உறக்கம் வராமல் தவித்துக் கொண்டிருந்தாள் வெரோனிகா. அவள் இதுவரை புடவை கட்டியதில்லை. புடவையுடன் உறங்குவது அவளுக்கு சிரமமாக இருந்தது. கணவனாவே இருந்தாலும் புதிதாக ஒரு ஆண்மகனின் அறையில் படுத்திருக்கிறாள். புடவை உறங்கும் போது விலகினால் என்ன செய்வது என்று போர்வையை நன்றாக போர்த்திக் கொண்டு படுத்தாலும் அவளுக்கு புடவையுடன் தூங்குவது ஏதோ போல் இருந்தது.
அவளது கண்ணாடி வளையல் சத்தமும், ஜல், ஜல் என்ற கொழுசு சத்தமும் அவனது உறக்கத்தைக் கலைத்தது. அவள் உருண்டு , பிரண்டு உறக்கம் வராமல் தவிப்பதைக் கண்ட உதயச்சந்திரன் என்னாசு என்றான்.
அவள் மௌனமாக இருந்திட உன்னைத் தான் கேட்கிறேன். இந்த அறையில் உன்னைத் தவிர வேற யாரும் இருக்காங்களா என்ன என்றிட அவள் மெதுவாக கூறினாள்.
கொஞ்சம் சத்தமா தான் பேசேன் என்னம்மோ வாய் பேச முடியாதவங்க மாதிரி நடிச்சுகிட்டு என்றான் உதயச்சந்திரன்.
நான் நடிக்கலாம் இல்லை என்றவளை அவன் முறைத்திட இல்லை தூக்கம் வரவில்லை என்றாள். கண்ணை மூடிகிட்டு தூங்கு எல்லாம் தூக்கம் வரும் என்றான். இல்லை இதுவரை புடவை கட்டுணதில்லை, புடவை ரொம்ப வெயிட்டா இருக்கு, நகை எல்லாம் கழுத்தில் குத்துற மாதிரி இருக்கு, தூங்கும் போது புடவை விலகிருமோன்னு வேற பயமா இருக்கு அதான் என்றவளிடம் அப்போ டிரஸ் மாத்திட்டு வந்து தூங்கு என்றான் உதயச்சந்திரன்.
நைட்டி போட்டால் உங்க வீட்டில் யாரும் எதுவும் சொல்லிடுவாங்களோனு பயமா இருக்கு என்றவளைப் பார்த்தவன் உனக்கு எந்த டிரஸ் கம்பர்ட்டபிளா இருக்கோ அதை நீ போட்டுக்கலாம். இங்கே யாரும் எதுவும் சொல்ல மாட்டாங்க என்றவன் வேற டிரஸ் மாத்திட்டு வந்து தூங்கு என்றான்.
அவள் திருதிருவென முழித்துக் கொண்டு நின்றிட என்னாச்சு அதான் டிரஸ் மாத்திட்டு வந்து தூங்குனு சொன்னேன்ல அப்பறம் என்ன என்றான். இல்லை என்னோட டிரஸ் அண்ணி எங்கே எடுத்து வச்சாங்கனு தெரியவில்லை அதான் என்றவள் பயத்துடன் அவனைப் பார்த்திட அவளை அழைத்தவன் ஒரு கப்போர்டைத் திறந்து இதோ இங்கே தான் உன்னோட டிரஸ் எல்லாம் இருக்கு எடுத்து போயி சேஞ்ச் பண்ணிட்டு வந்து தூங்கு என்றவன் சென்று படுத்துக் கொண்டான்.
அவள் இன்னும் அங்கேயே நின்றிட கடுப்பானவன் உனக்கு என்ன தான் பிரச்சனை என்றதும் அவள் அழுது விட்டாள். ஏய் ஏன் இப்போ அழற உன்னை என்ன சொல்லிட்டேன் என்றதும் இல்லை இந்த நகை எல்லாம் எங்கே வைக்கனும்னு தெரியவில்லை அதைக் கேட்கலாம்னு தான் உங்களை பார்த்துட்டு நின்னேன் என்றிட தலையெழுத்து ஒன்றுமே தெரியாத ஒரு பட்டிக்காடை என் தலையில் கட்டி வச்சு எல்லாம் இந்த அப்பத்தாவை சொல்லனும் என்றவன் பீரோவில் உள்ள லாக்கரைத் திறந்து இதில் வச்சுக்கோ என்று கூறிவிட்டு சென்று படுத்துக் கொண்டான்.
அவள் சென்று உடை மாற்றி விட்டு வந்தவள் அந்தப் புடவையை கட்டிலின் அருகே போட்டு விட்டு சென்று படுத்து விட்டாள்.
என்ன வசந்தி ஏன் ஒரு மாதிரி இருக்க என்ற கணேசனிடம் இந்தப் பொண்ணு இப்படி நம்மளை அசிங்கப் படுத்திட்டு ஓடிப் போயிட்டாளேங்க அதை நினைக்க நினைக்க வேதனையா இருக்கு. இன்னைக்கு மட்டும் உங்க தம்பி ரோனியை கல்யாணம் பண்ணி வைக்கவில்லைனா நம்ம குடும்பமே தூக்கில் தொங்கிருக்கும் என்று அழுதிட விடும்மா என்ன பண்ணுறது எல்லாம் நம்ம தலையெழுத்து என்ற கணேசன் மனைவியை சமாதானம் செய்தார்.
என்ன மலர்கொடி யோசனை என்ற நெடுமாறனிடம் இல்லைங்க அத்தை சொல்படி இந்த கல்யாணம் நடந்திருந்தாலும் அந்தப் பொண்ணு ரொம்ப சின்னப் பொண்ணா இருக்கிறாள். புடவை கூட கட்டத் தெரியலை அதைவிட ரொம்ப பயந்த சுபாவம் வேற அதான் நம்ம உதயா கொஞ்சம் கோபக்காரன் வேற எனக்கு அவங்க வாழ்க்கை எப்படி இருக்குமோன்னு பயமா இருக்கு என்றார்.
அதெல்லாம் நல்லபடியா இருக்கும் கவலைப்படாதே அப்பறம் நாளைக்கு மறுவீட்டுக்கு போகும் போது நம்ம மருமகளுடைய டீசியை அவள் படிச்ச ஸ்கூலில் இருந்து வாங்கச் சொல்லி சம்மந்தி கிட்ட பேசனும் கொஞ்சம் ஞாபகம் படுத்திரு என்றார் நெடுமாறன்.
டீசி எதற்குங்க என்ற மலர்கொடியிடம் வெரோனிகாவை ஸ்கூலில் சேர்க்க வேண்டாமா. அவள் படிச்சுட்டு இருந்த பொண்ணு நம்ம சுயநலத்திற்காக ஒரு பெண் குழந்தையோட படிப்பைக் கெடுக்கிறது பாவம் என்றவர் நம்ம ஸ்கூலிலே அவளை சேர்த்துகிட்டால் பிரச்சனை எதுவும் இல்லையே என்றார்.
நம்ம ஸ்கூலிலா உதயா என்று இழுத்த மலர்கொடியிடம் உதயா ஒன்றும் சொல்ல மாட்டான். கெட்டதிலும் ஒரு நல்லது உதயாவுடைய கல்யாணத்திற்கு நம்ம ஸ்கூல் ஸ்டாப்ஸ் யாரையும் இன்வைட் பண்ணாததுதான் என்ற நெடுமாறன் சரிம்மா தூங்கு என்றார்.
அதிகாலை கண்விழித்து எழுந்த வெரோனிகா சென்று குளித்து விட்டு வந்து அறையில் அமர்ந்திருந்தாள். உறக்கம் கலைந்து கண் விழித்த உதயச்சந்திரன் அப்பாவியாக அமர்ந்திருக்கும் வெரோனிகாவைப் பார்த்து விட்டு நீ ஏன் இங்கே உட்கார்ந்திருக்க டிரஸ் மாத்திட்டு கீழே போகலாமே என்றான்.
இல்லை எனக்கு புடவை கட்டத் தெரியாது அதான் அண்ணியை வரச் சொல்லலாம்னு என்று இழுத்தாள் வெரோனிகா. உன் அண்ணி உனக்கு தினமும் புடவை கட்டி விட இங்கே இருக்க மாட்டாங்க. நீ புடவை தான் கட்டணும்னு இந்த வீட்டில் யாரும் உன்னைக் கட்டாயப்படுத்தவும் மாட்டாங்க. உனக்கு நான் நேற்றே சொல்லிவிட்டேன் உனக்கு எந்த டிரஸ் சௌகரியமா இருக்கோ அதையே நீ போட்டுக்கலாம் என்றவன் எழுந்து குளியலறைக்குள் புகுந்தான்.
அப்பாடா என்று நினைத்தவள் ஒரு சுடிதாரை அணிந்து கொண்டு தலையை வாரிக் கொண்டு இருந்தாள். தலைசீவி முடித்தவள் எழுந்து வெளியே சென்றாள்.
என்னம்மா நைட்டு நல்லா தூங்கினாயா என்ற சுசீலாவிடம் ஹும் என்றவள் மௌனமாகிட அவளது கையில் தேநீர் கோப்பையை நீட்டினார் சுசீலா. தாங்க்ஸ் என்றவளை அவர் முறைத்திட தாங்க்ஸ் அத்தை என்றாள் வெரோனிகா.
அது அப்படி தான் கூப்பிடனும் என்றவர் சரிம்மா உன் புருசன் எழுந்துட்டானா என்றிட அவங்க எழுந்திருச்சிட்டாங்க என்றாள் வெரோனிகா.
சரி இந்தா இந்த டீயை கொண்டு போயி அவன்கிட்ட கொடும்மா என்றார் சுசீலா. வெரோனிகாவும் டீயை கொண்டு போனாள். குளித்து முடித்து வந்தவன் அறையைக் கண்டு கோபமாகினான்.
இரவு அவள் உடுத்தியிருந்த சேலை, நைட்டி எல்லாம் அலங்கோலமாக அங்கொன்றும் , இங்கொன்றுமாக கிடந்தது. அவள் படுத்திருந்த பெட்சீட் கூட எடுத்து வைக்காமல் இருக்கவும் அவன் கோபமாக நின்று கொண்டிருக்க கதவைத் திறந்து கொண்டு வெரோனிகா வந்தாள்.
என்ன இது என்றவனிடம் டீ அத்தை உங்க கிட்ட கொடுக்க சொன்னாங்க என்றவளை முறைத்தவன் அதை சொல்லவில்லை என்றவன் இந்த ரூம் இருக்கிற கொடுமையை பாரு இப்படித்தான் பொறுப்பே இல்லாமல் துணிமணிகளை குப்பையை வீசினது போல அறை முழுக்க வீசுவியா என்றான்.
அவள் அவனது அதட்டலான குரலில் பயந்து போனவள் கை நடுங்கியபடி நின்றிட அவளது கையில் இருந்த டீயை வாங்கியவன் அழுக்குத் துணியை அந்த கூடையில் போட்டு வை. பெட்சீட்டை மடிச்சு வை என்றிட அவளும் தலையை ஆட்டிவிட்டு அவன் சொன்னதை செய்தாள்.
எல்லாம் என் தலையெழுத்து கொஞ்சம் கூட நீட்டா இல்லாத இப்படி ஒரு தற்குறியை என் தலையில் கட்டி வச்சு எல்லாம் இந்த அப்பத்தா பண்ணின வேலை என்று முணுமுணுத்தபடி கிளம்பிக் கொண்டிருந்தான்.
அவன் அறையை விட்டு சென்ற பிறகு அவள் மெத்தையில் விழுந்து அழ ஆரம்பித்தாள். இப்போ என்ன பண்ணிட்டேன்னு என்னைத் திட்டிட்டு போறாரு. நம்ம வீட்டில் கூட இப்படித் தானே போடுவேன் அம்மா தானே எல்லாம் எடுத்து வைப்பாங்க அந்த ஞாபகத்தில் போட்டுட்டேன் என்று நினைத்தவள் என்னை ஏன்மா இந்த ஆளுக்கு கல்யாணம் பண்ணி வச்சிங்க சரியான வெறுக்கு எப்போ பாரு வெடு வெடுனு விழுந்துகிட்டு என்று அழுது கொண்டிருந்தாள்.
என்ன உதயா நீ மட்டும் வர வெரோனிகா எங்கே அவங்க வீட்டுக்கு கிளம்பனும்ல பாரு அவங்க அண்ணா வந்திருக்கிறாரு என்றார் மலர்கொடி. அவங்க வீட்டுக்கு எதற்கு அம்மா என்றவனிடம் மறுவீட்டு சடங்கு இருக்கே என்ற மலர்கொடி சரி இரு நான் போயி அவளை கூட்டிட்டு வரேன் என்றவர் மகனின் அறைக்குச் சென்றார்.
உதயச்சந்திரன் சக்திவேலுவிடம் பேசிக்கொண்டிருந்தான்.
அறைக் கதவைத் திறந்து கொண்டு உள்ளே வந்த மலர்கொடி மெத்தையில் விழுந்து அழுது கொண்டிருந்த வெரோனிகாவின் அருகில் சென்றார்.
வெரோனிகா என்னம்மா ஏன் இப்படி அழுதுகிட்டு இருக்க என்றிட கணவன் தன்னை திட்டியதைக் கூறி அவள் அழுது கொண்டிருக்க அவளது கண்களைத் துடைத்த மலர்கொடி இதற்குப் போயி அழலாமா என்று மருமகளை சமாதானம் செய்தார்.
அவன் கொஞ்சம் எல்லாமே நீட்டா இருக்கனும்னு ஆசைப்படுவான் வெரோனிகா அதான் கொஞ்சம் கோபம் பட்டுட்டான். இதற்கு எல்லாம் அழலாமா கண்ணைத் துடைச்சுக்கோ உங்க வீட்டுக்கு மறுவீட்டு அழைப்புக்கு போக வேண்டாமா. உன் அண்ணன் வந்திருக்காரு உன்னையும், உதயாவையும் அழைச்சுட்டு போக என்ற மலர்கொடி புடவையை கட்டிட்டு ரெடியாகு என்றார்
அத்தை எனக்கு புடவை கட்டவே தெரியாது என்றாள் வெரோனிகா. சரி வா அத்தை சொல்லித் தரேன் என்றவர் மருமகளுக்கு புடவை கட்டிவிடும் பொழுதே அவளுக்கு எப்படி கட்ட வேண்டும் என்று சொல்லிக் கொடுத்திட அவளும் கற்றுக் கொண்டாள்.
சரிம்மா நகை எல்லாம் போட்டுக்கோ என்றவர் மருமகளுக்கு தலை வாரி பூ வைத்து விட்டார். உச்சியில் குங்கும்ம் வைக்கவில்லையா என்றவர் அத்தை பார்த்தால் எதாச்சும் சொல்லுவாங்க என்றிட சாரி அத்தை என்றாள் வெரோனிகா. அந்த நேரம் உதயச்சந்திரன் அறைக்குள் வர உதயா இங்கே வாப்பா என்றார் மலர்கொடி.
என்னங்கம்மா என்றவனிடம் வெரோனிகாவிற்கு இந்த குங்குமத்தை வச்சு விடு என்றிட அவன் தன் அன்னையை முறைத்தான் . வச்சு விடுடா எனக்கு வேலை இருக்கு என்று அவர் சென்று விட அவளை முறைத்தவன் இதெல்லாம் நீயே வச்சுக்க மாட்டியா என்று கூறி விட்டு அவளது உச்சி வகுடில் குங்குமம் வைத்து விட்டான்.
சரி நீ கீழே போ நானும் டிரஸ் மாற்றி விட்டு வருகிறேன் என்றான். அவள் கிளம்பாமல் நின்றிட என்ன வேண்டும் என்றான். இல்லை இதை அழுக்குதுணி பக்கெட்ல போடணும் என்றாள். சரி போட்டுட்டு இடத்தை காலி பண்ணு என்று அவன் கூறிட அவள் அந்த அறையை விட்டு ஓடியே விட்டாள்.
தானும் உடைமாற்றி கிளம்பி வந்தான். பிறகு வீட்டில் உள்ளவர்களிடம் சொல்லி விட்டு உதயச்சந்திரன், வெரோனிகா இருவரும் சக்திவேல், தேன்மொழி இருவருடனும் மறுவீட்டு விருந்திற்கு சென்றனர் . மற்றவர்களும் சிறிது நேரம் கழித்து மறுவீட்டு விருந்திற்கு கிளம்பினர்.
….தொடரும்…