என்னம்மா இப்படி சொல்லுறிங்க என்ற விவேக்கிடம் வேற என்னப்பா சொல்ல என்ற தனலெட்சுமி உங்க அப்பா எல்லா முடிவையும் உன் அத்தைக்கிட்டையும் கேட்டு தானே எடுப்பாரு அவங்க பொண்ணு சௌமியாவைத் தான் நீ கல்யாணம் பண்ணிக்கனும்னு உன் அத்தை சொன்னால் என்று இழுத்த தனலெட்சுமியிடம் அதற்கு நான் சாமியாராவே போயிருவேன் என்றவன் தன்னறைக்கு செல்ல தனலெட்சுமி சிரித்து விட்டு சரி சரி கோவிச்சுக்காதே விவேக் அம்மா இருக்கேன்ல அந்த அர்ச்சனாவையே உனக்கு கட்டி வச்சுடுறேன் என்றிட நிஜமாவா அம்மா என்றான் விவேக்.
என் செல்ல மகனோட சந்தோசம் தானே இந்த அம்மாவுக்கும் சந்தோசம் என்ற தனலெட்சுமி சரிப்பா வா சாப்பிட என்றார்.
என்ன அண்ணி சாப்பிட வரவில்லையா என்ற வெரோனிகாவிடம் இல்லை ரோனி பசி இல்லை என்றாள் அர்ச்சனா. ஏன் என்றவளைப் பார்த்து சிரித்தவள் ஆமாம் நீ சொல்லு முன்னே எல்லாம் என்னை அக்கானு தானே கூப்பிடுவ இப்போ என்ன புதுசா அண்ணி என்றவளிடம் நான் உங்க அண்ணி தானே என்றாள் வெரோனிகா.
ஆமாம் என்ற அர்ச்சனாவிடம் அப்போ உங்களை அக்கானு கூப்பிட்டால் உறவுமுறை சரியா வராதே என்றிட ஆஹா புத்திசாலி தான் என்ற அர்ச்சனா சிரித்தாள்.
சரி இப்போ உனக்கு தலையில் பெயின் இருக்கிறதா என்ற அர்ச்சனாவிடம் லேசா இருக்கு அவ்வளவு தான் என்ற வெரோனிகா சரிங்க அண்ணி வாங்க சாப்பிட என்று அவளை இழுத்துச் சென்றாள் வெரோனிகா.
என்ன அர்ச்சனா ஒரு ஆள் வந்து உன்னை கூப்பிட்டால் தான் சாப்பிட வருவியா என்ற மலர்கொடியிடம் இல்லைம்மா பசி இல்லை என்றாள் அர்ச்சனா.
பசி இல்லையா ஏன்மா உடம்பு சரி இல்லையா என்ற சுசீலாவிடம் இல்லை சித்தி நான் நல்லா தான் இருக்கேன் என்றவள் சாப்பாட்டை அலைந்து கொண்டே அமர்ந்திருக்க அர்ச்சனா என்ன சாப்பிடாமலே இருக்க என்றார் கல்யாணிதேவி.
இல்லை அப்பத்தா என்றவள் சாப்பிட்டு விட்டு தன்னறைக்கு சென்றாள். ஏய் நீ ஏன்டி இதெல்லாம் பண்ணுற நாங்க பார்த்துக் கொள்கிறோம் என்ற சுசீலாவிடம் அட பரவாயில்லை அத்தை எனக்கு பொழுது போகனும் இல்லை. தனியா இருந்தால் ரொம்ப பயமா இருக்கு மாமா தூங்க வர எப்படியும் இன்னும் ஒரு மணிநேரம் ஆகும் என்றவளின் மனநிலையை உணர்ந்த சுசீலா ரோனிம்மா அது கெட்ட கனவு அதை யோசிக்காதே.
உன் மாமா அதை யோசிக்கக் கூடாதுனு சொல்லிருக்கான் தானே என்றவரிடம் யோசிக்காமல் தான் அத்தை இருக்கேன் ஆனால் தனியா இருந்தாலே என்னை அறியாமலே யாரோ என்னை என்று சொல்ல முடியாமல் விக்கியவளின் கையைப் பற்றி சுசீலா மருமகளை தன்னோடு அணைத்துக் கொண்டார்.
பயப்படக்கூடாது அம்மு என்றவர் சரி இனி நீ எப்பவும் தனியா இருக்க வேண்டாம். என்கூட பேசிட்டு இரு என்றவர் அவளது நெற்றியில் முத்தமிட அவள் சிரித்து விட்டாள்.
செல்லக்குட்டி என்றவர் இந்தா இந்த பாலைக் குடி என்றார் சுசீலா. ஐயோ அத்தை நான் ஏற்கனவே நிறைய சாப்பிட்டேன் இப்போ இந்த பாலை வேற குடிக்கனுமா என்றவளிடம் குடிச்சு தான் ஆகனும் என்றார் சுசீலா.
ஓஓ இது தான் மாமியார் கொடுமையோ என்றவளைப் பார்த்து சிரித்தவர் ஏன்டி வாயாடிக் கழுதை நான் உன்னை கொடுமை படுத்துறேனா என்றிட ஆமாம் பின்ன இல்லையா இப்படியே நான் தின்னுகிட்டே இருந்தால் டின்னு மாதிரி ஆகிருவேன். அப்பறம் நான் நடந்து இல்லை உருண்டு உருண்டு தான் போகனும் என்றவளது காதை திருகிய மலர்கொடி என்னடி என் தங்கச்சியோட சண்டை போடுற என்றார்.
ஐயோ இது என்ன வம்பா போச்சு முருகா எனக்கு மட்டும் இரண்டு மாமியார் கொடுமையா என்றிட இருவரும் சிரித்துவிட்டனர்.
ஏன்டி எங்களைப் பார்த்தால் கொடுமைப் படுத்துற மாதிரியா இருக்கு என்ற மலர்கொடியிடம் பார்த்தா தெரியாது ஆனாலும் கொடுமை தான் என்றவள் ஓடி விட இருவரும் சிரித்து விட்டு தங்கள் வேலையை கவனித்தனர்.
என்னக்கா அர்ச்சனா ஏன் சாப்பிடும் பொழுது ஒரு மாதிரியாவே இருந்தால் என்ன ஏதுன்னு விசாரிச்சிங்களா என்ற சுசீலாவிடம் இல்லை சுசீ அப்பறமா கேட்போம் என்றார் மலர்கொடி.
அவளது மொபைல் போன் ஒலித்திட அதை அட்டன் செய்தாள் வெரோனிகா. ஹலோ யாரு என்றவளிடம் ரோனி என்ற குரலைக் கேட்டு கோபமானவள் உனக்கு எப்படி என் நம்பர் தெரியும் என்றாள்.
நீ ஏன் எனக்கு போன் பண்ணின என்கிட்ட பேசாதே. உன்னால தான் என் சந்தோசம் எல்லாம் பறிபோச்சு போனை வை என்றவள் போனை கட் செய்தாள்.
எவ்வளவு திமிர் இருந்தால் எனக்கு போன் பண்ணிருப்ப எல்லாம் உன்னால தான். நான் எவ்வளவு சந்தோசமா சுத்திட்டு இருந்தேன் இவளுக்கு ஓடிப்போக கல்யாணத்தன்னைக்கு காலையில் தான் நேரம் கிடைச்சதா ச்சே என்றவள் கோபமாக அமர்ந்திருக்க வெரோனிகா என்றான் உதயச்சந்திரன்.
என்னாச்சு யார்கிட்ட பேசிட்டு இருக்க யார் மேல இவ்வளவு கோபம் என்றான். எல்லாம் அவள் மேல தான் என்றிட யாரு அவள் என்றான் உதயச்சந்திரன்.
வேற யாரு உங்களை மணமேடையில் காத்துக்கிடக்க வச்சுட்டு அந்த பிரபு அத்தான் கூட ஓடிப் போனாளே என் அக்கா வினோதா அவள் தான்.
அவள் ஏன் எனக்கு போன் பண்ணினாள். அவள் மேல அப்பா, பெரியப்பா கோபமா இருக்காங்களோ இல்லையோ நான் கோபமா இருக்கேன் என்றவளிடம் ஏன் இவ்வளவு கோபம் என்றான் உதயச்சந்திரன்.
பின்ன என்ன மாமா இவள் மட்டும் கல்யாணத்திற்கு ஒரு வாரம், ஏன் ஒரு இரண்டு நாள் முன்னே ஓடிப் போயிருந்தால் கூட நீங்க உங்க குடும்பத்தோட ஊருக்கு வந்துருக்க மாட்டிங்க தானே. இவள் சரியா கல்யாணம் அன்னைக்கே ஓடிப் போயி ஊருக்காரங்க ஏச்சுக்கும்,பேச்சுக்கும் பயந்து என் அப்பாவும், பெரியப்பாவும் என்னை உங்களுக்கு கல்யாணம் பண்ணி வச்சுட்டாங்க.
என்னால உங்களுக்கு எவ்வளவு கஷ்டம். நான் சின்னப் பொண்ணுங்கிறதால தானே நம்ம கல்யாணம் ஆனது யாருக்குமே சொல்ல முடியாமல் போச்சு. எல்லாம் அவளால தானே என்று பொரிந்து தள்ளியவளிடம் தண்ணீரை நீட்டினான் உதயச்சந்திரன்.
அதை வாங்கி குடித்தவளிடம் ஏன்டி இப்படி பொரிஞ்சு தள்ளுற கொஞ்சம் பொறுமையா இரு என்றான்.
பொறுமையா இருக்கிறதா என்ன மாமா பேசுறிங்க என்றவள் அவளை மட்டும் கூட குறை சொல்ல முடியாது என் அப்பா, பெரியப்பாவையும் சொல்லனும் அவங்களுக்கு ஏற்கனவே அவள் பிரபு அத்தானை லவ் பண்ணுற விசயம் அவங்களுக்கு தெரியும் அப்படி இருக்கும் பொழுது உங்களை வேற இழுத்து விட்டு அதோடவா விட்டாங்க.
அது என்ன மாமா ஒரு வீட்டில் அக்காகாரி ஓடிப் போயிட்டாள் தங்கச்சியை பிடிச்சு மணமேடையில் உட்கார வைக்கிறது. தங்கச்சிக்குனு தனியா ஆசையே இருக்காதா என்றவளைக் கூர்மையாக பார்த்தவன் நீ கவலையே பட வேண்டாம் வெரோனிகா உனக்கு என்ன ஆசை இருக்குனு சொல்லு நான் நிறைவேற்றி வைக்கிறேன் என்றான் உதயச்சந்திரன்.
அவனை பார்த்தவள் நான் பொதுவா சொன்னேன் என்றிட சரி உன் அக்கா போன் பண்ணினாங்களே என்ன ஏதுன்னு விசாரிச்சியா என்றவனிடம் அவள் எதற்கு போன் பண்ணினா எனக்கு என்ன என்றாள் வெரோனிகா.
உனக்கு உன் அக்காவை பிடிக்குமா, பிடிக்காதா என்றவனிடம் ரொம்ப பிடிக்கும் அப்போ இப்போ இல்லை என்றவளின் கையை தன் கைக்குள் வைத்தவன் என்னை மன்னிச்சுரு ரோனி என்றான்.
ஏன் மாமா என்றவளிடம் உன் அக்காவை பிரபு கூட அனுப்பி வச்சதே நான் தான் என்றான் உதயச்சந்திரன். என்ன மாமா சொல்லுறிங்க நீங்க ஏன் மாமா அப்படி பண்ணுனிங்க இதைக் கூட ஏன் இப்போ சொல்லுறிங்க என்றவளிடம் உன் அக்கா கர்ப்பமா இருக்காங்க என்றான் உதயச்சந்திரன்.
இப்போ ஆறு மாதம் என்றவனிடம் என்னது ஆறு மாதமா நம்ம கல்யாணம் முடிஞ்சே மூன்று மாதம் தானே ஆகுது அதுக்குள்ள எப்படி அவள் ஆறு மாதம் கர்ப்பமா இருக்க முடியும் என்ன மாமா சொல்லுறிங்க குழப்பாமல் விசயத்தை சொல்லுங்க என்றாள் வெரோனிகா.
குழப்பவில்லை வெரோனிகா உன் அக்கா கல்யாணத்திற்கு முன்னமே கர்ப்பமா இருந்தாங்க. கல்யாணம் ஒரு வாரம் இருந்தப்போ உன் அக்கா வினோதாவுடைய காதலன் பிரபு என்னை வந்து சந்தித்தார்.
அவர் என்கிட்ட சொன்ன விசயம் எனக்கு தூக்கிவாரிப் போட்டுருச்சு. உன் அக்காவும், அவரும் காதலிக்கிற விசயம் உங்க வீட்டுக்கு தெரிஞ்சதனால் தான் வினோதாவுக்கு அவசரம் அவசரமா மாப்பிள்ளை தேட ஆரம்பிச்சாங்களாம்.
ஆனால் வினோதா, பிரபு இரண்டு பேரும் ஏற்கனவே வீட்டுக்கு தெரியாமல் ரிஜிஸ்டர் மேரேஜ் பண்ணி வாழ ஆரம்பிச்சுருக்காங்க. அதோட விளைவு வினோதாவுடைய கர்ப்பம்னு பிரபு சொன்னதும் எனக்கு என்ன பண்ணுறதுனே தெரியவில்லை.
வீட்டிலும் சொல்ல முடியாத சூழ்நிலை அதனால தான் கல்யாணத்திற்கு முதல்நாள் இரவு உன் அக்காவை என் ப்ரண்ட் ஒருத்தனுடைய உதவியோட பிரபு கூட ஊரை விட்டு ஓடிப் போக ஏற்பாடு பண்ணி அனுப்பியும் வச்சுட்டேன்.
நான் எதிர்பார்க்காத ஒன்று நம்முடைய திருமணம். உன் அப்பாவும்,என் அப்பத்தாவும் இப்படி ஒரு முடிவு எடுக்கவில்லை என்றால் நிச்சயம் நீ உன்னோட ஆசைப் படி சந்தோசமா இருந்திருப்ப என்றான் உதயச்சந்திரன்.
ஏன் மாமா இப்படி பண்ணுனிங்க என்றவளிடம் நான் தப்பா என்றவனிடம் தப்பு தான் மாமா அவளை நீங்க பிரபு அத்தான் கூட அனுப்பி வைக்காமல் அவள் கர்ப்பமா இருக்கிற விசயத்தை எங்க வீட்டில் சொல்லி இருந்தால் அவங்களே அவங்க இரண்டு பேருக்கும் கல்யாணம் பண்ணி வச்சுருப்பாங்களே.
அவள் ஓடிப் போனது எத்தனை பெரிய அசிங்கம். என் பெரியப்பா, பெரியம்மா இரண்டு பேரும் எவ்வளவு கஷ்டப் படுறாங்கனு உங்களுக்கு தெரியுமா. பிரபு அத்தான் நல்லவரா இருந்தால் யாருக்கும் தெரியாமல் திருட்டுத்தனமா அவளை கல்யாணம் பண்ணி குடும்பம் நடத்திருக்க மாட்டாரு என்றவள் அவங்க பண்ணின துரோகத்திற்கு நீங்களும் துணையா இருந்திருக்கிங்களே மாமா இந்த விசயம் எங்க வீட்டில் தெரிந்தால் நினைக்கவே பயமா இருக்கு என்று அழுதாள் வெரோனிகா.
கட்டாயம் உங்க மேல கோபம் படுவாங்க. உங்க மேல உள்ள கோபத்தில் என்னைத் தான் தண்டிப்பாங்க என்று அழுதவள் அப்போ அன்னைக்கு உங்க போனில் பார்த்த v வினோதா தானா என்றிட ஆம் என்றான் உதயச்சந்திரன்.
மாமா உங்களை கையெடுத்து கும்பிட்டு கேட்கிறேன் தயவுசெய்து வினோதா ஓடிப் போக நீங்க தான் உதவி பண்ணுனிங்கனு எக்காரணத்தைக் கொண்டும் எங்க வீட்டாளுங்க கிட்ட சொல்லிராதிங்க என்றாள் வெரோனிகா.
….தொடரும்…