விதியின் முடிச்சு…(55)

4.3
(8)

எப்போ வந்திங்கம்மா என்ற வெரோனிகாவிடம் இப்போ தான் கொஞ்ச நேரத்திற்கு முன்னே வந்தோம் என்றார் பூங்கொடி. மாமா இது தான் சர்ப்ரைஸா என்ற வெரோனிகாவிடம் ஆமாம் என்று தலையசைத்தவன் சரி வா கேக் வெட்டலாம் என்று அவளை அழைத்துச் சென்றான்.

 

அவளும் கேக் வெட்டி தன் கணவனுக்கு ஊட்டி விட்டாள். அவன் அதை அவளுக்கே ஊட்டி விட்டு ஹாப்பி பர்த் டே வெரோனிகா என்றான். தாங்க்ஸ் மாமா என்றவள் அடுத்து வீட்டில் உள்ள அனைவருக்கும் கேக் ஊட்டி விட்டாள்.

 

பிறந்தநாள் கொண்டாட்டங்கள் எல்லாம் நல்லபடியாக முடிந்து சந்தோசமாக இருந்தாள் வெரோனிகா. அவளது அம்மா பூங்கொடியுடன் ரொம்ப நேரம் சந்தோசமாக பேசிக் கொண்டிருந்தவள் அறைக்கு வரவே வெகு நேரம் ஆகி இருந்தது.

 

அவளது வருகையை எதிர் பார்த்துக் கொண்டிருந்தவன் காத்திருந்து, காத்திருந்து உறங்கியே விட்டான்.

 

அச்சச்சோ மாமா தூங்கிட்டாரே என்று நினைத்தபடி அறைக்குள் வந்தவள் அவனையே வைத்த கண் எடுக்காமல் பார்த்துக் கொண்டிருந்தாள். மாமா, மாமா என்று இரண்டு முறை அழைத்தவள் அவன் அசையாமல் படுத்திருக்கவும் அவனது கையைப் பிடித்து தன் கைக்குள் வைத்துக் கொண்டாள்.

 

ஐ லவ் யூ மாமா. இதுவரைக்கும் எந்நப் பிறந்தநாளிலும் நான் இந்த அளவுக்கு  சந்தோசமா இருந்ததே இல்லை. உங்க கூட கொண்டாடுகிற முதல் பிறந்தநாள் இது. என் வாழ்க்கையிலே மறக்கவே முடியாத நாளா இதை மாத்திட்டிங்க.

 

நீங்க ஏன் மாமா என் வாழ்க்கைக்குள்ள வந்திங்க. இந்த உலகத்தில் உள்ள எல்லா சந்தோசமும் எனக்கு கிடைச்சது போல இருக்கு. உங்க கூட இருக்கிற ஒவ்வொரு நொடியும் ஏதோ வானத்தில் பறக்கிற மாதிரி அவ்வளவு சந்தோசமா இருக்கு.

 

சத்தியமா சொல்லுறேன் உங்களை கல்யாணம் பண்ணிக்கும் போது ரொம்ப பயமா இருந்துச்சு. என் வாழ்க்கையே முடிஞ்சுபோச்சுனு தோனுச்சு. என்னோட வாழ்க்கையே அவ்வளவு தான், இனி படிப்புங்கிற விசயம் எனக்கு இல்லையோன்னு நினைச்சேன்.

 

ஆனால் நான் நினைச்சது எல்லாமே பொய் சத்தியமா சொல்லுறேன் என் வீட்டில் இருந்து எங்க ஊரில் படிச்சுருந்தால் கூட நான் பெயில் தான் ஆகிருப்பேன். நான் அவ்வளவு பெரிய மக்கு என்று சிரித்தவள் ஆனால் இப்போ பரீட்சை நல்லா எழுதி இருக்கேன்னா அதற்கு காரணம் நீங்க தான்.

 

நீங்க என் அம்மா போல அன்பை கொடுத்திங்க, அப்பா போல கண்டிப்பு காட்டினிங்க, குருவாய் இருந்து வழி நடத்துனிங்க, தோழனா இருந்து நான் சோர்ந்து போகும் போதெல்லாம் எனக்கு தோள் கொடுத்திங்க உங்களைப் போல ஒருத்தரை என்னோட வாழ்க்கைத் துணையா அடைய நான் எந்த ஜென்மத்தில் எவ்வளவு புண்ணியம் பண்ணி இருக்கேன்னு தெரியலை.

 

 

அவ்வளவு சந்தோசமா இருக்கிறேன் மாமா. உங்க கூட இன்னும் நூறு வருசம் வாழனும்னு ஆசை என்றவள் அவனது நெற்றியில் முத்தமிட்டு எழ அவளது கையைப் பிடித்திருந்தான் அவளது கணவன்.

 

நூறு வருசம் போதுமா என்ற உதயச்சந்திரனிடம் போதாது ஆயிரம் ஜென்மம் கூட பத்தாது என்றாள் வெரோனிகா.

 

அம்மாடியோவ் ஆயிரம் ஜென்மம் உன் கூட வாழனுமா நான் ரொம்ப பாவம்மா என்ற உதயச்சந்திரனை முறைத்தவள் அதை நான் சொன்னாலும் தகும் என்றாள். என்ன தகும் அப்படி என்ன மேடம் உங்களை நான் கொடுமைப் படுத்திட்டேன் என்ற உதயச்சந்திரனிடம் பின்னே எப்போ பாரு படி, படினு கொடுமைப் படுத்தினதெல்லாம் என்னவாம் என்றவள் சிணுங்கிட அவன் சிரித்தான்.

 

சரி தான் என் மக்குப் பொண்டாட்டி உன்னை பிரில்லியன்ட்டா மாற்ற வேண்டாமா அதனால தான் படிக்க சொன்னேன் அது ஒரு குத்தமா என்றவன் அச்சோ பாருடி உன் கிட்ட பேசிட்டு இருந்தாளே நான் எல்லாத்தையும் மறந்துடுறேன் என்றான்.

 

என்ன மாமா மறந்திங்க என்ற வெரோனிகாவிடம் வீட்டில் உள்ள எல்லோரும் உனக்கு கிப்ட் கொடுத்தாங்களே நான் உனக்கு கிப்ட் கொடுக்கவே இல்லையே நீ அதைப் பற்றி கொஞ்சமாவது பீல் பண்ணியா என்றான் உதயச்சந்திரன்.

 

நீங்க தான் எனக்கு காலையிலே கிப்ட் கொடுத்துட்டிங்களே மாமா என்றாள் வெரோனிகா. நான் எப்போடி கிப்ட் கொடுத்தேன் என்றவனிடம் நான் கேட்ட கிப்ட் கொடுத்திங்க மாமா. அதோட எக்ஸ்ட்ரா ஒரு கிப்ட்டும் கொடுத்திங்க என்றவள் வெட்கப் பட அம்மா தாயே இப்படியெல்லாம் வெட்கம் பட்டு என் விரதத்தை கலைச்சுராதே என்றவனிடம் போங்க மாமா என்றாள்.

 

என்ன கிப்ட் கொடுத்தேன்டி என்றவனிடம் எனக்கு ப்ரப்போஸ் பண்ணினிங்களே மாமா அது தான் எனக்கு நீங்க கொடுத்த பெரிய கிப்ட் அப்பறம் என்றவள் அவனது உதட்டின் மீது கை வைத்து இரண்டாவது கிப்ட் என்று வெட்கம் கொள்ள அவளது விரல்களில் முத்தமிட்டான்.

 

அவள் பட்டென்று அவது கையை அவனது உதட்டின் மீதிருந்து எடுத்துக் கொண்டாள். போங்க மாமா என்று அவள் சிணுங்கிட சரி இப்போ மூன்றாவதா ஒரு கிப்ட் கொடுக்கட்டுமா என்றான். மூன்றாவது கிப்ட்டா என்ன கிப்ட் மாமா என்றவளை எழுந்து நிற்கச் சொன்னான்.

 

அவளும் எழுந்து நிற்க இந்த கிப்ட் நான் உனக்கு கொடுக்கிற நிகழ்வு ஒரு பொக்கிஷமா நம்ம நினைவில் கலந்திருக்கனும் என்று சொன்னவன் ஒரு நிமிசம் இரு என்று கேமராவில் டைம் செட் செய்து விட்டு வந்து அவள் முன் மண்டியிட்டான்.

 

மாமா என்ன பண்ணுறிங்க என்றவளிடம் ஒரு நிமிசம் வாயை மூடிட்டு நில்லேன்டி என்றவன் அவளது கைவிரலைப் பிடித்து அதில் UV என இன்சியல் இதயத்திற்குள் இருப்பது போல ஒரு அழகான மோதிரத்தை அணிவித்து ஐ லவ் யூ வெரோனிகா என்றிட அவள் முகம் முழுக்க புன்னகையுடன் அவளைப் பார்த்திட அந்த நிகழ்வு அழகாக படமாக்கப் பட்டது அந்த கேமிராவில்.

 

அவளது கை விரலில் அவன் முத்தமிட அவன் முன் அவளும் மண்டியிட்டு அவனது நெற்றியோடு தன் நெற்றியை வைத்துக் கொண்டவள் ஐ லவ் யூ சோமச் மாமா என்றிட அவளை கைகளில் ஏந்திக் கொண்டான்.

 

 

ஐ லவ் யூ ரோனி என்றவன்அவளது நெற்றியில் முத்தமிட்டு அவளை பால்கனியில் உள்ள ஊஞ்சலில் அமர வைத்திட அவளோ அவனை ஊஞ்சலில் அமர வைத்து அவனது மடியில் அமர்ந்து கொண்டாள்.

 

 

வானில் காய்ந்திடும்

வெண்ணிலாவும் பல

வண்ணங்கள் கொண்டு

மின்னிடும் என்னவனின்

கண்களில் கொப்பளிக்கும்

காதலின் ஆழம் கண்டு

மங்கை இவளோ அவனை

நித்தமும் அவஸ்தை கொள்ளச்

செய்கிறாள் குழந்தையாய்

அவன் மடியில் கிடந்து….

 

 

என்றவளைப் பார்த்து சிரித்தவன் பாருடா என் மக்குப் பொண்டாட்டிக்கு கவிதை எல்லாம் வருமா என்று கண்ணடித்தவனின் கண்களில் முத்தமிட்டவள் காதல் வந்தால் கவிதை தன்னாலே வரும் என்றாள்.

 

அங்கே எப்படி கவிதை வருமா என்ற வெரோனிகாவிடம் மாமாகிட்ட எப்பவுமே வெறும் காதலை மட்டும் தான் எதிர் பார்க்கனும் கவிதை எல்லாம் எதிர்பார்க்க கூடாது. நீ கவிதை சொல்லு அதை நான் ரசிக்கிறேன் என்றவன் அவளது மூக்கோடு தன் மூக்கினை உரசிட அவள் அவன் நெற்றியில் முத்தமிட்டாள்.

 

 

 

மாமா என்றவளிடம் என்ன ரோனி என்றான் உதயச்சந்திரன். நமக்கு பாப்பா பிறந்தால் என்ன பெயர் வைக்கலாம் என்றாள். அதற்கு இப்போ என்னடி அவசரம் இன்னும் இரண்டு , மூன்று வருசம் ஆகுமே அப்போ யோசிக்கலாம் அதுவரை நீ தினம் காலேஜ் போகனும், அப்பறம் கொஞ்சம் படிக்கனும், அப்பறம் நைட் முழுக்க என் கூட இப்படியே இந்த ஊஞ்சலில் இருக்கனும் நாம இப்படியே கொஞ்ச நாளைக்கு காதலிக்கலாம் அப்பறம் பாப்பா பெத்துக்கிறதுக்கு பிளான் பண்ணலாம் என்றான் உதயச்சந்திரன்.

 

ஐயோ, மக்கு மாமா நாம பாப்பா பெத்துக்க நாள் ஆகும் சரி. பெயர் இப்பவே செலக்ட் பண்ணி வச்சுக்கலாமே அதில் என்ன தப்பு என்றவளிடம் சரி நீயே சொல்லு என்றாள்.

 

பையன் பிறந்தால் என்ன பெயர் வேண்டுமானாலும் வச்சுக்குவோம் பொண்ணு பிறந்தால் தயனிகா என்றாள் வெரோனிகா. அது என்னடி தயனிகா என்ற உதயச்சந்திரனிடம் உதயச்சந்திரனில் தய வெரோனிகாவில் னிகா சேர்த்து தயனிகா என்றாள் வெரோனிகா.

 

அட அட உனக்கு கூட புத்திசாலித்தனமா யோசிக்கத் தெரியுதே ரோனி என்றவன் சிரித்திட அப்போ நான் என்ன புத்தி இல்லாதவளா என்று அவனது காதை அவள் திருகிட ஏய் வலிக்குதுடி ராட்சசி என்றான். வலிக்கட்டும் , வலிக்கட்டும் என்றவளின் கன்னத்தில் முத்தமிட்டான் உதயச்சந்திரன்.

 

அவள் அப்படியே அசந்து சிலையாகிட அவளை ஊஞ்சலில் அமர வைத்து விட்டு அவன் ஓடினான். சுதாரித்தவள் எழுந்து கொண்டு மாமா உங்களை என்று அவனை விரட்டி வந்தவள் அவனைப் பிடிக்கும் நேரம் கட்டிலில் மோதி  கால் தடுக்கி அவன் கட்டிலில் விழ வந்த வேகத்தில் அவளும் அவன் மீதே விழுந்தாள்.

 

அவனது மார்பில் அவள் விழுந்து கிடக்க அவனது விழிகளும், அவளது விழிகளும் சங்கமித்து ஏதேதோ கதைகள் பேசிக் கொண்டிருந்தன. அவனது கைகள் அவளை அணைத்தபடி இருக்க அந்த நேரம் வானில் ஒரு பயங்கர இடிச்சத்தம் கேட்டு இருவரும் தன்னிலை அடைந்தனர்.

 

அவனைப் பிரிந்து எழுந்தவள் வெட்கத்துடன் ஓடிச் சென்றாள். ரோனி ஏய் எங்கே போற என்றவன் தன் தலையை அழுந்தக் கோதியபடி மனைவி அவளை பின்தொடர்ந்து சென்றான்.

 

 

மொட்டை மாடியில் அவள் நின்றிருக்க இங்கே எதற்குடி வந்த என்றான் உதயச்சந்திரன். தெரியலை மாமா ஏதோ நினைப்பில் வந்துட்டேன் என்றவள் சிரித்திட வானம் பொத்துக் கொண்டு மழை பெய்ய ஆரம்பித்தது.

 

மாமா மழை பெய்யுது என்றவள் மழையில் நனைய ஆரம்பிக்க வாடி கீழே போகலாம் என்றவனையும் பிடித்து நனைய வைத்தாள்.

 

 

மாமா ப்ளீஸ் மாமா பர்த்டே விஷ் மழையில் நனைஞ்சுக்கிறேனே என்றவளிடம் லூசு ஜலதோசம் பிடிச்சுக்கும்டி என்று அவன் என்ன சொன்னாலும் அவள் கேட்கவில்லை.

 

அவள் நெற்றியில் விழுந்த மழைத்துளி ஒன்று அவள் மூக்கின் மீது பயணித்து இதழை நெருங்கும் நேரம் என்ன நினைத்தானோ மனைவி அவளின் இதழில் தன் இதழைப் பதித்தான் உதயச்சந்திரன்.

 

அவனது இதழ் முத்தத்தை ரசித்த மங்கை அவனது சட்டையைப் பிடித்து இறுக்கியபடி மழையில் நனைந்து கொண்டிருந்தாள்.

 

 

மங்கை அவளின் நெற்றியில்

வழிந்த மழைத்துளி அவள்

இதழ் தொடுவதற்குள்

என்னவளின் இதழ் தொடும்

உரிமையை உனக்கு யார்

வழங்கியது என்று மல்லுக்கு

வந்தவன் போல் அவள்

இதழோடு தன் இதழை

சேர்த்து மழைத்துளியை தானே

பருகிய பிறகும் காளையவனின்

காதல் வேட்கை தனியாது

மணாளினி அவளின் உயிரை

இதழ் வழி உறிஞ்சிக்

கொண்டிருந்தான் காதல்

அரக்கனாய் மாறி…

 

அவர்களில் அழகான காதலைக்

கண்ட வானமும் பன்னீர் தூவி

ஆசிர்வதிக்கிறது இந்நாள்

போல் எந்நாளும் காதலுடன்

அவர்களை வாழச் சொல்லி..

 

அவர்களின் மோன நிலையைக் கண்ட வானம் கூட பன்னீர் மழை

தூவி ஆசிர்வதிக்கிறது. பாவை அவளோ கண்ணில் நீர் பெருகி வேதனைத் தீயில் வாடியபடி கடந்து செல்கிறாள்.

 

 

 

…..தொடரும்…

 

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.3 / 5. Vote count: 8

No votes so far! Be the first to rate this post.

1 thought on “விதியின் முடிச்சு…(55)”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!