இல்லை ரோனி அவங்களை அடிக்க கூட வேண்டாம் ஏன் இப்படி பேசுனனு ஒரு வார்த்தையாச்சும் அண்ணன் கேட்டிருக்கனும் ரோனி எனக்கு மனசே ஆற மாட்டேங்குது என்ற ஊர்மிளாவிடம் அப்படி இல்லை ஊர்மி. அவங்களோட நோக்கமே சந்துரு மாமா அவங்க மேல கோபம் படனும் அதற்காக தான் என்னை காயப் படுத்துனாங்க. விடு ஊர்மி இதெல்லாம் உன்னோட மைண்ட்ல ஏற்றிக் கொள்ளாதே என்னைப் போலவே அவங்களும் உன்னுடைய அண்ணி அதனால நீ அவங்க மேல கோபத்தை வளர்த்துக்காதே என்றாள் வெரோனிகா.
சரி ஊர்மிளா அர்ஜுன், நிகிலா, கிஷோர், விஷால் எல்லாம் எப்படி இருக்காங்க. இப்போ எல்லாம் என்கிட்ட பேசுறதே இல்லை. ரொம்ப பிஸி போல என்றாள் வெரோனிகா. நாங்க எல்லாம் பிஸி இல்லை நீ தான் ரொம்ப பிஸி உன்னைத் தான் குரூப்ல ஆக்டிவாவே இல்லை எப்போ பாரு உன்னோட சந்துரு மாமா பின்னாடியே சுத்திட்டு இருக்க என்னை கூட கண்டுக்கவில்லை என்று பொய்க் கோபம் கொண்டாள் ஊர்மிளா. அச்சோ ஊர்மி அப்படிலாம் இல்லை லைட்டா கொஞ்சம் அப்படித்தான் என்று சிரித்தாள் வெரோனிகா.
சிரிக்கும் பொழுது எவ்வளவு அழகா இருக்க இப்படியே சிரிச்சுட்டே இரு ரோனி எனக்கு இது தான் பிடிச்சுருக்கு என்ற ஊர்மிளாவைக் கட்டிக் கொண்டாள் வெரோனிகா.
மலர் மாப்பிள்ளை வீட்டுக்காரங்க வந்துட்டாங்க என்று நெடுமாறன் கூறிட இதோ வந்துட்டேனுங்க என்று மலரும், சுசியும் வந்தனர். அவர்களுடனே வசுந்தராவும் வந்து அவர்களை வரவேற்றனர்.
தனசேகரன், தனலெட்சுமி, விவேக், லாவண்யா, லாவண்யாவின் கணவன் கௌதம் , லாவண்யாவின் இரண்டு வயது மகள் ரோஷினி அனைவரும் வந்தனர். உதயநிலாவைக் கண்டதும் ரோஷினி அவளுடன் சென்று விளையாட ஆரம்பிக்க தனலெட்சுமி இந்தக் குழந்தை யார் கியூட்டா இருக்கிறாளே என்றார். வசுந்தராவோ என்னுடைய பேத்தி என்றவர் ஸ்ரீஜா என்றழைக்க ஸ்ரீஜா வந்தாள். என் பொண்ணு என் அண்ணன் மகனுக்குத் தான் கல்யாணம் பண்ணி கொடுத்திருக்கிறேன் என்றவர் தேவ் எங்கம்மா என்றார்.
அவர் என்று ஏதோ கூற வர லாவண்யாவோ அதோ வராரே என்று உதயச்சந்திரனைக் கை காட்டினாள். என்னங்க நீங்க உங்க மனைவி பக்கத்தில் நிற்காமல் அங்கே நிற்கிறிங்க என்ற லாவண்யாவிடம் என்னோட மனைவியா அவள் எங்கே இங்கே என்றான் உதய். ஸ்ரீஜாவைக் காட்டி இவங்க தானே உங்க மனைவி அதோ கல்யாணபோட்டோ சுவற்றில் இருக்கே என்று லாவண்யா கை காட்டிட அங்கே தேவ், ஸ்ரீஜா மணக்கோலத்தில் இருக்கும் புகைப்படம் இருந்தது.
அது நான் கிடையாது என்னோட ட்வின் ப்ரதர் தேவச்சந்திரன். இவங்க என் தம்பி மனைவி என்னுடைய மனைவி வெரோனிகாஉதயச்சந்திரன் அவளுக்கு உடம்பு சரியில்லை அதான் மாடியில் ரெஸ்ட் எடுத்துட்டு இருக்கிறாள் என்றான் உதய்.
ஐயோ, சாரிங்க என்ற லாவண்யாவிடம் இல்லைங்க பரவாயில்லை என்ற உதயச்சந்திரன் தன் சித்தப்பா இளமாறனின் அருகில் அமர்ந்தான். பிரகாஷும் வந்து உதய் அருகே அமர்ந்தான். இது என் சின்ன பையன். தம்பி இளமாறனோட மகன் பிரகாஷ் என்று நெடுமாறன் அறிமுகப் படுத்தி வைத்தார். இந்து அர்ச்சனாவை அழைச்சுட்டு வா என்று சுசீலா கூறிட இந்திரஜா அர்ச்சனாவை அழைத்து வந்தாள்.
அர்ச்சனாவைப் பார்த்த தனலெட்சுமி போட்டோவை விட நேரில் ரொம்ப அழகா இருக்கிறம்மா என்றவர் அவளை தன்னருகில் அமர வைத்தார். லாவண்யாவும் அர்ச்சனாவிடம் நன்றாகவே பேசிக் கொண்டு இருந்தாள். விவேக் முகம் பார்த்திடவே அர்ச்சனா வெட்கம் பட்டுக் கொண்டிருந்தாள். முதல் முறையாக அவளை புடவையில் பார்த்த விவேக் அசந்தே விட்டான்.
பெரியவர்கள் பேசி நிச்சயதார்த்த தேதியை குறித்த பிறகு விவேக் வீட்டினர் கிளம்பிச் சென்றனர்.
என்ன அர்ச்சனா சந்தோசம் தானே என்ற இளமாறனிடம் போங்க சித்தப்பா என்று வெட்கம் கொண்ட மங்கை அவள் ஓடிச் சென்றாள்.
என்ன பண்ணிட்டு இருக்க ரோனி என்று வந்தவனிடம் ஒன்றும் இல்லை என்றவள் தன் கையில் வைத்திருந்த பொருள் ஒன்றை மறைத்து வைத்தாள். அவனும் அதை கவனியாது சரி சாப்பிட எதாச்சும் எடுத்துட்டு வரட்டுமா என்றவனிடம் எனக்கு எதுவும் வேண்டாம் மாமா என்றவள் அவன் மடியில் படுத்துக் கொள்ள என்னாச்சுமா என்றான் உதயச்சந்திரன்.
ரொம்ப , ரொம்ப ஸாரி மாமா என்றவளின் தலை கோதியவன் என் மேல தான் ரோனி முழு தப்பும் ஸ்ரீஜாவுடைய குணம் தெரிந்திருந்தும் அவளையும், தேவச்சந்திரனையும் நான் இங்கே தங்க சொல்லி இருந்திருக்க கூடாது. அவள் பேசும் போது நான் என்றவனின் வாயில் விரலை வைத்தவள் மாமா ப்ளீஸ் இனிமேல் அவங்களை பற்றி நாம எந்த பேச்சும் பேச வேண்டாம். இனிமேல் அவங்க இருக்கிற திசைப் பக்கம் கூட நான் திரும்பவே மாட்டேன் அதனால அவங்களை பற்றி நாம எப்பவுமே பேச வேண்டாம் என்ற வெரோனிகாவின் நெற்றியில் முத்தமிட்டவன் சரிம்மா என்றான்.
உங்க ஊருக்கு போயிட்டு வரலாமா அங்கே ஏதோ திருவிழான்னு மாமா வரச் சொன்னாங்களே என்றவனிடம் இல்லை மாமா இந்த காயம் ஆறட்டும் என்றவள் தன் கழுத்தினைக் காட்டிட உன்னோட முட்டாள் தனத்தை பற்றி அத்தை கிட்ட சொல்லனும் என்றவனை பாவமாக பார்த்தவள் அப்பறம் ஒரு கட்டு விளக்கமாறும் என்னை அடிச்சே பிஞ்சுறும். மீ பாவம் சின்னப் பிள்ளை என்று சிணுங்கியவளிடம் நீ பாவமா கூட நாலு கட்டு விளக்கமாறு கூட வாங்கித் தர நான் ரெடியாகத் தான் இருக்கிறேன். நீ பண்ணின வேலைக்கு அத்தைகிட்ட சொல்லி உனக்கு விளக்கமாத்து பூசை வாங்கி கொடுக்கனும் அப்போ தான் எனக்கு மனசு ஆறும் என்றான் உதய்.
மாமா நீங்க ஏன் என்னை புரிஞ்சுக்க மாட்டேங்கிறிங்க என்ற வெரோனிகாவிடம் நீ அவள் உன்னை தப்பா பேசினதுக்கு அவளை கொன்னுருக்கனும், நீ இப்படி சாக துணிஞ்சுட்டியே அதான்டி எனக்கு மனசே ஆற மாட்டேங்குது. நீ எதையுமே யோசிக்காமல் முட்டாள்தனமா முடிவு எடுக்கும் பொழுது எனக்கு ரொம்ப ஹர்ட்டிங்கா இருக்கு ரோனி உன் கூட லைப்லாங் பேசவே கூடாதுன்னு நினைச்சுட்டு இருந்தேன் என்றான் உதய்.
ஏன் மாமா இப்படி எல்லாம் சொல்லுறிங்க என்கிட்ட நீங்க பேசாமல் இருந்திருவிங்களா என்றவளிடம் அதான் முடியலையே இந்த குட்டிப் பிசாசு என்ன மாய மந்திரம் பண்ணினாளோ அவளை விட்டு என்னால இருக்கவே முடியாது போல என்று புலம்பினான் உதய். அவளது தலை கோதி விட்ட அவனது விரல்களை தன் கைக்குள் வைத்துக் கொண்டவள் என் சந்துரு மாமாவோட கையை அவரோட குட்டிப் பிசாசும் எப்பவுமே விடவே மாட்டாள் என்றாள்.
சரி எதாச்சும் சாப்பிடுறியா என்றவனிடம் சாப்பாடு சாப்பிட்டால் தொண்டை வலிக்கும் என்றவளை முறைத்தவன் இரு சித்திகிட்ட சொல்லி ஜூஸ் போட்டு தர சொல்கிறேன் என்றவன் எழுந்து செல்ல நானும் கீழே வரேனே அதான் மாப்பிள்ளை வீட்டுக் காரங்க கிளம்பிட்டாங்களே என்ற வெரோனிகாவிடம் சரி ரோனி வா என்று அவளை அழைத்துச் சென்றான் உதய்.
என்ன ரோனி இப்போ எப்படி இருக்கிற என்ற சுசீலாவிடம் நல்லா இருக்கேன் அத்தை என்றாள் வெரோனிகா. சரி என்ன சாப்பிடுற என்றவர் மறந்துட்டேன் பாரு டாக்டர் உனக்கு ஒரு இரண்டு நாட்களுக்கு லிக்யுட் புட் தானே கொடுக்க சொன்னாங்க என்றவர் அவளிடம் பழச்சாறு கோப்பையை கொடுத்திட அதை வாங்கி குடிக்க ஆரம்பித்தாள்.
ஸ்ரீஜா வந்தவள் அம்மா என்றிட என்னடி என்று வந்தார் வசுந்தரா. நிலாவுக்கு சாப்பாடு ஊட்டி தூங்க வைங்க எனக்கு கொஞ்சம் தலைவலிக்குது ஹாஸ்பிடல் போயிட்டு வரேன் என்றவளிடம் தேவ் எங்கே என்றார் வசுந்தரா. அவன் எங்கேயோ போனான் எங்கேனு எல்லாம் தெரியாது என்றவள் கிளம்பிச் சென்றிட கவலையுடன் தன் பேத்தியை தூக்கி உணவினை ஊட்ட ஆரம்பித்தார் வசுந்தரா.
நிலாவை ஏன் ரோனி நீ் தூக்கவே இல்லை என்ற உதயச்சந்திரனிடம் எனக்கு நிலா மேல் எந்த கோபமும் இல்லை மாமா எங்கே நான் குழந்தையைத் தொட்டால் மறுபடியும் அவங்க வந்து பிரச்சனை பண்ணுவாங்க எதற்கு திரும்ப ஒரு வம்பு. ஸ்ரீஜா சம்பந்தப்பட்ட எந்த விசயத்திலும் நான் இனிமேல் தலையிடக் கூடாதுன்னு முடிவு பண்ணிட்டேன்.
அவங்க கிட்ட பேசினால், அவங்க சம்மந்தப் பட்டவங்க கிட்ட நெருங்கினால் தானே என்னை காயப் படுத்த நினைப்பாங்க அதனால தான் என்றவள் அமைதியாக எழுந்து சென்றாள்.
அவள் சொல்றது சரி தானே உதய் அவள் இப்படி ஸ்ரீஜாவை விட்டு தள்ளி இருக்கிறது தான் அவளுக்கு நல்லது விடு என்ற சுசீலா உதயச்சந்திரனுக்கு உணவினை பரிமாறினார்.
தேவ் என்னடா இது புதுப் பழக்கம் நான் குடிச்சாலே திட்டுவ என்ற தினேஷிடம் என்னால முடியலை தினேஷ். வாழ்க்கையே வெறுத்துப் போச்சு அப்பா, அம்மா பேச மாட்டேங்கிறாங்க, கூடப் பிறந்ந அண்ணன், தம்பி, தங்கச்சிங்க பேச மாட்டேங்கிறாங்க, எல்லாத்தையும் விட கட்டுன பொண்டாட்டி அவள் கொடுக்கிற கஷ்டம் இருக்கே மனசே வெறுத்துப் போச்சுடா. அவள் பாவம் தான் நான் பண்ணின தப்பால தான் அவள் ஆசைப்பட்ட வாழ்க்கை அவளுக்கு இல்லாமல் போச்சு அதற்காக அவள் என்னை இன்னும் எத்தனை காலத்துக்குத் தான் வார்த்தையாலே வதைப்பளோ என்று கண்ணீர் சிந்தியவன் போதை தலைக்கேறும் அளவிற்கு குடித்து விட்டு சென்றான்.
கண்மண் தெரியாமல் குடித்தவனால் சரியாக காரை ஓட்ட முடியாமல் ஏனோ, தானோவென்று ஓட்டிச் சென்றவன் எதிரே வந்த கண்டெய்னர் லாரி மீது மோதி விட்டான்.
என்ன ஸ்ரீஜா டாக்டர் என்ன சொன்னாங்க என்ற வசுந்தராவிடம் ஸ்ட்ரஸ்னால தான் தலைவலி என்று ஒற்றை வார்த்தையில் பதில் சொன்னவள் தன்னறைக்குள் அடைந்து கொண்டாள்.
என்ன பவி சொல்லுற உதய் சாரா அவருக்கு குடிக்கிற பழக்கம் எல்லாம் இல்லை பவி என்ற வினித்ராவிடம் எனக்கு என்ன அந்த உதயச்சந்திரனை தெரியாதா அவரே தான் வினி பயங்கரமான ஆக்சிடென்ட். சரியான அடி நல்லா குடிச்சுட்டு கார் ஓட்டி கன்ட்டெயனர் லாரில மோதிருக்கான் என்றாள் பவித்ரா. ஐயோ, என்று பதறிய வினித்ரா வேக வேகமாக பவித்ரா வேலை செய்யும் மருத்துவமனைக்கு ஓடி வந்தாள்.
என்ன சொல்லுறிங்க சிஸ்டர் என்ற பிருந்தாவிடம் எஸ் டாக்டர் உங்க ப்ரண்ட் மிஸ்டர் உதயச்சந்திரன் தான் அந்த ஆக்சிடென்ட் கேஸ் என்றாள் பவித்ரா. பிருந்தா எழுந்து வந்தவள் அவசர சிகிச்சைப் பிரிவிற்கு சென்று பார்த்திட அங்கு தேவ் பயங்கர அடியுடன் படுத்துக் கிடக்க ஐயோ, தேவ் நீயாடா என்று பதறிய பிருந்தா உடனடியாக உதயச்சந்திரனுக்கு போன் செய்தாள்.
…..தொடரும்….