்மிளாவைப் பார்த்து சித்தி என்ற குழந்தையின் காதை திருகிய லாவண்யா யாரு யாருக்கு சித்தி கொன்னுருவேன் உன்னை கண்டவளை எல்லாம் சித்தின்னு சொன்னினா. சொந்தக் குடும்பத்திற்கே குழி பறிச்ச இவள் பக்கத்தில் எல்லாம் விளையாட்டா கூட நீ போகாதே அப்பறம் அவளோட வன்மம் பிடிச்ச புத்தி உனக்கும் வந்திரும் என்று மகளைத் திட்டுவது போல் ஊர்மிளாவை சாடினாள் லாவண்யா.
ஏய் என்னடி உன் பிரச்சனை அந்தப் பொண்ணை ஏன் வம்புக்கு இழுக்கிற என்ற கௌதமிடம் நான் ஏன் அவங்க கூட எல்லாம் வம்பு இழுக்கிறேன். என் பிள்ளைக்கு இந்த மாதிரி எல்லாம் ஒரு கேடு கெட்ட புத்தி வந்துரக் கூடாதுன்னு சொல்லி வளர்க்கிறேன் என்றாள் லாவண்யா.
அவளிடம் பதில் பேச முடியாமல் தலையை குனிந்து கொண்டு இடத்தை காலி செய்தாள் ஊர்மிளா.
அழைப்புமணி ஒலித்திட கதைவைத் திறந்த லாவண்யா வினித்ராவைப் பார்த்து வாங்க என்றாள். உங்க கொளுந்தனார் இருக்காரா என்ற வினித்ராவிடம் உள்ளே தான் இருக்கிறான் இருங்க கூப்பிடுறேன் என்றவள் விக்னேஷின் அறைக்கு சென்று விக்கி உன்னை பார்க்க விருந்தாளி வந்திருக்காங்க எழுந்து வா என்றாள்.
அவனும் மெதுவாக வாக்கிங் ஸ்டிக்கை ஊனிக் கொண்டு மெல்ல நடந்து வந்தான். அவனைக் கண்ட வினித்ராவிற்கு ஆவேசம் பொங்கிட அவனது சட்டையைப் பிடித்தாள்.
ஏன்டா பொறுக்கி நீ ஓடிப் போறதுனா கல்யாணம் ஒரு வாரம், பத்து நாள் இருக்கும் பொழுது ஓடித் தொலைஞ்சுருக்க வேண்டியது தானடா. வெண்ணெய் நீ கல்யாணத்தன்னைக்கு தான் ஓடுவியா பொறுக்கி, பொறுக்கி என்றவள் உனக்கு இந்தக் கல்யாணத்தில் விருப்பம் இல்லைன்னா அதை நிச்சயதார்த்தம் நடந்த அன்னைக்கே சொல்லி இருக்கலாமேடா என் அப்பா, அம்மாவாச்சும் உயிரோட இருந்திருப்பாங்க. உன்னால் என் வாழ்க்கை போச்சு, என் அப்பா, அம்மா உயிர் போச்சு என் எதிர்காலத்தையே இருளாக்கிட்டியேடா பொறுக்கி என்றவள் அவனை மேலும் அடிக்க ஆரம்பித்தாள்.
ப்ளீஸ் அவரை அடிக்காதிங்க என்று வந்த ஊர்மிளாவின் கன்னத்திலும் பளார், பளாரென இரண்டு அறை கொடுத்தவள் ஏன்டி நான் உனக்கு என்னடி பாவம் பண்ணினேன். அவன் சொல்லவில்லை என்றாலும் நீயாவது சொல்லி இருக்கலாமே என்ற வினித்ராவிடம் பதிலேதும் பேசாமல் மௌனமாக நின்றாள் ஊர்மிளா.
அத்தியாயம் 145
பதில் சொல்லுங்க ஊர்மிளா மேடம். இப்படி கல்லு மாதிரி நின்றால் என்னடி அர்த்தம் என்ற வினித்ராவிடம் ஸாரி என்று அவள் கூற ஸாரியா என்னடி ரொம்ப ஈஷியா சொல்லிட்ட உங்களால் நான் இழந்த இழப்புகளுக்கு வெறும் ஸாரின்னு சொல்லிட்டா போதுமாடி இந்த நாயை நீ இழுத்துட்டு ஒடிட்டனு மானம் போச்சு, பொண்ணு கல்யாணம் நின்னுருச்சுன்னு அவமானம் தாங்க முடியாமல் என் அப்பா தூக்கில் தொங்கிட்டாரு. கண்ணு முன்னே மகளோட வாழ்க்கையும் போச்சு, புருசனோட உசுரும் போச்சுங்கிற அதிர்ச்சியில் என் அம்மா ஹார்ட் அட்டாக் வந்து செத்துட்டாங்கடி. உங்க இரண்டு பேரோட சுயநலத்தால எனக்கு குடும்பமே இல்லாமல் பண்ணிட்டிங்களேடி அப்படி என்னடி நான் உனக்கு பாவம் பண்ணினேன். ச்சே உங்களை மாதிரி சுயநலப் பிசாசுகளை பார்க்கவே அருவருப்பா இருக்கு என்ற வினித்ரா த்து என்று காரி உமிழ்ந்து விட்டு நிமிர அங்கு நின்றிருந்த சந்திரமோகனைப் பார்த்தாள்.
என்ன சார் மகனுக்கு அடி பட்டதும் அவன் பண்ணின துரோகத்தை எல்லாம் மறந்து ஏத்துக்கிட்டிங்க போல என்றிட அவர் மௌனமாகவே நின்றிருந்தார். இந்த நாயை தலை முழுகிட்டேன்னு சொன்னிங்க இப்போ நடுவீட்டுல கூட்டிட்டு வந்து குடித்தனம் வச்சுருக்கிங்க போல என்றவள் எல்லோருமே துரோகிங்க தான் போல என்று விட்டு உன் மேல போலீஸ் கம்ப்ளையன்ட் கொடுத்துருக்கேன்டா பொறுக்கி. என்னை மணவறையில் அசிங்கப் படுத்தி என் அப்பா, அம்மா சாவுக்கு காரணமான உன்னை சும்மா விடவே மாட்டேன் என்ற வினித்ரா கோபமாக செல்ல எத்தனிக்க மேடம் ப்ளீஸ் நாங்க பண்ணினது தப்பு தான் அதற்காக என்றவளது கையை உதறினாள்.
ஏய் என்னைத் தொடாதேடி உன்னை மாதிரி கேடு கெட்ட ஒருத்தி என்னைத் தொட்டு என்னை அசிங்கப் படுத்தாதே என்று விட்டு கோபமாக சென்று விட்டாள் வினித்ரா.
நீங்க பண்ணின காரியத்தால என் புருசன் இன்னும் என்ன என்ன அசிங்கம் படனும்னு எழுதி இருக்கோ என்ற சகுந்தலா மகனையும், மருமகளையும் முறைத்திட நல்லாவே நடிக்கிறிங்க அத்தை நீங்கள் என்றாள் லாவண்யா.
நான் என்னடி நடிக்கிறேன் என்ற சகுந்தலாவிடம் உங்க மகனை நீங்களே இவள் கூட ஓடிப்போன்னு சொல்லிட்டு இப்போ மாமா மேல ஏதோ அக்கரை, மரியாதை எல்லாம் இருக்கிறது போல சீன் போடுறிங்க என்றாள் லாவண்யா.
லாவண்யா அமைதியா இரு என்ற கௌதமிடம் என்னால இந்த டிராமாவை எல்லாம் பார்த்துட்டு அமைதியா இருக்க முடியலை கௌதம் என்ற லாவண்யா தன் மாமியாரிடம் திரும்பி குடும்ப மானத்தை சந்தி சிரிக்க வச்சுட்டு ஓடிப்போன இந்த ஓடுகாலிங்க இரண்டு பேரையும் எதற்காக வீட்டிற்குள்ள சேர்த்திங்க. வேண்டாம்னு சொன்ன மாமாகிட்ட செத்துருவேன்னு டிராமா பண்ணி இதுங்களை அவசியம் இந்த வீட்டோட வைக்கனுமா என்றாள் லாவண்யா.
ஏய் அவன் என் பிள்ளைடி. அவன் வாழ்க்கையில் இழக்க கூடாததை இழந்துட்டு விட்டேத்தியா வந்திருக்கான் இந்த நிலைமையில் அவனுக்கு அறுதலா இருக்க வேண்டியது ஒரு அம்மாவா என்னோட கடமை என்றார் சகுந்தலா.
வரே வா உங்க பிள்ளை இதே பிள்ளை தான் சும்மா கூட இவள் மாசமா இருக்கிறாள்னு பொய் சொல்லி உங்களை நம்ப வச்சு வீட்டை விட்டு ஓடிப் போயி ஒரு குடும்பத்தையே நிர்மூலம் ஆக்கி வச்சுருக்கான். இப்போ வந்துட்டு போனாளே ஒரு பொண்ணு அவள் சிந்துற ஒவ்வொரு கண்ணீரும் நம்ம பரம்பரையவே காவு வாங்கிரும். இவன் பண்ணின பாவத்தால நாளைக்கு என் பிள்ளைக்கும் அந்த பாவம் வந்து சேரும் என்றவளிடம் உன் பிள்ளைக்கு ஏன்டி பாவம் வந்து சேரப் போகுது உன் மனசுல என்ன தான்டி இருக்குது விக்கி இந்த வீட்டில் இருக்க கூடாது அதானே என்றார் சகுந்தலா.
ஆமாம் அது தான் போதுமா அவனையும், அவளையும் பார்க்க , பார்க்க எரிச்சலா வருது என்ற லாவண்யாவிடம் லாவண்யா போதும் வா என்று இழுத்துச் சென்றான் கௌதம். நல்லா அவளை பேச விட்டுட்டு பேசி முடிச்சதும் இழுத்துட்டுப் போடா ரொம்ப நல்லா இருக்கு என்றார் சகுந்தலா.
பாருங்க என்ன பேசுறாங்கனு என்ற லாவண்யாவிடம் நான் சொல்கிறேன்லடி வாயை மூடு என்ற கௌதம் மனைவியை அறைக்குள் இழுத்துச் சென்றான்.
என்னடி உன் பிரச்சனை என்ற கௌதமிடம் என்ன பிரச்சனைன்னா உங்க தம்பியையும், அந்த ஊர்மிளாவையும் பார்க்க , பார்க்க ஆத்திரமா வருது அவங்க இங்கே இருக்க கூடாது என்றாள் லாவண்யா.
இது என் அப்பாவோட வீடு இங்கே அவனை இருக்கனும், இருக்க கூடாதுன்னு சொல்லுற உரிமை உனக்கோ, எனக்கோ கிடையாது. என் அப்பாவோட முடிவு அவன் இங்கே இருக்கனும்ங்கிறது அது மட்டும் இல்லை லாவண்யா அவன் குழந்தையை இழந்துட்டு , தன்னோட வாழ்க்கையையே இழந்துட்டு வந்து நிற்கிறான். அவனை எப்படியோ எக்கேடோ கெட்டுப் போன்னு விட முடியுமா சொல்லு என்றான் கௌதம்.
எனக்கு பெத்தவங்க, கூடப் பிறந்தவங்க யாரும் வேண்டாம் அவள் தான் வேண்டும் என்று தானே வீட்டை விட்டு ஓடிப் போனான் . இப்போ மட்டும் என்ன அன்னைக்கு கல்யாண மண்டபத்தில் அந்த வினித்ராவோட சொந்தக்காரங்க நம்மளை எப்படி எல்லாம் அசிங்கப் படுத்தினாங்க எல்லாம் யாரால் அவனால் தானே.
அதெல்லாம் மறந்து போச்சா அந்தப் பொண்ணு மட்டும் அன்னைக்கு நம்ம மேல கேஸ் கொடுக்க விரும்பவில்லைன்னு சொல்லலைனா நம்ம குழந்தையை அனாதையா விட்டுட்டு நாம எல்லோரும் கம்பி எண்ணிட்டு இருந்திருப்போம். எல்லாத்தையும் எப்படித் தான் நீங்களும், உங்க குடும்பமும் மறந்து போறிங்களோ தெரியலை என்ற லாவண்யாவை மௌனமாக பார்த்தான் கௌதம்.
என்ன என் முகத்தில் எதுவும் படமா ஓடுது இப்போ தான் பார்த்துட்டு இருக்கிங்க போங்க என்றிட அமைதியாக சென்று விட்டான் கௌதம்.
என்னடா உன் பொண்டாட்டிக்கு என்ன பிரச்சனை இப்போ தான் ஆடிட்டு இருக்கிறாள் என்ற சகுந்தலாவிடம் அம்மா உரலுக்கு ஒரு பக்கம் இடி, மத்தளத்திற்கு இரண்டு பக்கம் இடி. நான் மத்தளம் அவளோட இடியை அவள் அடிச்சிட்டாள். இப்போ நீங்களும் அடிங்க கேட்டுக்கிறேன் என்றவனிடம் என்ன பதில் சொல்லுவார் சகுந்தலா. மௌனமாக கண்ணீர் சிந்தினார்.
எல்லாம் நம்மளால தானே விக்கி என்ற ஊர்மிளாவிடம் என்னால ஊர்மி எல்லாமே என்னால மட்டும் தான். நான் தான் சிவனேன்னு இருந்த உன்னை காதலிக்கிறேன்னு சொல்லி உன் மனசைக் கெடுத்தேன். நீயும் என் மேல இருக்கிற பைத்தியத்தில் உங்க வீட்டில் என்னன்னவோ பிரச்சனை பண்ணி கடைசியில் நாம ஊரை விட்டு ஓடி நம்ம குழந்தையும் கலைஞ்சு இப்போ நான் என்றவனது வாயில் வார்த்தை வர மறுக்க அவனது வாயில் விரலை வைத்தாள் ஊர்மிளா.
தப்பு ஊர்மி, தப்பு நான் ரொம்ப பெரிய தப்பு நீ கிளம்பு, உன் வீட்டிற்கு கிளம்பு அவங்க காலில் விழுந்து நான் மன்னிப்பு கேட்கிறேன். என் கூட நீ வாழ வேண்டாம் உனக்குனு ஒரு வாழ்க்கை இருக்கு. நீ சின்னப் பொண்ணு கடவுள் எனக்கு கொடுத்த தண்டனையால நீ ஏன் கஸ்டப் படனும் அதனால நாம பிரிஞ்சுரலாம் ஊர்மிளா என்றான் விக்னேஷ்.
என்ன பேசுறிங்க விக்னேஷ் நாம ஏன் பிரியனும். பிரியுறதுக்காகவா என்னோட படிப்பைக் கூட பாதியில் நிறுத்திட்டு உங்க கூட ஓடி வந்தேன். குழந்தை இல்லைன்னா என்ன விக்கி நாம சேர்ந்து வாழ முடியாதா ப்ளீஸ் விக்கி என்னை ஒதுக்காதிங்க நீங்கள் இல்லைன்னா நான் செத்துருவேன் என்று அழுதவளைத் தன்னோடு சேர்த்து அணைத்தவன் தானும் அழ ஆரம்பித்தான்.
என்னடா எதற்கு இப்போ இந்தியா போற என்ற வசுந்தராவிடம் உதய் அத்தானும், ரோனியும் பிரிஞ்சுட்டாங்களாம்மா என்றான் நரேன். ஐயோ, ஏன்டா என்றவனிடம் எல்லாம் என்னால தான் அம்மா என்று பேய் போல சிரித்தான் நரேன். என்னடா சொல்லுற என்ற வசுந்தராவிடம் என் அக்காளுங்க வாழாத ஒரு வாழ்க்கையை எங்கேயோ இருந்து வந்த ஒரு பட்டிக்காட்டுப் பொண்ணு வாழ்ந்திருவாளா.
ஸ்ரீஜா உதய் மேல ஆசைப் பட்டாள் ஆனால் அந்த தேவ் இடையில் வந்து ஸ்ரீஜாவோட ஆசை, கனவு எல்லாத்தையும் சிதைச்சுட்டான். பெரிய அக்கா தான் ஏமாந்துட்டாள்னு சின்ன அக்கா அவனை கல்யாணம் பண்ணிக்க ஆசைப்பட்டு தானே இந்தியா போனாள். ஆனால் நம்ம யார்கிட்டேயும் சொல்லாமல் அவனுக்கு எவளோ ஒருத்தியை கல்யாணம் பண்ணி வச்சுருக்காரு உங்க அண்ணன். அப்போ இந்து எப்படி ஏமாந்து நின்னிருப்பாள்.
என்ன தான் உதய் மேல காதல் இல்லை, ஆசை இல்லைன்னு இரண்டு பேரும் இப்போ வாய் வலிக்க சொல்லிட்டு இருந்தாலும் எத்தனை கனவுகளோட மாமா வீட்டிற்கு போனாங்க ஆனால் அவங்க இரண்டு பேருக்குமே ஏமாற்றம் தான் அதான் அந்த வெரோனிகாவை எப்படி அந்த வீட்டை விட்டு விரட்டலாம்னு ஸ்கெட்ச் போட்டு விரட்டியும் விட்டேன் , என் அக்காளுங்க வாழாத வாழ்க்கையை வேற எவளும் வாழக்கூடாது என்றவன் நடந்த அனைத்து விசயங்களையும் கூறினான்.
அத்தியாயம் 146
அதை எல்லாம் கேட்டு முடித்த வசுந்தரா மகனின் கன்னத்தில் பளார், பளாரென அறைந்தார். பொறுக்கி நீயெல்லாம் மனுசனாடா அந்தப் பொண்ணு உன்னைத் தன் கூடப் பிறந்த அண்ணனைப் போல தானடா பார்த்து பழகினாள். அவளுக்குப் போயி இப்படி ஒரு துரோகத்தைப் பண்ணி இருக்க என்றவர் மகனை மேலும் அறைந்தார்.
என்னாச்சு வசு ஏன் அவனை அடிக்கிற என்ற நெடுஞ்செழியனிடம் மகன் கூறிய அனைத்து விசயங்களையும் கூறிட பொறுக்கி நாயே ஏன்டா உனக்கு இந்த கேடு கெட்ட வேலை என்று மகனை அடித்து ,வசைபாடியவர் அவன் கூட நாமளும் போறோம். ரோனிகிட்ட மன்னிப்பு கேட்டு உதய் மேல எந்த தப்பும் இல்லைன்னு புரிய வைக்கனும் என்றார் நெடுஞ்செழியன்.
நீங்க இரண்டு பேரும் என்ன மகான்களா என்ற நரேனிடம் மனுசங்கடா நாயே அதனால தான் நீ பண்ணின தப்பை நாங்க சரி பண்ண்பார்க்கிறோம் என்றார் வசுந்தரா.
என்னடா உன் அக்காளுங்க என்ன குறையா வாழ்ந்துட்டு இருக்காளுங்க ஸ்ரீஜா உதய் கூட வாழ்ந்திருந்தால் கூட இவ்வளவு சந்தோசமா வாழ்ந்திருக்க மாட்டாள். அவளுக்கு கேன்சர் இருக்கு அதனோட ட்ரீட்மென்ட்டால முடி கொட்டி மொட்டையானதும் தானும் மொட்டை போட்டு அவள் எதற்குமே கலங்க கூடாதுன்னு அவளுக்கு துணையா இருக்கிறான் தேவ். உதய் கூட அப்படி இருப்பானான்னு கேட்டால் நிச்சயம் சந்தேகம் தான்.
இந்திரஜா உதயச்சந்திரனை விரும்பவே இல்லை ஏன்டா ஏன் உன்னோட புத்தி இப்படி இருக்கு. பொறுக்கி அந்த ஊர்மிளாவை தூண்டி விட்டு வீட்டை விட்டு ஓட வச்சு இப்போ அவளோட வாழ்க்கையும் நாசமா போச்சு என்று தலையில் அடித்துக் கொண்டவர் ஒழுங்கா கிளம்பு மாமா வீட்டிற்கு போகிறோம் என்று விட்டு தன் கணவனிடம் இந்தியா செல்வதற்கான ஏற்பாட்டினை கவனிக்க சொன்னார்.
என்னை மன்னிச்சுருங்க மாமா என்ற உதய்யிடம் இல்லை மாப்பிள்ளை நீங்கள் தான் என்னை மன்னிக்கனும் உண்மை எதுவும் தெரியாமல் உங்களை ரொம்பவே தப்பா நினைச்சுட்டோம் என்ற கதிரேசன் சாப்பிடுங்க மாப்பிள்ளை என்று உதயச்சந்திரனை சாப்பிட வைத்தார்.
என்னடி என்ன யோசனை என்ற உதய்யின் தோளில் சாய்ந்தவள் ஏன் மாமா உங்களுக்கு என் மேல வெறுப்பே இல்லையா என்றாள் வெரோனிகா. வெறுப்பா உன் மேலையா ஏன் என்றவனிடம் என்னால உங்களுக்கு என்ன சந்தோசம் மாமா என்றாள்.
நீ என் கூட இருக்கிறதே சந்தோசம் தானடி என்றவனிடம் என்னால உங்களுக்கு குழந்தை பெத்துக் கொடுக்க முடியாதே மாமா என்றாள் வெரோனிகா.
சரி என்றவனிடம் என்ன சொல்வதென்று தெரியாமல் விழித்தவள் பேசாமல் நீங்க ஏன் என்னை விட்டுட்டு இன்னொரு கல்யாணம் பண்ணிக்க கூடாது என்றவளை முறைத்தவன் சரி உனக்கு பிரச்சனை. உன்னால எனக்கு ஒரு குழந்தை பெத்துக் கொடுக்க முடியது அதனால நான் இன்னொரு கல்யாணம் பண்ணிக்கிறேன். ஒரே ஒரு கேள்வி கேட்கிறேன் பதில் சொல்லு என்ற உதய் இதே குறை எனக்கு இருந்தால் நீயும் என்னை விட்டுட்டு இன்னொரு கல்யாணம் பண்ணிக்கிருவியா ரோனி என்றான் உதய்.
மாமா நான் பொண்ணு என்னால எப்படி என்றவளிடம் ஏன்டி பொண்ணுனா என்ன பையன்னா என்ன எல்லோரும் மனிதர்கள் தான். உணர்ச்சிகள் எல்லோருக்கும் தான் இருக்கும். குழந்தை ஒரு வரம் தான் நான் மறுக்கவில்லை ஆனால் ஒரு விசயம் யோசிச்சியா நமக்கு குழந்தை பிறந்தால் நம்ம இரண்டு பேரோட பாசமும் குழந்தை மேல இருக்குமே தவிர நமக்குள்ள இருக்காது. அப்பா, அம்மாவா வாழுறது ஒரு வரம் தான் ஆனால் அதை விட பெரிய வரம் உனக்கு நான் குழந்தையாகவும், எனக்கு நீ குழந்தையாகவும் வாழ்கிற வாழ்க்கை நமக்கு கிடைத்த வரம் ரோனி சும்மா கண்டதையும் யோசிக்காதே என்றவன் இன்னும் இரண்டு வருசம் படிப்பு இருக்கு மகாராணி முதலில் அதை எப்படி முடிக்கலாம்னு யோசிங்க அதை விட்டுட்டு எப்போ பாரு எனக்கு பாப்பா இல்லை அடுத்த வீட்டில் ஒரு பீப்பா இல்லைன்னு புலம்பாதே என்றான்.
அவனது மார்பில் சாய்ந்தவள் ஐ லவ் யூ மாமா என்றிட ஐ லவ் யூ டூ ரோனி ஹாப்பி அனிவர்சரிடி என்று தன் மனைவியின் நெற்றியில் முத்தமிட்டான்.
மாமா ஒரு யோசனை என்றவளிடம் குழந்தை பற்றி இல்லாமல் நீ எதைப் பற்றி வேண்டுமானாலும் பேசலாம் என்றவனிடம் குழந்தை பற்றி இல்லை மாமா வினித்ரா மேடம் பற்றி என்றாள் வெரோனிகா.
அவங்களைப் பற்றி என்ன என்றவனிடம் அவங்களுக்கு ஒரு மாப்பிள்ளை பார்க்கனும்ல அதைப் பற்றி ஒரு யோசனை சொல்லலாமா என்றாள்.
சொல்லு கேட்போம் என்றவனிடம் என் மாமா மகன் செல்வம் அத்தானுக்கு வீட்டில் பொண்ணு பார்த்துட்டு இருக்காங்க என்றவளிடம் அவரா அவரு என்ன படிச்சுருக்காரு என்றான் உதய்.
அக்ரிகல்சர் படிச்சுட்டு இப்போ விவசாயம் தான் பண்ணிட்டு இருக்காரு என்றவளிடம் நான் வினித்ரா மேடம் கிட்ட பேசி பார்க்கிறேன் என்றவன் செல்வம் வீட்டில் வினித்ராவை ஏற்றுக் கொள்ளுவாங்களா அவங்களுக்கு அப்பா, அம்மா இல்லை என்று தயங்கியவனிடம் நீங்க வினித்ரா மேடம் கிட்ட மட்டும் பேசிட்டு பதில் சொல்லுங்க அவங்களுக்கு சம்மதம்னா மற்ற விசயங்களை நான் பார்த்துக்கிறேன் என்றாள் வெரோனிகா.
உத்தரவு மகாராணி தங்கள் பேச்சை மீறி இந்த அடிமை நடந்தது உண்டோ என்றவனிடம் மாமா என்று சிணுங்கினாள் வெரோனிகா.
என்ன வினி இன்னும் எத்தனை நேரம் இப்படியே உட்கார்ந்திருப்ப என்ற பவித்ராவின் தோளில் சாய்ந்து அழுதாள் வினித்ரா. தோழியை சமாதானம் செய்த பவித்ரா வினி எதற்கு அழற என்றிட என்னால முடியலை பவி எனக்கு என் அம்மா, அப்பாவை பார்க்கனும் போல இருக்கு. ஏன்டி அவங்க கொஞ்சம. கூட என்னைப் பற்றி யோசிக்காமல் செத்துப் போயிட்டாங்க அப்படி என்னடி நான் பாவம் பண்ணிட்டேன் என்ற வினித்ராவை சமாதானம் செய்வதற்குள் அவளுக்கு போதும் போதும் என்றானது.
தேவ் ஏதோ யோசனையுடனே வீட்டில் இருந்தான். அவனது தோளில் கை வைத்த மலர்கொடியை நிமிர்ந்து பார்த்தவன் என்னம்மா என்றிட ரோனி எங்கேடா என்றார். அண்ணி அவங்க அப்பா வீட்டில் இருப்பாங்கம்மா என்றவனிடம் உதய் என்று தயங்கினார் மலர்கொடி.
அண்ணன் எங்கே இருப்பாரு சொல்லுங்க அண்ணி கூட சண்டை போட்டுனாலும் ஒரே வீட்டில் இருப்பாரே தவிர அவங்களை விட்டுட்டு ஒருநாளும் இருக்க மாட்டாரு அதனால நீங்க கவலைப் பட வேண்டாம். அண்ணியை அண்ணன் எப்பவுமே விட்டுட மாட்டாரு என்றான் தேவ்.
அவனை அவள் மன்னிப்பாளா என்ற மலர்கொடியிடம் கண்டிப்பா மன்னிப்பாங்கம்மா நீங்க எதையும் யோசிக்காதிங்க அர்ச்சனா போன் பண்ணினாளா என்று பேச்சை மாற்றினான் தேவ்.
உதய், ரோனி இருவரும் வீட்டை விட்டுச் சென்று இரண்டு நாட்கள் கடந்த நிலையில் வசுந்தரா, நெடுஞ்செழியன், நரேன் மூவரும் வீட்டிற்கு வர அவர்களை வரவேற்றார் கல்யாணிதேவி.
வசுந்தரா மொத்த குடும்பத்தின் முன்னிலையில் தன் மகன் செய்த கேவலமான செயல்களைப் பற்றிக் கூறிட கோபமான பிரகாஷ் அவனை அடிக்க ஆரம்பித்தான்.
பொறுக்கி நாயே நீ பண்ணின அந்த கேவலமான காரியத்தால அண்ணியை நாங்க எல்லோரும் அசிங்கப்படுத்திட்டோமேடா ஏன்டா இவ்வளவு சீப்பா நடந்துகிட்ட என்ற பிரகாஷிடம் என் அக்காளுங்க வாழாத வாழ்க்கையை எங்கிருந்தோ வந்த ஒரு பட்டிக்காட்டுப் பொண்ணு வாழ்ந்துட்டு இருக்கிறாள் அதைப் பார்த்துட்டு என்னால எப்படி சும்மா இருக்க முடியும் என்றவனது கன்னத்தில் ஓங்கி அறைந்தாள் ஸ்ரீஜா.
என்னடா உன் அக்காளுங்க வாழாத வாழ்க்கை நான் எத்தனை சந்தோசமா தேவ் கூட வாழ்ந்துட்டு இருக்கிறேன்னு தெரியுமா ஆமாடா ஒரு காலத்தில் உதய் மாமா மேல ஆசைப் பட்டேன் தான் நான் மறுக்கவே இல்லை ஆனால் அதற்காக அவரை வேண்டாம்னு சொன்ன என்னையே நினைச்சுட்டு அவர் வாழ்க்கையை வீணாக்கனுமா. ஆரம்பத்தில் உன்னைப் போல தான் நானும் நினைச்சு அந்த வெரோனிகா மேல விசத்தை கக்குனேன் ஆனால் அவளோட இயல்பான குணமே அவளை என்னை நேசிக்க வச்சுருச்சு.
சொல்லப் போனால் இன்னைக்கு நிலைமைக்கு எனக்கு ரோனியும், நிலாவும் ஒன்று தான். எப்படி நீ அவளை வீட்டை விட்டு அனுப்ப இவ்வளஙு கீழ்த்தனமான திட்டம் போட்டிருப்ப என்று அவனை மேலும், மேலும் அடித்திட நரேன் எதுவுமே பேசவில்லை.
ஆளாளுக்கு வசை பாடி அவனை அடிக்க , திட்ட என இருந்தாலும் தேவ் மட்டும் நடப்பதை கையை கட்டி வேடிக்கை பார்த்தான்.
அத்தியாயம் 147
என்ன தேவ் நீ எதுவுமே சொல்லாமல் இருக்கிற என்ற மலர்கொடியிடம் என்ன சொல்லனும் அம்மா. அண்ணி திரும்ப இந்த வீட்டிற்கு வரவே மாட்டாங்க அண்ணனும், அண்ணி இல்லாமல் வரவே மாட்டான். நரேனோட ஆசை பாதி நிறைவேறிடுச்சு என்ற தேவ் அதாவது உன்னோட அக்காளுங்க வாழாத வாழ்க்கையை என் அண்ணி வாழுறாங்களேன்னு நீ பொறாமை பட்ட சரியா மச்சான். உன் அக்காளுங்க வாழுற இந்த வாழ்க்கை அதாவது இந்த வீட்டில் ஒரு வாழ்க்கை என் அண்ணிக்கு தேவை இல்லை. அவங்க நல்லபடியா சந்தோசமா என் அண்ணன் கூட வேற ஊரில், வேற வீட்டில் வாழப் போறாங்க அவங்களோட வாழ்க்கையை நீங்கள் யாருமே பார்க்க வேண்டாம்னு இந்த ஊரை விட்டே போயிட்டாங்க என்றான் தேவச்சந்திரன்.
என்ன சொல்லுற தேவ் என்ற மலர்கொடியிடம் இது தான் உண்மை அம்மா அண்ணியும், அண்ணனும் இனி இங்கே வர மாட்டாங்க. அப்பறம் அண்ணி அண்ணனை வெறுத்து இந்த வீட்டை விட்டு போகவில்லை. அண்ணி வெறுத்து ஒதுக்கிற அளவுக்கு என் அண்ணனும் எந்த தப்பும் பண்ணவில்லை என்ற தேவ் இந்த கருப்பு ஆட்டை பிடிக்க என் அண்ணனும், அண்ணியும் நடத்தின நாடகம் தான் அவங்களோட பிரிவு, சண்டை இதெல்லாம் என்ற தேவ் எல்லா விசயங்களையும் கூறிட அதைக் கேட்ட மலர்கொடி ரொம்பவே சந்தோசம் அடைந்தார்.
எங்கே தன் மகனின் வாழ்க்கை முடிந்து விட்டதோ என்று நினைத்தவரின் மனதில் சந்தோசமாக மகனும், மருமகளும் பிரியவில்லை என்ற செய்தி இருந்தது.
அவமானத்தில் தலை குனிந்து நின்றான் நரேன். அவன் மட்டும் இல்லை குடும்பத்தில் இருந்த மற்றவர்களுமே அவமானமாக தான் உணர்ந்தனர்.
(இவர்கள் எப்படியோ போகட்டும் நாம நம்ம ஹீரோ, ஹீரோயின் என்ன பண்ணுறாங்கனு பார்க்கலாம்.)
என்ன சொல்லுற ரோனி என்ற வினோதாவிடம் நான் என்ன கதையா சொல்லுறேன். உன் வீட்டில் தான் உன் மச்சான் கல்யாணம் ஆகாமல் சுத்திட்டு இருக்காரே அவருக்கு காலா காலத்தில் ஒரு பொண்ணை பார்த்து கல்யாணம் பண்ணி வைக்கிற எண்ணமெல்லாம் உங்களுக்கு கிடையாதா என்றாள் வெரோனிகா.
ஏன்டி எங்களுக்கு அந்த எண்ணம் இல்லாமலா இருக்கும். செல்வம் மச்சானோட கல்யாணம் தள்ளிப் போறதிற்கு நானும், பிரபுவும் ஓடிப் போன விசயம் ஒரு பெரிய காரணமாகவும், தடையாகவும் இருக்கு. என்ன பண்ணுறது வேற வேற ஜாதியிலா கல்யாணம் பண்ணினோம் நானும், பிரபுவும் முறைப் பையன், முறைப் பொண்ணு தானே அதைக் கூட புரிஞ்சுக்காமல் இந்த பொண்ணு வீட்டுக்காரங்க எல்லோரும் பையனோட தம்பி ஓடிப் போயிட்டானாம் அந்த வீட்டில் எப்படி நம்ம பொண்ணைக் கொடுக்கிறதுன்னே பேசினால் என்ன அர்த்தம் ரோனி என்றாள் வினோதா.
நாம என்ன சிட்டியிலா இருக்கோம் அடுத்த வீட்டில் கொலை நடந்தால் கூட தெரியாமல் போக இது கிராமம் அக்கா உனக்கு தெரியாதா என்ன ஒரு சின்ன விசயம் கூட காட்டுத்தீ போல பரவும்னு என்ற வெரோனிகா நம்ம செல்வம் அத்தானுக்கு நான் ஒரு பொண்ணை பார்த்திருக்கேன் உங்கள் எல்லோருக்கும் பிடிச்சுருந்தால் மேல பேசலாம் என்றாள்.
பொண்ணா யாருடி அது நம்ம அனுவா என்ற வினோதாவிடம் அனுவா ஏய் உனக்கு மனசாட்சி இருக்கா என்னை தான் பள்ளிக்கூடம் போகும் போதே கல்யாணம் பண்ணிக் கொடுத்திங்க அவளையாச்சும் படிக்க விடுங்க பக்கிகளா என்றாள் வெரோனிகா.
அப்போ பொண்ணு யாருடி என்ற வினோதாவிடம் வினித்ரா என்று தயக்கத்துடன் கூறினாள் வெரோனிகா. அந்தப் பொண்ணோட கல்யாணம் என்ற வினோதாவிடம் ஆமாம் அவங்க தான் என்றாள் வெரோனிகா.
செல்வம் அத்தானை விடு அந்தப் பொண்ணு நம்ம ஊரில் வந்து முதலில் வாழுவாளா என்ற வினோதாவிடம் அவங்க கிட்ட பேச தான் சந்துரு மாமா போயிருக்காங்க என்றாள் வெரோனிகா.
என்ன சொல்லுற பூங்கொடி என்ற கந்தசாமியிடம் நம்ம செல்வத்திற்கு அந்தப் பொண்ணை பேசி முடிக்கலாமா அண்ணே என்றார் பூங்கொடி. அப்பா, அம்மா தவறிப் போன பொண்ணுனு நினைக்காதிங்க நம்ம ரோனிக்கு ஒரு அக்கா இருந்திருந்தால் எப்படி அவளோட கல்யாணம் நடக்குமோ அதே போல நடக்கும். சீர்வரிசையில் எந்த குறையும் வைக்க மாட்டேன் என்றார் பூங்கொடி.
என்னத்தா பூங்கொடி இப்போ என்ன உன் அண்ணங்காரன் சீருக்காகவா யோசிக்கிறேன். அந்தப் பிள்ளை நல்ல குணமா இருந்து நம்ம குடும்பத்தை அனுசரிச்சு போற பிள்ளையா இருந்தால் போதும். எனக்கு சம்மதம் தான் எதற்கும் செல்வத்துக்கிட்ட ஒரு வார்த்தை கேட்டுட்டு பதிலை சொல்லுறேன் என்றார் கந்தசாமி.
என்ன சார் என்கிட்ட ஏதோ பேசணும்னு சொன்னிங்க என்ற வினித்ராவிடம் மேடம் இன்னும் எத்தனை நாளைக்கு இப்படியே இருக்கப் போறிங்க என்றான் உதய். எப்படி இருக்கேன் என்றவளிடம் உங்க அம்மா, அப்பா இறந்துட்டாங்க இனி அவங்க திரும்ப வரவே போறதில்லை அப்படி இருக்கும் பொழுது அவங்களையே நினைச்சுட்டு இப்படியே எத்தனை நாளைக்கு இருக்கப் போறிங்க என்றான் உதய்.
அவனை கேள்வியாக அவள் பார்த்திட உங்களுக்குனு ஒரு வாழ்க்கை இருக்கு என்றவனிடம் எனக்கு அதில் நம்பிக்கை இல்லை சார் என்றாள் வினித்ரா. என்ன மேடம் நம்பிக்கை இல்லை உங்க அப்பா, அம்மா இல்லை தான். ஆனால் நீங்கள் இப்படியே தனியாவே வாழ்க்கையை தொலைச்சுட்டு வாழ்ந்திங்கனா இறந்து போன அந்த ஆத்மாக்கள் எப்படி சாந்தி அடையும். அவங்க ஆத்மா சாந்தி அடையனும்னா உங்களுக்கு ஒரு நல்லவாழ்க்கை அமையனும் என்றான் உதய்.
நல்ல வாழ்க்கை என்று கசந்த புன்னகை புரிந்தவளிடம் நான் அமைச்சுக் கொடுத்தால் ஏத்துப்பிங்களா மேடம் என்றான் உதய். நீங்களா என்றவளிடம் நான் தான் ஆனால் நான் மட்டும் இல்லை என்னோட மனைவியும் சேர்ந்து தான் என்றான்.
நீங்களும், வெரோனிகாவும் என்றவள் தயங்கிட நானும் ,அவளும் பிரியனும்னா அது அந்த மரணத்தால மட்டும் தானே தவிர வேற எந்த விசயத்தாலும் கிடையாது மேடம். அவள் என்னோட உயிர், உலகம், வாழ்க்கை என்றவன் நடந்த எல்லா நிகழ்வுகளையும் கூறினான்.
வெரோனிகா ரொம்ப லக்கி சார் என்ற வினித்ராவிடம் சத்தியமா இல்லை மேடம் நான் தான் ரொம்ப லக்கி. அவளை எத்தனையோ முறை காயப் படுத்தி இருக்கேன் ஆனால் பதிலுக்கு அவள் ஒரு முறை கூட காயப் படுத்தினதே இல்லை என்றவன் சரி அதை விடுங்க இந்த போட்டோவில் உள்ளவரை உங்களுக்கு பிடிச்சுருக்கான்னு யோசிச்சு சொல்லுங்க.
இந்த போட்டோவிற்கு பின்னே செல்வத்தோட போன் நம்பர் இருக்கு அவரை உங்களுக்கு பிடிக்கும் பட்சத்தில் இந்த நம்பருக்கு கால் பண்ணி பேசுங்க.
விக்னேஷை விட பல மடங்கு நல்ல மனிதன் செல்வம். கிராமத்தில் வளர்ந்த ஆளா இருந்தாலும் படிச்சுருக்கிறார். உங்களை புரிஞ்சுகிட்டு நல்லபடியா வாழ்வார்னு எனக்கு தோன்றுகிறது என்றவன் மேடம் கடைசியா ஒரே ஒரு விசயம் சொல்லிக்கிறேன்.
வாழ்க்கையில் எப்பவுமே செகன்ட் சாய்ஸ் தான் பெஸ்ட். என்னோட சொந்த அனுபவம் நான் நேசிச்ச பொண்ணை கல்யாணம் பண்ணி இருந்தால் கூட இவ்வளவு சந்தோசமா வாழ்ந்திருப்பேனான்னு தெரியவில்லை.
வெரோனிகா கூட வாழுற இந்த வாழ்க்கையோட சந்தோசம் வேற யாரு கூட வாழ்ந்தாலும் இருந்திருக்காது என்றான் உதய்.
செல்வம் கட்டாயம் உங்களோட எல்லா காயங்களுக்கும் மருந்தா இருப்பாருன்னு நான் நம்புகிறேன் என்று கூறி விட்டு சென்று விட்டான் உதயச்சந்திரன்.
என்ன பங்காளி இப்படி யோசனையா இருக்கிங்க என்ற உதய்யிடம் இல்லை பங்காளி எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை. அந்த வினித்ரா பொண்ணை அப்பா, அம்மாவுக்கு கூட பிடிச்சுருக்கு. ஆனால் எங்க குடும்பத்தோட சம்மதம் மட்டும் போதாதே அந்தப்பொண்ணு மனசுல என்ன இருக்குனு தெரிஞ்சுக்கனுமே என்றான் செல்வம்.
அவங்களுக்கு யோசிக்க கொஞ்சம் அவகாசம் கொடுப்போம் பங்காளி. சீக்கிரமே நல்ல பதில் வரும் என்ற உதய் அப்பறம் உங்களை நம்பி ஒரு பொண்ணை கட்டிக் கொடுக்கப் போறோம் நீங்கபாட்டிற்கு கள்ளு குடிக்க போயிராதிங்க என்ற உதய்யிடம் அட ஏன் பங்காளி நீங்க வேற அன்னைக்கு என் மச்சானை வெறுப்பேத்த தான் கள்ளு இறக்குற இடத்திற்கு வந்தேன் என்றான் செல்வம்.
அட அட நம்பிட்டேன் பங்காளி என்று சிரித்த உதய்யிடம் நிஜம் தாங்க நீங்க வேற என்ற செல்வம் சிரித்திட உதயச்சந்திரனும் சிரித்தான்.
என்ன வினி கையில் போட்டோ என்ற பவித்ராவிடம் இன்று காலை உதயச்சந்திரன் தன்னிடம் பேசியதைப் பற்றி கூறினாள் வினித்ரா. நீ என்ன முடிவு எடுத்திருக்க வினி என்ற பவித்ராவிடம் என்னோட முடிவு என்று ஏதோ சொல்ல வந்தாள் வினித்ரா.
அத்தியாயம் 148
என்னடி பதில் சொல்லு என்ற பவித்ராவிடம் என்ன பதில் சொல்லுறதுன்னு தெரியலை பவி என்றாள் வினித்ரா. என்னடி இப்படி சொன்னால் என்ன அர்த்தம் என்ற பவித்ராவிடம் அந்த செல்வம் எப்படிப் பட்ட கேரக்டர்னு என்று இழுத்தவளிடம் அதான் போன் நம்பர் இருக்கே பேசிப் பாரு. ஆளு பார்க்கிறதுக்கு நல்லா தானே இருக்கிறார் என்றாள் பவித்ரா.
பேசு வினி ஒருத்தரை பற்றி தெரியாமல், திருமணத்திற்கு சம்மதம்னு சொல்லுறதை விட தெரிஞ்சுகிட்டு, புரிஞ்சுகிட்டு சம்மதம் சொல்வது தான் பெஸ்ட் என்றாள் பவித்ரா.
சரியென்று தலையாட்டிய வினித்ரா போனில் செல்வத்தின் எண்ணை டயல் செய்தாள். போன் முழுவதும் ரிங் ஆகி விட அவன் எடுக்கவில்லை. எடுக்கவில்லை பவி என்று அவள் சொல்லிக் கொண்டு இருக்கும் பொழுதே வினித்ராவின் மொபைல் போன் ஒலித்தது.
அவள் டயல் செய்திருந்த செல்வத்தின் எண்ணிலிருந்து அழைப்பு வர தோழியிடம் காட்டியவள் அவள் பேச சொல்லி தைரியம் கொடுக்க போனை அட்டன் செய்தாள் வினித்ரா.
ஹலோ என்று தயங்கியபடி கூறியவளிடம் ஹலோ யாருங்க என்று கேட்டான் செல்வம். நான் வினித்ரா என்றவள் ஒரு விதமான தயக்கத்துடன் பேசிட ஓஓ நீங்களா சொல்லுங்க என்றான் செல்வம்.
இல்லை உதய் சார் உங்களைப் பற்றி சொன்னாங்க அதான் என்றவள் எனக்கு உங்க கிட்ட கொஞ்சம் பேசனும் என்றாள் வினித்ரா. பேசுங்க என்றவனிடம் போனில் இல்லை நேரில் பேசனும் என்றாள் வினித்ரா.
சரிங்க ஒரு இரண்டு நாளில் நான் உங்களை வந்து பார்க்கிறேன் இப்போ வயலில் கொஞ்சம் வேலை போயிட்டு இருக்கு என்றவனிடம் சரிங்க என்ற வினித்ரா போனை வைக்கப் போக ஒரு நிமிசம் என்றான் செல்வம். சொல்லுங்க என்றவளிடம் எனக்கு உங்களை பிடிச்சுருக்கு வினித்ரா என்றிட அவளுக்கு என்ன பதில் சொல்வதென்று தெரியாமல் தவித்தாள். அவளது தவிப்பை உணர்ந்தவன் போல உங்க பதிலை இரண்டு நாள் அப்பறமே சொல்லுங்க என்று போனை வைத்தான் செல்வம்.
என்னடி சொன்னாரு என்ற பவித்ராவிடம் இரண்டு நாள் கழிச்சு மீட் பண்ணலாம்னு சொன்னாருடி என்ற வினித்ரா உதய்யை நான் விரும்பின விசயம் பற்றி சொல்லனும் என்றாள். பைத்தியமா வினி நீ அதை ஏன் சொல்லனும். உன்னோட வாழ்க்கையை நீயே கெடுத்துருவ போல என்ற பவித்ரா நீ என்ன பேசனுமோ அதை மட்டும் பேசு மறந்தும் உதய்யை நீ விரும்பின விசயத்தை சொல்லிடாதே என்றாள்.
என்ன பண்ணலாம் அக்கா என்ற சுசீலாவிடம் எதைப் பற்றி கேட்கிற சுசி என்றார் மலர்கொடி. ரோனி, உதய் இரண்டு பேரும் திரும்ப நம்ம வீட்டிற்கு வருவதற்கு என்று தயங்கினார் சுசீலா. அவனும், அவளும் பிரியாமல் தானே சுசி இருக்காங்க அவங்க எங்கே இருந்தால் என்ன. நம்ம மகனும், மருமகளும் ஒற்றுமையா இருந்தாலே போதும். நம்ம கண்ணு முன்னே தான் இருக்கனும்னு அவசியம் இல்லை என்றார் மலர்கொடி.
என்னங்க யோசனை என்ற மலர்கொடியிடம் நம்ம உதய் திரும்ப வரவே மாட்டானா மலர் என்ற நெடுமாறனிடம் எப்படி வருவான் சொல்லுங்க என்றார் மலர்கொடி. மலர் என்றவரிடம் ஆமாங்க எப்படி வருவான். உங்களுக்கு நல்லாவே தெரியும் உதய் நம்ம வெரோனிகா மேல உயிரையே வச்சுருக்கான்னு அப்பறம் எப்படி நீங்க அவளை வீட்டை விட்டு போக சொல்லுவிங்க.
நம்ம மகனா, உங்க தம்பியான்னு வரும் பொழுது பெத்த பாசத்தை விட, கூடப் பிறந்த பாசம் தான் கண்ணில் தெரிஞ்சுச்சு இல்லை இல்லை வீட்டிற்கு வந்த மருமகளா, உங்க தம்பியான்னு யோசிச்சிங்க அந்த யோசனை தான் நம்ம மகனை நம்ம கிட்ட இருந்து பிரிச்சுருச்சு என்ற மலர்கொடி கெட்டதிலும் ஒரு நல்லது என் மருமகள் அவள் புருசனோட பிரச்சனைகள் இல்லாத ஒரு வாழ்க்கையை வாழப் போகிறாள் என்றார் .
நீ ஏன் வெரோனிகா மேல இத்தனை அன்பு வச்சுருக்க மலர் அந்தப் பொண்ணால நம்ம வம்சத்தை விருத்தி பண்ண முடியாதே என்ற நெடுமாறனிடம் மருமகள் இன்னொரு மகள்னு நான் நம்புகிறேன். இதே ஒரு நிலைமை நம்ம அர்ச்சனாவுக்கு வந்திருந்தால் நாம இப்படியா பேசிருப்போம். குழந்தை எல்லாம் ஒரு விசயமா நீ ஏன் கவலைப் படுறன்னு தானே சொல்லுவோம். நம்ம பொண்ணுனா ஒரு நியாயம் வாழ வந்த பொண்ணுனா ஒரு நியாயம் எல்லாம் என்கிட்ட இல்லைங்க. என் ரோனிக்கு பிள்ளை பிறக்காமலே போனாலும் அவள் ஒருத்தி தான் என் உதய்க்கு மனைவி என்றார் மலர்கொடி.
என்ன தேவ் இரண்டு நாளா என்கிட்ட கூட நீ சரியா பேசுறதில்லை என்ற ஸ்ரீஜாவிடம் எனக்கு குற்றவுணர்ச்சியா இருக்கு ஸ்ரீஜா என்றான் தேவ். என்னாச்சு ஏன் என்றவளிடம் நரேன் பண்ணின தப்பால பாதிக்கப்பட்டது ரோனி அண்ணியும், ஊர்மிளாவும் தான். ஆனால் அவன் இப்படி ஒரு தப்பை பண்ணினதுக்கு மூலக் காரணம் நான் தானே.
நான் மட்டும் அன்னைக்கு நைட் உன்னை உதய் மாதிரி நடிச்சு அந்த பார்ட்டிக்கு அழைச்சுட்டு போகாமல் இருந்திருந்தால் ஒருவேளை நீயும் அந்த ட்ரிங்க்ஸ் குடிச்சுருக்க மாட்ட நானும் உன் கிட்ட தப்பா நடந்து எல்லாம் என்னோட தப்பு தான். நம்ம வீட்டில் முடிவு பண்ணினது போல உனக்கும், உதய்க்கும் கல்யாணம் நடந்திருந்தால் நம்ம வீட்டில் இன்னைக்கு நடக்கிற எந்த பிரச்சனையும் நடந்தே இருக்காது என்றான் தேவ்.
தேவ் அன்னைக்கு நீ பண்ணினது தப்பு தான் நான் இல்லைன்னு சொல்லவில்லை ஆனால் அதையும், நரேன் பண்ணினதையும் நீ குழப்பிக்காதே. கடவுள் என் தலையில் உன் கூட முடிச்சு போட்டு வச்சுருக்கும் பொழுது நான் எப்படி உதய் மாமாவை கல்யாணம் பண்ணி இருக்க முடியும். சும்மா நரேன் பண்ணின தப்புக்கு எல்லாம் உன்னை ப்ளேம் பண்ணிக்காதே என்றாள்.
இல்லை ஸ்ரீஜா என்று அவன் ஏதோ சொல்ல வர பட்டென்று அவன் இதழில் தன் இதழைப் பதித்தாள்.
மனைவியின் திடீர் முத்தத்தில் கிரங்கித் தான் போனான் தேவச்சந்திரன். அவனைப் பிரிந்தவள் பேசிட்டே இருக்காதடா பொறுக்கி உன் மேல எந்த தப்பும் இல்லை என்றவள் நான் உன் கூட ரொம்ப சந்தோசமா இருக்கிறேன் தேவ்.
நம்ம வாழ்க்கையில் நம்ம நிலா இருக்கிறாள் . சத்தியமா சொல்கிறேன் தேவ் உன்னைத் தவிர வேற யாரும் எனக்கான சரியான கணவன் இல்லை ஐ லவ் யூ தேவ். ஐ லவ் யூ சோமச் என்றவள் அவனைக் கட்டிக் கொண்டாள்.
மனைவியின் நெற்றியில் முத்தமிட்டவன் ஐ லவ் யூ சோமச் ஸ்ரீஜா என்றிட அவனை புன்னகையுடன் அணைத்துக் கொண்டாள் இறுக்கமாக.
அத்தியாயம் 149
சொல்லுங்க வினித்ரா என்ற செல்வத்திடம் என்னைப் பற்றி முதலில் நான் சொல்லனும் என்றாள் வினித்ரா. இதோ பாருங்க வினித்ரா உங்களுடைய கடந்த காலம் எத்தனை கடுமையானதாக இருந்தாலும் சரி அதைப் பற்றி நான் தெரிந்து கொள்ள விரும்பவில்லை. உங்க கல்யாணம் நின்று அதனால் நீங்க சந்தித்த இழப்புகளை திரும்ப உங்களுக்கு ஞாபகம் படுத்தும் எந்த விசயமும் திரும்ப பேசப் பட வேண்டாம். என் பெயர் செல்வம். என் அப்பா பெயர் கந்தசாமி அம்மா பெயர் மரகதவள்ளி. எனக்கு ஒரு தம்பி பிரபு. அவனோட மனைவி வினோதா. அவங்க குட்டிப் பையன் உதய். இது தான் என்னுடைய குடும்பம். எங்க குடும்பத்தில் உங்களுக்கு வாழ சம்மதம்னா தாராளமா சொல்லுங்க கையோட உங்களை எங்க ஊருக்கு அழைச்சுட்டு போயிடுறேன். இல்லைங்க எனக்கு உங்களை பிடிக்கவில்லை நீங்க வேற பொண்ணை பார்த்துக்கோங்கனு சொன்னால் கூட பரவாயில்லை நாம நல்ல நண்பர்களா இருந்துக்கலாம் என்றான் செல்வம்.
இமைக்க கூட மறந்து விட்டு அவனை பார்த்துக் கொண்டிருந்தவளிடம் என்னங்க பதிலை சொல்லாமல் என்னை இப்படி பார்க்கிறிங்க என்றவனிடம் உங்களை ரொம்ப பிடிச்சுருக்கு செல்வம். உங்களை கல்யாணம் பண்ணி உங்க கூட வாழனும்னு ஆசைப் படுகிறேன் என்றாள் வினித்ரா.
என்ன ஊர்மி இப்படியே இருந்தால் என்ன அர்த்தம் என்ற விக்னேஷிடம் புரியலை விக்கி என்றாள் ஊர்மிளா. நீ படிக்க வேண்டாமா என்னோட சுயநலத்தால தான் காதல்ங்கிற பெயரில் உன்னோட படிப்பைக் கெடுத்தேன், வாழ்க்கையை கெடுத்தேன் என்னை மாதிரி ஒருத்தனை உனக்கு ஏன் ஊர்மி பிடிச்சுருக்கு. இப்போ கூட என்னை விட்டு போக மாட்டேங்கிற என்றவனிடம் நீங்க தான் என்னோட வாழ்க்கை விக்கி. எப்படி உங்களை விட்டுட்டு என்னால வாழ முடியும் என்று அவனது மார்பில் சாய்ந்து கொண்டு அழுதாள் ஊர்மிளா.
என்ன யோசனை ரோனி என்ற உதய்யிடம் மாமா வினித்ரா மேடத்தை செல்வம் அத்தான் இங்கே அழைச்சுட்டு வருகிறாராம் என்றிட இப்போ தான் உங்க நம்பர்க்கு போன் பண்ணினாரு நீங்க சக்தி அண்ணா கூட குளிக்க பம்புசெட்டுக்கு போயிட்டிங்கனு சொன்னேன். என் கிட்ட விசயத்தை சொன்னாங்க என்றாள் வெரோனிகா.
நல்ல விசயம் ரோனி என்றவன் அத்தை, மாமா கிட்ட சொல்லிட்டியா என்றிட அம்மா, அப்பா இரண்டு பேரும் பெரிய வீட்டில் இருக்காங்களே போயி தான் சொல்லனும் என்றவளை முறைத்தான் உதய். ஏன்டி உன் கையில் என்ன பொம்மை போனா வச்சுருக்க போன் பண்ணி சொல்லுடி என்றதும் ஈஈஈ என்று இளித்து வைத்தவள் ஸாரி மாமா என்றாள்.
அவளது அன்னை பூங்கொடியிடம் விசயத்தை சொல்ல அவரும் மகிழ்ச்சியுடன் வினித்ராவை வரவேற்க ஏற்பாடுகளை செய்தார். அவருடன் வசந்தியுமே உதவியாக இருந்தார்.
என்னாச்சு மச்சான் உங்க அம்மா ஹெவியா பெர்பாமன்ஸ் பண்ணுது என்ற தேன்மொழியிடம் என்னடி சொல்லுற என்றான் சக்தி. அங்கே பாருங்க எங்க அண்ணன் கட்டிக்கப் போற அந்தப் பொண்ணு வினித்ரா வருதுன்னு எங்க அத்தை அறக்க பறக்க வேலை பார்க்குது சரி உங்க அம்மாவும் பூங்கொடி, பூங்கொடின்னு எங்க அத்தையை ஒட்டிகிட்டே திரியுதே அதான் கேட்டேன் என்ற மனைவி தேன்மொழியை முறைத்தான் சக்திவேல்.
ஏன்டி உன்னை என்று அவளது காதை திருகியவன் இப்போ தான் என் அம்மா திருந்தி சித்தி கூட ஒன்னு மண்ணா இருக்கு. உனக்கு அது பொறுக்கவில்லையா என்றிட ஏன் மச்சான் அப்படி சொல்லிட்டிங்க என் மாமியார் திருந்தினதில் எனக்கும் மகிழ்ச்சி தான். என்ன அப்படியே சின்னவரையும், கனியையும் ஏத்துக்கிட்டாங்கனா இன்னும் சந்தோசம் என்றாள் தேன்மொழி.
உங்க சின்னவருக்கு ஒரு குட்டிப் பையன் பிறந்து உன் மாமியார் மூஞ்சில உச்சா அடிச்சான்னா அதெல்லாம் தானா ஏத்துப்பாங்க என்றவன் நம்ம கதிருக்கும் ஐந்து வயசாகுது விளையாட அவனுக்கு தம்பியோ, தங்கச்சியோ இன்னும் இல்லை என்று சக்திவேல் இழுத்திட அதான் உங்க தம்பிக்கு பிள்ளை பிறக்கப் போகுதே அது கூட கதிரோட தம்பியோ, தங்கச்சியோ தான் அதனல எனக்கு சாம்பிரானி போடுற வேலையை விட்டுட்டு வேற வேலையைப் பாருங்க என்றாள் தேன்மொழி.
என்ன யோசனை விக்கி என்ற கௌதமிடம் அண்ணா நான் பண்ணிட்டு இருக்கிறது பெரிய தப்பு என்றான் விக்னேஷ். என்ன சொல்ல வர விக்கி என்ற கௌதமிடம் ஊர்மிளாவோட வாழ்க்கையை நான் அழிச்சுட்டு இருக்கிறேனோன்னு எனக்கு தோனிட்டே இருக்கு. அவளுக்கு வெறும் பதினெட்டு வயசு தான். அவளுக்குனு ஒரு வாழ்க்கை இருக்கு என்னால தான் அவளோட வாழ்க்கை அழிஞ்சிட்டு இருக்குனு தெரிஞ்சும் என்னால எந்த முடிவும் எடுக்க முடியாமல் தவிக்கிறேன் என்று வருந்தினான் விக்னேஷ்.
விக்கி இதற்கு நான் என்ன பதில் சொல்வதென்றே தெரியலைடா. உன்னோட இந்த நிலைமை நீ பண்ணின பாவத்தோட சம்பளம் அதைத் தவிர வேற எதுவும் எனக்கு சொல்லத் தோன்றவில்லை என்ற கௌதம் சென்று விட விக்னேஷ் வெகு நேரம் யோசித்து ஒரு முடிவுக்கு வந்தான்.
என்னடி ரொம்ப சந்தோசமா இருக்க போல என்ற உதய்யிடம் ஆமாம் மாமா ரொம்ப ரொம்ப சந்தோசமா இருக்கிறேன் என்ற வெரோனிகா அவனிடம் ஒரு பார்சலை நீட்டினாள். அதை வாங்கியவன் என்ன பார்சல் ரோனி என்றிட பிரித்துப் பாருங்க என்றாள்.
அவன் பிரித்து பார்த்திட அழகான குழந்தை பொம்மை இருந்தது. இது என்ன ரோனி என்றவனிடம் இந்த பொம்மை ரொம்ப அழகா இருந்துச்சு அதான் வாங்கினேன் என்றவள் மாமா பேசாமல் நாம ஒரு குழந்தையை தத்து எடுத்து வளர்க்கலாமா என்றாள்.
இப்போ என்ன அவசரம் ரோனி இன்னும் கொஞ்ச வருசம் போகட்டும். உன்னோட படிப்பு முடியட்டும் அதுவரை கொஞ்சம் பொறுமையா இரு அது மட்டும் இல்லை உனக்கு ட்ரீட்மென்ட் எடுத்து பார்ப்போம். அப்பறமா ஒரு குழந்தையை தத்து எடுக்கிறது பற்றி யோசிக்கலாம் என்றவன் ஆமாம் என்ன மேடம் இன்னைக்கு ரொம்ப பூரிப்பா இருக்கிங்க என்றிட ஆமாம் மாமா இத்தனை நாளா மனசை உருத்திட்டு இருந்த ஒரு விசயம் முடிவுக்கு வந்திருச்சு என்றாள் வெரோனிகா.
அப்படி என்ன விசயம் மனசை உருத்திட்டு இருந்துச்சு என்றவன் அவளை இழுத்து தன் மடியில் அமர வைத்தான். வினித்ரா மேடம் கல்யாணம் நின்று போன விசயம் தான் மாமா. இன்னும் பத்து நாளில் அவங்களுக்கும், செல்வம் அத்தானுக்கும் கல்யாணம் அப்பறம் அவங்களோட வாழ்க்கையில் நிறைய அன்பும், சந்தோசமும் நிறைஞ்சு இருக்கும் என்றாள் வெரோனிகா.
எல்லோர் வாழ்க்கையிலும் சந்தோசத்தை கொடுக்கிற என் ரோனியோட சந்தோசம் என்ன சொல்லு உன் சந்துரு மாமா நிறைவேற்றி வைக்கிறேன் என்றான் உதயச்சந்திரன். இப்போ இருக்கிறது போல எப்பவுமே நீங்களும், நானும் சண்டை , சச்சரவு இல்லாமல் நிம்மதியா இருக்கனும் மாமா அது தான் என்னோட சந்தோசம் என்றாள் வெரோனிகா.
சண்டையே இல்லைன்னா வாழ்க்கை வெறுத்துப் போயிரும் ரோனி அப்போ, அப்போ சின்னச் சின்ன சண்டைகள், சின்னச் சின்ன ஊடல்கள் எல்லாம் வேண்டும் அப்போ தான் நம்ம வாழ்க்கை சுவாரஸ்யமா போகும் என்றவன் மனைவியின் நெற்றியில் முத்தமிட அவனது மீசையைப் பிடித்து ஆட்டினாள் வெரோனிகா.
ஏய் வலிக்குதுடி என்றவன் கத்திட நீங்க தானே மாமா சொன்னிங்க சண்டை இருக்கனும்னு சண்டைன்னு வந்துவிட்டால் தலைமுடியை பிடிச்சு ஆட்டுறது சகஜம் என்று விட்டு அவனது தலைமுடியைப் பிடித்து ஆட்ட ஆரம்பித்தாள்.
ஆஆ ராட்சசி ஏன்டி இப்படி என்றவனிடம் இதென்ன பிரமாதம் ஸ்பெஷல் ஐட்டம் வேற இருக்கு மாமா என்றவள் தோசைக் கரண்டியை எடுத்து வர அடியேய் நீ ஆணியே பிடுங்க வேண்டாம். நாம சண்டை போடாமல் நல்ல கணவன், மனைவியாவே இருப்போம் என்றிட அப்படி வாங்க வழிக்கு என்றவள் அவனது தோளில் சாய்ந்திட அவளைத் தன்னோடு அணைத்துக் கொண்டான் உதயச்சந்திரன்.
என்ன சுசீலா என்னாச்சு என்ற மலர்கொடியிடம் அவளைப் பற்றி நினைக்க கூடாதுன்னு தான் நினைக்கிறேன் ஆனால் முடியலைக்கா. பெத்துட்டேனே அவள் துரோகியா இருந்தாலும் அவளோட வலியும், வேதனையும் என்னை வதைக்குது. இப்போ கூட அந்த படுபாவியை தூக்கிப் போட்டுட்டு வருவாள்னு நினைத்தால் இப்பவும் அவன் தான் வேண்டும்னு அடம் பிடிக்கிறாளே என்று புலம்பினார் சுசீலா.
ஆயிரம் தவறு செய்தாலும் பெற்ற மகளாயிற்றே. அவளது வாழ்வில் ஏற்பட்ட இந்த மிகப் பெரிய இழப்பு தன் மகளின் எதிர்காலத்தையே சிதைத்து விட்டதே என்று வருந்தினார் சுசீலா.
அத்தியாயம் 150
என்ன சம்மந்தி இப்படி ஒதுங்கி , ஒதுங்கி போறிங்க என்ற பூங்கொடியிடம் இல்லைங்க என்ன இருந்தாலும் நான் ரோனியை பேசின பேச்சு என்று தயங்கினார் சுசீலா. அது உங்க மாமியார், மருமகள் பிரச்சனை அதற்கும் நீங்கள் இப்போ ஒதுங்கி போறதுக்கும் என்ன சம்மந்தம். நீங்க இப்போ எங்களோட விருந்தாளி. நாங்க எங்க மூத்த பொண்ணா தத்தெடுத்த வினித்ரோவோட கல்யாணத்திற்கு நீங்க வந்து இருக்கிங்க நீங்க இப்படி ஒதுங்கிப் போனால் எப்படி சபை நிறைஞ்சு என் பொண்ணு போற இடத்தில் நல்லபடியா வாழனும்னு நீங்க வாழ்த்த வேண்டாமா என்ற பூங்கொடி சுசீலாவை அவருடனே அழைத்துச் சென்றார்.
என்ன வினி சந்தோசமா இருக்கியா என்ற பவித்ராவிடம் ரொம்ப, ரொம்ப சந்தோசமா இருக்கேன் பவி. நான் கூட என்னவோ நினைத்தேன் ஆனால் வெரோனிகாவோட அம்மா, அப்பா என்னை அவங்களோட சொந்த பொண்ணாவே நடத்துறாங்க. என்னோட கல்யாணத்திற்கு அப்பா, அம்மாவா அவங்க செய்யுற ஒவ்வொரு விசயத்திற்கும் எப்படி கைம்மாறு பண்ண போறேனோ என்றிட கைம்மாறு தானே அம்மு பத்தே மாதத்தில் எனக்கு ஒரு பேரனோ, பேத்தியோ பெத்துக் கொடு அது போதும் என்று வந்தார் பூங்கொடி.
அம்மா வாங்க என்ற வினித்ரா தன் தோழி பவித்ராவை அவருக்கு அறிமுகம் செய்து வைத்திட அவளிடம் பேசி விட்டு சரிம்மா பவித்ரா உன் தோழியை சீக்கிரம் தயாராக்கி வை. ஐயர் கூப்பிட்டதும் மணமேடைக்கு அழைச்சுட்டு வந்திரு என்று விட்டு விருந்தினர்களை வரவேற்பதில் பிஸியாகி விட்டார்.
என்னடி சோகமா இருக்க என்ற உதய்யிடம் பாருங்க மாமா உங்க மாமியாரை அவங்களுக்கு இன்னொரு பொண்ணு வந்தவுடனே என்னை மறந்துட்டாங்க. ரோனி, ரோனின்னு என்னையே சுத்தி , சுத்தி வந்த அப்பா கூட எப்போ பாரு வினிம்மா , வினிம்மானு புதுப் பொண்ணை தான் கவனிக்கிறாரு என்றிட அவளைப் பார்த்து சிரித்தவன் உனக்கு பொறாமை கூட வருமாடி என்றான்.
பொறாமை எல்லாம் இல்லை ஆனால் என்று இழுத்தவளிடம் நீ தானடி மாமா, அத்தைகிட்ட வினித்ராவை அவங்க பொண்ணாவே தத்து எடுத்துக்கனும்னு சொன்ன அப்பறம் என்ன நடிப்பு என்றான் உதய்.
அவனைப் பார்த்து சிரித்தவள் சரிங்க மாமா எனக்கு இந்தப் பூவை வைத்து விடுங்கள் என்றிட பூ கூட வைக்கத் தெரியாதாடி வா என்று அவளுக்கு பூவை வைத்து விட்டவன் அவளை பின்னிருந்து அணைத்துக் கொண்டான். என்ன மாமா இது என்றவளிடம் என்ன என்றவனை முறைத்தவள் இன்னைக்கு வினித்ரா அக்காக்கும், செல்வம் அத்தானுக்கும் கல்யாணம். கல்யாணத்திற்கு கிளம்பும் போது இப்படி கட்டிப் பிடிச்சுட்டு நின்னா என்ன அர்த்தம் என்றவளிடம் ஆமாம் என்ன அர்த்தம் என்றான்.
மாமா என்றவள் திரும்பிட இன்னைக்கு என்னோட ரோனி ரொம்ப, ரொம்ப அழகா இருக்கிறாள் அது தான் என்ன விசயம்னு யோசனையா இருக்கிறேன் என்றவன் உன் முகத்தில் ஏதோ ஒளி வட்டம் தெரியுதே என்றிட மாமா ரொம்ப ஓட்டாதிங்க இன்னைக்கு கொஞ்சம் மேக்கப் எக்ஸ்ட்ராவா இருக்கு அதனால நான் உங்க கண்ணுக்கு அழகா தெரிஞ்சுருப்பேன் கிளம்புங்க என்றவள் நடக்க கால் இடறி விழப் போக அவளைத் தாங்கிப் பிடித்தான் உதய்.
பார்த்து நடக்க மாட்டியாடி நீ என்றவன் அவளை நிற்க வைத்திட கால் ஸ்லிப் ஆகிருச்சு மாமா என்றவள் காலை உதறிட என்னாச்சுடி என்றான். லேசாக வலிக்குது என்றவளை தூக்கி மெத்தையில் அமர வைத்தவன் அவளது காலில் ஐயோடெக்ஸ் தேய்த்து விட அவனைப் பார்த்து புன்னகைத்தவள் ஐ லவ் யூ மாமா என்றாள்.
வலி போயிருச்சா என்றவனிடம் நீங்க தொட்டதுமே போயிருச்சு என்றவள் அவனை இழுத்து அவனது நெற்றியில் முத்தமிட்டாள். சரி, சரி கிளம்பலாம் வா என்றவனை முறைத்தவள் நீங்க என் கிட்ட ஐ லவ் யூவே சொல்லவில்லை என்றாள். சொன்னால் தான் தெரியுமா ரோனி என்றவன் நம்ம லவ்ஸ் அப்பறம் வச்சுக்கலாம் இப்போ போயி செல்வம், வினித்ரா கல்யாணத்தை அட்டன் பண்ணலாம் என்றிட அவனுடன் சந்தோசமாக சென்றாள் வெரோனிகா.
என்ன சொக்கு இப்படி பார்க்கிற கனிக்கு இது ஒன்பதாவது மாசம் புள்ளையோட வளைகாப்புக்கு கூட நாம போகவில்லை. அதனால பிள்ளை எத்தனை வேதனை பட்டிருக்கும் மன்னிச்சி ஏத்துக்கப்பா என்றார் கந்தசாமி. ஆமாம் அண்ணா நம்ம கனியை ஒதுக்காதிங்க என்று ஜெயக்கொடியும் கூறிட மனைவி ராணியை பார்த்தார் சொக்கலிங்கம். மனைவிக்கும் மகள் மீது பாசம் இருந்திருக்கும் போல அவரது சம்மதமும் கிடைத்தவுடன் சென்று மகளிடம் பேச ஆரம்பித்தார் சொக்கலிங்கம்.
கனிமொழிக்கு பரம சந்தோசம். அன்னையும், தந்தையும் தன்னுடன் பேச ஆரம்பித்ததும் . கணவனை கூட கண்டு கொள்ளாமல் திருமணம் முடியும் வரை அவர்களுடன் பேசிக் கொண்டே இருந்தாள்.
என்ன கொளுந்தனாரே உங்க பொண்டாட்டி உங்களை கண்டுக்கவே இல்லை போல என்ற தேன்மொழியிடம் நல்லவேளை அண்ணி மாமாவும், அத்தையும் அவள் கிட்ட பேசி என்னை காப்பாத்திட்டாங்க. இல்லைன்னா அந்த ப்ளேடு கனிமொழியோட அறுவையில் நான் தான் காதெல்லாம் இரத்தம் வராத குறையா உட்காந்திருப்பேன் என்று சரவணன் கூறிட என் தங்கச்சி அவள்ங்கிறதை மறந்துட்டிங்களா சின்னவரே என்று தேன்மொழி கேட்டிட அண்ணி நான் உண்மையைச் சொன்னேன் என்றான் பாவமாக. அவனைப் பார்த்து சிரித்தவள் இப்படி எல்லாம் முகத்தை பவ்யமா வச்சாப்புல என் தங்கச்சிகிட்ட சொல்ல மாட்டேன்னு நினைக்கிறிங்களா என்ன என்று சிரித்தாள்.
என்னடி என் தம்பியை மிரட்டிட்டு இருக்க என்று வந்த சக்திவேலிடம் வேண்டுதல் என்ற தேன்மொழி சென்று விட என்னாச்சுடா இவளுக்கு என்றான் சக்தி. என்கிட்ட கேட்டால் அவங்க உன்னோட மனைவி தானே என்ற சரவணனை சக்தி முறைத்திட அனு கூப்பிட்டியாம்மா என்று சென்று விட்டான் சரவணன்.
என்ன ஊர்மிளா நீ ஏன் போகவில்லை என்ற அர்ச்சனாவிடம் இல்லைக்கா மனசு சங்கடமா இருக்கு என்றாள் ஊர்மிளா. என்னால தானே அவங்க அப்பா, அம்மா இறந்து அந்தக் குற்றவுணர்ச்சினால என்னால வினித்ரா மேடத்தோட முகத்தை பார்க்க முடியவில்லை என்றாள் ஊர்மிளா.
ஊர்மிளா நீ பண்ணின தப்புக்கு அவங்க கிட்ட மனசார மன்னிப்பு கேட்டாலே உன்னோட குற்றவுணர்ச்சி போயிரும் என்ற அர்ச்சனா லாவண்யா உன் கிட்ட மோசமா நடந்துக்கிறாங்களா என்றாள். நான் ரோனிகிட்ட நடந்துகிட்ட அளவுக்கு இல்லைக்கா என்ற ஊர்மிளா நான் அந்த ஆக்சிடென்ட்லையே செத்துருக்கலாம் இல்லக்கா என்றாள்.
நீ மட்டும் அப்படி செத்துருந்தால் ரோனி தான் தப்புன்னு இன்னும் நம்ம வீட்டில் எல்லோரும் அவளை தூத்திட்டே இருந்திருப்பாங்க என்ற அர்ச்சனா நீ ஏன்டி இத்தனை மோசமானவளா மாறின. விக்கி மேல நீ அதிகப் படியான காதல் வச்சுருந்தனா அதை வீட்டில் புரிய வைத்திருக்கலாம். இல்லை ஓடித் தான் போகனும்னு ஒரு சூழ்நிலைன்னா கூட ஏன் ரோனியை பழிவாங்க ஒரு கர்ப்பமான நாடகம். எனக்கு புரியவில்லை அப்படி என்ன அவள் மேல உனக்கு வன்மம் என்ற அர்ச்சனா தங்கையின் முகத்தைப் பார்த்திட முகம் முழுவதும் குற்றவுணர்ச்சி நிரம்பி வழிய அர்ஜுன் மீது தனக்கு இருந்த விருப்பம் பற்றியும், அர்ஜுன் ரோனி மீது ஆரம்பத்தில் ஒரு ஈடுபாடு கொண்டிருந்தது பற்றியும் கூறிய ஊர்மிளா அந்த விசயத்தில் இருந்தே எனக்கு அவள் மேல ஒரு சின்ன வெறுப்பு வந்திருச்சுக்கா. அது விக்கியோட விசயத்தில் பூகம்பமா மாறிடுச்சு என்றாள்.
அவசரப் பட்டுட்ட ஊர்மி ஒருவேளை நீ அர்ஜுனையே விரும்பி இருந்திருந்தால் உன்னோட வாழ்க்கை இன்னைக்கு நல்லா இருந்திருக்கும். விக்கியோட காதல் நாடகத்தை நம்பி இப்போ உன்னோட வாழ்க்கை இருக்கிற நிலைமையை பார்த்தியா. உன்னோட இந்த வாழ்க்கைக்கு எந்த ஒரு எதிர்காலமுமே இல்லையேடி என்று வருந்தினாள் அர்ச்சனா.
அக்கா என்ன பேசுற என்ற ஊர்மிளாவிடம் நான் தப்பா எதுவுமே பேசவில்லை ஊர்மி உன்னோட வாழ்க்கைக்கு என்ன எதிர்காலம் இருக்கு. விக்னேஷ் கெட்டவன் இல்லை தான். திருந்திட்டான் தான் ஆனால் அவனால உனக்கு முழுமையான ஒரு வாழ்க்கையைக் கொடுக்க முடியுமா என்றாள் அர்ச்சனா.
நான் அதைப் பற்றி என்றவளிடம் இப்போ சொல்லுவ ஊர்மி ஆனால் நாட்கள் செல்ல, செல்ல நீ எடுத்திருக்கிற முடிவு தப்பானதுன்னு புரிஞ்சுப்ப என்றாள் அர்ச்சனா. நீயே இப்படி பேசலாமா அக்கா. அன்னைக்கு விவேக் மாமாவுக்கு இப்படி ஒரு பிரச்சனை இருக்குனு சொன்னப்ப நீ என்ன பேசின. என்னோட காதல் உண்மையானது, புனிதமானதுன்னு அவருக்காக சாகத் துணிஞ்சியே என்றிட விவேக் அளவு விக்கி நல்லவன் இல்லையே ஊர்மி என்றாள் அர்ச்சனா.
அத்தியாயம் 151
விவேக் மாமா அளவுக்கு நல்லவர் இல்லை தான். ஆனால் என்னோட விக்கி நல்லவர் தான் அக்கா. அவர் மேல நான் வச்சுருக்கிற அன்பும், காதலும் உங்கள் யாருக்கும் புரியலைனாலும் எனக்கு கவலை இல்லை. குழந்தை மட்டும் எங்க காதலை தீர்மானிக்காது. நான் பண்ணின எல்லா தப்புக்கான தண்டனையா நான் இதை ஏற்றுக் கொள்கிறேன். ஆனால் எந்த சூழ்நிலையிலும் என்னோட விக்னேஷை விட்டுப் பிரிய மாட்டேன். என்னோட படிப்பு ஸ்பாயில் ஆகிருச்சுதான் நான் மறுக்கவில்லை ஆனால் என்னால திரும்பவும் காலேஜ் போக முடியும் . படிக்க முடியும். எங்களோட வாழ்க்கை அழிஞ்சு போச்சுனு நான் ஒரு நாளும் நினைக்க மாட்டேன். எனக்காக நீங்கள் இத்தனை தூரம் யோசித்ததற்கு ரொம்ப நன்றிக்கா என்றாள் ஊர்மிளா.
என்ன விக்கி டல்லா இருக்கிங்க என்ற ஊர்மிளாவிடம் உன் அக்கா சொன்னதை நீ ஏன் யோசிக்க கூடாது ஊர்மி என்றான் விக்னேஷ். அதை யோசிச்சு என்ன பண்ணலாம் என்றவள் விக்கி இந்த வாழ்க்கையில் என்னோட கணவர் நீங்கள் மட்டும் தான். நம்ம வாழ்க்கையில் இனி குழந்தை மட்டும் தான் இருக்காதே தவிர நிறைய காதல் இருக்கும். நீங்க என் மேல உயிரையே வச்சுருக்கிங்க அது போதாதா எனக்கு என்றாள் ஊர்மிளா. நம்மளால குடும்ப வாழ்க்கையில் ஈடுபட முடியாதே ஊர்மி அது உனக்கு சங்கடமா இருக்காதா என்றவனது கன்னத்தில் கை வைத்தவள் நான் காதலிச்சது என் விக்கியோட உடம்பை இல்லை மனசை. என் உயிரே போனாலும் உங்களை விட்டுப் போக மாட்டேன் விக்கி. ஐ லவ் யூ என்று அவனது இதழில் முத்தமிட்டாள் ஊர்மிளா.
செல்வம், வினித்ரா இருவரது திருமணமும் நல்லபடியாக முடிந்து விட்டது. அவர்கள் இருவரும் ஒரு சந்தோசமான வாழ்க்கையை வாழ ஆரம்பித்தனர்.
நாட்கள் யாருக்கும் நிற்காமல் உருண்டோடியது. உதய், வெரோனிகா இருவரும் வேறு ஊருக்கு சென்று விட்டனர். எத்தனை முறை அழைத்தும் இருவரும் தங்கள் குடும்பத்துடன் செல்ல வில்லை. பிரகாஷ், இந்திரஜா இருவருக்கும் ஆண் குழந்தை பிறந்தது. அவனது பெயர் பிரவீன்.
விவேக், அர்ச்சனா தம்பதிக்கும் ஒரு ஆண் குழந்தை பிறந்தான். அவனது பெயர் வருண்.
சரவணன், கனிமொழி தம்பதிக்கு அழகான பெண் குழந்தை பிறந்தாள் அவளது பெயர் மித்ரா.
ஸ்ரீஜாவின் புற்றுநோயும் முறையான வைத்தியத்தினால் குணமாகிப் போனது. அவளும், தேவச்சந்திரனும் தங்கள் பிள்ளைகளுடன் சந்தோசமாக வாழ ஆரம்பித்தனர். உதயநிலாவிற்குப் பிறகு ஸ்ரீஜா, தேவ் தம்பதிக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தான். அவனது பெயர் பிரணவ்.
ஊர்மிளா மீண்டும் ஐஐடி நுழைவுத் தேர்வு எழுதினாள். அதில் வெற்றி பெற்று மீண்டும் கல்லூரிக்கு செல்ல ஆரம்பித்தாள். விக்னேஷ் தன் மனைவியின் படிப்பிற்கு தன்னால் ஆன எல்லா உதவிகளையும் செய்து அவளை அன்புடனும், அரவணைப்புடனும் பார்த்துக் கொண்டான்.
நரேனிற்கு வினித்ராவின் தோழி பவித்ராவுடன் திருமணம் முடிந்து தன் குடும்பத்துடன் வெளிநாட்டில் வசிக்கிறான்.
அனைவரும் அவர்களது வாழ்வில் முன்னேறி சென்று கொண்டிருந்தனர்.
என்னடி இன்னும் கிளம்பாமல் என்ன பண்ணுற என்ற உதயச்சந்திரனிடம் பொறுங்க மாமா எப்போ பாரு அவசரம் தான் என்றபடி புடவையை இழுத்துக் கொண்டு வந்தாள் வெரோனிகா.
என்னடி இது இப்படி வந்து நிற்கிற என்றவனிடம் ஐயோ மாமா இந்த புடவை செம்ம வெயிட்டா இருக்கு. ப்லீட்ஸ் கூட ஒழுங்கா எடுக்க வரவில்லை என்றாள் முகத்தை அப்பாவியாக வைத்துக் கொண்டு.
மென்டல் , கிறுக்கி இன்னைக்கு உன் தங்கச்சிக்கு கல்யாணம். இப்படி புடவை கட்டத் தெரியலைன்னு புலம்புவியா கல்யாணம் முடிஞ்சு ஏழு வருசம் ஆச்சு இன்னமும் ஒரு புடவை கூட ஒழுங்கா கட்டத் தெரியவில்லை என்று அவளைத் திட்டிக் கொண்டே புடவையின் கொசு மடிப்பை சரி செய்து கொடுத்தான் உதயச்சந்திரன்.
பட்டுச்சேலை மட்டும் தானே கட்ட சிரமப் படுறேன் மற்றபடி உங்களையா கட்டி விட சொல்றேன் என்றவளை முறைத்தவன் ஓஓ மேடம் எங்களை வேற கட்டி விட சொல்லுவிங்களோ என்றவன் சரி கிளம்பு என்றான்.
அவள் அவனைப் பார்த்தபடி நின்றிட இன்னும் என்னடி என்றான் உதய். பூ யாரு வச்சு விடுவாங்க உங்க அப்பத்தாவா என்றவளை முறைத்தவன் திரும்புடி பட்டிக்காடு உன்னை எனக்கு கட்டி வச்சது பத்தாதுனு மேடம் மண்டையில் பூவை வைக்கவும் அவங்க தான் வரணுமோ நீயெல்லாம் டீச்சர்னு வெளியே சொல்லிறாதே ஒரு பூ கூட வைக்கத் தெரியாத முட்டாள் என்றவன் அவளது கூந்தலில் பூவை வைத்து விட்டான்.
இருவரும் வாசலுக்கு வரும் பொழுதே அவளுக்கு லேசாக தலை சுற்றியது. ஒரு விதமான தடுமாற்றத்துடன் அவள் இருக்க என்னாச்சு ரோனி என்று பதறினான் உதய். ஒன்றும் இல்லை மாமா என்றவளிடம் ஹாஸ்பிடல் போகலாமா என்றான் உதய்.
மாமா முகூர்த்தத்திற்கு லேட் ஆகிருச்சு என்றவளிடம் சரி என்று திருமண மண்டபத்திற்கு அவளுடன் சென்றான். அங்கு அவர்களது மொத்த குடும்பமும் இருந்தது. எல்லோரிடமும் சகஜமாக பேசியவள் ஏனோ ஊர்மிளாவை மட்டும் கண்டு கொள்ளவே இல்லை. ஊர்மிளா ஒருமுறை அவளிடம் வந்து தான் செய்த தவறுகளுக்கு மன்னிப்பு கேட்ட பொழுது கூட உன்னை மன்னித்து விட்டேன் என்றாளே தவிர அவளிடம் வேறு பேச்சு பேசியதில்லை.
விக்னேஷ், ஊர்மிளா இருவரும் சந்தோசமாக பேசிக் கொண்டு இருந்ததை புன்னகை முகமாக பார்த்து விட்டு கடந்து சென்றாள். வினித்ராவின் குழந்தை வினுஷா சித்தி , சித்தி என்று அவளிடம் நன்றாக ஒட்டிக் கொள்ள பூங்கொடி தத்துப் பெண்ணுடைய குழந்தையை கொஞ்சியது போல பெற்ற பெண்ணின் குழந்தையை எப்பொழுது கொஞ்சுவோமோ என்று வருத்தம் கொண்டார்.
அர்ஜுன் மணவறையில் அமர்ந்திருக்க கிரிஜா விருந்தினர்களை வரவேற்றார். வெரோனிகா தன் நண்பர்களான விஷால், கிஷோர், நிகிலாவுடன் பேசிக் கொண்டு நிற்க ஏன்டி பொண்ணோட அக்கா நீ இப்படி பொறுப்பே இல்லாமல் ப்ரண்ட்ஸோட பேசிட்டு இருக்க வா வந்து அவளை அழைச்சுட்டு வா என்று ஜெயக்கொடி கூறிட வெரோனிகா, நிகிலா இருவரும் அனாமிகாவை மணமேடைக்கு அழைத்து வரச் சென்றனர்.
அங்கு சென்ற பொழுது வெரோனிகா மயங்கி விழ அவள் முகத்தில் தண்ணீர் தெளித்த அனாமிகா தன் சகோதரியை பரிசோதித்து பார்த்தாள். என்ன ரோனி இவ்வளவு வீக்கா இருக்க அத்தான் உன்னை சரியாவே பார்த்துக்க மாட்டேங்கிறாரு போல. இரு இரு என் பையன் வரட்டும் அவன் மட்டும் சித்தி அம்மாவை அப்பா சரியா கவனிக்கவில்லைன்னு சொல்லட்டும் அப்பறம் உங்களை வச்சுக்கிறேன் என்று சிரித்தாள்.
ஆரம்பத்தில் புரியாமல் விழித்த வெரோனிகா அனாமிகா கூறியது புரிந்தவுடன் தான் தனக்கு நாள் தள்ளிப் போனதை உணர்ந்தாள்.
நிகி இவளை மேடைக்கு அழைச்சுட்டுப் போ என்றவள் தன் கணவனைத் தேடி ஓடினாள். ஏய் பார்த்துடி ஓடாதே என்ற அனாமிகா மணமேடைக்கு நிகிலாவுடன் சென்றாள்.
என்ன டாக்டரம்மா உங்க அக்கா தான் பர்ஸ்ட் பேசண்ட்டா என்ற நிகிலாவிடம் ஏன் நீங்களும் என்னோட பேசண்ட் ஆகிடுங்களேன் என்று சிரித்தவள் மணமேடையில் அர்ஜுன் அருகில் அமர்ந்தாள். ஐயர் மந்திரங்கள் ஓதி கெட்டிமேளம் சொல்லிட அர்ஜுன் அனாமிகாவின் கழுத்தில் தாலி கட்டினான்.
என்ன சொல்லுற தேவ் என்ற ஸ்ரீஜாவிடம் ஆமாம் ஸ்ரீஜா விக்னேஷ் தொடர்ந்து ட்ரீட்மென்ட் எடுத்துக்கிட்டதோட ரிசல்ட் . அவனால ஒரு குழந்தைக்கு தகப்பனா மாற முடியும். இப்போ தான் என்னோட ப்ரண்ட் டாக்டர்.மெல்வின் கூப்பிட்டு சொன்னாரு. விக்னேஷோட பிரச்சனை சரியாகிருச்சுன்னு என்று தேவ் கூறிட தாங்க் காட் இனிமேலாவது ஊர்மிளாவோட வாழ்க்கை நல்லபடியா அமையட்டும் என்றவள் நம்ம ரோனியோட பிரச்சனையும் சரியாகினால் ரொம்ப நிம்மதியா இருக்கும் தேவ் என்றாள் ஸ்ரீஜா.
என்ன ரோனி இப்படி வேகமா வர என்ற உதயச்சந்திரனிடம் மாமா உடனே ஹாஸ்பிடல் போகனும் வாங்க என்றவளிடம் என்னாச்சுடி யாருக்கு என்ன என்றான் உதய்.
யாருக்கும் எதுவும் இல்லை ப்ளீஸ் வாங்க என்று அவனை அவள் இழுத்திட சரியென்று அவளுடன் சென்றான். ஹாஸ்பிடல் வந்தாச்சு இப்பவாச்சும் சொல்லு ரோனி என்றவனிடம் சொல்றேன் வாங்க என்று இழுத்துச் சென்றவள் மருத்துவரைக் காணச் சென்றாள்.
அவளை சோதித்த மருத்துவரும் சில டெஸ்ட் எடுக்கச் சொல்ல அத்தனையும் எடுத்து விட்டு ரிசல்ட்டிற்காக காத்திருந்தாள்.
இந்த ஒவ்வொரு நிமிடமும் ஒரு யுகம் போல அவளுக்கு இருந்தது. கடவுளே இந்த முறை எல்லாம் நல்லபடியா நடக்கனும் என்று வேண்டாத தெய்வங்கள் இல்லை.
மருத்துவரும் அழைத்திட அங்கே இருவரும் சென்றனர். புன்னகை முகத்துடன் மருத்துவர் உதயச்சந்திரனைப் பார்த்து வாழ்த்துக்கள் மிஸ்டர்.உதய் நீங்க அப்பாவாகப் போறிங்க என்றதும் ஒரு நிமிடம் அவனது உலகமே நின்றது போல் ஆனது. என்ன சொல்லுறிங்க டாக்டர் என்றவனிடம் எஸ் உதய் உங்க மனைவி கர்ப்பமா இருக்காங்க அவங்க வயிற்றில் வளரும் குழந்தைக்கு வயசு ஐம்பத்தி ஐந்து நாள் என்ற மருத்துவர் அவளுக்கான மாத்திரை, மருந்துகளை எழுதிக் கொடுக்க உதய்யின் கண்கள் கண்ணீரை சிந்தியது.
ரோனி என்றவனை கண்ணீரோடு அணைத்துக் கொண்டவள் மாமா கடைசியாக கடவுள் நம்ம குழந்தையை நமக்கே கொடுத்துட்டாரு என்று அழுதிட இது அழ வேண்டிய நேரம் இல்லை ரோனி சந்தோசமா இருக்கனும் நமக்கு குழந்தை பிறக்கப் போகுது நம்ம மொத்த குடும்பமும் சந்தோசமா இருக்க வேண்டிய நேரம் நீ அழக் கூடாது என் ரோனி அழவே கூடாது என்றவன் மனைவியின் நெற்றியில் முத்தமிட்டான்.
இவர்கள் இப்படியே சந்தோசமாக இருக்கட்டும். நாமும் வாழ்த்தி விடைபெறுவோம்.
….முற்றும்….