என்னங்க என்று அவனை எழுப்பிய வெரோனிகாவிடம் என்ன என்று எழுந்தவன் அவளது நெற்றியில் கை வைத்திட அவள் ஒரு நிமிடம் விலகி விட்டாள். அவனது கை அவள் நெற்றியில் பட்டதும் ஒரு மாதிரி இருக்கவும் அவள் விலகி விட்டாள்.
அவனோ அதை கண்டு கொள்ளாமல் அவள் கையைப் பிடித்து தன் புறம் இழுத்து நிற்க வைத்து அவளது நெற்றியில் கை வைத்துப் பார்த்தான்.
பரவாயில்லை காய்ச்சல் இல்லை என்றவன் மணியைப் பார்த்து விட்டு இந்நேரத்திற்கு எதற்கு எழுப்பின என்றான். இல்லை நீங்க இங்கே ஷோபாவில் கஷ்டப்பட்டு படுத்துறிக்கிங்க உங்களுக்கு உடம்பு வலிக்கப் போகுது.
இப்போ எனக்கு உடம்பு பரவாயில்லை அதனால நான் இங்கே படுத்துக்கிறேன் நீங்க போயி மெத்தையில் படுங்க என்றாள் வெரோனிகா.
லூசாடி நீ உனக்கு உடம்பு சரியில்லைனு தானே பெட்ல தூங்க சொன்னேன். ஒரு நாள் ஷோபாவில் படுக்கிறதால எனக்கு ஒன்றும் ஆகாது. அப்படியே எதுவும் ஆனாலும் அது என்னுடைய பிரச்சனை என்றான் கோபமாக.
இப்போ எதற்கு இவ்வளவு கோபம் படுறிங்க என்றவளிடம் இதோ பாரு வெரோனிகா உனக்கு என்ன தான் வேண்டும். நடுராத்திரியில் எழுப்பி ஏன்டி இப்படி உயிரை வாங்குற போ போயி படுத்து தூங்கு என்ற உதயச்சந்திரன் படுத்துக் கொள்ள அவனை முறைத்து விட்டு சென்று அவளும் படுத்தாள்.
பாவம்னு மெத்தையில் போயி படுக்கச் சொன்னால் இப்போ தான் பெரிய இவருனு மனசுல நினைப்பு உனக்கு இது தேவையா ரோனி என்று தன்னைத் தானே திட்டிக் கொண்டு சென்று படுத்துக் கொண்டாள்.
இருந்தாலும் அவளுக்கு தூக்கம் வரவே இல்லை. அவளுக்கு எப்பொழுதும் பாதி உறக்கத்தில் எழுந்தாளே பிறகு உறக்கம் வராது. அதனால் என்ன செய்வது என்று புரியாமல் புரண்டு படுத்தவளின் கண்களில் பட்டது ஊர்மிளாவின் நோட்புக்ஸ். சரி இதையாவது எழுதுவோம் என்று நினைத்தவள் டேபிளிற்கு சென்று அமர்ந்தாள்.
டேபிளில் இருந்த விளக்கின் வெளிச்சத்திலே அமர்ந்து எழுத ஆரம்பித்தாள். ஒருவழியாக ஒரு பாடம் முழுக்க எழுதி முடித்தவள் அப்படியே டேபிளின் மீதே படுத்து உறங்கிக் கொண்டிருந்தாள்.
காலை ஆறு மணி போல் கண்விழித்தான் உதயச்சந்திரன். எழுந்தவன் கண்டதோ டேபிள் மீது தலை வைத்து உறங்கிக் கொண்டிருந்த மனைவி அவளைத் தான்.
இவளை என்ன பண்ணுறது நான் சொல்வதை செய்யவே மாட்டாள் போல பெட்ல படுத்து தூங்குனு சொன்னால் டேபிளில் படுத்து தூங்கிட்டு இருக்காளே என்று தலையில் அடித்துக் கொண்டு எழுந்து அவளருகில் சென்று பார்த்தான்.
அவள் இயற்பியல் நோட்ஸ் முழுவதும் எழுதி முடித்து விட்டு தூங்கிக் கொண்டிருக்க அவன் முகத்தில் லேசான புன்னகை அரும்பிட அவள் படுத்திருந்த நோட்புக்கை எடுத்து ஓரமாக வைத்தவன் மெல்ல அவளைத் தூக்கிச் சென்று மெத்தையில் படுக்க வைத்து விட்டு குளியலறைக்குள் புகுந்து கொண்டான்.
என்ன சுசீ சீக்கிரமே எழுந்திட்டியா என்ற மலர்கொடியிடம் ஆமாம் அக்கா அந்தப் பிள்ளைக்கு உடம்பு சரியில்லையே அது எனக்கு தூக்கமே இல்லை அதான் என்ற சுசீலா மலர்கொடியிடம் டீயை கொடுத்து விட்டு உதய், ரோனி இருவருக்கும் டீ எடுத்துச் சென்றார்.
சுசீ நீ கொடுமா நான் கொண்டு போகிறேன் என்றிட பரவாயில்லை அக்கா என்ற சுசீலா தானே கொண்டு சென்றார்.
அறைக் கதவைத் திறந்து கொண்டு வெளியில் வந்த உதயச்சந்திரனிடம் டீயை கொடுத்தார் சுசீலா. தாங்க்ஸ் சித்தி என்றவனிடம் ரோனி எழும்பலையா உதய் என்றார் சுசீலா.
அவள் தூங்கிட்டு இருக்கிறாள் சித்தி என்றவனிடம் காய்ச்சல் இன்னும் சரியாகவில்லையா என்றார் சுசீலா. அதெல்லாம் சரியாகிருச்சு சித்தி அவள் கொஞ்ச நேரம் தூங்கட்டும் என்றவன் கீழே சென்றான்.
என்ன உதய் நேற்று ரோனியை திட்டினாயாமே ஏன் என்றார் நெடுமாறன். அவன் அமைதியாக சிரித்து விட்டு அப்பா தப்பா எடுத்துக்காதிங்க அவளை திட்ட எனக்கு உரிமை இல்லையா. அப்படி உரிமை இல்லைனு நீங்க சொன்னிங்கனா இதைப் பற்றி மேலே பேசலாம் என்றான் உதயச்சந்திரன்.
உதய் அவரு உன்னோட அப்பா. அவரையே என்னோட விசயத்தில் தலையிடாதிங்கனு சொல்லாமல் சொல்கிறாயா என்றார் மலர்கொடி.
அம்மா அப்பாவை மட்டும் இல்லை, இந்த வீட்டில் உள்ள எல்லோருக்கும் தான் சொல்கிறேன் வெரோனிகா என்னுடைய மனைவி அவளை நான் திட்டுறதுக்கும், பாராட்டுவதற்கும் யாருக்கும் காரணம் சொல்ல வேண்டிய அவசியம் இல்லைனு நான் நினைக்கிறேன் என்றான் உதயச்சந்திரன்.
என்னங்க இவன் இப்படி பேசிட்டு போகிறான் என்ற மலர்கொடியிடம் விடு மலர் எல்லாம் நல்லதுக்கு தான் என்ற நெடுமாறன் அந்தப் பொண்ணுகிட்ட அவனுக்கு எல்லா உரிமையும் இருக்குனு சொன்னால் என்ன அர்த்தம் அவன் மனசிலும் வெரோனிகா மேல ஒரு பிடிமானம் வந்திருக்குனு தானே அர்த்தம்.
அவன் பொண்டாட்டியை அவன் திட்டுறான். அது அவங்க புருசன், பொண்டாட்டி பிரச்சனை நாம தலையிடக் கூடாது என்ற நெடுமாறன் சுசி டீ நல்லா இருக்குமா என்றார்.
என்னதான் நடக்குது இங்கே என்ற கல்யாணிதேவியிடம் நேற்று இரவு வெரோனிகாவிற்கு காய்ச்சல் வந்தது பற்றி கூறினார் சுசீலா. இப்போ அவள் எப்படி இருக்கிறாள் சுசீ என்ற கல்யாணிதேவியிடம் அவள் நல்லா இருக்கிறாள்னு உதய் சொன்னான் அத்தை.
அவள் தூங்கிட்டு இருக்கிறாளாம் என்ற சுசீலா சென்று சமையல் வேலையை கவனிக்க ஆரம்பித்தார்.
உறக்கம் கலைந்து மெல்ல கண் விழித்த வெரோனிகா அதிர்ந்து போனாள். நான் எப்படி பெட்ல வந்து படுத்தேன் என்று நினைத்தவள் எழுந்திட அவளது கணவன் அப்பொழுது தான் அறைக்குள் நுழைந்தான்.
எழுந்துட்டியா குட்மோர்னிங் என்றவன் இனிமேல் எழுதனும்னா நீ ரைட்டிங் டேபிள் மேலே உள்ள LED பல்ப் போட்டுக்கோ. நைட் லேம்ப் வெளிச்சத்தில் எழுதினாள் கண்ணுக்கு தான் பிரச்சனை என்றான்.
சரி போ போயி ரெபிரஷ் ஆகிட்டு டீ குடிச்சுட்டு வந்து எழுது என்றவன் பால்கனிக்கு சென்று விட்டான்.
அவளும் அவன் சொன்னது போலவே குளித்து முடித்து அறையை விட்டு வெளியே சென்றவள் தன் மாமியாரிடம் டீயை வாங்கி குடித்து விட்டு தன்னறைக்கு சென்று விட்டாள்.
அவளது தலை முடியில் ஈரம் சொட்டிக் கொண்டு இருந்திட வெரோனிகா என்று அவன் அழைத்திட அவள் பதறி அடித்துக் கொண்டு எழுந்தாள்.
என்ன இது என்று அவன் கேட்டிட என்னங்க என்று அவள் பயந்து போயி அறையை சுற்றி முற்றி பார்த்தவள் ரூம் நீட்டா தானேங்க இருக்கு. துணி எல்லாம் துவைக்க மிசின்ல போட்டுருக்கேன் என்றிட நான் அதை சொல்லவில்லை என்றான்.
அவளருகில் வந்தவன் தலையை ஒழுங்கா காய வைக்க மாட்டியா பாரு எப்படி தண்ணீர் சொட்டுச் சொட்டா வடியுது என்னான். நேற்று தானே காய்ச்சல் வந்து உடம்பு சரியில்லாமல் போனது உன்னை யாரு தலைக்கு குளிக்க சொன்னது என்று அவளைக் கடிந்து கொண்டான்.
ஆச்சி தான் வெள்ளிக்கிழமை தலைக்கு குளிக்கனும்னு சொன்னாங்க. எங்க வீட்டில் கூட என் பெரியம்மாவும் அதான் சொல்லிருக்காங்க என்றவளை முறைத்தவன் உனக்கு உடம்பு சரியில்லை இந்த நேரத்தில் தலைக்கு குளிக்கனும்னு யாரும் கட்டாயப் படுத்த மாட்டாங்க என்றான்.
நீ பதினேழு வயசு பொண்ணு ஏன் குழந்தை மாதிரி நடந்துக்கிறாய்னே புரிய மாட்டேங்குது என்றவன் இங்கே வா என்று ஹேர் டிரையரை வைத்து அவளது தலை முடியை உலர்த்திவிட்டான்.
இதோ பாரு உன்னோட ஹெல்த் முக்கியம் நீ தலைக்கு குளிக்கிறது பிரச்சனை இல்லை தலைமுடியை ஒழுங்கா காய வைக்கனும் என்றவன் சரி வா போயி சாப்பிட்டு வரலாம் என்றான்.
நீங்க போங்க நான் கொஞ்சம் எழுதனும். இந்த போர்சன் முடிச்சுட்டேனா கொஞ்சம் ஹாப்பி என்றவளது கன்னம் தட்டியவன் கீப் இட் அப். எழுதுறது மட்டும் இல்லை ஒழுங்கா படிக்கவும் செய்யனும் என்று கிளம்பிச் சென்றான்.
என்ன உதய் அண்ணா நீங்க மட்டும் சாப்பிட வந்துருக்கிங்க அண்ணி எங்கே என்றாள் அர்ச்சனா. மேடம் ரொம்ப பிஸி நோட்ஸ் எழுதிட்டு இருக்காங்க என்றவன் அமைதியாக சாப்பிட ஆரம்பித்தான்.
அண்ணா நம்ம ஸ்கூலில் ப்ளஸ்ஒன் அட்மிசன் ஆரம்பிச்சுருச்சு என்ற இளமாறனிடம் கவர்மென்ட் பிக்ஸ் பண்ணின பீஸ் தானே இளமாறா அதனால ஸ்டூடண்ட் ஸ்ட்ரென்த் அதிகம் ஆகாமல் ஒரு க்ளாஸ்க்கு எத்தனை ஸ்டூடண்ட்னு முன்னமே பிக்ஸ் பண்ணிக்கனும்.
டீச்சர்ஸ், ஸ்டூடண்ட்ஸ் யாருக்குமே ப்ரஸர் அதிகம் கொடுக்க கூடாது என்ற நெடுமாறனிடம் அதெல்லாம் நான் பார்த்துக் கொள்கிறேன் அண்ணா என்ற இளமாறன் சாப்பிட ஆரம்பித்தார்.
பிரகாஷ் அப்பா கூடவே இருந்து எல்லா வேலையையும் பார்த்துக்கோ என்ற நெடுமாறனிடம் சரிங்க பெரியப்பா என்றான் பிரகாஷ்.
அண்ணா நீங்களும் வரீங்களா என்ற பிரகாஷிடம் கண்டிப்பா வரேன் என்ற உதயச்சந்திரன் சித்தி வெரோனிகாவிற்கு சாப்பாடு கொடுங்க நான் கொடுத்துடுறேன் என்றான்.
இல்லை உதய் அவள் கொஞ்சம் நல்லா சாப்பிடுகிற பொண்ணு அதனால அவளை இங்கே வரச் சொல்லு என்றார் சுசீலா. சரிங்க சித்தி என்றவன் தன்னறைக்கு சென்றான்.
என்னம்மா நடக்குது இங்கே நாங்க ரூமுக்கு சாப்பாடு கொண்டு வாங்கனு சொன்னால் கூட எங்களைத் திட.டுவாரு அண்ணா. ஆனால் இன்னைக்கு வெரோனிகாவிற்கு எடுத்துட்டு போகவானு கேட்கிறாரு என்ற அர்ச்சனாவிடம் எல்லாம் அண்ணி வந்த நேரம் என்றான் பிரகாஷ்.
ஊர்மிளாவும், அர்ச்சனாவும் பிரகாஷுடன் சேர்ந்து சிரிக்க ஏய் வாயை மூடுங்கடா அவன் வந்தால் சத்தம் போடப் போகிறான் என்ற சுசீலாவும் அவர்களுடன் சேர்ந்து சிரித்தார்.
அவன் சென்று உடை மாற்றி தயாராகிக் கொண்டிருந்தான். எங்கே கிளம்பிட்டிங்க என்றவளிடம் ஸ்கூலில் அட்மிசன் நடக்குதுல்ல அதான் சின்ன வேலை என்றவன் உன்னால முடிஞ்ச அளவு நீ இன்னைக்கு எப்படியாவது எழுதி முடிச்சுரு.
இன்னும் இரண்டு நாளில் ஸ்கூல் ஆரம்பிச்சுருவாங்க என்றவன் சரி நீ போயி சாப்பிடு. சித்தி உன்னை சாப்பிட வரச் சொன்னாங்க என்று கூறி விட்டு அவன் கிளம்பிச் சென்றான்.
அவன் அறையை விட்டுச் சென்றதும் புத்தகத்தை மூடி வைத்தவள் அப்பாடி இந்த முசுடு இன்னைக்கு வீட்டில் இருக்காது செம்ம ஜாலி என்று சந்தோசமாக பெட்டில் ஏறி குதித்து ஆட ஆரம்பித்தாள்.
அவள் சந்தோசமாக ஆட்டம் போட ஆரம்பித்தவள் குதித்து, குதித்து சந்தோசமாக சாப்பிட படிக்கட்டில் ஓடி வந்தாள்.
ஏய் பார்த்து வாடி என்ற மலர்கொடியைக் கட்டிக் கொண்டவள் அத்தை அவங்க எங்கே என்றாள். யாருடி என்ற மலர்கொடியிடம் அதான் உங்க பையன் என்றாள் வெரோனிகா.
அவன் கிளம்பிட்டான் என்றதும் அப்பாடி இன்னைக்கு முழுக்க ஜாலி என்றவள் சந்தோசமாக சாப்பிட ஆரம்பித்தாள்.
என்ன ரோனி நோட்ஸ் எழுதிட்டியா என்ற கல்யாணிதேவியிடம் பாதி எழுதிட்டேன் ஆச்சி என்றவள் ரொம்ப டயர்டா இருக்கு இனி மிச்சத்தை அப்பறமா எழுதுகிறேன் என்றவள் தன் மாமியார்களுடன் வாயடிக்க சென்று விட்டாள். பிறகு அர்ச்சனா , ஊர்மிளா இருவருடன் சேர்ந்து ஆட்டம், பாட்டம் என்று சந்தோசமாக அன்றைய நாளைக் கழித்தாள்.
அவள் படிக்காமல் சுற்றிக் கொண்டு இருப்பதை அவள் கணவன் பார்த்தால் அவளது நிலை என்னவாகுமோ🤔🤔🤔🤔
….தொடரும்…