விதியின் முடிச்சு…(50)

4.5
(4)

அதிகாலை கண் விழித்த வெரோனிகா எழுந்து தன் கணவனைப் பார்த்திட அவன் குழந்தை போல உறங்கிக் கொண்டிருந்தான். அவனது தலைமுடியை கோதி விட்டவள் என் செல்ல சந்துரு மாமா என்று அவனது நெற்றியில் முத்தமிட நெருங்கினாள் . அவன் சட்டென்று கண்ணைத் திறந்திட அப்படியே அதிர்ந்து அவனையே பார்த்திட அவனும் அவளைத் தான் பார்த்தான்.

 

அவளது விழிகளைக் கண்டவன் மனம் என்ன நினைத்ததோ அவளது முகத்தை கைகளில் ஏந்தியவன் தன் முகத்தருகே கொண்டு வந்தான். அவளுக்கு வெட்கம் ஒருபுறம் இம்சிக்க, அவன் என்ன செய்யப் போகிறான் என்ற எதிர்பார்ப்பும், தவிப்பும் மறுபுறம் இருக்க அலைபாயும் விழிகளால் அவனை நேருக்கு நேர் பார்க்க முடியாமல் இனம் புரியாத உணர்வில் சிக்கித் தவித்தாள் வெரோனிகா.

 

அவளது கண்களைப் பார்த்தவனுக்கு அவளது மனம் படும் பாடு புரிந்தது. அவன் குறும்புடன் அவளது நெற்றியில் முட்டி விட்டு குட்மோர்னிங் ரோனி என்றதும் அவளது படபடப்பு, வெட்கம் எல்லாம் போய் விட எழுந்தவள் குளியலறைக்குள் சென்று விட்டாள்.

 

முட்டாள், முட்டாள் என்னன்னமோ கற்பனை பண்ணி அந்த மனுசனை பார்த்து ஆஆனா இருப்ப. பாரு உன் நெற்றியில் முட்டிட்டு போயிட்டாரு என்றவள் தன்னைத் தானே நொந்து கொண்டவள் ச்சே என்ன மாமா நீங்க எவ்வளவு ஆசையா உங்களுக்கு முத்தம் வைக்கலாம்னு கிட்ட வந்தேன் நீங்க என்னடான்னா கண்ணு முழிச்சு. சரி நீங்களாவது முத்தம் கொடுப்பிங்கனு பார்த்தால் என்னை ஏமாத்திட்டிங்களே மாமா. சினிமாலாம் பார்க்க மாட்டிங்களா என்று அவனிடம் கேட்பது போல கண்ணாடியிடம் பேசிக் கொண்டிருந்தவள் குளித்து முடித்து உடை மாற்றி வெளியில் வர அவன் எதையோ பற்றி தீவிரமாக யோசித்துக் கொண்டிருந்தான்.

 

 

என்ன மாமா ரொம்ப சீரியஸா எதையோ யோசிச்சுட்டு இருக்கிங்க போல என்ற வெரோனிகாவிடம் இல்லை ரோனி என்றவன் இன்னைக்கு என்ன சமையல் என்றான் . வெந்தயக்கஞ்சி சாப்பிடுவிங்களா மாமா என்ற வெரோனிகாவிடம் வெரோனிகா கையால என்ன செய்து கொடுத்தாலும் உன்னோட சந்துரு மாமா சாப்பிடுவான் என்றிட சரிங்க மாமா என்றவள் சந்தோசமாக கிட்சனுக்கு சென்றாள்.

 

குட்மோர்னிங் ரோனி என்ற சுசீலாவிடம் குட்மோர்னிங் அத்தை என்றவள் அத்தை இந்த லீவு முழுக்க நானே சமையல் வேலையை பார்த்துக் கொள்கிறேன் என்றவள் லீவு முழுக்க என்ன இனிமேல் எப்பவுமே நானே சமையல் வேலையை கவனிக்கிறேன் என்றாள் வெரோனிகா.

 

ஏன்டி உனக்கு காலேஜ் போகனும், படிக்கனும்னு எல்லாம் எண்ணமே இல்லையா என்ற சுசீலாவிடம் காலேஜ் போகாமலே மேல படிக்கலாமே கரஸ்ல என்றவளை முறைத்த சுசீலா அதெல்லாம் கிடையாது நீ காலேஜ் போய் தான் படிக்கனும். சும்மா வீட்டு வேலை பார்க்கிறேன் பேர்வழினு படிப்புக்கு முங்காம் போட பார்த்த உன் புருசன் உன்னை விரட்டியே விட்டுருவான் . அதனால சும்மா வீட்டு வேலையிலே மூழ்கி கிடக்காமல் நீயும் ஊர்மிளா கூட சேர்ந்து கோச்சிங் கிளாஸ் போ. அர்ஜுன், விஷால், கிஷோர், நிகிலா நான்கு பேரும் கூட கோச்சிங் கிளாஸ் போறாங்களாம் நீயும் போ என்றவர் நான் உதய்கிட்ட பேசுறேன் என்றார்.

 

அத்தை ப்ளீஸ் அப்படி ஏதும் பண்ணிடாதிங்க அப்பறம் மாமா என்னை கோச்சிங் கிளாஸ் அனுப்பி வச்சுருவாங்க நான் அட்லீஸ்ட் காலேஜ் சேரும் வரைக்காவது வீட்டில் எல்லா வேலையையும் பார்க்கிறேனே என்று கெஞ்சினாள் வெரோனிகா.

 

என்ன ரோனி உன் அத்தைகிட்ட என்ன கெஞ்சிட்டு இருக்க என்று வந்த மலர்கொடியிடம் இவளைப் பாருங்க அக்கா இவளுக்கும், ஊர்மிளாவுக்கும் ஒரு வயசு தானே, அவள் ஸ்கூல் முடிஞ்சதும் ஐஐடி என்ட்ரன்ஸ் எழுத கோச்சிங் கிளாஸ் போகிறாள். இவள் என்னடான்னா நான் காலேஜ் கூட கரஸ்ல படிச்சுட்டு உங்க கூட வீட்டு வேலை பார்க்கிறேன்னு சொல்கிறாள் என்றார் சுசீலா.

 

அத்தை எனக்கும் ஊர்மிளாவுக்கும் ஒரு வயசு இல்லை அவளுக்கு பதினேழு , இன்னும் ஒருவாரத்தில் எனக்கு பதினைட்டு. ஒரு வயசுல யாராவது ப்ளஸ்டூ முடிக்க முடியுமா என்றவளை முறைத்த சுசீலா என்னடி காமெடி பண்ணுறியா என்று அவளது காதை திருகியவர் பாருங்க இவளுக்கு வாய் தான் மற்றபடி முட்டாள் என்றார்.

 

 

விடு சுசீ என்ற மலர்கொடி இதோ பாரு ரோனி உன்னை படிக்கிற வயசுல கல்யாணம் பண்ணி அழைச்சுட்டு வந்துட்டோம். உன் புருசன் ஸ்கூல் டீச்சர், எம்.எஸ்.சி. எம். எட் .எம்.பில் படிச்சுருக்கான். பிரகாஷ் எம்.பி.ஏ படிச்சுருக்கான். நாளைக்கு அவனும், பிரகாஷும் தான் ஸ்கூல் பொறுப்பு மொத்தத்தையும் பார்த்துக்க போறாங்க. அர்ச்சனா எம்.பி.ஏ முடிக்கப் போகிறாள். ஊர்மிளா இஞ்சினியரிங் படிக்க ஆசைப் படுகிறாள். இந்த வீட்டில் எல்லோரும் படிச்சவங்க அப்போ நீ வெறும் ப்ளஸ்டூ மட்டும்னா உன்னை எதாவது ஒரு சூழ்நிலையில் மட்டம் தட்டினால் உன்னோட நிலைமை என்ன சொல்லு. கல்யாணம் பண்ணிட்டு வந்த பொண்ணுங்க புருசன் வீட்டில் எல்லா வேலையையும் இழுத்துப் போட்டு பார்க்கனும் தான் நான் இல்லைனு மறுக்கவில்லை ஆனால் உன்னோட தகுதியை நீ வளர்த்துக்கனும்.

 

உனக்காக இல்லைனாலும் நாளைக்கு நீ பெறப் போற உன் பிள்ளைகளுக்காகவாச்சும் நீ உன் தகுதியை வளர்த்துக்கனும் அதனால அடிப்படியை சுத்துற வேலையை விட்டுட்டு ஒழுங்கா அடுத்து என்ன படிக்கலாம்னு யோசி.

 

 

உனக்கு இஞ்சினியரிங் விருப்பம் இல்லைனா வேற என்ன படிக்கலாம்னு யோசி. அது படி நீ நினைச்சதை படி உதய் நீ என்ன ஆசைப் பட்டாலும் படிக்க வைப்பான் என்ற மலர்கொடி உன் ஆசைக்கு இன்னைக்கு டிபன் அதுவும் நைட் நீ அரிசி, வெந்தயம் ஊற வச்சதால வெந்தயக்கஞ்சி பண்ணி வை. மற்றபடி உன்னோட படிப்பெல்லாம் முடியுற வரை நானும், உன் சின்ன அத்தையும் கிச்சனை பார்த்துக் கொள்கிறோம் என்றார் மலர்கொடி. சரிங்க அத்தை என்றவள் வெந்தயக்கஞ்சி சமைத்து விட்டு தன்னறைக்கு சென்றாள்.

 

 

என்ன ரோனி இவ்வளவு நேரம் என்ன பண்ணின காபி எங்கே என்றான் உதயச்சந்திரன். அச்சோ மறந்துட்டேன் மாமா என்றவள் கிளம்பிட அவளது கையைப் பிடித்து அமர வைத்தவன் என்னாச்சு என்ன யோசனை என்றான்.  கிச்சனில் மலர்கொடி, சுசீலா இருவரும் சொன்னதைப் பற்றி தன் கணவனிடம் கூறினாள் வெரோனிகா.

 

அம்மாவும், சித்தியும் சரியா தானே ரோனி சொல்லிருக்காங்க என்றவனிடம் எனக்கு புரியுது மாமா என்றவள் இழுத்திட என்ன உனக்கு பிரச்சனை என்றான் உதயச்சந்திரன். எனக்கு படிப்பு முக்கியம் தான் மாமா நான் இல்லைன்னு சொல்லவில்லை ஆனால் எனக்கு உங்க கூடவே இருக்கனும் போல இருக்கு. கோச்சிங் கிளாஸ் போனால் என்னோட தாட் படிப்புல மட்டும் தான் இருக்கும் . அட்லீஸ்ட் காலேஜ் போகும் வரைக்குமாச்சும் உங்க கூடவே நான் இருக்கிறேனே மாமா என்றவளை அமைதியாக பார்த்தவன் உனக்கு என்ன படிக்கனும்னு ஆசை என்றான்.

 

தமிழ் லிட்ரேச்சர் என்றாள் வெரோனிகா. சரி அப்போ நீ கோச்சிங் கிளாஸ் போக வேண்டாம் பேசாமல் என் கூட ஸ்கூலுக்கு வா நம்ம ஸ்கூல் லைப்ரேரியில் உனக்கு பிடிச்ச தமிழ் நாவல் எடுத்து வச்சு லேப், இல்லை பிரகாஷோட ஆபிஸ் ரூம் , இல்லையா அப்பா, சித்தப்பாவோட ஆபிஸ் ரூம் எதிலாவது உட்கார்ந்து நீ படி. அப்படி பண்ணினால் நான் உன் கூடவே தான் இருப்பேன். நீயும் உனக்கு பிடிச்ச தமிழை இன்னும் அதிகமா படிக்கலாம் என்றான் உதயச்சந்திரன்.

 

தாங்க்ஸ் மாமா என்றவளிடம் அப்பறம் ரோனி காலேஜ் போகும் போது எல்லாம் உன் மாமா உன் கூடவே வர முடியாது அதுவரை நீ என் கூடவே இருக்கலாம் என்றவனிடம் சரிங்க மாமா என்றவள் நான் போயி டீ எடுத்துட்டு வரேன் என்றாள். இல்லைம்மா பசிக்குது நானும் வரேன் சாப்பிடுவோம் என்றவன் சாப்பிட்டு நீயும் கிளம்பு வெளியில் போயிட்டு வரலாம் என்றான் உதயச்சந்திரன். சரிங்க மாமா என்றவள் அவனுடன் உணவு மேஜைக்கு வந்தாள்.

 

 

என்ன உதய் உனக்கு காபி கொடுக்காமல் இருந்துட்டாளா என்ற மலர்கொடியிடம் நான் தான் வேண்டாம்னு சொன்னேன்மா என்றான் உதயச்சந்திரன். அதானே அவளை நீ எங்கே விட்டுக் கொடுக்கப் போற என்ற மலர்கொடி மகனுக்கு வெந்தயக்கஞ்சியை பரிமாறினார்.

 

என்ன பெரியம்மா வெறும் வெந்தயக்கஞ்சி தானா ஒரு பர்த்டே பாய்க்கு பிரியாணி கூட இல்லையா என்ற பிரகாஷைப் பார்த்து சிரித்த மலர்கொடி உன் அண்ணி இதைத் தான் செய்தாள் இன்னைக்கு உனக்கு இது தான் என்றிட ஏன் அண்ணி இப்படி பண்ணுனிங்க. ஒரு ஆட்டுக்கால் பாயா ஏன் ஒரு கேசரி கூட செய்யாமல் என்று வராத கண்ணீரை சுண்டி விட்டு அவளிடம் கேட்டிட ஐயோ, சாரி மாமா என்றவள் சீரியஸாக மன்னிப்பு கேட்டாள்.

 

ரோனி என்னாச்சு உனக்கு அவன் உன் கிட்ட விளையாடுகிறான் என்ற சுசீலா ஏன்டா இப்படி அவள் பாரு நீ நிஜமாவே பீல் பண்ணுறனு நினைச்சுட்டாள். கேசரி தானே அம்மா செஞ்சு தரேன் உன் அண்ணி ஒரு ஐந்து வருசத்துக்கு அவைலபிள் இல்லை என்றார்.

 

ஏன்மா அண்ணியை வெளியூருக்கு அனுப்ப போறிங்களா என்ற பிரகாஷிடம் வெளியூருக்கு இல்லை அவள் காலேஜ் போகனும்ல அதைத் தான் சொன்னேன் என்றவர் உணவு பரிமாறிட அமைதியாக அனைவரும் சாப்பிட்டனர். தேவ், ஸ்ரீஜாவுடன் உதயநிலா வந்தாள்.

 

 

குழந்தை நிலா தன் அப்பா போல இருக்கும் உதய் மடியினில் அமர்ந்து அவனது முகத்தையே தொட்டுத் தொட்டு பார்த்தாள். பிறகு தேவ் பக்கம் சென்று அவனது முகத்தையும் பார்த்தவள் சரியாக தன் தகப்பனைக் கண்டு கொண்டு அப்பா , அப்பா என்றிட அவளது நெற்றியில் முத்தமிட்டான் தேவ்.

 

பரவாயில்லையே நிலாத் தங்கம் உங்க அப்பாவை சரியா அடையாளம் கண்டுபிடிச்சுட்டிங்களே என்றாள் வெரோனிகா. அவள் சரியா தான் கண்டுபிடிப்பாள் பெரியவங்களுக்கு தான் குழப்பம் எல்லாம் என்ற ஸ்ரீஜா உதயச்சந்திரனை பார்த்திட அவன் மௌனமாக தலைகுனிந்து கொண்டான். ஆமாம் அக்கா நீங்க சொல்வது சரிதான் பாப்பாவுக்கு தெரிஞ்சது கூட எனக்கு தெரியாமல் தேவ் மாமாவை பார்த்துட்டு சந்துரு மாமானு நினைச்சு அவரு கூட சண்டை போட்டேன் என்று வருந்தினாள் வெரோனிகா.

 

 

 

 

அவளுக்கு தேவ் கூடவே இருந்ததால ஈஷியா கண்டு பிடிச்சுட்டாள் ரோனி என்றார் வசுந்தரா. சரிங்க பெரியம்மா என்ற வெரோனிகா சாப்பிட ஆரம்பித்தாள். ஸ்ரீஜாவும் சாப்பிட்டு விட்டு தன்னறைக்கு சென்றாள் .

 

மாமா ஏன் ஒரு மாதிரி இருக்கிங்க என்ற வெரோனிகாவிடம் ஒன்றும் இல்லை ரோனி

நீ கிளம்பு என்றவன் தானும் கிளம்பினான்.

 

…..தொடரும்…

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.5 / 5. Vote count: 4

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!