ரோனி என்றவரிடம் சொல்லுங்க ஆச்சி என்றாள் வெரோனிகா. உனக்கு ஸ்ரீஜாவை பிடிக்குமா என்ற கல்யாணிதேவியிடம் ஏன் இந்த கேள்வி ஆச்சி இது என்னோட வீடு. என்னோட குடும்பம். இங்கே இருக்கிற எல்லோருமே என்னோட உறவு. அவங்க எல்லோரையுமே எனக்கு ரொம்ப பிடிக்கும். ஆச்சி சண்டை இல்லாத குடும்பம் ஏதாவது இருக்குமா சொல்லுங்க எங்க வீட்டில் அம்மாவுக்கும், பெரியம்மாவுக்கும் சண்டை வராத நாளே கிடையாது. ஆனாலும் என் அம்மா பெரியம்மாவையும், பெரியம்மா அம்மாவையும் எங்கேயும் விட்டுக் கொடுக்க மாட்டாங்க. எங்க அம்மாவை பெரியம்மாவுக்காக அப்பா மாமா வீட்டோட பேச விட மாட்டாரு அந்த சமயம் கூட அம்மா பெரியம்மாவை அடுத்தவங்க கிட்ட விட்டுக் கொடுத்து பேச மாட்டாங்க. என் கல்யாணம் முடிஞ்சு ஒரு தடவை என் அம்மா வீட்டுக்கு போனப்ப அம்மா என்கிட்ட சொல்லி இருக்காங்க குடும்பம்னா ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு விதமா இருப்பாங்க எல்லோரையும் அனுசரிச்சு வாழனும். அது தான் வாழ்க்கை.
மாமியார், நாத்தனார் மட்டும் தான் ஒரு வீட்டில் தொல்லையா இருப்பாங்கனு சொல்ல முடியாது நம்ம வீட்டில் உன் பெரியம்மா அது போல நாளைக்கு பிரகாஷ்க்கு கல்யாணம் ஆகி ஒரு புது மருமகள் உங்க வீட்டுக்கு வருவாள். அவள் கூட உனக்கு ஒத்துப் போகலைனா கூட அவளை எந்த சூழ்நிலையிலும் வெறுத்து விடக் கூடாது. நீ அந்த வீட்டோட மூத்த மருமகள். எல்லோரையும் அனுசரிச்சு குடும்பத்தோட ஒற்றுமை கெட்டுப் போகாமல் பார்த்துக்கனும் . அந்த குடும்பம் தான் உனக்கு ஒரு நல்ல கணவனை கொடுத்திருக்கு. ஒரு மனிதன் நல்லவனா இருக்கிறான் என்றால் அதற்கு முக்கிய காரணம் அவனோட வளர்ப்பு தான். உன் கணவனை நல்ல மனிதனா வளர்த்திருக்கிறது உன்னோட குடும்பம் தான். அதனால அவங்களை பத்திரமா பார்த்துக் கொள்ள வேண்டியது உன்னோட கடமைனு என்கிட்ட சொன்னாங்க ஆச்சி.
இனிமேல் ஸ்ரீஜா அக்கா கூட நான் பேச மாட்டேன். அவங்களுக்கு என்ன காரணமோ என்னை பிடிக்கவில்லை. நான் நிலா கூட பழகுறதோ, தேவ் மாமா கூட பேசுறதோ அவங்களுக்கு பிடிக்கவில்லை அதனால தான் நேற்று மதியம் நான் நிலா பாப்பா கூட விளையாடவில்லை. அதற்காக நிலா பாப்பா மேல எனக்கு பாசம் இல்லைன்னு ஆகிடாது. அவள் என்னோட குழந்தை தான் என்ற வெரோனிகாவின் கன்னத்தில் கை வைத்த கல்யாணிதேவி நீ ரொம்ப பொறுப்பான பொண்ணு ரோனி. என் வாழ்க்கையில் நான் பண்ணின மிகப் பெரிய நல்ல விசயம் உன்னை என் உதய்க்கு கல்யாணம் பண்ணி வச்சது தான் என்றார். அவரைப் பார்த்து புன்னகைத்தவள் சரி ஆச்சி தூங்குங்க எனக்கும் தூக்கம் வருது நானும் போயி தூங்குகிறேன் என்றாள் வெரோனிகா.
என்ன மாமா நீங்க தூங்காமல் என்ன பண்ணிட்டு இருக்கிங்க என்ற வெரோனிகாவிடம் ஒன்றும் இல்லை அண்ணி தூக்கம் வரவில்லை என்ற பிரகாஷ் சென்று விட நில்லுங்க மாமா என்றாள் வெரோனிகா.
என்ன அண்ணி எதுவும் வேண்டுமா என்றவனை ஆழமாக பார்த்தவள் ஏன் மாமா இரண்டு நாளா என்கிட்ட பேசவே மாட்டேங்கிறிங்க. நீங்க என்னோட பழைய பிரகாஷ் மாமா போலவே இல்லையே என்றவளை முறைத்தவன் நீங்க மட்டும் என்னோட பழைய ரோனி அண்ணியா சொல்லுங்க என்றான்.
மாமா என்றவளிடம் பேசாதிங்க அண்ணி என்றவன் கோபமாக திரும்பிட என்னாச்சு மாமா என்றாள் வெரோனிகா. நீங்க ஏன் அண்ணி தற்கொலை பண்ணிக்க முயற்சி பண்ணுனிங்க. ஒருவேளை அன்னைக்கு உங்களுக்கு ஏதாவது ஆகி இருந்தால் சத்தியமா குற்றவுணர்ச்சியிலே செத்துருப்பேன் அண்ணி. நீங்கள் எனக்கு யாருன்னு எனக்கும் தெரியும், உங்களுக்கும் தெரியும், அண்ணனுக்கும் தெரியும் ,ஏன் நம்ம மொத்த குடும்பத்திற்கும் தெரியும் அந்த ஸ்ரீஜா அண்ணி வேண்டும் என்றே உங்களை காயப் படுத்தனும்னு தான் கீழ்த்தரமா பேசினாங்க. அது புரிஞ்சும் நீங்க தற்கொலை முயற்சி பண்ணி இருக்கிங்க அப்போ நீங்க அவங்க கிட்ட என்ன நிருபிக்க முயற்சி பண்ணுனிங்க.
வாய் கூசாமல் சொல்லுவாங்க அவங்க சொன்னது தான் உண்மை அதனால் அவமானம் தாங்க முடியாமல் தற்கொலை பண்ணிகிட்டிங்கனு அந்த அசிங்கம் நமக்கு தேவையா யோசிச்சிங்களா. அண்ணி சத்தியமா எனக்கு அர்ச்சனா, ஊர்மிளா எப்படியோ; அப்படித் தான் நீங்களும். உங்களுக்கும் உங்க சக்தி அண்ணா, சரவணா அண்ணன் போல தான் நானும்னு நமக்கு தெரியும். நாம அதை யாருக்கும் நிரூபிக்கனும்னு நம்ம உயிரைக் கொடுக்க வேண்டிய அவசியம் கிடையாது.
நீங்க பண்ணினது பெரிய தப்பு அண்ணி அண்ணனை பற்றி கொஞ்சமாவது யோசிச்சிங்களா நீங்க உங்களைப் பற்றி மட்டும் தான் யோசிச்சிங்க அதனால தான் தூக்கு போட்டிங்க. என் அண்ணன் ஒவ்வொரு நிமிசமும் உங்களைப் பற்றி மட்டும் தான் யோசிச்சுட்டு இருக்கிறார். நீங்கள் இல்லாமல் போனால் அவர் என்ன ஆவார்னு கொஞ்சமாவது யோசிச்சிங்களா சொல்லுங்க என்ற பிரகாஷிடம் தப்பு தான் மாமா , அன்னைக்கு நிலைமைக்கு எனக்கு என்ன பண்ணுறதுன்னு சுத்தமா தெரியலை அதான் என்றவள் நான் என்னோட சந்துரு மாமாவுக்கு ஒரு சத்தியம் பண்ணிக் கொடுத்திருக்கிறேன் இனிமேல் எந்த சூழ்நிலையிலும் தற்கொலை பண்ணிக்க நினைக்க மாட்டேன்னு இப்போ உங்க கிட்டையும் சத்தியம் பண்ணுறேன் பிரகாஷ் மாமா என்றாள்.
நீங்க சத்தியம் எல்லாம் செய்ய வேண்டாம் அண்ணி நீங்களும், அண்ணனும் சந்தோசமா இருந்தாலே எனக்கும் சந்தோசம் என்றவனை புன்னகையுடன் பார்த்தவள் நிச்சயமா மாமா என்றாள். அப்பறம் பிரகாஷ் மாமா நீங்களும் என் கிட்ட பேசாமல் இருக்க கூடாது. நீங்க சொன்னது தான் எனக்கு இந்த வீட்டில் கிடைச்சுருக்கிற அண்ணன் தான் நீங்க என்ன தான் உறவு முறையில் கொளுந்தனா இருந்தாலும் உங்களை என் அண்ணனா தான் பார்க்கிறேன் இனிமேல் என்னைப் பார்த்துட்டு பார்க்காதது போல எல்லாம் போக கூடாது அப்பறம் உங்க தலையிலே நங்கு நங்குனு கொட்டிப்புருவேன் என்றவளிடம் சரிங்க அண்ணி என்றான் பிரகாஷ். குட்நைட் பிரகாஷ் மாமா என்றவள் தன்னறைக்கு சென்றாள். அவனும் அவளிடம் குட்நைட் சொல்லி விட்டு சென்று விட்டான்.
அதிகாலை எழுந்தவள் குளித்து முடித்து உடை மாற்றி தன் கணவனின் வருகைக்காக காத்திருந்தாள்.
மருத்துவர் சொன்ன நேரத்திற்கு முன்னமே தேவ் கண் விழித்து விட்டான். அவனுக்கு எந்த பிரச்சனையும் இல்லை. என்ன ஒன்று எழுந்து நடக்க குறைந்தது மூன்று மாதங்களாவது ஆகும் என்று மருத்துவர் கூறி விட்டார். மலர்கொடி மகனை கண்ணும், கருத்துமாய் பார்த்துக் கொண்டார். ஸ்ரீஜாவும் அவனை கவனமாக பார்த்துக் கொண்டாள்.
ஒன்றரை மாதம் மருத்துவமனையிலே வைத்து பார்த்துக் கொண்டனர். அவன் ஓரளவு எழுந்து நடக்க ஆரம்பித்த பிறகே வீட்டிற்கு அழைத்து வந்தனர். இருந்தும் வாக்கிங் ஸ்டிக் உதவியுடன் தான் நடக்க ஆரம்பித்தான்.
என்ன ரோனி ஏன் இவ்வளவு டென்சனா இருக்க என்ற உதயச்சந்திரனிடம் மாமா என்னுடைய ப்ளஸ்டூ ரிசல்ட் இன்னைக்கு அதான் ஒரே பயமா இருக்கு என்றவளிடம் அதெல்லாம் நீ பாஸ் பண்ணிருவ ரோனி என்றான் உதய். ஐயோ, சந்துரு மாமா நான் பாஸ் பண்ணிருவேன் தான் ஆனால் மார்க் கம்மியாகிட்டால் என்றவளது கன்னத்தில் கை வைத்தவன் அதெல்லாம் நீ ஆவரேஜ் மார்க் தான் எடுப்ப பயப்பட வேண்டாம் என்றான் உதய்.
என்ன தங்கச்சி அம்மா உனக்கு சாப்பாடு போடவில்லையா நகத்தையே டிபன் போல சாப்பிடுகிறாய் என்ற பிரகாஷை முறைத்த ஊர்மிளா மீண்டும் நகத்தை கடிக்க ஆரம்பித்தாள். பிரகாஷ் சும்மா இருங்க மேடம் டென்சனா இருக்காங்களாம் என்ற இந்திரஜாவிடம் ஓஓ டென்சனா இருக்கிறதால தான் என் தங்கச்சி் நகத்தை பிரேக்பாஸ்ட்டா சாப்பிடுகிறாளோ என்றவனைப் பார்த்து சிரித்தாள் இந்திரஜா. நீ இருக்கியே பிரகாஷ் இன்னைக்கு அவளோட ரிசல்ட் அதான் அவள் டென்சனா இருக்கிறாள் என்றாள் இந்திரஜா.
அண்ணிக்கும் இன்னைக்கு தானே ரிசல்ட் அங்கே பாரு அண்ணி எவ்வளவு ஹாப்பியா சுத்திட்டு இருக்காங்கனு என்ற பிரகாஷிடம் அவள் லிட்ரேச்சர் தானே படிக்கப் போறேன்னு சொன்னாள். அதான் மார்க் கம்மியானாலும் கவலை இல்லைனு சுத்திட்டு இருக்கிறாள். நான் இஞ்சினியரிங் படிக்கனும் அண்ணா என்றாள் ஊர்மிளா. நீ ஏன் பதற்றமாவே இருக்க ஊர்மி ரிலாக்ஸா இரு அதெல்லாம் நல்ல மார்க் எடுத்துருவ என்றான் பிரகாஷ்.
எங்கே மாமா கிளம்பலாம்னு சொல்லுறிங்க இன்னும் அரைமணி நேரத்தில் ரிசல்ட் அதை பார்க்க வேண்டாமா என்ற வெரோனிகாவிடம் இன்னும் நான்கு நாட்களில் நம்மளுடைய பர்ஸ்ட் வெட்டிங் அனிவர்சரி வருது அதை மறந்துட்டியா ரோனி அதற்காக தான் ஷாப்பிங் போறோம் என்றவனிடம் அட ஆமாம் நான் மறந்தே போயிட்டேன் ஸாரி மாமா என்றாள்.
மறந்துட்டியா என்றவனிடம் ஆமாம் மாமா என்றிட அவளது காதை திருகியவன் எப்படி நீ அதை மறக்கலாம் இந்த அனிவர்சரிக்கு நான் எவ்வளவோ ப்ளான் பண்ணி வச்சுருக்கிறேன் என்றவன் நாக்கைக் கடித்தான்.
மாமா என்ன பிளான் சொல்லுங்க மாமா என்று அவள் நச்சரித்திட அதெல்லாம் சஸ்பென்ஸ் கிளம்பு என்று அவளை ஷாப்பிங் அழைத்துச் சென்றான்.
அவளுக்காக பார்த்து , பார்த்து புடவையை செலக்ட் செய்தான். என்ன ரோனி இன்னும் என்ன ரிசல்ட் ஞாபகம் தானா நீ நல்லா தானடி எழுதினேன்னு சொன்ன அப்பறமும் என்ன என்றான் உதய்.
எனக்காக டென்சனா இல்லை மாமா ஊர்மிக்காக தான். அவளை விட நான் மார்க் அதிகமா வாங்கி விடக் கூடாது அதான் என்ற வெரோனிகா ஊர்மிளா என்னை விட அதிகமா கஷ்டப் பட்டு படித்தாள். ஒருவேளை அவளை விட நான் அதிகம் மார்க் எடுத்தால் அவள் சந்தோசப் படுவாள். ஆனால் தனக்கு ஏன் மார்க் குறைஞ்சதுன்னு ரொம்ப கவலைப் படுவாள் அதான் என்றிட மக்கு இதற்கா கவலை இரு இதோ ரிசல்ட் வந்திருச்சு என்றவன் தனது மொபைலில் இருவருடைய ரிசல்ட்டையுமே பார்த்தான்.
என்ன ஊர்மி இப்படி இருக்க எக்ஸாம் ஒழுங்கா தானே எழுதின என்ற பிரகாஷும் தன் தங்பையின் எக்ஸாம் ரிசல்ட்டை தன்னுடைய மொபைலில் பார்த்துக் கொண்டிருந்தான்.
ஏய் ஊர்மி சூப்பர் என்றவன் அவளது மார்க் லிஸ்ட்டை காட்டிட அவள் எடுத்த மார்க் அவளுக்கு திருப்தியைக் கொடுத்தது. அண்ணா ரோனிக்கும் பாரு என்று ஊர்மிளா கூறிட அவளுடைய ரிசல்ட்டை பார்த்த பிரகாஷ் சோகமாக ஊர்மிளாவைப் பார்த்தான். என்னாச்சு அண்ணா என்ற ஊர்மிளா அவனது போனை வாங்கிப் பார்த்திட அவளும் அதிர்ந்து போனாள். எப்படி அண்ணா அவள் ….
……தொடரும்….