என்ன மேடம் சிஸ்டத்தில் உட்கார்ந்துட்டு அமைதியா இருக்கிங்க ப்ரோகிராம் டைப் பண்ணலையா என்றான் உதயச்சந்திரன்.
இல்லை சார் என்ற வெரோனிகாவிடம் அப்பறம் என்ன யோசனை என்றான். ஒன்றும் இல்லை என்றவளிடம் சரி ப்ரோகிராம் டைப் பண்ணு என்று விட்டு சென்றான்.
அங்கே பாருடி என்ற கார்த்திகாவிடம் ஏன்டி நீ வேற கடுப்பை கிளப்புற நானே எக்ஸாம் போச்சேன்னு வேதனையில் இருக்கேன் என்ற சிவரஞ்சனி அந்த ஆளு பைக்கை பஞ்சர் ஆக்கி விடனும் என்றாள். முடியுமா என்ற கார்த்திகாவிடம் முடியாதே என்றவள் மௌனமாகிட சரி வா ப்ரோகிராம் போட்டு பார்க்கலாம் என்று தங்கள் வேலையை கவனித்தனர்.
லேப் விட்டு அனைவரும் கிளம்பும் நேரம் வெரோனிகா என்ற உதயச்சந்திரன் அவளை இருக்கச் சொல்லி விட்டு மற்றவர்களை கிளம்பச் சொன்னான்.
சொல்லுங்க சார் என்றவளிடம் ஈவ்னிங் வெயிட் பண்ணு நானே உன்னை வீட்டில் விடுறேன். கொஞ்சம் வொர்க் இருக்கு முடிச்சுட்டு தான் வர முடியும் நீ கிளாஸ்ரூம்லையே வெயிட் பண்ணு என்றிட சரி என்று தலையாட்டி விட்டு சென்றாள் வெரோனிகா.
என்ன சொன்னாரு உங்க சந்துரு மாமா என்ற கிஷோரிடம் அவர் என்ன சொன்னால் உனக்கு என்ன என்றாள் வெரோனிகா. ஏன் ரோனி நான் தெரிஞ்சுக்க கூடாதா என்று சோகமான கிஷோரிடம் ஏன் தெரிஞ்சுக்க கூடாது என்றவள் இன்னைக்கு பிரகாஷ் மாமாவுக்கு ஏதோ வேலை இருக்காம் அதனால சந்துரு மாமா என்னை வீட்டுக்கு கூட்டிட்டு போறேன்னு சொன்னாங்க என்றாள் வெரோனிகா.
ஆமாம் நீ மட்டும் ஏன் என்கிட்ட அளவாவே பேசுற அர்ஜுன் என்ற வெரோனிகாவிடம் இல்லையே என்றான் அர்ஜுன். அவனுக்கு வெட்கம் என்ற கிஷோரை முறைத்த அர்ஜுன் அவன் கிடக்கிறான் லூசுப்பையன் என்றான் அர்ஜுன்.
சரி ஓகே பாய் நீங்கள் எல்லாம் டியூசன் போகனும்ல கிளம்புங்க என்றாள் வெரோனிகா. இல்லை ரோனி நீ தனியா இருப்பியே என்ற நிகிலாவிடம் என்னை என்ன பூச்சாண்டி தூக்கிட்டுப் போயிருமா என்று சிரித்தவள் தன் நண்பர்களை அனுப்பி விட்டு வகுப்பறையில் தனியாக அமர்ந்திருந்தாள்.
பொழுது போகாமல் இருந்திட கரும்பலகையில் அழகாக வரைய ஆரம்பித்தாள் வெரோனிகா. மனதில் தோன்றிய நிகழ்வை அவள் வரைய ஆரம்பித்தாள்.
அவள் ஓவியம் வரைவதில் லயித்திருக்க அவள் பின்னே வந்த ஆளை அவள் கவனிக்கவே இல்லை.
என்ன மச்சான் ஏன் டல்லா இருக்க என்ற விஷாலிடம் ஒன்றும் இல்லையே என்றான் அர்ஜுன். சொல்லுடா மாப்பிள்ளை ரொம்ப தான் என்ற கிஷோரை முறைத்தவன் அவள் முன்னாடி வெட்கம்னு சொல்லிட்டு இருக்க என்ன நினைக்க மாட்டாள் நம்மளைப் பத்தி என்றான் அர்ஜுன்.
எப்படியும் அவகிட்ட சொல்லித் தானே ஆக வேண்டும் என்ற கிஷோரை முறைத்தான் அர்ஜுன்.
டேய் வாயை மூடு என்ற விஷாலிடம் ஏன்டா என்னை திட்டுற என்றான் கிஷோர். பின்ன என்ன அவள் இப்ப தான் நம்ம கூட ப்ரண்ட்டாவே பழக ஆரம்பிச்சுருக்கா அதற்குள்ள லவ்னு சொன்னால் எப்படிடா முட்டாள் மாதிரி பண்ணக் கூடாது என்றான் விஷால்.
டேய் இரண்டு பேரும் கொஞ்சம் சும்மா இருங்கடா என்ற அர்ஜுன் வெரோனிகா தனியா தானே கிளாஸ்ரூம்ல இருந்தாள் என்றான் அர்ஜுன். ஆமாம் இப்போ என்ன அதற்கு என்றவனிடம் புதுசா இன்னைக்கு செகன்ட் கேட்டோட வாட்ச்மேன் வேற ஆளு இருந்தாரு எனக்கு ஏதோ தப்பா தோனுது என்றான் அர்ஜுன்.
என்னாச்சு எனக்கு ஏன் ஒரு மாதிரி பட படனு வருது என்று நினைத்த உதயச்சந்திரன் பைக் ஸ்டாண்டிற்கு வந்து பார்த்திட வெரோனிகா அங்கு இல்லை. என்ன இந்தப் பொண்ணை நான் இங்கே தானே நிற்க சொன்னேன் எங்கே போனாள் என்று நினைத்தவன் வகுப்பறைக்குச் செல்ல வகுப்பறை பூட்டிக் கிடந்தது.
கிளாஸ்ரூமிலும் இல்லாமல் எங்கே போனாள் இவள். மொத்த ஸ்கூலும் கிளம்பிருச்சு எங்கே போனாள் இவள் என்று நினைத்தவன் கிளம்ப எத்தனிக்க அர்ஜுன் வேகமாக ஓடி வந்தான்.
எங்கே வந்த நீ என்றவனிடம் சார் ரோனி என்றிட ரோனிக்கு என்னாச்சு என்றான் உதயச்சந்திரன். அவளுக்கு ஒன்றும் இல்லை அவள் கிளாஸ்ரூம்ல தனியா இருந்தாள்.
நாங்க கடைசியா கிளம்பும் போது செகன்ட் கேட் வாட்ச்மேன் கிளாஸ்ரூம் எல்லாம் பூட்டிட்டு இருந்தாரு அவள் இருந்தது தெரியாமல் என்ற அர்ஜுனிடம் வாட்ச்மேன் கேட்கிட்ட இருந்தால் கூட்டிட்டு வா என்றான் உதயச்சந்திரன்.
இல்லை சார் வாட்ச்மேன் கேட்கிட்ட இல்லை என்ற அர்ஜுன் ஞாபகம் வந்தவனாய் சார் நம்ம க்ளாஸ்ரூம் லாக் நேற்று தானே உடைஞ்சு போச்சு இன்னும் மாற்றவில்லையே அப்போ ரோனி என்றவன் கிளாஸ்ரூம் கதவினைப் பார்க்க வெறுமனே தான் பூட்டு தொங்கிக் கொண்டு இருந்தது.
சார் உள்ளே லாக் பண்ணிருக்காங்க என்றிட ரோனி ரோனி என்று அர்ஜுன் கதவைத் தட்டிட உள்ளே எந்த சத்தமும் கேட்கவில்லை.
வெரோனிகா கதவைத் திற என்று உதயச்சந்திரனும் கதவைத் தட்டிட கதவு திறக்கப்படவில்லை. என்ன இவள் கதவைத் திறக்கவே மாட்டேங்கிறாள் என்று நினைத்தவன் வேக வேகமாக கதவைத் தள்ளிட அப்பொழுதும் கதவு திறக்கப்படவில்லை.
பர்ஸ்ட் கேட் வாட்ச்மேனும் வந்து விட்டார். என்ன சார் கதவை உடைக்கிறிங்க என்ற வாட்ச்மேனிடம் உள்ளே ஒரு பொண்ணு இருக்காள். கதவு உள் பக்கமா தாழ் போட்டிருக்கு என்றிட அவரும் சேர்ந்து கதவை இடித்திட ஒரு வழியாக கதவு திறந்து விட்டது.
உள்ளே வெரோனிகா தலையில் அடிபட்டு மயங்கி கிடக்க செகன்ட் கேட் வாட்ச்மேன் கையில் அவளுடைய துப்பாட்டாவுடன் திருட்டு முழி முழித்தபடி நின்றான்.
வெரோனிகா , வெரோனிகா என்ற உதயச்சந்திரன் அவளது கன்னம் தட்டிட அவள் மயக்கம் தெளியாமல் இருந்திட அர்ஜுன் அவள் முகத்தில் தண்ணீர் தெளி என்று கூறி விட்டு வாட்ச் மேனின் அருகில் வந்தான்.
என்ன நடந்துச்சு அவள் துப்பட்டா எப்படி உன் கையில். எதற்கு கதவை உள்ளே பூட்டி வசுருந்த என்று உதயச்சந்திரன் கேட்டிட ஆவன் தப்பித்து ஓடுவதிலே குறியாக இருந்தான்.
முதல் கேட்டின் வாட்ச்மேன் ரிட்டையர்ட் மிலிட்டரிமேன் என்பதால் அவரது இரும்பு பிடியில் இருந்து அவனால் தப்பிக்க முடியவில்லை.
அவனை போலீஸில் ஒப்படைத்தவன் தன் மனைவியைத் தூக்கிக் கொண்டு மருத்துவமனைக்கு விரைந்தான்.
என்ன நடந்துச்சு நீ ஏன் அர்ஜுன் வந்த என்ற உதயச்சந்திரனிடம் இல்லை சார் இந்த புது வாட்ச்மேன் பார்வையே சரி இல்லை. ஸ்கூல் பொண்ணுங்க, டீச்சர்ஸ் எல்லோரையும் அந்த ஆளு பார்த்த பார்வை தப்பா பட்டுச்சு ரோனி வேற கிளாஸ் ரூம்ல தனியா இருந்தாளா அதனால தான் வந்தேன் என்றான் அர்ஜுன்.
ரொம்ப தாங்க்ஸ் அர்ஜுன் என்ற உதயச்சந்திரன் கூறிட அந்த நேரம் மருத்துவர் வந்து வெரோனிகா கண் விழித்து விட்டதாக கூறினார்.
வெரோனிகா என்றவனைக் கட்டிக் கொண்டவள் சந்துரு மாமா சந்துரு மாமா என்று அழ ஆரம்பிக்க அழாதம்மா என்ன நடந்துச்சு என்றிட அந்த வாட்ச்மேன் அந்த வாட்ச்மேன் என்றவளால் அடுத்த வார்த்தை பேச முடியவில்லை.
வெரோனிகா ப்ளீஸ் ரிலாக்ஸ் என்றவன் சரி நீ ஒன்றும் சொல்ல வேண்டாம் என்றிட இல்லை மாமா தப்பா எதுவும் என்றவளின் கன்னம் தட்டியவன் உன்னை எப்பவுமே நம்புவேன் அழாமல் இரு என்ன நடந்திருக்கும்னு புரியுது அழக் கூடாது என்றிட அவனை கண்ணீரோடு பார்த்தாள்.
ரோனி உனக்கு ஒன்றும் இல்லையே என்ற அர்ஜுனிடம் அர்ஜுன் நீ எப்படி என்றிட அவன் நடந்தவற்றைக் கூறினான். எனக்கு ஏதோ தப்பா பட்டுச்சு ரோனி என்றவனிடம் இதை யார்கிட்டையும் சொல்ல மாட்ட தானே என்றாள் வெரோனிகா.
அந்த வாட்ச்மேன் என்கிட்ட தப்பா நடந்துக்க பார்த்த விசயத்தை எல்லோர்க்கிட்டையும் சொன்னால் என்னை கேவலமா பார்ப்பாங்க தானே ப்ளீஸ் அர்ஜுன் இதை யார்கிட்டையும் சொல்லாதே என்றவளை அவன் கேள்வியாக பார்த்திட அர்ஜுன் யார்கிட்டையும் சொல்ல மாட்டான் நீ கிளம்பு வீட்டிற்கு போகலாம் என்ற உதயச்சந்திரன் அவளை வீட்டிற்கு அழைத்துச் சென்றான்.
வீட்டில் உள்ளவர்களிடம் இது பற்றி கூறியவன் அவளிடம் எந்தக் கேள்வியும் கேட்க கூடாது என்று கூறி இருந்தான். அதனால் வீட்டிலும் யாரும் எதுவும் கேட்கவில்லை.
வெரோனிகா நீ போ போயி ஃப்ரஸ்ஸாகிட்டு வா என்றவன் பிரகாஷிற்கு போன் செய்தான். என்ன சொன்னான் அந்த பொறுக்கி என்ற உதயச்சந்திரனிடம் அண்ணா அவன் அண்ணி தனியா இருக்கிறதை பார்த்துட்டு அவங்க கிட்ட தப்பா நடக்க ட்ரை பண்ணி இருக்கான். அண்ணி அவனை ஓங்கி மிதிச்சதும் கோபத்தில் ஜடையைப் பிடிச்சு சுவற்றில் தள்ளி விட்டுட்டான். அதனால தலையில் அடி பட்டு மயங்கிட்டாங்களாம். கரைக்டா அந்த நேரம் வெளியில் உங்க சத்தம் கேட்டதும் அவன் பயந்து நின்றிருக்கான் மத்தபடி என்று ஏதோ சொல்ல வந்தான் பிரகாஷ் எதுவும் நடக்கவில்லைனு சொல்லுற சந்தோசம் தான் தப்பா எதுவும் நடந்திருந்தாலும் அவள் கூட நான் எப்பவும் இருப்பேன் என்ற உதயச்சந்திரன் அவன் மேல கம்ப்ளையண்ட் கொடு ஆனால் விசயம் மீடியா அந்த மாதிரி போகாமல் ஸ்கூலோட ரெபிட்டேசன் பாதிக்காத வகையில் என்ன பண்ண முடியுமோ அதை பண்ணு என்றான் .
சரிங்க அண்ணா என்ற பிரகாஷ் போனை வைத்திட உதய் என்றார் மலர்கொடி. என்னங்கம்மா என்றவனிடம் நல்லவேளை உன் மாமனார், மாமியார் ஊருக்கு போயிட்டாங்க இல்லைனா என்ன பண்ணுறது. அவங்க எவ்வளவு வேதனைப் படுவாங்க என்றவரிடம் இதில் வேதனைப்பட என்ன இருக்கு.
ரோட்டில் நடந்து போகும் போது ஒரு நாய் கடிக்க வந்தால் மானம் போயிருச்சுனு அர்த்தமா முதலில் இந்த மாதிரி சிந்திக்கிறதை நிறுத்துங்க என்றவன் அவங்க அப்பா , அம்மா இருந்திருந்தாலும் அவளை பார்த்துக் கொள்ள எனக்கு தெரியும் என்றவன் அவள் முன்னே இதைப் பற்றி மறந்தும் பேசிறாதிங்க என்றான் உதயச்சந்திரன்.
என்ன பண்ணிட்டு இருக்க நீ என்ற உதயச்சந்திரனிடம் ஒன்றும் இல்லை மாமா என்றவளைப் பார்த்தவன் நாம வெளியில் போயிட்டு வரலாமா என்றான்.
இல்லை என்றவளிடம் என்ன இல்லை நான் கூப்பிட்டால் நீ வரணும் என்றவன் அவளை அழைத்துக் கொண்டு சென்றான்.
வெரோனிகா எங்கே என்ற கல்யாணிதேவியிடம் அவளை உதய் வெளியே அழைச்சுட்டு போயிருக்கான் அத்தை என்ற மலர்கொடி முகம் வாடி இருக்க அதை கவனித்தார் கல்யாணிதேவி.
என்னடி உன் முகம் சரியில்லை என்றவரிடம் உதய் தன்னை திட்டியதைப் பற்றி கூறினார் மலர்கொடி. அவன் சரியா தான் பேசிருக்கான். இதே விசயம் நம்ம ஊர்மிளாவுக்கு நடந்தால் நீ என்ன பண்ணிருப்ப. உன் பையன் சொன்ன அதே வார்த்தையை உன் மகளுக்கு சொல்லிருப்ப என்றார் கல்யாணிதேவி.
அத்தை ரோனியும் என் பொண்ணு தான் என்ற மலர்கொடியிடம் நான் இல்லைனு சொல்லவில்லை மலர்கொடி ஆனால் ஊர்மிளா, வெரோனிகா இரண்டு பேருக்கும் ஒரு சின்ன வித்தியாசம் உன்கிட்ட இருக்க தான் செய்யும் அது இயல்பு. அதை தப்புனு நானும் சொல்ல மாட்டேன். உதய் சொன்னது தான் சரி ரோனி பற்றி அவன் சரியா புரிந்து கொண்டதால தான் இதைப் பற்றி அவள் முன்னாடி
யாரும் பேசவே கூடாதுனு அவன் சொல்லி இருக்கான் என்றார் கல்யாணிதேவி.
….தொடரும்….