விதியின் முடிச்சு (14)

4.6
(8)

காலையில் கண் விழித்தவள் மெத்தையில் படுத்திருப்பதைக் கண்டு நான் எப்படி இங்கே வந்தேன் என்று நினைத்தபடி திரும்பிட ஷோபாவில் அவளது கணவன் படுத்திருந்தான்.

 

அவனை முறைத்தபடி எழுந்தவள் சென்று  குளித்து முடித்து தலைசீவிக் கொண்டு இருந்தாள். உதயச்சந்திரன் எழுந்தவன் குளியலறைக்குள் நுழைந்து கொள்ள அறைக்கதவு தட்டப்படும் சத்தம் கேட்டதும் எழுந்து வந்து கதவைத் திறந்தாள்.

 

தனது அம்மா பூங்கொடி நின்றிட அவரைக் கண்டவள் அம்மா என்று கட்டிக் கொண்டாள். தன் அன்னையைக் கண்டதும் அழ ஆரம்பித்தாள். தேம்பித் தேம்பி அவள் அழ ஆரம்பித்திட ரோனிம்மா ஏன் இப்படி அழுதுட்டு இருக்க என்ற பூங்கொடி மகளின் கண்ணீரைத் துடைத்தார்.

 

மாப்பிள்ளை எங்கே என்ற பூங்கொடியிடம் குளிக்கிறார் என்றாள். சரி அப்போ வா என்று மகளை தான் தங்கி இருந்த அறைக்கு அழைத்துச் சென்றார் பூங்கொடி.

 

ஏன்டி இப்படி அழுதுட்டு இருக்க என்ற பூங்கொடியிடம் அவருக்கு என்னை பிடிக்கவே இல்லைம்மா  என்றவள் நேற்று சிவரஞ்சனி கூறியது முதல் வீட்டில் உதயச்சந்திரனுடனான சண்டை வரை எல்லாவற்றையும் கூறி முடித்தாள்.

 

அனைத்தையும் கேட்டு முடித்த பூங்கொடி ரோனி நீ சின்னப் பொண்ணுதான் ஆனால் உனக்கு கல்யாணம் முடிஞ்சுருச்சு. உனக்கு சில பொறுப்புகள் இருக்கு. சில விசயங்களை புரிஞ்சு நடந்துக்கனும்.

 

அந்த வினித்ரா டீச்சர் மாப்பிள்ளை கூட வேலை பார்க்கிறவங்க அவங்க கிட்ட சிரிச்சு பேசுறது என்ன அவ்வளவு பெரிய தப்பா சொல்லு. இப்போ உங்க அப்பா நம்ம வயலில் வேலைக்கு வரும் நம்ம ஊரு பொண்ணுங்க கிட்ட பேசாமல் இருப்பாரா என்றார். பேசிருக்கிறார் என்றாள் வெரோனிகா.

 

நம்ம ஊரில் எந்த பொண்ணையும் உங்க அப்பா பைக்கில் அழைச்சுட்டு போயி விட்டதே இல்லையா என்றார் பூங்கொடி. நிறையபேரை அழைச்சுட்டு போயிருக்காங்க என்ற வெரோனிகாவிடம் உங்க அப்பா பண்ணினா தப்பில்லை உன் புருசன் பண்ணினால் தப்பா என்றார் பூங்கொடி.

 

வெரோனிகா மௌனமாக இருந்திட இதோ பாரு ரோனி அவர் உன்னோட கணவர். எனக்கும் நிறைய படிக்கனும்னு ஆசை ஆனால் ஸ்கூல் முடிச்சதுமே உங்க அப்பாவுக்கும், எனக்கும் கல்யாணம் முடிஞ்சுருச்சு.

 

உங்க அப்பாவும் சரி அவங்க  வீட்டிலும் சரி  என்னை மேல படிக்க அனுமதிக்கவில்லை. ஆனால் உன்னோட புருசன் உன்னை படிக்க வைக்கிறாரு. உன் மொத்த குடும்பமும் நீ படிக்கிறதுக்கு சப்போர்ட் பண்ணுறாங்க உன் மேல அன்பும், பாசமும் இருக்கிறதால தானே இதெல்லாம் பண்ணுறாங்க என்றார் பூங்கொடி.

 

அவர் என்னை பிடிக்கவே இல்லைனு சொன்னாரு என்ற வெரோனிகாவைப் பார்த்து சிரித்த பூங்கொடி என் முட்டாள் பெண்ணே அவர் கோபத்தில் சொல்லிருப்பாரு. கோபத்தில் சொல்லுற வார்த்தைக்கு எல்லாம் அர்த்தம் கண்டுபிடிச்சா நம்ம வாழ்க்கை சந்தோசமா இருக்காது ரோனிம்மா.

 

உனக்கு தினம் தினம் உட்கார்ந்து பாடம் சொல்லிக் கொடுக்கிறாரு. அவரோட உழைப்பையும் சேர்த்து நீ பரீட்சை ஒழுங்கா எழுதாமல் கண்டதை நினைச்சு புறக்கணிக்கிறாய் அதனால கோபத்தில் திட்டிருப்பாரு.

 

நீ மட்டும் இந்த டெஸ்ட்ல ஒழுங்கா படிச்சு நல்ல மார்க் வாங்கினால் உன்னை ஏன் திட்டப் போறாரு என்ற பூங்கொடி நான் பயந்துட்டே இருந்தேன்டி பதினேழு வயசுல கல்யாணம் பள்ளிக்கூடம் படிக்கிற வயசுலையே உனக்கும் குழந்தை பிறந்தால் என்று ரொம்ப பயந்தேன். மாப்பிள்ளை ரொம்ப நல்லவரு உன்னோட எதிர்காலத்து மேல அக்கரை வச்சு படிக்க வைக்கிறது மட்டும் இல்லாமல் அவரும் ஒதுங்கி இருக்கிறார் பாரு எனக்கு நம்பிக்கை இருக்கு அவரு உன்னை நல்லா பார்த்துப்பாரு. ஒரு பொறுப்பான மனுசனைத் தான் என் ரோனிக்கு கல்யாணம் பண்ணி வச்சுருக்கோம் என்றார் பூங்கொடி.

 

 

சரி சரி அம்மா இன்னைக்கு ஜடை பிண்ணி விட்டுருக்கேன் பிடிச்சுருக்கா என்ற பூங்கொடியிடம் ரொம்ப பிடிச்சுருக்கு அம்மா என்றவள் தன் அம்மாவின் கன்னத்தில் முத்தமிட்டாள்.

 

அவள் தன்னறைக்கு சென்றிட உதயச்சந்திரன் கிளம்பிக் கொண்டிருந்தான். சந்துரு மாமா என்றவளைக் கண்டு கொள்ளாமல் அவன் கிளம்பிக் கொண்டிருக்க ரொம்ப சாரி மாமா நான் நேற்று உங்க கூட சண்டை போட்டது தப்பு தான் என்றாள்.

 

அவன் அவளைக் கண்டும் காணாமல் சென்றிட அவனது கையைப் பிடித்தவள் மாமா மன்னிச்சுருங்க என்று அவன் முன்பு தோப்புக்கரணம் போட்டிட அவன் சிரித்து விட்டு என்ன திடீர் ஞானோதயம் என்றான்.

 

தன் அன்னை சொன்ன அறிவுரையை அவள் கூறிட அவன் சிரித்து விட்டு சாரி வெரோனிகா நானும் உன்னை திட்டிருக்க கூடாது. நீ சின்னப் பொண்ணு உனக்கு நான் தானே சொல்லிப் புரிய வைக்கனும் என்றவன் எனக்கும், வினித்ரா மேடத்திற்கும் என்று அவன் கூற வரும் போது எந்த சம்பந்தமும் இல்லை என்றாள் வெரோனிகா.

 

அவன் சிரித்து விட்டு சரி இன்னைக்கு எக்ஸாம் சொதப்பாமல் எழுதப் பாரு என்றிட சரிங்க மாமா என்றாள்.

 

சரி வா போயி சாப்பிடலாம் என்றவனிடம் சரிங்க மாமா என்று அவனுடன் கிளம்பினாள்.

 

உணவு மேஜையில் மாமனார், மாமியாரைக் கண்டவன் அவர்களுக்கு வணக்கம் வைத்து பேசிக் கொண்டிருந்தான். மகளுக்கு தலை ஆடி என்பதால் சீர் செய்வதற்கு வந்திருந்தனர் கதிரேசன்,பூங்கொடி இருவரும்.

 

சீர் சாமான் எல்லாம் வாங்கி கொடுத்து விட்டு ஆடிக்கு பொண்ணு, மாப்பிள்ளை இருவரையும் அழைத்தனர். கல்யாணிதேவியும் அனுப்பி வைப்பதாக கூறினார்.

 

 

சரி அப்போ நாங்க கிளம்புகிறோம் என்ற கதிரேசனிடம் அப்பா ப்ளீஸ் சாயங்காலம் நான் ஸ்கூல் விட்டு வந்த பிறகு ஊருக்கு போங்களேன் ப்ளீஸ் என்றாள் வெரோனிகா. இல்லை ரோனிம்மா வயல் எல்லாம் உழற வேலை இருக்கு. பெரியப்பா பாவம் எல்லா வேலையையும் தனியா எப்படி பார்ப்பாரு அப்பாவும் கூட மாட வேலை பார்க்கனும்ல என்றார் கதிரேசன்.

 

அப்பா ப்ளீஸ்ப்பா என்று அவள் கெஞ்சிட என் மருமகள் ஆசைப்படுதுல சம்மந்தி ஒரு நாள் தானே இருந்துட்டு போங்களேன் என்று நெடுமாறனும் கூறிட சரிங்க சம்மந்தி என்றார் கதிரேசன்.

 

சரிங்கம்மா நான் ஸ்கூலுக்கு கிளம்புகிறேன் என்று அர்ச்சனாவுடன் கிளம்பினாள் வெரோனிகா.

 

என்ன அண்ணியாரே ரொம்ப ஹாப்பியோ என்ற அர்ச்சனாவிடம் போங்க அண்ணி கிண்டல் பண்ணிகிட்டு என்றாள் வெரோனிகா.

 

ஏய் எப்பவும் நீ என்னை அக்கானு தானே கூப்பிடுவ என்ற அர்ச்சனாவிடம் இனிமேல் அண்ணினு தான் கூப்பிடுவேன் என்றவள் சந்தோசமாக பள்ளிக்கு சென்றாள்.

 

ஹாய் ரோனி என்ன செம்ம ஹாப்பி மூட்ல இருக்க போல என்ற விஷாலிடம் மேடம் அவங்க அப்பா, அம்மா வந்த குஷியில் இருக்காங்க என்றாள் ஊர்மிளா.

 

வாவ் சூப்பர் ரோனி அப்போ உங்க அப்பா, அம்மா கூட ஊருக்கு போறியா என்ற கிஷோரிடம் இல்லை அடுத்த வாரம் தான் மாமாகூட போவேன் என்றாள்.

 

எந்த மாமா உங்க பிரகாஷ் மாமா கூடவா என்ற நிகிலாவுடன் இல்லை சந்துரு மாமா கூட என்றாள். சந்துரு மாமாவா அது யாரு ஊர்மி என்றான் அர்ஜுன்.

 

உதய் அண்ணாவை அவள் சந்துரு மாமானு தான் கூப்பிடுவாள் என்ற ஊர்மிளா சிவரஞ்சனி வருவதைப் பார்த்தவள் ரோனி இரு நான் இப்போ வந்துடுறேன் என்று எழுந்திருக்க அவளது கையைப் பிடித்த வெரோனிகா வேண்டாம் ஊர்மி விடு என்றாள்.

 

என்னாச்சு என்ற அர்ஜுனிடம் ஒன்றும் இல்லை அர்ஜுன் என்ற வெரோனிகா ஊர்மிளாவை தனியே அழைத்துச் சென்றாள்.

 

என்ன பண்ணப் போற நீ அவள் கிட்ட சண்டை போட்டு எனக்கு கல்யாணம் ஆன விசயத்தை ஸ்கூல் முழுக்க சொல்லப் போறியா என்ன என்றாள் வெரோனிகா. அவளால தானே நேற்று உனக்கும், அண்ணாவுக்கும் சண்டை வந்துச்சு என்ற ஊர்மிளாவிடம் சண்டை வந்தால் தான் லவ் அதிகமாகும் ஊர்மி என்று சிரித்தாள் வெரோனிகா.

 

ஹான் என்னது லவ்வா என்ற ஊர்மிளாவிடம் பின்ன இல்லையா என்ற வெரோனிகா சரி வா கிளாஸ்க்கு போகலாம் என்று இழுத்துச் சென்றாள்.

 

என்ன வெரோனிகா எக்ஸாம்க்கு படிச்சுட்டியா என்ற சிவரஞ்சனி உனக்கு ஒரு விசயம் தெரியுமா நேற்று கூட உதய் சார் வினித்ரா மேடமை அவங்க வீட்டில் டிராப் பண்ணினாரு என்றாள். அப்படியா சரி என்ற வெரோனிகா அமைதியாக அமர்ந்திருந்தாள்.

 

உதயச்சந்திரன் வகுப்பறைக்குள் நுழைந்திட அனைவரும் எழுந்து நின்றனர். அவன் வினாத்தாள்களை அனைவருக்கும் கொடுத்து தேர்வு எழுதச் சொல்லி விட்டு தன் இடத்தில் அமர்ந்திருந்தான்.

 

அனைவரும் அமைதியாக தேர்வு எழுத ஆரம்பித்தனர். ரவுண்ட்ஸ் வரும் பொழுது வெரோனிகாவின் பேப்பரைப் பார்த்தவன் சிரித்து விட்டு கடந்து சென்றான்.

 

என்னடி அவளோட பேப்பரை பார்த்துட்டு சிரிச்சுட்டு போகிறார் ஒருவேளை மேடம் நிறைய கப்ஸா எழுதி வச்சுருப்பாளோ என்ற கார்த்திகாவிடம் இருக்கும் இருக்கும் இவள் டியூசனே வருவதில்லை வேதாகிட்ட மாட்டப் போறாள் என்று சிரித்தாள் சிவரஞ்சனி.

 

அவர்கள் பேசுவதைக் கவனித்த உதயச்சந்திரன் கார்த்திகா, சிவரஞ்சனி இரண்டு பேரும் எழுந்திருங்க என்றான். என்ன பேச்சு என்றவனிடம் ஒன்றும் இல்லை சார் பேனா கேட்டேன் என்றாள் சிவரஞ்சனி.

 

இரண்டு பேரும் சிரிச்சு பேசிட்டு இருந்திங்க கேட்டால் பேனா கேட்டேன்னு பொய் சொல்லுறிங்க. பேனா கேட்கிறதாவே இருந்தாலும் டீச்சர்கிட்ட பர்மிஷன் வாங்கனும்னு தெரியாதா கெட் அவுட் என்றான் உதயச்சந்திரன்.

 

சாரி சார் என்ற கார்த்திகா, சிவரஞ்சனியிடம் பேப்பரை வாங்கிக் கொண்டவன் இரண்டு பேரும் திரும்ப முதலில் இருந்து எக்ஸாம் எழுதுங்க என்று கூறி விட இருவரும் பதற்றத்தில் சார் இன்னும் ஒரு மணி நேரம் தான் இருக்கு என்றனர்.

 

அதனால என்ன ஒரு மணி நேரம் இருக்கு உட்கார்ந்து எழுதுங்க இல்லையா இந்த பேப்பரை மடிச்சு பெயர் எழுதி கொடுத்துட்டு கிளம்புங்க என்றான்.

 

இருவரும் வேறு வழி இல்லாமல் முதலில் இருந்து பரீட்சை எழுத ஆரம்பித்தனர். அவனை மனதிற்குள் திட்டிக் கொண்டே.

 

 

என்ன ரோனி ஏன் டல்லா இருக்க என்ற விஷாலிடம் பாவம் இல்ல இந்த சிவரஞ்சனியும், கார்த்திகாவும் என்றாள். அதுங்களா பாவம் ஏன் ரோனி நீ வேற இரண்டும் சரியான அராத்துங்க உன் சந்துருமாமா வச்சு செஞ்சுட்டாரு என்று சிரித்தான் கிஷோர்.

 

டேய் பாவம்டா என்ன இருந்தாலும் திரும்ப எக்ஸாம் எழுத சொன்னால் அவங்க எப்படி டாப் மார்க் வர முடியும் என்றவளிடம் நேற்று உன்னை வெறுப்பேற்றி எக்ஸாம் ஒழுங்கா எழுத விடாமல் பண்ணினாள் தானே அதற்கு இன்னைக்கு சரியான தண்டனை கிடைச்சுருக்கு என்றாள் ஊர்மிளா.

 

அப்போ அவள் ஏதோ சொன்னதால தான் நீ எக்ஸாம் சரியா எழுதவில்லையா ரோனி என்றாள் நிகிலா. ச்சே அப்படிலாம் இல்லை நிகிலா இவளுக்கு என்ன என்று ஊர்மிளாவை திட்டி விட்டு  சரி வாங்க சாப்பிடலாம் என்றாள் வெரோனிகா.

 

 

…..தொடரும்….

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.6 / 5. Vote count: 8

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!