என்ன சொல்லுற ரோனி என்றவனிடம் ஸாரி மாமா உங்களுக்கு பிடிக்காதுன்னு தெரியும் ஆனால் என்னால இந்த போட்டோ பார்த்த பிறகு இதை படிக்காமல் இருக்க முடியலை மாமா என்றவள் அவனது டைரியையும் , அந்த போட்டோவையும் கொடுத்தவள் உங்களை நான் ரொம்ப காயப் படுத்தி இருக்கேன்ல மாமா என்றவள் அழுது தவித்தாள்.
என்ன சொல்லுற ரோனி என்றவனிடம் நீங்க எவ்வளவு தூரம் அவங்களை லவ் பண்ணி இருக்கிங்க அப்படி இருக்கும் பொழுது உங்களால எப்படி என்னை லவ் பண்ண முடியும். அதை புரிந்து கொள்ளாமல் உங்களை நான் தினம் , தினம் ரொம்பவே என்றவள் நான் உங்க வாழ்க்கையை விட்டு போறது தான் மாமா உங்களுக்கு நல்லது.
உங்களால அவங்களை மறந்துட்டு என் கூட எப்படி சந்தோசமா வாழ முடியும். நீங்க என் கூட வாழும் வாழ்க்கை கடமைக்காகத் தானே மாமா இருக்கும். என்னைக் கல்யாணம் பண்ணிக்கிட்டிங்க அந்த கடமைக்காக என் கூட வாழ்ந்தே ஆகனும். நீங்க அடிக்கடி சொல்லுவிங்க உனக்கு என்னை பிடிக்காமல் போனால் கூட எனக்கு வருத்தம் இல்லை ரோனின்னு அதற்கான அர்த்தம் நான் சின்னப் பொண்ணு. என்னால சுயமா முடிவு எடுக்கத் தெரியாதுன்னு நினைச்சு நீங்க சொல்லுறிங்கனு தான் நினைச்சேன். ஆனால் இப்போ தான் புரியுது உங்கள் மனசுல எங்கே இவளும் கடைசி நேரத்தில் நம்மளை பிடிக்கலைன்னு சொல்லிருவாளோன்னு ஒரு தயக்கமும், ஸ்ரீஜா மேல நீங்க வச்சுருந்த காதலும் தான் காரணம் இல்லையா மாமா என்று அழுதவளிடம் ரோனி என்ன பேசுற நீ என்றான் உதய்.
உண்மையைத் தானே மாமா சொல்லுறேன் என்றவள் கண்கள் கலங்கிட மாமா அன்னைக்கு உங்க மேல உள்ள கோபத்தில் சொன்னேன் இந்த வீட்டை விட்டு போகிறேன்னு ஆனால் இன்னைக்கு உங்க மேல எனக்கு எந்த கோபமும் இல்லை மாமா.
நான் இங்கேயே இருந்தால் நீங்க ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் என் கூட சேர்ந்தே வாழனும்ங்கிற கட்டாயத்திற்கு தள்ளப் படுவிங்க மாமா என்றவள் நாம பிரிஞ்சுரலாம் மாமா என்றாள்.
என்ன பேசுற ரோனி நீ என்ன முட்டாளா என்றான் உதயச்சந்திரன். முட்டாள் தான் மாமா உங்க வாழ்க்கையில் நான் ஏன் மாமா இவ்வளவு லேட்டா வந்தேன். உங்களோட காதலை எனக்கு சொந்தமாக்கிக்க முடியாத முட்டாள் மாமா நான் என்றவள் அழுது தவித்தாள்.
உங்க மனசுல நான் ஒரு குழந்தையா தானே மாமா தெரிஞ்சேன். உங்க மனசுல ஒரு முறை கூட நான் மனைவியா இருந்ததே இல்லையே எனக்கு உங்க மேல கோபம் எல்லாம் இப்பவும் இல்லை மாமா. இப்போ மட்டும் இல்லை எப்பவுமே கோபம் எல்லாம் இல்லை மாமா.
ஆனால் மனசு லேசா வலிக்குது மாமா. இங்கேயே இருந்தால் நான் செத்துருவேனோன்னு பயமா இருக்கு மாமா என்னை எங்க அம்மா வீட்டில் கொண்டு போயி விட்டுருங்க மாமா என்று அழுதாள் வெரோனிகா.
என்ன பேசுற வெரோனிகா நீ ஏன் உன் அம்மா வீட்டுக்கு போகனும் என்றவளிடம் நான் எப்படி மாமா இந்த வீட்டில் இருப்பேன். உங்க மனசுல எனக்குனு எந்த இடமும் இல்லாத பொழுது என்றவள் அதான் எழுதி இருக்கிங்களே மாமா அவளை நினைத்த மனதில் இந்த ஜென்மத்தில் வேறு ஒருத்திக்கு இடமில்லைனு அப்பறம் எப்படி மாமா என்னால இங்கே இருக்க முடியும்.
நான் ஒரு பைத்தியம் மாமா என் மாமா மனசு முழுக்க நான் மட்டும் தான் இருக்கேன்னு ஒவ்வொரு நாளும் எனக்கு நானே ஆசையை வளர்த்துக்கிட்டு உங்களையும் இம்சை பண்ணிட்டு இருந்திருக்கேன் என்று வருந்தினாள்.
ரோனி நீ நினைக்கிற மாதிரி என்றவனிடம் நான் நினைக்கிற மாதிரி சொல்லுங்க மாமா எதுவும் இல்லைன்னு உங்களால சொல்ல முடியாது. இப்பவும் சொல்கிறேன் மாமா நான் சந்தோசமா தான் இந்த வீட்டை விட்டு போறேன்னு சொல்கிறேன் . எனக்கு உங்க மேல எந்த வருத்தமும் கிடையாது சொல்லப் போனால் இந்த டைரியை படிச்ச பிறகு தான் என் சந்துரு மாமா மேல இன்னும் இன்னும் காதல் அதிகமாகிட்டு இருக்கு.
ஒரு பொண்ணை நீங்க எவ்வளவு தூரம் காதலிச்சுருக்கிங்க. அவங்க தான் உங்க வாழ்க்கை , உயிர்னு காதலிச்ச அந்தப் பொண்ணோட எப்படி எல்லாம் வாழனும்னு கனவு கண்டிருந்திருக்கிங்க.
உங்க கனவுகள் எல்லாமே பொய்யா போன போது எப்படி எல்லாம் துடிச்சுருப்பிங்க. நீங்க மட்டும் இல்லை ஸ்ரீஜா அக்காவும் எப்படி எல்லாம் துடிச்சுருப்பாங்க. மாமா அவங்க மனசுலையும் நீங்க தான் இன்னும் இருக்கிங்கனு எனக்கு தோனுது. அது எப்படி பத்து வயசுல இருந்து காதலிச்ச ஒருத்தரை அவ்வளவு சீக்கிரம் மறக்க முடியும்.
மாமா உங்க தம்பி பண்ணின துரோகத்திற்கு நீங்க இரண்டு பேரும் இப்படி பழியாகிட்டிங்களே. என்னைக் கேட்டால் நீங்க இரண்டுபேரும் இப்போ கூட ஒன்றாக சேர்ந்து வாழலாம் என்றவளின் கன்னத்தில் பளாரென்று அறைந்தான் உதயச்சந்திரன்.
என்னடி விட்டால் ரொம்ப பேசிட்டு இருக்கிறாய். சின்னப் பொண்ணுனு பார்த்தால் என்னடி உன் பிரச்சனை. நீ என்னை புரிஞ்சுக்கிட்ட அளவுக்கு யாருமே என்னை புரிஞ்சுக்கவில்லைனு எத்தனையோ முறை நினைச்சுருக்கேன் அதெல்லாம் ஒன்றுமே இல்லைங்கிற மாதிரி பேசிட்டு இருக்க என்றான் உதய்.
மாமா உங்களைப் புரிஞ்சுக்கிட்டதால தான் என்ற வெரோனிகாவின் கன்னத்தில் மீண்டும் அரைந்தவன் என்னடி புரிஞ்சு கிழிச்ச உன் பிரச்சனை என்ன நான் ஸ்ரீஜாவை லவ் பண்ணினதா.
ஆமாம் அவளை லவ் பண்ணினேன் தான். அவள் தான் என் உயிர், என் உலகம், என் வாழ்க்கைனு நினைச்சு ரொம்ப , ரொம்ப அளவுக்கு அதிகமாகவே லவ் பண்ணினேன். என்னை மாதிரியே உருவத்தில் இருக்கிற என் தம்பியும் அவளை லவ் பண்ணி இருக்கிறான்னு எனக்கு தெரியாமல் போச்சு.
அவன் அவள் மேல வச்ச ஆசையால என்ன தப்பு பண்ணுறோம்னு தெரியாமல் என்னைப் போல நடிச்சு அவள் கிட்ட தப்பா நடந்துகிட்டான். அவளும் தம்பி கூட இப்படி இருந்துட்டு அண்ணனை எப்படி கல்யாணம் பண்ணிக்கிறதுன்னு அவளோட மனசை கொன்னுட்டு கல்யாண மேடையில் நான் காதலிச்சது உன்னை இல்லை உன் தம்பியைனு சொல்லி என்னை விட்டுட்டு அவனைக் கல்யாணம் பண்ணிக்கிட்டாள்.
அவளை மறக்க முடியாமல் தவிச்சேன், அழுதேன் , புலம்பினேன் ஒரு கட்டத்திற்கு மேல் வீட்டில் கூட யாருக்கிட்டையும் அவ்வளவா பேசாமல் இறுக்கமா தான் இருந்தேன்.
சந்தர்ப்ப சூழ்நிலை நம்ம கல்யாணம் முடிஞ்சது. நீ என் வாழ்க்கையில் வந்த. கள்ளம் , கபடம் இல்லாமல் இந்த வீட்டில் உள்ள எல்லோர் மேலையும் உன்னோட அன்பை கொட்டின .
எறும்பு ஊற கல்லும் தேயும்னு சொல்லுவாங்க அது போல தான்டி கொஞ்சம் ,கொஞ்சமாய் உன்னோட அளவு கடந்த அன்பாலையும், பாசத்தாலையும் என்னை மெல்ல மெல்ல உன் பக்கம் இழுத்துட்ட.
ரோனி நான் ஸ்ரீஜாவை காதலிச்சேன் தான் இல்லைன்னு சொல்லவில்லை. ஆனால் அவளை பிரிஞ்சப்போ கூட நான் தாங்கிக்கிட்டேன். நீ என்னை பிரிய நினைத்தாலே நான் செத்துருவேன்டி என்றவன் அவள் இதழில் தன் இதழைப் பதித்தான்.
அவனது இந்த இதழ் ஒற்றலில் அவள் மீது அவன் கொண்டிருந்த அன்பின் ஆழத்தை அவளுக்கு உணர்த்தியவன் அவளைப் பிரிந்தான்.
ரோனி என்னை விட்டுப் போயிராதடி உன்னைக் காதலிக்கிற அளவுக்கு நான் ஸ்ரீஜாவை காதலிக்கவே இல்லைடி. ஐ லவ் யூ ரோனி , ஐ லவ் யூ சோமச் வெரோனிகா.
நீ இல்லாத வாழ்க்கை எனக்கு நரகம்டி உன் மேல நான் உயிரையே வச்சுருக்கேன்டி. உனக்கு ஏன்டி என்னோட காதல் புரியவே இல்லை இந்த ஒருவாரமும் உன்னை விட்டு நான் ஒரு நொடி கூட பிரியாமல் இருந்தேனே என்னோட அன்பு வெறும் கடமைன்னு நினைச்சியா ரோனி. சத்தியமா சொல்லுறேன்டி நீ எப்போ என் மனசுல வந்தாய்னு தெரியாது ஆனால் சாகுற வரை நீ ஒருத்தி மட்டும் தான் என் வாழ்க்கை.
நீ சொன்னியே ஏன் மாமா அப்படி எழுதி வச்சுருந்திங்கனு நிஜமாவே அவளை நினைச்ச மனசுல இன்னொருத்தியை நினைக்க கூடாதுன்னு தான் நினைச்சேன்.
ஆனால் உன்னோட காதல் அவளை நான் நினைச்சதையே மறக்க வச்சுருச்சுடி என்னை விட்டுட்டு போயிராதே ரோனி உன் சந்துரு மாமா செத்துருவான் என்றவனது மார்பில் சாய்ந்தவள் என்னை மன்னிச்சுருங்க மாமா என்று அவனைக் கட்டிக் கொண்டாள்.
போடி என் கிட்ட பேசாதே என்றவன் அவளை இன்னும் இறுக்கிக் கொண்டான். எங்கே கொஞ்சம் இறுக்கம் தளர்த்தினாலும் அவள் பிரிந்து சென்றிடுவாளோ என்ற பயத்தில் அவளை மேலும் ஆழமாக தனக்குள் புதைத்துக் கொண்டான்.
உனக்கு அவ்வளவு தைரியமாடி என்னை விட்டு போயிருவியா என்றவனிடம் போக மாட்டேன் மாமா என் சந்துரு மாமாவை விட்டு எங்கேயும் போக மாட்டேன் என்றவள் அழுதிட அவளது கண்ணீரும், அவனது கண்ணீரும் ஒன்றாக கலந்து அவனது மார்புச்சட்டையை நனைத்தது.
ஏன்டி அப்போ என் மேல சந்தேகம் என்றவனது வாயில் விரலை வைத்தவள் உங்களை எந்த சூழ்நிலையிலும் சந்தேகம் படமாட்டேன் மாமா என்னால அந்த டைரியை படிச்சதும் உங்களோட வலி, துக்கம் எல்லாமே உணர முடிஞ்சது. எத்தனை வருச காதல் உங்க தம்பியாலையே அது கனவா கலைஞ்சு போனப்ப உங்க மனசு எத்தனை வலியை தாங்கிருக்கும் என்றவளது கன்னத்தில் கை வைத்தவன் அந்த வலியைக் கூட தாங்கிட்டேன் ரோனி ஆனால் நீ மட்டும் என்னை விட்டு போறேன்னு சொன்னதை என்னால தாங்க முடியலைடி என்றவன் என்னை விட்டு போவேன்னு இனி ஒருமுறை சொன்னாலும் அது உன் சந்துரு மாமா செத்துப் போனதுக்கு சமம் என்றான் உதயச்சந்திரன்.
உங்களை விட்டு நான் போகனும்னா நான் செத்து தான் போகனும் மாமா என்றவளது வாயில் விரல் வைத்தவன் மரணம் கூட நம்மளை பிரிக்க விடமாட்டேன் ரோனி என்றவனது நெற்றியில் எக்கி முத்தமிட்டவள் ஐ லவ் யூ மாமா என்றிட அவளை அணைத்துக் கொண்டான் இறுக்கமாக.
ஐ லவ் யூ வெரோனிகா என்றவன் அவளது இதழில் மீண்டும் முத்தமிட மங்கை அவளோ கணவனின் இதழ் முத்தத்தில் கசங்கிப் போனாள். அவனது சட்டையை இறுக்கிப் பிடித்தவள் , கண்களை மூடி அவனது இதழ் ஒற்றலில் கரைந்து கொண்டிருக்க அவளை மெல்ல விடுவித்தவன் அவளது முகத்தை பார்க்க முடியாமல் தவித்திட அவளும் கூட கசங்கிய முகத்துடன் வெட்கம் தாங்காமல் முகத்தை மூடிக் கொண்டு அவனை விலகினாள்.
அவளது கையைப் பிடித்தவன் ஹாப்பி பர்த் டே ரோனி என்றிட அவனைப் பார்த்து அழகாக புன்னகைத்தாள்.
……தொடரும்….
Very good https://t.ly/tndaA