என்ன இவரு இந்த முறை முறைக்கிறாரு என்ன தப்பு பண்ணின ரோனி என்று தன்னைத் தானே கேட்டுக் கொண்டவள் மாமா என்றிட அவளை இழுத்து தன்னருகில் அமர வைத்தவன் அவளது கன்னத்தில் மீண்டும் ஐஸ் கியூப் வைத்து ஒத்தடம் கொடுத்தான். மாமா என்றவளிடம் என்னடி என்றான் கோபமாக. அவள் அவனை பாவமாக பார்த்திட அம்மா தான் உன்னை அடிச்சாங்கனு ஏன் சொல்லவில்லை என்றான்.
ஏன் சொல்லனும் என்றால் பதிலுக்கு. என்கிட்ட சொல்லக் கூடாதா என்ன என்றவனிடம் மாமா நீங்க அடிச்சா நான் யார்கிட்டையாவது சொல்லுவேனா அப்படித் தான் அவங்க அடிச்சாலும் உங்க கிட்ட சொல்ல மாட்டேன். ஏன் அடிச்சாங்க , அடிச்சாங்கனு சொல்லுறிங்க என்னை அடிக்க அவங்களுக்கு உரிமை இல்லையா என்ன. எனக்கு அவங்க வேற, என் அம்மா வேற இல்லையே. அம்மா அடிச்சா எல்லோர்கிட்டையுமா சொல்லுவேன் அப்படித்தான் அத்தை அடிச்சாலும், ஏன் சின்ன அத்தை அடிச்சாலும் நான் சொல்ல மாட்டேன். அவங்க இரண்டு பேரும் எனக்கு மாமியார் இல்லை அம்மா தான். சின்ன அத்தையும் சரி, பெரிய அத்தையும் சரி எனக்கும், அர்ச்சனா அண்ணி, ஊர்மிளா எங்க மூன்று பேர் கிட்டையும் எந்த வித்தியாசமும் பார்க்காமல் தானே நடத்துறாங்க. அவங்க அன்பை ஏத்துக்கிறது போல கோபத்தையும் ஏற்றுக் கொள்ளத் தானே வேண்டும் என்றாள் வெரோனிகா.
அவளையே வைத்த கண் எடுக்காமல் பார்த்தவனிடம் என்ன மாமா அப்படி பார்க்கிறிங்க என்றவளிடம் ஒன்றும் இல்லை ரோனி என்றான். என்ன மாமா என்னை லவ் பண்ணுறிங்களா அதான் சைட் அடிக்கிறிங்களா என்று கண்ணடித்தவளின் தலையில் கொட்டியவன் வாயாடி முதலில் உனக்கு பதினெட்டு வயசு ஆகட்டும் அப்பறம் யோசிக்கலாம் என்றான் உதயச்சந்திரன்.
எதைப் பற்றி மாமா என்றவளிடம் என்ன என்றான். இல்லை எதைப் பற்றி யோசிக்கப் போறிங்கனு கேட்டேன் என்றவளை முறைத்தவன் போடி லூசு என்று எழுந்து கொள்ள அப்போ என்னை லவ் பண்ண ஆரம்பிச்சுட்டிங்க அதைப் பற்றி தானே யோசிக்கப் போறிங்க எனக்குத் தெரியும் என்றவளைப் பார்த்து முதன் முதலில் அவனும் வெட்கம் கொண்டான்.
அவள் சென்ற பிறகும் அவனது முகத்தில் புன்னகை சற்றும் குறையவில்லை. உதய் என்னடா இது இப்படி ஆக்கிட்டாள் லூசு அவளைப் போலவே என்னையும் என்று தன்னைத் தானே திட்டிக் கொண்டவன் மனதை திசை திருப்பிட தனது வேலையில் கவனம் செலுத்தினான்.
என்னடி ஏன் ஒரு மாதிரி கடுகடுனு இருக்கிற என்ற வசுந்தராவிடம் இது என்ன வீடா இல்லை நாடக கம்பெனியா அவள் என்னம்மோ அத்தை , அத்தைனு கொஞ்சுகிறாள். இவங்க இரண்டு பேரும் ரோனி, ரோனினு உருகிட்டு இருக்கிறாங்க. உங்களை என்னம்மோ பெரியம்மானு அழைச்சுட்டு இருக்கிறாள். நீங்களும் ஈஈனு அவள் கிட்ட இசிச்சுட்டு இருக்கிங்க என்றாள் ஸ்ரீஜா.
என் பிள்ளைக்கு சோறு ஊட்ட அவள் யாரு. எனக்கு கோபம் கோபமா வந்துச்சு சரி இன்னைக்கே நாம எதுவும் மூஞ்சியை காட்டக்கூடாதுன்னு தான் அமைதியா இருந்தேன் என்ற ஸ்ரீஜாவிடம் என்னடி பேசுற நீ அந்தப் பொண்ணோட இயல்பே அது தான் போல.
அவள் இத்தனை நாளா ஸ்கூல் போனாள் அதனால வீட்டில் யார்கிட்டையும் சரியா பேசவில்லை போல எக்ஸாம் இருந்ததால இப்போ லீவு விட்டாச்சு அதான் எல்லோர்கிட்டையும் சந்தோசமா பேசி சிரிச்சுட்டு இருக்கிறாள் என்றார் வசுந்தரா.
என்ன ஸ்கூல் போனாளா அப்போ அவள் ஸ்கூல் பொண்ணா என்ற ஸ்ரீஜாவிடம் அட ஆமாம்ல உன்கிட்ட நான் சொல்லவே இல்லை பாரேன். நம்ம உதய்க்கு பார்த்த பொண்ணு வெரோனிகாவோட பெரியப்பா பொண்ணு வினோதா தான். அவள் வேற ஒருத்தனை லவ் பண்ணி கல்யாணத்தன்னைக்கு ஓடிப் போயிட்டாள்.
அது வில்லேஜ்ல அதான் அக்கா ஓடிப் போனதும் தங்கச்சியை கல்யாணம் பண்ணி வச்சுட்டாங்க. உதய் தான் அவளை படிப்பை நிறுத்தக் கூடாதுனு சொல்லி படிக்க வைக்கிறான் என்றார் வசுந்தரா. ஓஓ அப்போ அவங்களுக்குள்ள இன்னும் என்றவளிடம் அதெல்லாம் நமக்கு எப்படிடி தெரியும் ஆனால் ஒன்று உதய் அந்தப் பொண்ணு கூட அவ்வளவு சந்தோசமா இருக்கிறான் என்றார் வசுந்தரா.
ஸ்ரீஜா மௌனமாக நின்றிருக்க என்னடி என்ற வசுந்தராவிடம் நானும் கவனிச்சுட்டு தான் இருந்தேன் என்னை மிஸ் பண்ணிட்டோம்ங்கிற கவலை கொஞ்சம் கூட அவர் முகத்தில் இல்லை. என் தயா மாமா ரொம்ப மாறிட்டாரு என்றவளது கண்கள் கலங்கிட அவன் உன் தயா மாமா கிடையாது இப்போ ரோனியோட சந்துரு மாமா.
தேவ் தப்பு பண்ணிருக்கான் நான் இல்லைன்னு சொல்லவில்லை ஆனால் உன் மேல அவன் உயிரையே வச்சுருக்கான். தயவு செய்து அவனை புரிஞ்சு ஏத்துக்கிட்டு உன் வாழ்க்கையை ஒழுங்கா வாழு ஸ்ரீஜா.
நிலாவுக்காகவாச்சும் நீ தேவ் கூட சந்தோசமா வாழனும் என்ற வசுந்தராவிடம் நிலா மட்டும் இல்லைனா என்னைக்கோ அந்த பொறுக்கி கட்டின தாலியை கழற்றி எறிஞ்சுருப்பேன் என்ற ஸ்ரீஜா கோபமாக சென்று விட்டாள்.
என்னம்மா என்ற இந்திரஜாவிடம் ஒன்றும் இல்லை என்ற வசுந்தரா சென்று விட அவளுக்கு தன் அக்காவின் நிலைமை புரிந்தாலும் அதற்கு எதுவும் செய்ய முடியாது என்ற நிதர்சனத்தை உணர்ந்தவள் தன்னறைக்கு சென்று விட்டாள்.
அண்ணா என்ற வசுந்தராவிடம் சொல்லும்மா என்றார் நெடுமாறன். இல்லை நம்ம இந்துவுக்கு , பிரகாஷை கல்யாணம் பண்ணி வைக்கனும்னு ஒரு எண்ணம் என் மனசுல இருக்கு நீங்கள் இரண்டு பேரும் என்ன சொல்லுறிங்க என்றார் வசுந்தரா.
இளமாறா உனக்கு என்னப்பா தோணுது என்ற நெடுமாறனிடம் பிரகாஷ்க்கு சம்மதம்னா எனக்கு பிரச்சனை இல்லை அண்ணா என்றார் இளமாறன். நீங்க என்ன அண்ணா சொல்லுறிங்க என்ற இளமாறனிடம் எனக்கும் அது தான் தோன்றுகிறது. வாழப் போற இரண்டு பேருக்கும் சம்மதம்னா மேற் கொண்டு இதை பேசலாம் என்ற நெடுமாறன் நாளைக்கே உதய்கிட்ட சொல்லி பிரகாஷ் மனசுல என்ன இருக்குனு தெரிஞ்சுக்கலாம் என்றார் .
அண்ணன் சொல்லுறதும் சரி தான் வசுந்தரா இந்துகிட்டையும் பேசிப்பாரு. இந்த முறை எந்த தப்பும் வந்து விடக் கூடாது அதனால இந்துகிட்ட தெளிவா பேசிரும்மா என்றார் இளமாறன். சரிங்க அண்ணா என்ற வசுந்தரா தன்னறைக்கு சென்றார்.
என்ன ஸ்ரீஜா ஏன் இப்படி இருக்க கொஞ்சமாவது இயல்பா இருக்கலாமே என்றவனை முறைத்தவள் என்னோட இயல்பே இது தான். எனக்கு இந்த வீட்டில் அந்த ரோனியை சுத்தமா பிடிக்கவில்லை. அப்பறம் உன்னை அடியோட வெறுக்கிறேன் என்றவள் சென்று படுத்துக் கொள்ள அமைதியாக அவளையே பார்த்துக் கொண்டிருந்தான் தேவச்சந்திரன்.
எப்போ தான்டி என்னை புரிஞ்சுப்ப நான் பண்ணினது பச்சைத் துரோகம் தான். மன்னிக்கவே முடியாத்தப்பு தான். அதற்காக எத்தனையோ முறை உன் காலில் விழுந்துருக்கேன். என்னோட இன்செக்யூர் பீலிங்க்ஸ் தான் எங்கே நீ எனக்கு கிடைக்க மாட்டியோங்கிற பயத்தில் தான் உன்கிட்ட அப்படி ஒரு கேவலமான விசயத்தை பண்ணி உன்னை கல்யாணம் பண்ணிகிட்டேன். ஆனால் என்னோட காதலை உனக்கு எப்படி புரிய வைப்பேன் ஸ்ரீஜா. இந்த மூன்றரை வருசமும் இப்படி என்னை மன்னிக்காமல் தண்டிக்கிறியே என்று வருந்தியவன் எழுந்து தோட்டத்திற்கு சென்றான்.
தோட்டத்தில் உள்ள செடிகளுக்கு தண்ணீர் ஊற்றிக் கொண்டிருந்த வெரோனிகா தேவ் வருவதைக் கண்டவள் வாங்க எங்கே பாப்பா என்றாள். பாப்பா அத்தைகிட்ட இருக்கிறாள் அண்ணி என்ற தேவ் ஆமாம் என்னை எப்படி கண்டுபிடிச்சிங்க என்றான்.
அது ஒன்றும் இல்லை சந்துரு மாமா கையில் ஒரு கயிறு கட்டி விட்டுருப்பேன் அது உங்க கையில் இருக்காதுல அப்படித் தான் கண்டுபிடிச்சேன் என்றாள் வெரோனிகா.
அப்போ ஏன் அன்னைக்கு கண்டு பிடிக்கவில்லை. மயங்கி விழுந்திங்க என்ற தேவச்சந்திரனிடம் அன்னைக்கு என் சந்துரு மாமாவுக்கு இப்படி ஒரு ட்வின் ப்ரதர் இருப்பிங்கனு தெரியாதே அதான் என்றவள் சாப்பாடு பிடிச்சுருந்ததா என்றிட ரொம்ப நல்லா இருந்துச்சு அண்ணி ,திருப்தியா சாப்பிட்டேன் என்றான்.
சரி என்றவள் நீங்க என்ன வேலை பார்க்கிறிங்க என்றவளிடம் டாக்டர் அண்ணி என்றான் தேவ். வாவ் சூப்பர் என்றவள் அவனிடம் சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தாள். அவளிடம் பேசியது அவனுக்கே கொஞ்சம் மன இறுக்கம் தளர்ந்ததைப் போல இருந்தது.
வெரோனிகா என்று அவளைத் தேடிக் கொண்டு உதயச்சந்திரன் வந்து விட வாங்க மாமா என்றவள் சரிங்க தேவ் மாமா நாம அப்பறம் பேசலாம். நானும் , சந்துரு மாமாவும் வெளியே கிளம்புகிறோம் என்றவள் அவனிடம் விடைபெற்று தன் கணவனுடன் கிளம்பினாள்.
அவன் கிட்ட என்ன பேசிட்டு இருந்த என்ற உதய்யிடம் சும்மா தான் நார்மலான விசயங்களை பேசிட்டு இருந்தேன் என்றவள் நாம எங்கே போகிறோம் மாமா என்றாள்.
உனக்கு அடுத்த வாரம் பிறந்தநாள் வருதுதானே அதற்கு ஷாப்பிங் என்றவனிடம் அட ஆமாம் அடுத்த வாரம் எனக்கு பதினெட்டு வயசு வந்துரும் அப்பறம் நான் மைனர் கிடையாது மேஜர் என்றவள் சந்தோசமாக சிரித்தாள்.
இதில் சிரிக்க என்ன இருக்கு என்றவனிடம் நீங்க தானே சொன்னிங்க பதினெட்டு வயசு ஆனதும் என்னை லவ் பண்ணுவேன்னு என்றவளை முறைத்தவன் நான் ஒன்றும் அப்படி சொல்லவில்லையே என்றான்.
என்ன மாமா கொஞ்ச நேரம் முன்னாடி தான் யோசிக்கலாம்னு சொன்னிங்க இப்போ இப்படி சொல்றிங்க ரோனி பாவம் இல்லையா என்றாள் அப்பாவியாக.
நீயா பாவம் உன்னைக் கல்யாணம் பண்ணிக்கிட்ட நான் தான் பாவம் என்றவன் வண்டியை ஓட்டிட அவனை முறைத்து விட்டு முகத்தை தூக்கி வைத்துக் கொண்டு அமர்ந்திருந்தாள் வெரோனிகா. அவளைப் பார்த்தவனுக்கு சிரிப்பினை அடக்க முடியவில்லை.
என்னவாம் சிரிப்பு என்ற வெரோனிகாவிடம் அப்படியே குற்றாளத்தில் இருக்குமே அது போலவே அம்சமா இருக்க என்றான் உதயச்சந்திரன். அவனை முறைத்தவள் அப்போ என்னை குரங்குனு சொல்லுறிங்களா மாமா என்று கோபமாக அவள் கேட்டிட நான் எப்போ உன்னை குரங்குனு சொன்ன நீயே தான் சொல்லிட்டு இருக்க என்றவனது கையில் கடித்து வைத்தாள் வெரோனிகா. ஆஆஆ என்று கத்தியவன் காரை நிறுத்தி விட்டு அடியே லூசு உன்னை குரங்குனு நினைச்சால் நீ கறிக்கு வீங்கின வெறிநாயாவ்ல இருக்க என்றான்.
எதே வெறி நாயா உங்களை என்றவள் அவனை கடிக்க போக ரோனி என்றவன் அவளது இரு கைகளையும் ஒரு கையில் பிடித்து விட்டு அவளது முகத்தை மறு கையால் திருப்பி அவளது கன்னத்தில் முத்தமிட்டான். அவ்வளவு தான் அவள் கடைக்கு செல்லும் வரை அசையாமல் அப்படியே இருந்தாள்.
…..தொடரும்….