அத்தை நான் அப்படி என்ன தப்பு பண்ணிட்டேன்னு இப்படி முகத்தை திருப்பிக்கிறிங்க. தேவ் மாமா பண்ணின தப்புக்கு அந்த குழந்தை என்ன பண்ணும் அந்தக் குழந்தை நம்ம வீட்டு வாரிசு தானே. நாளைக்கு எனக்கு குழந்தை பிறந்தால் அந்தக் குழந்தைக்கு நீங்க ஆரத்தி எடுப்பிங்களா ,மாட்டிங்களா என்றாள் வெரோனிகா. என் உதய் குழந்தையும், அவன் குழந்தையும் ஒன்றா ரோனி என்ற மலர்கொடியிடம் ஒன்று தான் அத்தை. இரண்டு குழந்தைகளும் உங்க பேரக் குழந்தைகள் தனே என்ற வெரோனிகா பெரியவங்க பண்ணின தப்புக்கு குழந்தைகளை தண்டிக்க கூடாது.
உங்களுக்கு என் மேல கோபம் என்றால் என்னை அடிச்சுருங்க, இல்லையா திட்டிருங்க ஆனால் பேசாமல் மட்டும் இருக்காதிங்க அத்தை என்னால தாங்கிக்க முடியாது என்றாள் வெரோனிகா. அக்கா யார் மேலையோ உள்ள கோபத்தை ஏன் ரோனி மேல காட்டனும் என்றார் சுசீலா.
எனக்கு இவள் மேல தான் கோபம். அவள் புருசன் தான் அவன் இஷ்டத்திற்கு முடிவு எடுத்து அவங்களை தங்க சொல்லிட்டான்னா இந்த அம்மா ஒரு படி மேல போயி அவங்களை ஆரத்தி எடுத்து உள்ளே வரச் சொல்லுறா. நீங்களா உங்க இஷ்டத்திற்கு முடிவு எடுக்கிறதுனா எதற்கு பெரியவங்க நாங்க இருக்கனும் என்ற மலர்கொடியின் கையைப் பிடித்த வெரோனிகா என்னை மன்னிச்சுருங்க அத்தை. இந்த வீட்டில் எனக்கும் உரிமை இருக்குனு நம்பி தான் நான் அவங்களுக்கு ஆரத்தி எடுத்தேன். அது உங்களை இவ்வளவு காயப் படுத்தும்னு எனக்கு தெரியவில்லை.
உங்களை மதிக்க கூடாதுன்னு நானும் சரி, சந்துரு மாமாவும் சரி ஒருநாளும் நினைச்சது இல்லை. என்னால தான் அவங்களை அவர் வரச் சொன்னாரு நான் மட்டும் காலையிலே மாமா கூட சண்டை போடவில்லைனா இப்படி ஒரு பிரச்சனை வந்திருக்காது. எல்லாம் என்னோட அதிகப்பிரசங்கித்தனம் தான் காரணம். என்னை மன்னிச்சுருங்க அத்தை இனி உங்க கிட்ட கேட்காமல் நான் எதுவும் செய்ய மாட்டேன். இப்போ கூட உங்க கிட்ட கேட்காமல் தான் சமையல் வேலையை முடிச்சேன். அதற்கும் மன்னிச்சுருங்க என்றவள் நீங்க சாப்பிடாமல் இருக்க கூடாது தயவுசெய்து சாப்பிட வாங்க என்றாள்.
எனக்கு பசி இல்லை என்ற மலர்கொடியிடம் என் மேல உள்ள கோபத்தை சாப்பாட்டுல காட்டாதிங்க அத்தை என்றவளிடம் உனக்கு சொன்னால் புரியாதா போ என்றார் மலர்கொடி. நீங்க மட்டும் இப்போ சாப்பிட வரவில்லைனா அப்பறம் எப்பவுமே உங்க கூட நான் பேசமாட்டேன் என்றாள் வெரோனிகா. நீ என் கிட்ட பேசவே வேண்டாம் போடி உங்க இஸ்டத்திற்கு தானே எல்லோரும் ஆடிட்டு இருக்கிங்க ஆடுங்க என்றார் மலர்கொடி.
இது என் வீடு, என் குடும்பம் , என் முடிவை எல்லோரும் ஏற்றுக் கொள்ளுவாங்கனு நம்பி தான் நான் அவங்களுக்கு ஆரத்தி எடுத்தேன். அது இவ்வளவு பெரிய தப்புனா அப்போ நீங்க என்னை உங்க குடும்பமா நினைக்கவில்லைனு தானே அர்த்தம் அத்தை. நான் யாரோங்கிற எண்ணம் இருக்கிறதால தானே நான் சொல்லுற நியாயத்தை கூட புரிஞ்சுக்காமல் கோபம் படுறிங்க அப்போ சரி அத்தை. நான் உங்க குடும்பத்தில் ஒருத்தினு உங்களுக்கு எப்போ தோணுதோ அப்போ என்கிட்ட பேசுங்க. உங்களுக்கு என்னை பார்க்க பிடிக்கலைனா சொல்லிருங்க நான் வேண்டும் என்றால் எங்கேயாச்சும் போயிடுறேன் என்றவளின் கன்னத்தில் பளாரென்று அறைந்தார் மலர்கொடி.
என்னடி திமிரா எங்கேயோ போறாளாமே நீங்க பண்ணினது பிடிக்கலைனு நாங்க கோபமா இருந்தால் இவங்க வேற, நாங்க வேற அவ்வளவு வாய்க்கொழுப்பு உனக்கு. வாய்க்கு வாய் உங்க குடும்பம், உங்க வீடுங்கிற கொன்னுருவேன்டி உன்னை கொன்னுருவேன் எங்கேயாச்சும் போயிருவாளாம்ல இந்த வீட்டு வாசல்படியை தாண்டுன உன் காலை வெட்டிருவேன் என்ற மலர்கொடியைக் கட்டிக் கொண்டாள் வெரோனிகா.
எனக்கு பிடிக்காத காரிம் நீ செய்தால் நான் கோபம் படுவேன்டி அதற்காக நீ என் மருமகள் இல்லைன்னு ஆயிடாது. இது உன் வீடு இல்லைன்னு ஆயிடாது. உன் இஷ்டத்திற்கு முடிவு எடுக்க உனக்கு உரிமை இல்லைனு நான் சொல்லவில்லை. உன்னோட முடிவு எனக்கு பிடிக்கவில்லை கோபம் வருதுனா அந்த கோபத்தை உன்கிட்ட காட்டுவேன் உன் அம்மா கோபம் பட்டால் இப்படித் தான் எங்கேயாச்சும் போவேன்னு சொல்லுவியா அப்போ எங்க இரண்டு பேரையும் நீ உன் அம்மாவா பார்க்கவில்லையாடி என்றார் மலர்கொடி.
எங்க அம்மாவா எல்லாம் உங்களை பார்க்க முடியாது என்றவளை இருவரும் கேள்வியாக பார்த்திட எங்க அம்மாகிட்ட எங்கேயாச்சும் போறேன்னு நான் சொல்லிருந்தேன்னா உங்களை மாதிரி ஒரு அடி போட்டுட்டு அழுதுட்டே கட்டிப் பிடிச்சுருக்க மாட்டாங்க இந்நேரம் ஒரு கட்டு விளக்குமாறு என்னை அடிச்சே பிய்ஞ்சிருக்கும் என்று சிரித்தாள் வெரோனிகா.
அதைக் கேட்ட மலர்கொடி, சுசீலா இருவரும் சிரித்தனர். அப்பாடா இரண்டு பேரும் சிரிச்சுட்டிங்க சரி வாங்க சாப்பிட எனக்கு பசிக்குதுனு சொன்னப்போ சோறு இல்லைனு சொல்லிட்டு என்னோட சேர்த்து மொத்த குடும்பத்தையும் பட்டினி போட பார்த்திங்க அதான் நானே சமைச்சுட்டேன் என்றவளது காதை இருவரும் திருகிட அத்தை ப்ளீஸ் வலிக்குது காதை விட்டுட்டு வாங்க சாப்பிடலாம் என்று இருவரையும் இழுத்துச் சென்றாள் வெரோனிகா.
அவளது கன்னத்தில் விரல் அச்சு பதிந்து போனதைக் கண்ட மலர்கொடி ஸாரி ரோனி என்று அவளது கன்னத்தை தொட அட பரவாயில்லை விடுங்க அத்தை நீங்க தானே அடிச்சிங்க எனக்கு வலிக்கவே இல்லை என்றாள்.
நான் போயி ஆச்சி, சந்துரு மாமா , பிரகாஷ் மாமா எல்லோரையும் கூட்டிட்டு வரேன் என்ற வெரோனிகாவிடம் அத்தை, பிரகாஷ் இரண்டு பேரையும் நான் கூப்பிட்டு வரேன் நீ உன் சந்துரு மாமாவை மட்டும் அழைச்சுட்டு வா என்றார் சுசீலா. என் செல்ல அத்தை என்று அவரைக் கொஞ்சியவள் தன் கணவனை அழைக்க சென்றாள்.
என்ன சுசீலா உன் மருமகள் உன் அக்காவை சமாதானம் படுத்திட்டாளா என்ற கல்யாணிதேவியிடம் அக்காவால ரோனி மேல கோபமா இருக்க முடியுமா அத்தை. அவள் தான் விட்டுருவாளா என்ன அதெல்லாம் என் அக்கா கொடாக் கண்டன்னா, என் மருமகள் விடாக்கண்டனாச்சே என்ன சொன்னால் அவங்க வழிக்கு வருவாங்கனு தெரிஞ்சு பேசி ஒரு அடி வாங்கிட்டு தான் சமாதானம் பண்ணி இருக்கிறாள் என்ற சுசீலா நீங்க வாங்க சாப்பிட என்று அழைத்துச் சென்றார்.
மாமா என்றவளிடம் என்ன வெரோனிகா அவங்க எல்லாரும் சாப்பிட்டாங்களா என்றான் உதயச்சந்திரன். அவங்க எல்லாம் சாப்பிட்டாங்க அது சரி அது என்ன வெரோனிகா, வெரோனிகானு கூப்பிடுறிங்க மறந்தும் ரோனினு காலையில் இருந்து கூப்பிடவே மாட்டேங்கிறிங்க என் மேல இன்னும் கோபம் போகவில்லையா மாமா என்றாள் வெரோனிகா.
கோபம் எல்லாம் இல்லையே என்றவனிடம் பொய் சொல்லாதிங்க மாமா கோபம் இல்லாமல் இருந்தால் நீங்க எப்பவும் போல ரோனினு கூப்பிட்டு இருப்பிங்க ஆனால் காலையில் நாம சண்டை போட்டதில் இருந்து வெரோனிகா, வெரோனிகானு தான் சொல்லுறிங்க என்றாள் வெரோனிகா.
அது தானே உன்னோட பெயர் என்றவனை முறைத்தவள் போங்க மாமா என்று செல்ல ஏய் நில்லு என்றவன் அவளது கன்னத்தில் கை வைத்திட
பச்ச்ச்ஆ என்றிட என்ன கைவிரல் அச்சு , கன்னம் வேற லேசா வீங்கிருக்கு என்றவனிடம் அது ஒன்றும் இல்லை மாமா என்றாள் வெரோனிகா.
ஏய் என்ன ஒன்றும் இல்லை யாரு அடிச்சாங்க என்றான் உதயச்சந்திரன். யாரு அடிச்சான்னு தெரிஞ்சு என்ன பண்ணப் போறிங்க என்றவளிடம் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லுடி லூசு என்றவனிடம் அது ஒன்றும் இல்லை என்னை நானே அடிச்சுக் கிட்டேன் என்றவள் சரி சாப்பிட வாங்க என்றாள்.
நீ என்ன பைத்தியமா உன்னை நீயே அடிச்சுக்க என்றான் உதயச்சந்திரன். ஆமாம் பைத்தியம் தான் என் சந்துரு மாமாவை காயப் படுத்திட்டேன் தானே அதற்கான தண்டனை என்றவள் மாமா சாப்பிட வாங்க என்றாள்.
ரோனி என்றவனிடம் பாருடா ஒரு வழியா கூப்பிட்டாரு என்றவள் சாப்பிட வாங்க மாமா பசிக்குது என்றாள் வெரோனிகா. நிஜமா நீ தான் உன்னை அடிச்சுக்கிட்டியா என்றவனிடம் இல்லை நானே பத்து பேருக்கு காசு கொடுத்து என்னை அடிக்க சொன்னேன் வாங்க மாமா என்றவள் அவனை இழுத்துக் கொண்டு சென்றாள்.
இருடி ஒரு நிமிசம் என்றவன் ஐஸ் கயூப் எடுத்து அவளது கன்னத்தில் வைத்து விட பச்ச்ச் மாமா ஜில்லுனு இருக்கு என்றாள் வெரோனிகா. வலி இப்போ குறைஞ்சுருக்கா என்றவனிடம் எனக்கு வலிக்கவே இல்லையே என்றாள். அவளை முறைத்தவன் சரி வாடி என்று அழைத்துச் சென்றான்.
என்ன அண்ணி உங்க கன்னத்தில் விரல்தடம் , கன்னம் வேற வீங்கி இருக்கு என்ற பிரகாஷிடம் அதை ஏன் கேட்கிறிங்க பிரகாஷ் மாமா ஒரு ஐஸ்கிரீம் கேட்டதற்கு உங்க அண்ணன் என்னை அடிச்சுட்டாங்க என்று கண்கள் கலங்குவதைப் போல வராத கண்ணீரை சுண்டி விட்டு நடிக்க ஆரம்பித்தாள் வெரோனிகா.
அடியே நடிகையர் திலகம் என் மகன் உன்னை அடிச்சான்னு சொன்னால் அதுவும் நீ ஐஸ்கிரீம் கேட்டதிற்கு அடிச்சான்னு சொன்னால் கண்டிப்பா உன் கனவுல பேய் வரும்டி என்றார் சுசீலா. அப்படியா அத்தை நல்ல அழகான ரொமான்டிக் ஹீரோ போல ஒரு பேய் வரச் சொல்லுங்க டூயட் பாடிக்கிறேன் என்றவளை முறைத்த சுசீலா அக்கா இவளுக்கு இன்னும் நான்கு அடி நீங்க கொடுத்திருக்கலாம் என்றார்.
அத்தை எப்போ என்னை அடிச்சாங்க சின்ன அத்தை கனவு கண்டிங்களா என்ற வெரோனிகாவிடம் ஏய் போதும்டி என்னை ஒன்றும் நீ காப்பாத்த வேண்டாம். நான் உன்னை அடிச்ச காரணம் தெரிஞ்சால் உன் புருசனும் உன்னை இரண்டு மிதி மிதிப்பான் என்ற மலர்கொடி ஸாரி ரோனிம்மா என்றார்.
என்ன நீங்க சும்மா , சும்மா ஸாரி ரோனி, பூரி ரோனினுட்டு அர்ச்சனா அண்ணியை அடிச்சா இப்படித் தான் ஸாரி, பூரி எல்லாம் சொல்லுவிங்களா என்றாள் பொய்யான கோபத்துடன். சரிடி அம்மா இனி நான் ஸாரியும் கேட்கவில்லை, பூரியும் கேட்கவில்லை என்றார் மலர்கொடி. அது என்ற வெரோனிகா வாங்க பெரியம்மா, வாங்க பெரியப்பா என்று வசுந்தரா, நெடுஞ்செழியன் இருவரையும் அமர வைத்து உணவு பரிமாறினார்.
அத்தை, மாமாக்கள் இரண்டு பேரும் சாப்பிட வரவில்லை என்ற வெரோனிகாவிடம் அவங்க ஒரு வேலையா வெளியில் போயிருக்காங்க வந்ததும் நான் சாப்பாடு பரிமாறிக்கிறேன் நீ சாப்பிட்ட தானே போ போயி கொஞ்ச நேரம் தூங்கு என்றார் சுசீலா. என் செல்ல அத்தை என்று அவரது கன்னத்தில் முத்தமிட்டவள் தன்னறைக்கு செல்ல அங்கு கோபமாக அவளை
முறைத்தபடி இருந்தான் அவளது கணவன்.
……தொடரும்….