அண்ணா ஜூஸ் இந்தாங்க என்ற அர்ச்சனாவிடம் புன்னகை முகத்துடன் அதை வாங்கிக் கொண்டான். என்ன ரோனி பசிக்கவில்லைன்னு சொன்ன அப்போ அண்ணனை ஊட்டிவிட வைக்க தான் பசி இல்லைன்னு சொன்னியா என்ற அர்ச்சனாவிடம் சிறு புன்னகை மட்டும் பதிலாக கொடுத்தாள் வெரோனிகா.
மருத்துவர் வந்து அவளை பரிசோதித்து விட்டு இன்னும் இரண்டு நாட்கள் மருத்துவமனையில் இருக்கச் சொல்லி விட்டு கிளம்பினார். மாமா நீங்க வீட்டுக்கு போங்க அதான் அண்ணி இருக்காங்களே அவங்க என்னை பார்த்துப்பாங்க என்றவளை முறைத்தவன் சரி என்று கிளம்பினான்.
என்ன அண்ணா ஏன் ஏதோ டென்சனா இருக்கிங்க என்ற பிரகாஷிடம் ஒன்றும் இல்லை என்ற உதயச்சந்திரன் குளித்து விட்டு மருத்துவமனைக்கு கிளம்பினான். அண்ணா என்ற பிரகாஷிடம் என்ன என்றான் உதயச்சந்திரன். நீங்க இன்னைக்கு ஸ்கூலுக்கு போகணும் அங்கே ஒரு வேலை என்று இழுத்திட நீயே பார்த்துக்கோ பிரகாஷ் ரோனி ஹாஸ்பிடலில் இருக்கும் பொழுது நான் எப்படி ஸ்கூலுக்கு போறது என்றவன் சித்தப்பாகிட்ட சொல்லி நீயும், சித்தப்பாவும் பார்த்துக்கோங்க ப்ளீஸ் என்ற உதய் மருத்துவமனைக்கு கிளம்பினான்.
அங்கு அவன் சென்ற நேரம் பிரபு, வினோதா இருவரும் வந்திருந்தனர். நீங்க என்ன பண்ணுறிங்க என்ற உதய்யிடம் உதய் ப்ளீஸ் அவள் என்னோட தங்கச்சி அவளுக்கு ஆக்சிடென்ட் ஆகி இருக்கிற இந்த நேரத்தில் என்னால எப்படி வீட்டில் இருக்க முடியும் என்றாள் வினோதா.
வினோ உங்க பேரண்ட்ஸ் வந்திருக்காங்க என்ற உதயச்சந்திரன் திரும்பிட ருத்ரகாளியாக மாறி இருந்த வசந்தி கோபமாக வந்து மகளின் கன்னத்தில் பளார் பளாரென அறைந்திட அத்தை என்ன பண்ணுறிங்க அவங்க கர்ப்பமா இருக்காங்க என்றான் உதயச்சந்திரன்.
விடுங்க மாப்பிள்ளை அவளை கொலை பண்ணினால் தான் என் ஆத்திரம் அடங்கும் என்ற வசந்தி வினோதாவை மேலும் அடித்திட வினோதாவை தாங்கிப் பிடித்தான் பிரபு.
அவனை சரவணன் அடி வெளுத்திட ஐயோ என்ன பண்ணுறிங்க நீங்க எல்லோரும் இது ஹாஸ்பிடல் என்ற உதயச்சந்திரன் சத்தம் போட்டு அனைவரையும் அமைதி படுத்தினான்.
மாமா ப்ளீஸ் சொல்லுறதைக் கேளுங்க எதுவா இருந்தாலும் வீட்டிற்கு போயி பேசிக்கலாம் என்ற உதயச்சந்திரன் அர்ச்சனா நீ ரோனியை பார்த்துக்கோ என்று கூறி விட்டு அனைவரையும் வீட்டிற்கு அழைத்துச் சென்றான்.
அண்ணி நாமலும் வீட்டுக்கு போகலாம் அங்கே என்ன நடக்குதுன்னு தெரியாமல் எப்படி என்றவளிடம் ரோனி நாம எப்படி போறது. உன்னோட உடம்பு இருக்கிற நிலைமையில் என்ற அர்ச்சனாவிடம் அண்ணி ப்ளீஸ் என்ற வெரோனிகா அர்ச்சனாவிடம் கெஞ்சிக் கொண்டிருந்தாள்.
புரிஞ்சுக்கோ ரோனி என்ற அர்ச்சனா அவளை அமைதிபடுத்தினாள். வெரோனிகாவிற்கு மனம் படபடவென அடித்துக் கொண்டிருந்தது.
என்ன சொல்லுறிங்க ஜோசியரே என்ற மலர்கொடியிடம் இந்த இரண்டு ஜாதகமும் நல்ல பொருத்தம் தான் ஆனால் கல்யாணம் நடந்த நேரம் சரியில்லை. கொஞ்ச காலம் இரண்டு ஜாதகரும் பிரிஞ்சு இருந்தால் இரண்டு பேருடைய உயிருக்குமே நல்லது என்று ஜோசியர் கூறிட பரிகாரம் ஏதாவது என்றவரிடம் இரண்டு பேரும் பிரிஞ்சு இருக்கிறது தான் பரிகாரம். பொண்ணுக்கு சுக்கிரதிசை வர ஐந்தரை வருசம் ஆகும். இந்த ஐந்தரை வருச காலம் கணவன், மனைவி பிரிஞ்சு இருக்கனும். ஐந்தரை வருசம் முடிஞ்சு திரும்பவும் இரண்டு பேருக்கும் திருமணம் பண்ணி வைங்க எல்லாம் சரியாகிரும் என்று ஜோசியர் கூறிட கல்யாணிதேவி , மகன், மருமகளோடு ஜோசியரிடம் இருந்து விடைபெற்றார்.
என்ன அத்தை இப்படி ஒரு குண்டை தூக்கி போடுறாரு அவளை எப்படி பிரிச்சு வைக்கிறது . அவங்க ஊரு கிராமம். கல்யாணம் ஆன பொண்ணு பிறந்த வீட்டில் வந்து தங்கினால் பார்க்கிறவங்க தப்பா பேச மாட்டாங்களா என்ற மலர்கொடியிடம் ஜோசியர் பிரிஞ்சு இருக்கனும்னு தானே சொன்னாரு அவளை பிறந்த வீட்டுக்கு அனுப்பி வைக்க சொல்லவில்லையே.
இப்போ ரோனி ப்ளஸ்டூ படிக்கிறாள். அடுத்து ஐந்து வருசம் காலேஜ் படிக்கப் போகிறாள். வீட்டில் இருந்து படிக்காமல் வெளியூர்ல ஹாஸ்டலில் தங்கி படிக்க வச்சுட்டா போச்சு. இதில் என்ன இருக்கு மலரு நீ ஒன்றும் கவலைப் படாதே. இன்னும் இரண்டு மாசத்தில் பரீட்சை ஆரம்பிச்சுரும் அப்பறம் என்ன விடு என்ற கல்யாணிதேவி ஒரு இரண்டு மாசத்திற்கு நம்ம பிள்ளையை பத்திரமா பார்த்துக்குவோம் என்றார். அம்மா சொல்லுறது சரி தான் மலரு நம்ம மருமகளை வெளியூருக்கு அனுப்பி படிக்க வைக்கலாம் கவலையை விடு என்ற நெடுமாறன் வண்டியை வீட்டிற்கு விட்டார்.
என்ன நடக்குது மாப்பிள்ளை இவங்க எப்படி ஹாஸ்பிடலுக்கு வந்தாங்க என்ற கதிரேசனிடம் என்ன பதில் சொல்வதென்று தெரியாமல் தயங்கிய உதயச்சந்திரனின் நிலையை உணர்ந்த பிரபு என் பொண்டாட்டியை செக்கப் அழைச்சுட்டு வந்தப்ப வெரோனிகாவை பார்த்தோம் அதான் என்றான்.
மனதார பிரபுவிற்கு நன்றி சொன்னான் உதய். ஆனால் சரவணன் ஏன்டா மாப்பிள்ளையை பார்த்ததும் ஏதோ தெரிஞ்சவன் மாதிரி பேச ஆரம்பிச்ச என்றதும் பிரபு மேலும் ஏதோ கூற வர அவரை எனக்கு முன்னாடியே தெரியும் என்றான் உதயச்சந்திரன்.
என்ன சொல்லுறிங்க மாப்பிள்ளை என்ற கதிரேசனிடம் என்னை மன்னிச்சுருங்க மாமா பிரபு வேலை பார்க்கிறதே என் நண்பனோட ஆபிஸ்ல தான். நான் தான் அவங்க தங்க வீடும், பார்க்கிறதுக்கு ஒரு வேலையும் ஏற்பாடு பண்ணிக் கொடுத்தேன் என்று அனைத்து உண்மையையும் சொல்லி முடிக்க என்ன காரியம் பண்ணிருக்கிங்க தம்பி என்றார் கதிரேசன்.
என் தங்கச்சிக்கு கல்யாணம் பண்ணி வைக்க நீ யாருடா என்ற சரவணனிடம் சரவணா மரியாதையா பேசு அவரும் உன் தங்கச்சி புருசன் தான் என்ற பூங்கொடியிடம் ஏன் பேச மாட்ட பூங்கொடி உன் மருமகனை எதுனாலும் சொன்னால் ஏன்னா உன் மகள் ராஜ வாழ்க்கை வாழ்கிறாளே அப்போ பேச மாட்ட என்று வசந்தி ஏதோ சொல்ல அப்படியே வாய்ப்பேச்சு நீண்டு நீண்டு கைகலப்பு அதிகமாகியது.
பிரபுவை சரவணன் அடித்திட அதை தடுக்க வந்த உதய் மீதும் அடி விழ ஐய்யோ போதும் நிறுத்துங்க என்று கத்தினாள் வினோதா. என்ன உங்க பிரச்சனை உதய் மட்டும் எங்க கல்யாணத்திற்கு உதவி பண்ணாமல் இருந்திருந்தால் நானும், என் வயிற்றில் வளர்ந்த பிரபுவோட குழந்தையும் செத்துப் போயிருப்போம் அதை புரிஞ்சுக்காமல் ஆளாளுக்கு உதய் பற்றி தப்பா பேசுறிங்க என்று கத்தினாள்.
என்னடி கத்துற நீ செத்து தொலைடி என்ற சரவணன் தங்கையை எட்டி உதைக்க அவள் அம்மா என்று பொத்தென்று விழ யோவ் மனுசனா நீ என்ற உதய் பளாரென்று சரவணனை அடித்து விட ஆனால் அவன் விலகி அந்த அடி கணேசனின் மீது பட்டது. அதில் அதிர்ந்து போன உதயச்சந்திரனை அடித்தான் சரவணன். அவனை ஒரு வழியாக பிடித்து தள்ளி விட்ட உதய் பிரபுவிடம் திரும்பி பிரபு வாங்க முதலில் இவங்களை ஹாஸ்பிடலில் சேர்க்கனும் இந்த புரியாத மனிதர்களுக்கு புரிய வைக்க இது நேரம் இல்லை என்று சொல்லி வினோதாவை மருத்துவமனைக்கு தூக்கிச் சென்றான்.
கணேசன் கன்னத்தைப் பிடித்துக் கொண்டு அமர்ந்திட அண்ணா என்று கதிரேசன் அவரது கையை பிடிக்க அண்ணனா அந்த உறவுமுறை ஞாபகம் இருக்க கொழுந்தனாரே உங்க மருமகனை விட்டு என் புருசனை அடிக்க வச்சுட்டிங்களே என்று வசந்தி ஆரம்பிக்க அக்கா திரும்ப திரும்ப தப்பாவே பேசாதிங்க மாப்பிள்ளை அடிக்க வந்தது சரவணனைத் தான் அத்தானை இல்லை அத்தான் தெரியாமல் என்று ஏதோ சொல்ல வர வாயை மூடு பூங்கொடி.
உன் அண்ணன் மகன் என் பொண்ணை இழுத்துட்டு ஓடிருக்கான். அவன் கூட ஓட வச்சதே உன் மகளோட புருசன் அப்போ திட்டம் போட்டு என் மகளை ஓட வச்சதே உன் மகளுக்கு இந்த வசதியான வாழ்க்கை கிடைக்கனும்னு தானா அதான் போல என் மகள் ஓடிப் போனதும் உன் மகளை இந்த மாப்பிள்ளைக்கு கட்டிக் கொடுக்க உன் புருசன் துடிச்சாராக்கும் என்றார் வசந்தி.
அக்கா நாக்கில் நரம்பில்லாத மாதிரி பேசாதிங்க எதற்கு, எதோட முடிச்சு போடுறிங்க. வினோதா கல்யாணத்துக்கு முன்னாடியே மாசமா இருந்திருக்கிறாள். அது புரியலையா உங்களுக்கு. உங்க மகனுக்கு இன்னொருத்தன் குழந்தையை வயித்துல சுமந்துட்டு இருக்கிற பொண்ணை கட்டி வைப்பிங்களா என்றார் பூங்கொடி.
பூங்கொடி கொஞ்சம் அமைதியா இரு என்ற கதிரேசனிடம் இல்லைங்க என்று பூங்கொடி ஏதோ கூற வர அவரது கன்னத்தில் ஓங்கி அறைந்த கதிரேசன் அமைதியா இருடி என்றிட மௌமாகினார் பூங்கொடி.
அண்ணன் மாப்பிள்ளை வேண்டும் என்று எதுவும் பண்ணவில்லை அவருக்காக நான் உங்க காலில் விழுந்து மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன் கொஞ்சம் மனசு வைங்க அண்ணா. இப்போ மாப்பிள்ளையை தண்டிக்கிறோம்னு எதுனாலும் பண்ணப் போயி ரோனி வாழ்க்கை கெட்டுப் போயிரும் அண்ணா என்றார் கதிரேசன்.
இப்பக் கூட உங்க மகளோட வாழ்க்கை தான் பெரிசு இல்லை கொழுந்தனாரே என் புருசன் பட்ட அவமானம் பெருசு இல்லை. அவள் ஓடிப் போனப்போ ஊரே காரி துப்புச்சு ,இப்போ அதற்கு காரணமான உங்க மருமகன் என் புருசனை அடிச்சுட்டான். உங்களுக்கு கொஞ்சம் கூட துடிக்கவில்லை.
ஏன்னா அவனை நீங்க அடிச்சா உங்க மகளோட வாழ்க்கை வீணா போயிரும் சரியா ஆனால் என் புருசனை அடிச்சவன் கையை என் மகன் உடைக்காமல் விட மாட்டான் என்ற வசந்தி சரவணா உன் அப்பா மேல கை வச்சவனை சும்மா விடாதடா என்றிட வசந்தி அமைதியா இரு என்றார் கணேசன்.
என்னங்க அமைதியா இருக்கனுமா உங்களை என்ற வசந்தியிடம் சொல்லுறேன்லடி என்ற கணேசன் சரி கதிரேசா உன் மருமகனை நான் மன்னிச்சுடுறேன். ஆனால் இனி நம்ம இரண்டு பேரும் ஒரே வீட்டில் ஒன்றாக ஒரே குடும்பமா வாழ வேண்டாம் என்றார் கதிரேசன்.
என்ன பேசுறிங்க அண்ணா என்ற கதிரேசனிடம் உன் மருமகன் அடிச்சது எனக்கு வலிக்கவில்லை கதிரேசா அவன் தான் என் மகளை அந்த பிரபு கூட ஓடிப் போக உதவி செய்திருக்கான். போதாக் குறைக்கு அவங்க வாழ வேலை, தங்க வீடு எல்லாம் ஏற்பாடு பண்ணி கொடுத்திருக்கிறான் அவனை எப்படி மன்னிக்க சொல்லுற.
அவன் உன் மகள் புருசன் நாளைக்கு நம்ம வீட்டுக்கு அடிக்கடி அவன் வந்து போகனும் அப்போ எல்லாம் என் மனசுல அவன் பண்ணின துரோகம் தீயா எறிஞ்சுகிட்டே இருக்கும். அதனால தான் சொல்கிறேன் நாம ஒரே குடும்பமா வாழ்ந்தது எல்லாம் போதும் என்ற கணேசன் எழுந்து சென்றார்.
…..தொடரும்..