என்ன நீ தூங்காமல் என்ன பண்ணுற என்றவனிடம் மாமா ரெஸ்ட் ரூம் போகனும் என்றாள் வெரோனிகா. என்னாச்சு கால் எதுவும் வலிக்குதா என்றவனிடம் இல்லை மாமா இந்த மாதிரி ஹாஸ்பிடலில் உள்ள ரெஸ்ட்ரூம்ல எல்லாம் பேய் இருக்குமோன்னு பயம் என்றவளைப் பார்த்து சிரித்தவன் ஆமாம் பெரிய பேய் இருக்கு அதுவும் வெரோனிகான்னு பெயர் வச்சுருக்கிறவங்க இரத்தத்தை தேடி தேடி வந்து குடிக்குமாம் என்றிட மாமா பயமுறுத்தாதிங்க என்றவள் பாவமாக அவனைப் பார்த்தாள்.
நான் இங்கே தானே இருக்கேன் நீ பார்த்து போயிட்டு வா என்றவன் அவளுடன் ரெஸ்ட்ரூம் வாசல்வரை வந்து நின்றான். அவள் சென்று விட்டு வந்தவள் உங்களை ரொம்ப கஷ்டப்படுத்துறேனா மாமா என்றாள்.
வெரோனிகா எனக்கு எந்த கஷ்டமும் இல்லை என்றவன் சரி இப்பவாச்சும் தூங்கு என்றிட மாமா என்று பயந்தது போல் அவள் கத்திட என்னாச்சு ரோனி என்றவன் பதறி அவளருகில் வர அவனைக் கட்டிக் கொண்டவள் எனக்கு ஏதோ பயமா இருக்கு மாமா என் பக்கத்திலே இருங்க ப்ளீஸ் என்று அவள் கெஞ்சிட சரி சரி பயப்படாதே என்றவன் அவளைத் தன்னோடு அணைத்தபடி அந்த மெத்தையில் அமர்ந்திட அவனது மார்பிலே தலைசாய்ந்து அவள் உறங்க ஆரம்பித்தாள்.
நீங்க பாவம் மாமா எப்படி அந்த சேர்ல உட்கார்ந்தபடி தூங்குவிங்க. இந்த பெட் நம்ம இரண்டு பேருக்கும் போதுமானதாக இருக்கும்னு தான் பயப்படுற மாதிரி நடிச்சேன் என்று மனதிற்குள் நினைத்தவள் அவனது சட்டையை உடையாத இடது கையில் பற்றியபடி அவனது மார்பில் தலை வைத்து படுத்து உறங்கினாள்.
அவனும் அவளைத் தட்டிக் கொடுத்தபடி உறங்கினான். அவளை மனைவியாக பார்க்க முடியவில்லை என்றாலும் ஒரு குழந்தையாக பார்த்தவன் அவளைத் தட்டிக் கொடுத்தான்.
அதிகாலைப் பொழுது கண்விழித்த வெரோனிகா அவன் முகத்தையே ரசித்தபடி இருக்க அவனும் கண் விழித்தவன் அவளைத் தான் பார்த்துக் கொண்டிருந்தான். அவளது விழிகளில் கரைந்து கொண்டிருந்தவனது மொபைல் போன் ஒலித்திட அதில் நினைவு வந்த இருவரது பார்வையும் விலகியது.
அவன் எழுந்து போனை அட்டன் செய்தான். சொல்லுங்க பிரபு என்ன விசயம் என்ற உதயச்சந்திரனிடம் இல்லை உதய் வினோ ரோனியை பார்த்தே ஆகனும்னு பிடிவாதமா இருக்கிறாள் என்றான் பிரபு. அவளுக்கு ஒன்றும் இல்லை பிரபு நீங்க கவலைப் படாதிங்க எப்படியும் இன்னைக்கு, நாளைக்குள்ள டிஸ்சார்ஜ் பண்ணி வீட்டுக்கு போயிருவோம் அதனால நீங்க வினோதாகிட்ட சொல்லுங்க ரோனி நல்லா இருக்கிறாள் என்ற உதயச்சந்திரன் அது மட்டும் இல்லை இன்னைக்கு நம்ம மாமனார், மாமியார் வேற வராங்க அதனால தான் சொல்கிறேன் ப்ளீஸ் என்றான்.
எனக்கு புரியுது உதய் ஆனால் வினோ புரிஞ்சுக்க மாட்டேங்கிறாள் என்ற பிரபு நான் அவளை சமாளிச்சுக்கிறேன் உதய் என்று சொல்லி போனை வைத்தான் பிரபு.
என்ன ரோனி இப்படியே உட்கார்ந்திருக்க என்ற உதயச்சந்திரனிடம் மாமா என்றாள் வெரோனிகா. என்ன என்றவனின் கையைப் பிடித்தவள் மாமா இன்னைக்கு சொல்லவில்லை என்றால் இனிமேல் சொல்லவே முடியாதோன்னு தோணுது என்றாள். என்ன என்றவனிடம் குறுக்க பேசாதிங்க மாமா என்றவள் மாமா உங்களை பிடிச்சு நான் கல்யாணம் பண்ணிக்கவில்லை. அப்பாவோட கட்டாயம். அதற்குப்பிறகு கூட உங்களைப் பார்க்கும் பொழுது ஒரு விதமான பயம் தான் எனக்கு இருந்துச்சு. ஆனால் உங்க கூட பழகின பிறகு தான் உங்களை நான் புரிஞ்சுகிட்டேன். உங்க கூட இருக்கிற ஒவ்வொரு நிமிசமும் என்னோட வாழ்க்கையில் அவ்வளவு பொக்கிசமான நேரம் என்றவள் அவனது கையை இறுக்கமாகப் பிடித்துக் கொண்டு என்னை உங்களுக்கு பிடிக்குமா மாமா. எனக்கு உங்களைப் பிடிச்ச அளவுக்கு இந்த உலகத்தில் யாரையுமே பிடிக்காது. ஐ லவ் யூ மாமா , நான் உங்களை ரொம்ப லவ் பண்ணுறேன் என்றவள் அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள்.
அவளையே பார்த்தவன் உனக்கு இன்னும் இரண்டு மாசத்தில் பப்ளிக் எக்ஸாம் வரப் போகுது. நீ முதலில் படிப்புல கவனம் செலுத்து இந்த வயசுல வரும் காதல் எல்லாம் கானல்நீர் மாதிரி. அதையெல்லாம் யோசிச்சு படிப்பைக் கோட்டை விட்டுறாதே என்றவன் தன் கையை எடுத்துக் கொள்ள மாமா நான் உங்க மனைவி என்றவளைப் பார்த்து சிரித்தான்.
நமக்கு நடந்த கல்யாணம் நிஜமாவே உனக்கு பிடிச்சுருக்கா ரோனி என்றவனிடம் என்ன மாமா இது பிடிச்சுருக்காவா அப்போ உங்களுக்கு பிடிக்கவில்லையா என்றாள் வெரோனிகா. அதை நான் கல்யாணமாகவே பார்க்கவில்லை. கல்யாணம் ஒருத்தரை ஒருத்தர் புரிஞ்சு உனக்கு நான், எனக்கு நீ என்று ஒரு அழகான காதல் அடுத்த நிலைக்கு போறது தான். எனக்கு உன் மேல காதல் இல்லை. நீ என்னுடைய பொறுப்பு. இன்னும் சொல்லனும்னா நம்ம கல்யாணம் சட்டப்படி செல்லாது ரோனி.
உன்னைக் கல்யாணம் பண்ணிக்கிட்டது அப்பத்தாவோட கட்டாயத்தால மட்டும் தான். நீ சின்னப் பொண்ணு. உன்னோட எதிர்காலம் பாதிக்கப் படக்கூடாதுன்னு தான் உன்னை படிக்க வைக்கிறேன். உனக்கு பிடிச்ச படிப்பை நீ படி. உனக்கு பிடிச்ச வாழ்க்கையை நீ வாழு. என்னோட மனசுல எப்பவும் உனக்கான காதல் கிடைக்காது அதை மட்டும் மனசுல வச்சுக்கோ என்றவன் நான் உனக்கு காபி வாங்கிட்டு வரேன் என்றான்.
மாமா ஏன் உங்களுக்கு என்னை பிடிக்கவில்லைனு காரணம் சொல்ல முடியுமா என்றவளிடம் வெரோனிகா நீ படிக்கிற பொண்ணு உன்னோட கவனத்தை படிப்புல மட்டும் வை. சும்மா தேவையில்லாத கேள்விகள் கேட்கிறதை இத்தோட நிறுத்து என்றவன் சென்று விட அவளது கண்கள் கண்ணீரைக் கொட்டியது.
என்ன சொல்லுறாரு அவரு அப்போ என்னை பிடிக்கவில்லையா என்று நினைத்தவள் அழுது கொண்டிருந்தாள்.
அவன் சென்று அமர்ந்தவன் எனக்கு உன்னைப் பிடிக்கும் ரோனி. ஆனால் உன்னை என்னால மனைவியா பார்க்க முடியாது. அவளை நினைச்ச மனசுல என்னால் உன்னை வச்சு பார்க்க முடியவில்லை. உன் அக்கா வேற ஒருத்தரை காதலிச்ச விசயம் தெரிஞ்சப்போ உண்மையிலே அவ்வளவு சந்தோசம் பட்டேன். இந்தக் கல்யாணமும் நின்று விட்டால் அடுத்து அப்பத்தா எனக்கு பொண்ணு பார்க்கிறேன்னு சொல்லி தொல்லை பண்ண மாட்டாங்கன்னு நம்பினேன். ஆனால் விதி நம்ம இரண்டு பேருக்கும் கல்யாணம் முடிஞ்சுருச்சு.
நீ குழந்தை. உனக்கு ஒரு அழகான எதிர்காலத்தை கொடுப்பேன் என்று நினைத்தவன் கண்களைத் துடைத்துக் கொண்டு அவளுக்கு காபி வாங்கிக் கொண்டிருந்தான்.
காபி என்றவனிடம் எனக்கு வேண்டாம் என்றாள் வெரோனிகா. என்ன வேண்டாம் குடி என்று அவன் மிரட்டிட வேண்டாம்னு சொல்கிறேன்ல உங்களுக்கு புரியாதா என்று அவளும் கத்திட அவன் என்னம்மோ பண்ணு என்று சென்று விட்டான்.
என்ன சொல்லுற பிரபு உதய் நம்மளை வர வேண்டாம்னு சொல்லிட்டாரா என்ற வினோதாவிடம் ஆமாம் வினோ புரிஞ்சுக்கோ இன்னைக்கு உங்க வீட்டில் இருந்து ரோனியை பார்க்க வராங்களாம் என்ற பிரபு வேலைக்கு கிளம்ப ஆரம்பித்தான்.
என்ன அத்தை காலையிலே எங்கே கிளம்பிட்டிங்க என்ற சுசீலாவிடம் நம்ம உதய், ரோனி இரண்டு பேருடைய ஜாதகத்தையும் ஜோசியர்கிட்ட காட்டிட்டு வரலாம்னு தான் கிளம்புகிறேன் என்றார் கல்யாணிதேவி.
சரிங்க அத்தை பார்த்து போயிட்டு வாங்க என்ற சுசீலா சமையல் வேலையை கவனிக்க ஆரம்பித்தார்.
சித்தி அம்மா எங்கே என்ற அர்ச்சனாவிடம் அத்தையும், அக்காவும் அத்தான் கூட சேர்ந்து ஜோசியர் வீட்டிற்கு போயிருக்காங்க நீ வா வந்து சாப்பிடு என்றிட ரோனியை பார்க்க நான் ஹாஸ்பிடல் போகிறேன். அண்ணாவை வீட்டுக்கு அனுப்பி வைக்கிறேன் என்றிட சரிடி சாப்பிட்டு ரோனிக்கும் சாப்பாடு கொண்டு போ என்றார் சுசீலா.
அர்ச்சனா சாப்பிட்டு விட்டு மருத்துவமனைக்கு கிளம்பினாள். ரோனி என்ற அர்ச்சனாவிடம் வாங்க அண்ணி என்ற வெரோனிகாவின் முகம் வாடி இருந்தது. ஸாரி ரோனி நீ எவ்வளவு ப்ரைட்டா இருப்ப இப்போ பாரு எவ்வளவு டல்லா இருக்க எல்லாம் என்னால தான் என்றவளிடம் பரவாயில்லை அண்ணி என்றவள் உங்களுக்கு அடி எதுவும் இல்லையே அதுவே எனக்கு போதும் என்றாள் வெரோனிகா.
அண்ணா நீங்க வீட்டுக்கு போயி குளிச்சுட்டு வாங்க நான் ரோனியை பார்த்துக் கொள்கிறேன் என்றாள் அர்ச்சனா. இல்லை அர்ச்சு எப்படியும் இன்னும் கொஞ்ச நேரத்தில் டாக்டர் ரவுண்ட்ஸ் வருவாங்க. அவங்க இவளை பார்த்துட்டு எப்போ டிஸ்சார்ஜ் பண்ணனும்னு சொல்லுவாங்க. அது தெரிஞ்சுகிட்டே நான் கிளம்புறேன் என்றவன் அங்கு அமர்ந்து மேகசினை புரட்டிக் கொண்டிருந்தான்.
நீ சாப்பிடு ரோனி என்றவளிடம் பசி இல்லை அண்ணி என்றவள் கண்களை மூடிக் கொண்டாள். அண்ணா அவளை சாப்பிட சொல்லுங்க மாத்திரை எடுத்துக்கனும்ல என்றிட வெரோனிகா சாப்பிடு என்றான் உதயச்சந்திரன். எனக்கு பசி இல்லை என்றவளை முறைத்தவன் அர்ச்சனா எனக்கு ஒரு ஜூஸ் வாங்கிட்டு வருகிறாயா ப்ளீஸ் என்றான்.
சரிங்க அண்ணா என்ற அர்ச்சனா சென்று விட உனக்கு என்ன பிரச்சனை ரோனி ஏன் இப்படி பண்ணுற. உனக்கும், எனக்கும் பிரச்சனைனு எல்லோருக்கும் தெரியனுமா என்றவன் இதோ பாரு ரோனி நீ என்னை லவ் பண்ணுறேன்னு சொன்ன நான் எனக்கு உன் மேல லவ் இல்லைன்னு சொன்னேன் அதோட அந்த டாபிக் முடிஞ்சுருச்சு.
அதனால நீ அதை நினைச்சு உன் கோபத்தை சாப்பாட்டு மேலையோ, வீட்டில் உள்ளவங்க கிட்டையோ காட்டாதே. எதையும் மறைச்சு பழகிக்கோ அது தான் வாழ்க்கைக்கு நல்லது என்றவன் அவளிடம் சாப்பாட்டு தட்டினை நீட்டினான்.
அவள் நான் எப்படி சாப்பிடுறது என்னோட கை தான் அசைக்க முடியாதே என்றிட சரி ஆ காட்டு என்று உணவினை ஊட்டினான். மாமா என்றவளிடம் என்ன என்றான். நான் ஸ்கூல் பொண்ணுங்கிறதால தானே இந்த லவ் எல்லாம் வேண்டாம்னு சொன்னிங்க என்றவளைப் பார்த்து புன்னகைத்தவன் ரோனி நீ முதலில் ப்ளஸ்டூ முடி. அப்பறம் காலேஜ் போ. உன் மனசு இன்னும் ஐந்து வருசம் மாறாமல் இப்படியே இருந்துச்சுன்னா சொல்லு அப்பறம் பார்க்கலாம் என்றவன் உணவினை ஊட்டி விட அமைதியாக சாப்பிட்டாள்.
ஐந்து வருசம் இல்லை மாமா ஆயுசு முழுக்க என் மனசு மாறாது. அதை நீங்க பார்க்கத் தான் போறிங்க என்றவள் எனக்கு போதும் என்றிட இன்னும் சாப்பிடு என்று அவன் ஊட்டி விட அவள் மறுக்காமல் சாப்பிட்டாள்.
உன்னோட வயசு இப்படித் தான் பேசும். சும்மா இதையே போட்டு உன்னை குழப்பிக்காதே. என்றவன் அர்ச்சனா வந்து விட்டாள் முகத்தை நார்மலா வச்சுக்கோ என்று கூறி விட்டு கை கழுவ சென்றான்.
….தொடரும்…