மாமா என்று வந்தவள் அவனைப் பார்த்து அப்படியே நிற்க என்ன வெரோனிகா நீ இன்னும் பேக் பண்ணவில்லையா என்றான் உதயச்சந்திரன். ஊஞ்சலில் அவன் ஆடிக் கொண்டே அவளிடம் கேள்வி கேட்டிட மாமா இது என்ன ஊஞ்சல் எப்போ வந்துச்சு என்றவளை கோபமாக பார்த்தவன் இந்த ஊஞ்சல் இந்த பால்கணிக்கு வந்து ஒரு மாதம் ஆகுது. மேடம் தான் என் கூட பேசுறதில்லை, வீட்டில் என்ன நடக்குதுன்னும் தெரிஞ்சுக்கிறதில்லை எப்போ பாரு படிப்பு , படிப்புனு என் மேல உள்ள கோபத்தில் புத்தகத்தை விட்டு கண்ணை திருப்பவே இல்லையே அப்பறம் எப்படி வீட்டில் இருக்கிற ஊஞ்சல் தெரியப் போகுது என்றவன் வேறு திசையில் பார்த்தபடி அமர்ந்திருந்தான்.
ரொம்ப ஸாரி மாமா எங்கே என் கனவுல வந்த மாதிரி ஏதும் நடந்திரும்மோனு பயம் அதுதான் என்றவள் தலை குனிந்தபடி நின்றாள். இப்பவும் ஏன் அழுதுட்டே இருக்கிற எனக்கு அழுமூஞ்சிகளை சுத்தமா பிடிக்காது என்றான்.
நான் ஒன்றும் அழுமூஞ்சி இல்லை என்றவளிடம் ஓஓ அப்போ ஏன் மகாராணி உங்க முகம் வீங்கி இருக்கு என்றான் உதயச்சந்திரன். இனிமேல் அழ மாட்டேன் என்றவளது கையைப் பிடித்து தன் புறம் இழுத்தவன் இந்த ஊஞ்சல் உனக்காக வாங்கினேன் என்றான். மாமா எனக்காகவா என்றவளிடம் இல்லை ரோட்டுல போறவங்களுக்காக வாங்கினேன் என்றவனின் தோளில் அவள் அடித்து விட்டு ஏன் மாமா என்றாள்.
என்ன ஏன் மாமா நீ மொட்டை மாடி ஊஞ்சலுக்கு கூப்பிட்டு நான் மறுத்ததால நீ வருத்தமா இருந்த அதனால தான் உனக்காக புது ஊஞ்சல் வாங்கினேன் நீ என்னடானா என் மேல சந்தேகப் பட்டு பேசாமல் ,கொள்ளாமல் இருந்ததோட மட்டும் இல்லாமல் என்னை விட்டுட்டு ஊருக்குப் போக முடிவு பண்ணிட்ட என் முகத்தை பார்க்க கூட பிடிக்கவில்லையா வெரோனிகா என்றவனைக் கட்டிக் கொண்டவள் ஸாரி மாமா நான் பண்ணினது எல்லாமே தப்பு தான். மன்னிச்சுருங்க என்று அவனது மார்பில் முகம் புதைத்து அவள் அழுதாள்.
இப்போ தான் சொன்னேன் எனக்கு அழுமூஞ்சிகளை பிடிக்காதுன்னு என்றவனிடம் நான் ஒன்றும் அழவில்லையே கண்ணு வேர்த்திருச்சு என்றவள் மாமா எனக்கு எங்கே உங்களை பிரிஞ்சுருவோமோங்கிற பயம் தான் என்னன்னமோ பேசிட்டேன்.
எனக்கு நீங்க வேண்டும் மாமா உங்க கூடவே நான் இருக்கனும் எப்பவுமே அதனால தான் அப்படி எல்லாம் பயந்து கோபம் பட்டு எனக்கு எதுவுமே புரியலை மாமா அந்த ஸ்ரீஜா வேற உங்களுக்கு மெரூன் கலர் தான் பிடிக்கும், பர்பிள் கலர் பிடிக்காதுன்னு என் கிட்ட வம்பு வளர்த்தாங்களா அந்த டென்சன்ல இருக்கும் பொழுது உங்க தம்பி வரவும் கன்பியூஸ் ஆகிட்டேன் என்னை மன்னிச்சுருங்க மாமா என்றாள் வெரோனிகா.
அவளது கண்களைத் துடைத்தவன் நீ தேவ் பார்த்து நான் நினைச்சது தப்பில்லை. அதனால நான் உன் மேல கோபமா இல்லை உனக்கு என் மேல ஏதாச்சும் சந்தேகம் என்றால் அதை என்கிட்ட அப்பவே கேட்கனும். அப்படி நீ கேட்டிருந்தால் நானும் உடனே உன்னோட சந்தேகத்தை தீர்த்து வச்சுருப்பேன். ஒரு விசயத்தை மனசுல அழுத்தி ,அழுத்தி உன்னை ஏன் கஷ்டப் படுத்திக்கிற நமக்குள்ள எந்த ஒளிவும்,மறைவும் வேண்டாம்.
நான் உன்கிட்ட ஒரு விசயம் மறைக்கிறேன் என்றால் அந்த விசயங்களை புரிந்து கொள்ளுற வயசும், பக்குவமும் உனக்கு இன்னும் வரவில்லைனு தான் அர்த்தம். அதனால இனிமேல் என்ன சந்தேகம் இருந்தாலும் என்கிட்ட தெளிவா கேளு என்றவன் சரி உட்காரு என்றிட அவள் ஊஞ்சலில் அமர்ந்தாள். அவனும் ஊஞ்சலை ஆட்டி விட சந்தோசமாக ஊஞ்சலில் ஆடிக் கொண்டிருந்தாள்.
மாமா உங்களுக்கு மெரூன் கலர் பிடிக்காது தானே. பர்பிள் கலர் தானே பிடிக்கும் என்றவளை அவன் முறைத்திட நீங்க தானே மாமா சந்தேகம் வந்தால் உடனே கேட்க சொன்னிங்க என்றாள் பாவமாக. என் வெரோனிகா பாப்பாவுக்கு பிடிச்ச எல்லா கலரும் எனக்கும் பிடிக்கும் என்றவனிடம் நான் ஒன்றும் பாப்பா இல்லை என்றாள். அட ஆமாம்ல நீ பீப்பா தானே என்றவனிடம் மாமா என்று சிணுங்கினாள் வெரோனிகா. அவளைப் பார்த்து சிரித்தான் உதயச்சந்திரன்.
என்ன தேவ் இது நான் இங்கே வரமாட்டேன்னு சொன்னேன் இப்போ இங்கேயே தங்குற மாதிரினா எப்படி. நானும் இந்த வீட்டோட மருமகள் தானே நம்ம குழந்தையோட வந்திருக்கிறோம் ஒரு ஆரத்தி கூட இல்லையா என்று வருத்தம் கொண்டாள் ஸ்ரீஜா. ஸ்ரீஜா ப்ளீஸ் நம்ம மேல இன்னும் யாருக்கும் கோபம் போகவில்லை என்றவனை முறைத்தவள் நீ பண்ணின தப்புக்கு எனக்கும் சேர்த்து தண்டனை கிடைக்குது என்று கோபமாக சென்று விட்டாள் ஸ்ரீஜா.
மாமா என்ற வெரோனிகாவிடம் என்ன என்றான் உதயச்சந்திரன். உங்க தம்பி ஏன் நம்ம கூட இருக்கவில்லை என்றவளிடம் வெரோனிகா இப்போ நான் சொல்லப் போகிற விசயம் உனக்கு புரியுமான்னு தெரியலை ஆனால் நீ என்னை புரிஞ்சுக்கனும் என்ற உதயச்சந்திரனிடம் என் சந்துரு மாமா எப்பவுமே தப்பு பண்ண மாட்டாங்க என்றாள்.
வெரோனிகா அது உன்கிட்ட எப்படி சொல்லுறதுனு எனக்கு தெரியவில்லை ஆனால் சொல்லாமல் இருந்தால் நாளைக்கு பிரச்சனை வேற விதமா வந்துவிட்டால் அதனால தான் சொல்கிறேன் என்றவன் ஸ்ரீஜா என் அத்தை வசுந்தராவோட பொண்ணு. இந்திரஜாவோட சொந்த அக்கா என்றான்.
சரிங்க மாமா என்றவளிடம் அது மட்டும் இல்லை ஸ்ரீஜாவை நான் தான் கல்யாணம் பண்ணிக்கிறதா இருந்துச்சு என்றவன் மென்று முழுங்க நீங்க கல்யாணம் பண்ணிக்கிறதா இருந்த பொண்ணை உங்க தம்பி லவ் பண்ணி கல்யாணம் பண்ணிக்கிட்டாரா மாமா. அதனால தான் வீட்டில் எல்லோரும் அவங்க மேல கோபமா இருக்காங்களா மாமா என்றாள்.
ஆமாம் என்றவனிடம் சரிங்க மாமா இதெல்லாம் ஒரு பிரச்சனையா நீங்க என்கிட்ட இதை சொல்ல இவ்வளவு தயக்கம் காட்டி இருக்க வேண்டாம் என்றவள் மாமா இப்பவும் அவங்களை நம்ம வீட்டில் யாருமே ஏற்றுக் கொள்ள வில்லையோ உங்க பேச்சுக்கு மரியாதை கொடுத்து தங்க வச்சுருக்காங்களோ என்றாள் வெரோனிகா. ஆமாம் என்பது போல அவன் தலையாட்டிட மாமா அவங்க குழந்தையோட வீட்டுக்கு வந்தாங்க யாருமே ஆரத்தி எடுக்கவில்லை. அவங்க மேல கோபம் இருந்தாலும் அந்த பாப்பா நம்ம வீட்டு வாரிசு அதனால நான் அவங்களுக்கு ஆரத்தி எடுக்கட்டுமா என்றாள் வெரோனிகா.
பாருடா மகாராணி பெரிய மனுஷியாட்டம் பேச ஆரம்பிச்சுட்டாங்க என்றவனிடம் ஆமாம் மகாராணி தான் என் சந்துருமாமா மகாராஜானா அவரோட வெரோனிகா மகாராணி தான் என்றாள்.
சரிங்க மகாராணி போயி உங்களுக்கு விருப்பமானதை செய்யுங்க என்றவனின் கன்னத்தில் முத்தமிட்டவள் ஐ லவ் யூ சோமச் மாமா என்று சொல்லி விட்டு ஓடினாள்.
அவன் தனது கன்னத்தை தொட்டுப் பார்த்தவன் என்னால முடியவில்லை ரோனி. எங்கே நான் ஸ்ரீஜாவை காதலிச்ச விசயம் தெரிந்தால் உன்னால தாங்கிக்க முடியுமான்னு தெரியவில்லை அதனால தான் அதை மறைக்க வேண்டியதா முடிவு பண்ணிட்டேன் என்று நினைத்தவன் மௌனமாக அந்த ஊஞ்சலில் அமர்ந்தான்.
தேவ், ஸ்ரீஜா இருவரது அறைக் கதவைத் தட்டிய வெரோனிகா அறைக்குள் நுழைந்தாள். வாங்க அண்ணி என்றவனைப் பார்த்து சிரித்தவள் எங்கே அவங்க என்றாள் வெரோனிகா. ஸ்ரீஜா என்று அவன் அழைத்திட குழந்தையுடன் வந்தாள் ஸ்ரீஜா.
இரண்டு பேரும் பாப்பாவைத் தூக்கிட்டு வாங்க என்றவளிடம் எங்கே என்றாள் ஸ்ரீஜா. எங்கேன்னு சொன்னால் தான் வருவிங்களா நான் இந்த வீட்டோட மூத்த மருமகள் வயசுல என்னை விட நீங்க சீனியரா இருக்கலாம். ஆனால் நான் தான் மூத்த மருமகள் அதனால நான் சொல்லுறதை நீங்க கேட்டு தான் ஆகனும் வாங்க என்று இரண்டு பேரையும் இழுக்காத குறையாக இழுத்து வந்து வாசலில் நிறுத்தினாள்.
என்ன எங்களை வீட்டை விட்டு விரட்டி விடுறியா என்ற ஸ்ரீஜாவிடம் கொஞ்சம் பொறுமையா தான் இருங்களேன் என்றவள் வீட்டிற்குள் சென்று ஆரத்தி தட்டுடன் வந்தாள்.
முதல் முதலா வீட்டுக்குள்ள வருகிறீர்கள் அதுவும் குழந்தையோட அப்போ ஆரத்தி எடுக்க வேண்டாமா என்றவள் புன்னகையுடன் தேவ், ஸ்ரீஜா, உதயநிலா மூவருக்கும் ஆரத்தி எடுத்து இப்போ வீட்டுக்குள்ள வாங்க என்றாள்.
சுசீலா, மலர்கொடி இருவரும் மௌனமாக நடப்பதை வேடிக்கை பார்த்திட என்ன மாமியார்ஸ் இரண்டு பேரும் வேடிக்கை பார்த்துட்டு இருக்கிங்க எனக்கு பசிக்குது என்ற வெரோனிகாவிடம் உனக்கு இனிமேல் சோறு கிடையாதுடி என்றார் மலர்கொடி.
அத்தை என்றவளிடம் என்னடி பண்ணிட்டு இருக்க அவங்களுக்கு ஆரத்தி எடுக்கவில்லைனு இப்போ யாரு அழுதாங்க என்றார் மலர்கொடி. அத்தை என்னைப் போல அவங்களும் இந்த வீட்டோட மருமகள் அப்போ நான் செய்தது தப்பில்லையே அவங்க மேல நீங்க கோபமா இருக்கிங்க சரி அந்தக் குழந்தை என்ன பாவம் பண்ணுச்சு. அது இந்த வீட்டோட மூத்த வாரிசு. அந்தக் குழந்தையை அவங்க முதல் முதலா இங்கே கூட்டிட்டு வரும் பொழுது அவளை நாம சந்தோசமா வரவேற்று கொண்டாடனும்.
பெரியவங்க ஆயிரம் தப்பு பண்ணிருக்கலாம் ஆனால் அதற்கான தண்டனையை அந்தக் குழந்தைக்கு கொடுக்க வேண்டாமேன்னு தான் நான் ஆரத்தி எடுத்தேன் தப்புனா மன்னிச்சுருங்க அத்தை. இந்த வீட்டில் முடிவு எடுக்கிற அதிகாரம் எனக்கும் இருக்குனு சந்துரு மாமா சொன்னாங்க அதனால தான் நான் ஒரு முடிவு எடுத்தேன். உங்க கிட்ட கேட்டால் மறுப்பு சொல்லுவிங்களோன்னு பயந்து தான் நானே ஆரத்தி எடுத்தேன். என்னை மன்னிச்சுருங்க அத்தை என்றாள் வெரோனிகா.
சுயமா முடிவு எடுக்கிற அளவுக்கு பெரிய மனுஷி ஆகிட்டிங்க என்ற மலர்கொடியிடம் அத்தை அப்படி இல்லை என்று அவள் ஏதோ கூற வர இந்தப் பேச்சை இத்தோட விட்டுரு ரோனி யார் மேலையோ உள்ள கோபத்தை உன் மேல கொட்டிருவேனோன்னு பயமா இருக்கு என்ற மலர்கொடி சுசீ எனக்கு கொஞ்சம் தலை வலிக்குது நீயே சமையல் வேலையை பார்த்துக்கிறியா என்றார்.
சரிங்க அக்கா என்ற சுசீலா வாங்க உங்களுக்கு மருந்து தேய்ச்சு விடுகிறேன் என்று மலர்கொடியுடன் சென்று விட்டார்.
பேசாமல் இன்னைக்கு நீயே சமைச்சால் என்ன ரோனி என்று அவளது மனசாட்சி சொல்லி விட கடகடவென சமையல் வேலையை பார்க்க ஆரம்பித்தாள் வெரோனிகா.
நான் கூட அந்தப் பொண்ணை என்னம்மோ நினைச்சேங்க அண்ணிகள், ஏன் அம்மா கூட நம்ம பேத்தி நிலாவை ஆரத்தி எடுத்து வீட்டுக்குள்ள கூப்பிடவில்லையேனு ஆனால் உதய் மனைவி அவங்க மூன்று பேரையும் நிற்க வச்சு ஆரத்தி எடுத்து நம்ம பொண்ணை முறையா இந்த வீட்டுக்குள்ள அழைச்சுட்டு வந்துட்டாள் என்று கண் கலங்கிய வசுந்தராவிடம் ஆனால் நம்ம பொண்ணு அந்தப் பொண்ணை எதாவது காயப்படுத்தாமல் இருந்திடுவாளா என்றார் நெடுஞ்செழியன்.
என்ன சொல்லுறிங்க என்ற வசுந்தராவிடம் உதய் பண்ணுனதிலே மிகப் பெரிய தப்பு இன்னைக்கு தேவ், ஸ்ரீஜாவை வீட்டுக்கு கூப்பிட்டது தான் அதை போகப் போக அவனே புரிஞ்சுப்பான் என்ற நெடுஞ்செழியன் சென்று விட்டார்.
…தொடரும்….