ஜாதகம் பார்க்க போயிருக்காங்க என்ற சுசீலாவிடம் சரிங்க அண்ணி மாப்பிள்ளை எப்போ வருவாங்க என்றார் பூங்கொடி. இதோ இப்ப வந்துருவான் அண்ணி ரோனிக்கு ஒன்றும் இல்லை நீங்க பயப்படவே வேண்டாம். என்ன பிள்ளைக்கு கை தான் உடைஞ்சுருச்சு என்ற சுசீலா வருந்தினார்.
அதெல்லாம் அவளோட கை சரியாகிரும் சித்தி என்றபடி வந்து சேர்ந்தான் உதயச்சந்திரன். வாங்க மாப்பிள்ளை என்ற கதிரேசனிடம் வணக்கம் சொல்லி விட்டு, கணேசன், வசந்தி, பூங்கொடி மூவரையும் வணங்கியவன் சாப்பிட்டிங்களா என்றான்.
இல்லை மாப்பிள்ளை முதலில் ரோனியை பார்த்துட்டு வந்துருவோம் என்றிட சரி வாங்க என்று அவர்களை மருத்துவமனைக்கு அழைத்து சென்றான்.
அண்ணி என்ற வெரோனிகாவை முறைத்த அர்ச்சனா ப்ளீஸ் ரோனி புரிஞ்சுக்கோ என்றாள். அண்ணி அவள் என் அக்கா என்ற வெரோனிகாவிடம் லூசாடி நீ சொல்லிகிட்டே இருக்கேன் என்று கோபமாக அர்ச்சனா திட்டவும் சோகமாக முகத்தை தூக்கி வைத்துக் கொண்டு அமர்ந்துவிட்டாள் வெரோனிகா.
என்ன இரண்டு பேரும் ஏன் திசைக்கு ஒருத்தரா உட்கார்ந்து இருக்கிங்க என்ற உதயச்சந்திரனிடம் ஏதோ சொல்ல வந்த வெரோனிகா அம்மா என்றிட அவளைக் கட்டிக் கொண்டார் பூங்கொடி. அம்மு உனக்கு எப்படி இருக்கு என்றவரிடம் நல்லா இருக்கேன் என்றாள் வெரோனிகா. அம்மா அப்பா எங்கே என்றவளிடம் அப்பாவும், பெரியப்பாவும் வினோதாவுக்கு குழந்தை பிறந்திருக்காமே அங்கே போயிருக்காங்க என்றார் பூங்கொடி.
என்னம்மா சொல்லுறிங்க என்ற வெரோனிகாவிடம் ஆமாம் அதெல்லாம் மகளை ஏத்துக்கிட்டாங்க பேரன் பிறந்திருக்கான் எல்லாம் மாப்பிள்ளையால தான் என்றார் பூங்கொடி.
என்னம்மா சொல்லுறிங்க என்ற வெரோனிகாவிடம் ஆடிக்கு வந்துட்டு போனிங்களே அதற்குப் பிறகு மாப்பிள்ளை மட்டும் நம்ம வீட்டுக்கு வந்தாரு.
அவர் தான் வினோதா, பிரபுவுக்கு கல்யாணம் பண்ணி வச்சு அவங்க வாழ வீடு, வேலை எல்லா ஏற்பாடும் பண்ணி வச்சதுன்னு சொன்னாரு. உன் அப்பாவும், பெரியப்பாவும் ஆரம்பத்தில் ரொம்ப குதிச்சாங்க, உன் அண்ணன்களும் மாப்பிள்ளையை அடிக்கவே பாய்ஞ்சானுங்க அப்பறம் வினோதா கல்யாணத்தப்போ மாசமா இருந்தாள்னு சொன்ன அப்பறம் தான் மாப்பிள்ளை மேல எந்த தப்பும் இல்லைன்னு புரிஞ்சது. அப்பறம் என்ன வினோதாவை ஏத்துக்கலாமா, வேண்டாமானு ஒரே விவாதம் தான்.
இப்போ வரும் போது மாப்பிள்ளை தான் சொன்னாரு வினோதாவுக்கு குழந்தை பிறந்திருச்சுனு பிரபு போன் பண்ணினானாம். அதான் நேரா உன் பெரியம்மா, பெரியப்பா, அப்பா மூன்று பேரும் குழந்தையை பார்க்க போயிட்டாங்க என்றார் பூங்கொடி.
என்ன சித்தி நீங்க உங்க அக்கா பையனை பார்க்க போகவில்லையா என்ற உதயச்சந்திரனிடம் அட நீங்க வேற அண்ணா இந்த சித்திக்கு அக்கா பிள்ளையை பார்க்க போக விடவில்லைனு என் மேல பயங்கர கோபம் என்ற அர்ச்சனா சிரித்தாள்.
கொஞ்ச நேரம் பொறு ரோனி டாக்டர் ரவுண்ட்ஸ் வர நேரம் நீ இங்கே தான் இருக்கனும் என்ற உதயச்சந்திரன் அத்தை நீங்க பேசிட்டு இருங்க நான் வந்துடுறேன் என்றான்.
உண்மையை சொல்லவா ரோனி நீ ரொம்ப புண்ணியம் பண்ணினவ அதனால தான் இப்படி ஒரு புருசன் உனக்கு கிடைச்சுருக்காரு. எப்பவுமே உன்னை பற்றி மட்டும் தான் மாப்பிள்ளை யோசிக்கிறாரு என்ற பூங்கொடியிடம் பதிலேதும் சொல்லாமல் மௌனமாக இருந்தாள் வெரோனிகா.
ஆமாம் என்னைப் பற்றி மட்டும் தான் நினைக்கிறாரு ஏன் அம்மா நீ வேற அந்த மனுசனுக்கு என் மனசு புரியவே புரியாது. எப்போ பாரு படி, படி, படி என்று நினைத்தவள் அம்மா பெரியம்மா என்றாள் வெரோனிகா.
பேரன் அவங்க முகத்தில் உச்சா போனதும் மகளை ஏத்துக்கிட்டாங்க என்று சிரித்தார் பூங்கொடி. குழந்தை எப்படி இருக்கான் அத்தான் சாயலா, இல்லை அக்கா சாயலா என்ற வெரோனிகாவிடம் நீயே போயி பாரு என்ற பூங்கொடி அர்ச்சனாவிடம் பேசிக் கொண்டு இருந்தார்.
என்ன பிரபு என்ன சொல்லுறாங்க உங்க மாமனார் , மாமியார் என்ற உதயச்சந்திரனிடம் ரொம்ப , ரொம்ப நன்றி உதய். உங்களால மட்டும் தான் எல்லாமே என்ற பிரபுவிடம் என்ன பிரபு நீங்க இதெல்லாம் ஒரு விசயமா. நீங்க என்னோட சகளை உங்களுக்கு இது கூட செய்ய மாட்டேனா.
என்ன தான் உங்க மேல கோபம் இருந்தாலும் அந்த கோபத்தை அவங்களால் உங்க குழந்தை மேல காட்ட முடியாது. அதனால தான் அடிக்கடி அவங்க கிட்ட பேசி, பேசி இன்னைக்கு பிள்ளையை பார்க்க வர வச்சுட்டேன் என்ற உதயச்சந்திரன் அப்பறம் உங்க அப்பா, அம்மாகிட்ட பேசுனிங்களா என்றான்.
இல்லை உதய் அப்பா என் மேல இன்னும் கோபமா தான் இருக்கிறார். அம்மாவும், தம்பியும் பேசிட்டு தான் இருக்காங்க என்ற பிரபு இவங்க வந்திருக்கிற நேரத்தில் அவங்க வந்தால் நிச்சயம் பிரச்சனை வர வாய்ப்பு அதிகம் அதான் என்ற பிரபு ரோனிக்கு எப்படி இருக்கு என்றான்.
நல்லா இருக்கிறாள் ஒன்றும் பிரச்சனை இல்லை என்ற உதய் என்ன மாமா பேரனை பார்த்ததும் மகளை மறந்துட்டிங்க போல என்றிட ஐய்யோ அப்படி எல்லாம் இல்லை மாப்பிள்ளை என்ற கணேசனிடம் விளையாட்டுக்கு சொன்னேன் என்றவன் குழந்தையை வாங்கி கொஞ்சினான்.
கணேசனும், கதிரேசனும், உதயசந்திரனுடன் வெரோனிகாவை காண சென்றனர்.
என்னம்மா ஏன் பேச மாட்டேங்கிறிங்க இன்னும் கோபம் போகவில்லையா என்ற வினோதாவிடம் உன்கிட்ட என்னடி பேச்சு. உன் அப்பாவும்,சித்தப்பாவும் உன்னை மன்னிச்சதால மட்டும் தான் இங்கே வந்திருக்கேன் என்ற வசந்தி அப்படி என்னடி அவசரம் இவன் கூட தாலி கட்டாமல் பிள்ளையை வயித்துல வாங்கிட்டு த்தூ என்றார் வசந்தி.
எப்படிப்பட்ட வாழ்க்கை தெரியுமாடி நீ மட்டும் முன்னமே கர்ப்பமா இருக்கிறதை என்கிட்ட சொல்லிருந்தால் உன் பிள்ளையை கலைச்சுட்டு உன்னை அந்த உதய் தம்பிக்கு கட்டி வச்சுருப்பேன். நீ எப்பவுமே எனக்கு சனியன் தான்டி என்றார் வசந்தி.
அம்மா என்ன பேசுற நீ என்ற வினோதாவிடம் அந்த சின்னக்குட்டிக்கு அடிச்ச அதிர்ஷ்டம் உன்னோடது. அதிர்ஷ்டத்தை தூக்கிப் போட்டுட்டு தரித்தரத்தை தேடி ஓடிப் போயிருக்க.
இவன் உன்னை என்ன நல்லா பார்த்துக்கிறான். தங்கிறதுக்கு வாடகை வீடு, திங்கிறதுக்கு சோறு இது போதுமாடி உன் தங்கச்சி வாழ்றது வீடு இல்லை மாளிகை. பரம்பரை சொத்து. சொந்தமா பெரிய பள்ளிக்கூடம் , அவங்க சொத்து மதிப்பு தெரியுமாடி என்ற வசந்தியிடம் அம்மா போதும் நிறுத்து.
என் புருசன் ஒன்றும் பிச்சைக்காரன் இல்லை. என் மாமனார் வீடும் வசதியானவங்க தான் என்ற வினோதாவிடம் ஆமாம் பெரிய வசதி என்ற வசந்தி நீட்டி முழக்க அம்மா போதும்னு சொன்னேன் என்றாள் வினோதா.
உன் பிள்ளையை பிடி நான் கிளம்புகிறேன் என்ற வசந்தி சென்று விட தன் கணவனைப் பார்த்த வினோதா என்னை மன்னிச்சுரு பிரபு என்றாள். ஏன் என்றவனிடம் என்னால தானே அவங்க உன்னை இவ்வளவு மோசமா பேசுறாங்க என்றாள் வினோதா.
அவங்க அப்படித் தான்னு எனக்கு தெரியாதா என்ன என்ற பிரபு ஆனால் ஏன் ரோனியை பார்த்து இவ்வளவு பொறாமை படுறாங்க. அது தான் கொஞ்சம் வருத்தமா இருக்கு என்றான் பிரபு.
விடு பிரபு அவங்களால ஏக்கப் பெருமூச்சு தான் விட முடியும் என்ற வினோதா நம்ம பையனை பாரு எவ்ளோ க்யூட்டா இருக்கான் என்றாள் வினோதா. ஆமாம் நம்ம செல்லத்துக்கு என்ன பெயர் வைக்கலாம் என்ற பிரபுவிடம் நீயே சொல்லு என்றாள் வினோதா. உதய் என்ற பிரபுவிடம் என்ன உதய்யா என்றாள் வினோதா. ஆமாம் இன்னைக்கு இவனும், நீயும் என் கூட இருக்க காரணம் உதய் தானே அதனால தான் சொல்கிறேன். நம்ம மகன் பெயர் உதய் தான் என்றான் பிரபு.
எப்படி இருக்கத்தா என்ற கணேசனிடம் நல்லா இருக்கேன் பெரியப்பா என்றாள் வெரோனிகா. ரோனி என்ற கதிரேசனிடம் எனக்கு ஒன்றும் இல்லைப்பா என்றாள். அவளின் தலை கோதியவர் கை உடைஞ்சுருக்கே ரோனிமா என்றவரிடம் அதனால என்னப்பா எல்லாம் சரியாகிரும் என்றவள் அவர்களுடன் பேசிக் கொண்டு இருந்தாள்.
என்னக்கா ஜோசியர் என்ன சொன்னாரு என்ற சுசீலாவிடம் எல்லாம் நல்லதா தான் சொன்னாரு சுசீ. நம்ம ரோனி, உதய் இரண்டு பேரும் சந்தோசமா வாழுவாங்களாம். இப்போ ஒரு சின்ன பரிகாரம் மட்டும் பண்ணனும்னு சொன்னாரு என்ற மலர்கொடி நம்ம அர்ச்சனா ஒரு பையனை விரும்புறான்னு உன்கிட்ட சொன்னேன்ல அதை அத்தைகிட்டையும், அவர்கிட்டையும் சொல்லிட்டேன்.
அவரு தம்பிகிட்ட கலந்து பேசி அந்ந பையனை பத்தி விசாரிக்கனும்னு சொன்னாரு என்ற மலர்கொடியிடம் சரிக்கா நீங்க வாங்க காபி சாப்பிடுங்க என்றாள் சுசீலா.
என்னடி அக்காளும், தங்கச்சியும் கொஞ்சிட்டு இருக்கிங்க என்ற கல்யாணியிடம் என் தங்கச்சியை நான் கொஞ்சுகிறேன் உங்களுக்கு என்ன வேண்டும் என்றால் நீங்களும் வாங்க இரண்டு பேரும் சேர்ந்து உங்களையும் கொஞ்சுறோம் என்றார் மலர்கொடி.
கொஞ்சுவிங்கடி ,கொஞ்சுவிங்க போயி சமையல் வேலையை பாருங்க என்ற கல்யாணிதேவி சென்று விட அக்கா சம்மந்தி வீட்டில் இருந்து உப்புக்கண்டம், கருவாடு, ஆட்டுக்கால் எல்லாம் கொண்டு வந்துருக்காங்க. பேசாமல் நைட்டுக்கு திரிக்கை கருவாட்டு குழம்பு வச்சுரவா என்ற சுசீலாவிடம் எனக்கு ரொம்ப பிடிக்கும். எனக்கு மட்டும் இல்லை உதய்க்கும், பிரகாஷ்க்கும் கூட ரொம்ப பிடிக்கும் என்ற மலர் வா சமைக்கலாம் என்றார்.
என்ன பிரகாஷ்னு என்னை பற்றி பேசுறிங்க என்ற பிரகாஷிடம் உனக்கு கருவாட்டு குழம்பு பிடிக்கும்னு பெரியம்மா சொன்னாங்கடா என்ற சுசீலாவிடம் ஏன்மா கருவாட்டுக்குழம்பு பற்றியா பேசுனிங்க நான் என்னம்மோ எனக்கு ஏதாச்சும் பொண்ணு பார்த்து கல்யாணப் பேச்சு பேசுறிங்களோன்னு தப்பா நினைச்சுட்டேன் என்றான் பிரகாஷ்.
அவனது இரண்டு காதையும் இருபுறமும் ஆளுக்கொருவராய் திருகினர் மலர்கொடி, சுசீலா இருவரும். ஏன்டா கழுதை உனக்கு என்ன அவசரம் கல்யாணத்திற்கு என்ற அன்னையர் இருவரிடமும் எப்போ பாரு பெரிய மருமகள் புராணமா இருக்கே அதான். அண்ணி ஒரு அப்புரானி அதான் உங்க கூட சண்டை போட ஒருத்தி வீட்டுக்கு வந்தால் கொஞ்சம் என்டர்டைன்மென்ட்டா இருக்குமே என்றான் பிரகாஷ்.
அடக் கழுதை உன்னை என்ற அம்மா, பெரியம்மா இருவரிடமிருந்தும் தப்பித்து ஓடியவன் ஓரகத்திகள் இரண்டு பேரும் ஓடிப் பிடிச்சு விளையாடி காலை உடைச்சுக்காமல் போயி சீக்கிரம் கருவாட்டுக்குழம்பு வைங்க என்ற பிரகாஷ் சென்று விட்டான்.
சந்தோசமாக மலர், சுசீ இருவரும் சமையல் வேலையை கவனிக்க ஆரம்பித்தனர்.
…..தொடரும்….