ரோனி இந்தாம்மா என்று அவளிடம் ஐஸ்கிரீமை நீட்டினார் மலர்கொடி. அத்தை அது என்றவளிடம் உனக்காக தான் உன் புருசன் வாங்கிக் கொடுத்தான் அதனால் போயி சாப்பிடு என்ற மலர்கொடியிடம் ஐஸ்கிரீமை வாங்கிக் கொண்டவள் தன்னறைக்குச் சென்றாள்.
அவள் சின்னப் பொண்ணு தானே சம்மந்தி. நம்ம கௌரவத்திற்காக அவளுக்கு கல்யாணம் பண்ணி வச்சுட்டோம். அவள் வயசுக்கு உண்டான மெச்சுரிட்டி தானே அவளுக்கு இருக்கும் அதை நாம புரிஞ்சுக்கனும் என்றார் மலர்கொடி.
அவள் சின்னப் பொண்ணு தான் சம்மந்தி. இருந்தாலும் கல்யாணம் ஆகிருச்சே அவள் இப்படியே இருந்தால் எல்லோருக்கும் சங்கடம் தானே என்ற வசந்தியிடம் புரியுது சம்மந்தி நீங்க கவலையே படாதிங்க அவள் எங்க வீட்டிலும் இங்கே இருந்த மாதிரியே இருப்பாள் என்றார் மலர்கொடி.
தன்னறைக் கதவைத் திறந்து வெரோனிகா அறைக்குள் நுழைந்தாள். அங்கு உதயச்சந்திரன் அமர்ந்திருந்தான். ஐஸ்கிரீம் அம்மாகிட்ட கொடுத்து விட்டேனே என்றவனிடம் தன் கையில் வைத்திருந்த ஐஸ்கிரீமைக் காட்டினாள் .
தாங்க்ஸ் என்றவளிடம் இதற்கெல்லாம் தாங்க்ஸ் சொல்லுவாங்களா என்றவன் அமைதியாக போனை பார்த்துக் கொண்டிருந்தான்.
உன்கிட்ட போன் இருக்கா என்றவனிடம் எனக்குனு தனியா போன் இல்லை. அம்மாவோட போனை பெரும்பாலும் நான் தான் வச்சுருப்பேன் என்றாள் வெரோனிகா. சரி ஓகே என்றவன் அமைதியாகிட ரொம்ப தாங்க்ஸ் என்றாள்.
இப்போ எதற்கு தாங்க்ஸ் என்றவனிடம் என்னை திரும்பவும் ஸ்கூல் அனுப்ப நீங்க சம்மதிச்சதுக்கு என்றாள். அவளைப் பார்த்தவன் இது என்னோட கடமை என்று கூறி விட்டு எனக்கு தூக்கம் வருகிறது என்றான். இங்கே தூங்குங்க என்றவளிடம் இது சின்ன ரூம் நீ எங்கே தூங்குவ என்றவன் மதியம் போன அந்த தோட்டத்து வீட்டுக்கு போகலாம் என்றான்.
அங்கேயா இந்த நேரத்திற்கா என்றவளிடம் ஏன் என்னாச்சு என்றான் உதயச்சந்திரன். அங்கே பேய் வரும் என்றவளைப் பார்த்து சிரித்தவன் பேய்தானே வரட்டும் நான் பார்த்துக் கொள்கிறேன் என்றவனுடன் அவள் கிளம்பிட நைட்டு கோவிலுக்கு போகனுமே என்றாள் வெரோனிகா.
நாம போகவில்லை பெரியவங்க மட்டும் தான் சாமிகிட்ட குறி கேட்க போறாங்க என்றவன் தம்பி , தங்கைகளை அழைத்திட அவர்களும் தோப்பு வீட்டிற்கு கிளம்பினர்.
அனைவரும் சென்று பாட்டு, ஆட்டம் என அன்று இரவு பொழுதினை சந்தோசமாக கழித்தனர். அனைவரும் ஒன்றாக ஹாலிலே பாய் விரித்து தூங்க ஆரம்பித்தனர்.
கோவிலுக்கு சென்ற பெரியவர்களும் பூஜையில் சாமிகிட்ட குறி கேட்டிட எல்லாம் நல்ல பலனாக சொல்லவும் சந்தோசமாக வீட்டிற்கு வந்தனர்.
மறுநாள் கணவன் வீட்டிற்கு கிளம்பிய வெரோனிகாவிடம் ஆயிரம் புத்திமதிகள் சொல்லி பூங்கொடி அனுப்பி வைத்தார்.
அடுத்து வந்த இரண்டு நாட்களிலே வெரோனிகாவிற்கு தாலி பிரிச்சு கோர்க்கும் சடங்கும் நல்லபடியாக முடிந்து விட்டது.
இரண்டு வாரங்களில் பள்ளி திறக்கும் நாள் என்பதால் எல்லா சடங்குகளுமே சீக்கிரமாக முடிக்கப்பட்டு வெரோனிகாவும் பள்ளிக்கூடத்தில் சேர்க்கப்பட்டாள்.
எங்கே போகிறோம் என்ற வெரோனிகாவிடம் உனக்கு யூனீபார்ம் எடுக்கனும்ல இன்னும் நான்கு நாட்களில் ஸ்கூல் அதான் என்ற உதயச்சந்திரன் அர்ச்சனா என்றிட அவளும் வந்தாள்.
என்ன அண்ணி ரெடியா என்ற அர்ச்சனாவை அவள் சோகமாக பார்த்திட சாரி சாரி ரோனி என்ற அர்ச்சனா வா ரோனி என்று அவளை அழைத்துக் கொண்டு கிளம்பினாள்.
அண்ணா யூனிபார்ம் மட்டும் இல்லை ரோனிக்கு இன்னும் நிறைய டிரஸ் எடுக்கனும். புடவை தான் அதிகமா இருக்கு என்றாள் அர்ச்சனா. எனக்கு பாவாடை, தாவணி தான் ரொம்ப பிடிக்கும் எங்க வீட்டில் அது தான் அதிகம் கட்டிப்பேன் அதனால சுடிதார் கம்மியா தான் வச்சுருக்கேன் என்றாள் வெரோனிகா.
எனக்கு பாவாடை , தாவணி எல்லாம் பிடிக்காது. அர்ச்சனா உனக்கு செலக்ட் பண்ணுற எல்லா டிரஸ்ஸுமே வாங்கிக்கோ என்ற உதயன் தனது கார்டை தங்கையிடம் கொடுத்து விட்டு நீங்க டிரஸ் எடுங்க நான் அந்த காபி ஷாப்ல வெயிட் பண்றேன் என்றான்.
அவனது போன் இசைத்திட அதில் தெரிந்த பெயரைக் கண்டு முகம் மலர்ந்தவன் போன் பேச ஆரம்பித்தான்.
இவரு சரியான சிடுமூஞ்சி என்ற வெரோனிகாவிடம் ஐயோ ரோனி என் அண்ணன் ரொம்ப ஜாலி டைப். நீ இன்னும் அவர் கூட பழகவில்லையே அதான் என்றவள் சரி வா டிரஸ் எடுப்போம் என்று அவளுக்கு விதம் விதமாக சுடிதார் எடுத்துக் கொடுத்தாள்.
அக்கா எதற்கு இவ்வளவு டிரஸ் என்ற வெரோனிகாவிடம் இதுவே ரொம்ப கம்மி தான் என்ற அர்ச்சனா யூனிபார்ம் நான்கு செட் எடுத்தாள். உனக்கு ஏதாவது பிடித்திருந்தால் எடுத்துக்கோ என்றவளிடம் இதுவே போதும் என்றாள் வெரோனிகா.
ஹலோ சார் என்ற குரலில் திரும்பிய உதயச்சந்திரனின் முன் நின்றாள் அவனுடன் பணி புரியும் வினித்ரா. ஹலோ மேடம் என்றவனிடம் என்ன இங்கே இருக்கிங்க என்றாள் வினித்ரா. ஷாப்பிங் வந்தேன் என்றவன் வாங்க என்ன சாப்பிடுறிங்க என்று அவளுக்கும் சேர்த்து ஆர்டர் செய்தான். அவளுடன் அவன் ஏதோ சிரித்து பேசிக் கொண்டிருந்த நேரம் அங்கு வந்தனர் அர்ச்சனாவும், வெரோனிகாவும்.
அண்ணா என்ற அர்ச்சனாவிடம் என்னம்மா ஷாப்பிங் ஓவரா என்றான் உதயச்சந்திரன். எங்கே ஓவர் இவள் தான் போதும் போதும்னு இழுத்துட்டு வந்துட்டாள் என்ற அர்ச்சனா ரோனி நீ அண்ணா கூட இரு நான் போயி இன்னும் கொஞ்சம் திங்க்ஸ் வாங்கனும் வாங்கிட்டு வந்துடுறேன் என்றவள் அண்ணா கார்சாவி கொடுங்க இதெல்லாம் காரில் வச்சுடுறேன் என்றிட தங்கையிடம் சாவியைக் கொடுத்து விட்டான் உதயச்சந்திரன்.
வெரோனிகா நீ என்ன சாப்பிடுற என்றவன் அவளுக்கும் கோல்டுகாபியை ஆர்டர் செய்தான். யார் சார் இந்தப் பொண்ணு ரொம்ப கியூட்டா இருக்கிறாள் என்ற வினித்ராவிடம் என்னோட கசின் என்றான் உதயச்சந்திரன். வெரோனிகா மௌனமாக இருந்திட உன் பெயர் என்னம்மா என்றாள் வினித்ரா. வெரோனிகா என்றவளிடம் நைஸ்நேம் என்றவள் சரிங்க சார் நான் கிளம்புறேன் என்ற வினித்ரா கிளம்பிவிட்டாள்.
யார் அவங்க என்ற வெரோனிகாவிடம் கூட வேலை பார்க்கிறவங்க என்றவன் உனக்கு தேவையானது எல்லாம் வாங்கிட்ட தானே என்றிட எல்லாம் வாங்கிட்டேன் என்றாள் . சரி என்றவன் என் கூட வா என்று அவளை ஒரு மொபைல்ஷாப்பிற்கு அழைத்துச் சென்றான்.
அவளுக்கு புது மொபைல்போன், சிம்கார்ட் எல்லாம் வாங்கிக் கொடுத்தான். போன் எதற்கு அதான் நம்ம வீட்டில் லேண்ட்லைன் இருக்குதே நான் அம்மாகிட்ட பேசுறதுனா அதிலையே பேசிக்குவேனே என்றவளிடம் வாங்கிக் கொடுத்தால் வாயை மூடிட்டு வாங்கிக்கோ. அதிகப்பிரசங்கித் தனமா பேசாதே என்று அவன் கூறிட அவள் அமைதியாக வாயை மூடிக் கொண்டாள்.
அவங்க கிட்ட ஏன் என்னை கசின்னு சொன்னிங்க என்றவளை முறைத்தவன் பால்யவிவாகம் சட்டப்படி குற்றம். நம்ம கல்யாணம் வெளியில் தெரிந்தால் நான் கம்பி எண்ண வேண்டியது தான். உங்க ஊரு கிராமம் அங்கே இது சகஜமும் கூட இங்கே அப்படி இல்லை என்றவன் சரி வா என்று அவளை அழைத்துச் சென்றான்.
அர்ச்சனா வரவும் அவளுடன் சேர்ந்து மூவரும் வீட்டிற்கு வந்தனர். எங்கே போனிங்க மூன்று பேரும் என்ற கல்யாணிதேவியிடம் எனக்கு யூனிபார்ம் எடுக்கப் போனோம் ஆச்சி என்றவளிடம் சரி யூனிபார்ம் மட்டும் தான் எடுத்துக் கொடுத்தானா கஞ்சப்பையன் என்ற கல்யாணியிடம் இல்லை ஆச்சி நிறைய டிரஸ் எடுத்து கொடுத்தாங்க என்றவளிடம் சரி எல்லாத்தையும் உன் அலமாரியில் எடுத்து மடிச்சு வச்சுட்டு என் ரூமுக்கு வா என்றார் கல்யாணிதேவி. சரிங்க ஆச்சி என்ற வெரோனிகாவும் தன்னறைக்கு சென்று எல்லாவற்றையும் எடுத்து வைத்தாள்.
அங்கு வந்த உதயச்சந்திரன் அவளை முறைக்க ஆரம்பிக்க இதோ இப்பவே எல்லாம் சுத்தம் செய்துடுறேன் என்றவள் கீழே கிடந்த கவர்களை எல்லாம் மடித்து செல்பில் போட்டு வைத்தாள். இதை எதற்கு சேர்த்து வைக்கிற எல்லாம் குப்பையில் போடு என்றவன் அப்பறம் ஸ்கூலில் ப்ளஸ்டூ பாடம் பாதி முடிஞ்சுருக்கும் எல்லா நோட்ஸும் ஊர்மிளாகிட்ட வாங்கி எழுதி வச்சுக்கோ என்றவன் லேப்டாப்பில் ஏதோ மும்முரமாக வேலை பார்த்துக் கொண்டிருந்தான்.
அவள் மெல்ல அறையை விட்டு வெளியேறியவள் கல்யாணிதேவியின் அறைக்கு சென்றாள். வாடியம்மா என்ன இவ்வளவு நேரம் என்றவரிடம் துணி எல்லாம் அழகா மடிச்சு வைக்க வேண்டாமா கொஞ்சம் நீட்டா இல்லைனாலும் அவங்க திட்ட ஆரம்பிச்சுருவாங்க என்றவளிடம் என் பேரனை பற்றி என்கிட்டையே குறை சொல்லுற அளவுக்கு உனக்கு வாய் அதிகமாகிருச்சு என்றார் கல்யாணிதேவி.
உங்க கிட்ட தானே சொல்ல முடியும் ஆச்சி அவங்க கிட்ட பேசவே பயமா இருக்கு என்றவளின் தலையில் எண்ணெய் தேய்த்து விட்டவர் அவளுக்கு தலைவாரி விட ஏன் ஆச்சி எனக்கு மட்டும் எண்ணெய் தேய்ச்சு தலைவாரி விடுறிங்க என்றாள் வெரோனிகா.
மத்த குட்டிங்க வர மாட்டாளுங்க எண்ணெய் தேப்பாளுங்க பாட்டிலுக்குள்ளே சீப்பு வச்சு அந்த சீப்பு வழியா வரும் எண்ணெய்யை அதான் இரண்டு சிறுக்கிக்கும் முடி கம்மி.
உன் முடியை பார்க்கவும் எனக்கு ஆசையா இருந்துச்சு. அதான் அவளுங்க தேய்க்கிற எண்ணெய்யை தேச்சு உன் முடியை பாலாக்க கூடாதுனு நானே எண்ணெய் வீட்டில் மூலிகை எல்லாம் போட்டு காய்ச்சி வச்சுருக்கேன் . அதான் பக்குவமா உனக்கு தேய்ச்சு விடுறேன் என்றவர் சரி இதைப் பிடி என் முழங்காலில் தேய்ச்சு விடு என்று தைலத்தை அவளிடம் கொடுத்திட அவளும் கல்யாணிபாட்டியின் கால்களில் தைலத்தை தேய்த்து நன்றாக நீவி விட்டாள்.
ஊர்மிளா தன் அண்ணனின் அறைக்கு வந்தவள் அண்ணா ரோனி எங்கே என்றிட உன்னை பார்க்க தானே வந்தாள். உன்கிட்ட நோட்ஸ் வாங்கி எழுத சொல்லி இருந்தேனே என்றான்.
இல்லையே அவன் என் ரூமுக்கு வரவே இல்லை. நோட்ஸ் எழுத கொடுக்கவா என்றவனிடம் ஆமாம் உன்னோட நோட்ஸ் எல்லாம் கொண்டு வா அவளை எழுத சொல்கிறேன்.
இந்தப் பொண்ணுக்கு கொஞ்சம் கூட பொறுப்பே இல்லை கல்யாணத்தன்னைக்கு படிப்பு போச்சுனு உட்கார்ந்து அழ வேண்டியது. இப்போ ஸ்கூலில் சேர்த்து விட்டதும் திமிரு கூடிப் போச்சு என்றவன் வெரோனிகா என்று சத்தம் போட்டான்.
அவளோ கல்யாணிப்பாட்டியுடன் சேர்ந்து கதை பேசிக் கொண்டு இருந்தாள். என்ன உதய் என்ற மலர்கொடியிடம் வெரோனிகா எங்கே என்றான். அத்தை ரூம்ல இருப்பாள்னு நினைக்கிறேன் என்றார் சுசீலா அங்கே என்ன பண்ணிட்டு இருக்கிறாள் என்றவன் கல்யாணிப்பாட்டியின் அறைக்கு சென்றான்.
அப்பத்தா என்றவனின் குரலில் வாப்பா என்றார் கல்யாணிதேவி. மனைவியை முறைத்தவன் உன்னை என்ன செய்ய சொன்னேன் என்றான். துணிமணியை மடிச்சு வைக்க சொன்னிங்க அதை நான் செய்திட்டேனே என்றவளை முறைத்தவன் அறிவு கெட்ட மக்கு ஸ்கூல் படிக்கனும்னு ஆசைப் பட்டால் மட்டும் பத்தாது புத்தகத்தை வச்சும் படிக்கனும் என்றவன் ப்ளஸ்டூ போர்சன் பாதிக்கு மேல நடத்திட்டாங்க அதனால நோட்ஸ் வாங்கி எழுதுனு சொன்னால் நீ இங்கே உட்கார்ந்து கதை பேசிட்டு இருக்க என்றான் கோபமாக.
அவன் திட்டவும் அவளது கண்கள் கலங்கிட அதைத் துடைத்துக் கொண்டவள் அறைக்கு ஓடினாள்.
….தொடரும்…