விதியின் முடிச்சு…(58)

3.3
(3)

அவனுக்காக அவள் காத்துக் கொண்டு இருக்க அவன் தான் வந்தபாடில்லை. சரியென்று எழுந்தவள் குளியலறைக்குள் புகுந்து கொண்டாள்.

 

என்ன அண்ணா இந்த நேரத்தில் இங்கே என்ன பண்ணுறிங்க இவ்வளவு சீக்கிரம் எழும்பிட்டிங்களா என்ற ஊர்மிளாவிடம் நான் சீக்கிரம் எழும்புறது இருக்கட்டும் நீ என்ன இவ்வளவு சீக்கிரம் எழும்பிருக்க என்றான் உதயச்சந்திரன்.

 

டெஸ்ட் அண்ணா என்றவளிடம் என்ன டெஸ்ட்டா என்றான் உதய். கோச்சிங் கிளாஸ் போறேன்ல அண்ணா அங்கே டெஸ்ட் என்றவள் பேசாமல் ரோனியையும் என் கூட அனுப்பி வைக்கலாம்ல என்றாள் ஊர்மிளா. ஊர்மி அவளுக்கு லிட்ரேச்சர் படிக்கத் தான் ஆசைன்னு சொல்லிட்டாளே நான் என்ன பண்ணட்டும். அவளுக்கு பிடிச்சதை அவள் படிக்கட்டும். உனக்கு பிடிச்சதை நீ படி அவ்வளவு தான் என்றவன் சரியென்று தன்னறைக்கு செல்ல நினைத்தான்.

 

அந்த நேரம் தேவ் வந்தவன் அவனைப் பார்த்திட கண்டு கொள்ளாமல் சென்றான் உதய். கசந்த புன்னகையுடன் அவனைக் கடந்தவன் ஊர்மிளா என்றிட சொல்லுங்க அண்ணா என்றாள் ஊர்மிளா.

 

நீ கூட ஏன்டா என்கிட்ட பேச மாட்டேங்கிற என்ற தேவச்சந்திரனிடம் ஐயோ , அண்ணா பார்க்கிறிங்க தானே நான் படிப்பு, படிப்புனு எவ்வளவு கஸ்டம் பட்டுட்டு இருக்கிறேன்னு என்றவளின் தலையில் கை வைத்தவன் சரிடா ஸாரி என்றான்.

 

ஸாரி எல்லாம் வேண்டாம் எனக்கு ஐஸ்கிரீம் வேண்டும் என்றாள் ஊர்மிளா. ஈவ்னிங் அண்ணா உனக்கு கட்டாயம் ஐஸ்கிரீம் வாங்கித் தரேன் என்ற தேவ் தன்னறைக்கு சென்று விட்டான்.

 

என்ன ஊர்மி நீ தனியா படிச்சுட்டு இருக்க அத்தை இன்னும் எழும்பலையா சரி இரு நான் உனக்கு காபி எடுத்துட்டு வரேன் என்ற வெரோனிகா கிட்சனுக்கு சென்றாள். ஊர்மி சந்துரு மாமாவை பார்த்தியா என்ற வெரோனிகாவிடம் அண்ணா உங்க ரூம்க்கு தான் வந்தாங்க என்றாள் ஊர்மிளா.

 

ரூமுக்கு வந்தாரா நான் அங்கே இருந்து தானே வருகிறேன் என்று நினைத்தவள் பால் பாக்கெட்டை எடுத்து பால் காய்ச்ச ஆரம்பித்தாள்.

 

ஏன்டி உன்கிட்ட எத்தனை தடவை சொல்லுறது என்று வந்த சுசீலாவிடம் அத்தை பாவம் ஊர்மிளா. படிக்கிற பிள்ளைக்கு பசிக்குமேன்னு ஜஸ்ட் காபி மட்டும் தான் போட வந்தேன். அது கூட உங்களை காணோமேன்னு தான் மற்றபடி நான் சமைக்கிற எண்ணத்தில் எல்லாம் வரவில்லை என்றாள் வெரோனிகா.

 

 

சரிடி உடனே முகத்தை அப்படி வச்சுக்காதே என்றவரிடம் பொழுதோட எப்படி அத்தை என்னால சும்மா இருக்க முடியும். நீங்களும், அத்தையும் தனியா எவ்வளவு வேலை தான் பார்ப்பிங்க நான் கூட, மாட ஒத்தாசைக்கு தானே என்று சிணுங்கியவளிடம் சரிடி நீ கூட , மாட ஒத்தாசை பண்ணு ஆனால் இப்போ வேண்டாம் அர்ச்சனா கல்யாணம் முடியட்டும் என்ற சுசீலா இந்தா காபி உன் புருசனுக்கு கொண்டு போயி கொடு என்றார்.

 

ஊர்மிளாவுக்கு என்றவளிடம் நான் அவளுக்கு கொடுத்துக்கிறேன் என்ற சுசீலா நீ கிளம்பு உதய் எழுந்துட்டான் தானே என்றார்.  ஹும் எழுந்துட்டாரு என்றவள் தன் கணவனுக்கு காபி எடுத்துக் கொண்டு சென்றாள்.

 

மாமா என்றவளிடம் பதில் பேசாமல் மௌனமாக இருக்க எங்கே ஒளிஞ்சுட்டு இருக்கிங்க என்ற வெரோனிகா காபியை ஓரமாக வைத்தவள் அவனைத் தேடிட அவன் திரைச்சீலைக்குள் ஒளிந்து கொண்டிருக்க அவனைக் கண்டு கொண்டவள் அவனது காதைப் பிடித்தாள்.

 

உங்களுக்கு எவ்வளவு சேட்டை இருந்தால் என்னோட வீக்னெஸ் தெரிஞ்சு கரைக்ட்டா அடிக்கிறிங்க உங்களை என்று அவள் அவனது காதைத் திருகிட ரோனிம்மா ப்ளீஸ்டி மாமா பாவம்டி காது உன் கையோட பிய்ஞ்சு வந்துட்டால் உன் மாமாவை எல்லோரும் ஒத்தைக்காதன்னு அசிங்கமா கிண்டல் பண்ணுவாங்க என்றான் உதய்.

 

ஒத்தைக் காதனோ, மொட்டைக் காதனோ உங்களை எப்படி வேண்டுமானாலும் கூப்பிடட்டும் உங்களை இன்னைக்கு சும்மா விடவே மாட்டேன் என்றவளின் இடுப்பில் கிள்ளினான். ஆஆ என்று துள்ளியவள் அவனை விட்டுவிட அவன் அவளது முகத்தை கைகளில் ஏந்தினான்.

 

மாமா என்ன பண்ணப் போறிங்க என்றவள் கண்களில் மிரட்சியுடன் அவனைப் பார்த்திட இல்லை என் பொண்டாட்டி இன்னைக்கு ரொம்ப அழகா இருக்கிறாள். அதுவும் கோவத்தில் சிவக்கிற இந்த மூக்கு இருக்கே என்றவன் தன் மூக்கினால் அவளது மூக்கினை உரசிட மாமா என்றவளது குரல் காற்றில் கலந்தது. அட அட என் பொண்டாட்டிக்கு மூக்கு மட்டும் இல்லை வெட்கம் வந்ததும் கன்னம் எல்லாம் சிவக்கிறதே என்றவன் அவளது முகத்தின் அருகே குனிந்தான்.

 

மாமா ப்ளீஸ் வேண்டாம் என்றவளின் வாயில் விரலை வைத்தவன் என்ன வேண்டாம்னு சொல்லு பார்ப்போம் என்றான். அவள் எச்சில் விழுங்கியபடி அவனையே பார்த்தாள். அவனது கண்களை இமைக்காமல் அவள் பார்த்திட  சட்டென்று அவளது நெற்றியில் முட்டியவன் அவளை விட்டு விலகிட அவனது கையை பிடித்தவள் அவனை இழுத்து அவனது மார்பில் முகம் புதைத்தாள்.

 

 

என்ன ரோனி என்றவனிடம் ஏன் மாமா இப்படி என்னை இம்சை பண்ணுறிங்க என்றவளிடம் என்ன இம்சை பண்ணுறேன்னு நீ சொல்லு என்றான். போடா மாமா என்றவள் அவனை விலகிட என்ன போடா மாமாவா என்னடி வாய் கொழுப்பா என்றவனிடம் பின்னே என்ன காலையிலே இப்படி இம்சை பண்ணுறிங்களே நான் பாவம் இல்லையா என்றாள் வெரோனிகா.

 

உன்கிட்ட விளையாடாமல் நான் யார்கிட்ட ரோனி விளையாடுவேன். நீ தானே சொன்ன நாம எப்போ லவ் பண்ணலாம்னு அதான் உன்னை லவ் பண்ண ஆரம்பிச்சுருக்கேன். நான் லவ் பண்ணுறது உனக்கு இம்சையா இருக்கு என்றவன் திரும்பிட மாமா இம்சை இல்லை எனக்கு பிடிச்சுருக்கு ஆனால் ரொம்ப கூச்சமா இருக்கு அதான் என்றவள் இழுத்திட சரிடி நான் தானே முத்தம் கொடுக்கிறேன் அதற்கு ஏன் நீ ஃப்ரீஸ் ஆகி நிற்கிற என்றான் உதய்.

 

அதான் எனக்கும் தெரியலை மாமா நான் பண்ணுறது ரொம்ப ஓவரா இருக்கோ என்றவளிடம் ஓவர் எல்லாம் இல்லைடி என்றவன் சரி வா காபி குடிக்கலாம் என்றான். ஐயோ , மாமா நான் மறந்தே போயிட்டேன் பாருங்க ஆறிப் போயிருக்கும் நான் வேற எடுத்துட்டு வரட்டுமா என்றாள் ரோனி.

 

வேணாம்டி ஆறிப் போனால் என்ன என் ரோனிப் பாப்பா கொடுக்கும் போது சூடு எதற்கு என்றவன் அந்த காபியை குடித்தான். அவனையே ரசித்துக் கொண்டிருந்தவளிடம் என்னடி அப்படி பார்க்கிற என்றான். என் புருசனை நான் பார்க்கிறேன் உங்களுக்கு என்ன என்றாள் வெரோனிகா.

 

பாருடா உன் புருசனா சந்துரு  மாமாவில் இருந்து, போடா மாமா, அப்பறம் புருசனாமா அப்பறம் என்ன என்றவனது கன்னத்தில் நறுக்கென்று கடித்தவள் இது தான் என்றாள்.

 

ஆஆஆ வெறி நாயி, வெறி நாயி உன்னை என்றவன் அவளை விரட்டி வர அவள் அறையை விட்டு ஓடிவிட்டாள். இன்னைக்கு உன்னை விட்டால் தானடி என்றவன் அவளை விரட்டி வர மாமா ப்ளீஸ் மாமா வேண்டாம் மாமா விட்டுருங்க மாமா என்றவள் ஓடிட உன்னைத் தானே இன்னைக்கு விடவே மாட்டேன் என்றவன் விரட்டி வர எதிரில் ஸ்ரீஜா வந்தாள். அவளைப் பிடித்துக் கொண்டு அவள் சுற்றிட ஏய் என்ன பண்ணுற என்னை விடு என்ற ஸ்ரீஜா வெரோனிகாவின் கையைத் தட்டி விட அவள் கீழே விழப் போனாள்.

 

அண்ணி பார்த்து என்ற பிரகாஷ் அவளைப் பிடித்து விட்டான். பிரகாஷ் மட்டும் பிடிக்காமல் போயிருந்தால் அவள் மாடிப் படியில் இருந்து உருண்டே விழுந்திருப்பாள்.

 

என்ன அண்ணி நீங்க இப்படி தள்ளி விடுறிங்க கொஞ்சம் மிஸ் ஆகி இருந்தாலும் அவங்க கீழே விழுந்திருப்பாங்க என்ற பிரகாஷை சட்டை செய்யாமல் ஸ்ரீஜா சென்று விட அண்ணி உங்க கிட்ட தான் பேசிட்டு இருக்கிறேன் என்றான் பிரகாஷ்.

 

ஓஓ நீங்க என்னைத் தான் அண்ணினு சொன்னிங்களா நான் கூட உங்க அண்ணியை கூப்பிட்டிங்கனு நினைச்சேன் என்றாள் ஸ்ரீஜா. என்ன அண்ணி விளையாடுறிங்களா இப்போ ஏன் ரோனி அண்ணியை தள்ளி விட்டிங்க என்ற பிரகாஷிடம் என்னைத் தொட அவள் யாரு இவள் ஓடிப் பிடிச்சு விளையாட என்னைத் தொடுவாளா என்ற ஸ்ரீஜா இவளும், இவள் புருசனும் கூத்தாடுறதை குடும்பமா நீங்க ரசிக்கலாம் எனக்கு எரிச்சலா இருக்கு. என்கிட்ட பேசவே கூடாதுன்னு இவள் கிட்ட நான் ஏற்கனவே சொல்லி இருக்கேன் அப்படி இருக்கும் பொழுது என்னைத் தொட்டு விளையாடிட்டு இருக்கிறாள் அது தான் அவளைத் தள்ளி விட்டேன் என்றாள்.

 

என்ன அண்ணி ஈஷியா சொல்லுறிங்க நீங்க தள்ளி விட்டதில் அவங்களை நான் பிடிக்கவில்லைனா கீழே விழுந்துருப்பாங்க என்றான் பிரகாஷ். அவள் தான் விழவில்லையே நீ தான் பிடிச்சுட்டியே அப்பறம் என்ன என்னம்மோ உன் பொண்டாட்டி கீழே விழுந்த மாதிரி துடிக்கிற அவளோட புருசனே சும்மா இருக்கும் பொழுது நீ ரொம்ப துடிக்கிற ஒரு வேளை நீயும், உன் அண்ணன் தேவ் மாதிரி தானா அண்ணன் பொண்டாட்டியை என்று ஸ்ரீஜா சொல்ல வர ஐய்யோ அக்கா ப்ளீஸ் போதும் தப்பா பேசாதிங்க என்று கத்தினாள் வெரோனிகா . மாமா ப்ளீஸ் நான் தான் விழவில்லையே நீங்க அவங்க கிட்ட எதுவும் பேசாதிங்க என்றவள் உங்களைத் தொட்டது தப்பு தான் இனிமேல் நீங்க இருக்கிற திசை பக்கம் கூட நான் வர மாட்டேன் என்ற வெரோனிகா அழுது கொண்டே தன்னறைக்கு சென்றாள்.

 

என்னடா நடக்குது இங்கே இந்த எளவுக்கு தான் இந்த தரித்தரங்களை வீட்டுக்குள்ள விடமாட்டேன்னு சொன்னேன். நீ கேட்டியா இப்போ பாரு நாக்கில் விசத்தை வச்சு என் மருமகளை கொத்திட்டு இருக்கிறாள். அவள் குழந்தைடா என்ற மலர்கொடி இன்னும் என்னென்ன கொடுமை எல்லாம் நான் பார்க்கனுமோ என்று நொந்து கொண்ட மலர்கொடி இவள் எல்லாம் சாக்கடை இந்த சாக்கடை கிட்ட பேசுறதே கேவலம் என்று சொல்லி விட்டு சென்றார்.

 

என்ன சொன்னிங்க சாக்கடையா யாரு நானா என்ற ஸ்ரீஜாவிடம் ஆமாம்டி நீ சாக்கடை தான் அண்ணனுக்கு கல்யாணம் பேசி மணவறை வரைக்கும் அமுக்குனி மாதிரி வந்து உட்கார்ந்துட்டு தாலி கட்டப் போகும் போது எனக்கு உன்னை பிடிக்கவில்லை உன் தம்பியை பிடிச்சுருக்குனு சொன்னியே அப்போ நீ சாக்கடை தான். உன்னோட ஒழுங்குக்கு நீ என் மருமகளை தப்பா பேசுற.

 

என் மருமகள் ரோனியும் சரி, என் மகன் பிரகாஷும் சரி தங்கங்கள். அவங்க மனசுல எந்த அழுக்கும் இல்லை பார்க்கிற உன்னோட பார்வை தான் தப்பு ஏன்னா உன் புத்தி சாக்கடை என்ற மலர்கொடி என் ரோனியை பற்றி தப்பா பேசின அப்பவே உன் நாக்கை இழுத்து வச்சு அறுத்திருப்பேன் போனால்

போகுதுனு விடுறேன் போடி என்றார் மலர்கொடி.

 

 

 

….தொடரும்…

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 3.3 / 5. Vote count: 3

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!