என்ன ரோனி தூங்கலையா என்ற உதயச்சந்திரனிடம் பொழுதோட தூங்கிட்டு தானே மாமா இருந்தேன். திரும்பவும் எப்படி தூக்கம் வரும் என்றவளது தலை கோதியவன் சரி அப்போ கொஞ்சம் வாக் போயிட்டு வரலாமா என்றவனிடம் வாக் வேண்டாம் மாமா பைக்ல போயிட்டு வருவோமே என்றாள்.
இந்த நேரத்தில் பைக்ல எங்கேடி போக என்றவனிடம் சும்மா ஒரு ஐஸ்கிரீம் சாப்பிட்டு வரலாமே என்றிட ஐஸ்கிரீம் சாப்பிடனுமா சரி வா என்றவன் அவளை அழைத்துச் சென்றான்.
என்ன அத்தை ஏன் வாசலிலே நிற்கிறிங்க என்ற உதயச்சந்திரனிடம் தேவ் இன்னும் வீட்டிற்கு வரவில்லை உதய். ஸ்ரீஜா வேற தலைவலிக்குதுனு சொல்லி படுத்துட்டாள். நிலா அப்பா, அப்பானு அழறாள். தேவ் போனும் சுவிட்ச் ஆஃப்னு வருது அதான் கொஞ்சம் பயமா இருக்கு. ஹாஸ்பிடலுக்கு போன் பண்ணி கேட்டதுக்கு அங்கேயும் அவன் போகவில்லையாம் எனக்கு என்னம்மோ மனசு கிடந்து அடிச்சுக்குது உதய் என்ற வசுந்தராவிடம் அத்தை தேவ் என்ன சின்னக் குழந்தையா வந்துருவான் விடுங்க . நீங்க போயி தூங்குங்க மாத்திரை சாப்பிட்டிங்களா என்றான் உதய்.
அதெல்லாம் சாப்பிட்டேன் உதய் என்றவரிடம் நீங்க தூங்குங்க அத்தை தேவ் கட்டாயம் வந்துருவான் என்ற உதய் தன் மனைவியுடன் பைக்கில் கிளம்பினான்.
தேவ் மாமா எங்கே போயிருப்பாருன்னு உங்களுக்கு ஏதும் ஐடியா இருக்கா மாமா என்றாள் வெரோனிகா. தெரியலை ரோனி அவன் என்ன குழந்தையா அவனே வீட்டுக்கு வந்து விடுவான் அத்தை தான் பயப்படுறாங்க என்றவன் நிதானமாகவே வண்டியை ஓட்டினான்.
மாமா உங்க போன் அடிக்குது பாருங்க என்றவளிடம் கொடு என்று போனை வாங்கியவன் பைக்கை நிறுத்தி விட்டு போனை அட்டன் செய்தான். சொல்லு பிருந்தா என்ன விசயம் என்றவனிடம் உதய் நம்ம தேவ்க்கு ஆக்சிடென்ட் ஆகிருச்சுப்பா எங்க ஹாஸ்பிடலில் தான் அட்மிட் ஆகிருக்கான் என்றாள் பிருந்தா.
என்னது தேவ்க்கு ஆக்சிடென்ட்டா என்ன சொல்லுற பிருந்தா என்று பதறினான் உதய். என்ன மாமா சொல்லுறிங்க என்ற வெரோனிகாவிடம் பொறு ரோனி என்றவன் பிருந்தா என்ன நடந்துச்சு அவன் எப்படி என்றவனிடம் டிரிங்க்ஸ் பண்ணிருக்கான். நிதானமே இல்லாமல் என்று நடந்ததை கூறிய பிருந்தாவிடம் உடனே வரேன் என்று விட்டு போனை வைத்தான். என்னாச்சு மாமா என்றவளிடம் தேவ்க்கு ஆக்சிடென்ட் ரோனி நீ பைக்ல உட்காரு என்றவன் அவள் அமர்ந்தவுடன் வேகமாக அந்த மருத்துவமனைக்கு விரைந்தான்.
என்ன பவி எங்கே இருக்கிறார் என்ற வினித்ராவிடம் நீ ஏன்டி வந்த என்றாள் பவித்ரா. என்னடி நீ உதய் சாருக்கு ஆக்சிடென்ட்னு நீ சொன்ன பிறகு என்னால எப்படிடி நிம்மதியா வீட்டில் இருக்க முடியும். அவர் என்னை பிடிக்கவில்லைனு சொல்லிட்டாரு தான் அதற்காக அவருக்கு என்ன ஆனாலும் பார்த்துட்டு இருக்க முடியுமா சொல்லு அவர் நல்ல மனுசன்டி என்ற வினித்ரா அழுது கொண்டிருக்க ரிலாக்ஸ் வினி என்ற பவித்ரா அவளை அமர வைத்தாள்.
அந்த நேரம் உதய், ரோனி இருவரும் மருத்துவமனைக்குள் வருவதைக் கண்ட வினித்ரா அதிர்ந்து நின்றாள். உதய் சார் நீங்க அப்போ ஆக்சிடென்ட் என்று அவள் கூற வர உதய் வந்துட்டியா என்று பிருந்தா வரவும் அவன் சென்று விட வெரோனிகா வினித்ராவின் அருகில் சென்றாள்.
வினித்ரா மேடம் நீங்க எங்கே இங்கே என்றவளிடம் உதய் சாருக்கு ஆக்சிடென்ட் ஆச்சுனு என் ப்ர்ண்ட் போன் பண்ணினாள் வெரோனிகா அவள் இந்த ஹாஸ்பிடல் நர்ஸ் என்றாள் வினித்ரா.
மேடம் சந்துரு மாமாவுக்கு ஒன்றும் இல்லை ஆக்சிடென்ட் ஆனது எங்க தேவ் மாமாவுக்கு உதய் மாமாவோட ட்வின் ப்ரதர் என்ற வெரோனிகா ரொம்ப தாங்க்ஸ் மேடம் எங்க மாமாவுக்கு ஆக்சிடென்ட்னு சொன்னதும் பதறி வந்ததுக்கு என்றாள்.
இருக்கட்டும் வெரோனிகா என்ற வினித்ராவிடம் மேடம் மாமா வராங்க என்ற வெரோனிகா உதய் அருகில் சென்றாள். என்னாச்சு மாமா என்றவளிடம் பொறுக்கி கண்மண் தெரியாமல் குடிச்சுருக்கான். என்ன ஜென்மம் இவன் என்று தம்பியை வசை பாடியவன் ரோனி நான் அப்பாவுக்கு போன் பண்ணி சொல்லிட்டு வரேன் நீ இங்கேயே இரு என்றான் உதய்.
நெடுமாறனின் மொபைல் போன் ஒலித்திட அதைப் பார்த்தவர் என்ன மலர் உதய் போன் பண்ணிட்டு இருக்கிறான். வீட்டில் தானே இருந்தான் என்றிட இல்லைங்க அவனும், ரோனியும் வெளியே போனாங்க என்றார் மலர்கொடி.
சரியென்று போனை அட்டன் செய்த நெடுமாறன் சொல்லு உதய் என்றார். அப்பா நம்ம தேவ்க்கு ஆக்சிடென்ட் ஆகிருச்சு கொஞ்சம் வீட்டில் எல்லோருக்கும் சொல்லுங்கப்பா என்ற உதய் போனை வைத்தான்.
மலர் தேவ்க்கு ஆக்சிடென்ட் ஆகிருச்சாம் என்று நெடுமாறன் கூறிட என்ன தான் கோபம் இருந்தாலும் பெற்ற தாயாச்சே என்னங்க சொல்லுறிங்க எப்படி ஆச்சு என்று பதறினார் மலர்கொடி. மலர் அழாதே இரு என்றவர் வீட்டில் அனைவரையும் எழுப்பி தேவ்க்கு விபத்து ஏற்பட்டதை சொன்னதும் மொத்த குடும்பமும் பதறி அடித்துக் கொண்டு மருத்துவமனைக்கு சென்றனர்.
ஸ்ரீஜா என்ன ரியாக்ட் செய்வதென்றே தெரியாமல் கற்சிலையாக அமர்ந்து விட்டாள். தேவ் உனக்கு ஆக்சிடென்ட் அதுவும் குடிச்சுட்டு கார் ஓட்டினியா என்னால நம்பவே முடியலையே உனக்கு குடிப்பழக்கம் கூட இருக்கிறதா என்று நொந்து கொண்டவளின் மனமோ உன்னால் தானடி அவன் இன்று இப்படி அடிபட்டு கிடக்கிறான் என்றது. அவளோ நான் என்ன தப்பு செய்தேன் என்ற மனசாட்சியை கேட்டிட ஓஓ நீ செய்த தப்பு என்னனு உனக்கு இன்னும் புரியலையா அவனை தினம், தினம் என்னன்னவோ சொன்ன அதை எல்லாம் தாங்கிகிட்டான். இன்னைக்கு என்ன சொன்ன அவனையும், அந்த வெரோனிகாவையும் சேர்த்து வச்சு பேசுனியே அது தான்டி அவனை இவ்வளவு தூரம் குடிக்க வச்சுருக்கு என்று திட்டிய மனசாட்சியிடம் என்ன பதில் சொல்வதென்று தெரியாமல் தவித்தாள் ஸ்ரீஜா.
வினி நாம கிளம்பலாம் என்ற பவித்ராவிடம் ஒரு நிமிசம் இருடி என்ற வினித்ரா வெரோனிகாவை உற்று நோக்கினாள். அவளது கழுத்தில் இருந்த தாலிச்செயினையும், காலில் இருந்த மெட்டியையும் பார்த்தவள் அவளருகில் வந்தாள்.
வெரோனிகா என்ற வினித்ராவிடம் என்ன மேடம் என்றாள் வெரோனிகா. அந்த நேரம் அவளை இந்திரஜா அழைத்திட ஒரு நிமிசம் மேடம் என்றவள் என்னக்கா என்றாள்.
ஊர்மிளாவிடம் சென்ற வினித்ரா ஊர்மிளா என்றிட சொல்லுங்க மேடம் என்றாள் ஊர்மிளா. வெரோனிகா ஏன் காலில் மெட்டி போட்டிருக்கிறாள் என்றிட அவளுக்கு தான் கல்யாணம் ஆகிருச்சே மேடம் அவள் தான் என் உதய் அண்ணாவோட வொய்ப் என்றாள் ஊர்மிளா.
இப்போ உன் சந்தேகம் தீர்ந்து விட்டதா இப்பவாச்சும் வாடி இன்னும் இங்கே எதற்கு இருக்கிறாய் என்று அவளை இழுத்துச் சென்றாள் பவித்ரா. இல்லைடி என்னால ஏத்துக்க முடியவில்லை என்ற வினித்ராவிடம் லூசு மாதிரி பேசாமல் வா என்று அவளை இழுத்துச் சென்றாள் பவித்ரா.
இவ்வளவு பேர் ஹாஸ்பிடலில் இருக்க முடியாது அப்பா அதனால நீங்க எல்லோரும் வீட்டுக்கு போங்க நானும், சித்தப்பாவும் இங்கே இருக்கிறோம் என்றான் உதய். இல்லை உதய் நாங்க இருக்கிறோம் அவன் கண்ணு முழிக்கட்டும் என்று அழுத மலர்கொடியின் கைகளை கெட்டியாக பிடித்துக் கொண்ட சுசீலா அக்கா அவனுக்கு ஒன்றும் ஆகாது அக்கா கவலைப் படாதிங்க நம்ம தேவ் எழுந்துருவான் என்றார்.
எப்படி சுசி கவலைப் படாமல் இருக்க முடியும் என் வயிற்றில் அவனை சுமந்தவளாச்சே நான் என் மகன் மேல எனக்கு கோபம் தான். அவன் செத்துட்டான்னு தலை முழுகினேன் தான் ஆனால் அவன் பிழைப்பானா, மாட்டானான்னு இருக்கிற ஒரு சூழ்நிலை வரணும்னு என் கனவுல கூட நினைச்சதில்லை சுசி என்று அழுதார் மலர்கொடி.
அத்தை அழாதிங்க தேவ் மாமாவுக்கு ஒன்றும் இல்லை அவர் பிழைச்சுப்பாரு என்று வெரோனிகா தன் மாமியாரை சமாதானம் செய்திட உன்னால தான்டி அவன் சாக கிடக்கிறான் என்றாள் ஸ்ரீஜா.
என்னாலையா நான் என்ன பண்ணினேன் என்ற வெரோனிகாவிடம் அண்ணி , நொண்ணினு உனக்கு சப்போர்ட் பண்ணி என் கூட சண்டை போட்டு போனான்டி ஆனால் இப்படி ஆக்சிடென்ட் ஆகி படுத்துருப்பான்னு நான் நினைச்சு கூட பார்க்கவில்லை என்ற ஸ்ரீஜா நீ யாருடி முதலில் உன்னால தான் இன்னைக்கு தேவ் இப்படி ஆக்சிடென்ட் ஆகி கிடக்கிறான் என்றாள் ஸ்ரீஜா.
வசுந்தரா அவளை வாயை மூடச் சொல்லு பண்ணுற தப்பை எல்லாம் அவள் பண்ணிட்டு அப்பாவியான ரோனி மேல பழியை தூக்கி போடுகிறாள். என் மகன் அங்கே உயிருக்கு போராடிட்டு இருக்கிறான் அந்தக் கவலை அவள் மனசுல கொஞ்சமும் இல்லாமல் வெரோனிகா மேல எப்படி வன்மத்தை கொட்டலாம்னு சுத்திட்டு இருக்கிறாள் என்றார் மலர்கொடி.
அதானே அவளை ஒரு வார்த்தை சொல்ல விட மாட்டிங்களே மொத்தக் குடும்பமும் வரிஞ்சு கட்டிட்டு வந்துருவிங்க என்ற ஸ்ரீஜாவின் கன்னத்தில் ஓங்கி அறைந்தார் நெடுஞ்செழியன்.
அப்பா என்று கன்னத்தை பிடித்தவளிடம் நீ எல்லாம் மனிதப் பிறவி தானா உள்ளே உன் புருசன் உயிருக்கு போராடிட்டு இருக்கிறான். அவன் பிழைப்பானா, மாட்டானான்னு மொத்த குடும்பமும் தவிச்சுட்டு இருக்கோம் இப்போ உனக்கு அந்தப் பொண்ணு கூட சண்டை போடனுமா அங்கே பாரு உன் குழந்தையை அப்பனை பார்க்காமல் தூங்க மாட்டேன்னு அழுதுட்டு இருக்கு அவனை உனக்கு பிடிக்கிறது, பிடிக்கவில்லை அது பிரச்சனை இல்லை. அவன் உயிருக்கு போராடிட்டு இருக்கிறான் இப்போ கூட அவனைப் பற்றி கவலைப் படாமல் எப்படி அடுத்தவங்களை காயப் படுத்தலாம்னு யோசிக்கிறாயே நீ எல்லாம் மனுச ஜென்மம் தானா என்றார் நெடுஞ்செழியன்.
அப்பா அவள் மனுச தன்மையை கொன்னுட்டு மிருகமா வாழ்ந்துட்டு இருக்கிறாள். அவள் கிட்ட என்ன பேச்சு உங்களுக்கு விடுங்க என்ற இந்திரஜா தன் தந்தையை அமைதி படுத்த என்னால முடியவில்லை இந்து. அங்கே நம்ம தேவ் என்றவர் மருமகனை நினைத்து அழ ஆரம்பித்தார்.
கல்யாணிதேவி தான் இடிந்து போய் அமர்ந்திருந்தார். சாக வேண்டிய வயசுல நான் குத்துக் கல்லாட்டம் இருக்கிறேன் என் பேரனை இப்படி கஷ்டப் படுத்துறியே ஆண்டவா அந்தப் பிஞ்சுக் குழந்தையை பாருங்க அப்பா, அப்பானு அவள் தன் அப்பனை தேடி இழைகிறாள். அவளுக்காகவாச்சும் அவனை காப்பாத்தி கொடுங்க என்று இறைவனை கை கூப்பி வேண்டிக் கொண்டிருந்தார்.
என்ன பிருந்தா அவன் என்ற உதயச்சந்திரனிடம் பயப்படாதே உதய் இப்போதைக்கு எதுவும் சொல்ல முடியாது தான் ஆனால் தப்பா எதுவும் நடக்காதுன்னு நம்புவோம். டிரீட்மென்ட் போயிட்டு இருக்கு டாக்டர்ஸ் போராடிட்டு தான்
இருக்காங்க , பார்க்கலாம் என்றாள் பிருந்தா.
…..தொடரும்….
Awesome https://rb.gy/4gq2o4