ஹனிமூன் கனவா என்று சிரித்த வெரோனிகாவைப் பார்த்த இந்திரஜா ரோனி நீ எப்போ ஹனிமூன் போகப் போற என்றாள். ஹனிமூனா அதுவும் கல்யாணம் முடிஞ்சு ஒரு வருசம் கழிச்சு சூப்பர் என்று சிரித்த அர்ச்சனாவிடம் ஏன் ஒரு வருசம் கழிச்சு ஹனிமூன் போனால் என்ன நாளைக்கே என் சந்துரு மாமாகிட்ட சொல்லி ஹனிமூன் கூட்டிட்டு போகச் சொல்கிறேன் என்றாள் வெரோனிகா.
பாருடா உடனேவா இரு ரோனி எங்களுக்கும் கல்யாணம் ஆகட்டும் எல்லோரும் சேர்ந்து ஹனிமூன் போகலாம் என்றாள் இந்திரஜா. அப்பவும் வருவோம் இப்போ நாங்க தனியா போவோம் என்றாள் வெரோனிகா. ஹும் போங்க , போங்க சந்தோசமா போயிட்டு வாங்க என்ற அர்ச்சனாவிடம் சரி அண்ணி நேரம் ஆச்சு தூங்குங்க. சீக்கிரமே தூங்கினால் தான் நாளைக்கு பொண்ணு பார்க்க வரும் பொழுது முகம் நல்லா ப்ரஷ்ஷா இருக்கும் என்ற வெரோனிகாவிடம் சரிங்க பெரிய அண்ணி என்றாள் அர்ச்சனா.
சிரித்து விட்டு வெரோனிகா தன்னறைக்கு சென்றாள். என்ன ரோனி சிரிச்சுட்டே வர என்ன விசயம் என்ற உதயச்சந்திரனின் அருகில் வந்தவள் மாமா வேலை முடிஞ்சுருச்சா என்றாள். முடிஞ்சுருச்சு என்ன விசயம் சொல்லு என்றவனது கையைப் பிடித்து அழைத்துச் சென்றவள் பால்கணி ஊஞ்சலில் அவனை அமரச் சொன்னாள்.
அவன் அமர்ந்தவுடன் அவனது மடியில் அமர்ந்தவள் அவனது கழுத்தைக் கட்டிக் கொண்டாள். என்னடி என்ன விசயம் என்றவனை அமைதியாக பார்த்துக் கொண்டிருந்தாள். ஏய் என்ன பண்ணிட்டு இருக்க ஏன் இப்படி என் முகத்தையே குறு, குறுனு பார்க்கிற என்றவனிடம் மாமா நமக்கு நாளை மறுநாள் கல்யாணநாள் தானே என்றாள் வெரோனிகா.
ஆமாம் இப்போ அதற்கு என்ன என்றவளிடம் எனக்கும் பதினெட்டு வயசு முடிஞ்சுருச்சு தானே அப்போ நம்ம கல்யாணம் இனி செல்லும் தானே என்றவளின் மூக்கைப் பிடித்து ஆட்டியவன் ஆமாடி இப்போ என்ன அதற்கு என்றான் உதயச்சந்திரன்.
மாமா பேசாமல் நாம ஏன் ஹனிமூன் போக கூடாது என்றாள் வெரோனிகா. ஹனிமூனா என்ன திடீர்னு என்றவனிடம் இதுவே லேட் தான். நமக்கு கல்யாணம் முடிஞ்சு ஒரு வருசம் ஆச்சு என்றவளின் கன்னத்தை கைகளில் ஏந்தியவன் இப்போ என்னடி அவசரம் என்றான் உதயச்சந்திரன்.
அவசரம் இல்லை மாமா என்னோட ஆசை என்றவள் நீங்க தானே சொன்னிங்க மாமா என்னோட எல்லா ஆசைகளையும் நிறைவேற்றி வைப்பிங்கன்னு அப்போ நான் கேட்கிறேன் என்னை ஹனிமூன் கூட்டிட்டு போங்க என்றாள் வெரோனிகா.
அவன் சிரித்து விட்டு சரி எங்கே போகலாம் ஹனிமூன் என்றவனிடம் உங்க விருப்பம் எங்கே கூட்டிட்டு போனாலும் எனக்கு ஓகே தான் என்றாள்.
சரி , சரி நாளைக்கு அர்ச்சனாவை பொண்ணு பார்க்க வராங்க தானே அவங்க வந்துட்டு நல்லபடியா பேசி முடிக்கட்டும் அப்பறம் நாம ஹனிமூன் போகலாம் என்றான் உதயச்சந்திரன்.
ஹும் ஓகே மாமா என்றவள் அவனது மார்பில் சாய்ந்து கொள்ள ஏய் என்னடி பண்ணுற குழந்தை மாதிரி என் மடியிலே உட்கார்ந்துக்கிற மாமா பாவம்மா என்றிட என்ன மாமா பாவம் நீங்க என்றாள் அப்பாவியாக.
நீ இப்படியே பண்ணிட்டு இருந்தால் சீக்கிரம் என்னோட விரதம் கலைஞ்சுரும் ரோனி என்று அவன் கூறிட அதைப் புரிந்து கொண்டவள் நாக்கைக் கடித்துக் கொண்டு ஸாரி மாமா என்று அவனை விட்டு எழுந்தாள். மாமா ஹனிமூன் போனால் உங்க விரதம் என்று அவள் அமைதியாகிட அவன் சிரித்து விட்டு பார்த்துக் கொள்ளலாம் விடு என்று அவளை உறங்கச் சொன்னான்.
அவளும் வெட்கத்துடன் சென்று படுத்துக் கொள்ள அவளருகில் படுத்துக் கொண்டவனை அணைத்தவள் விரதம் கலைஞ்சாலும் எனக்கு பிரச்சனை இல்லை மாமா ஐ லவ் யூ என்று அவனைக் கட்டிக் கொண்டாள். அவன் சிரித்து விட்டு அவளை அணைத்தபடி உறங்கினான்.
என்ன தேவ் ஏதோ யோசனையா இருக்க என்ற ஸ்ரீஜாவிடம் நான் ஒரு மெடிக்கல் கான்பரன்ஸ்க்கு போகிறேன். ஒரு வாரம் பாப்பாவை பார்க்காமல் எப்படி இருக்கப் போறேன்னு தெரியவில்லை அதான் கவலையா இருக்கு என்றான் தேவச்சந்திரன். பேம்லி அலௌவ் பண்ணுவாங்களா என்ற ஸ்ரீஜாவிடம் அலௌவ் பண்ணுவாங்க நீ தான் நான் கூப்பிட்டால் வர மாட்டியே என்றவன் இந்த ஒரு முறை மட்டும் என் கூட வாயேன் ஸ்ரீஜா. என்னால பாப்பாவை பார்க்காமல் ஒரு நாள் கூட இருக்க முடியாதுன்னு உனக்கு நல்லா தெரியும் தானே என்றான் தேவச்சந்திரன். சரி தேவ் வரேன் என்றவள் படுத்துக் கொள்ள கடவுளே இல்லை ரோனி அண்ணி ரொம்ப தாங்க்ஸ் என்று நினைத்தவன் மாலை நடந்த நிகழ்வைப் பற்றி யோசித்தான்.
அவன் மாலையில் தோட்டத்தில் தனியாக அமர்ந்திருந்தான். அந்த நேரம் அங்கு வந்த வெரோனிகா என்ன தேவ் மாமா இங்கே உட்கார்ந்து யோசிச்சுட்டு இருக்கிங்க என்றாள் வெரோனிகா. இல்லை அண்ணி ஒன்றும் இல்லை என்றவனிடம் ஸ்ரீஜா அக்காவைப் பற்றியா என்றாள் வெரோனிகா. ஆமாம் அண்ணி நான் பண்ணின தப்புக்கு எத்தனையோ முறை அவள் கிட்ட மன்னிப்பு கேட்டுட்டேன் இன்னும் மன்னிக்க மாட்டேங்கிறாள்.
ஒரு ட்ரிப் அவளையும், பாப்பாவையும் அழைச்சுட்டு போகனும்னு ரொம்ப நாளாவே பிளான் பண்ணிட்டு இருக்கேன் . அவள் வரவே மாட்டேன்னு அம்ம்பிடிக்கிறாள் என்றவனிடம் என்ன ஹனிமூன் டிரிப்பா என்ற வெரோனிகா நான் ஒரு யோசனை சொல்லவா அவங்களை உங்க கூட வர வைக்க என்றாள்.
சொல்லுங்க அண்ணி என்ற தேவச்சந்திரனிடம் மாமா பேசாமல் உங்களுக்கு ஒரு மெடிக்கல் கான்பரன்ஸ் இருக்குனு சொல்லுங்க. ஒரு வாரம் போகனும்னு சொல்லுங்க. நிலா கண்டிப்பா ஒரு வாரம் உங்களை பார்க்காமல் இருக்க மாட்டாள். பாப்பாவுக்காக அக்காவும் உங்க கூட வருவாங்க எப்படி என் ஐடியா என்றாள் வெரோனிகா. ஐடியா நல்லா தான் இருக்கு அண்ணி ஆனால் வொர்க் அவுட் ஆகுமா என்றான் தேவ். ட்ரை பண்ணி பாருங்க மாமா முயற்சி திருவினையாக்கும் என்றாள் வெரோனிகா.
அதை நினைத்துப் பார்த்தவன் மீண்டும் ஒருமுறை மனதார தன் அண்ணி வெரோனிகாவிற்கு நன்றியை சொல்லிக் கொண்டு படுத்து விட்டான்.
என்ன அத்தை ஏன் தூங்காமல் இருக்கிங்க என்ற மலர்கொடியிடம் மலர் உன்கிட்ட ஒரு விசயம் கேட்பேன் தப்பா எடுத்துக்க மாட்டியே என்றார் கல்யாணிதேவி. நீங்க சொல்லி நான் எதை அத்தை தப்பா எடுத்துக்கப் போகிறேன் என்றார் மலர்கொடி.
நீயும், நெடுமாறனும் ஏன்மா தேவச்சந்திரனை மன்னிக்கவே மாட்டேங்கிறிங்க. நிலாவை நீ தூக்குற, கொஞ்சுற சரி ஸ்ரீஜா கூடவும் சரி,தேவ் கூடவும் சரி நீ பேசவே மாட்டேங்கிற என்றார் கல்யாணிதேவி.
அவனும் நீ பெத்த உன் மகன் தானேம்மா, தப்பு பண்ணிட்டான் தான் ஆனால் அவன் பண்ணின தப்பால தான் நம்க்கு நம்ம ரோனி கிடைத்திருக்கிறாள். ஸ்ரீஜா கூட கல்யாணம் நடந்திருந்தால் கூட நம்ம உதய் இவ்வளவு சந்தோசமா இருந்திருப்பானான்னு தெரியலை ஆனால் ரோனி கூட அவன் அவ்வளவு சந்தோசமா இருக்கிறான் என்றார் கல்யாணிதேவி.
அத்தை நீங்க சொல்லுறது சரிதான் தேவ் ஸ்ரீஜாவை கல்யாணம் பண்ணிகிட்ட தால தான் ரோனி நம்மளுக்கு கிடைச்சுருக்கா ஆனால் உதய் மனசில் அன்னைக்கு ஏற்பட்ட வலி இல்லைனு ஆகாதே அத்தை.
அவள் அவனை சாதாரணமா ஓடிப் போயி கல்யாணம் பண்ணி இருந்தால் கூட என் மனசு ஆறிருக்கும். ஆனால் அத்தனை பேர் முன்னாடி எனக்கு உன்னைப் பிடிக்கவில்லை உன் தம்பியை பிடிச்சுருக்கு அதனால அவனைத் தான் கல்யாணம் பண்ணிப்பேன்னு சொன்னாளே அப்போ அவனும் அவள் கழுத்தில் தாலி கட்டினானே அப்போ என் உதய் மனசு எவ்வளவு வேதனைப் பட்டிருக்கும் அத்தை. ஒரு பொண்ணு ஆயிரம் பேருக்கு முன்னே அவனைப் பிடிக்கவில்லைனு அசிங்கப் படுத்தும் பொழுது அவன் மனசு துடிச்ச துடிப்பை ஒரு அம்மாவா என்னால உணர முடியும்.
ரோனிக்கும், உதய்க்கும் நடந்த கல்யாணம் ஏன் நம்ம சொந்தக்காரங்களை கூட்டி செய்யவில்லை. ஏன் ரிசப்சன் கூட அவன் வேண்டாம்னு சொன்ன காரணம் ரோனி சின்னப் பொண்ணுங்கிறதால மட்டும் இல்லை இன்னொரு முறை சொந்தக்காரங்க முன்னே எனக்கு கல்யாணம்னு ஒரு கூத்து நடக்க நான் விரும்பலைம்மானு அவன் சொன்னான். என் மகன் எந்த அளவுக்கு வேதனை பட்டிருக்கிறான் அத்தை அதற்கு காரணமானவங்களை மன்னிக்க என்னால முடியலை அத்தை.
உங்களை எதிர்த்து பேசனும்னு நினைக்கவில்லை ஆனால் இந்த விசயத்தில் மட்டும் என்னை கட்டாயம் படுத்தாதிங்க அத்தை ப்ளீஸ் என்றார் மலர்கொடி.
சரி மலர் என்ற கல்யாணிதேவி நேரம் ஆச்சு போயி தூங்கு என்றிட மலர்கொடியும் சென்று விட்டார்.
என்னை என்ன பண்ண சொல்லுற வசுந்தரா உனக்காகத் தான் மலர்கிட்ட பேசிப் பார்த்தேன். அவளோட கோபமும் தப்பில்லையே என்ற கல்யாணிதேவியிடம் தப்பில்லைம்மா என்றார் வசுந்தரா. அண்ணியோட மனசும் ஒருநாள் மாறும் என்றவர் தன்னறைக்கு சென்றார்.
அதிகாலை உறக்கம் கலைந்து எழுந்தான் உதயச்சந்திரன். அவனது மார்பில் தலை வைத்து குழந்தை போல புன்னகை முகத்துடன் உறங்கும் தன் மனைவியைக் கண்டவனின் இதழும் புன்னகைத்தது. அவளது முகத்தில் விழுந்த முடியை ஒதுக்கி விட்டவன் அவளது நெற்றியில் முத்தமிட்டான்.
பச் என்றவள் சிணுங்கியபடி அவனை அணைத்துக் கொண்டு உறங்கிட ரோனி என்றான். என்ன மாமா எனக்கு தூக்கம் வருது ப்ளீஸ் அப்பறமா எழுப்புங்க என்றவள் தூக்கத்திலே சொல்லி விட்டு அவனை அணைத்துக் கொள்ள அவளது முகத்தில் ஊதினான்.
குளிர்ந்த காற்று அவள் முகத்தில் பட அவள் மாமா ப்ளீஸ் என்றவள் அவனது மார்பில் முகத்தைப் புதைத்துக் கொண்டு உறங்க ஆரம்பிக்க அவன் புன்னகைத்து விட்டு அவளது தலையில் தன் முட்டுவாயை வைத்து அழுத்தியபடி அவளை அணைத்துக் கொண்டு உறங்க முயன்றான்.
உறக்கம் வராமல் போக அவளை சீண்ட நினைத்தவன் மெல்ல அவளது இடுப்பில் கிள்ளி விட ஆவ் என்று துள்ளிக் கொண்டு அவள் எழ அவளைப் பார்த்து கண்ணடித்தான் உதயச்சந்திரன். மாமா உங்களை என்றவள் என்ன பண்ணுனிங்க நீங்க இடுப்பைக் கிள்ளுறிங்க என்று அவனை தலையணையால் அடித்திட ஏய் வலிக்குதுடி விடுடி என்றவன் அவளது இரு கையையும் பிடித்து அவளது கன்னத்தில் முத்தமிட அவள் சிலையானாள். இது தான் சமயம் என்று அவன் ஓடிச் சென்றான்.
அவன் சென்ற பிறகு சுதாரித்தவள் பச் இந்த மனுசன் நல்லா நம்ம வீக்னெஸ் தெரிஞ்சு கன்னத்தில் முத்தம் கொடுத்து எஸ்கேப் ஆகிடுறாரு என்று நினைத்தவள் வரட்டும் இன்னைக்கு என்று காத்திருந்தாள்.
…..தொடரும்….