அன்று மாலையே வெரோனிகாவை வீட்டிற்கு அழைத்து வந்து விட்டான் உதயச்சந்திரன். மருத்துவமனையில் இருந்து வீடு வரும் வரை அவளிடம் அவன் ஒரு வார்த்தை கூட பேசவில்லை. அவளும் ஏனோ தன்னறையை விட்டு வெளியே வரவே இல்லை. அவளைத் தனியே விட மனம் இல்லாமல் அவனும் எங்கும் செல்லவில்லை.
என்னடி நீ ரெடியாகாமல் இருக்க அவங்க வரும் நேரம் இப்படி இருக்கலாமா என்ற மலர்கொடியிடம் இல்லைம்மா மனசே சரியில்லை. ரோனிக்கு என்ற அர்ச்சனாவிடம் ரோனிக்கு ஒன்றும் இல்லை. அவள் நல்லா தான் இருக்கிறாள். நீ கண்டதையும் யோசிக்காதே உன் அண்ணன் அவள் கூடவே தான் இருக்கிறான். அவள் சின்னப் பொண்ணு அதனால் சில விசயங்களை தாங்கிக்க முடியலை அவ்வளவு தான் என்றார் மலர்கொடி.
நீ ரெடியாகு என்றவர் சுசீலா அவளை பார்த்துக்கோ நான் ரோனி என்ன பண்ணிட்டு இருக்கிறாள்னு பார்த்து விட்டு வரேன் என்று சென்றார் மலர்கொடி.
சித்தி பிரகாஷ் அண்ணா எங்கே என்ற அர்ச்சனாவிடம் இந்து கூட பேசிட்டு இருக்கிறான். இன்னைக்கு நாள் எவ்வளவு சந்தோசமா எல்லோரும் இருக்க வேண்டியது அவள் ஒருத்தியோட விஷ நாக்கு பண்ணின வேலை மொத்த குடும்பமும் துக்க வீடு மாதிரி இருக்கிறோம். உதய் ஏன் தான் அவளையும், தேவ்வையும் வீட்டுக்கு வரச் சொன்னானோ என்றார் சுசீலா.
ஏன் சுசி இப்படி சொல்லுற என்ற வசுந்தராவிடம் வேற எப்படி அண்ணி சொல்ல சொல்லுறிங்க உங்க மகள் பேசின பேச்சுக்கு அவளை நாலு அப்பு அப்பாமல் அவள் போயி தூக்கில் தொங்கிருக்காள். நான் மட்டும் அந்த நேரம் அங்கே போகாமல் இருந்திருந்தால் ஐயோ, என்னால நினைச்சு கூட பார்க்க முடியலை. ரோனியோட அப்பா, அம்மாவுக்கு என்ன பதில் சொல்ல முடியும் நம்மளால என்றார் சுசீலா.
சுசீ என்ற வசுந்தராவிடம் விடுங்க அண்ணி எதுவும் பேச வேண்டாம் என் மனசு ஆறாமல் எதாச்சும் சொல்லிட்டேனா எல்லோருக்கும் கஷ்டம் என்றார் சுசீலா.
என்னப்பா தூங்குறாளா என்ற மலர்கொடியிடம் ஆமாம் அம்மா என்றான் உதய். சரி உதய் நீ ஏதாச்சும் சாப்பிடு என்ற மலர்கொடியிடம் தூங்கிட்டு இருக்கிறாள்னு நம்பி தானம்மா காலையில் ரூம் விட்டு வந்தேன். திரும்பி வருவதற்குள் என்ன பண்ணினாள்னு பார்த்திங்க தானே அதனால தான் சொல்கிறேன். அவள் எழும்பட்டும் நான் அப்பறமா சாப்பிடுறேன் என்றவன் அவளை பார்த்தபடி இருந்தான்.
அவளை நான் பார்த்துக் கொள்கிறேன் உதய் என்ற மலர்கொடியிடம் பரவாயில்லை அம்மா என்றான் உதயச்சந்திரன்.
மலர் என்று நெடுமாறன் அழைத்திட கீழே சென்றார் மலர்கொடி. மாமா என்று மெல்லமாக அழைத்த வெரோனிகாவைப் பார்த்தான் உதய். என்கிட்ட பேச மாட்டிங்களா மாமா என்றவளை முறைத்தவன் எழுந்து பால்கணிக்கு செல்ல அவன் பின்னே அவளும் எழுந்து சென்றாள்.
மாமா என்றவளிடம் என்னடி ஏன் இப்போ மட்டும் மாமானு வருகிறாய். நீ சாக நினைக்கும் பொழுது உன் மாமா உன் ஞாபகத்திற்கு வரவில்லையா என்றவனிடம் மாமா என்னோட இடத்தில் இருந்து என்றவளின் கன்னத்தில் ஓங்கி அறைந்தவன் பிச்சுருவேன் ஒரு வார்தரை பேசாதே என்றான்.
அவள் சொன்னான்னு தற்கொலை பண்ணிக்க முயற்சி பண்ணுறியே ஒருவேளை நீ செத்துப் போயிருந்தால் உனக்கும், பிரகாஷ்க்கும் கள்ளக்காதல் இருந்துச்சு. அந்த உண்மையை அவள் சொன்னதால தான் நீ செத்துப் போயிட்டனு வாய் கூசாமல் சொல்லுவாள் அப்போ நானும், பிரகாஷும் கூட சாகனும் என்றவனிடம் ஏன் மாமா இப்படி பேசுறிங்க என்றாள் வெரோனிகா.
வேற எப்படி ரோனி பேச சொல்லுற எவ்வளவு தைரியம் இருந்தால் சாக துணிஞ்சுருப்ப நீ என்னோட உயிர்டி நீ செத்துப் போனால் நான் வெறும் பிணம்டி என்னை விட்டுட்டு சாக உனக்கு எப்படி மனசு வந்துச்சு ரோனி. மாமா , மாமான்னு என்னை சுற்றி வந்தது எல்லாமே பொய்யா என்றவனிடம் இல்லை மாமா, அவங்க சொன்னதும் என்னால தாங்கிக்க முடியவில்லை என்றவளின் கன்னத்தில் மீண்டும் அறைந்தவன் இந்த மாதிரி அவளை அறைஞ்சுருந்தினா நீ தைரியசாலி. அதை விட்டுட்டு கோழை மாதிரி தற்கொலை பண்ணிக்க பார்த்திருக்க.
யார்டி அவள் அவள் சொன்னான்னு சாகத் துணிஞ்சியே என்னைப் பற்றி யோசிச்சியா, நீ செத்துப் போயிட்டால் என்னோட நிலைமை என்னனு யோசிச்சியா. உன் மேல உயிரையே வச்சுருக்கேன்டி கண்ட நாயி சொல்லுதுன்னு சாகப் போறாளாம் சாக.
இன்னும் உனக்கு சாகனும்னு ஐடியா இருந்தால் சொல்லு நானே விசம் வாங்கித் தரேன் குடிச்சுட்டு செத்துரு உன்னை நினைச்சு, நினைச்சு பைத்தியம் பிடிச்சு நானும் செத்துப் போயிடுறேன் என்றவனின் வாயில் விரலை வைத்தவள் மாமா அப்படி எல்லாம் சொல்லாதிங்க மாமா நீங்க வாழனும் மாமா என்றாள்.
நீ இல்லாமல் நான் வாழ்ந்து என்னடி சாதிக்கப் போறேன். ரோனி உனக்கு ஒரு விசயம் திரும்ப, திரும்ப சொல்கிறேன். நீ தான் என்னோட உயிர், உலகம், வாழ்க்கை. நீ இல்லாமல் போனால் சத்தியமா சொல்கிறேன் நான் செத்துருவேன். தயவுசெய்து புரிஞ்சுக்கோ அடுத்தவங்க சொல்லுற எதையும் உன் மண்டையில் ஏத்திக்காதே குறிப்பா அந்த பைத்தியம் ஸ்ரீஜா சொல்லுற எதையும் உன் மண்டையில் ஏத்திக்காதே என்றான் உதயச்சந்திரன்.
என்னைப் பற்றி விடு பிரகாஷ் பற்றி யோசிச்சியா நீ பண்ணின இந்த காரியத்தால ரொம்ப உடைஞ்சு போனது அவன் தான் அது உனக்கு தெரியுமா. உனக்கு யாரைப் பற்றியும் கவலையே இல்லை உன்னை ஒரு வார்த்தை தப்பா சொன்ன அந்த ஸ்ரீஜா பற்றி மட்டும் தான் கவலை. அதான் சாக துணிஞ்சுட்ட என்றவனிடம் இல்லை மாமா என்று அவள் ஏதோ கூற வர நீ ஒன்றும் பேச வேண்டாம். நீ ரெஸ்ட் எடு இன்னைக்கு அர்ச்சனாவை பொண்ணு பார்க்க வராங்க உன் கிட்ட தான் ஏற்கனவே சொன்னேனே இப்போ இந்த நிலைமையில் நீ கீழே வந்தால் நம்ம வீட்டில் நடந்த பிரச்சனை அவங்களுக்கும் தெரிய வேண்டி வந்துரும். உனக்கு உடம்பு சரியில்லைனு அம்மா சொல்லிக்குவாங்க என்றவன் அமைதியாக அமர்ந்திட மாமா நீங்க கீழே போங்க நான் இருந்துக்கிறேன் என்றாள் வெரோனிகா.
நான் கீழே போகவா ஏன் நீ மறுபடியும் தூக்கில் தொங்கனுமா என்றவனிடம் என் சந்துரு மாமா மேல சத்தியம் இனி எந்த ஒரு சூழ்நிலையிலும் தற்கொலை பண்ணிக்கிற எண்ணம் என் மனசுல வராது என்றாள் வெரோனிகா. நம்பலாமா என்றவனிடம் என் சந்துரு மாமா மேல பண்ணின சத்தியம் அதை என் உயிரே போனாலும் மீற மாட்டேன் என்றவளை அணைத்துக் கொண்டவன் மீறினால் என்னோட உயிரும் போயிரும்டி என்றான்.
அவனது கண்ணீர் அவள் கன்னத்தில் விழ அவனது கண்களைத் துடைத்தவள் என்னை மன்னிச்சுருங்க மாமா அவங்க பேசின வார்த்தை மட்டும் தான் என் காதில் திரும்ப, திரும்ப கேட்டுட்டே இருந்துச்சு அதனால தான் நான் தப்பு பண்ணிட்டேன் இனிமேல் நான் இந்த மாதிரி ஒரு முட்டாள்தனத்தை எப்பவுமே பண்ணவே மாட்டேன் என்றவளது கண்களைத் துடைத்தவன் சொல்லாதே செயலில் காட்டு அப்போ தான் உன்னை நம்புவேன் என்றான்.
சரிங்க மாமா நீங்க கீழே போங்க என்றவள் எனக்கும் வர ஆசை தான் ஆனால் பரவாயில்லை என்றிட சரி ரோனி நீ ரெஸ்ட் எடு என்றவன் சென்றிட அவள் அமைதியாக ஊஞ்சலில் அமர்ந்து கொண்டாள்.
என்னப்பா நீ வந்துட்ட ரோனி என்ற மலர்கொடியிடம் என் ரோனி இனி தப்பான முடிவு எடுக்க மாட்டாள் அம்மா என்றவன் தெருநாய் எப்பவும் குரைக்க தான் செய்யும், அதற்கெல்லாம் நாம ரியாக்ட் பண்ண ஆரம்பித்தால் அந்த நாய் தன்னை சிங்கம்னு நினைச்சுக்கும் அதனால இனி எதற்கும் ரியாக்ட் செய்யாதேன்னு சொல்லி இருக்கேன். அவளும் புரிந்து கொண்டாள் என்றான் உதயச்சந்திரன்.
அவனை முறைத்தபடி சென்று விட்ட ஸ்ரீஜா கோபமாக தன்னறையில் அமர்ந்திருக்க உனக்கு இதெல்லாம் தேவை தான்டி என்று நினைத்த தேவ் எதுவும் பேசாமல் தன் குழந்தையுடன் விளையாட ஆரம்பித்தான்.
என்னடா உனக்கு என்ன ஆச்சு என்ற உதயச்சந்திரனிடம் ஒன்றும் இல்லை அண்ணா என்றான் பிரகாஷ் . உனக்கு தனியா சொல்லனுமா ரோனிக்கு சொன்னது தான் தெருநாயை எல்லாம் சிங்கம் அளவுக்கு நினைக்க வைக்காதே என்றிட சரிங்க அண்ணா என்றான் பிரகாஷ்.
ரோனி என்ற கல்யாணிதேவியிடம் சொல்லுங்க ஆச்சி என்றாள் வெரோனிகா. இப்போ எப்படி இருக்கிறாய் ரோனி என்றிட பரவாயில்லை ஆச்சி என்றவளின் கையைப் பிடித்தவர் ஏன்டி இப்படி ஒரு காரியம் பண்ணின அவள் சொன்னது தப்பு தான் நான் மறுக்கவில்லை. அவள் சொன்ன வார்த்தைக்கு அவளோட கன்னத்தில் பளார்னு ஒரு அறை விட்டிருந்த அப்படினா சந்தோசப் பட்டு இருப்பேன். நீ என்னடான்னா தூக்கு போட்டுக்கிட்டு நீ இந்த வீட்டுக்கு வாழ வந்த மகாலட்சுமிடி உன்னை சாக விட்டால் அதுவும் தற்கொலை பண்ணி சாக விட்டால் அந்தப் பாவம் ஏழேழு தலைமுறைக்கும் என் குடும்பத்தை சும்மா விடாதுடி என்ற கல்யாணிதேவி இனிமேல் மறந்தும் இப்படி ஒரு காரியத்தை செய்ய மாட்டேன்னு எனக்கு சத்தியம் பண்ணிக் கொடுடி என்றார் கல்யாணிதேவி.
இல்லை ஆச்சி இனிமேல் இப்படி பண்ண மாட்டேன் என்ற வெரோனிகாவைக் கட்டிக் கொண்டவர் சரி ரோனி நீ இரு சம்மந்தி வீட்டுக்காரங்க வரும் நேரத்தில் கழுத்தில் காயத்தோட நீ இருந்தால் தப்பா நினைச்சுப்பாங்க அதனால என்றவர் தயங்கிட அவரது கையைக் கெட்டியாக பிடித்தவள் இனிமேல் என் உயிரே போனாலும் தற்கொலை பண்ணிக்க முயற்சி பண்ணமாட்டேன் என்றாள். நம்புகிறேன் ரோனி என்றவர் சரி நான் கீழே போறேன் என்று சொல்லி விட்டு கிளம்பினார்.
சுசீ எல்லாம் ரெடி தானே என்ற மலர்கொடியிடம் அக்கா எல்லாம் ரெடி காபி போட்டு வச்சுட்டேன். பலகாரம் சுட்டு வச்சுட்டேன் என்றார் சுசீலா. சரி சுசீ அர்ச்சனா ரெடியா என்றிட அவளும் ரெடி அக்கா என்றார் சுசீலா.
என்ன அர்ச்சனா ஏன் டல்லா இருக்க என்ற இந்திரஜாவிடம் ரோனிக்கு இப்படி இருக்கும் பொழுது என்னால எப்படி சந்தோசமா இருக்க முடியும் என்றாள் அர்ச்சனா. அவளுக்கு ஒன்றும் இல்லை அர்ச்சு இன்னைக்கு இல்லைனா என்ன உன்னோட நிச்சயதார்த்தத்திற்கு அவள் தான் அத்தனை வேலையும் பார்க்கப் போகிறாள் அதனால கவலைப் படாதே என்றாள் இந்திரஜா.
…..தொடரும்…
Very good https://rb.gy/4gq2o4
Awesome https://rb.gy/4gq2o4